தொடர் - 02-
ஜும்ஆவுக்கு இரண்டு பாங்குகள் உண்டா?
ஜும்ஆ நாளில் இரண்டு பாங்குகள் சொல்லும் வழக்கம் நடைமுறையில் இருக்கின்றது. அனேகமாக எல்லா பள்ளிகளிலும் ஜும்ஆவில் இரண்டு பாங்குகள் கூறுவதை நாம் பார்க்கிறோம்.
ஜும்ஆவுக்கு இரு பாங்குகள் சொல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களா என்று பள்ளிவாசல் இமாமிடம் கேட்டுப் பாருங்கள்; அல்லது ஜமாஅத் உலமா சபைத் தலைவரிடம் போய் கேட்டுப் பாருங்கள். யாரிடம் கேட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆவுக்கு இரு பாங்குகள் சொல்லுமாறு கூறவில்லை என்று தான் கூறுவார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இரண்டு பாங்குகள் சொல்லப்பட்டன என்று எந்த ஒரு ஆலிமும், எந்த ஒரு மௌலவியும், எந்த ஒரு ஹதீசையும் எடுத்துக் காட்ட முடியாது. மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் மிம்பர் மீது ஏறும் போது சொல்லப்படும் ஒரு பாங்கு தான் நடைமுறையில் இருந்தது.
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் ஜுமுஆ நாளின் முதல் பாங்கு இமாம் சொற்பொழிவு மேடை மீது அமர்ந்ததும் சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் (ஆட்சிக்) காலத்தில் (மதீனாவில்) மக்கள் தொகை அதிகரித்தபோது “ஸவ்ரா’ எனும் கடைவீதியில் (பாங்கு, இகாமத் அல்லாமல்) மூன்றாவது அறிவிப்பை அதிகப்படுத்தினார்கள்.
நூல்: புகாரி-861
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் ஜும்ஆவில் ஒரு பாங்கு தான் சொல்லப்பட்டு வந்தது என்பதை இதன் மூலம் அறியமுடிகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு முரணில்லாத வகையில் உஸ்மான் (ரலி) அவர்களின் செயலைப் பின்வருமாறு விளங்க முடியும்.
உஸ்மான் (ரலி) அவர்கள் அதிகப்படுத்திய தொழுகை அறிவிப்பு என்பது பாங்கு அல்ல. அவர் பாங்கின் வாசகங்களைக் கூறுமாறு உத்தரவிடவில்லை. மாறாக மக்களுக்கு தொழுகையை ஞாபகப்படுத்துவதற்கு பாங்கு போன்று இல்லாத சாதாரண அறிவிப்பை மட்டுமே அதிகப்படுத்தினார்கள் என்று விளங்கிக் கொண்டால் இந்த முரண்பாடு வராது.
ஒரு பேச்சுக்கு உஸ்மான் (ரலி) அவர்கள் பாங்கைத் தான் அதிகப்படுத்தினார்கள் என்று ஏற்றுக் கொண்டாலும் இதனால் இரண்டு பாங்குகள் கூறுவது மார்க்க வழிமுறையாகாது. ஏனென்றால் நபித்தோழர்களின் சொல் செயல் மார்க்க ஆதாரமாக முடியாது. குறிப்பாக நபிமொழிக்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
எனவே இந்த அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆவில் ஒரு பாங்கு கூறியதையே நாம் பின்பற்ற வேண்டும்.
இவ்விஷயத்தில் உஸ்மான் (ரலி) அவர்களைப் பின்பற்றுவதாக கூறும் போலிகள் உண்மையில் உஸ்மான் (ரலி) அவர்களைப் பின்பற்றவில்லை.
உஸ்மான் (ரலி) கடைத்தெருவில் இரண்டாவது அறிவிப்பை அதிகப்படுத்தியதாகவே மேற்கண்ட ஹதீஸில் உள்ளது. இதை இவர்கள் பின்பற்றுவதாக இருந்தால் உஸ்மான் (ரலி) செய்தது போல் கடைத்தெருவில் தான் இரண்டாவது பாங்கு சொல்ல வேண்டும். ஆனால் இரண்டாவது பாங்கு சொல்பவர்கள் யாரும் கடைத் தெருவில் சொல்வதில்லை. மாறாக பள்ளிவாசலுக்குள்ளே சொல்லி வருகிறார்கள்.
அதிகாலையில் இரண்டு பாங்கு!
பிலால் (ரலி) அவர்களை ஸஹர் நேரத்தை அறிவிப்பதற்காகவும், அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களை ஸஹர் முடிவு நேரத்தை, அதாவது சுப்ஹ் நேரத்தை அறிவிப்பதற்காகவும் பாங்கு சொல்ல நபி (ஸல்) அவர்கள் நியமித்திருந்தார்கள் என்ற செய்தி பல்வேறு ஹதீஸ் நூற்களில் காணப்படுகின்றது.
“நீங்கள் ஸஹர் உணவு உண்ணுவதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடை செய்து விட வேண்டாம். இரவில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புவதற்காகவும், தொழுது கொண்டிருப்பவர்கள் திரும்பி வருவதற்காகவும் தான் பிலால் பாங்கு சொல்கின்றாரே தவிர சுப்ஹ் நேரம் வந்து விட்டது என்பதை அறிவிப்பதற்காக அன்று” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி-621
மற்றொரு அறிவிப்பில், இரண்டு பாங்குகளுக்கும் இடையில் எவ்வளவு இடைவெளி இருக்கும் என்பதை விளக்கும் போது, “அவர் பாங்கு சொல்லி விட்டு இறங்குவார், இவர் பாங்கு சொல்வதற்காக ஏறுவார்” என்று இப்னு உமர் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் விளக்கமளித்துள்ளார்கள்.
இந்த ஹதீஸிலிருந்து ஸஹரின் கடைசிப் பகுதியில் ஸஹர் பாங்கும், ஸஹர் முடிவை அறிவிப்பதற்கு சுப்ஹ் பாங்கும் சொல்லப்பட்டிருப்பதை அறியலாம்.
இன்று ஜும்ஆவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத வகையில் இரண்டு பாங்குகள் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் சுன்னத் ஜமாஅத் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்கள் நபிகளாரின் காலத்தில் ரமளான் மாதத்தில் ஸஹர் நேரத்தில் சொல்லப்பட்டு வந்த இரண்டு பாங்குகளை இன்று சொல்வதில்லை.
இரண்டு பாங்குகள் சொல்ல வேண்டிய இடத்தில் ஒரு பாங்கும், ஒரு பாங்கு சொல்ல வேண்டிய இடத்தில் இரண்டு பாங்குகளும்ம் சொல்லி நபிவழிக்கு மாற்றமாக நடந்து வருகிறார்கள். இதை புரிந்து திருந்திக் கொண்டால் நல்லது.
ஜும்ஆ பாங்கு!
ஐவேளைத் தொழுகைக்கு உள்ளது போல் ஜுமுஆ தொழுகைக்கும் ஒரு பாங்கு சொல்லப்பட வேண்டும். அந்த பாங்கு இமாம் மிம்பரில் அமரும் போது சொல்லப்பட வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), காலங்களிலும் ஜுமுஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) காலத்தில் மக்கள் பெருகிய போது கடை வீதியில் (பாங்கு இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது. இதுவே நிலை பெற்று விட்டது.
அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)
நூல்: புகாரி-916
உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் சொல்லப்பட்டது இப்போது சொல்லப்படும் முதலாவது பாங்கைப் போன்றது அல்ல! மக்கள் அதிகமானதால் உஸ்மான் (ரலி) அவர்கள் ஸவ்ரா என்ற இடத்தில் ஒரு அறிவிப்பை சொல்லச் சொன்னார்கள். ஸவ்ரா என்பது மதீனாவில் உள்ள ஒரு வீடாகும் (இப்னுமாஜா-1125)
உஸ்மான் (ரலி) அவர்கள் ஏற்படுத்திய அந்த அறிவிப்பைக் கூட பள்ளிவாசலில் செய்யவில்லை. எனவே உஸ்மான் (ரலி) அவர்கள் இரண்டாம் பாங்கை ஏற்படுத்தவில்லை என்பதே சரியானதாகும்.
ஒரு வேளை உஸ்மான் (ரலி) அவர்கள் ஜும்ஆவிற்கு இரண்டாவது பாங்கைத் தான் ஏற்படுத்தினார்கள் என்று வைத்துக் கொண்டாலும் நபிவழியைத் தான் முஸ்லிம்கள் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளனர். நபி (ஸல்) அவர்களது நடைமுறைக்கு முரணாக யார் செய்திருந்தாலும் அது மார்க்கமாகாது. எனவே ஜும்ஆவிற்கு ஒரு பாங்கு சொல்வதே நபிவழியாகும்.
உஸ்மான் (ரலி) இரண்டாவது பாங்கை அறிமுகப்படுத்தியதன் மூலம் பித்அத்தை ஏன் ஏற்படுத்தினார்கள்?
உஸ்மான் (ரலி) இரண்டாவது பாங்கை அறிமுகப்படுத்தியதன் மூலம் பித்அத்தை ஏன் ஏற்படுத்தினார்கள்? நபி (ஸல்) அவர்களால் சுவர்க்கம் என்று சொல்லப்பட்ட நபித்தோழரின் இந்தச் செய்கை மூலம் பித்அத் என்பது கடுமையான குற்றம் இல்லை, சாதாரண பாவம் தான் என்று எடுத்துக் கொள்ளலாமா?
செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
நூல்: நஸயீ-1560
இந்த ஹதீஸிலும் இன்னும் இது போன்ற பல்வேறு ஹதீஸ்களிலும் நபி (ஸல்) அவர்கள், தமக்குப் பிறகு உருவாக்கப்படும் பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடு,அவை நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தைக் கூறி விட்ட பிறகு,அதற்கு மாற்றமாக மற்ற எவருடைய கருத்தையோ அல்லது செயலையோ ஆதாரமாகக் காட்டுவதை மார்க்கம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.
(அல்குர்ஆன்-33:36)
உஸ்மான் (ரலி) அவர்கள் ஜும்ஆவில் இரண்டாவது பாங்கைத் தான் ஏற்படுத்தினார்களா? அல்லது கடைவீதியில் போய் தொழுகைக்கு அழைக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார்களா? என்பது குறித்தே சரியான தெளிவில்லாத நிலையில் அதை ஆதாரமாகக் காட்டி, நபி (ஸல்) அவர்களின் கட்டளையை மறுப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
ஒருவேளை உஸ்மான் (ரலி) அவர்கள் இரண்டாவது பாங்கையே அறிமுகப்படுத்தியிருந்தாலும் நபிவழி தெளிவாக இருக்கும் போது அதையே நாம் பின்பற்ற வேண்டும். சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட நபித்தோழர் ஏன் இவ்வாறு செய்தார் என்று நாம் ஆராயத் தேவையில்லை. அவர்கள் என்ன நோக்கத்தில் செய்தார்கள் என்பதை அல்லாஹ்வே அறிவான்.
அவர்கள், சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.
(அல்குர்ஆன்-2:134)
ஏகத்துவம்,ஜனவரி 2005
2:6.(இவ்விஷயங்களை) யார் நிராகரித்தார்களோ, அவர்களை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காதிருப்பதும் அவர்களைப் பொறுத்தவரை ஒன்றுதான். எவ்வகையிலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அல்லர்.
எனவே ஸலபுக் கொள்கையுடையவர்களே!
இனியாவது பித்அத்தை விட்டு தவிர்ந்து நடக்க முழு முயற்சிகளை எடுப்போம்!!!
எமது இந்த தொடர் கட்டுரை பயணத்தில் பிழைகள், விமர்சனங்கள் இருப்பின் அவசியம் சுட்டிக்காட்டலாம்!!!!
அல்குர்ஆனையும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் மாத்திரம் பின்பற்றி சுவனம் செல்ல முயற்சிப்போமாக!!!
இன்ஷா அல்லாஹ்!!!
தொடரும்….
நன்றி:- இணையம்….
✒️🇱🇰 Jawahir Abu Hayan 🇶🇦(19/10/2022)
பித்அத்தை புதிய ரூபத்தில் செயற்படுத்தும்! மதனிகளும், வக்காலத்து வாங்கும் ஸலபிகளும்….
தொடர் - 03- (23/10/2022)
மறுமையை மறந்து மஹ்ஷர் மாயைக்குள் சிக்கித் தவிக்கும்!
மதனிகளும், ஸலபிகளும்!!!
நபிகளார் செய்யாவிட்டாலும் பறுவாயில்லை!
நாங்கள் செய்து காட்டுவோம்!!!
மஃஷர்:
முஅத்தின் சுன்னத்துத் தொழச் சொல்லி மக்கள் எல்லாம் எழுந்து தொழுத பின்னர் முஅத்தின் அஸாவைப் பிடித்துக் கொண்டு அரபியிலும் தமிழிலும் ஒரு குட்டி குத்பா செய்வார். அதுதான் மஃஷர் ஓதுதல் என்று மக்களால் கூறப்படுகின்றது. அந்தக் குட்டிக் குத்பாவில் ‘யா மஃஷரில் முஸ்லிமீன்’ என அவர் ஆரம்பிப்பார். அதில் மஃஷரில்” என்று வருவதால் மக்கள் மஃஷர் ஓதுதல் என்று இதற்குக் கூறுகின்றனர்.
அதில் அவர் குத்பாவை காது தாழ்த்திக் கேட்க வேண்டும் என்றும் உன் தோழனைப் பார்த்து பேசாதே என்றால் கூட உனது குத்பாவின் பலனை இழந்து விடுவாய் என்றும் கூறுவார். சில வேளை, இதில் ஹதீஸில் இல்லாத சில செய்திகளும் சேர்த்துக் கூறப்படுவதுண்டு. இவ்வாறு கூறி முடிந்த பின்னர் இமாம் வருவார். முஅத்தின் அஸாவை அவரிடம் மிகப் பக்குவமாகவும், பக்தியோடும் கொடுப்பார். இந்த வழக்கம் ஒரு இபாதத்தாகவே நடைபெறுகின்றது. இது நபி(ச) அவர்கள் காலத்தில் இல்லாத பித்அத்தான வழிமுறையாகும்.
இன்ஷா அல்லாஹ்!!!
தொடரும்….
நன்றி:- இணையம்
தொடர் - 01
short link https://rb.gy/nenvi
இரண்டு பாங்கு குறித்து யூ டியுபில் காண தலைபிணை கிளிக் செய்யவும்
இரண்டு பாங்கு சொன்ன உஸ்மான் ரலி நரகவாசியா ?
ஜும்ஆவிற்கு இரண்டு பாங்கு சொல்லலாமா?
உமர் (ரலி) ஜூம்மா விற்காக இரண்டு பாங்கு சொன்னது ஏன்?
