தவ்ஹீத் ஜமாஅத் video's: தொழுகை
Showing posts with label தொழுகை. Show all posts
Showing posts with label தொழுகை. Show all posts

பெருநாள் தொழுகை தக்பீரில் கைகளை உயர்த்த வேண்டுமா?


பெருநாள் தொழுகையில் 7+5 தக்பீர்கள் சொல்லும் போது கைகளை உயர்த்த

பெருநாள் தொழுகை

வேண்டியதில்லை என்று தவ்ஹீது மவ்லவிகள் கூறுகின்றார்கள். ஆனால் ருகூவுக்கு முன்பு கூறும் ஒவ்வொரு தக்பீரிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்துவார்கள் என்று பைஹகீயில் இப்னு உமர் (ரலி) அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளதே! இதன் நிலை என்ன?

இஸ்மாயில் ஷெரீப், சென்னை.

நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இதுதான்,

سنن البيهقي الكبرى

 5983 – أخبرنا محمد بن عبد الله الحافظ ثنا أبو النضر محمد بن محمد بن يوسف الفقيه وأبو الحسن أحمد بن محمد بن سلمة العنزي قالا ثنا عثمان بن سعيد الدارمي ثنا يزيد بن عبد ربه الحمصي ثنا بقية عن الزبيدي عن الزهري عن سالم بن عبد الله بن عمر عن بن عمر قال : كان النبي صلى الله عليه و سلم إذا قام إلى الصلاة رفع يديه حتى إذا كانتا حذو منكبيه ثم كبر وهما كذلك وركع وإذا أراد أن يرفع رفعهما حتى يكونا حذو منكبيه ثم قال سمع الله لمن حمده ثم يسجد ولا يرفع يديه في السجود ويرفعهما في كل تكبيرة يكبرها قبل الركوع حتى تنقضي صلاته

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழத் தயாராகும் போது தமது இரு கைகளையும் உயர்த்துவார்கள். அவ்விரு கைகளையும் தோள் புஜத்திற்கு நேராக வைத்துப் பிறகு அதே நிலையில் தக்பீர் சொல்வார்கள். பிறகு ருகூவு செய்வார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்த விரும்பினால் கைகளை புஜங்களுக்கு நேராக அமைகின்ற வரை உயர்த்தி, பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று சொல்வார்கள். பிறகு ஸஜ்தாச் செய்வார்கள். ஸஜ்தாவின் போது தமது கைகளை உயர்த்த மாட்டார்கள். தமது தொழுகை முடிகின்ற வரை ருகூவுக்கு முன்னால் சொல்கின்ற ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை உயர்த்துவரர்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  நூல் :  பைஹகீ

இந்த ஹதீஸைத் தான் தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.

நாய்கள் நடமாடும் நாய்கள் படுக்கும் நாய்கள் சிறுநீர் கழிக்கும் திடல்களில் பெருநாள் தொழலாமா ?

 நாய்கள் நடமாடும் நாய்கள் படுக்கும் நாய்கள் சிறுநீர் கழிக்கும் திடல்களில்
பெருநாள் தொழலாமா ?

விமர்சனத்திற்கு பதில்
==============

திடலில் தொழுதால் நஜீஸ் என்று கூறி அல்லாஹ்வும் அவனது தூதரும் அனுமதித்த கொள்கையை மறுத்து அல்லாஹ்வுக்கு மார்க்கத்தை கற்றுக் கொடுக்கும் வழி கேடர்களின் சிந்தனையில் இருந்து நம்மைப் பாதுகாப்பானாக

சில சகோதரர்கள் இஸ்லாத்தை சரியாக விளங்காமலோ அல்லது விளங்கியோ உண்மை இது தான் என்று தெரிந்தும் தங்கள் மத்ஹப் கொள்கையை தங்கள் உலமாக்களை காப்பாத்த பெருநாள் தொழுகை திடலில் தொழுவதையிட்டு நாய் நஜீசில் தொழுகிறார்கள் என்று நபியின் சுன்னவான திடல் தொழுகையையும் கேவலமாக சித்தரித்தும் பேசியும் எழுதியும் வருகிறார்கள் திடலில் நாய்கள் படுக்கிறது நடமாடுகிறது நஜீஸில் தொழுகிறார்கள் அப்படியெல்லாம் தொழலாமா? என்று மார்க்கம் தெரியாமல் நபிகளாரின் ஹதீத்களை படிக்கமால் அறிவீனமாக விமர்சிப்பதை கண்டுவருகிறோம்

இது தொடர்பாக அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மத் (ஸல் ) அவர்களும் கூறிய அடிப்படையில் இதற்கான பதிலை முன்வைக்கிறேன்.

தொழுகையை விட்டவன் காஃபிரா?

  தொழுகையை விட்டவன் காஃபிரா?


தொழுகையை விட்டவன் காஃபிர் என்று சில அறிஞர்கள்
தீர்ப்பளித்துள்ளனர்.

அஹ்மத், இப்னு ஹஸ்ம் மற்றும் தற்கால சவூதி அறிஞரான பின்பாஸ் ஆகியோர் தொழுகையை விட்டவன் காஃபிர் என்று தீர்ப்பு அளித்த அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள். இவர்கள் இவ்வாறு தீர்ப்பளிப்பதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாகக் கொள்கின்றனர்.

صحيح مسلم 256 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِىُّ وَعُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ كِلاَهُمَا عَنْ جَرِيرٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا جَرِيرٌ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِى سُفْيَانَ قَالَ سَمِعْتُ جَابِرًا يَقُولُ سَمِعْتُ النَّبِىَّ صلى الله عليه وسلم- يَقُولُ إِنَّ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكَ الصَّلاَةِ

நிச்சயமாக மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு ஆகியவற்றுக்குமிடையே (பாலமாக இருப்பது) தொழுகையைக் கைவிடுவது தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் : முஸ்லிம்

مصنف ابن أبي شيبة 31035- حَدَّثَنَا يَحْيَى بْنُ وَاضِحٍ ، عَنْ حُسَيْنِ بْنِ وَاقِدٍ ، قَالَ : سَمِعْتُ ابْنَ بُرَيْدَةَ يَقُولُ : سَمِعْت أَبِي يَقُولُ : سَمِعْت رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يقول : الْعَهْدُ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمَ الصَّلاةُ ،فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ

நமக்கும், அவர்களுக்கும் இடையில் உள்ள ஒப்பந்தமாகிறது தொழுகையாகும்.யார் அதை விட்டாரோ, அவர் காஃபிராகி விட்டார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூபுரைதா (ரலி) நூல் : இப்னு அபீஷைபா

யார் தொழுகையை விட்டாரோ அவர் காஃபிராகி விட்டார் (மன் தர(க்)கஹா ஃபகத் கஃபர) என்று தெளிவாக நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே தொழுகையை விட்டவர்கள் காஃபிர்களே என்பது இவர்களது வாதம்.

இத்தகையவர்களுக்கு ஜனாஸா தொழுகை கூடாது; அவர்களைத் திருமணம் செய்யக் கூடாது; அவர்கள் அறுத்ததைச் சாப்பிடக் கூடாது; இறை நிராகரிப்பாளர்களுக்கு என்ன சட்டமோ அது இவர்களுக்கும் பொருந்தும் என்று சவூதியின் அறிஞர் பின்பாஸ் எனும் அறிஞர் தீர்ப்பளித்துள்ளார்.

இச்செய்தியை அறிவிக்கும் அனைவரும் அறிஞர்களால் நம்பகமானவர்கள் என்று கருதப்பட்டவர்கள்.  எனினும் இந்த ஹதீஸை இவர்கள் புரிந்து கொண்ட விதம் தவறாகும்.

இந்தச் செய்தியை இவர்கள் குறிப்பிடும் பொருளில் புரிந்து கொள்வது எவ்வாறு தவறு என்பதைப் பார்ப்போம்.

இவர்களது வாதப் பிரகாரம் ஒருவர் அல்லாஹ்வை நம்பி அவனுக்கு இணை கற்பிக்காமல் தவ்ஹீதுடன் வாழ்ந்து மரணித்தாலும் தொழவில்லை என்றால் அவர் நரகம் செல்வார். அதில் நிரந்தரமாக இருப்பார். ஏனெனில் தொழுகையை விட்டதால் அவர் காஃபிர், இறை மறுப்பாளர் என்று சொல்ல வேண்டி வரும்.

ஆனால் இறைவனுக்கு இணை கற்பிக்காமல் ஏகத்துவத்துடன் வாழ்ந்து மரணித்தவர் சில தீமைகளைச் செய்திருந்தாலும் தவ்ஹீதைத் தவிர பிற நன்மைகளைச் செய்யவில்லை என்றாலும் அவர் சொர்க்கம் செல்வார்; அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று ஏராளமான ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. குர்ஆனும் இதையே கூறுகின்றது.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ்நிலையில் உள்ள(பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.திருக்குர்ஆன் 4:48

صحيح البخاري 5827 – حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، عَنِ الحُسَيْنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، حَدَّثَهُ أَنَّ أَبَا الأَسْوَدِ الدُّؤَلِيَّ حَدَّثَهُ: أَنَّ أَبَا ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ حَدَّثَهُ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثَوْبٌ أَبْيَضُ، وَهُوَ نَائِمٌ، ثُمَّ أَتَيْتُهُ وَقَدِ اسْتَيْقَظَ، فَقَالَ: " مَا مِنْ عَبْدٍ قَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، ثُمَّ مَاتَ عَلَى ذَلِكَ إِلَّا دَخَلَ الجَنَّةَ " قُلْتُ: وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ؟ قَالَ: «وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ» قُلْتُ: وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ؟ قَالَ: «وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ» قُلْتُ: وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ؟ قَالَ: «وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ عَلَى رَغْمِ أَنْفِ أَبِي ذَرٍّ» وَكَانَ أَبُو ذَرٍّ إِذَا حَدَّثَ بِهَذَا قَالَ: وَإِنْ رَغِمَ أَنْفُ أَبِي ذَرٍّ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: هَذَا عِنْدَ المَوْتِ، أَوْ قَبْلَهُ إِذَا تَابَ وَنَدِمَ، وَقَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، غُفِرَ لَهُ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்த போது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக் கொண்ட போது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி என்று சொன்னார்கள். நான் (மீண்டும்) அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று கேட்டேன். அப்போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி என்று சொன்னார்கள். நான் (மூன்றாவது முறையாக) அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி. அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி)  நூல் : புகாரி 5827

صحيح البخاري 129 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ: سَمِعْتُ أَبِي قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ: ذُكِرَ لِي أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِمُعَاذِ بْنِ جَبَلٍ: «مَنْ لَقِيَ اللَّهَ لاَ يُشْرِكُ بِهِ شَيْئًا دَخَلَ الجَنَّةَ»، قَالَ: أَلاَ أُبَشِّرُ النَّاسَ؟ قَالَ: «لاَ إِنِّي أَخَافُ أَنْ يَتَّكِلُوا»

அல்லாஹ்வுக்கு எவரையும் இணையாக்காதவராக எவர் (மரணத்திற்குப் பிறகு) அல்லாஹ்வைச் சந்திக்கின்றாரோ, அவர் உறுதியாக சொர்க்கம் புகுவார் என முஆத் (ரலி) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அதற்கு முஆத் (ரலி) அவர்கள் இந்த நற்செய்தியை நான் மக்களுக்குச் சொல்லட்டுமா? என்று கேட்க, (இல்லை) வேண்டாம். மக்கள் (இதை மட்டும் நம்பிக் கொண்டு நல்லறங்கள் புரியாமல்) அசட்டையாக இருந்து விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)  நூல் : புகாரி 129

سنن الترمذي 2639 – حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ، عَنْ لَيْثِ بْنِ سَعْدٍ قَالَ: حَدَّثَنِي عَامِرُ بْنُ يَحْيَى، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْمَعَافِرِيِّ ثُمَّ الحُبُلِيِّ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عَمْرِو بْنِ العَاصِ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ سَيُخَلِّصُ رَجُلاً مِنْ أُمَّتِي عَلَى رُءُوسِ الخَلاَئِقِ يَوْمَ القِيَامَةِ فَيَنْشُرُ عَلَيْهِ تِسْعَةً وَتِسْعِينَ سِجِلًّا كُلُّ سِجِلٍّ مِثْلُ مَدِّ البَصَرِ، ثُمَّ يَقُولُ: أَتُنْكِرُ مِنْ هَذَا شَيْئًا؟ أَظَلَمَكَ كَتَبَتِي الحَافِظُونَ؟ فَيَقُولُ: لاَ يَا رَبِّ، فَيَقُولُ: أَفَلَكَ عُذْرٌ؟ فَيَقُولُ: لاَ يَا رَبِّ، فَيَقُولُ: بَلَى إِنَّ لَكَ عِنْدَنَا حَسَنَةً، فَإِنَّهُ لاَ ظُلْمَ عَلَيْكَ اليَوْمَ، فَتَخْرُجُ بِطَاقَةٌ فِيهَا: أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَيَقُولُ: احْضُرْ وَزْنَكَ، فَيَقُولُ: يَا رَبِّ مَا هَذِهِ البِطَاقَةُ مَعَ هَذِهِ السِّجِلاَّتِ، فَقَالَ: إِنَّكَ لاَ تُظْلَمُ، قَالَ: فَتُوضَعُ السِّجِلاَّتُ فِي كَفَّةٍ وَالبِطَاقَةُ فِي كَفَّةٍ، فَطَاشَتِ السِّجِلاَّتُ وَثَقُلَتِ البِطَاقَةُ، فَلاَ يَثْقُلُ مَعَ اسْمِ اللهِ شَيْءٌ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக என்னுடைய சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனைத் தனியாக அல்லாஹ் நிறுத்துவான். அவனுக்கு எதிராகத் தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரிக்கப்படும். அதிலிருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின் அளவிற்கு இருக்கும். பிறகு அல்லாஹ் அவனிடம் இதிலிருந்து நீ எதையாவது மறுக்கின்றாயா? (அல்லது) பாதுகாவலர்களாகிய என்னுடைய எழுத்தாளர்கள், உனக்கு அநீதி இழைத்து விட்டார்களா? என்று கேட்பான். என்னுடைய இரட்சகனே இல்லை (அனைத்தும் நான் செய்த பாவங்கள் தான்) என்று அவன் கூறுவான். (நீ வேதனையிலிருந்து தப்பிக்க) உனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன் என் இரட்சகனே ஏதுமில்லை என்று கூறுவான். அப்போது அல்லாஹ் கூறுவான். அவ்வாறில்லை, உனக்கு நம்மிடத்தில் ஒரு நன்மை இருக்கிறது, இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று கூறியவுடன் ஒரு சிற்றேடு வெளிப்படும். அதில் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், மேலும் உறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்றும் சாட்சி கூறுகிறேன்) என்ற ஏகத்துவக் கலிமா இருக்கும். நீ உன்னுடைய (நன்மை, தீமைகளின்) எடையைப் பார் என்று அல்லாஹ் கூறுவான். என்னுடைய இரட்சகனே (இந்த பாவ) ஏடுகளுடன் இந்தச் சிறிய ஏடு என்ன (பெரிதா?) என்று அவன் கேட்பான். அதற்கு அல்லாஹ் உறுதியாக நீ அநீதி இழைக்கப்பட மாட்டாய் என்று கூறுவான்.

அந்தப் பாவ ஏடுகள் ஒரு தட்டிலும், அந்த சிற்றேடு ஒரு தட்டிலும் வைக்கப்படும். அந்தப் பாவ ஏடுகள் பறந்தோடிவிடும். அந்தச் சிற்றேடு கனத்து விடும். அல்லாஹ்வின் பெயரை விட எதுவும் கனத்து விடாது.

அறிவிப்பவர் : அம்ருப்னு ஆஸ் (ரலி) நூல் : திர்மிதி

مسند أحمد بن حنبل 21406 – حدثنا عبد الله حدثني أبي ثنا هاشم بن القاسم ثنا عبد الحميد ثنا شهر حدثني بن غنم ان أبا ذر حدثه عن رسول الله صلى الله عليه و سلم قال : ان الله عز و جل يقول يا عبدي ما عبدتني ورجوتني فإني غافر لك على ما كان فيك ويا عبدي ان لقيتني بقراب الأرض خطيئة ما لم تشرك بي لقيتك بقرابها مغفرة

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமை நாளில்) அல்லாஹ் (தனக்கு இணை வைக்காத ஒரு அடியானைப் பார்த்து) ஆதமுடைய மகனே நீ பூமி நிறைய பாவத்துடன் என்னிடம் வந்திருக்கின்றாய். (ஆனால்) நீ எனக்கு எந்த ஒன்றையும் இணை கற்பிக்கவில்லை. எனவே நான் உனக்கு பூமி நிறைய பாவ மன்னிப்பை வழங்குகின்றேன் என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல் : அஹ்மத்

இறைவனுக்கு இணை கற்பிக்காமல் மரணித்துவிடும் சிலர் தீமைகளைப் புரிந்திருந்தும் அவர்களிடத்தில் தவ்ஹீதைத் தவிர பிற நன்மைகள் எதுவும் இல்லாமல் இருந்தும் அவர்கள் சொர்க்கம் செல்வதாக மேற்கண்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

தொழுகையை விட்டவர் நிரந்தர நரகத்திற்குரிய காஃபிர் என்று இருந்தால் தவ்ஹீதைத் தவிர வேறு நன்மைகள் இல்லாதவர் சொர்க்கம் சென்றிருக்க முடியாது. ஆனால் சொர்க்கம் சென்றதாக மேற்கண்ட செய்தியில் குறிப்பிடப்படுவதிலிருந்து தொழுகையை விட்டவர் காஃபிர் (இறை மறுப்பாளர்) என்பது அந்த ஹதீஸின் பொருளாக இருக்க முடியாது என்பதைப் புரியலாம்.

இந்த அர்த்தத்தில் மேற்கண்ட செய்தி பயன்படுத்தப்படவில்லை எனில் அதன் சரியான பொருள் என்ன?

கஃபர என்பதன் பொருள்

தொழுகையை விட்டவன் காஃபிர் என்று அவர்கள் முடிவெடுக்க முக்கிய காரணம் கஃபர – குஃப்ர் என்ற வார்த்தைகள் அந்தச் செய்தியில் இடம் பெற்றதுதான்.

கஃபர – குஃப்ர் எனும் வார்த்தையின் பொருள் இறை நிராகரிப்பு என்பதில் சந்தேகமில்லை. எனினும் இதுவல்லாத வேறு அர்த்தத்திலும் இந்த வார்த்தைகள் ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அது போன்ற இடங்களில் மேற்கண்ட ஃபத்வாவைக் கொடுத்தவர்கள் காஃபிர் என்ற அர்த்தத்தை வழங்குவதில்லை. மாறாக அந்தத் தீமையின் கடுமைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளனர்.

அது போன்ற இடங்களில் சில. . .

முஸ்லிமைக் கொலை செய்வது குஃப்ர் என ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது

صحيح البخاري 48- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ زُبَيْدٍ ، قَالَ : سَأَلْتُ أَبَا وَائِلٍ ، عَنِ الْمُرْجِئَةِ فَقَالَ : حَدَّثَنِي عَبْدُ اللهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ : سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ وَقِتَالُهُ كُفْرٌ.

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும்; அவர்கள் இருவரும் போரிட்டுக் கொள்வது (குஃப்ர்) இறை நிராகரிப்பாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூவாயில் நூல் : புகாரி 48

தந்தையை வெறுப்பது குஃப்ர் என்று ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது

صحيح البخاري
حَدَّثَنَا أَصْبَغُ بْنُ الْفَرَجِ ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ ، أَخْبَرَنِي عَمْرٌو ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ عَنْ عِرَاكٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : لاَ تَرْغَبُوا عَنْ آبَائِكُمْ فَمَنْ رَغِبَ ، عَنْ أَبِيهِ فَهُوَ كُفْرٌ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் தந்தையரை நீங்கள் வெறுக்காதீர்கள். யார் தம் தந்தையை வெறுத்து (வேறு யாரோ ஒருவரை தம் தந்தை என்று கூறி) விடுகின்றாரோ அவர் காஃபிராவார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 6768

பரம்பரையைக் குறை கூறுவது ஒப்பாரி வைப்பது ஆகியவையும் குஃப்ர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

صحيح مسلم

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا أَبِى وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ كُلُّهُمْ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِى صَالِحٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم–  اثْنَتَانِ فِى النَّاسِ هُمَا بِهِمْ كُفْرٌ الطَّعْنُ فِى النَّسَبِ وَالنِّيَاحَةُ عَلَى الْمَيِّتِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களிடம் உள்ள இரு குணங்கள் (குஃப்ர்) இறை மறுப்பாகும்: 1. பரம்பரையைக் குறை கூறுவது. 2. இறந்தவருக்காக ஒப்பாரி வைப்பது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம்

கணவனுக்கு நன்றி கெட்டத்தனமாக நடப்பதும் குஃப்ர் என்று ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

صحيح البخاري 1462- حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ : أَخْبَرَنِي زَيْدٌ عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللهِ ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، خَرَجَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فِي أَضْحًى ، أَوْ فِطْرٍ إِلَيَ الْمُصَلَّى ثُمَّ انْصَرَفَ فَوَعَظَ النَّاسَ وَأَمَرَهُمْ بِالصَّدَقَةِ فَقَالَ أَيُّهَا النَّاسُ تَصَدَّقُوا فَمَرَّ عَلَى النِّسَاءِ فَقَالَ يَا مَعْشَرَ النِّسَاءِ تَصَدَّقْنَ فَإِنِّي رَأَيْتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ فَقُلْنَ وَبِمَ ذَلِكَ يَا رَسُولَ اللهِ قَالَ تُكْثِرْنَ اللَّعْنَ وَتَكْفُرْنَ الْعَشِيرَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலோ, அல்லது ஹஜ்ஜுப் பெருநாளிலோ முஸல்லா எனும் தொழும் திடலுக்குச் சென்று தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். மக்களே! தர்மம் செய்யுங்கள்! என்று மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, பெண்களே! தர்மம் செய்யுங்கள்; ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் பார்த்தேன்! என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஏன் இந்நிலை? எனப் பெண்கள் கேட்டதும், நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனுக்கு மாறு செய்கிறீர்கள்; (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல் : புகாரி 1462

இவை அனைத்தையும் குஃப்ர் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலேயே வந்துள்ளது.

இவை பெரும் தீமைகள்; கடும் தண்டனைக்குரியவைகள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் குஃப்ர் என்ற வார்த்தை வந்துள்ளதால் இவற்றைச் செய்பவன் காஃபிராகி விட்டான் என்று சொல்ல முடியுமா?

ஏனெனில் காஃபிர் என்றால் அல்லாஹ்வையும், ரசூலையும் நிராகரிப்பவன்; அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் என்று பொருளாகும்.

ஒருவன் பரம்பரையைக் குறை கூறுவதாலோ, ஒப்பாரி வைப்பதாலோ, தந்தையை வெறுப்பதாலோ அல்லாஹ்வையும் ரசூலையும் நிராகரித்தவனாக அல்லது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவனாக எப்படி ஆவான்? தண்டனைக்குரிய பாவங்களைச் செய்தவனாகவே ஆவான். இவற்றைச் செய்வதன் மூலம் அல்லாஹ்வை நிரகாரித்தவனாக ஆக மாட்டான்.

இவ்விடங்களில் குஃப்ர் என்ற வார்த்தை நன்றி மறத்தல் என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அது போன்றே தொழுகையை விடுவதில் இறைமறுப்பின் சாயல் இருப்பதால் குஃப்ர் என்ற வார்த்தை தொழுகையை விடுவது தொடர்புடைய ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குஃப்ர் என்ற வார்த்தை வரும் அனைத்து இடங்களிலும் இறை நிராகாரிப்பு என்ற பொருள் தான் கொள்ள வேண்டும் எனில் ஒப்பாரி வைப்பவன், தந்தையை வெறுப்பவன், பரம்பரையைக் குறை கூறுபவன் ஆகியவர்களையும் காஃபிர் (அல்லாஹ் ரசூலை நிராகரித்தவன்) என்று சொல்ல வேண்டும்.

இவர்களுக்கு ஜனாஸா தொழுவிப்பது, திருமணம் செய்விப்பது இவர்கள் அறுத்ததைச் சாப்பிடுவது ஆகியவையும் ஹராம் என்று தீர்ப்பளிக்க வேண்டும். ஏனைய குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்கள் அடிப்படையில் இவ்வாறு சொல்ல இடமில்லை.

எனவே தொழுகையை விட்டவன் காஃபிராகி விட்டான் எனும் ஹதீஸிற்கு இரண்டு வகையான பொருள்களில் ஏதாவது ஒன்றைக் கொடுக்க வேண்டும்.

தொழுகையை விட்டவன் என்பதற்கு தொழுகையை மறுத்தவன் எனும் பொருள் கொள்ளலாம்.  யார் தொழுகையை மறுத்து புறக்கணிப்பானோ அவன் காஃபிராவான் என்பதில் சந்தேகம் இல்லை.

அல்லது விட்டவன் என்பதற்கு தொழாதவன் எனும் பொருள் கொள்ளலாம். அப்படி பொருள் கொண்டால் குஃப்ர் என்பதற்கு நேரடிப் பொருள் கொடுக்காமல் இறை நிரகாரிப்புக்கு நெருக்கமான செயல். இறை மறுப்பாளர்களின் குணம் என்று பொருள் செய்ய வேண்டும்.

அதனடிப்படையில் மேற்கண்ட செய்திக்கு தொழுகையை விடுவது இறை நிரகாரிப்பாளர்களின் குணமாகும் என்பதாகும்.

இவ்வாறு நாம் விளக்கம் கொடுப்பதற்குரிய காரணத்தை திரும்பவும் மீள்பதிவு செய்கிறோம்.

காஃபிர் என்றால் அல்லாஹ்வையும், ரசூலையும் நிராகரித்தவன் அல்லது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவன் என்பதாகும். தொழுகையை விடுபவன் அல்லாஹ்வை நிரகாரித்தவனாகவோ, அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவனாகவோ ஆக மாட்டான்.

தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு என்றால் இறை நிராகரிப்புக்கு மன்னிப்பு கிடையாது என்பதால் தொழுகையை விடுதல் என்ற குற்றத்திற்கு அறவே மன்னிப்பு கிடையாது என்ற கருத்து வரும். ஆனால் திருக்குர்ஆன் இணைவைப்பு அல்லாத ஏனைய பாவங்களை இறைவன் நாடினால் மன்னிப்பதாக கூறுகின்றது.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள(பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். திருக்குர்ஆன் 4:48

ஒருவர் இறைவனுக்கு இணை கற்பிக்காமல் மரணித்து விட்டார் எனில் அவர் தவ்ஹீதைத் தவிர வேறு எதையும் சம்பாதிக்காதவராக இருந்தும் அவரை இறைவன் சொர்க்கத்திற்கு அனுப்புவதாக முன்னர் நாம் பார்த்த ஏராளமான ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன.

தொழுகையை விடுவது மன்னிக்கப்படாத இறை நிராகரிப்பாக இருந்திருந்தால் தவ்ஹீதைத் தவிர வேறு எதுவும் இல்லாதவர் சொர்க்கம் சென்றிருக்க முடியாது.

எனவே தொழுகையை விட்டவன் காஃபிர் என்று பொருள் செய்வது இந்த அடிப்படையில் தவறாக உள்ளதால் மேற்கண்ட விளக்கம் அளிக்கப்படுகின்றது.

தொழுகையை விடுவதன் தண்டனை

அதே சமயம் தொழுகையை விடுவது ஒரு பெரிய பாவமே அல்ல என்றோ அல்லது தொழுகையை விடுவது சிறிய குற்றம் தான் தொழாவிட்டாலும் எளிதாக சொர்க்கம் சென்று விடலாம் என்றோ எண்ணி விடக் கூடாது.

கடமையான தொழுகையை ஒருவர் அலட்சியத்துடன் விடுவது அவரை நரகத்தில் கொண்டு சேர்க்கப் போதுமான காரணமாகும்.

தொழுகையை விடுவது நரகிற்கு அழைத்துச் செல்லும் பாரதூரமான குற்றம் என திருக்குர்ஆன் சொல்கிறது.
அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் உங்களை நரகத்தில் சேர்த்தது ஹஎது? என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை எனக் கூறுவார்கள். திருக்குர்ஆன் 74:41-43

மேலும் தொழுகையை விட்டவருக்கு மறுமையில் கடுமையான தண்டனை கிடைப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
صحيح البخاري

1143 – حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، قَالَ: حَدَّثَنَا عَوْفٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، قَالَ: حَدَّثَنَا سَمُرَةُ بْنُ جُنْدَبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الرُّؤْيَا، قَالَ: «أَمَّا الَّذِي يُثْلَغُ رَأْسُهُ بِالحَجَرِ، فَإِنَّهُ يَأْخُذُ القُرْآنَ، فَيَرْفِضُهُ، وَيَنَامُ عَنِ الصَّلاَةِ المَكْتُوبَةِ»

ஒரு மனிதரின் தலை நசுக்கப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கனவில் கண்டார்கள். அது பற்றி அவர்கள் விளக்கும் போது, அவர் குர்ஆனைக் கற்று அதைப் புறக்கணித்து, கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர் என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஸமுரா (ரலி) நூல் : புகாரீ 1143

 எனவே தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு எனும் குஃப்ர் இல்லை என்பதால் தொழுகையை விடுவதில் அலட்சியமாக இருக்கலாம் என்று புரிந்து கொள்ளக் கூடாது.   


P.JAINUL ABIDEEN

share this.. https://bit.ly/3VusGEm

494 மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிக்கு வரலாமா?

 
494. மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிக்கு வரலாமா?

பள்ளிவாசல்கள் மிகவும் புனிதம் வாய்ந்த இடங்களாகும். பள்ளிவாசல்களில் எத்தகைய ஒழுங்குகளைப் பேணி நடக்க வேண்டும் என்று திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. பள்ளிவாசல் அல்லாத இடங்களில் நாம் நடந்து கொள்வதைப் போன்று பள்ளிவாசல்களில் நடந்து கொள்வது கூடாது.

குளிப்புக் கடமையான ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களாக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய குளிப்புக் கடமை நீங்கி சுத்தமாகின்ற வரை பள்ளிவாசல்களுக்குள் நுழைவது கூடாது என்பதும் அந்த ஒழுங்குகளில் ஒன்றாகும்.

வித்ரு தொழுகையில் குனூத் ஓத வேண்டுமா சரியான விளக்கம்

 வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது தொடர்பாக வரும் ஹதீஸ்கள் பலவீனமானவை என்று சிலர் இலங்கையில் கூறி வருகிறார்கள். ஆனால் உண்மையில் வித்ரில் குனூத் ஓதுவதற்கு ஸஹீஹான ஹதீஸ்கள் இருக்கின்றன.

வித்ர் தொழுகையில் குனூத் ஓதும் நடைமுறை தவ்ஹீத் சகோதரர்கள்


மத்தியிலும் இன்னும் பலர் மத்தியிலும் வழக்கத்தில் இருந்து வருகிறது. இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அடிப்படையில் நிரூபணமான ஒன்று என்று அவர்கள் கருதுகின்றனர்.

வித்ரில் குனூத் ஓதுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் எதுவும் இல்லை என்ற கருத்தும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

தமிழ் கூறும் முஸ்லிம்கள் மத்தியில் வித்ரில் குனூத் ஓதுவது குறித்த அறிவிப்புகள் பலவீனமானவை என்ற கருத்து தற்போது வேகமாகப் பரப்பப்பட்டு வருகிறது. எனவே இது குறித்து சரியான நிலைபாட்டை எடுத்துக் கூறும் அவசியம் கருதி இது வெளியிடப்படுகிறது.

வித்ர் தொழுகையில் குனூத் ஓதுவது சம்மந்தமாக பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் உள்ளன.

அவற்றில் பலவீனமான ஹதீஸ்களைத் தேடிப்பிடித்து அவை பலவீனமானவை என்று மீண்டும் சிலர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் வித்ரு குனூத் தொடர்பான அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை என்ற கருத்தை விதைக்க முடியும் என்று கருதுகிறார்களோ என்னவோ தெரியவில்லை.

தஸ்பீஹ் தொழுகை உண்டா?

 தஸ்பீஹ் தொழுகை உண்டா?

தஸ்பீஹ் தொழுகை என்ற பெயரில் ஒரு ரக்அத்துக்கு 75 தஸ்பீஹ்கள் வீதம் நான்கு ரக்அத்களில் 300 தஸ்பீஹ்கள் ஓதி தொழும் வழக்கம் சில பகுதிகளில் காணப்படுகிறது.


தஸ்பீஹ் தொழுகை தொடர்பாகப் பல ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்துமே பலவீனமானவை என்று அறிஞர்களில் ஒரு சாரார் கூறுகின்றனர்.

மற்றும் சில அறிஞர்கள் தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் பெரும்பாலான ஹதீஸ்கள் பலவீனமாக உள்ளன. ஆயினும் சில ஹதீஸ்கள் மட்டும் ஏற்கத்தக்கதாக உள்ளன என்று கூறுகின்றனர்.

தஸ்பீஹ் தொழுகை தொடர்பான கீழ்க்காணும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமனவை என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் ஒருமித்து கூறுகின்றனர். அதாவது கீழ்க்காணும் ஹதீஸ்கள் பலவீனமானைவை என்பதை இரு சாராரும் ஒப்புக் கொள்வதால் இது குறித்து ஆய்வு தேவை இல்லை. மேலோட்டமாக அறிந்து கொண்டாலே போதுமானது.

சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது கூடுமா?

 சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது கூடுமா?

நாம் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகள் எதுவாக இருந்தாலும் அவை


நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக இருந்தால் அந்த வணக்கம் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படாது. இன்றைக்கு நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் பல்வேறு வணக்க வழிபாடுகளில் நபி (ஸல்) அவர்களின் தெளிவான சுன்னத்துகள் புறக்கணிக்கப்பட்டு பல பித்அத்தான காரியங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பிறகு அல்லாஹும் மஹ்தினி என்று ஆரம்பிக்கக் கூடிய துஆவை குனூத்தாக ஓதுவதாகும்.

இதை'ஷாஃபி மத்ஹபினர் சுன்னத்தாகக் கருதி செய்து வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக வரக்கூடிய செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகும். மேலும் சில ஸஹீஹான ஹதீஸ்களை முழுமையாக ஆராயாமல் அவற்றிலிருந்து தவறான முறையில் சட்டம் எடுத்துள்ளனர். இதற்கு அவர்கள் எடுத்துக் வைக்கக் கூடிய ஆதாரங்களையும் அதன் நிலைகளையும் காண்போம்.

மழைத் தொழுகை முறைகள்

மழைத் தொழுகை முறைகள்

 நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை


வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் தொழுகைக்கென சில குறிப்பிட்ட முறையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.

சூரியன் உதித்தவுடன் தொழ வேண்டும்.

இமாம் மேலாடையை மாற்றிப் போட்டுக் கொள்ள வேண்டும். மக்கள் மேலாடையை மாற்ற ஆதாரம் இல்லை

திடலில் தொழ வேண்டும்.

இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும்.

அதில் இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்

முதல் ரக்அத்தில் கூடுதலாக ஏழு தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் கூடுதலாக ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும்.

தொழுத பின்னர் இமாம் மிம்பரில் ஏறி சொற்பொழிவு நிகழ்த்தாமல் இறைவனைப் பெருமைப்படுத்தல், பாவமன்னிப்புத் தேடல் போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டும். இமாமைப் போன்று மற்றவர்களும் இரு கைகயும் உயர்த்திப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இரு கைகளையும் மற்ற துஆக்களில் உயர்த்துவதைப் போன்று அல்லாமல் புறங்கை வானத்தை நோக்கி இருக்குமாறு கைகளைக் கவிழ்த்து உயர்த்த வேண்டும்.

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை உண்டா?

 ஒருவர் இறந்து விட்டால் அவரது வீட்டில் அடுப்பு எரியக்கூடாதா? 

அனூத்

பதில்:

ஒருவர் இறந்து விட்டால் அவ்வீட்டார் சோகமாக இருப்பார்கள். அவர்கள் சமைக்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள். எனவே அவர்களுக்காக மற்றவர்கள் உணவளிக்க வேண்டும் என்பது இஸ்லாமியச் சட்டம். இந்த அர்த்தத்தில் மய்யித் வீட்டில் அடுப்பெரியக் கூடாது என்று கூறினால் அதில் தவறில்லை.

سنن الترمذي998 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ جَعْفَرِ بْنِ خَالِدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ قَالَ: لَمَّا جَاءَ نَعْيُ جَعْفَرٍ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اصْنَعُوا لِأَهْلِ جَعْفَرٍ طَعَامًا، فَإِنَّهُ قَدْ جَاءَهُمْ مَا يَشْغَلُهُمْ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ»، «وَقَدْ كَانَ بَعْضُ أَهْلِ العِلْمِ يَسْتَحِبُّ أَنْ يُوَجَّهَ إِلَى أَهْلِ المَيِّتِ شَيْءٌ لِشُغْلِهِمْ بِالمُصِيبَةِ، وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ»: «وَجَعْفَرُ بْنُ خَالِدٍ هُوَ ابْنُ سَارَةَ وَهُوَ ثِقَةٌ رَوَى عَنْهُ ابْنُ جُرَيْجٍ»

ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் மூத்தா போரில் கொல்லப்பட்ட செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். மேலும் ஜஃபரின் வீட்டினருக்கு கவலை தரும் செய்தி வந்து விட்டதால் அவரது குடும்பத்தாருக்காக உணவு சமைத்துக் கொடுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பபவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)  நூல் : திர்மிதி 919

ஜமாஅத் தொழுகையில் காலோடு கால் ஒட்டி நிற்க வேண்டுமா?

காலோடு கால்
 ஜமாஅத் தொழுகையில் காலோடு கால் ஒட்டி நிற்க வேண்டுமா?

தொழுகையில் வரிசையில் நிற்கும் போது ஒருவருடைய பாதமும், அருகில் நிற்பவரின் பாதமும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கும் வகையில் நிற்க வேண்டுமா?

கே.எஸ்.சுக்ருல்லாஹ்

பதில்

இது குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன. அதைச் சரியான முறையில் புரிந்து கொள்ளாததால் இவ்வாறு சிலர் செய்து வருகின்றனர்.

صحيح البخاري725 – حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَقِيمُوا صُفُوفَكُمْ، فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي، وَكَانَ أَحَدُنَا يُلْزِقُ مَنْكِبَهُ بِمَنْكِبِ صَاحِبِهِ، وَقَدَمَهُ بِقَدَمِهِ»

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்கள் (தொழுகை) வரிசைகளை நேராக்கிக் கொள்ளுங்கள்! ஏனெனில் நான் எனது முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காண்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆகவே,) எங்களில் ஒருவர் தமது தோள் புஜத்தை தம் அருகிலிருப்பவரின் தோள் புஜத்துடனும், தமது பாதத்தை தம் அருகிலிருப்பவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொண்டு நிற்கலானார்கள்.

நூல் : புகாரி 725

இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்துத் தான் ஒருவரது பாதங்களுடன் மற்றவரின் பாதங்களைச் சேர்த்துக் கொண்டு நிற்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

இது குறித்து அபூதாவூதிலும் இன்னும் சில நூல்களிலும் இடம் பெற்ற ஹதீஸில் பின்வருமாறு கூடுதல் விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.

ரமழான் இரவுத் தொழுகை!

 ரமழான் இரவுத் தொழுகை!

இஷாத் தொழுகையின் பின் சுன்னத்திலிருந்து சுபஹுடைய அதான் வரையிலான இரவு வேளையில் தொழப்படும் சுன்னத்தான தொழுகைக்கு இரவுத் தொழுகை என்று கூறப்படும். அறபியில் இதற்கு ‘கியாமுல் லைல்’ என்று கூறுவர். ரமழான் மாதத்தில் மட்டுமல்லாது ஏனைய காலங்களிலும் இந்த இரவுத் தொழுகைக்குத் தனியான சிறப்பம்சங்கள் இருக்கின்றன. ஆன்மீக முன்னேற்றத்தில் இரவுத் தொழுகையின் பங்கு முக்கியமானதாகும்.

இரவு நேரத்தில் தமது படுக்கையை விட்டும் எழுந்து தொழும் நல்லடியார்கள் பற்றிப் பின்வரும் வசனம் இவ்வாறு சிறப்பித்துப் பேசுகின்றது.

அவர்களது விலாப்புறங்கள் படுக்கைகளை விட்டும் விலகியிருக்க, அவர்கள் தமது இரட்சகனை அச்சத்துடனும், ஆதரவுடனும் பிரார்த்திப்பார்கள். மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்லறங்களில்) செலவும் செய்வார்கள்.’

எனவே, அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக அவர்களுக்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சியை எந்த ஆன்மாவும் அறிந்து கொள்ளாது.

அல் குர்ஆன் (32:16-17)

மறுமை நாளில் நபியிடம் பரிந்துரை வேண்டுவது இணைவைப்பதாகாதா?

 மறுமை நாளில் நபியிடம் பரிந்துரை வேண்டுவது இணைவைப்பதாகாதா?

கியாமத் நாளில் மக்கள் தங்களுக்கு நேர்ந்துள்ள சிரமத்தை நபிமார்களிடம் முறையிடும் போது அல்லாஹ்விடம் தானே அவர்கள் முறையிடுமாறு கூறி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் முஹம்மத நபியிடம் பரிந்துரையைக் கேட்குமாறு கூறுவது இணைவைப்பதாக ஆகாதா என்று நண்பர் ஒருவர் கேட்கிறார். இது சரியா...?

மறுமையில் மக்கள் நபிமார்களிடம் வந்து அல்லாஹ் விரைவாகத் தீர்ப்பளிப்பதற்கு அவனிடம் பரிந்துரை செய்யுமாறு கேட்பார்கள். அனைத்து நபிமார்களும் தங்களுக்கு இது இயலாது என்று கூற இறுதியாக முஹம்மது (ஸல்) அவர்களிடம் வருகை தருவார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அனுமதி கொடுத்த பின் அவர்கள் பரிந்துரை செய்வார்கள் என ஹதீஸ் கூறுகின்றது.

பரிந்துரை வேண்டி மக்கள் தங்களிடம் வந்த போது நபிமார்கள் அவர்களை அல்லாஹ்விடம் கேட்கச் சொல்லாமல் மற்ற நபியிடம் ஏன் அனுப்பினார்கள்? நபிமார்களுக்கு தவ்ஹீத் தெரியாதா? என்று உங்கள் நண்பர் கேள்வி கேட்டுள்ளார்.

தவ்ஹீதைப் பற்றிய சரியான தெளிவு இல்லாத காரணத்தாலே இந்தக் கேள்வி கேட்டுள்ளார்.

ஜுமுஆவின் சட்டங்கள்

 ஜுமுஆவின் சட்டங்கள்

வெள்ளிக்கிழமை லுஹர் தொழுகைக்குப் பதிலாக இமாம் மிம்பரில் பயான் நிகழ்த்திய பின்னர் தொழப்படும் இரண்டு ரக்அத்கள் தொழுகையே ஜுமுஆத் தொழுகையாகும்.

நேரம்

ஜுமுஆத் தொழுகை லுஹர் நேரத்திலும் தொழலாம். சூரியன் மேற்குத் திசையில் சாய்வதற்குச் சற்று முன்பாகவும் தொழலாம். இரண்டிற்கும் ஹதீஸில் ஆதாரம் உள்ளது.

904 - حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الجُمُعَةَ حِينَ تَمِيلُ الشَّمْسُ»

சூரியன் (உச்சியிலிருந்து) சாயும் நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரீ 904

நாற்காலியில் அமர்ந்து தொழக் கூடாதா?

 நாற்காலியில் அமர்ந்து தொழக் கூடாதா?

நிற்கவும் தரையில் அமர்ந்தும் தொழ இயலாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து தொழலாமா என்ற கேள்விக்கு தமிழ்நாடு ஜமாஅதுல் உலமா கூடாது என்று ஃப்தவா அளித்துள்ளனர். இது சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகிறது.

.

ஜமாஅதுல் உலமா ஃபத்வாவுக்கு நமது மறுப்பு

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கீழ் வரும் காரணங்களினால் தடுக்கப்பட்டுள்ளது   

1,குர்ஆனுக்கு மாற்றமானது.

2, ஹதீஸுக்கு மாற்றமானது.

3, உலமாக்களின் ஃபத்வாக்களுக்கு மாற்றமானது.

4, தொழுகையின் அசலான தன்மைக்கு மாற்றமானது.

5, யூதர்கள், கிருஸ்தவர்களின் சூழ்ச்சியாகும்.

6, 25 வருடங்களுக்கு பிறகு பள்ளிகளை கிருஸ்தவ ஆலையங்களைப் போன்று மாற்றுவதற்கான சூழ்ச்சியாகும்.


நமது மறுப்பு

நாற்காலியில் அமர்ந்து தொழக்கூடாது என்பதற்கு ஆறு காரணங்களை ஜமாஅதுல் உலமா கூறியுள்ளது.

குர்ஆனுக்கு மாற்றமானது; ஹதீஸுக்கு மாற்றமானது என்று கூறிய ஜமாஅதுல் உலமா குர்ஆனுக்கு முரணானது என்பதையும் ஹதீஸுக்கு முரணானது என்பதையும் இந்த ஃபத்வாவில் நிரூபிக்கவில்லை என்பதை இவர்கள் காட்டிய ஆதாரங்களை வைத்தே நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

நாற்காலியில் தொழலாம் என்பது உலமாக்களின் ஃபத்வாவுக்கு மாற்றமானது என்று இவர்கள் கூறும் காரணம் மார்க்கத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லாத காரணமாகும். மத்ஹபு தரீகா உள்ளிட்டவைகளையே நியாயப்படுத்தும் உலமாக்கள் நாற்காலி விஷயத்தில் மட்டும் சரியான தீர்ப்பை அளித்திருப்பார்களா?

மார்க்கத்தில் இதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லாவிட்டாலும் அந்த உலமாக்களின் கூற்றையும் நாம் அலசி ஒவ்வொன்றுக்கும் பதில் அளித்துள்ளோம்.

நான்காவதாக தொழுகையின் அசலான தன்மைக்கு மாற்றமானதாகும் என்று கூறியுள்ளனர். இது மதிகெட்ட வாதமாகும்.

தொழுகைக்கு அசலான தன்மை உள்ளது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அசலான முறையில் தொழ முடியாதவர்கள் அவர்களால் இயன்ற முறையில் தான் தொழுவார்கள். இயலாதவர்களுக்குச் சொல்லப்படும் எல்லா சட்டமும் சலுகையும் அசலான முறைக்கு மாற்றமாகத் தான் இருக்கும்.

இதே ஃபத்வாவில் தரையில் அமர்ந்து தொழலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர். அதுவும் அசலான தன்மைக்கு மாற்றமானது தான். ஆனாலும் இதைச் சரிகாணும் இவர்களுக்கு நாற்காலியில் அமர்ந்து தொழுவது மட்டும் அசலான தன்மைக்கு மாற்றமாகத் தெரிகிறது.

ஐந்தாவது ஆறாவது காரணங்கள் பிதற்றலின் உச்சகட்டமாகும்.

உலமாக்களின் அறியாமைக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் அதை முறியடிக்க இவர்கள் கூறும் காரணம் யூதர்களின் சூழ்ச்சி என்பது தான்.

உடற்கூறு சார்ந்த ஒரு பிரச்சனைக்கு அதற்கேற்ப தீர்ப்பு அளிப்பது இவர்களுக்கு யூத கலாச்சாரமாக தெரிகிறது.

யூத கிறித்தவர்களின் சூழ்ச்சி என்று சொல்லும் உலமா சபை இந்த ஃபத்வாவில் எந்த இடத்திலும் இதை ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்  

தொழுகையின் நோக்கமே அல்லாஹ்வின் முன்னிலையில் பணிவை வெளிப்படுத்தி அவனை வணங்குவதாகும்.

திட்டமாக முஃமின்கள் வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுடைய தொழுகையில் உள்ளச்சம் கொண்டோராக இருப்பர்.(அல்முஃமினூன்1,2.)

தொழுகை என்பது தன்னை முற்றிலும் மறந்து இறைவனுக்கு முன்னால் தன் பணிவை வெளிப்படுத்தி அவனை வணங்குவதாகும். தொழுகையில் உள்ள ஒவ்வொரு செயல்களும் இதையே உணர்த்துகின்றன.

இதுவே (குஷுவு) என்னும் உள்ளச்சமாகும்.

மேலும் உள்ளச்சம் என்பது தொழுகையாளி தன் பணிவை வெளிப்படுத்தி பார்வையை கீழ் தாழ்த்தியும் உடல் அங்கங்களை அமைதியாக வைத்து குரலை தாழ்த்துவதாகும்.(ஷாமி2/407)

நாற்காலியில் அமர்ந்து தொழுவதினால் மேற்கூறப்பட்ட (குஷுவு)உள்ளச்சத்தின் வெளிப்பாடுகள் இல்லாமல் ஆகிவிடுவதால் நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

நமது மறுப்பு

தொழுகையில் பணிவு அவசியம் என்று கூறும் குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.

பணிவு அவசியம் என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை.

இப்படி வாதிடும் ஜமாஅதுல் உலமா சபை தரையில் உட்கார்ந்து தொழலாம் என்று இதே ஃபத்வாவில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

எல்லோரும் நிற்கும் போது சிலர் மட்டும் தரையில் உட்கார்ந்து தொழுவது பணிவுக்கு அப்பாற்பட்டது என்பதால் தரையில் உட்கார்ந்து தொழக் கூடாது என்று இவர்கள் சொல்ல வேண்டும்.

இதற்கு என்ன காரணம் சொல்வார்கள்? நிற்க இயலாதவன் தானே உட்கார்ந்து தொழுகிறான். இயலாத போது பணிவுக்கு மாற்றமாகத் தெரியும் செயல்களைச் செய்வது பணிவுக்கு எதிராக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தான் இவர்களின் பதிலாக இருக்க முடியும்.

நான் நின்று வணங்க முடிந்தாலும் நின்று வணங்க மாட்டேன் நாற்காலியில் உட்கார்ந்து தான் வணங்குவேன் என்று ஆணவம் பிடித்து யாரும் நாற்காலியில் உட்காருவதில்லை. நிற்க முடியவில்லை என்பதற்காகத் தான் நாற்காலியில் உட்காருகிறார்கள்.

நாற்காலியில் யார் உட்காருகிறார்கள்? முட்டுக்கால் பிரச்சனை ஏற்பட்டு தரையில் உட்கார்ந்தால் வலி ஏற்படும் நிலையில் உள்ளவர்கள் தான் நாற்காலியில் உட்காருகிறார்கள். தரையில் உட்கார கால்களை மடித்துப் போட வேண்டும். முட்டுக்கால் வலி பிரச்சனை உள்ளவர்களால் தரையில் உட்கார முடியாது. கால்களைத் தொங்க விட்டுத்தான் அமர முடியும்.

இப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களை தரையில் உட்காரச் சொல்வது அறிவீனம் அல்லவா? தரையில் உட்கார முடியாத நிலையும் உள்ளது என்ற பொது அறிவு கூட இவர்களுக்கு இல்லை.


صحيح البخاري1117 - حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ، قَالَ: حَدَّثَنِي الحُسَيْنُ المُكْتِبُ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَتْ بِي بَوَاسِيرُ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلاَةِ، فَقَالَ: «صَلِّ قَائِمًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ»


1117 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு மூலவியாதி இருந்தது. ஆகவே நான் தொழுவது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று தொழுவீராக! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழுவீராக! அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழுவீராக! என்று சொன்னார்கள்.நூல் : புகாரி 1117


இயலாவிட்டால் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி அதற்கான சலுகையை அளித்துள்ளார்கள். சலுகை என்பது இயலாமைக்குத் தான்.

ஒருவருக்கு நிற்கவும் இயலவில்லை. தரையில் அமரவும் இயலவில்லை. அவர் எப்படி தொழ வேண்டும் என்று கேட்டால் இவர்கள் சொல்லும் பதில் என்ன? தரையில் அமர்ந்து தொழ வேண்டும் என்பது தான். தரையில் அமர முடியாதவர்கள் பற்றித் தான் கேள்வி கேட்கப்படுகிறது. அவரை தரையில் அமரச் சொல்வது தான் ஃபத்வாவா?

இந்த ஃபத்வாவில்

தொழுகை என்பது தன்னை முற்றிலும் மறந்து

என்று போகிற போக்கில் ஒரு நச்சுக் கருத்தைத் தூவியுள்ளனர். முற்றிலும் தன்னை மறந்து விடுதல் இஸ்லாத்தில் இல்லை. பைத்தியக்காரனுக்கு மட்டுமே உள்ள தன்மையாகும்.

தொழுகையில் தன்னை மறத்தல் என்பது யாராலும் முடியாத காரியமாகும். இப்படி ஒரு நிலை இஸ்லாத்தில் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையில் ரக்அத்களின் எண்ணிக்கையை மறந்துள்ளார்கள். தமது பேத்தி உமாமாவை தொழுகையில் தோளில் சுமந்துள்ளார்கள். மறதிக்காக ஸஜ்தா ஸஹ்வு என்பதைக் கற்றுத் தந்துள்ளனர். எனவே தன்னிலை மறத்தல் என்பது போலி தத்துவமாகும்.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்  

முஸ்லிம்களே! ஐந்து நேரத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகைகளையும் பேணித் தொழுது வாருங்கள் மேலும் அல்லாஹ்விற்கு அடிபணிந்தவர்களாக நில்லுங்கள் (அல்பகரா238)

சில உலமாக்கள் மேற்கண்ட ஆயத்திற்கு அல்லாஹ்வுக்கு முன் ஒழுங்காக நில்லுங்கள் என்று அர்த்தம் செய்துள்ளார்கள். (ம ஆரிஃபுல் குர்ஆன் 1/236)

قومو ا لله قانتين என்பதின் விளக்கவுரை: அல்லாஹ்விற்கு முன்னால் பணிவுடனும் ஒழுக்கமாகவும் நின்றுகொள்ளுங்கள்.

பூமியில் அமர்ந்து தொழும்போது பணிவும், ஒழுக்கமும் ஏற்பாடுகின்றன.

நாற்காலியில் இந்த நிலை ஏற்படாததால் அவற்றில் அமர்ந்து தொழுவது கூடாது.

தொழுகை என்பது வணக்கமாகும் (அப்த்) என்ற வார்த்தையின் பொருள் அடிமையாகும். அடிமையிடம் அடிமைத்தனம் வெளிப்படவேண்டும். நாற்காலியில் அமர்ந்து தொழும்போது அடிமைத்தனம் வெளிப்படுவதில்லை. எனவே நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

நமது மறுப்பு

இதுவும் நாற்காலியில் அமர்ந்து தொழக்கூடாது என்பதற்கு ஆதாரமாக இல்லை.

தரையில் உட்கார்ந்து தொழும் போது ஏற்படும் அதே பணிவு நாற்காலியில் அமரும் போது ஏற்படாது என்பது இவர்களின் கற்பனை தானே தவிர உண்மை அல்ல.

இயலாத நிலயில் நாற்காலியில் அமர்ந்தாவது தொழுதாக வேண்டும் என்று தொழ வருபவருக்கு இறையச்சம் உள்ளதால் தான் அந்த நிலையிலும் தொழ வருகிறார்.

நாற்காலியில் அம்ர்ந்தால் பணிவு இல்லை; நாற்காலியில் அமர்ந்தால் இறையச்சம் இல்லை என்று வாதிடுவதற்கு முன்னால் அதை ஜமாஅதுல் உலமா நிரூபிக்க வேண்டும்.

நின்றாலும், நிற்க முடியாத போது தரையில் அம்ர்ந்தாலும், அதற்கும் முடியாத போது நாற்காலியில் அமர்ந்தாலும், அதற்கும் இயலாத போது படுத்து தொழுதாலும் அவை அனைத்திலும் பணிவும் உள்ளது. இறையச்சமும் உள்ளது.

ஜமாஅதுல் உலமாவின் வாதம் 

ஹஜ்ரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோயுற்ற நிலையில் ஃபர்ளான தொழுகையை பூமியில் அமர்ந்தே நிறைவேற்றினார்கள். மேலும் நஃபில் தொழுகையை அமர்ந்தும் சைக்கினை செய்தும் நிறைவேற்றினார்கள்.

ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு துல்ஹிஜ்ஜா மாதம் நபியவர்களின் காலில் காயம் ஏற்பட்டபோது பல நேரத் தொழுகையை தங்கள் வீட்டில் அமர்ந்தே தொழுதார்கள். அச்சமயம் நாற்காலி அவர்களிடம் இருந்தது.(முஸ்லிம் 876)

நபியவர்களின் வீடு மஸ்ஜித்தின் அருகில் இருந்தும் கூட நோயின் காரணமாக தொழுகைகளை வீட்டிலேயே நிறைவேற்றினார்கள்.

இவ்வாறே எவரேனும் பூமியில் அமர்ந்து தொழ முற்றிலும் சக்தியற்றவராக இருந்தால் அவர் வீட்டிலேயே அமர்ந்து தொழுது கொள்ளட்டும். (மஜ்ம உஜ்ஜவாயித் வமன்பவுல் ஃபவாயித்(2/149, அல் முஃஜமுல் அவ்ஸத் 3/28, முஸ்னத் அபியஃலா அல்மவ்ஸலி7/42)


நமது மறுப்பு

சிந்திக்கும் வழிமுறை ஜமாஅதுல் உலமாவுக்கு இல்லை என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தரையில் உட்கார்ந்து தொழுதார்கள் என்று ஹதீஸ் வந்தால் அப்படி உட்கார்ந்து தொழலாம் என்று தான் சட்டம் எடுக்க முடியும். நாற்காலியில் உட்காரக் கூடாது என்று சட்டம் எடுக்க முடியது.

நாற்காலியில் உட்காருதல் என்பது தரையில் உட்கார்ந்து தொழ முடியாதவர்களுக்கான சலுகையாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தரையில் உட்கார முடியாமல் நாற்காலியில் உட்காரும் நிலையில் இருந்தும் தரையில் உட்கார்ந்து தொழுதார்கள் என்று ஹதீஸ் இருந்தால் தான் அதை ஆதாரமாகக் காட்ட முடியும்.

தரையில் உட்கார்ந்து தொழக் கூடாது என்று யாராவது வாதிட்டால் அவர்களுக்கு மறுப்பாக இதை எடுத்துக் காட்டலாம்.

தரையில் உட்கார முடியாவிட்டாலும் தரையில் உட்கார வேண்டும் என்பதற்கு இது எப்படி ஆதாரமாக ஆகும்?

ஒரு முடிவை முன்னரே எடுத்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப ஹதீஸ்களை வளைப்பது தான் மத்ஹபுகளில் உள்ள பிரதான நோய்,. அந்த நோய் தான் இங்கே வெளிப்பட்டுள்ளது.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நோயாளியை நலம் விசாரிக்க சென்றார்கள். அவர் தலையனையின் மீது ஸஜ்தா செய்து தொழுது கொண்டிருப்பதை கண்ட நபியவர்கள் அதை தூக்கி எறிந்து விட்டார்கள். அவர் ஸஜ்தா செய்ய ஒரு குச்சியை எடுத்தார். அதையும் எறிந்து விட்டார்கள். பிறகு கூறினார்கள். உங்களால் முடிந்தால் பூமியில் ஸஜ்தா செய்து தொழுங்கள் இல்லையானால் சைகை செய்தால் போதுமானது. (ஸுனனுஸ் ஸஙீர் லில் பைஹகீ 118/1,ஹுல்யதுல் அவ்லியாவதபகாதுல்அஸ்ஃபியா92/7)

நமது மறுப்பு

ஒரு ஹதீஸை ஆதாரமாக எடுத்துக்காட்டி வாதம் செய்தால் அந்த ஹதீஸ் சரியானதா என்பதை உறுதி செய்து விட்டு வாதம் செய்ய வேண்டும். இவர்கள் எடுத்துக்காட்டிய ஹதீஸ் பலவீனமானது. இந்தக் கருத்தில் உள்ள எல்லா ஹதீஸ்களும் பலவீனமானவையாகும்.

ஹதீஸ் ஒன்று

السنن الكبرى للبيهقي (2/ 434)3669 - أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ بِشْرَانَ بِبَغْدَادَ أنبأ أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ الْبَخْتَرِيِّ الرَّزَّازُ ثنا يَحْيَى بْنُ جَعْفَرٍ ح وَأَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ بْنِ إِبْرَاهِيمَ الْهَاشِمِيُّ بِبَغْدَادَ أنبأ أَبُو عَمْرِو بْنُ السَّمَّاكِ، ثنا أَبُو بَكْرٍ [ص:435] يَحْيَى بْنُ أَبِي طَالِبٍ ثنا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَادَ مَرِيضًا فَرَآهُ يُصَلِّي عَلَى وِسَادَةٍ فَأَخَذَهَا فَرَمَى بِهَا، فَأَخَذَ عُودًا لِيُصَلِّيَ عَلَيْهِ فَأَخَذَهُ فَرَمَى بِهِ وَقَالَ: " صَلِّ عَلَى الْأَرْضِ إِنِ اسْتَطَعْتَ وَإِلَّا فَأَوْمِ إِيمَاءً وَاجْعَلْ سُجُودَكَ أَخْفَضَ مِنْ رُكُوعِكَ وَكَذَلِكَ رَوَاهُ مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ الْبَحْرَانِيُّ، عَنْ أَبِي بَكْرٍ الْحَنَفِيِّ وَهَذَا الْحَدِيثُ يُعَدُّ فِي إِفْرَادِ أَبِي بَكْرٍ الْحَنَفِيِّ، عَنِ الثَّوْرِيِّ

இந்த ஹதீஸை ஜாபிர் கூறியதாக அபுஸ்ஸுபைர் அறிவிக்கிறார். இவர் தத்லீஸ் செய்பவர் ஆவார். இந்த ஹதீஸிலும் ஜாபிர் வழியாக என்று தான் கூறப்பட்டுள்ளது. ஜாபிரிடம் நான் கேட்டேன் என்று கூறப்படவில்லை. எனவே இது ஆதாரமாக ஆகாது.

தத்லீஸ் பற்றி அறிய தத்லீஸ் என்றால் என்ன என்ற ஆக்கத்தைப் பார்க்கவும்.

ஹதீஸ் இரண்டு


المعجم الكبير للطبراني12906 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بن أَحْمَدَ بن حَنْبَلٍ , حَدَّثَنِي شَبَابٌ الْعُصْفُرِيُّ , حَدَّثَنَا سَهْلٌ أَبُو عَتَّابٍ , حَدَّثَنَا حَفْصُ بن سُلَيْمَانَ , عَنْ قَيْسِ بن مُسْلِمٍ , عَنْ طَارِقِ بن شِهَابٍ , عَنِ ابْنِ عُمَرَ , قَالَ: عَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلا مِنْ أَصْحَابِهِ مَرِيضًا , وَأَنَا مَعَهُ , فَدَخَلَ عَلَيْهِ وَهُوَ يُصَلِّي عَلَى عُودٍ , فَوَضَعَ جَبْهَتَهُ عَلَى الْعُودِ , فَأَوْمَأَ إِلَيْهِ فَطَرَحَ الْعُودَ وَأَخَذَ وِسَادَةً , فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:دَعْهَا عَنْكَ إِنِ اسْتَطَعْتَ أَنْ تَسْجُدَ عَلَى الأَرْضِ , وَإِلا فَأَوْمِئْ إِيمَاءً , وَاجْعَلْ سُجُودَكَ أَخْفَضَ مِنْ رُكُوعِكِ.

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள ஹஃப்ஸ் பின் சுலைமான் இட்டுக்கட்டுபவர் என சந்தேகிக்கப்பட்டவர் ஆவார். இதுவும் ஆதாரமாக ஆகாது.

ஹதீஸ் மூன்று

مسند أبي يعلى الموصلي (3/ 345)1811 - حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ، حَدَّثَنَا حَفْصُ بْنُ أَبِي دَاوُدَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَطَاءِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: عَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرِيضًا وَأَنَا مَعَهُ فَرَآهُ يُصَلِّي وَيَسْجُدُ عَلَى وِسَادَةٍ فَنَهَاهُ، وَقَالَ: «إِنِ اسْتَطَعْتَ أَنْ تَسْجُدَ عَلَى الْأَرْضِ فَاسْجُدْ، وَإِلَّا فَأَوْمِئْ إِيمَاءً، وَاجْعَلِ السُّجُودَ أَخْفَضَ مِنَ الرُّكُوعِ»

[حكم حسين سليم أسد] : إسناده ضعيف جدا

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள ஹஃப்ஸ் பின் அபீ தாவூத் இட்டுக்கட்டுபவரென சந்தேகிக்கப்பட்டவர் ஆவார்.

அவரது ஆசிரியரான மற்றொரு அறிவிப்பாளர் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பலவீனமானவர் ஆவார்.

இதையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.

ஒரு வாதத்துக்கு இது ஆதாரப்பூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும் இது நாற்காலியில் தொழக் கூடாது என்ற கருத்தைத் தரவில்லை. தரையில் ஸஜ்தா செய்ய முடியாவிட்டால் சைகை மூலம் ஸஜ்தா செய்ய வேண்டும் என்ற கருத்து தான் இதில் உள்ளது. தரையில் அமர்ந்து சைகை மூலம் ஸஜ்தா செய்வது போலவே நாற்காலியில் அமர்ந்தும் சைகை மூலம் ஸஜ்தா செய்யலாம்.

சம்மந்தமில்லாத ஹதீஸ்களை அதுவும் பலவீனமான ஹதீஸ்களைப் பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி தவறான ஃபத்வா கொடுத்துள்ளனர்.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

ஹஜ்ரத் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நோயாளியை சந்திக்க சென்றோம் அவர் தலையனை மீது ஸஜ்தா செய்து தொழுது கொண்டிருப்பதை கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைப் பார்த்து கூறினார்கள் உங்களால் முடிந்தால் பூமியின் மீது ஸஜ்தா செய்யுங்கள் இல்லை எனில் சைகை செய்தால் போதுமானது.

உங்கள் ருகூவை காட்டிலும் ஸஜ்தாவிற்கு அதிகமாக குனிந்து தொழுங்கள்.

மேற்கண்ட மூன்று ஹதீஸ்களிலும் நபியவர்கள் பூமியின் மீது அமர்ந்து தொழுகையை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டார்கள். (முஸ்னத் அபியஃலா 3/345, அல் முதாலிபுல் ஆலியா 4/300,ம ஆரிஃபதுஸ்ஸுன் வல்ஆஸார்3/224)

எனவே நாற்காலியில் அமர்ந்து தொழுவது தொழுகையின் அடிப்படை நோக்கத்திற்கு மாற்றமானதாகும்.


நமது மறுப்பு

மேற்கண்ட ஹதீஸுக்கும் ஐந்தாவது மறுப்பில் பதில் அளித்துள்ளோம். இதில் அபுஸ்ஸுபைர் இடம் பெறுகிறார். அவர் தத்லீஸ் செய்பவர். மேலும் இது ஸஜ்தாவின் போது சைகையால் ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதற்குத் தான் ஆதாரமாக உள்ளது. நாற்காலியில் தொழக் கூடாது என்பதற்கு ஆதாரமாகாது

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

அன்று முதல் இன்று வரை உலமாக்கள் நாற்காலிகளை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நாற்காலியில் அமர்ந்து தொழுவது ஏதேனும் ஒரு வகையில் ஆகும் என்றிருந்தால் நிச்சயமாக அதைப் பற்றி கூறியிருப்பார்கள். ஆனால் அதைப் பற்றி எங்கும் உலமாக்கள் குறிப்பிடாமல் இருப்பது, நாற்காலியில் அமர்ந்து தொழுவது   தொழுகையில் இருக்கவேண்டிய உள்ளச்சம், பணிவு, அடிமைத்தனத்தின் வெளிப்பாடு ஆகிய வற்றிர்கு மாற்றமாக உள்ளது என்ற கருத்து தெளிவாகிறது.


நமது மறுப்பு

மார்க்கத்தில் ஒன்று கூடுமா கூடாதா என்பதை முடிவு செய்ய அல்லாஹ்வின் வேதத்தை ஆதாரமாகக் காட்ட வேண்டும்; அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதலை ஆதாரமாகக் காட்ட வேண்டும். அதில் எந்த ஆதாரமும் இல்லை என்பது முன்னர் நிரூபணமாகி விட்டது.

எனவே தான் உலமாக்கள் இது பற்றி பேசவில்லை என்பதை ஆதாரமாக காட்டுகிறார்கள். இது ஒரு ஆதாரமாக ஆகுமா?

இந்த வாதத்தில் ஜமாஅதுல் உலமா பொய்யர்களாக உள்ளனர்.

நாற்காலி ஆரம்பம் முதலே உலகில் இருந்து வருகின்றது. அப்படி இருந்தும் அது பற்றி உலமக்கள் எதுவும் பேசவில்லை என்று இங்கே எழுதியவ்ர்கள் அடுத்தடுத்து எழுதும் போது இதற்கு மாற்றமாக எழுதியுள்ளனர்.

கிபாயதுல் முஃப்தி, தேவ்பந்த் ஆகிய பத்வாக்களை இவர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். அதில் நாற்காலியில் அமர்ந்து தொழுவது பற்றி பேசப்பட்டுள்ளது. சில நிபந்தனைகளுடன் அப்படி தொழலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

தாம் எழுதும் ஃபத்வாவில் நாற்காலியில் தொழுவது பற்றி பேசப்பட்டிருந்தும், அதுவும் சில வரிகளுக்குப் பின்னாலே பேசப்படிருந்தும் நாற்காலியில் தொழுவது பற்றி உலமாக்கள் எதுவும் பேசவில்லை என்று இவர்கள் எழுதுகிறார்கள் என்றால் இது எதைக் காட்டுகிறது?

இவர்கள் எந்தக் கவனமும் இல்லாமல் ஆய்வும் செய்யாமல் எதையாவது எழுதி முன்னர் எடுத்த முடிவை நியாயப்படுத்தப் பார்க்கிறார்கள் என்பது இதில் தெரிகிறது.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

இம்தாதுல் முஃப்தியீனில் எழுதப்பட்டுள்ளதாவது:

இது போன்ற விஷயங்களில் நிபந்தனைகளோடு கூடும் என்று அனுமதி அளித்தோம் என்றால் நாளடைவில் பொது மக்கள் நிபந்தனைகளை மறந்து விட்டு வெறும் கூடும் என்கிற விஷயத்தை மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். இது அனுபவபூர்னமான விஷயமாகும்.

(இம்தாதுல் முஃப்தியீன், கேள்வி எண்-879)


நமது மறுப்பு

இது கூடும் என்று தீர்ப்பளிப்பதே சரி என்று இவர்களின் உள் மனது சொல்கிறது. ஆனால் அப்படி அனுமதி அளித்தால் நாளடைவில் சதாரணமாக ஆக்கிவிடுவார்கள் என்று அறிவீனமான காரணத்தைச் சொல்கிறார்கள்.

இது நாற்காலியில் அமர்வதற்கு மட்டும் தானா? இயலாதவர்கள் தரையில் அமர்ந்து தொழலாம் என்று பத்வா கொடுக்கிறீர்களே இயன்றவர்களும் தரையில் தொழ ஆரம்பித்து விடுவார்கள் என்பதால் அதைக் கூடாது என்று ஏன் சொல்லவில்லை?

உலக விஷயங்களில் தான் இவர்கள் சொல்வது போல் சில நேரங்களில் ஏற்படலாம். மார்க்க விஷயத்தில் அப்படி நடக்கவே நடக்காது.

தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்யலாம் என்றால் தண்ணீர் கிடைக்கும் போதும் மக்கள் தயம்மம் செய்ய ஆரம்பித்து விட்டார்களா?

இது அறிவுடயோரிடம் எடுபடாத வாதமாகும்.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்


நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது என்பதற்கான ஃபத்வாக்கள் :


நாற்காலியில் கால்களை தொங்க விட்டு தொழுவதற்காக அமருவதும் ஸஜ்தா செய்வதற்காக டேபிளின் மீது தலைகுணிவதும் கூடாது. ஆனால் பூமியில் அமர்வதற்கோ, ஸஜ்தா செய்வதற்கோ முற்றிலும் முடியாது என்கிற போது அனுமதி உண்டு. பூமியில் ஸஜ்தா செய்வதற்கு அறவே முடியாத நிலையில் பூமியில் அமர்ந்து ஒரு ஜானை விட உயரமில்லாத ஒரு பொருளின் மீது ஸஜ்தா செய்வது கூடும்.

(ஹஜ்ரத் மொவ்லானா முப்தி கிஃபாயதுல்லாஹ் சாஹிப்-ரஹ்.நூல். கிஃபாயதுல் முஃப்தி3/400) கேள்வி எண் 1393)


நமது மறுப்பு

இந்த பத்வாக்கள் எல்லாம் மார்க்க ஆதாரமாக ஆகாது. இன்றைய உலமாக்கள் தமது ஃபத்வாவுக்கு ஆதாரம் காட்ட கடமைப்பட்டுள்ளது போல் முந்தைய உலமாக்களும் தமது ஃபத்வாக்களுக்கு ஆதாரம் காட்டக் கடமைப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் அவர்களின் பத்வாவையே ஆதாரமாகக் காட்டுவது அறிவீனமாகும்.

அப்படி காட்டும் பத்வா இவர்களின் வாதத்தை ஆதரிக்கிறதா? இல்லவே இல்லை.

இது இவர்களுக்கே எதிரானதாகும். இயலாவிட்டால் நாற்காலியில் தொழலாம் என்று தான் இதில் கூறப்பட்டுள்ளது.

இவர்களின் மதஹபுகளிலேயே இரு கருத்துக்கும் இடம் உள்ள போது எதற்கு ஆதாரம் உள்ளதோ அதைத் தான் ஃபத்வாவாக கொடுக்க வேண்டும். ஆனால் ஆதாரமில்லாத கருத்தை ஃபத்வாவாக அளித்துள்ளனர்.


ஜமாஅதுல் உலமாவின் வாதம்

ஒரு நாற்காலியில் அமர்ந்து மற்றொரு நாற்காலியின் மீது ஸஜ்தா செய்தால் தொழுகை கூடிவிடும். எனினும் நிபந்தனை என்னவெனில் இரு முழங்கால்களையும் நாற்காலியின் மீது வைக்கவேண்டும்.

அவ்வாறு வைக்கவில்லை எனில் தொழுகை கூடாது. திரும்ப தொழுவது அவசியமாகும். (அஹ்ஸனுல் ஃபத்வா 4/51)

தாருல் உலூம் தேவ்பந்தினுடைய முஃப்திகளின் தீர்ப்பு 


நமது மறுப்பு

நாற்காலியில் அமர்ந்து தொழக்கூடாது என்ற உலமா சபையின் வாதத்துக்கு எதிராகவே இந்த பத்வாவும் அமைந்துள்ளது.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்

ஒருவர் தொழுகையில் நிற்க முடியாது ஆனால் பூமியில் அமர்ந்து ஸஜ்தா செய்து தொழுக முடியுமென்றால் அவர் பூமியில் ஸஜ்தா செய்வது அவசியமாகும்.

பூமியில் ஸஜ்தா செய்யாமல் நாற்காலியிலோ அல்லது தரையிலோ அமர்ந்து வெறும் சைகை மூலம் ஸஜ்தா செய்வது கூடாது.

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது. ஏனெனில் முடியாத நிலையில்...

1, பூமியில் அமர்ந்து தொழுவது சுன்னத்தான வழிமுறை ஆகும். இவ்வாறே ஸஹாபாக்களும் அவர்களுக்கு பின் வந்தவர்களும் செய்து வந்துள்ளார்கள்.   ஏறத்தாழ கி.பி.1990-க்கு முன்பு வரை நாற்காலியின் மீது அமர்ந்து தொழகும் முறை காணப்படவில்லை.


நமது மறுப்பு

சமீப காலங்களில் தான் முட்டுக்கால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

உடலுழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால் எல்லா வேலைகளையும் நாற்காலியில் அமர்ந்தே செய்து பழகியதால் முட்டுக்காலை மடக்க முடியாத நிலை தற்காலத்தில் தான் அதிகம். மேலும் குளிரூட்டப்பட்ட அறைகளில் அதிகமாக இருப்பதால் முட்டுக்காலில் ஏற்படும் இறுக்கம் காரணமாகவும் இந்த நிலை ஏற்படுகிறது.

 மலம் கழிக்கக் கூட கால்களைத் தொங்கவிடும் வகையிலான கழிப்பறைகளை உருவாக்கும் அளவுக்கு பாதிப்பு ஏற்படுள்ளது.

இவ்வளவு காலமாக இப்பிரச்சனை இல்லை என்பதைக் காரணம் காட்டி இயலாதவனுக்கு சட்டம் கூறி மார்க்கத்தைக் கடுமையாக்குவது தான் ஆய்வா?

சர்க்கரை நோய் முற்றிப்போனவர்கள் நோன்பை விட்டு விடலாம் என்று சொன்னால் இது வரை யாருக்காவது சர்க்கரை நோய் முற்றி நோன்பை விட்டுள்ளார்களா? இல்லையே? எனவே சர்க்கரை இருந்தாலும் நோன்பு வைத்து செத்துப் போ என்று சொல்வதற்கும் இந்தக் காரணத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை.


ஜமாஅதுல் உலமாவின் வாதம்

 2, நாற்காலிகளை தேவையின்றி பயன்படுத்துவதால் ஸஃப்ஃபுகளில் இடையூறு ஏற்படுகிறது.   ஆனால் ஹதீஸ்களில் தொழுகையின் ஸஃப்ஃபுகளில் சேர்ந்து நிற்பது பற்றி மிக அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.


நமது மறுப்பு

 நாற்காலியில் அமராமல் தரையில் சம்மனமிட்டு அமர்ந்தாலும் இதே இடையூறு ஏற்படுகிறதே?

இருவர் நிற்கும் இடம் ஒருவருக்கு தேவைப்படுகிறதே?

சேர்ந்து நிற்க முடியாத நிலை ஏற்படுகிறதே?

அப்படியானால் தரையில் அமர்ந்தும் தொழக் கூடாது என்று இவர்கள் சொல்வார்களா?


ஜமாஅதுல் உலமாவின் வாதம் 

3, தகுந்த தேவையின்றி நாற்காலிகளை பள்ளியில் கொண்டு வருவதால் மாற்றார்களின் வழிப்பாட்டு தலங்களுக்கு ஒப்பாகிறது.

தீனுடைய காரியத்தில் அன்னியர்களுடன் நாம் ஒபாகுவதை தடுக்கப்பட்டுள்ளது.

நமது மறுப்பு 

மாற்றாருக்கு ஒப்பாகுதல் கூடாது என்பதன் அர்த்தம் கூட இவர்களுக்குப் புரியவில்லை,

நாற்காலி என்பது வசதிக்காக செய்து கொண்ட ஏற்பாடாகும். வணக்கத்துடன் இதற்கு தொடர்பு இல்லை. மாற்றார்கள் சோறு சாப்பிடுவதால் நாம் சோறு சாப்பிடக் கூடாது என்பது போல் இந்த வாதம் அமைந்துள்ளது.

மேலும் கிறித்தவர்களின் வழிபாட்டுத்தலங்களில் வழிபடும் போது முழந்தாளிட்டுத்தான்  வணங்குவார்கள். உரை கேட்கும் போது நாற்காலியில் அமர்வார்கள்.

இந்துக் கோவில்களில் நின்று தாம் கும்பிடுவார்கள்.

இதுவும் பொய்யான காரணமாக உள்ளது.

இவர்கள் வாதப்படி பொதுக்கூட்டம் பயான் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் நாற்காலியில் அமரக் கூடாது என்று ஆகும். அப்படித்தான் ஃப்த்வா கொடுக்கப் போகிறார்களா?


ஜமாஅதுல் உலமாவின் வாதம்  

4, தொழுகை என்பது பணிவு, அடிமைத்தனத்தின் வெளிப்பாடு ஆகும். இந்நிலை நாற்காலியில் அமர்ந்து தொழும்போது தான் பூரணமாக வெளிப்படாது.

நமது மறுப்பு  

இயலாதவர்கள் தமக்கு இயன்ற முறையில் தொழுவது பணிவுக்கு எதிரானதல்ல என்பதை முன்னரே விளக்கி விட்டோம்.

ஜமாஅதுல் உலமாவின் வாதம்   


5, ஒரு தொழுகையாளி பூமியை நெருங்கி தன் நெற்றியை வைப்பது தொழுகையில் வேண்டப்படுகிறது. நாற்காலியில் அவை நிறைவேறுவதில்லை.


நமது மறுப்பு

இது சக்தியுள்ளவருக்கான சட்டம். நாம் பேசிக் கொண்டு இருப்பது இயலாதவர்கள் பற்றி.

இதைக் கூட உணராமல் வாயில் வந்ததை விட்டு அடித்துள்ளார்கள்.


ஜமாஅதுல் உலமாவின் வாதம்

ஸஃபர்20 ஹிஜ்ரி 1432, ஜனவரி மாதம் 20/2011 அன்று மதுரையில் கூடிய தமிழ் நாடு ஜமாஅத் துல் உலமா சபையில் 350 உலமாக்களின் ஒரு மித்த தீர்ப்பு:

நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

தங்கடம் உள்ளவர்கள் தரையில் தான் உட்கார்ந்து தான் தொழுக வேண்டும்.

மேற்கூறப்பட்ட குர்ஆன், ஹதீஸ், ஃபத்வாக்களின் மூலம் நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது என்பது தெளிவாகிவிட்டது.

ஒரு முஃமின் எப்பொழுது உட்கார்ந்து தொழுவது கூடும்?

நின்று தொழுவதை விடுவதற்கான காரணம் இருவகைப்படும்.

1, ஹகீகி: அறவே நின்று தொழ முடியாதவர்.

2, ஹிக்மி: அறவே நிற்க முடியாது என்பதல்ல மாறாக அவரால் நிற்க முடியும் ஆனால் நின்றால் கீழே விழுந்தது விடுவார் அல்லது மார்க்கம் எதை தங்கடம் என கூறியுள்ளதோ அந்த அளவிற்கு பலகீனம் ஏற்படுவது.

உதாரணமாக: அனுபவமுள்ள முஸ்லிம் மருத்துவர் நின்று தொழுதால் நோய் அதிகமாகும் (அ) கடுமையான வலி ஏற்படும் (அ) நோய் குணமாக தாமதமாகும்.என கூறியிருந்தால்-அவர் அமர்ந்து தொழுவது கூடும்.

ஆனால் சகித்துக் கொள்ளும் படி வலி இருந்தால் கூடாது.

நோயாளி தொழுகும் முறை.

1, அத்தஹிய்யாதில் அமரும் நிலை தான் சிறந்து.

சம்மணம் போட்டு அமர்வதும், இரண்டு கால்களையும் வெளியே விட்டு பித்தட்டில் அமருவதும் மற்றும் குத்த வைத்து அமருவதும் கூடும்.

2, உட்கார்ந்து தொழும் போது பார்வை மடியில் இருக்க வேண்டும்.

கையைக் கட்டிக்கொள்ள வேண்டும்.

ருகூசெய்யும்போது கையை முட்டுக்காலில் வைக்க வேண்டும்.

நெற்றியை முட்டுக்கால்களுக்கு சமமாக வைக்க வேண்டும்.

பித்தட்டை உயர்த்தக் கூடாது.

மேலும் ஸஜ்தா செய்ய வேண்டும் ஸஜ்தா செய்ய சக்தி இல்லை எனில் ருகூவைவிட ஸஜ்தா வில் தலையை அதிகமாக சாய்க்க வேண்டும்.

ஸஜ்தா செய்யும் போது கையை பூமியின் மீது வைக்க வேண்டும்.

சைகை செய்து தொழுபவரை பின் பற்றி தொழுவது கூடாது.

3, தொழுகையின் மற்ற செயல்களான கிராஅத் ஓதுவது, தஸ்பீஹ் ஹாத் ஓதுவது, நடுநிலையாக   மன ஓர்மையோடு தொழுவது இவையனைத்தும் உடல் ஆரோக்கியம் உள்ளவர் நிறைவேற்றுவது போன்று நிறைவேற்ற வேண்டும்.

மஸ்அலாக்கள்      

1, யாராவது தரையில் அமர்ந்து எழுந்து நிற்பதற்கு சக்தி இல்லை எனில் அவர் கட்டிலில் அமர்ந்து கால்களை மடக்கி தொழவேண்டும்.

2, ஃபஜ்ருடைய சுன்னத் அதிமுக்கியமானதாக இருப்பதால் நிற்க சக்தி உள்ளவர்கள் அதை நின்று தான் தொழுக வேண்டும்.

மற்ற சுன்னத்களை உட்கார்ந்து தொழலாம்.

3, முதல் ரக அத்தை நின்று தொழுதவர் 2வதுரக அத்திற்கு எழ முடியாமல் ஆகிவிட்டால் தரையில் அமர்ந்து தொழுவது கூடும்.

4,ஒருவர் தலையால் சைகை செய்து தொழ முடியாத நிலைக்கு ஆகிவிட்டால் தொழுகை மன்னிக்கப்படும்.

தொகுப்பு:

மௌலானா முஃப்தி அபுல் கலாம் காஸிமி மழாஹிரி.சேலம்.

பொதுச்செயலாளர்-மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா குழு

தொலைபேசி 9443391412

வெளியீடு:  மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா குழு


நமது மறுப்பு

இந்த ஃபத்வா போகிற போக்கில் கொடுக்கப்படவில்லை.  350 உலமாக்கள் கூடி அளித்த ஃபத்வா என்று இந்த ஃப்த்வாவில் குறிப்பிட்டுள்ளனர். 

எத்தனை  அறிஞர்கள் ஃப்த்வா கொடுத்துள்ளனர் என்பதை வைத்து சட்டங்கள் முடிவு செய்யப்படாது. எந்த ஆதாரங்கள் அடிப்படையில் பத்வா கொடுத்துள்ளனர் என்பதை வைத்தே சட்டங்கள் எடுக்கப்படும்.

இந்தஃபத்வாவில் அறியாமையும் மனோ இச்சையும் தான் உள்ளதே தவிர ஆதாரம் எதுவும் இல்லை, ஆய்வும் இல்லை.

உண்மைக்கு முரணான ஊகமும், கற்பனையும் தான் இதில் ஆதாரமாகக் காட்டப்பட்டுள்ளது.

நிற்கவும், தரைய்ல் உட்காரவும் முடியாதவர்கள் நாற்காலியில் அமரக் கூடாது என்பதைச் சொல்லும் ஒரு குர்ஆன் வசனம் கூட இந்த ஃபத்வாவில் இல்லை. இந்தக் கருத்தைச் சொல்லும் ஒரு ஹதீஸ் கூட இந்த ஃபத்வாவில் இல்லை.

இது ஃபத்வாவாக எடுத்துக் கொள்ள தகுதியில்லாத உளறல் என்பதில் சந்தேகம் இல்லை.

நாற்கலியில் அமர்ந்து தொழுவது குறித்து முன்னரும் நாம் பதிலளித்துள்ளோம். அதைக் காண நாற்காலியில் அமர்ந்து தொழலாமா என்ற ஆக்கத்தைப் பார்க்கவும்.

நாற்காலியில் அமர்ந்து தொழலாமா?

சிலர் மிகவும் குண்டாக, தரையில் உட்கார முடியாத நிலையில் உள்ளார்கள். இப்படிப்பட்டவர்கள் நாற்காலியில் அமர்ந்து தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?

அனுமதி உண்டு. இதற்கான ஆதாரங்கள் வருமாறு:

صحيح البخاري1117 – حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ، قَالَ: حَدَّثَنِي الحُسَيْنُ المُكْتِبُ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَتْ بِي بَوَاسِيرُ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلاَةِ، فَقَالَ: «صَلِّ قَائِمًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ»

எனக்கு மூல நோய் இருந்தது. 'எவ்வாறு தொழுவது?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நீ நின்று தொழு! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு! அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு' என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)  நூல்: புகாரீ 1117


أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ حُسَيْنٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْتِرْ بِخَمْسٍ فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَبِثَلَاثٍ فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَبِوَاحِدَةٍ فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَأَوْمِ إِيمَاءً

'நீ ஐந்து ரக்அத் வித்ரு தொழு! முடியாவிட்டால் மூன்று ரக்அத் வித்ரு தொழு! அதற்கும் முடியாவிட்டால் ஒரு ரக்அத் வித்ரு தொழு! அதுவும் முடியாவிட்டால் சைகை செய்து (தொழுது) கொள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலி)  நூல்: தாரமீ 1536


'உட்கார்ந்து தொழ முடியாவிட்டால் படுத்துத் தொழு, அதற்கும் முடியாவிட்டால் சைகை மூலம் தொழு' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். முடியாத பட்சத்தில் சைகை செய்து கூட தொழலாம் எனும் போது, தரையில் உட்கார முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து தொழுவதில் தவறில்லை என்பதை விளங்கலாம்.

எவரையும் அவரது சக்திக்கு உட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.  திருக்குர்ஆன் 2:286


---onlinepj.in

https://rb.gy/ygbggd

https://youtu.be/0THsev0GDMM

பெருநாள் தொழுகை சட்டங்கள்

 பெருநாள் தொழுகையின் அவசியம்

பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். ஜும்ஆத் தொழுகை கடமை என்பதை நாம் அறிவோம். ஜும்ஆ தினத்தில் பெருநாள் வந்தால் ஜும்ஆவிற்குப் பதிலாக பெருநாள் தொழுகையே போதுமானது என்று மார்க்கம் கூறுகின்றது என்றால் பெருநாள் தொழுகை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம்.

(இது பின்னர் விரிவாக விளக்கப்பட்டுள்ளது)

ஜமாஅத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை போன்ற கூட்டுத் தொழுகைகளில் பெண்கள் பங்கு கொள்ளாமல் தமது வீடுகலேயே தனியாகத் தொழுது கொள்ளலாம் என்று இஸ்லாம் பெண்களுக்குச் சலுகை வழங்கியுள்ளது. அப்படிச் சலுகை வழங்கிய இஸ்லாம் பெருநாள் தொழுகையில் மட்டும் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறது. தகுந்த ஆடை இல்லாவிட்டால் இரவல் ஆடை வாங்கியாவது கலந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

(இதுவும் பின்னர் விளக்கப்பட்டுள்ளது).

மற்ற தொழுகைகளை விட அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதில் இருந்து இத்தொழுகையின் அவசியத்தை அறிந்து கொள்ளலாம்.

பெருநாள் தொழுகை நேரம்

ஜனாஸா தொழுகை எப்படி தொழுவது

ஜனாஸா தொழுகை
 ஸலாதுல்  ஜனாஸாவை எப்படி  தொழுவது.

 1- முதல் தக்பீருக்குப் பிறகு: சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதுங்கள்.

 1. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

 2. அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்

 3. அர்-ரஹ்மானிர்-ரஹீம்

 4. மாலிக்கி யாவ்மித்-தீன்

 5. இய்யாகா ந'புதூ வ யீயாக நஸ்தாயின்

 6. இஹ்தினாஸ்-சிராத்தல்-முஸ்தகீம்

 7. சிராத்தல்-லதீனா அன் அம்தா அலைஹிம் கைரில்- மக்லுபி அலைஹிம் வ லல்-அலீம்

 2- இரண்டாவது தக்பீருக்குப் பிறகு: ஸலாத்துல் இப்ராஹிமிய்யா இறுதி வரை.

 அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லய்தா அலா இப்ராஹீமா வ அலா ஆலி இப்ராஹீமா, இன்னகா ஹமீதுன் மஜீத்.  அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்தா அலா இப்ராஹீமா வ அலா ஆலி இப்ராஹீமா, இன்னகா ஹமீதுன் மஜீத்.

 3- மூன்றாவது தக்பீருக்குப் பிறகு: ஓதும் துவா

  அல்லாஹும்மபி(F)ர் லஹு வர்ஹம்ஹு வஆபி(F)ஹி வபு(F) அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பி(B)ல்மாயி வஸ்ஸல்ஜி வல்ப(B)ரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்ப(B)ல் அப்(B)யள மினத் தனஸி வ அப்(B)தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்ஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபி(B)ல் கப்(B)ரி

 4- இறுதியாக சலாம் சொல்லி முடிக்கவும் 

 அல்லாஹ் (Sub-haanahu wata'aala) எங்கள் குறைபாடுகளை மன்னிக்க வேண்டும், மற்றும் இறந்தவர்களுக்கும் .  அல்லாஹ் நமக்கு ஜன்னத்துல் பிர்தௌஸை என்னும் உயர்ந்த சொர்க்கத்தை  வழங்குவானாக.

 ஆமீன் 🤲🤲🤲🤲🤲

https://bit.ly/3SiHYsZ



ஸலாத்துன் தவ்பா தொழுகை

தவ்பா

 இஸ்லாத்தில் ஸலாத்துன் தவ்பா தொழுகை முறை பற்றி அறிந்து
கொள்ளுவோம்
💞

• மனிதன் பலகீனமானவன் ஆவான்! அதனால் அவன் அறிந்தும் அறியாமலும் பல நேரங்களில் பாவத்தில் விழுந்து விடுகிறான்!

• பொதுவாக மனிதர்கள் பாவம் செய்ய கூடியவர்களே ஆனால் இவர்களில் சிறந்தவர்கள் அல்லாஹ்விடம் தான் செய்த பாவத்திற்கு தவ்பா செய்ய கூடியவர் தான்!

• நாம் ஏதேனும் ஒரு பாவம் செய்து விட்டால் கால தாமதம் செய்யாமல் முதலில் மனம் வருந்தி அல்லாஹ்விடம் உடனடியாக தவ்பா செய்யவேண்டும்!

• தவ்பா செய்யும் பொழுதே மீண்டும் அந்த பாவத்தின் பக்கம் செல்ல கூடாது என்று உறுதியான எண்ணத்துடன் அல்லாஹ்விடம் தவ்பா செய்யவேண்டும்!

• இவ்வாறு நாம் செய்த பாவத்திற்கு அல்லாஹ்விடம் தவ்பா செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுகை முறையும் கற்று கொடுத்து உள்ளார்கள் அது தான் ஸலாத்துன் தவ்பா ஆகும்!

💟 தொழுகை முறை :

மாதவிடாய் தொடர்ந்து வந்தால் தொழுவது பற்றிய சட்டம் என்ன?

 
மாதவிடாய் தொடர்ந்து வந்தால் தொழுவது பற்றிய சட்டம் என்ன?

ஃபாத்திமா

பதில்:

சில பெண்களுக்கு தொடர்ச்சியாக உதிரப்போக்கு ஏற்படும். குறைந்தபட்சம் மூன்று நாட்கள், அதிகபட்சம் ஏழு நாட்கள் என்ற கணக்கையெல்லாம் தாண்டி உதிரப்போக்கு ஏற்படும். அதற்கு இஸ்லாம் கூறும் தீர்வு இதுதான்.

صحيح البخاري228 – حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ ابْنُ سَلاَمٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ، إِنَّمَا ذَلِكِ عِرْقٌ، وَلَيْسَ بِحَيْضٍ، فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي» – قَالَ: وَقَالَ أَبِي: – «ثُمَّ تَوَضَّئِي لِكُلِّ صَلاَةٍ، حَتَّى يَجِيءَ ذَلِكَ الوَقْتُ»

ஃபாத்திமா பின்த் அபூ ஹுபைஷ் என்ற பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படும் ஒரு பெண். நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா?'' என்று கேட்டார். அதற்கு, "இல்லை! அது ஒரு வித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டு விடு! அது நின்றுவிட்டால் இரத்தம் பட்ட இடத்தைக் கழுவி விட்டு தொழுகையை நிறைவேற்று! பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூச் செய்து கொள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்: புகாரி 228

பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா?

 பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா?


ஜகுபர் சாதிக்.

المستدرك على الصحيحين للحاكم
1350 - حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ هَانِئٍ، ثنا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ بْنِ مُهَاجِرٍ، ثنا أَبُو الطَّاهِرِ، وَهَارُونُ بْنُ سَعِيدٍ، قَالَا: ثنا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ أَبَا طَلْحَةَ «دَعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عُمَيْرِ بْنِ أَبِي طَلْحَةَ حِينَ تُوُفِّيَ، فَأَتَاهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى عَلَيْهِ فِي مَنْزِلِهِمْ، فَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ أَبُو طَلْحَةَ وَرَاءَهُ وَأُمُّ سُلَيْمٍ وَرَاءَ أَبِي طَلْحَةَ، وَلَمْ يَكُنْ مَعَهُمْ غَيْرُهُمْ» هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ، وَسُنَّةٌ غَرِيبَةٌ فِي إِبَاحَةِ صَلَاةِ النِّسَاءِ عَلَى الْجَنَائِزِ، وَلَمْ يُخَرِّجَاهُ "


அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள்

ஜனாஸா

நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூ தல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம், அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை.

அறிவிப்பவர் : அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ்

நூல்: ஹாகிம், தப்ரானி

பெண்கள் பாங்கு சொல்லலாமா?

 பெண்கள் பாங்கு சொல்லலாமா?


அஜி

பதில்:

பாங்கில் இரண்டு வகைகள் உள்ளன.

ஜமாஅத் தொழுகைக்கு மக்களை அழைப்பதற்காகச் சொல்லப்படும் பாங்கு ஒரு வகை. இந்த பாங்கை ஆண்கள் தான் சொல்ல வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவது அனுமதிக்கப்பட்டு இருந்தது. இந்த அனுமதியைப் பெண்கள் பயன்படுத்தியும் வந்தனர். அவர்களில் யாரும் பள்ளிவாசலில் பாங்கு சொல்ல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவு இடவில்லை. அனுமதிக்கவும் இல்லை.

தொழுகைக்கு வரும் பெண்கள் ஆண்களின் பின்னால் கடைசி வரிசையில் தான் நிற்க வேண்டும் என்ற ஏற்பாட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருந்தார்கள். ஆண்களின் வணக்க வழிபாடுகளுக்குப் பெண்கள் தலைமை தாங்கக் கூடாது என்பதை இதில் இருந்து நாம் அறிகிறோம்.

Search This Blog