ஷீயாயிஸம்
ஈரானின், அமெரிக்க – இஸ்ரேல் எதிர்ப்புணர்வு, சர்வதேச ஒற்றுமை குறித்த அஹ்மது நஜாதின் கருத்துக்கள், இஸ்லாமிய கலை நுட்பத்தை வெளிப்படுத்தும் எழுத்தோவியங்கள், வறிய முஸ்லிம் நாடுகளுக்கான உதவிகள்,ஈரானின் அணு ஆயுத பலம் போன்ற சில புறத்தோற்றங்களை மட்டும் காணும் பெரும்பாலான முஸ்லிம்கள் ஈரான் ஓர் இஸ்லாமிய தேசம் என்றும், அதன் ஆட்சியாளர்களும் ஆன்மீகத் தலைவர்களும் மிகப் பெரும் இஸ்லாமிய வாதிகள், அங்கு ஆட்சிபீடத்தில் இருக்கும் ஷீயாயிஸம் இஸ்லாத்தின் ஒரு பகுதி தான் என்றும் கருதுகின்றனர்.
உண்மையில் ஓர் அமைப்பை அல்லது இயக்கத்தை நாம் புறத்தோற்றங்களையும், வெளிப்பகட்டையும் வைத்து சரிகாணக்கூடாது. அதன் அடிப்படைக் கொள்கை கோட்பாடுகளை அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸ_ன்னா எனும் உரைகற்களின் மூலம் உரசிப்பார்த்தே ஓர் இயக்கத்தை சரிகாணுதல் வேண்டும்.
ஷீயாக்கள் என்போர் யார்?
அவர்களின் கொள்கைகள் என்ன?
என்பதை நன்கு அறிந்த எந்தவொரு முஸ்லிமும் அவர்களை ஆதரிக்க மாட்டான். அப்படித்தான் ஆதரித்திருந்தாளும் தன் நிலைப்பாட்டை உடனே மாற்றிக் கொள்வான். ஷீயாக்களின் கொள்கைகளை புரிய வேண்டும் என்பதற்காக அவர்கள் குறித்த மிகவும் சுறுக்கமான அறிமுகத்தை இங்கே தருவது பொருத்தமென்று கருதுகிறோம்.