தவ்ஹீத் ஜமாஅத் video's: ஸலபி
Showing posts with label ஸலபி. Show all posts
Showing posts with label ஸலபி. Show all posts

நவீன ஸலஃபிகளிடம் சில கேள்விகள்!

நீங்கள் நபிவழி நடப்பவர்களா?


தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் வருவதற்கு முன் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற சரியான நிலைபாட்டை மக்கள் அறியாது இருந்தனர். முன்னோர்கள், பெரியார்கள், இமாம்கள் எதைக் கூறினாலும் அதை மார்க்கச் சட்டமாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.

குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டும் தான் இஸ்லாத்தின் அடிப்படை. இவ்விரண்டிலும் கூறப்பட்டவை மட்டுமே இஸ்லாம். இவ்விரண்டிலும் இல்லாத விஷயங்கள் ஒருக்காலும் மார்க்கமாக முடியாது என்று குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன.

“செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)  நூல்: முஸ்லிம்-1573

மத்ஹபைப் பின்பற்றிக் கொண்டிருந்த மக்களிடம் இது போன்ற எண்ணற்ற ஆதாரங்களை எடுத்துச் சொல்லி குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற சரியான நிலைபாட்டின் பால் அவர்களை அழைத்தோம். அல்லாஹ்வின் கிருபையால் பலர் மத்ஹபிலிருந்து விடுபட்டார்கள்.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று இப்னுல் கையூம் சொன்னாரா?

 குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று இப்னுல் கையூம் சொன்னாரா?

திருக்குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று அறிஞர் இப்னுல் கையூம் சொன்னதை ரமலான் உரையில் பீஜே எடுத்துக் காட்டினார்.

இந்த விஷயத்தில் பீஜே இருட்டடிப்புச் செய்து விட்டார் என்று சலபுகள் எனப்படுவோர்  பரப்பி வருகின்றனர்.

அவர்கள் கூறுவது இதுதான்:

ஸலபுகளை யார் திட்டுகிறானோ அவனிடமிருந்து கல்வியைக் கற்காதீர்கள்

ஸலபுகளை யார் திட்டுகிறானோ அவனிடமிருந்து கல்வியைக் கற்காதீர்கள் என்று முஸ்லிம் இமாம் கூறியதாக ஒரு செய்தியைப் பரப்புகிறார்கள். இதன் உண்மைத் தன்மை என்ன?


    இம்ரான், இலங்கை

    பதில்

ஸலபுகள் எனும் வழிகேடர்கள் இது போன்ற செய்திகளைப் பரப்பி மக்களைத் தக்க வைக்க முயல்கிறார்கள்.

குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாகவும்,  குர்ஆன் ஹதீஸில் இல்லாதவைகளையும் மார்க்கம் என்றும் சலபுகள் பத்வா கொடுத்து வந்தார்கள். அவர்கள் சொல்வதை அப்பாவிகள் நம்பி வந்தனர். அவர்களின் பத்வாக்களுக்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரமில்லை என்பதை வஹீயே மார்க்கம் என்ற நிலைபாட்டில் உள்ளவர்கள் எடுத்துக் கூறி கேள்வி கேட்கச் சொல்கிறார்கள். கேள்விக்கு பதில் சொல்ல திராணியற்றவர்கள் ஸலபுகளை திட்டுவோரிடம் கல்வி கற்காதீர்கள் என்ற ஒரு வரியில் தமது மடமையை மறைக்கப் பார்க்கிறார்கள்.

சலபுகளைக் குறை கூறுவோரிடம் கல்வி கற்கக் கூடது என்றால்  முஸ்லிம் இமாமிடமும் கல்வி கற்கக் கூடாது. ஏனெனில் ஆயிரக்கணக்கான தாபியீன்களையும், தபவுத் தாபியீன்களையும் பலவீனர் என்றும் பொய்யர் என்றும் நம்பகமற்றவர்கள் என்றும் அவர் குறை கூறியுள்ளார். அப்படியானால் முஸ்லிம் நூலையே வாசிக்கக் கூடாது என்பார்களா?

புகாரி இமாமும் இது போல் பலரை குறை கூறியுள்ளார்கள். அவர்கள் அனைவருமே ஸலபுஸ் ஸாலிஹீன்கள் தான். ஸலபுஸ் ஸாலிஹீன்களை இப்படி குறை கூறிய புகாரி நூலையும் வாசிக்கக் கூடாது. அதிலிருந்து கல்வியைக் கற்கக் கூடாது என்று கள்ள ஸலபுகள் சொல்வார்களா?

எந்த ஹதீஸ்கலை அறிஞரிடமும் நாம் கற்கக் கூடாது. ஏனெனில் அவர்கள் அனைவருமே தனி மனிதர்களான ஸலபுகளைக் குறை கூறியவர்கள் தான். ஸலபுகளை குறை கூறாத ஒரு ஹதீஸ்கலை அறிஞரும் இல்லை.

ஆனால் அவர்களிடம்னிருந்து தான் நாம் கல்வியைக் கற்று வருகிறோம். இல்லாவிட்டால் எல்லா ஹதீஸ் நூல்களையும் நாம் புறக்கணிக்க வேண்டும். ஏனெனில் எல்லா ஹதீஸ் அறிஞர்களும் ஆயிரக்கணக்கான ஸலபுகளைக் குறை கூறியவர்கள் தான்.

இதிலிருந்து சலபுகளின் இந்த வாதம் அறிவீனமானது என்பது தெளிவாகிறது.

எந்தக் காரணமும் இல்லாமல் அவதூறாக ஸல்புகளைக் குறை கூறுபவர்கள் பற்றித் தான் முஸ்லிம் இமாம் கூறியிருக்கிறார்.

தற்காலத்த்ல் யாரும் எந்த ஸலபுகள் மீதும் அவதூறு கூறுவதில்லை. மார்க்க ரீதியான அவர்களின் தவறுகளைத் தான் தான் சுட்டிக் காட்டுகிறார்கள். இது வரவேற்கத்தக்கதாகும்

P.Jainul Abideen

share this.. https://bit.ly/3Xfw5bz


வாயில் வந்த வழிகேடு

 வாயில் வந்த வழிகேடு

இஸ்லாமிய அடிப்படைக்கு மாற்றமான ஏகத்துவப் பிரச்சார வரலாற்றையே தீக்கிரையாக்கும் வாதம் ஒன்று சலபி நண்பர்களால் பரப்பப்பட்டு வருகிறது.

வாதம் இதுதான்.

//வழி கேட்டின் வாயில்
எந்த வாதங்களுக்கு பதில் இல்லையோ அதுவே சத்தியக்கருத்து


என்பது அடிப்படையில் தவறானது. இஸ்லாம் நிலைத்திருப்பது நம்பிக்கையின் மீதேயன்றி வாதங்களின் மீதல்ல
.//

பதில்

1- உலகில் உள்ள அனைத்து மதங்களும் நிலைத்திருப்பது நம்பிக்கையில் தான். ஏதோ இஸ்லாம் மட்டும் நம்பிக்கையில் இருப்பது போலவும் அடுத்த மதங்கள் நம்பிக்கையில் இல்லாது அறிவார்ந்த வாதங்களில் நிலைத்திருப்பது போலவும் அல்லவா நண்பர் வாதிடுகிறார். கல் என்று தெரிந்தாலும் அதைக் கடவுள் என்று நம்புவது வேற லெவல் நம்பிக்கை இல்லையா? இஸ்லாத்துக்கும் அடுத்த மதங்களுக்கும் உள்ள வேறுபாடுபற்றி யோசிக்கவே மாட்டீர்களா?

நாம் எடுத்துவைத்த வாதங்களுக்கு தம்மிடம் பதில் இல்லை. அதைக் கேட்கவும் வேண்டாம் என்று அவர் வாயில் வந்த ஒப்புதல் வாக்குமூலம்தான் இது. ‘எங்களிடம் பதில் இருக்கிறது. செத்த பாம்பை அடிக்க மாட்டோம். அரபி தெரியாதவரோடு பேச மாட்டோம்’ என்று சொல்லி ஏதோ தம்மிடம் பதில் உள்ளது போல் பொதுமக்களை ஏமாற்றிய சலபிகளுக்கு செருப்படி கொடுத்துள்ளார் இவர். ‘பதில் இல்லை என்றால் இல்லை என்று சொல்லித் தொலையுங்கள்’ என்று கூறியுள்ளார்.


2- நம்பிக்கையில்தான் மொத்த மார்க்கமும் தங்கியுள்ளது என்றால் இந்த பதில் கூடத் தேவையில்லை. ஒற்றை வரியில் நம்பிவிட்டுப்போ என்று இவர் சொல்லியிருக்க வேண்டும். இந்த வாதத்தை எடுத்துவைத்ததில் இருந்து வாதத்திற்கு பதில் சொல்ல வேண்டும் என்ற கருத்தே மேலோங்குகிறது

3- இந்தக் கருத்தை வெளியிட்ட சகோதரர் இதற்கு பிறகு இரண்டு பதிவுகள் போட்டுள்ளார். அதில் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முயன்றுள்ளார். ‘நம்பிவிட்டுப் போ’ என்ற கருத்து இதில் இல்லை. எனவே, தான் வைத்த இந்த வாதம் தவறு என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார்.

4- இனிமேல் இவர் தன்னிடம் எந்தக் கேள்வி கேட்டாலும் குர்ஆன் வசனத்தை ஹதீசைச் சொல்லி நம்பிவிட்டுப் போ என்று மட்டுமே சொல்ல வேண்டும். இவர்களை single layer இல் சிந்திக்கும் சலபிகள் என்று சொன்னோம். ஆனால் இவர், தான் எந்த layer இலும் சிந்திக்காத சலபி என்று ஒத்துக் கொள்கிறார்.

5- இஸ்லாம் அல்லாஹ்வைப் பற்றி நம்புவதையே அறிந்து நம்புமாறு சொல்கிறது. (47:19) அதை நம்பிவிட்டு ஏனைய ஈமானின் அம்சங்களை நம்புவது வெறும் நம்பிக்கையில் வராது. இப்படிப்பட்ட இறைவன் சொன்னது சரிதான் என்று அறிந்து நம்புவதையே குறிக்கும்.

6- மிஃராஜ் பயணம் என்பது நம்பிக்கை சார்ந்த அம்சம். இதைப்பற்றி மக்கத்து காபிர்கள் கேள்வி கேட்கும் போது ‘உன் வாதத்திற்கு பதில் சொல்லி சத்தியத்தை நிரூபிக்கத் தேவையில்லை. நம்பிவிட்டுப் போ’என்று நபிகளார் சொல்லவில்லை. அனைத்துக் கேள்விக்கும் பதில் சொல்லி மிஃராஜை வாதங்களால் நிரூபித்தார்கள்.

7- நபிக்கு யாரோ குர்ஆனைக் கற்றுக் கொடுக்கிறார்கள் என்ற காபிர்களின் வாதத்துக்கு அல்லாஹ் ‘வஹியை நம்பிவிட்டுப் போ’ என்று சொல்லவில்லை.
“யாருடன் இதை இணைக்கிறார்களோ அவரது மொழி வேற்று மொழியாகும். இதுவோ தெளிவான அரபு மொழியாகும்” என்று அல்லாஹ் பதில் சொல்லவில்லையா?
16:103.
இப்படி மொத்தக் குர்ஆனில் உள்ள மிக அதிமான வசனங்கள் எதிரிகள் கேட்கும் கேள்விக்கு பதிலாகத்தானே இருக்கிறது. உதாரணமாக 3:65-67, 7:195-198,43:19,43:23-24,2:170,67:10,2:111,21:24,34:46,10:16,6:101,18:05,46:4.

8- சொன்னால் நம்பிவிட்டுப் போ என்பதுதான் மார்க்கம் என்றால் ஒரு தவறை நிரூபிக்க சாட்சிகளும் வாதங்களும் எதற்கு? சொன்னால் நம்பவேண்டியது தானே. புகாரி இமாம் ஹதீஸ் தனக்குக் கிடைத்த வழியை நிரூபிக்க ஏன் அறிவிப்பாளரைச் சொல்ல வேண்டும். நான் சொல்கிறேன் நம்பிவிட்டுப் போ என்று சொல்லலாம் அல்லவா?

9- அனைத்து மதத்தில் இருந்தும் இஸ்லாம் வேறுபடும் அம்சம் என்ன? மற்றைய மதங்கள் வெறும் நம்பிக்கையை மட்டும் பேசும். இஸ்லாம் மட்டுமே தனது கொள்கையை நிரூபித்துக் காட்டும். அதனால் தானே குர்ஆன் சவால் விடுகிறது. இதைப்போல் ஒன்றைக் கொண்டுவா என்றும், முடியுமானால் முரண்பாட்டைக் காட்டு என்றும் சவால் விடுகிறானே தவிர ‘நம்பிவிட்டுப் போ’ என்று அல்லாஹ் சொல்லவில்லை.

10- கப்று வணங்கி உட்பட அனைத்து மதத்தினரும் இதையே சொல்லி தங்கள் வாதங்களை நிரூபிக்கலாமே.

‘கல்லுக்கு விளங்குமா? இறந்தவர் கேட்பாரா’ என்று நீங்கள் கேட்டால்’ அவர்களும் நீங்கள் சொல்வது போல் ‘வாதத்திற்கு பதில் இல்லாமல் இருப்பது சத்தியக் கருத்தல்ல. எம் மதம் நிலைத்திருப்பது நம்பிக்கையிலன்றி வாதத்தில் அல்ல’ என்று பதில் சொன்னால் அவன் கூற்று சரியா? உங்கள் மடமைக்கு அளவே இல்லையா? தவ்ஹீதை எங்கே கொண்டுபோய் நிறுத்திவிட்டீர்கள். தயவு செய்து கொஞ்சம் சிந்தியுங்கள்

உங்கள் உலமாக்கள் இந்த நிமிடம் வரை வழிகெட்ட கொள்கையுடையவர்களிடம் ஏன் கேள்வி கேட்க வேண்டும்? அவன் கேள்விக்கு உங்கள் உலமாக்கள் ஏன் பதில் சொல்ல வேண்டும். ‘நம்பிவிட்டுப் போ’ என்ற ஒற்றை வரியில் முடிக்கலாமே

11- நாம் கேட்கும் கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை என்று ஒத்துக் கொள்ளுங்கள். இஸ்லாம் மார்க்கத்தில் கூட பதில் இல்லை என்று உங்கள் இயலாமையை மார்க்கத்தை காட்டி மறைக்காதீர்கள். ஒரு மடத்தனமான கண்முடிப் பின்பற்றும் ஒரு சமுதாயத்தை எங்களை எதிர்க்கிறோம் என்ற பெயரில் உருவாக்காதீர்கள்.

12- யார் என்ன வாதம் வைத்தாலும் இதற்குப் பிறகு நீங்கள் வாதத்திற்கு பதில் சொல்லி நிரூபிக்கக் கூடாது. ‘நம்பினால் நம்பு. இல்லாவிட்டால் போ’ என்று சொல்லவேண்டும்.

13- உங்களிடம் பதில் இல்லாமையால், ஒருபுறம் எங்கள் கேள்விக்கு சலபு இமாம்களின் பதிலைப் பார்க்கச் சொல்கிறீர்கள். மறுபுறம் பதில் சொல்லி நிரூபிக்கத் தேவையில்லை என்கிறீர்கள். எந்த layer இல் நீங்கள் சிந்திக்கிறீர்கள்?

-- Roohul Razmi

கோளாறு எங்கே? 👇


சகாபாக்களைப் பின்பற்றுதல் சம்பந்தமாக எமது நிலைபாட்டுக்கு மறுப்புத் தெரிவித்து எழுதப்பட்ட கருத்தொன்று எனது பார்வைக்கு வந்தது.
இது சம்பந்தமான முழு மறுப்பையும் மேலதிக விளக்கத்தையும் இப்போது பார்க்கலாம்   
அவர்களின் வாதம்
// நபிகளார் விளங்கப்படுத்தும் பணியில் குறைகாண்கிறார்கள்.
தங்களுக்கு விளக்கம் அளித்தவரை நபியை விட உயர்ந்த இடத்தில் வைக்கிறார்கள்
//
பதில்
நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை இவ்வளவு காலமும் புரியாமல் இருப்பது ஆச்சரியமே.
நாங்கள் என்ன சொல்கிறோம்?
நபிகளார் சொன்ன ஒரு ஹதீசை சகாபாக்கள் புரிந்துதான் அறிவிக்கிறார்கள். நாங்கள் ஹதீசை ஏற்றுக் கொள்வதில் இருந்தே சகாபாக்கள் புரிந்தது சரி என்பதையும் சேர்த்தே ஏற்கிறோம். சகாபாக்கள் மட்டுமல்ல. புகாரி இமாம் உற்பட சகாபி, தாபிஈ, தபஃதாபிஈ என்ற அனைவரினதும் புரிதல் சரி என்பதையும் சேர்த்தே ஏற்கிறோம்.
நபிகளார் சொன்ன அதே வார்த்தையிலும் சிலர் அறிவித்து இருப்பார்கள். சில மாற்றமான சொற்களிலும் அறிவித்து இருப்பார்கள்.
அதனால்தான் ஒரே சம்பவம் பல்வேறு அறிவிப்புகளில் பல விதமான மாற்று சொற்களால் அறிவிக்கப்படுகிறது. நபி சொன்னதை புரிந்து அறிவிப்பதால் தான் அப்படி பல அறிவிப்பு வருகிறது. மாற்றுச் சொல்லால் வந்தாலும் அவை அனைத்தையும் நாம் ஏற்றுள்ளோம்.

நாங்கள் மறுப்பது என்ன?

சகாபி சுயமாக சொன்ன ஒன்றைத்தான் மறுக்கிறோம். விளக்கம் என்றாலே ஒருவர் சொன்னதை விளங்கி இன்னொருவர் சொல்வதுதான். சகாபி,  நபி சொல்லாத ஒரு கருத்தைச் சொன்னால் அது யாருடைய விளக்கமும் அல்ல. சகாபி தானே சொன்ன சொந்தக் கருத்து. எந்த ஒரு சகாபியும் நபிகளார் சொன்னார்கள் என்று தனது கருத்தைச் நபி மீது சுமத்த மாட்டார்கள்.

உதாரணமாக உமர் ரழி அவர்களின் முத்தலாக் கருத்து நபியின் எந்த ஹதீசின் விளக்கம்? நபி சொன்னதாக ஏனைய சகாபாக்கள் முத்தலாக் பற்றி சொன்னது தானே நபியின் விளக்கம். அதை நாம் ஏற்போம். உமர் ரழி சொன்னது அவர்களின் சொந்தக் கூற்று. இதை மறுப்போம். மிக மிக இலகுவான அடிப்படை இது.
கவ்ஸர் என்று குர்ஆனில் வந்துள்ளதை நபிகளார் விளக்கும் போது அது மஹ்ஷரில் உள்ள ஒரு நீர்த்தடாகம் என்று விளக்குகிறார்கள். இதை பல சகாபாக்கள் விளங்கி அறிவிக்கிறார்கள். அந்த விளக்கத்தை நாம் ஏற்றுள்ளோம். ஆனால் இப்னு அப்பாஸ் அவர்கள் அதற்கு ‘ஏராளமான நன்மை’ என்று விளக்கம் கொடுத்தார்கள். அது நபியின் எந்தக் கூற்றை விளக்குகிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம்? இது நபியின் விளக்கமல்ல. மாறாக இப்னு அப்பாசின் சொந்தக் கூற்று. இதைத்தான் நாங்கள் மறுக்கிறோம். எமது கொள்கை எவ்வளவு தெளிவானது பார்த்தீர்களா?

இவர்களின் அடுத்த வாதம்

//நபியை அனுப்பியது விளங்கப்படுத்துவதற்கே என்ற 16:44 வசனத்தைக் கேள்விக் குறியாக்குகிறார்கள். நபியிடம் மார்க்கம் கற்ற நபித்தோர்ர்களின் மார்க்கப் புரிதலை விட தங்களின் மார்க்கப் புரிதல் மிகச் சரியானது என்கிறார்கள்//
பதில்
இவர் சுட்டிக்காட்டிய வசனத்தின் இறுதியே இவர் கருத்துக்கு எதிராகத்தான் இருக்கிறது. இதுதான் அந்த வசனம்
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.”
நபியும் குர்ஆனை விளக்குவார், நாமும் குர்ஆனை சிந்திக்க வேண்டும் என்ற இரண்டு விடையங்களையும் சேர்த்து அல்லாஹ் சொல்கிறான்.

இனி நபி இல்லை என்பதால் அல்குர்ஆன் என்பது எக்காலத்துக்கும் பொருத்தமானதே. நபிகள் விளக்கியது தவிர நவீன காலப் பிரச்சினைகளுக்கும் குர்ஆன் தீர்வு சொல்லும். அதை நாம்தான் விளங்க வேண்டும். நபிகளார்  விளக்காத விளக்கங்களும் குர்ஆனில் இருக்கும் என்பதையே இந்த வசனம் சொல்கிறது.

மேலும் நபிகள் நாயகம் அவர்கள் தமது இறுதி பேருரையில் சொன்னது என்ன?

“செவியேற்பவரை விட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்து கொள்பவராயிருக்கலாம் (ஸஹீஹுல் புகாரி 67,105,1741)”

நபிகள் சொன்னதில் சகாபாக்களின் விளக்கத்தில் இல்லாத சிலவும் பின்னர் வரும் மக்களால் விளங்கப்படும் அல்லவா. அப்படி விளங்குவதால் சகாபாக்களின் விளக்கமான ஹதீசுக்கு மேலதிகமான விளக்கமும் ஹதீசில் இருக்கிறது என்பது தானே அர்த்தம்.

ஹதீசில் உள்ள ஒரு அம்சத்தை நாங்கள் சொன்னால் இதற்கு முன் இதை எந்த சலபி அறிஞர் சொன்னார் என்று கேட்கும் வழக்கம் இவர்களிடம் உள்ளது. அதிலிருந்து என்ன தெரிகிறது? சகாபாக்கள் விளங்காத ஒன்றை சலபி அறிஞர்கள் அந்த ஹதீசில் இருந்து விளங்கியிருப்பார்கள் என்று தானே அதன் அர்த்தம்.

சகாபிகள் பேரில் எந்த மதுகபும் இல்லை. இமாம்கள் பேரில்தான் இருக்கிறது. சகாபி விளங்காத ஒன்றை இமாம் விளங்கியிருப்பார் என்பதுதானே அதன் அர்த்தம்.
எந்த மனிதனுக்கும் குர்ஆனின் கருத்தோடு மோதாமல் மேலதிகமாக குர்ஆனை விளங்க உரிமை உண்டு. அவர் விளங்கியது சரியா பிழையா என்று மக்கள் தீர்மானிப்பார்கள். அந்த விளக்கம் தவறாக இருந்தாலும் விளங்கும் உரிமையைப் பறிக்க முடியாது.

மேலும் இந்த வசனத்தை ஆதாரம் காட்ட நாம்தான் அதிக உரிமை படைத்தவர்கள். குர்ஆனுக்கு விளக்கமாகவே நபி சொல்வார்கள் என்று குர்ஆன் சொல்ல நபிகளாருக்கு பல காலம் பைத்தியம் இருந்தது என்று குர்ஆனுக்கு மாற்றமாக நபிகள் சொன்னார்கள் என்பதை நம்பும் நீங்கள்தான் இந்த வசனத்துக்கு மாற்றமாக நடக்கிறீர்கள்.

ஸலபிச் சிந்தனை உடையவர்கள் single layer இல் சிந்திக்காமல் கொஞ்சம் ஆழமாக சிந்தித்து தமது மார்க்கப் பணிகளை செய்ய வேண்டும். நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதால் வழமையான எனது எழுத்து நடையை மாற்றி உங்கள் கோபத்தைத் தூண்டாமல் புரியவைத்துள்ளேன்.


-- Roohul Razmi  

share this... https://bit.ly/452kbDG

இலங்கை தவ்ஹீத்வாதிகளை பீஜே பிரித்தாரா?

 இலங்கை தவ்ஹீத்வாதிகளை பீஜே பிரித்தாரா?

இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் ஒன்றாக இருந்தது. அதை பீஜே வந்து பிரித்து விட்டார் என்று இஸ்மாயீல் ஸலஃபி எழுதி இருந்தார். இலங்கை தவ்ஹீத் இயக்கங்கள் பற்றிய முழு விபரம் என்னிடம் இல்லாததால் நான் அதற்கு பதில் எழுதவில்லை. நான் இலங்கை செல்வதற்கு முன் அவர்கள் எத்தனை பிரிவுகளாக இருந்தனர் என்பதை இலங்கை முர்ஷித் அவர்கள் எழுதி அனுப்பியுள்ளார். அதை நன்றியுடன் இங்கே வெளியிடுகிறோம்.’

கொழும்பு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கிய அமைப்பு 2005ல்


பீஜேவுடைய இலங்கை வருகையோடு, ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த உண்மைகள் தெரியாத சிலர், அல்லது தெரிந்து கொண்டே பீஜே மீது சேறு பூச நினைப்பவர்கள், வரலாற்றை இருட்டடிப்புச் செய்து எழுதியும், பேசியும் வருகின்றனர். எனவே, இலங்கையில் தவ்ஹீத் சகோதரர்களுக்கு மத்தியில் பிரிவினைக்கு யார் காரணம் என்பதை வரலாற்று நிகழ்வுகளோடு இக்கட்டுரையில் தெளிவுபடுத்துகின்றோம்.

சஹாபாக்களை விட மற்றவர்கள் நன்கு விளங்க முடியுமா?

 சஹாபாக்களை விட மற்றவர்கள் நன்கு விளங்க முடியுமா?

மார்க்கத்தைச் சரியான முறையில் அறிந்து கொள்வதற்கு மார்க்க ஆதாரங்கள் பரவலாக்கப்பட்டும் எளிதில் கிடைக்கும் வகையிலும் முழுமையாகத் திரட்டப்பட்டும் இருக்க வேண்டும்.

ஆதாரங்கள் சிதறிக் கிடந்தால், முழுமையாகத் திரட்டப் படாமல் இருந்தால், எளிதில் கிடைக்காமல் இருந்தால் ஒவ்வொருவரும் தமக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப் படையில் தான் முடிவு செய்வார். ஆதாரம் கிடைக்காத போது சுயமாக முடிவு எடுப்பது தவிர அவருக்கு வேறு வழி இல்லை.

நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுதல்

 நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுதல்

எனக்குப் பின் நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுங்கள்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களே! என்று அடுத்த ஆதாரத்தை எடுத்துக் காட்டுகின்றனர்.

இவர்கள் கூறுகின்ற கருத்து அந்த நபிமொழியில் உள்ளதா? என்பதை விளக்குவதற்கு முன் இவர்களின் முரண்பாட்டை நாம் சுட்டிக் காட்ட வேண்டும்.

இவர்களது வாதப்படி நேர்வழி பெற்ற கலீபாக்கள் என்பது அபூபக்ர் (ரலி), உமர் (ரலி),உஸ்மான் (ரலி), அலி (ரலி) ஆகியோர் தான். இந்த நபிமொழி இவர்களின் வாதப்படி இந்த நால்வரையும் பின்பற்றுமாறு தான் கூறுகிறது.

முஹாஜிர்களையும், அன்ஸார்களையும் பின்பற்றுதல்

 முஹாஜிர்களையும், அன்ஸார்களையும் பின்பற்றுதல்
தொடர் 03    நூல்: நபித் தோழர்களும் நமது நிலையும்

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும்,  நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

திருக்குர்ஆன் 9:100


மார்க்கத்துக்காக மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தவர்களையும்,  ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தவர்களுக்கு உதவியவர்களையும் இவ்வசனம் புகழ்ந்து பேசுவதுடன் அவர்களைப் பின்பற்றியவர்களையும் புகழ்ந்து பேசுகிறது. அவர்களைப் பொருந்திக் கொண்டதாகவும் அவர்களுக்காக சொர்க்கம் தயார் நிலையில் உள்ளதாகவும் இவ்வசனம் கூறுகிறது.

தொடர் 02 நூல்: நபித் தோழர்களும் நமது நிலையும்

 தொடர் 02    நூல்: நபித் தோழர்களும் நமது நிலையும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு

நபித் தோழர்களும் மனிதர்களே! அவர்களிடமும் தடுமாற்றங்களும், தவறான முடிவுகளும் ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னறிவிப்புச் செய்து சென்றுள்ளனர்.

நியாயத் தீர்ப்பு நாளில் மக்களெல்லாம் பதை பதைப்புடன் நிற்கும் போது நடக்கும் ஒரு நிகழ்ச்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

என் தோழர்களில் சிலர் இடது புறமாகப் பிடிக்கப்படுவார்கள். (அதாவது நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவார்கள்) அப்போது நான் ``அவர்கள் என் தோழர்கள்! அவர்கள் என் தோழர்கள்! என்று கூறுவேன். அதற்கு இறைவன் ``நீ அவர்களைப் பிரிந்தது முதல் வந்த வழியே அவர்கள் திரும்பிச் சென்று கொண்டே இருந்தனர் என்று கூறுவான். அப்போது நான் ``அவர்களுடன் நான் இருந்த வரை அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். எப்போது என்னை நீ கைப்பற்றிக் கொண்டாயோ (அப்போது முதல்) நீயே அவர்களைக் கண்காணிப்பவனாவாய் என்று என் சகோதரர் ஈஸா கூறியது போல் நானும் கூறிவிடுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)  நூல் : புகாரி 3349, 3447

01 :நபித்தோழர்களைப் பின்பற்றுதல் குறித்த அனைத்து வாதங்களுக்கும் மறுப்பு

 நூல்: நபித் தோழர்களும் நமது நிலையும்

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

நபித்தோழர்கள் என்போர் யார்?
நபித்தோழர்களின் சிறப்புகள்
வஹீயில்லாமல் நேர்வழியை அறிய முடியாது
வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும்
குர்ஆனுடன் நபிவழியும் அவசியம் .
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரண்டு நிலைகள்
வஹீ அல்லாதவற்றில் நபியைப் பின்பற்றுதல் இல்லை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு
வஹீக்கு முரணான நபித்தோழர்களின் நடவடிக்கைகள்
மாற்றாரின் வாதங்கள்
சஹாபாக்களை விட மற்றவர்கள் நன்கு விளங்க முடியுமா?

முன்னுரை

திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் தவிர வேறு எதுவும் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களில்லை என்பதை நாம் வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறோம்.

அல்லாஹ்வின் கூற்றையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் தவிர எவரது நடவடிக்கைகளையும் மார்க்க ஆதாரமாகக் கொள்ளக் கூடாது எனவும், எவ்வளவு பெரிய மேதையானாலும் நபித் தோழர்களேயானாலும் அவர்களின் கூற்றுகளும்,செயல்களும் கூட மார்க்க ஆதாரமாக முடியாது எனவும் தெளிவுபடக் கூறி வருகிறோம்.

ஆதாரங்களையும், காரணங்களையும் எடுத்துக் காட்டியே நாம் இவ்வாறு கூறி வருகிறோம். ஆயினும் சிலர் நாம் எடுத்துக் காட்டும் ஆதாரங்களைச் சிந்திக்காமல் நபித் தோழர்களை நாம் அவமதித்து விட்டதாக தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர்.


நபித் தோழர்களின் சிறப்புகளைப் பேசும் குர்ஆன் வசனங்களையும், நபிமொழிகளையும்  எடுத்துக்காட்டி இத்தகைய சிறப்பு வாய்ந்த நபித் தோழர்களை நாம் அவமதிப்பதாக அவதூறு கூறுகின்றனர்.

நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தைக் கூறாத சில வசனங்களுக்கு தவறான விளக்கம் கூறியும், இட்டுக்கட்டப்பட்ட அல்லது பலவீனமான ஹதீஸ்களை எடுத்துக் காட்டியும் நபித்தோழர்களைப் பின்பற்றுவது கட்டாயக் கடமை என்பது போல் பிரச்சாரம் செய்து மக்களை வழிகெடுத்து வருகின்றனர்.

நபித்தோழர்கள் உள்ளிட்ட எவரது கருத்தையும் ஏற்பது அவசியம் இல்லை என்று இது வரை உலகில் யாரும் சொல்லவில்லை. தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் இக்கருத்தை முதன் முதலாகக் கூற ஆரம்பித்துள்ளனர் எனவும் இவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.

எனவே இவர்களுக்கும், இவர்களின் பிரச்சாரத்தை உண்மையென நம்பும் மக்களுக்கும் இது பற்றி தெளிவான விளக்கம் அளிக்கும் அவசியம் நமக்கு ஏற்பட்டது.

* நபித்தோழர்கள் உள்ளிட்ட எவரது கருத்தையும் வணக்க வழிபாடுகளுக்கு ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்பதற்கான ஆதாரங்கள். மற்றவர்களைப் போலவே நபித்தோழர்களும் பல சந்தர்ப்பங்களில் தவறான முடிவுகள் எடுத்துள்ளனர் என்பதற்கான சான்றுகள்.

* நபித்தோழர்களைப் பின்பற்றக் கூடாது என்று கூறுவது அவர்களை அவமதிப்பதாக ஆகாது என்பதற்கான காரணங்கள்.

* நபித்தோழர்கள் தவறான முடிவுகள் எடுத்தார்கள் என்று கூறுவதால் அவர்களைப் பற்றி அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறிய சிறப்புகளைப் பாதிக்காது என்பதற்குரிய விளக்கம்.

* நமக்கு முன்னரே மதிப்புமிக்க அறிஞர்கள் இக்கொள்கையை மிகவும் உறுதியாக முழங்கியுள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள்.

ஆகியவற்றைத் திரட்டி இந்நூலைத் தயாரித்துள்ளோம்.

25 இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹி மட்டுமே 25

 25 இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹி மட்டுமே

புஹாரியில் இருக்கின்றது என்பதற்காகவெல்லாம் ஒன்றை சரி கண்டு விடக் கூடாது, இதைநபி (சல்) அவர்கள் சொல்லியிருப்பார்களா? குர் ஆனின் மகிமைக்கும் நபியின்கண்ணியத்திற்கும் இது ஏற்புடையது தானா?
என்பதையெல்லாம் சிந்திக்க வேண்டும்.
அஜ்வா, கருஞ்சீரகம் தொடர்பான ஹதிஸ்களை மறுக்கின்றீர்களே, அப்படியானால் குர் ஆன் வசனங்களை ஓதி ஊதினால் நிவாரணம் கிடைக்கும் என்பதாக வரக்கூடிய செய்திகளையும் மறுப்பீர்களா?

தேனில் நிவாரணம் இருக்கிறது என்று அல்லாஹ் சொல்கிறானே, எல்லா நோய்க்கும் அதைசோதித்துப் பார்த்து விட்டு நிவாரணம் கிடைக்கவில்லையென்றால் மறுத்து விடுவீர்களா?


இப்படியொரு கேள்வி பரப்பப்படுகிறது.

பத்து வயது கைக்குழந்தை! இஸ்மயீல் சலஃபியின் உளறல்

 பத்து வயது கைக்குழந்தை! இஸ்மயீல் சலஃபியின் உளறல்

ஸாலிம் என்ற இளைஞருக்குப் பாலூட்டுமாறு ஸஹ்லா என்ற பெண்மணிக்கு நபிகள் கட்டளையிட்டதாக வரும் ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது. அது குர்ஆனுக்கு முரணானது என்று கூறி வருகிறீர்கள். பாலூட்டுவது என்றால் ஸஹ்லாவுக்கு அந்த நேரத்தில் கைக்குழந்தை இருக்க வேண்டும். கைக்குழந்தை இருந்ததற்கு ஆதாரம் உண்டா என்று நீங்கள் கேட்கின்றீர்கள். ஆனால் ஸாலிமுக்கு பாலூட்டச் சொன்ன நேரத்தில் ஸஹ்லாவுக்கு கைக்குழந்தை இருந்ததற்கு ஆதாரம் உண்டு என்று இஸ்மாயீல் சலபி என்பவர் கட்டுரை எழுதியுள்ளாரே? இதன் உண்மை நிலை என்ன?இஹ்ஸாஸ், இலங்கை

அவருக்கு கைக்குழந்தை இருந்ததா என்பது அடிப்படையான கேள்வி அல்ல. அந்த நேரத்தில் அவருக்கு கைக்குழந்தை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இளைஞருக்குப் பாலூட்டுமாறு நபியவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள். இது தான் அடிப்படையான கேள்வியாகும்.

உங்கள் கேள்விக்கான பதிலை அறிவதற்கு முன் இந்த ஹதீஸ் குறித்து நாம் எழுப்பிய கேள்விகளையும், வாதங்களையும் பார்க்கவும். அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் இதுவரை பதில் சொல்லி இருக்கிறார்களா என்று நீங்களே அறிந்து கொள்வீர்கள்.

என் தோழர்கள் வின்மீன்களைப் போன்றவர்கள்

 என் தோழர்கள் வின்மீன்களைப் போன்றவர்கள்

குர்ஆனையும், நபிவழியையும் பின்பற்றுவது போலவே நபித்தோழர்களின் நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என வாதிடுவோர் பின்வரும் நபிமொழியையும் சான்றாக எடுத்துக் காட்டுகின்றனர்.

என்னுடைய தோழர்கள் வின்மீன்களைப் போன்றவர்கள். அவர்களில் யாரை நீங்கள் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள் என்பதே அந்த ஹதீஸ்.

இந்த ஹதீஸ் பல்வேறு நபிமொழித் தொகுப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி பலவீனமானதாகும்.

ஸபீலுல்_முஃமினீன் – நம்பிக்கையாளர்களின் வழி என்றால் எது?

 ஸபீலுல்_முஃமினீன் – நம்பிக்கையாளர்களின் வழி என்றால் எது?
ஸலஃபு கொள்கைக்கு மறுப்பு!

வஹீ எனும் இறைச்செய்தியையே முஸ்லிம்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். வஹீ அல்லாத எதுவாயினும் அது பின்பற்றத்தக்கதல்ல என்பதோடு அவைகளைப் பின்பற்றுவது வழிகேடு.!

இறைச்செய்தியை மட்டுமே பின்பற்றுதல் எனும் நேர்வழியில் முஸ்லிம்கள் நாமனைவரும் ஒன்றுபடுவோம் என்ற அழைப்பை தமிழ் பேசும் முஸ்லிம்களுக்குத் தொடர்ந்து நாம் விடுத்து வருகிறோம். அநேக மக்கள் இந்த சத்தியப் பிரச்சாரத்தில் ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.
முன்னோர்களைப் பின்பற்றுதல், இமாம்களைப் பின்பற்றுதல், நபித்தோழர்களைப் பின்பற்றுதல் என்பன போன்ற தாங்கள் கொண்டிருந்த தவறான கொள்கைகளை விட்டும் விலகி இறைச் செய்தியை மட்டுமே பின்பற்றுவோம் என்று சூளுரைத்து இக்கொள்கையில் ஐக்கியமாகி விடுகிறார்கள்.

நபித்தோழர்களை மதிப்பது நேர்வழி! அவர்களைப் பின்பற்றுவது வழிகேடு!

 நபித்தோழர்களை மதிப்பது நேர்வழி! அவர்களைப் பின்பற்றுவது வழிகேடு!

இறைவனால் இறக்கியருளப்பட்ட வஹீச்செய்தியை மட்டுமே பின்பற்ற
வேண்டும்; வஹீ அல்லாததை யார் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் வழிகேட்டின் பக்கம் சென்றுவிட்டார்கள் என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படை.

இதை வல்ல இறைவன் தனது திருமறையில் தெளிவுபடுத்தியுள்ளான்.

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

(திருக்குர்ஆன்:6:106.)


அல்லாஹ் எதை வஹீச் செய்தியாக அருளியுள்ளானோ அந்த வஹீச் செய்தி மட்டும் தான் மார்க்கம் என்பதே இறைவனின் கட்டளை. ஆனால் இன்று தங்களையும் ஏகத்துவவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலரும், கப்ரு வணங்கிகளும் சஹாபாக்களையும் நாம் பின்பற்ற வேண்டும்; அவர்கள் சொல்லிய, செய்த அனைத்தும் மார்க்கம் என்று சொல்லி வருகின்றனர்.

அபூபக்ரையும், உமரையும் பின்பற்றுங்கள் ஃபாத்திஹா அத்தியாயம் கூறுவது என்ன?

 அபூபக்ரையும், உமரையும் பின்பற்றுங்கள்

எனக்குப் பின்னர் அபூபக்ர், உமர் ஆகிய இருவரையும் பின்பற்றுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியையும் தங்கள் வாதத்துக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

இந்த ஹதீஸ் திர்மிதி 3595, 3596, 3735, 3741, இப்னு மாஜா 94, அஹ்மத் 22161, 22189, 22296, 22328 மற்றும் பல நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூமின்களின் வழியைப் பின்பற்றலாமா

515. மூமின்களின் வழியைப் பின்பற்றலாமா?

இவ்வசனத்தில் (4:115) மூமின்களின் (நம்பிக்கை கொண்டோரின்) வழியைப் பின்பற்றுமாறு அல்லாஹ் கூறுகிறான்.

குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவது போல் மூமின்களின் வழியையும்


பின்பற்ற வேண்டும் எனக் கூறி இஸ்லாத்தில் மூன்றாவது ஆதாரத்தை சிலர் உருவாக்கப் பார்க்கின்றனர்.

ஆனால் இந்த வாதத்துக்கு இவ்வசனத்தில் அறவே இடமில்லை.

போரின் போது நபி பொய் சொன்னதாக பீஜே சொன்னது பொய்யா?


போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொய் சொன்னார்கள் என்று நாம் சொல்வது பொய்யா?


சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தலைப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு ரமலானில் தொடர் உரை நிகழ்த்திய போது ஒரு செய்தியை மேற்கோள்காட்டி பேசியிருந்தார்.

மூன்று சந்தர்ப்பங்களில் பொய் பேச நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்


அனுமதியளித்துள்ளார்கள் என்று சொல்லி கீழ்க்கண்ட ஹதீஸைக் குறிப்பிட்டார்.

அல்ஹம்து ஸூறாவில் ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்லட்பட்டிருக்கிறதா?

 520 அருள் பெற்றவர்களைப் பின்பற்றலாமா?

இவ்வசனத்தில் (1:7) நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழியைக்
காட்டுவாயாக! என்று பிரார்த்தனை செய்யுமாறு அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருகிறான். எனவே அல்லாஹ்வின் அருள் பெற்ற நபித்தோழர்களையும், இமாம்களையும் பின்பற்றலாம் என்று சிலர் வாதிடுகின்றனர்.

இதற்கு துணையாக 4:69 வசனத்தையும் ஆக்கிக் கொள்கின்றனர். அல்லாஹ்வின் அருள் பெற்றவர்கள் நபிமார்கள், சித்தீகீன்கள், ஷுஹதாக்கள் என்று இவ்வசனம் விளக்கிவிட்டதால் இமாம்கள் பெரியார்களைப் பின்பற்றுவதற்கு இது ஆதாரம் என்றும் வாதிடுகின்றனர்.

இவ்வாறு வாதிட இவ்வசனங்கள் இடம் தரவில்லை.

9:100 முன்னோரைப் பின்பற்றலாமா?

 முன்னோரைப் பின்பற்றலாமா?

ஹிஜ்ரத் செய்வதில் முந்திக் கொண்டவர்களையும், அவர்களுக்கு உதவிசெய்வதில் முந்திக் கொண்டவர்களையும் பின்பற்றுமாறு இவ்வசனம் (9:100) கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் எதைச் சொன்னாலும் அதை நாம் பின்பற்ற வேண்டும் என்ற தவறான கொள்கை உள்ளவர்கள் இவ்வசனத்தை (9:100) தமக்குரிய ஆதாரமாகக் காட்டி மக்களை வழிகெடுக்க முயல்கின்றனர்.

இவ்வசனம் இவர்கள் கூறுகின்ற அர்த்தத்தைத் தரவில்லை. இதை விளங்குவதற்கு முன்னால் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் என்ற பெயரில் எதைச் செய்வதாக இருந்தாலும் அது அல்லாஹ் சொன்னதாக இருக்க வேண்டும். அல்லது அவனது வஹீ மூலம் அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் சொன்னதற்கு மாற்றமாக யார் சொன்னாலும் அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்மந்தமில்லை. அது போல் அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லாத ஒன்றை இஸ்லாத்தின் பெயரால் யார் சொன்னாலும் அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்மந்தமில்லை.

இதுதான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.

Search This Blog