தவ்ஹீத் ஜமாஅத் video's: மருத்துவ குறிப்பு
Showing posts with label மருத்துவ குறிப்பு. Show all posts
Showing posts with label மருத்துவ குறிப்பு. Show all posts

தோல் பிரச்சனைகளுக்கு எளிய தீர்வு

🌿✨ இயற்கையான வீட்டுவைதியம் – தோல் பிரச்சனைகளுக்கு எளிய தீர்வு! 🛁🌱

தோலில் எரிச்சல், கரும்புள்ளி, குழறி, பூஞ்சை தாக்கம் வந்தால், பலர் உடனே ரசாயன மருந்துகள், க்ரீம்கள், லோஷன்கள் தேடுவார்கள். ஆனால் அவற்றில் சில பக்கவிளைவுகள் இருக்கக்கூடும். 🙅‍♀️
அதற்கு பதிலாக, உங்கள் வீட்டிலேயே எளிய இயற்கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். 💚

🧴 செய்முறை – வேப்பிலை + கடுகு எண்ணெய்
1️⃣ புதிய வேப்பிலை எடுத்து நன்றாக அரைத்து விழுதாக செய்யவும்.
2️⃣ அதில் சிறிதளவு கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
3️⃣ குளிக்க முன்பு, பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் தடவவும்.
4️⃣ 15–20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.
👉 தினமும் ஒருமுறை இதைச் செய்யலாம்.
🌟 இதன் அற்புத நன்மைகள்
🌿 வேப்பிலை:

இயற்கையான கிருமிநாசினி.
பூஞ்சை (fungus), பாக்டீரியா (bacteria) தொற்றுகளை கட்டுப்படுத்தும்.
தோல் சுத்தமாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.

🌾 கடுகு எண்ணெய்:
தோலின் ஆழத்தில் சென்று கிருமிகளை அழிக்கும்.
எரிச்சல், சிவப்பு, அரிப்பு குறைக்கும்.
இரத்த ஓட்டத்தை தூண்டி, தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
✅ இரண்டும் சேரும்போது, இது ஆரோக்கியமான இயற்கை ஆன்டிசெப்டிக் க்ரீம் போல செயல்படும்!
✨ 3–4 நாட்களில் என்ன நடக்கும்?
✔️ எரிச்சல் குறையும்
✔️ கரும்புள்ளி மங்கத் தொடங்கும்
✔️ குழறி, சிறிய புண்கள் குறையும்
✔️ தோல் சுத்தமாக, குளிர்ச்சியுடன் இருக்கும்
📌 தொடர்ந்து பயன்படுத்தினால், தோல் இயற்கையான ஒளிவை (glow) பெறும்.
⚠️ முக்கிய குறிப்புகள்
👉 சுத்தமான குளியல், சுத்தமான உடைகள் அணிவது மிக அவசியம்.
👉 தோல் பிரச்சனை மிக தீவிரமாக (வலி, புழு, பரவல்) இருந்தால், மருத்துவரை அணுக வேண்டும்.
👉 குழந்தைகள் / சென்சிட்டிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கு முதலில் சிறிய பகுதியிலேயே முயற்சி செய்து பாருங்கள்.
💡 ஏன் இது சிறந்த தேர்வு?
❌ ரசாயன மருந்துகள் – பக்கவிளைவுகள், அதிக செலவு
✅ இயற்கை வைத்தியம் – பக்கவிளைவுகள் இல்லாமல், எளிதாக வீட்டிலேயே செய்யக்கூடியது
🌸 முடிவுரை
தோல் பிரச்சனைகள் வந்தவுடனே கவலைப்பட வேண்டாம்.
இயற்கை நமக்கு கொடுத்துள்ள அற்புதமான மருந்துகள் – வேப்பிலை & கடுகு எண்ணெய் – பயன்படுத்தி, ஆரோக்கியமான, சுத்தமான தோலைப் பெறலாம். 🌿💚
📌 இந்த இயற்கை வைத்தியம் பயனுள்ளதாக இருந்தால்
 | Share ↗️   செய்ய மறக்காதீர்கள்!
உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இந்த பசுமையான ரகசியம் தெரிந்து விடட்டும். 🌱

நோன்பு திறந்தவுடன் (இப்த்தார் நேர) தலைவலிக்கான (Headache) காரணங்களும் தவிர்க்கும் வழிகளும்!

 

🛑 நோன்பு திறந்தவுடன் (இப்த்தார் நேர) தலைவலிக்கான (Headache)
காரணங்களும் தவிர்க்கும் வழிகளும்!

ரமலான் நோன்பு ஆரம்பித்தவுடன் நோன்பு நோக்கும் பலர் எதிர்நோக்கும் பிரச்சினை நோன்பு திறந்தவுடன் உண்டாகும் தலைவலி. இது பொதுவாக நோன்பு பிடிக்கும் ஆரம்ப நாட்களில் அதிகமாக காணப்படும்.

பொதுவாக ரமலான் நோன்பு என்பது அதிகாலை 4.30 இல் இருந்து மாலை 6.30 வரை கிட்டத்தட்ட 14 மணிநேரம் எதுவும் உண்ணாமல் பருகாமல் இருப்பதாகும். (இந்த நேரம் சூரியன் உதிப்பு மறைவு நேரத்தை பொறுத்து நாட்டுக்கு நாடு வேறுபாடும்.)

கொழுப்பு அதிகமா இருக்கா, இதை சாப்பிடுங்க, சீக்கிரம் கரையும், பக்கவிளைவும் இல்லை

 கொழுப்பு அதிகமா இருக்கா, இதை சாப்பிடுங்க, சீக்கிரம் கரையும், பக்கவிளைவும் இல்லை

உடல் பருமனும், அதிகமான கொழுப்பும் இருந்தால் அது உடலில் மோசமான பாதிப்பை உண்டாக்க செய்யும். கொழுப்பின் அளவை குறைக்க இயற்கை வழிகள் என்ன என்பதை பார்க்கலாம்

உடலில் ரத்தத்தில் கொழுப்பு இருக்கும். உடலில் செல்கள் சாதாரணமாக செயல்பட கொழுப்பு அவசியம் தேவை. உடல் கொழுப்பை உருவாக்குகிறது. எனினும் நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் வழியாகவும் கூடுதல் கொழுப்பை பெறுவீர்கள்.

உடலில் தேவையான அளவு கொழுப்பை விட அதிகமாக இருக்கும் போது அது தமனிகளில் உருவாக தொடங்குகிறது. இந்த நிலை பெருந்தமனி தடிப்புத்தோல் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இது இரத்த உறைவு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய மற்றும் இரத்த ஓட்ட பிரச்சனைகளை உண்டாக்கும்.

அதிக கொழுப்பால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவத்துறையில் ஹைபர்கொலெஸ்ட்ரோலிமியா என்று அழைக்கப்படுகிறார்கள்.

பூண்டு. ஏலக்காய் .வெந்தயம் ஆகியவற்றின் மருத்துவ பலன்கள்

தண்ணீரில் வெந்தயத்தைச் சேர்த்துக் குடிப்பதால் என்ன பலன்கள் கிடைக்கும்?  

இனி வெந்தய நீரால் உண்டாகும் பயன்களைப் பார்ப்போம்.

இரத்தத்தில் கலந்துள்ள நச்சு பொருட்களை வெளியேற்றும் செயல்களை செய்வது சிறுநீரகங்கள். வெந்தயம் ஊற வைத்த நீரையோ அல்லது வெந்தயத்தை வேகவைத்த நீரையோ அருந்துபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதை தடுக்கும். மூத்திரக்கடுப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும்.

ஜுரம் மற்றும் நெடுநாட்கள் மருத்துவமனைகளில் இருந்தவர்கள் பல மருந்துகளை உட்கொண்டு அவர்களின் உணவுக்குழாய் மற்றும் ஜீரண உறுப்புகளில் புண்கள் ஏற்பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் அரிசி கஞ்சியில் சிறிது வேகவைத்த வெந்தயத்தைக் கலந்து உட்கொண்டு வர உடல் பலம் பெரும். வெந்தய நீரை குடித்துவர வயிற்று புண்களும் குணமாகும்.

தினம் இரவு சிறிது வெந்தய விதையை ஊற வைத்து, மறுநாள் காலையில் மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகி வர, ஆரம்ப நிலை நீரழிவு நோய் குணமாகும். மத்திய, முற்றிய றிலை நீரழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

வெந்தயம் மற்றும் வெந்தய நீரானது நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுகளை போக்குகிறது.

கோடை காலத்தில் கடுமையான வெம்மை தாக்காதிருக்க காலையில் சிறிது வெந்தயத்தை மென்ற தின்று ஒரு டம்ளர் நீராகாரம் பருகி வர உடல் நன்கு குளிர்ச்சி அடையும்.

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம். எனவே நீரிழிவு, மலச்சிக்கல் ஆகியவற்றை குணமாக்க உதவும்.



வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

வெந்தயம் வறுத்து , சின்ன வெங்காயம் சேர்த்து, வாரம் ஒருமுறை வெந்தயக் குழம்பு வைத்து சாப்பிடலாம்.இதற்குக் கானத் துவையல் நல்ல இணைப்பு.

மாதம் ஒரு முறை வெந்தயக் களி , சுக்குக் களி,ஓமக் களி இவற்றை ஒன்று மாற்றி ஒன்று செய்து சாப்பிடலாம்.

இட்லி தோசை மாவு ஊறப் போட்டு அரைக்கையில் ஒரு ஸ்பூன் வெந்தயமும் சேர்த்து அரைத்தால்,இட்லி தோசை மெதுவாக இருக்கும்.அதோடு வெந்தயச் சத்து உடலில் சேரும்.

மனித உடலில் பித்தம் அதிகமாவதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன?

 மனித உடலில் பித்தம் அதிகமாவதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன? எவ்வாறு இயற்கை உணவின் மூலம் சரிசெய்வது?

உடலில் பல நோய்களுக்கு பித்தம், கபம், வாதம் ஆகியவையே பிரதான காரணியாக இருக்கின்றது.

பித்தம் என்றால் என்ன

பித்தம் என்பது உஷ்ணமாகும்.

கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்க கூடிய நீர் தான் பித்த நீர். இந்த பித்தநீர் கல்லீரலில் சுரக்கப்பட்டு பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. இது உணவு செரிமானத்திற்கு உதவுகின்றது.

இந்த பித்தம் உடலில் சரியாக இருந்தால் தான் நன்றாக பசி எடுக்கும், உணவு நன்றாக செரிமானம் ஆகும்.

பித்தம் அதிகமானால் அறிகுறிகள்

உதடு, உள்ளங்கை, உள்ளங்காலில் வெடிப்பு ஏற்படும்.

உடல் வறட்சியாக இருக்கும்

தோல் கடினமாக மாற்றமடையும்.

குமட்டல்

அடிக்கடி தலைச்சுற்று

இளநரை

மலச்சிக்கல்

பசியின்மை

வாயு பிரச்சனை

உடல் மற்றும் கண் எரிச்சல்

நாக்கு வறட்சியாக காணப்படும்

வாய் கசப்பு தன்மையுடையதாக இருக்கும்

போன்ற அறிகுறிகள் காணப்படும்.

உங்கள் வயிற்றில் புழுவா. இதோ அற்புத வைத்தியங்கள்

வயிற்றில் புழு
 உங்கள் வயிற்றில் புழு நொண்டுகிறதா? இதோ அற்புத வைத்தியங்கள்

நமது வயிற்றில்..

நூல் புழுக்கள்,
உருளை புழுக்கள்,
சாட்டை புழுக்கள்,
ஜியார்டியா,
கொக்கிப் புழுக்கள்,
நாடாப் புழுக்கள்

போன்றவை காணப்படுகின்றன

இந்த புழுக்கள் நாம் குடிக்கும் தண்ணீர் மற்றும் உணவின் மூலமாக நமது குடலுக்குள் செல்கிறது.

குடல் புழுக்கள் அதிகம் இருப்பதற்கான பல அறிகுறிகள் உள்ளது அதில்
சோர்வு,
குமட்டல்,
மலக்குடல் எரிச்சல்,
திடீர் உடல் எடை குறைவு
கெட்ட சுவாசம்,
வயிற்று போக்கு,
கருவளையம்,
இரவில் தூக்கம் வராமல் கெட்ட கனவுகள் காண்பது,
அடிக்கடி பசி எடுத்தல்,
தலைவலி,
அனிமியா போன்ற அறிகுறிகள் இருப்பதை தெரியப்படுத்துகின்றன.

மேலும் இந்த குடல் வாழ் புழுக்களை அழிக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். அதுமட்டுமின்றி இதனை அழிக்க சில எளிய வீட்டு வைத்தியங்களும் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.

இரண்டு பூண்டு பற்களை உங்கள் ஷூக்களில் வைத்து கொண்டு நடங்கள். நீங்கள் நடக்கும் போது பூண்டு பற்கள் நசுங்கி அதன் சாறு உங்கள் சருமத்தின் வழியாக இரத்தத்தில் கலந்து குடலுக்குள் சென்று விடும். இந்த சாறே போதும் குடல் புழுக்களை அழிப்பதற்கு.

1 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை காலை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் 21/2 மணி நேரம் கழித்து விளக்கெண்ணெய்யை குடியுங்கள். இந்த முறை குடல் புழுக்கள் எல்லா வகையையும் அழித்து விடும். இது உங்களுக்கு குணமாகும் வரை எடுத்து கொள்ளுங்கள்.

சிறிய கப் அளவு கரட்டை ஒவ்வொரு நாள் காலையிலும் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு அப்புறம் எதுவும் சாப்பிடாதீர்கள். இது புழுக்களை சீக்கிரமாக வெளியேற்றி விடும்.

1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் பப்பாளி ஜூஸ் மற்றும் 4 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான நீர் கலந்து குடித்து வாருங்கள். இதனுடன் 2 மணி நேரத்திற்கு பிறகு 40 மில்லி லிட்டர் விளக்கெண்ணெய் மற்றும் 300 மி. லி வெதுவெதுப்பான நீர் சேர்த்து குடிக்க வேண்டும். இதை இரண்டு நாட்களுக்கு பின்பற்ற வேண்டும். 7-10 வயது குழந்தைக்கு இதில் பாதியளவு மட்டுமே கொடுங்கள்.

நாடாப் புழுக்களை அகற்ற உலர்ந்த விதைகளை பொடி செய்து கொதிக்க வைத்து அதன் சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். மறுபடியும் அடுத்த நாள் 3 டம்ளர் எடுத்து வாருங்கள். இப்படி செய்து வந்தால் குடல் புழுக்களின் தொல்லையிலிருந்து விடுபடலாம்.


தினமும், காலையில், சிறிதளவு பாதாமை உட்கொண்டு வந்தால், வயிற்றில் புழுக்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை கட்டுப்படுத்தும்.

தினமும், 2 டீஸ்பூன், கற்றாழை சாறை, தொடர்ந்து, ஒரு வாரம் குடித்து வந்தால், வயிற்றில் வளரும் குடல் புழுக்களை தடுக்கலாம்.

அன்னாசிப்பழத்தில் உள்ள புரோமிலைன் எனும் நொதி, வயிற்றில் வளரும் புழுக்களின் வளர்ச்சியை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, உங்கள் வயிற்றில் புழுக்கள் இருப்பது போன்ற அறிகுறி தென்பட்டால், ஒரு வாரத்துக்கு, தினமும் சிறிது அன்னாசியை உட்கொண்டு வர வேண்டும்.

பூசணிக்காய் விதைகள், உடலில் உள்ள ஒட்டுண்ணிகளை அழித்து வெளியேற்ற உதவும். எனவே, மாலை வேளைகளில், சிறிது பூசணிக்காய் விதைகளை உட்கொண்டு வர மாற்றம் தெரியும்.

வெங்காயத்திலும் இருக்கிறது இதற்கான மருத்துவம்.

வெங்காயத்தை அரைத்து சாறெடுத்து, ஒரு நாளைக்கு, இரண்டு டீஸ்பூன் என, தொடர்ந்து பத்து நாட்கள் குடித்து வர, வயிற்றில் இருக்கும் நாடாப்புழுக்கள், வேறு சில குடல் ஒட்டுண்ணிகளின் வளர்ச்சி வெளியேற்றப்படும்.

பப்பாளி விதையின் சுவை, பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அந்த பப்பாளி விதையை, மாதம் 1முறை உட்கொண்டு வந்தால், வயிற்றில் வளரும் நாடாப்புழு, உருளைப்புழு,  ஆகியவை அழிந்து வெளியேறும். 

ஆணுறுப்பின் மேல‌திக‌ தோலை வைக்காம‌லேயே இறைவ‌ன் ம‌னித‌னை ப‌டைத்திருக்க‌லாமே

 ஆணுறுப்பின் மேல‌திக‌ தோலை வைக்காம‌லேயே இறைவ‌ன் ம‌னித‌னை ப‌டைத்திருக்க‌லாமே என‌ ஒரு மாற்றுமத ச‌கோத‌ர‌ர் கேட்டார்...

அன்ப‌ரே!

அல்லாஹ் உங்க‌ளை ப‌டைத்த‌ போது நிர்வாண‌மாக‌த்தானே ப‌டைத்தான். அப்ப‌டியென்றால் ஏன் உட‌லை ம‌றைத்து ஆடை அணிகிறீர்க‌ள்?  உங்க‌ளுக்கு அந்த‌ அறிவை கொடுத்த‌து யார். அது போன்றே த‌லை, அக்குள் மீசை, ம‌ர்ம‌ முடி என்ப‌து வ‌ள‌ரும் த‌ன்மை கொண்ட‌து. அத‌னை ஏன் வெட்டுகிறீர்க‌ள். அதை வ‌ள‌ராம‌ல் இறைவ‌ன் விட்டு விட‌லாமே என‌ நீங்க‌ள் ஏன் கேட்ப‌தில்லை.

ஆணுறுப்பிலும் பெண்ணுறுப்பிலும் மேல‌திக‌ தோலொன்றை வைத்து அல்லாஹ் ப‌டைத்த‌மைக்குரிய‌ கார‌ண‌ காரிய‌த்தை ம‌னித‌ அறிவால் அறிந்து கொள்ள‌ முடியாது. இறைவ‌ன் ம‌கா ப‌டைப்பாள‌ன். 

ம‌னித‌ன‌து இத‌ய‌த்தில் ஏற்ப‌டும் அடைப்புக்கு பைபாஸ் செய்வ‌த‌ற்குரிய‌ மேல‌திக‌ ந‌ர‌ம்பை ந‌ம‌து காலில் இருந்தே வைத்திய‌ர்க‌ள் பெறுகிறார்க‌ள். ப‌ல‌ கால‌த்தின் முன்பு இவ்வெலும்பு அனாவ‌சிய‌மான‌தாக‌வே ம‌னித‌னுக்கு தெரிந்த‌து.

ஆக‌வே இறைவ‌ன் ப‌டைப்பில் எதுவும் வீண் இல்லை. ஆனாலும் அவ‌ற்றிலும் சில‌ க‌ட்ட‌த்துக்கு ந‌ன்மையை வைத்துள்ளான்.

ஆண் உறுப்பின் மேல‌திக‌ தோலை வைத்து இறைவ‌ன் ப‌டைத்த‌மைக்கு நாம் சில‌ கார‌ண‌ங்க‌ளை கூற‌ முடியும். 

மணத்தக்காளி அற்புதமான மூலிகை

மணத்தக்காளி

 மணத்தக்காளி  



என்னது ஒரு கிலோ 3000 ரூபாய்??அப்படி என்னதான் இதுல இருக்கு…
எங்க பார்த்தாலும் அதோட வேரை கூட விடாதீங்க, அப்பறம் கண்டிப்பா வருத்தப்படுவீங்க..!!

தக்காளி என்பது நம் அன்றாட வாழ்வில் தினமும் உபயோகிக்கும் ஒரு முக்கியமான காய்கறியாகும். தக்காளியில் பலவகைகள் உள்ளது. அதில் ஒன்றுதான் சொடக்கு தக்காளி என்று அழைக்கப்படும் மணத்தக்காளி. இதற்கு நம்மிடையே பல பெயர்கள் உள்ளது, இதனை நாம் பெரும்பாலும் விளையாட்டு பொருளாகவும், சாலையோர செடியாகவுமே நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் இது அற்புதமான மூலிகையாகும்.

இரைப்பை அல்சர் மற்றும் … குடல்புண்ணைகுணமாக

 இரைப்பை அல்சர் மற்றும் …   குடல்புண்ணைகுணமாக  

 ✳ நாம் உண்ணும் உணவானது குடலை அடைந்ததும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் என்ற திரவம் சுரக்கப்படுகிறது. இந்த திரவங்களின் மூலமாக செரிக்க ஆரம்பிகிறது. தினமும் காலையில் இந்த திரவமானது அதிகமாக சுரக்கிறது. 

காரணங்கள்❓ 

 காலை உணவை தவிர்த்தால் சுரக்கப்பட்ட அமிலமானது செரிமானத்திற்கு தேவையான உணவு இல்லாததால் குடலை அரிக்க ஆரம்பிக்கும். 

அதனால் குடல் மற்றும் வயிற்றில் புண்கள் ஏற்பட ஆரம்பிக்கும். 

மன அழுத்தம் ஏற்பட்டாலும் இந்த அமிலங்கள் அதிக அளவில் சுரக்கும். 

புளிப்பு அதிகமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 

மதுப் பழக்கம் மற்றும் புகைபிடித்தல் வயிற்றிப்புண் வருவதற்கு ஒரு முக்கியமான காரணமாக உள்ளன. 

வயிற்றில் வலி ஏற்படும். குறிப்பாக சாப்பிட்டு முடித்ததும் வலி அதிகமாகும். வயிற்றுப் புண்ணை அல்சர் என்றும் குறிபிடுகிறார்கள். 

அல்சர் வருவதற்கு முக்கிய காரணம்

பெண்களை புற்றுநோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்!

தாய்ப்பால்
 பெண்களை புற்றுநோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்!

இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு :

இங்கிலாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், 12 வருடங்களாக, 9 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 3,80,000 (மூன்று லட்சத்து எண்பதாயிரம்) பெண்களுக்கு மேல் பரிசோதித்ததில், தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

குறைந்தது 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், பெண்கள் புற்று நோயால் இறப்பது 10 சதவிகிதம் குறைகின்றது. அதே போல் இவர்களுக்கு மாரடைப்பினால் ஏற்படும் மரணமும், 17 சதவிகிதம் குறைகின்றது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கூறப்படும் வழிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம், பல நோய்களிலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ள முடியும்.

காதுக்குள் இருக்கும் அழுக்கை பட்ஸ் இல்லாமலே எப்படி வெளியே எடுக்கலாம்

காது
 உங்களுக்கு தெரியுமா காதுக்குள் இருக்கும் அழுக்கை பட்ஸ் இல்லாமலே எப்படி வெளியே எடுக்கலாம்?

காட்டன் பட்ஸ் பயன்படுத்தி காதுகளில் உள்ள அழுக்கை எடுப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவ்வாறு பட்ஸ் பயன்படுத்தி அழுக்கை எடுப்பது காதுகளுக்கு தீங்கு விளைவிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? காதில் ஏதாவது ஒன்றை நுழைத்து அழுக்கை வெளியேற்ற நீங்கள் செய்யும் முயற்சியால், அந்த அழுக்கை மேலும் உள்ளுக்குள் தள்ளும் அபாயம் உள்ளது.

இதனால் அவை காதுக்குள் அடைத்துக் கொள்கிறது. காது கேளாமைக்கு இது ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த தர்மசங்கடமான சூழ்நிலையைத் தவிர்க்கவும், எளிய முறையில் காதுகளில் உள்ள அழுக்கை வெளியேற்றவும் என்ன செய்யலாம்? வாருங்கள் அதற்கான பதில் இதோ உங்களுக்காக ..

42. தடை செய்யப்பட்ட உணவுகள்

உணவுகள்
 42. தடை செய்யப்பட்ட உணவுகள்

நான்கு உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளதாக இவ்வசனங்களில் (2:173, 5:3, 5:96, 6:119, 6:145, 16:115) கூறப்பட்டுள்ளது.

தாமாகச் செத்த பிராணிகள், இரத்தம், பன்றி ஆகிய மூன்று பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பது எளிதாக நமக்கு விளங்குகிறது.

அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை என்பதன் கருத்து சிந்தித்து விளங்கும் வகையில் உள்ளது.

அன்றைய அரபுகள் தங்கள் சிலைகளுக்காகப் பொருட்களைப் படைக்கும்போதும், அறுக்கும்போதும் அந்தச் சிலைகளின் பெயரைச் சப்தமிட்டுச் சொல்வார்கள். இதன் காரணமாகவே சப்தமிடப்பட்டவை என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்படும் பிராணிகளையும் இது எடுத்துக் கொள்ளும்.

அல்லாஹ் அல்லாதவர்களுக்காக படையல் செய்யும் உயிரற்ற பொருட்களையும் இது எடுத்துக் கொள்ளும்.

பாலூட்டுவது புற்றுநோயைத் தடுக்கும்

பெண்களைப் புற்று நோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்!


இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டுநடப்புகள்

இந்தக் காலத்தில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது.

புட்டிப்பால் கொடுத்தே வளரும் மோசமான சூழல் உருவாகி வருகின்றது. தாய்ப்பால் கொடுத்தால் தங்களது அழகு குறைந்துவிடும் என்று பெண்கள் அஞ்சுவதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

ஆனால் தாய்ப்பால் கொடுக்காமல் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுப்பார்களேயானால் குழந்தைகளும் சரியான நோய் எதிர்ப்பு சக்தி பெறாமல் சீரழிவதோடு, பெண்களுக்கும் இதனால் புற்றுநோய் ஏற்படுகின்றது என்றும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் புற்றுநோயிலிருந்தும், மாரடைப்பிலிருந்தும் காக்கப்படுகின்றார்கள் என்ற உண்மையும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு :

Search This Blog