ஆமினா கண்ட அற்புத ஒளி.
"ஸலாத்துன் ஸலாமுன் ஹுமா ஸர்மதா'' என்று கவிதை வரி
துவங்குவதற்கு முன்னால் ஓர் உரை, மவ்லிது கிதாபில் இடம் பெறுகின்றது.
அவரது அழகு வடிவெடுக்கும் நேரம் நெருங்கி - அவரது பூரண ஒளி பட்டு உலகம் பிரகாசிக்கவிருக்கும் வேளையில் மலர்ச்சியும், மகிழ்ச்சியும் பாரெங்கும் பரவியது. அன்னை ஆமினாவுக்கு ஓர் ஒளிக் கற்றை தோன்றியது. அதில் சிரியா, புஸ்ரா கோட்டை தெரிந்தது. கிஸ்ரா அரசவை மண்டபம் உடைந்து ஆடியது. சாவா என்ற ஏரி வற்றியது. பாரசீகர் தன் பற்றுதலுடன் வணங்கும் தெய்வமான பற்றி எரியும் நெருப்பு நூர்ந்து போனது. கடுகடுத்த அதன் புஜ பல பராக்கிரமசாலிகள் பணிந்து விட்டனர். அவர்களது பிறப்பு கண்டு பயந்து நடுங்கி சிலைகள் தலை கீழாகக் குப்புறக் கவிழ்ந்தன. இஸ்லாமிய மார்க்கத்தின் நினைவுச் சின்னங்கள் நிறுவப்பட்டன. மகிழ்ச்சியும், மலர்ச்சியும் பரவியது. எட்டு திக்குகளிலும் தேர்வு செய்யப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்களின் ஒளி பட்டு மின்னின.
இவ்வாறு ஒரு நீண்ட வர்ணனையை இந்த மவ்லிது வரிகள் தாங்கி நிற்கின்றன.

