ஹூசைன்
பதில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாத முஸ்லிம்கள் அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது இயல்பான ஒன்று தான்.
ஒருவர் இறைநேசராக ஆகிறார் என்றால் அதற்கான அடையாளம் நபிகள் நாயகத்தைக் கனவில் காண்பது தான் என மார்க்க அறிவு குறைந்த சிலர் நினைக்கின்றனர்.
இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றுப் பேர்வழிகள் தாங்கள் கனவில் நபிகள் நாயகத்தைக் கண்டதாகப் புளுகி மக்களிடம் இறைநேசர் என்ற பட்டத்தைப் பெற்று விடுகின்றனர்.
குர்ஆனுக்கும், நபிவழிக்கும் எதிரான கருத்துக்களுடன் இயற்றப்பட்ட புர்தா' என்ற பாடலை பூசிரி என்ற புலவன் எழுதினான். அவன் தனது கவிதையில் ஒரு இடத்தில் தடுமாறிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனுடைய கனவில் தோன்றி அடுத்த அடியை எடுத்துக் கொடுத்தார்கள் என்று புளுகி புர்தா' என்ற கட்டுக் கதையைப் புனிதமாக்கியுள்ளதைக் காண்கிறோம். மார்க்க அறிவு சிறிதும் இல்லாத பூசிரி என்ற புலவனை இறைநேசராகச் சித்தரிப்பதையும் காண்கிறோம்.
நபி (ஸல்) அவர்களைக் கனவில் காணமுடியுமா?
நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?
நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?
நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் அறிவிப்பாளர் தொடர் ரீதியிலும் மிகவும் பலவீனமான செய்தி என்பதை ஏகத்துவ இதழில் தெளிவுபடுத்தி இருந்தோம்.
இதே போன்று நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் கேவலப்படுத்தக்கூடிய இன்னொரு பொய்யான செய்தியும் ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. நபியவர்கள் வெளியேற்றிய இரத்தத்தை நபித்தோழர்கள் குடித்தார்கள் என்பதே அந்தப் பொய்யான செய்தி.
நபியின் சிறுநீரை நபித்தோழியர் குடித்தார்களா?
நபியின் சிறுநீரை நபித்தோழியர் குடித்தார்களா?
ஆனால் ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டிருந்தாலும் குர்ஆனைப் போன்று ஆய்வுக்கு அப்பாற்பட்ட வகையில் பாதுகாக்கப்படவில்லை. எந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளலாம்? எந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதை இன்றைக்கும் ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
ஈ விழுந்த உணவை சாப்பிடலாமா.?
ஈ விழுந்த உணவை சாப்பிடலாமா.?
ஈ விழுந்த உணவை சாப்பிடுவது நமது உடலுக்கு கேடு விளைவிக்கும் , இது குறித்து ஆய்வாளர்கள் மருத்துவர்கள் தரும் தகவல்களை பாருங்கள்.
1. ஈக்களால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் குறித்து, அரசு பொது நல மருத்துவர் எம்.ஆனந்த் பிரதாப் கூறியதாவது: ஈக்கள், அவற்றின் கால்கள், இறக்கைகள், ரோமங்கள் மூலம், ஆபத்தான பாக்டீரியாக்களை, ஓரிடத்தில் இருந்து, மற்றோர் இடத்திற்கு பரப்புகின்றன.அவற்றின் கால்களில் ஒட்டியிருக்கும் ஆபத்தான பாக்டீரியாக்கள், உணவுகள் மூலம் நம் உடலுக்குள் செல்லும். இந்த கிருமிகளால், சீதபேதி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, 'டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படும்.இந்த பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க, உணவுகள், தண்ணீர் ஆகியவற்றில் ஈக்கள் உட்காராமல் பார்த்து கொள்ள வேண்டும்.... இவ்வாறு அவர் கூறினார்.
தகவல் : தினமலர் நாளிதழ் ஜுன்.10/2019
2.. ஈக்களின் ஒவ்வொரு கால்களிலும் வட்டமான பிசின் போன்ற பசைப் பொருட்கள் காணப்படுகின்றன . கழிவுகளில் அமரும் போது அந்த பிசின்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொள்ளும். அவை மீண்டும் மனிதன் மீதோ உணவின் மீதோ உட்காரும் போது , அந்த பாக்டீரியாக்கள் எளிதில் உணவில் இறங்கி மிக எளிதாக மனித உடலுக்குள் சென்று , வயிற்றுப் போக்கு குடற்புழு உடல் நமைச்சல் தோல் நமைச்சல் வயிற்றுப் புண் டைபாய்டு தொற்றுக் கிருமி காய்ச்சல் எனப் பல்வேறு வகை நோய்களுக்கு வாயில் படியாக உள்ளது.
தகவல் : திணமனி நாளிதழ் . மே -19/2015
3. ஈக்களின் கால்கள் மற்றும் இறக்கைகளில் உள்ள பாக்டீரியா கிருமிகள் உணவை பாக்டீரியாவின் கூடாரமாகவே மாற்றும், ஈக்களின் வெளிப்புற உடற்பகுதியில் நுண்ணுயிர் கிருமிகள் அதிகம் படிந்திருக்கும். ஒரு ஈ அது பறந்து செல்கின்ற பாதையில் நூற்றுக்கணக்கான நுண்ணுயிர் கிருமிகளை பரப்பிக் கொண்டே இருக்கும் என நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தகவல் : புதிய தலைமுறை ஆகஸ்ட்.17/2020.
4. ஈக்களால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பொதுநல மருத்துவர் சிவராமக்கண்ணனிடம் கேட்டோம். ``ஈக்கள், அவற்றின் கால்கள், இறக்கைகள், ரோமங்கள் மூலம் ஆபத்தான பாக்டீரியாக்களை ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பரப்புகின்றன. கழிவுகள், குப்பைகள், சாக்கடை, அழுகியப் பொருள்கள் என ஈக்கள் எங்கு வேண்டுமானாலும் உட்காரும். அப்படி நாம் உண்ணும் உணவுகள் மீதும் உட்காரும். அப்போது அவற்றின் கால்களில் ஒட்டியிருக்கும் ஆபத்தான பாக்டீரியாக்கள் உணவுகள் மூலம் நம் உடலுக்குள் செல்லும். இந்தக் கிருமிகளால் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, காயங்கள் மூலம் ரத்தத்தில் விஷம் பரவுதல், நிமோனியா, டைஃபாய்டு, காலரா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன
தகவல் : ஆனந்த விகடன் . மே.18/2018
5. ஈக்களால், தனது கால்கள், இறக்கைகள் மற்றும் பாதங்கள் மூலமாக, நோய்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரப்ப முடியும். சொல்லப்போனால், அவை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், அவற்றால் உயிருடன் உள்ள பாக்டீரியாக்களைப் பரப்ப முடியும் - பென் ஸ்டேட் பல்கலைக்கழக பேராசிரியர் டொனால்ட் பிரையண்ட். ஜர்னல் சைண்டிபிக் இதழில் .
தகவல் : பிபிசி நவம்பர்.17/2017
கழிவுகளில் உட்காரும் போது , ஈக்களின் கால்களில் இருபது லட்சம் நோய் பரப்பும் பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொள்ளும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வாளர்களின் ஆய்வுகளில் ஈக்களின் இறகுகளிலும் நோய் பரப்பும் பாக்டீரியாக்கள் உள்ளது என்பதை அறிய முடிகிறது . இப்போது கூறுங்கள் நபி ஸல் அவர்கள் ஈக்களின் ஒரு இறகில் நோய் கிருமியும் மற்றொரு இறகில் நிவாரணமும் உள்ளது என்று கூறியிருப்பார்களா. ? ஈயை மூன்று முறை உணவில் மூழ்க வைத்து சாப்பிடுங்கள் என்று கூறி இருப்பார்களா.? * ஒரு உணவில் ஈ அமர்ந்தால் எவ்வளவு பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொள்ளும் என்பதை வீடியோ காணுங்கள் .
வீடியோ லிங்க் - https://youtu.be/GHHFJDkk18Q
https://vimeo.com/557712457
يَأْمُرُهُمْ بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنْكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ
(முஹம்மது நபி ஸல்) இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மை இல்லாத அசுத்தமானவற்றை அவர்களுக்கு தடை செய்கிறார். அல்குர்ஆன் : 7:157.
وَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنْتُمْ بِهِ مُؤْمِنُونَ ﴿88﴾
அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய, அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! நீங்கள் நம்புகின்ற அல்லாஹ்வையே அஞ்சுங்கள்.! அல்குர்ஆன் : 5:88.
[يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ﴿172﴾
நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்.! அல்குர்ஆன் : 2 :172.
وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ
உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்.! அல்குர்ஆன் :2 :195.
-- onlinepj.in
share this.. https://shorturl.at/Puh5z
தஸ்பீஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா?
தஸ்பீஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா?
குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்குங்கள்! சவூதியில் தஸ்பீஹ் மணி விற்கப்படுகிறதே!
பதில்
தஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்யலாம் என்று கூறுபவர்கள் சில செய்திகளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவற்றை முதலில் பார்ப்போம்.
நான் தஸ்பீஹ் செய்வதற்காக வைத்துள்ள நன்காயிரம் பேரீச்சம் கொட்டைகள் என் முன்னால் இருக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது, “இதைக் கொண்டு தான் நீ தஸ்பீஹ் செய்வாயா?” என்று கேட்டு விட்டு, “இதைக் கொண்டு நீ செய்யும் தஹ்பீஹை விட கூடுதலான ஒன்றை நான் உனக்குக் கற்றுக் கொடுக்கட்டுமா?” என்று கேட்டார்கள். நான் சரி என்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஸுப்ஹானல்லாஹி அதத கல்கிஹி என்று நீ சொல்” என கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி)
நூல்: திர்மிதீ 3477
முஸ்லிம் என்பதைத் தவிர்த்து தவ்ஹீத்வாதி என்பது ஏன்?
முஸ்லிம் என்பதைத் தவிர்த்து தவ்ஹீத்வாதி என்பது ஏன்?
நீங்கள் ஏன் உங்களை தவ்ஹீத்வாதிகள் என்று கூறிக் கொள்கிறீர்கள்.. இப்படி ஜமாஅத்களாகப் பிரித்துக் கொள்ளாமல் முஸ்லிம் என்று ஒன்றாக இருக்கலாமே? தகுந்த விளக்கம் தரவும்.
அஸதுல்லாஹ்.
பதில் :
முஸ்லிம் என்ற வார்த்தை திருக்குர்ஆன் முழுவதும் குறிப்பிட்ட இயக்கத்தையோ, மக்களையோ குறிப்பதற்கான வார்த்தையாகப் பயன்படுத்தப்படவில்லை. மாறாக அது ஒரு பண்புப் பெயராகவே பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
சில அதிமேதாவிகள் முஸ்லிம்கள் தங்களுக்குள் இந்த வார்த்தையைத் தவிர வேறு எதையும் சூட்டிக் கொள்ளக் கூடாதுஎன்றும் இயக்கத்திற்கு பெயர்கள் வைக்கக் கூடாது என்றும் உளறி வருகின்றனர். இவர்கள் இவ்வாறு உளறிய காரணத்தினால் இவர்கள் கூறியது போல் ஒற்றுமை ஏற்படவில்லை. முஸ்லிமீன் என்ற பெயரில் பல இயக்கங்கள் ஏற்பட்டது தான் மிச்சம்.
அடக்கத்தலங்களில் செருப்பணிந்து செல்லலாமா
அடக்கத்தலங்களில் செருப்பணிந்து செல்லலாமா⁉️
இது குறித்து இருவிதமான கருத்துக்கள் கொண்ட ஹதீஸ்கள் உள்ளதால் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- ஓர் அடியாரின் உடலை கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும்.
(புகாரி:1338)
அடக்கம் செய்து விட்டு திரும்பும் மக்களின் செருப்போசையை இறந்தவர் கேட்பார் என்பதில் இருந்து மண்ணறைகளுக்கு செருப்பணிந்து செல்லலாம் என்பதையும் அறிந்து கொள்கிறோம்.
அர்ஷில் அமர்ந்தான் என்று கூறுவது சரியா?
நீங்கள் உங்கள் மொழிபெயர்ப்பில் இஸ்தவா அலல் அர்ஷ் என்பதை அர்ஷின் மீது அல்லாஹ் அமர்ந்தான் என்று மொழிபெயர்த்துள்ளீர்கள்.
இஸ்தவா என்பதற்கு அமருதல் என்ற அர்த்தம் கிடையாது. அமருதல் என்பதற்கு அரபியில் ஜலச என்ற வார்த்தை தான் சரியானது என்று சிலர் கூறுகிறார்கள். அஹ்மத்
பதில் :
அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்துள்ளான் என்று குர்ஆனில் ஏழு இடங்களில் கூறப்பட்டுள்ளது. இஸ்தவா என்ற அரபுச் சொல் இவ்விடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
إِنَّ رَبَّكُمْ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ (54)7
உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.
திருக்குர்ஆன் 7 : 54
إِنَّ رَبَّكُمْ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ (3)10
உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.
திருக்குர்ஆன் 10 : 3
யார் அறுத்ததை உண்ணலாம்?
யார் அறுத்ததை உண்ணலாம்?
இது குறித்து பின் வரும் திருக்குர்ஆன் வசனங்கள் பேசுகின்றன.
நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பியவர்களாக இருந்தால் அவன் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதை உண்ணுங்கள்!
திருக்குர்ஆன் 6:118
அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் நிர்பந்திக்கப்படும் போது தவிர (மற்ற நேரங்களில்) உங்களுக்கு அவன் தடை செய்ததைத் தெளிவுபடுத்தி விட்டான். அதிகமானோர் அறிவில்லாமல் தமது மனோஇச்சைகள் மூலம் வழிகெடுக்கின்றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன்.
திருக்குர்ஆன் 6:119
அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றமாகும். உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறுகின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே.
அல்குர்ஆன் 6 : 121
ஒருவன் திருக்குர்ஆனை நம்புகிறானா? இல்லையா? என்பதற்கான அளவுகோலில் ஒன்று அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்பதாகும் என்ற கருத்தை 6:118 வசனம் கூறுகிறது. “நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பியவர்களாக இருந்தால் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்ணுங்கள்” என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணிகள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வந்த பின் அதை உண்ண மறுப்பது குர்ஆனை மறுப்பதாகும் என்று இவ்வசனம் கடுமையான விஷயமாகக் குறிப்பிடுகிறது.
6:119 வசனம் இன்னும் அழுத்தமாக இக்கருத்தை முன்வைக்கிறது. அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பின்னர் அதை உண்ண மறுப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்ற கருத்தில் இவ்வசனம் அமைந்துள்ளது.
6:121 வசனம், அல்லாஹ்வின் பெயர் கூறப்படாமல் சாகடிக்கப்பட்டதை உண்ணக் கூடாது என்று தடை விதிக்கின்றது.
அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டால் உண்ணலாம்; உண்ண வேண்டும் என்றும் உண்பதை தடுக்கப்பட்டதாக கருதக் கூடாது என்றும் அல்லாஹ்வின் பெயர் கூறப்படாவிட்டால் அதை உண்ணக் கூடாது என்றும் இம்மூன்று வசனங்களிலும் கூறப்படுகிறது.
அல்லாஹ்வின் பெயரைக் கூறுபவனுக்குரிய தகுதி என்ன?
அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதைத் தான் உண்ண வேண்டும் என்பது தெளிவான சொற்களால் கூறப்பட்டு இருந்தாலும் இதில் ஒரு சந்தேகம் எழுகின்றது.
அல்லாஹ்வை நம்பும் சிலர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்களாக உள்ளனர். இவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அது அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்ததாக ஆகுமா? என்பதுதான் இந்தச் சந்தேகம். இந்தச் சந்தேகத்துக்கு அடிப்படையும் இருக்கிறது.
அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தவர்கள் அல்லாஹ்வுக்காக எந்த வணக்கத்தைச் செய்தாலும் அல்லாஹ் ஏற்க மாட்டான். இணைகற்பித்தால் எல்லா நல்லறங்களும் அழிந்து விடும் என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது.
தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
திருக்குர்ஆன் 4:48
தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்.
திருக்குர்ஆன் 4:116
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை''
திருக்குர்ஆன் 5:72
இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர்வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.திருக்குர்ஆன் 6:88
நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நட்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!'' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.திருக்குர்ஆன் 39:65
இணை கற்பிப்போர் தமது (இறை)மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.திருக்குர்ஆன் 9:17
அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காத நிலையில் செய்யும் காரியங்கள் தான் இறைவனால் ஏற்கப்படும் என்பதை இவ்வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. இதனடிப்படையில் பார்க்கும் போது அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தாலும் அதை எப்படி உண்ண முடியும்? என்ற சந்தேகம் சரியானது தானா?
வணக்க வழிபாடுகளைப் பொருத்த வரை இந்தச் சந்தேகம் சரியானது என்றாலும் பிராணிகளை அறுக்கும் விஷயத்துக்கு இது பொருந்தாது என்பது தான் சரியானதாகத் தெரிகிறது.
மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனங்களில் அல்லாஹ்வின் பெயரை முஸ்லிம்களாகிய நீங்கள் கூறி அறுத்ததை உண்ணுங்கள் எனக் கூறவில்லை. மாறாக அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்ணுங்கள் என்று செயப்பாட்டு வினையாகக் கூறப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் பெயர் கூறப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்; கூறுபவர் யார் என்பது முக்கியமில்லை என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது.
இவ்வசனங்கள் மக்காவில் அருளப்பட்டவையாகும். முஸ்லிம்கள் மிகக் குறைவாக இருந்த அந்தக் காலத்தில் முஸ்லிம்களின் உறவினர்கள் இணைகற்பிப்பவர்களாக இருந்தனர். இணைகற்பிப்பவர்களைச் சார்ந்தும் இருந்தனர். அவர்கள் தரும் மாமிச உணவுகளை உண்ணக் கூடிய நிலையை அவர்கள் சந்தித்தனர்.
அவர்கள் சந்தித்த பிரச்சனைக்குத் தீர்வாகவே இவ்வசனங்கள் அருளப்பட்டன.
இணைகற்பித்தவர்கள் தரும் மாமிச உணவை உண்ணக் கூடாது என்பது அல்லாஹ்வின் நோக்கமாக இருந்தால் முஸ்லிம்கள் அறுத்ததை மட்டும் உண்ணுங்கள் என்றோ, நீங்கள் அறுத்ததை மட்டும் உண்ணுங்கள் என்றோ, காஃபிர்கள் அறுத்ததை உண்ணாதீர்கள் என்றோ அல்லது இது போன்ற தெளிவான வார்த்தைகளால் அல்லாஹ் கட்டளையிட்டு இருப்பான்.
ஆனால் அவ்வாறு கூறாமல் அறுப்பவர் யார் என்பதை அலட்சியப்படுத்தும் வகையில் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்ணுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இணைகற்பித்துக் கொண்டு இருந்த அன்றைய மக்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியும் அறுத்து வந்தனர். அல்லாஹ்வின் பெயர் கூறாமலும் அறுத்து வந்தனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறாமல் அறுத்தால் அதை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வின் பெயரைக் கூறி அவர்கள் அறுத்ததை உண்ணுங்கள் என்ற கருத்தைத் தரும் வகையில் மேற்கண்ட வசனங்கள் அமைந்துள்ளன.
மேற்கண்ட மூன்று வசனங்களும் முஸ்லிம்களுக்கு இருந்த ஒரு தயக்கத்தை நீக்கும் வகையில் அமைந்துள்ளன. நீங்கள் எப்படி உண்ணாமல் இருக்கலாம்? உண்ணாமலிருக்க உங்களுக்கு என்ன வந்தது? என்ற வாசகங்களில் இருந்து இதை அறியலாம்.
முஸ்லிம்களுக்கு எதில் தயக்கம் இருந்திருக்கும்?:
அல்லாஹ்வின் பெயரைக் கூறித்தான் முஸ்லிம்கள் அறுப்பார்கள். அதை உண்ணலாமா என்ற சந்தேகமோ, தயக்கமோ அன்றைய முஸ்லிம்களுக்கு இருந்திருக்க முடியாது.
எதில் அவர்களுக்குத் தயக்கமும், சந்தேகமும் இருந்திருக்கும்? இணைகற்பிப்பவர்கள் அறுத்து விட்டார்களே? அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தாலும் அவர்கள் இணைகற்பித்து வருகிறார்களே? அதை எப்படி உண்பது என்ற தயக்கம் தான் இருந்திருக்கும்.
இந்தத் தயக்கத்தைப் போக்கும் வகையில் தான் இவ்வசனங்களின் வாசக அமைப்பு அமைந்துள்ளது.
மக்காவில் வாழ்ந்த இணைகற்பிப்பவர்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி எப்படி அறுத்திருப்பார்கள்? அவர்கள் தங்களின் தெய்வங்கள் பெயரைச் சொல்லித்தானே அறுத்திருப்பார்கள்? என்ற சந்தேகம் எழலாம். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறாமலும் அறுப்பார்கள். அல்லாஹ்வின் பெயர் கூறியும் அறுப்பார்கள் என்பதை திருக்குர்ஆனிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.
சில கால்நடைகளில் சவாரி செய்வது தடுக்கப்பட்டுள்ளது எனவும், சில கால்நடைகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டோம் எனவும் அவன் மீது இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததால் அவர்களை அவன் தண்டிப்பான். திருக்குர்ஆன் 6 : 138
”சில கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டோம்” என்ற வாசகத்தில் இருந்தே ”மற்ற சில கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுவார்கள்” என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
சில கால்நடைகளை அறுக்கும் போது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறாமல் இருப்பதை அல்லாஹ் இடித்துரைக்கிறான். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அது வரவேற்கத்தக்கது என்பதும் இதிலிருந்து தெரிகிறது.
இதே அடிப்படையை பின்வரும் நபிமொழியும் போதிக்கின்றது.
صحيح البخاري 2488 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ الحَكَمِ الأَنْصَارِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ، عَنْ جَدِّهِ، قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذِي الحُلَيْفَةِ، فَأَصَابَ النَّاسَ جُوعٌ، فَأَصَابُوا إِبِلًا وَغَنَمًا، قَالَ: وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أُخْرَيَاتِ القَوْمِ، فَعَجِلُوا، وَذَبَحُوا، وَنَصَبُوا القُدُورَ، فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالقُدُورِ، فَأُكْفِئَتْ، ثُمَّ قَسَمَ، فَعَدَلَ عَشَرَةً مِنَ الغَنَمِ بِبَعِيرٍ فَنَدَّ مِنْهَا بَعِيرٌ، فَطَلَبُوهُ، فَأَعْيَاهُمْ وَكَانَ فِي القَوْمِ خَيْلٌ يَسِيرَةٌ، فَأَهْوَى رَجُلٌ مِنْهُمْ بِسَهْمٍ، فَحَبَسَهُ اللَّهُ ثُمَّ قَالَ: «إِنَّ لِهَذِهِ البَهَائِمِ أَوَابِدَ كَأَوَابِدِ الوَحْشِ، فَمَا غَلَبَكُمْ مِنْهَا فَاصْنَعُوا بِهِ هَكَذَا»، فَقَالَ جَدِّي: إِنَّا نَرْجُو - أَوْ نَخَافُ - العَدُوَّ غَدًا، وَلَيْسَتْ مَعَنَا مُدًى، أَفَنَذْبَحُ بِالقَصَبِ؟ قَالَ: " مَا أَنْهَرَ الدَّمَ، وَذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ فَكُلُوهُ، لَيْسَ السِّنَّ وَالظُّفُرَ، وَسَأُحَدِّثُكُمْ عَنْ ذَلِكَ: أَمَّا السِّنُّ فَعَظْمٌ، وَأَمَّا الظُّفُرُ فَمُدَى الحَبَشَةِ "
سنن النسائي4403 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:«مَا أَنْهَرَ الدَّمَ، وَذُكِرَ اسْمُ اللَّهِ فَكُلْ، إِلَّا بِسِنٍّ أَوْ ظُفُرٍ»
இரத்தத்தை ஓடச் செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை உண்ணுங்கள்; பற்களாலும், நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர.
அறிவிப்பவர் : ராஃபிவு பின் கதீஜ் (ரலி) நூல்கள் : நஸாயீ 4403, புகாரி 2488
மேற்கண்ட நபிமொழியிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூற வேண்டும் என்பதுதான் கட்டளையாகக் கூறப்பட்டுள்ளதே தவிர அதனைக் கூறுபவர் யார்? அவருடைய கொள்கை என்ன? என்பதைக் கவனிப்பதற்கு அல்லாஹ் கட்டளையிடவில்லை.
எனவே அல்லாஹ்வை நம்பிய நிலையில் அல்லாஹ்விற்கு இணைகற்பிக்கும் காரியங்களைச் செய்பவர் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தாலும் நாம் தாராளமாகச் சாப்பிடலாம் என்ற முடிவிற்கே நாம் வரமுடியும். இது தான் இறைவசனத்தின் அடிப்படையில் சரியான முடிவாகும்.
அபூஜஹ்ல் போன்றவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்திருந்தால் அதையே சாப்பிடலாம் என்றால் முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர்கள், தர்காவழிபாடு செய்பவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தால் அதையும் உண்ணலாம் என்பது தான் சரியான கருத்தாகத் தெரிகிறது.
நமது நாட்டிலும் முஸ்லிம் அல்லாத மக்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தால் உண்ணலாமா என்ற சந்தேகத்தையும் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
இணைகற்பித்த மக்காவாசிகளுக்கும், நமது நாட்டில் வாழும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையில் பெரிய வித்தியாசம் உள்ளது.
மக்காவில் வசித்த இணைகற்பித்தவர்கள் அல்லாஹ் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்பினார்கள். அவன் தான் படைத்தவன் என்றும், எல்லா அதிகாரமும் அவனுக்கே உரியது என்றும் நம்பினார்கள். அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார்கள் என்பதற்காகவே குட்டித் தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து அறியலாம்.
பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?' என்று கேட்பீராக! 'அல்லாஹ்' என்று கூறுவார்கள். 'அஞ்ச மாட்டீர்களா' என்று நீர் கேட்பீராக!திருக்குர்ஆன் 10:31
அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)' என்று (முஹம்மதே!) கேட்பீராக! 'அல்லாஹ்வுக்கே' என்று அவர்கள் கூறுவார்கள். 'சிந்திக்க மாட்டீர்களா?' என்று கேட்பீராக!திருக்குர்ஆன் 23:84,85
வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?' எனக் கேட்பீராக! 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். 'அஞ்ச மாட்டீர்களா;?' என்று கேட்பீராக!திருக்குர்ஆன் 23:86,87
'பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)' என்று கேட்பீராக! 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். 'எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?' என்று கேட்பீராக!திருக்குர்ஆன் 23:88,89
'வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று கூறுவார்கள். அப்படியாயின் 'எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?'திருக்குர்ஆன் 29:61
'வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்றே கூறுவார்கள். 'அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்' என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை. திருக்குர்ஆன் 29:63
வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று அவர்கள் கூறுவார்கள். 'அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்' என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள். திருக்குர்ஆன் 31:25
'வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று கூறுவார்கள். 'அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!' என்று கேட்பீராக! 'அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்' என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 39:38
வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்' எனக் கூறுவார்கள். திருக்குர்ஆன் 43:9
அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? திருக்குர்ஆன் 43:87
இவ்வசனங்கள் கூறுவது என்ன? மக்காவில் வாழ்ந்த இணை கற்பித்தவர்கள் அல்லாஹ்வைத் தான் படைத்தவன் என்று நம்பினார்கள் என்று தெளிவுபடக் கூறுகின்றன.
அப்படியானால் எதற்காக குட்டித் தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்? அதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.
அல்லாஹ்வையன்றி தமக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக!திருக்குர்ஆன் 10:18
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.திருக்குர்ஆன் 39:3
மக்காவில் வாழ்ந்த அன்றைய மக்கள் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் அல்லாஹ்வை நம்பி இருந்தார்கள். அவன் தான் மாபெரும் ஆற்றல் மிக்கவன் என்று நம்பினார்கள். அத்துடன் குட்டித் தெய்வங்களையும் ஏற்படுத்தி அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார்கள் என்று கருதி அவர்களை வணங்கினார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.
நமது நாட்டில் உள்ள இணைகற்பிக்கும் பிற மதத்தினருக்கு இந்த நம்பிக்கை இல்லை. அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கை அறவே இல்லை. ஒரு கடவுள் தான் உலகுக்கு இருக்கிறான் என்ற நம்பிக்கையும் இல்லை. எனவே அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்க மாட்டார்கள். அல்லாஹ் என்ற சொல்லை அவர்கள் கூறினாலும் அதன் பொருளைக் கருத்தில் கொள்ளாமல் மந்திரச் சொல்லாக மட்டுமே சொல்வார்கள். கிளிப்பிள்ளை அல்லாஹ்வின் பெயரைச் சொல்வதற்கு ஒப்பாக இது அமைந்துள்ளது. எனவே அல்லாஹ் என்று ஒருவன் இருப்பதை ஏற்றுக் கொள்ளாமல் அல்லாஹ்வின் பெயர் கூறி ஒருவர் அறுத்தால் அதை உண்ணக் கூடாது.
நமது நாட்டில் உள்ள பிற மதத்தில் உள்ளவர்கள் அகில உலகுக்கும் ஒருகடவுள் தான் இருக்கிறான் என்று மக்காவாசிகள் நம்பியது போல் நம்பி அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அதை உண்ணலாம்.
மக்காவாசிகள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்த காரணத்தால் அவர்கள் மறுமையில் நிரந்தர நரகை அடைவார்கள் என்றாலும் உலகில் அவர்களின் பிரார்த்தனையைக் கூட அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி நிலத்தில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.திருக்குர்ஆன் 29:65
முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி நிலத்தில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.திருக்குர்ஆன் 31:32
நெருக்கடியான நேரத்தில் துன்பத்தைப் போக்குமாறு பிரார்த்தனை செய்தால் அல்லாஹ் அதை ஏற்று அவர்களுக்கு உதவிபுரிகிறான் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
இதுபோல் தான் அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்ததையும் அல்லாஹ் எடுத்துக் கொள்கிறான். அவர்களின் நல்லறங்கள் பாழாகும் என்பது வேறு. அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்ததை உண்ணலாம் என்பது வேறு.
வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு:
அல்லாஹ்வை நம்பியிருந்தும் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த மக்காவாசிகள் அறுத்ததை உண்ணலாம் என்று மக்காவில் அருளப்பட்ட வசனத்தின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.
மதீனாவில் வேதம் கொடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் அறுத்ததை உண்ணலாமா என்று ஏற்படும் சந்தேகத்தை நீக்கும் வகையில் அவர்கள் அறுத்ததையும் உண்ணலாம் என்று அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதுதிருக்குர்ஆன் 5 : 5
இவ்வசனத்தில் வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு ஹலால் என்று சொல்லப்பட்டுள்ளது.
இங்கே உணவு என்று சொல்லப்படுவது சைவ வகை உணவைத்தான் குறிக்கும் என்றும், அறுத்து உண்ணப்படும் பிராணிகளை இது குறிக்காது என்றும், வேதம் கொடுக்கப்பட்டவர்களின் அசைவ உணவுகளை உண்ணக் கூடாது என்றும் சிலர் கூறுகின்றனர். இது தவறாகும்.
சைவ உணவுகளைப் பொறுத்த வரை வேதம் கொடுக்கப்படாதவர்களின் உணவு கூட அனுமதிக்கப்பட்டவைகளே. அரிசி, பருப்பு, காய்கறி போன்றவற்றை எவர் வீட்டிலும் உண்ணலாம்.
வேதம் கொடுக்கப்பட்டோர் அறுத்த பிராணிகள் பற்றியே இங்கே கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யூதர்களின் மாமிச உணவைச் சாப்பிட்டுள்ளனர்.
صحيح البخاري2617 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ يَهُودِيَّةً أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مَسْمُومَةٍ، فَأَكَلَ مِنْهَا، فَجِيءَ بِهَا فَقِيلَ: أَلاَ نَقْتُلُهَا، قَالَ: «لاَ»،.....
யூதப் பெண் ஒருத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். அவளைக் கொன்று விடுவோமா? என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், வேண்டாம் என்று கூறி விட்டார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)நூல் : புகாரி 2617
இந்த ஹதீஸிலிருந்து வேதம் கொடுக்கப்பட்டோரின் மாமிச உணவை நபியவர்கள் சாப்பிட்டுள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.
இறைவனுக்கு இணைகற்பிக்கும் ஒருவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்துள்ளாரா? என்பதை நாம் தெளிவுபடுத்திய பிறகுதான் அதனைச் சாப்பிட வேண்டும். ஆனால் வேதக்காரர்கள் நமக்கு மார்க்கம் அனுமதித்த உணவுப் பொருளைக் கொடுத்தால் அதனை நாம் ஆய்வு செய்ய வேண்டியதில்லை. அதனை நாம் தாராளமாக உண்ணலாம் என்பதே மேற்கண்ட வசனத்தின் கருத்தாகும்.
வேதக்காரர்கள் மார்க்கத்திற்கு மாற்றமான முறையில் அறுத்துள்ளார்கள் என்று தெளிவாகத் தெரியும் பட்சத்தில்தான் அவர்களின் உணவை நாம் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
வேதமுடையோர் அனுமதிக்கப்பட்ட பிராணியின் மாமிச உணவை நமக்குத் தந்தால் அதனை நாம் தாரளாமாக உண்ணலாம். பின்வரும் ஹதீஸும் இதனை நமக்கு உணர்த்துகிறது.
صحيح مسلم73 - (1772) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنِي حُمَيْدُ بْنُ هِلَالٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ مُغَفَّلٍ، يَقُولُ: " رُمِيَ إِلَيْنَا جِرَابٌ فِيهِ طَعَامٌ، وَشَحْمٌ يَوْمَ خَيْبَرَ، فَوَثَبْتُ لِآخُذَهُ، قَالَ: فَالْتَفَتُّ فَإِذَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَحْيَيْتُ مِنْهُ "،
கைபர் போர் தினத்தன்று எங்களை நோக்கி ஒரு தோல் பை வீசப்பட்டது. அதில் உணவுப் பொருளும் கொழுப்பும் இருந்தன. அதை எடுப்பதற்காக நான் குதித்தோடினேன். பிறகு திரும்பிப் பார்த்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்களைக் கண்டு நான் வெட்கமடைந்தேன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி)நூல் : முஸ்லிம் 3636
السنن الصغير للبيهقي2867 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ فُورَكٍ، نا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، نا يُونُسُ بْنُ حَبِيبٍ، نا أَبُو دَاوُدَ، نا شُعْبَةُ، وَسُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، كِلَاهُمَا عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ الْعَدَوِيِّ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الْمُغَفَّلِ، يَقُولُ: " دُلِّيَ جِرَابٌ مِنْ شَحْمٍ يَوْمَ خَيْبَرَ، فَأَخَذْتُهُ فَالْتَزَمْتُهُ، فَقُلْتُ: هَذَا لِي لَا أُعْطِي أَحَدًا مِنْهُ شَيْئًا، فَالْتَفَتُّ، فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَحْيَيْتُ مِنْهُ قَالَ سُلَيْمَانُ فِي حَدِيثِهِ: وَلَيْسَ فِي حَدِيثِ شُعْبَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «هُوَ لَكَ»
”அது உனக்குத்தான்” என்று நபியவர்கள் கூறியதாக பைஹகியின் ”சுனனுஸ் ஸகீரில்” 2867 வது ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.
கைபர் போர் என்பது யூதர்களுடன் நடைபெற்ற யுத்தமாகும். யூதர்களிடம் இருந்து வீசப்பட்ட கொழுப்பை அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் உண்பதற்காக எடுத்துக் வைத்துக் கொண்டதை நபியவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக அது உனக்குத்தான் என்று கூறி அவருக்கே கொடுத்துள்ளார்கள்.
எனவே நமக்குத் தடைசெய்யப்படாத உணவுப் பொருட்களை வேதக்காரர்கள் தந்தால் அதை நாம் உண்ணலாம். அல்லாஹ் அனுமதித்த ஒன்றை நாமாகத் தடை செய்யக்கூடாது.
வேதம் கொடுக்கப்பட்டோர் யார்?
வேதம் கொடுக்கப்பட்டோர் யார் என்பதில் பலரும் தவறான விளக்கத்தையே தருகின்றனர்.
இதன் நேரடிப் பொருள் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர்களையும், கிறித்தவர்களையுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது.
பொதுவாக யூதர்களையும், கிறித்தவர்களையும் குறிப்பிடுகிறது என்று இதை விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்காகவே வழங்கப்பட்டன. இதை 3:49, 5:72, 7:105, 7:134, 7:138, 10:90, 17:2, 17:101, 20:47, 20:94, 26:17, 32:23, 40:53, 43:59, 61:6 ஆகிய வசனங்களில் காணலாம்.
இஸ்ரவேலர்களுக்குத்தான் நான் அனுப்பப்பட்டேன் என்று ஈஸா நபி கூறியதாக 3:49, 5:72, 43:59, 61:6 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
இஸ்ரவேலர் அல்லாதவர்கள் யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ மாறியிருந்தால் அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களாக முடியாது. ஏனெனில் தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் அவர்களுக்காகக் கொடுக்கப்படவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள். மற்ற நபிமார்கள் குறிப்பிட்ட மக்களுக்கும், சமுதாயத்துக்கும் அனுப்பப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இஸ்ரவேலர் அல்லாத யூத கிறித்தவர்களுக்காக அந்த வேதங்கள் அருளப்படாததால் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் வேதக்காரர்களாக முடியாது. எனவே இஸ்ரவேலர் அறுத்ததை உண்ணலாம். இஸ்ரவேலர் அல்லாத யூத, கிறித்தவர்கள் அறுத்ததை உண்ணலாகாது என்பதே சரியான கருத்தாகும்.
இஸ்ரவேலர்களாக இல்லாத யூத கிறித்தவர்கள் மக்காவாசிகள் நம்பியது போல் நம்பி அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அதையும் உண்ணலாம்.
தர்ஹாக்களில் அறுக்கப்பட்ட பிராணிகள்:
உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!
அல்குர்ஆன் 108:2
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ سُلَيْمَانُ بْنُ حَيَّانَ، عَنْ مَنْصُورِ بْنِ حَيَّانَ، عَنْ أَبِي الطُّفَيْلِ، قَالَ: قُلْنَا لِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَخْبِرْنَا بِشَيْءٍ أَسَرَّهُ إِلَيْكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَا أَسَرَّ إِلَيَّ شَيْئًا كَتَمَهُ النَّاسَ، وَلَكِنِّي سَمِعْتُهُ يَقُولُ: «لَعَنَ اللهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللهِ، وَلَعَنَ اللهُ مَنْ آوَى مُحْدِثًا، وَلَعَنَ اللهُ مَنْ لَعَنَ وَالِدَيْهِ، وَلَعَنَ اللهُ مَنْ غَيَّرَ الْمَنَارَ»
யார் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கின்றானோ, அவனை அல்லாஹ் சபிக்கிறான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
நூல்: முஸ்லிம் 4001, 4002, 4003
மேற்கண்ட இறைவசனம் மற்றும் நபிமொழி அல்லாஹ்விற்கு மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
ஒருவன் தன்னுடைய உணவுத் தேவைக்காக ஒரு பிராணியை அறுத்தால் அதனை அல்லாஹ்வின் பெயர் கூறியே அறுக்க வேண்டும.
அல்லாஹ்விற்காக ஒரு பிராணியை அறுத்தல் என்றால் இறைவன் இட்ட கட்டளைக்காக அறுத்துப் பலியிடுவதாகும்.
ஹஜ்ஜுப் பெருநாளில் நிறைவேற்றும் குர்பானி வணக்கம், பிராணியை அறுத்துப் பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்தல், மற்றும் அகீகா போன்றவை வணக்கங்களாகும்.
ஒருவன் தன்னுடைய உணவுத் தேவைக்காக அல்லாமல் வணக்கமாக அறுப்பதாக இருந்தால் அல்லாஹ்விற்காக மட்டுமே மார்க்கம் அனுமதித்த அறுத்துப் பலியிடும் வணக்கங்களைச் செய்ய வேண்டும்.
அதுவல்லாமல் ஒருவன் தர்ஹாக்களில் அறுத்தாலோ அல்லது அவுலியாக்களுக்காக அறுத்துப் பலியிட்டாலோ அது நிரந்தர நரகத்தில் சேர்க்கும் இணைவைப்புக் காரியமாகும்.
எனவே ஒருவன் இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவதைப் போன்று இறைன் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிட்டால் அதனை உண்பது கூடாது. அவன் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தாலும் அது ஹராமானதாகும்.
onlinepj.in
share this.. https://bit.ly/4aduExb
பெண்கள் கால்களை கட்டாயம் மறைக்க வேண்டுமா?
பெண்கள் கால்களை கட்டாயம் மறைக்க வேண்டுமா?
பெண்கள் தங்கள் கால்களை மறைக்க வேண்டுமா? அபாயா கால்களை மறைத்தால் அது தரையில் இழுபடுமே.! தொழும் பொழுதும் கால்களை மறைக்க வேண்டுமா? மார்க்க அடிப்படையில் விளக்கம் தரவும்!
ஹமீத் ஷேக்
பதில் :
பெண்கள் தங்களுடைய பாதங்கள் உட்பட கால்கள் முழுவதையும் மறைப்பது கட்டாயம் என்று சிலர் கூறுகின்றனர். இக்கூற்று தவறாகும்.
இக்கருத்துடையவர்கள் சில ஆதாரங்களை முன்வைக்கின்றனர். தங்கள் முடிவை நிரூபிக்கும் ஆதாரங்களாக அவை இல்லை. சில ஆதாரங்கள் பலவீனமானவையாக உள்ளன. அவற்றை விரிவாகப் பார்ப்போம்.
ரொட்டியைக் குப்பைத் தொட்டியில் போடலாமா?
சவூதியில் மக்கள் ரொட்டித் துண்டை குப்பைத் தொட்டியில் போடாமல் அதன்
இருக்கின்றதா? செய்யது மஸ்ஊத்.
பதில் :
صحيح البخاري1477 – حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا خَالِدٌ الحَذَّاءُ، عَنِ ابْنِ أَشْوَعَ، عَنِ الشَّعْبِيِّ، حَدَّثَنِي كَاتِبُ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: كَتَبَ مُعَاوِيَةُ إِلَى المُغِيرَةِ بْنِ شُعْبَةَ: أَنِ اكْتُبْ إِلَيَّ بِشَيْءٍ سَمِعْتَهُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَتَبَ إِلَيْهِ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " إِنَّ اللَّهَ كَرِهَ لَكُمْ ثَلاَثًا: قِيلَ وَقَالَ، وَإِضَاعَةَ المَالِ، وَكَثْرَةَ السُّؤَالِ "
பொருள்களை வீணாக்குவதை இறைவன் வெறுக்கின்றான் என்பது நபிமொழி. நூல் : புகாரி 1477
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். திருக்குா்ஆன் 7:31
உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை
வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரயம் செய்து விடாதீர்! விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.திருக்குா்ஆன் 17:26,27
பூஜிக்கப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதை உண்ணலாமா?
பூஜிக்கப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதை உண்ணலாமா?
பூஜிக்கப்பட்ட பொருள் நமக்கு ஹராம், நாம் வாழும் நாட்டில் விதை விதைக்கும் போதும், அறுக்கும் போதும் பூஜை செய்கிறார்கள். பூஜை செய்த விவசாயத்தின் மூலம் தான் நமக்கு அரிசி கிடைக்கிறது. இதைத் தான் நாம் உண்கிறோம், இது சரியா? இதற்கு வேறு வழி இருக்கிறதா?
தாவூத்
பதில்
முஸ்லிமல்லாதவர்கள் குறிப்பாக இந்து மதத்தவர்கள் விவசாயம் செய்தாலும், கட்டடம் கட்டினாலும், கடை திறந்தாலும் பூஜை செய்யாமல் துவக்க மாட்டார்கள்.
அல்லாஹ் அல்லாதவர்களுக்கு படையல் செய்யப்பட்டதை நாம் சாப்பிடக் கூடாது என்பதால் உங்களுக்கு இந்தச் சந்தேகம் எழுந்துள்ளது.
பூஜை செய்து விட்டு அவர்கள் விவசாயம் செய்வதால் அவர்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் அரிசி, கோதுமை, இன்னபிற விளை பொருட்களை நாம் உண்ணலாமா?
அவர்கள் பூஜை செய்துவிட்டு கட்டிய கட்டடங்களை விலைக்கு வாங்கலாமா?
அல்லது வாடகை கொடுத்து அதில் குடியிருக்கலாமா?
கடையைத் துவக்கும் நாளிலும், அன்றாடம் கடைகளைத் திறக்கும் போதும் பூஜை செய்துவிட்டுத் தான் ஆரம்பிப்பார்கள். எனவே அவர்களின் கடைகளில் பொருட்களை வாங்கலாமா?
என்றெல்லாம் கூட சந்தேகம் வரும்.
உடல் தானம் செய்யலாமா?
உடல் தானம் செய்யலாமா?
உடலையும், கண்கள், கிட்னி போன்ற உறுப்புக்களையும் தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
ரிஸ்வான்
கண்கள், கிட்னி போன்ற மனித உறுப்புக்களைப் பிற மனிதர்களுக்குப் பொருத்தி மருத்துவம் செய்யும் முறை தற்காலத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நவீன முறைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை.
எனவே உலக விஷயத்தில் இது போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த முறை இருந்ததா? என்று கேட்கக் கூடாது. மாறாக இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்கு இவை எதிராக இருக்கின்றதா? என்று மட்டும் பார்க்க வேண்டும். நவீன முறைகள் இஸ்லாமியச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக இல்லாவிட்டால் அவை அனுமதிக்கப்பட்டதாகி விடும்.
நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாமா?
நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாமா?
சம்சுல் ஆரிஃப்
பதில் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகமான நேரங்களில் அமர்ந்தே சிறுநீர் கழித்துள்ளார்கள். எனவே நாமும் அமர்ந்தே சிறுநீர் கழிக்க வேண்டும்.
مسند أحمد25787 - حَدَّثَنَا وَكِيعٌ، وَعَبْدُ الرَّحْمَنِ الْمَعْنَى، عَنْ سُفْيَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: " مَنْ حَدَّثَكَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَالَ قَائِمًا بَعْدَمَا أُنْزِلَ عَلَيْهِ الْفُرْقَانُ فَلَا تُصَدِّقْهُ "، " مَا بَالَ قَائِمًا مُنْذُ أُنْزِلَ عَلَيْهِ الْفُرْقَانُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு திருக்குர் ஆன் அருளப்பட்ட பின்பு அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று யாரேனும் உமக்கு அறிவித்தால் அவரை நம்பி விடாதே! திருக்குர் ஆன் அவர்களுக்கு அருளப்பட்டதிலிருந்து அவர்கள் நின்று சிறுநீர் கழித்ததே இல்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத்
ஆனால் சில நேரங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்துள்ளார்கள்.
வீடுகளில் கழிப்பறை அமைக்கலாமா
வீடுகளில் கழிப்பறை அமைக்கலாமா?
அஸதுல்லா தாம்பரம்
பதில்
வீடுகளில் கழிப்பறை அமைப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல. அது வரவேற்கத்தக்க நல்ல காரியம் தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மலஜலம் கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி தூரமான வெற்றிடத்துக்குச் செல்லும் வழக்கம் ஆரம்பத்தில் இருந்தது.
கார், விமானம், Facebook . வாட்ஸ்அப் .போன்றவற்றைப் பயன்படுத்துகிறீர்களே! பித்அத் இல்லையா?
// பித்அத்தே கூடாது என்னும் நீங்கள் நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தாத கார், விமானம், பேண்ட் சர்ட் Facebook . வாட்ஸ்அப் .போன்றவற்றைப் பயன்படுத்துகிறீர்களே! அவைகள் பித்அத் இல்லையா? ///
என்று கேட்கும் சகோதர சகோதரிகள் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில்
புதிதாக ஒரு அமலைச் சேர்ப்பது என்பது, அல்லாஹ்வுக்கோ, நபி (ஸல்) அவர்களுக்கோ தெரியாத ஒன்றை நாம் கற்றுத்தருவது போன்றதாகும்.
ஏனென்றால் அதிக நன்மையை பெற்றுத்தரும் இத்தகைய நல்ல அமல்களை அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ கூற மறந்து விட்டனர் அல்லது கூறாமல் விட்டுச் சென்று விட்டார்கள். அதை நான் செய்து முழுமைப் படுத்துகிறேன் என்று கருதுவது போலதாகும். (நவூது பில்லாஹ் மின்ஹா) அல்லாஹ் நம்மை அத்தகைய தீய எண்ணங்களிலிருந்து காப்பாற்றுவானாகவும்.
நபியின் சளியை உடம்பில் பூசிக் கொண்டார்களா
நபியின் சளியை உடம்பில் பூசிக் கொண்டார்களா?
பின்வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?
"அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரின் தோழர்களில் ஒருவர் தம் கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார். அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டால் அவரின் கட்டளையை நிறைவேற்ற
அவர்கள் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு முன்வருகிறார்கள். அவர் உளூச் செய்தால் அவர் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரைப் பெறுவதற்காக, ஒருவரோடொருவர் சண்டையிடும் அளவிற்குச் செல்வார்கள்." புஹாரி 2731 & 2732
291. தூய்மையில்லாமல் திருக்குர்ஆனைத் தொடலாமா?
இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு தூய்மையில்லாத யாரும் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர்.
உளூ எனும் தூய்மை இல்லாதவர் களும், குளிப்பு கடமையானவர்களும், மாதவிடாயுள்ள பெண்களும், இஸ்லாத்தை ஏற்காதவர்களும் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று இந்த வசனத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் கூறிவருகின்றனர்.
இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?
இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?
கேள்வி:
அவன் என்ற சொல் நடைமுறையில் மரியாதைக் குறைவான
வார்த்தையாகக் கருதப்படுகிற போது, முஸ்லிம்களாகிய நீங்கள் இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? இவ்வாறு முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கும் நியாயமான கேள்விக்கு என்ன பதில்?
- அபூமுஜாஹிதீன், அஜ்மான், யு.ஏ.இ.
பதில்:
இது மார்க்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. மொழி, வரலாறு, பழக்க வழக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்.
இது தமிழ்மொழி போன்ற சில மொழிகளுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனை என்பது முதல் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாய்மொழியான அரபு மொழியில் இத்தகைய நிலை ஏற்படாது.
பீஜேயின் சொத்து எவ்வளவு?
(இந்த ஆக்கம் எழுதப்பட்ட போது மூன் மார்ட் நிறுவனத்தை நான் ஆரம்பிக்கவில்லை. அப்போது உள்ள நிலையில் எனது பொருளாதார நிலை குறித்தே இதில் எழுதியுள்ளேன். சில ஆண்டுகளாக அல்லாஹ் எனக்கு பரகத் செய்துள்ளதால் இதில் கூறப்பட்ட நிலையில் நான் இப்போது இல்லை என்பதைக் கவனத்தில் கொண்டு இதை வாசிக்கவும்)
தவ்ஹீத் ஜமாஅத்தைப் பயன்படுத்தி பீஜே பணம் சம்பாதித்துள்ளார் என்று பாக்கரும், இஸ்மாயீல் சலஃபி என்பவரும் கொச்சைப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஆனால் இந்த ஜமாஅத்தைப் பயன்படுத்தி எந்த ஆதாயத்தையும் பீஜே அடையவில்லை என்று தெரிந்திருந்தும் பீஜே கோடிகளுக்கு அதிபதியாகி விட்டது போலவும், அவர் கார் பங்களாவுடன் சொகுசு வாழ்க்கை வாழ்வது போலவும் பாக்கர் கூட்டம் இப்போது பேசுகிறார்கள்.
-
நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் சொல்வது என்ன? . நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும...
-
1951 இலக்கம் 13 முஸ்லிம் திருமன மற்றும் விவாகரத்து சட்டத்தின் திருத்தங்களுக்காக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் 19...
-
பெண்கள் சிறுவயதில் ஓடிப்போக காரணம் என்ன? உண்மையச் சொன்ன உயர்நீதிமன்றம்! நாட்டில் நடக்கக்கூடிய கற்பழிப்புகள், பாலியல் சில்மிஷங்கள், ஆபாசச் ...










