தவ்ஹீத் ஜமாஅத் video's: பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள்

பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள்

 பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள்

பிறையைக் கணித்துத் தான் நாளை முடிவு செய்ய வேண்டும்; பிறையைப் பார்க்கத் தேவை இல்லை என்று வரட்டு வாதம் புரிவோர் தங்கள் வாதத்தை நிறுவிட பிரசுரங்கள் வெளியிட்டு தங்கள் மதியீனத்தைப் பறைசாற்றி வருகின்றனர். இவர்களின் முழு வாதமும் கிறுக்குத்தனமாகவும், ஆதாரமற்ற உளறலாகவும் உள்ளன என்பதை சிறிதளவு சிந்தனை உள்ளவர்கள் கூட அறிய முடியும்.

ஹிஜ்ரா கமிட்டி என்ற பெயரில் பித்தலாட்டம் செய்யும் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இது குறித்து வரிசை எண் போட்டு முப்பது கேள்விகளைக் கேட்டுள்ளனர். இத்துடன் நாளின் ஆரம்பம் எது என்பது குறித்தும் வரிசை எண் போட்டு கேள்விகள் கேட்டுள்ளனர்.

வரட்டுக் கேள்வி –1

பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் (ரஃயல் ஐன் 3:13) என்று நேரடியாகக் கூறும் குர்ஆன் வசனமோ ஹதீஸோ இருக்கிறதா?

நமதுபதில் – 1

1 .  பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று நேரடியாக ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்று கேட்கிறார்கள். எதற்கு நேரடியாக ஆதாரம் உள்ளதோ, அது குறித்து கேள்வி கேட்கும் இவர்களை என்னவென்று சொல்ல?

புறக்கண்ணால் பார்த்துத் தான் பிறையை முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு,பிறை குறித்து வரும் அனைத்து ஹதீஸ்களுமே ஆதாரம் தான்.

வாகனக் கூட்டத்தினர் நேற்று பிறை பார்த்ததாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் வந்து சொல்கின்றனர்.  "நேற்று பிறை பார்த்தோம்",  என்பது புறக்கண்ணால் பார்த்ததைத் தான் குறிக்கும்.

நீங்கள் பிறையைப் பார்ப்பது வரை அல்லாஹ் முந்தைய மாதத்தை நீட்டித் தருவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளதும் புறக்கண்ணால் பார்க்கப்படுவதைத் தான் குறிக்கிறது.

இன்னும் சொல்லப் போனால், பிறையைப் பார்த்து நோன்பை வையுங்கள், பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள், என்பதற்கும்  புறக்கண்ணால் பார்த்து முடிவு செய்வது தான் பொருள்!

எதற்கு நேரடியாக ஆதாரம் இருக்கிறதோ, அதில் கேள்வி கேட்கும் இவர்களை நோக்கி நாம் ஒரு கேள்வி வைக்கிறோம்.

முன்கூட்டியே கணித்துத் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்களே ,அதற்குரிய குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் என்ன?

ரஃயல் ஐன் என்ற வார்த்தை வந்தால் தான் புறக்கண்ணால் பார்த்ததாக அர்த்தம் வருமாம். அதாவது ரஃய் என்றால் பார்த்தல் என்பது பொருள். ஐன் என்றால் கண் என்பது பொருள். பார்த்தல் என்பதுடன் கண்னைச் சேர்த்து கண்ணால் பார்த்தல் என்று ஆதாரம் உண்டா எனக் கேட்கின்றனர்.

சாப்பிட வேண்டும் என்றாலும் வாயால் சாப்பிட வேண்டும் என்றாலும் ஒரே அர்த்தம் தான். அது போல் பார்த்தல் என்றாலும் கண்ணால் பார்த்தல் என்றாலும் ஒரே அர்த்தம் தான்.

ஆனால் எந்த மொழியாக இருந்தாலும் பார்த்தல் என்பதற்கு கண்ணால் பார்த்தல் என்று தான் பொருள் செய்ய வேண்டும். அந்த அர்த்தம் பொருந்தாத இடத்தில் மட்டும் தான் வேறு பொருத்தமான அர்த்தம் செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ரஃயல் ஐன் என்ற வார்த்தை இருந்தால் தான் கண்ணால் பார்த்தல் என்று அர்த்தம் செய்வார்களாம்.

அல்லாஹவைக் காட்டு என்று மூஸா நபி சமுதாயம் கேட்ட போது வெறும் ரஃய் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. கண்ணுக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா? கருத்துக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா? இது போல் நூற்றுக் கணக்கான வசனங்களில் ஐன் என்ற வார்த்தை சேராமல் தான் ரஃய் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அதற்கு கண்களால் பார்த்தல் என்று பொருள் இல்லை என்று சொல்வார்களா?

இவர்கள் சுட்டிக் காட்டும் 3:13 வசனத்தில் பார்த்தல் என்பதுடன் ஐன் அதாவது கண் என்ற சொல் ஏன் சேர்த்துச் சொல்லப்ட்டது என்ற அறிவும் இவர்களுக்கு இல்லை. கண் பார்வைக்கு இரு மடங்காகத் தெரிந்தது ஆனால் உண்மையில் அப்படி இல்லை என்ற கருத்தைக் கூறுவதற்காக இவ்வாறு கூறப்பட்டது. இதை அந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும் மூளையுள்ள யாரும் அறிந்து கொள்ளலாம்.

வரட்டுக் கேள்வி -2

ஹதீதில் மேக மூட்டம் என்று இருக்கிறதா? மறைக்கப்படும் போது என்று இருக்கிறதா? பார்க்க 10:71 கும்ம, குப்பிய, கும்மிய இந்த அரபி பதங்களின் நேரடி தமிழ்ப் பதங்கள் என்ன?

நமது பதில் – 2

ஹிஜ்ரா காலண்டர் என்று மார்க்க ஆதாரமில்லாத ஒன்றை நிலைநாட்டும் இந்தக் கூட்டத்தினர் வெறும் கேள்விகளாகத் தான் கேட்பார்கள். இதற்கு இது தான் அர்த்தம் என்று ஆதாரத்துடன் வாதத்தை எடுத்து வைக்க மாட்டார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

10:71 வசனத்தைக் காட்டி மேற்கண்ட சொல்லுக்கு மறைத்தல் என்று தான் பொருள் என வாதிடுகின்றனர். இவர்களுக்கு ஆய்வு அறிவும் இல்லை. மொழி அறிவும் இல்லை. தனித்துச் சொல்லப்பட்டாலும் இன்னொரு சொல்லுடன் சேர்த்துச் சொல்லப்பட்டாலும் ஒரே அர்த்தம் தரக் கூடிய சொற்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன. தனித்துச் சொல்லப்படும் போது ஒரு அர்த்தமும் இன்னொரு சொல்லுடன் சேர்த்துச் சொல்லும் போது வேறு அர்த்தம் தரக் கூடிய சொற்களும் உள்ளன.

உதாரணமாக இந்த ஆணியின் மறை கழன்று விட்டது அல்லது லூசாகி விட்டது என்றால் நேரடி அர்த்தம் தான் இதற்குச் செய்ய வேண்டும். ஆனால் இந்த மனிதனுக்கு மறை கழன்று விட்டது என்று கூறினால் அல்லது லூஸ் என்று கூறினால் அதற்கு நேரடி அர்த்தம் செய்ய முடியாது. கிறுக்கன் என்று தான் அர்த்தம் செய்ய வேண்டும்.

கிறுக்கன் என்று நேரடி அர்த்தத்தில் உள்ளதா என்று கேட்பது போல் இவர்களின் கேள்வி அமைந்துள்ளது.

பிறையை  வானத்துடன் தொடர்புபடுத்தி  சொல்லப்படும் போது கண்ணுக்குத்  தெரியாமல் மேகம் அல்லது பனி மூட்டம் மறைத்து பார்க்க முடியாமல் செய்தல் என்ற பொருளைத் தரும்.

இதனால் தான் மேகத்துக்கு கும்ம என்ற சொல்லில் இருந்து பிறந்த கமாம் என்ற சொல் திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பார்க்க 2:57, 2:210, 7:160, 25:25

பதுவாக கும்மவுக்கு மறைத்தல் என்று பொருள் சொல்லும் அகராதி நூல்கள் பிறையுடன் அதைச் சேர்த்து சொல்லும் போது கண்ணுக்குப் புலப்படாமல் கண்ணால் பார்க்க முடியாமல் மேகம் அல்லது பனி மூட்டம் பிறையை மறைப்பது என்று கூறுகின்றன.

ولَيْلَةُ الغُمى: هي اللَّيلةُ التي لا يُرى فيها الهلالُ، وكذلك الغُمَيَّةُ إذا غُمَّ الهِلالُ على الناس

[المحيط في اللغة 1/ 391، بترقيم الشاملة آليا]

ويقال أيضاً: غُمَّ الهلال على الناس، إذا ستره عنهم غيمٌ أو غيره فلم يُرَ

[الصحاح في اللغة 2/ 26، بترقيم الشاملة آليا]


وَفِي حَدِيثٍ { فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ } أَيْ فَإِنْ سُتِرَتْ رُؤْيَتُهُ بِغَيْمٍ أَوْ ضَبَابٍ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلَاثِينَ لِيَكُونَ الدُّخُولُ فِي صَوْمِ رَمَضَانَ بِيَقِينٍ .

وَفِي حَدِيثٍ { فَاقْدُرُوا لَهُ } قَالَ بَعْضُهُمْ أَيْ قَدِّرُوا مَنَازِلَ الْقَمَرِ وَمَجْرَاهُ فِيهَا قَالَ أَبُو زَيْدٍ غُمَّ الْهِلَالُ غَمًّا فَهُوَ مَغْمُومٌ وَيُقَالُ كَانَ عَلَى السَّمَاءِ غَمٌّ وَغَمْيٌ فَحَالَ دُونَ الْهِلَالِ وَهُوَ غَيْمٌ رَقِيقٌ أَوْ ضَبَابَةٌ

[المصباح المنير في غريب الشرح الكبير  7/ 84]


وصُمْنا للغُمَّى وللغَمَّى بالفتح والضم إذ غُمَّ عليهم الهلال في الليلة التي يرون أن فيها استهلاله وصُمْنا للغَمَّاء بالفتح والمد وصُمْنا للغُمِّيَّة وللغُمَّة كل ذلك إذا صاموا على غير رؤية وفي الحديث أنه قال صوموا لرؤيته وأَفطروا لرؤيته فإن غُمَّ عليكم فأَكملوا العدة قال شمر يقال غُمَّ علينا الهلال غَمّاً فهو مَغْموم إذا حال دون رؤية الهلال غَيْمٌ رَقِيق من غَمَمْت الشيء إذا غَطَّيته

[لسان العرب 12/ 441]


ويقال أيضا غُمَّ الهلال على الناس إذا ستره عنهم غيم أو غيره فلم يُر

[مختار الصحاح ص: 488]

(கும்ம)  மறைக்கப்படும்,  என்ற  வார்த்தை ஒரு பொதுவான சொல். எந்தப் பொருளோடு அது  இணைத்து பேசப்படுகிறதோ, அதைப் பொறுத்து அந்தச் சொல்லுக்கு அர்த்தம் வேறுபடும். பொதுவாக, ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னால், "குழப்பமடைந்தவர்" என்று பொருள்.

வானத்தோடு  இணைத்துச் சொல்லப்படுமானால், வானத்தில் எது மறைக்கும்? என்று சிந்தித்து, அதை இந்தச் சொல்லுக்கு பொருளாக கொடுப்பது தான் முறையான செயல். அவ்வகையில் பார்த்தால், க்ம்மு – என்ற மறைக்கப்படுதல் என்பதற்கு இந்த இடத்தில் "மேகம் மறைத்தல் " என்ற பொருள் தான் கொடுக்க முடியும்.

எந்தப் பொருளையும் முதலில் நம் நிலையில் இருந்து மட்டும் சிந்திப்பதால் ஏற்படும் கோளாறு தான் இத்தகைய கேள்விகள். இந்த ஹதீஸ் சொல்லப்பட்ட நபியின் காலத்தில், இதற்குரிய பொருள் என்ன? இதை நபி கூறிய பொழுது, சஹாபாக்கள் எவ்வாறு  இதைப்  புரிந்திருப்பார்கள்?  என்பதைச்  சிந்தித்தால் இது போன்ற அறிவார்ந்த(?) கேள்விகள் எழாது.

வரட்டுக் கேள்வி – 3

நபி (ஸல்) பிறை 29 மாலை பிறை பார்க்கச் சொன்னார்களா? அல்லது தினசரி பார்க்கச் சொன்னார்களா?

நமது பதில் – 3

இந்தக் கேள்வியின் மூலம் பிறையைக் கணிக்க வேண்டும் என்ற நச்சுக் கருத்தை எப்படி நிறுவுகிறார்கள் என்பதை இவர்கள் விளக்கவில்லை. இத்தகைய அறிவுப்பூர்வமான வழிமுறை இவர்களிடம் கடுகளவும் இல்லை. மாற்றுக் கருத்து உடையவர்களை நோக்கி கேள்விகள் கேட்டால் அந்தக் கேள்வி மூலம் என்ன கருத்தை எப்படி நிலை நாட்டப் போகிறார்கள் என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். இவர்களின் கேள்விப் பட்டியலில் இந்த அறிவுப்பூர்வமான அம்சம் இல்லவே இல்லை.

இவர்கள் கேட்டுள்ள மூன்றாவது கேள்வி கூட முரண்பாட்டின் வடிவமாக உள்ளது.

29 அன்று பிறை பார்க்கச் சொல்வது தினசரி பார்க்க வேண்டும் என்பதற்கு முரணானது அல்ல. ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்ததாகும்.

வாகனக் கூட்டத்தினர்  நேற்று  பிறை  பார்த்ததாகச்  சொல்லியுள்ள  அறிவிப்பில், "நேற்று"  என்பது  29 ஐ தான்  குறிக்கும். மாதம் என்பது  29 நாட்கள் தான். பிறை தெரிந்தால் அந்த மாதம் அதோடு முடியும். பிறை தெரியவில்லை என்றால் முப்பதாக பூர்த்தி ஆகும்.

இதனடிப்படையில் பார்க்கும் போது, ஒரு மாதம் முடிவடைந்து விட்டதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க அந்த மாதத்தின் 29 நாட்கள் கழித்த பிறகு தான் பிறை பார்க்க வேண்டும். இது அந்த அறிவிப்பிலேயே புரிகிறது   மட்டுமல்லாமல்,  வாகனக் கூட்டம் ஹதீசும் தெளிவுப்படுத்துகிறது.

29 இல் மட்டும் பார்க்க வேண்டுமா? அல்லது ஒவ்வொரு நாளும் பார்க்க வேண்டுமா? என்ற கேள்வியைக் கேட்கிறார்கள்.  மாதத்திற்கு எத்தனை நாட்கள் ஆகியுள்ளது? 29 நாட்களுக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன  என்பதைக்  கணக்கிடுவதற்கு ஒவ்வொரு நாட்களையும் நாம் கணக்கிட்டாக (எண்ணியாக) வேண்டும்.

இந்தச் சாதாரண உண்மை கூட தெரியாமல் உளறியுள்ளனர்.

 வரட்டுக் கேள்வி – 4, 5, 6

மாத ஆரம்ப நாட்களில் பார்க்கப்படும் பிறை மறையும் பிறையா? அல்லது பிறக்கும் பிறையா?

மறையும் பிறையைப் பார்த்து விட்டுத் தான் ஆரம்பிப்பதாக நபி (ஸல்) கூறியிருப்பார்களா?

நபி (ஸல்) அந்த அளவு விளக்கக் குறைவானவர்கள் என்பது தான் உங்கள் நம்பிக்கையா?

நமது பதில் – 4, 5, 6

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றைச் சொன்னால் அந்தச் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கேவலப்படுத்தும் வகையில் இது போன்ற கேள்வியைக் கேட்டுள்ளனர்.

இவர்கள் அறிவும், சிந்தனையும் உள்ளவர்களாக இருந்தால் இந்தக் கேள்விகளைக் கேட்பதற்கு முன் இது குறித்த தங்கள் வாதத்தை முன் வைக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறையும் பிறையைக் கூறவில்லை. அதற்கு இதோ ஆதாரம் என்று வாதிட வேண்டும். தனது தரப்பு வாதமாக எதையும் வைக்காமல் கேள்வி கேட்பதில் இருந்து இவர்களின் மடமை தெளிவாகின்றது.

மறையும் பிறையைப் பார்த்து விட்டு ஆரம்பிக்கச் சொல்லி இருப்பார்களா? என்று கேட்பதன் மூலம் தங்களுக்கு கடுகளவும் சிந்திக்கும் திறன் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டனர்.

நாம் மக்ரிப் தொழுகையை ஆரம்பிப்பதற்கு சூரியன் மறைவதைத் தான் காரணமாகக் கொண்டுள்ளோம். மறையும் சூரியனைப் பார்த்து விட்டுத் தான் மக்ரிப் தொழுகையை ஆரம்பிப்பதாக நபிகள் சொல்லி இருப்பார்களா? அந்த அளவுக்கு நபிகளுக்கு விளக்கக் குறைவு உள்ளது என்று கருதுகிறீர்களா என்று ஒருவன் கேட்டால் அவனை நாம் என்னவென்போம்?

இனி மேல் மக்ரிப் தொழுகையை சூரியன் உதிக்கும் போது தான் ஆரம்பிக்க வேண்டும் என்று அடுத்த கண்டுபிடிப்பை இந்தக் கூறு கெட்டவர்கள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்ப்போம். மறையும் நேரத்தில் சில காரியங்களைத் துவங்கலாம். உதிக்கும் நேரத்திலும் துவங்கலாம். எதற்கு எப்படி ஆதாரம் கிடைத்துள்ளதோ அப்படிப் புரிந்து கொள்வது தான் மூளை உள்ளவர்களின் முடிவாக இருக்க வேண்டும்.

ஆதாரம் எப்படி உள்ளது என்பதை முதலில் பார்ப்போம்.

முந்தைய  கேள்விக்கான  நமது  பதில்  மேலே  தரப்பட்டுள்ள  நிலையில்,  அந்த  பதில் குறித்த  இவர்கள்  நிலையை  இவர்களே  விளக்கினால்  இதற்கு  பதில்  கிடைத்து விடும்.

மறையும்  பிறையா  உதிக்கும்  பிறையா  என்பதைக்  கேள்வியாக  கேட்பதற்கு  முன்னர், பிறையை  எப்போது, எந்த நேரத்தில் பார்க்க வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு நாம் விடை வைத்திருக்க வேண்டும்.

வாகனக்  கூட்டம்  அறிவிக்கிற ஹதீஸில், மாலையில் பிறை பார்த்ததாக வருகிறது. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்தும் இருக்கிறார்கள் எனும் போது,பிறையை மாலை தான் பார்க்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

இப்போது நமது கடமை, மாலையில் பிறை பார்ப்பது தானே தவிர, அது உதிக்கும் பிறையா மறையும் பிறையா என்று ஆராய்ச்சியில் இறங்குவது அல்ல!

மறையும் பிறையைப் பார்க்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது உறுதியாக தெரிந்த பிறகும்  இப்படி  சொல்லியிருப்பார்களா? என்று கேட்கப்படும் கேள்வி, நம்மை நோக்கிய கேள்வி அல்ல, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்படும் கேள்வி.

விபரம் கெட்டவர்களாக இவர்கள் இருந்து கொண்டு நபிகள் நாயகத்தை அப்படி சித்தரிக்கப் பார்ப்பதில் இருந்து இவர்கள் ஷைத்தானின் வலையில் விழுந்து கிடப்பவர்கள் என்பது தெளிவாகிறது.

வரட்டுக்கேள்வி – 7

2:185ல் அல்லாஹ் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அதாவது சாட்சியமளிக்கிறாரோ (ஃபமன்ஷஹித) அவர் நோன்பு நோற்கட்டும் என்று கட்டளையிட்டிருக்கின்றானா? அல்லது எவர் தலைப்பிறையை புறக்கண்ணால் பார்க்கிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்று கட்டளையிட்டிருக்கின்றானா?

நமது பதில் – 7

"ஃபமன் ஷஹித மின்குமு ஷ்ஷஹ்ர" என்பதற்கு"யார் அம்மாதத்திற்கு சாட்சியாக இருக்கிறாரோ", என்று பொருள் செய்வது முற்றிலும் தவறான ஒன்றாகும்.

ஷஹித என்பதற்கு சில இடங்களில் சாட்சி கூறுதல் என்ற அர்த்தம் இருந்தாலும் அதற்கு அடைவது என்ற பொருளும் உள்ளது. யார் சாட்சியாக இருக்கிறாரோ என்று இவர்கள் செய்வது போல் பொருள் கொண்டால் அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்பு கடமையாகாது. யார் பிறையைக் கண்ணால் பார்த்து அதற்கு சாட்சி கூறுகிறாரோ அவர் மீது மட்டும் தான் கடமையாகும்.

ஒரு ஊரில் பத்து பேர் பிறை பார்த்தார்கள் என்றால் அவர்கள் மட்டுமே பிறைக்கு சாட்சிகளாக உள்ளனர். அந்த ஊரைச் சேர்ந்த மற்றவர்கள் அதற்கு சாட்சிகளாக இல்லாததால் அவர்கள் மீது நோன்பு கடமையாகாது என்று இவர்கள் கூற வேண்டும். அவ்வாறு கூற இவர்கள் தயங்கினால் யார் சாட்சி கூறுகிறாரோ என்ற அர்த்தத்தை இவர்களே மறுத்துக் கொள்கின்றனர்.

மாதத்தை அடைந்தவர் என்று பொருள் கொண்டால் சிலர் பிறை பார்த்து சாட்சி சொன்னாலும் அவர்களின் சாட்சியம் மூலம் மற்றவர்களும் மாதத்தை அடைந்து விடுகின்றனர் என்று பொருத்தமாக அமைந்துள்ளது. இதை விளங்காமல் உளறியுள்ளனர்.

புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளதா என்று கேட்பதன் மூலம் தங்களுக்கும் சிந்தனைக்கும் அறவே தொடர்பு இல்லை என்று நிரூபித்துக் கொள்கின்றனர்.

ஒரு குறிப்பிட்ட வசனம் அல்லது ஒரு ஹதீஸின் வாசகம் நான் விரும்புகின்ற முறையில் இருந்தால் தான் ஏற்றுக் கொள்வேன் என்பதும், அனைத்து விஷயங்களும் ஒரு ஹதீஸில் அல்லது ஒரு வசனத்தில் கூறப்பட்டிருக்க வேண்டும் என்பதும் மார்க்க அறிவு அற்றவர்களின் நடவடிக்கையாகும்.

இது குறித்து வந்துள்ள அனைத்து ஆதாரங்களையும் திரட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல் விளக்கத்தையும் பார்த்து அதற்கு ஏற்ப புரிந்து கொள்வது தான் அறிவுடையோரின் செயலாகும்.

யார் ரமளானை அடைகிறாரோ என்றால் அனைவரும் ஒரே நேரத்தில் அடைய மாட்டார்கள் என்ற கருத்து அதனுள் இருக்கிறது. ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு நேரங்களின் அடைவார்கள் என்பது பிறை பார்த்து மாதத்தை முடிவு செய்தால் தான் சாத்தியமாகும். பிறையைக் கணித்தால் அனைவரும் ஒரு நேரத்தில் மாதத்தை அடையும் நிலை ஏற்பட்டு மேற்கண்ட வசனத்தை நிராகரிக்கும் நிலை ஏற்படும்.

புறக்கண்ணால் பார்த்துத் தான் மாதத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்பதை ஏராளமான ஹதீஸ்களின் துணையுடன் நாம் நிரூபித்துள்ளோம். அவை இந்த வசனத்தின் விளக்கமாக அமைந்துள்ளது என்பதையும் இவர்களுக்கு அறிந்து கொள்ளும் திறன் இல்லை.

ஒரே நாளில் பெருநாளை அமைத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தும் கூட,  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைச் செய்யாமல் இரண்டு நாளட்களில் பெரு நாள்  ஏற்படுவதை அங்கீகரித்து நமக்கு முன்மாதிரியாக விட்டுச் சென்றார்கள் என்பதற்கு சிரியா – மதினா பிறை வேறுபாடு சம்மந்தமான ஹதீஸ், வாகனக்கூட்டம் அறிவிப்பு கொண்ட ஹதீஸ் போன்றவை நமக்கு தெளிவான ஆதாரமாக உள்ளன.

வாய்ப்பிருந்தும் செய்யவில்லை என்பது எதைக் காட்டுகிறது? ஒரே நாளில் உலகம் முழுவதும் முதல் நாள் வராது என்ற குர்ஆன் வசனத்தை நடைமுறையில் உணர்த்தும் முகமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்துள்ளார்கள் என்பதையே காட்டுகிறது.

வரட்டுக் கேள்வி – 8, 9, 10

8-எவர் அடைகிறாரோ என்ற சொல் ஒரு நாளின் 24 மணி நேரத்துக்குள் அடைவதைக் குறிக்குமா? அல்லது 2,3 நாட்களில் அடைவதைக் குறிக்குமா?

9-உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் ஜும்மா தொழுகையை வெள்ளிக் கிழமை 24 மணி நேரத்துக்குள் தொழுகிறார்களா? அல்லது வியாழன் வெள்ளி என 48 மணி நேரத்துக்குள் தொழுகிறார்களா? வியாழன் வெள்ளி சனி என 72 மணி நேரத்துக்குள் தொழுகிறார்களா?

10-சூரியக் கணக்கின்படி 1 தேதி 1 நாள் என்பது 24 மணி நேரம். திங்கள் செவ்வாய் போன்ற கிழமை 24 மணி நேரம் என்பது உலகறிந்த உண்மை. இதே போல் சந்திரக் கணக்குப்படி தலைப்பிறையான முதல் நாள் 24 மணி நேரத்துக்குள் வர வேண்டுமா? அல்லது இன்றைய முஸ்லிம்கள் கடிப்பிடிப்பது போல் துல்லியக் கணக்கீட்டின் படி (கணிப்பின்படி அல்ல) ஒரு சாராருக்கு ஒரு நாள் தலைப்பிறை, மற்றொரு சாராருக்கு சர்வதேசப் பிறை என்ற அடிப்படிய்ல் இரண்டா, நாள் தலைப்பிறை பிரிதொரு சாராருக்கு தத்தம் பகுதி பிறை என்ற அடிப்படியில் மூன்றாம் நாள் தலைப்பிறை என 24 மணி நேரம் கொண்ட தலைப்பிறை 2 நாள் 48 மணி நேரம்  மூன்று நாள் 72 மணி நேரம் என வருவது பகுத்தறிவு ஏற்கும் செயலா? பகுத்தறிவற்றவர்களின் பிதற்றலா?

நமது பதில் – 8, 9, 10

8 , 9 , 10 : ஒரு நாள் என்பது 24 மணி நேரமா 48 மணி நேரமா என்று கேட்கின்றனர். ஒரு நாள் 24 மணி நேரம் தான். பிறை அடிப்படையில் இஸ்லாமிய நாட்களை முடிவு செய்யும் பொழுது ஒரு சாராருக்கு மாதத்தின் முதல் நாள் ஒரு தினத்திலும், இன்னொரு சாராருக்கு இரண்டாம் தினத்திலும் துவங்குவதை வைத்து, மாதத்தின் முதல் நாளே இரண்டு நாட்களாகி விட்டதைப் போன்று கேட்கின்றனர்.

ஒவ்வொரு சாராருக்கும் நாள் என்பது 24 மணி நேரம் தான் ஆகிறது. யாருடைய நாளும் 48 மணி நேரம் கொண்டதாக ஆகவில்லை.. கேள்வி கேட்பவர்கள் விளங்காமல் கேள்வி எழுப்புகின்றனர் என்றால் அதைப் படிப்பவர்களும் எதையும் விளங்க மாட்டார்கள் என்று எண்ணுவது வடி கட்டிய முட்டாள்தனமே தவிர வேறில்லை.

மாதம் எந்த தினத்தில் துவங்குகிறது என்பதில் இரு நாள் வேறுபாடு வருவதால் மாதத்தின் முதல் நாளே இரண்டு நாள் ஆகி விட்டதாக அர்த்தம் இல்லை.

நாளின் துவக்கம் வேறுபடுவதால் யாருக்கும் 48 மணி நேரம் கொண்ட நாள் அல்லது 72 மணி நேரம் கொண்ட நாள் வரவே வராது. இல்லாத ஒன்றை இருப்பது போல் சித்தரித்து தங்களின் மடமையை தாங்களே அம்பலமாக்கிக் கொள்கின்றனர்.

ஒருவர் காலை என்று சொல்லும் நேரத்தை பூமியில் அவருக்கு நேர்கீழே உள்ளவர் மாலை என்று சொல்வார். காலையை எப்படி மாலை என்று சொல்லலாம். இதோ சூரியன் உதிப்பதை நான் பார்க்கும் போது நீ எப்படி மாலை என்று சொல்லலாம் என்று கேட்க முடியாது. ஏனெனில் நாம் உதிப்பதைப் பார்க்கும் அதே நேரத்தில் சூரியன் மறைவதை இன்னொரு பகுதியினர் பார்த்து விட்டுத் தான் மாலை என்கின்றனர்.

ஒரு பொருளை அடையக் கூடியதில்  கால வித்தியாசம் இருக்கிறது என்பதால், அந்தப் பொருளே இரண்டாகி விடாது. மக்ரிபை அடைவதில் நமக்கும் சவுதிக்கும் இடையே இரண்டரை மணி நேர வித்தியாசம் இருக்கிறது. இதை வைத்து , இரண்டு மக்ரிப் என்று யாரும் சொல்ல மாட்டோம். மக்ரிபை அடைவதில் இரண்டு நேரங்கள்! என்று தான் எந்த அறிவார்ந்தவரும் புரிவோம். இதை யாரேனும் பிதற்றல் என்று சொன்னால் அவர்கள் தான் பிதற்றுகின்றனர்.

அதே போன்று, மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்றால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியைப் பின்பற்றி புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்ற கொள்கையின் படி, ஒரு பகுதிக்கு புறக்கண்களில் தென்படும் தலைப்பிறையானது உலகின் இன்னொரு பகுதியில் தென்படாது.

தென்பட்டவர்கள் முதல் நாளை அனுபவிப்பார்கள், தென்படாதவர்கள் மறுநாளை முதல் நாள் என கொள்வார்கள்.

எல்லோரும் வெள்ளிக்கிழமை தான் ஜும்மா தொழுகிறோம். யாரும் வியாழக்கிழமையோ, சனிக்கிழமையோ ஜும்மா தொழுவதில்லை என்பதும் உண்மை தான். ஆனால் ஒருவர் வெள்ளிக் கிழமை என்று சொல்வது இன்னொருவருக்கு வியாழக்கிழமையாக இருக்குமா இருக்காதா? இது தான் கேள்வி.

உதாரணமாக தேதிக் கோட்டுக்கு (டேட்லைன்) இந்தப் பக்கம் இருப்பவர்கள் பகல் ஒரு மணியானதும் ஜும்மா தொழுவார்கள். ஆனால் தேதிக் கோட்டுக்கு அந்தப் பக்கம் உள்ளவர்கள் அதை வியாழக் கிழமையாகக் கருதுவதால் அவர்கள் அந்த நேரத்தில் ஜும்மா தொழ மாட்டார்கள். மறு நாள் அதாவது இந்தப் பக்கம் உள்ளவர்கள் சனிக்கிழமைக்குச் சென்ற பின் அவர்கள் வெள்ளிக்கிழமையை அடைந்து ஜும்மா தொழுகிறார்கள். அதாவது ஒரே நேரம் – பகல் ஒரு மணி- அருகருகே உள்ள இரண்டு இடங்களுக்கு வெள்ளிக்கிழமையாகவும் வியாழக்கிழமையாகவும் இருக்கிறதே? இது பிதற்றலா? ஒரே நாள் எப்படி வெள்ளிக்கிழமையாகவும், வியாழக்கிழமையாகவும் இருக்கும் என்று கேட்பது தான் பகுத்தறிவா?

இதை விட முக்கியமான ஒரு விஷயம் இவர்களின் மேற்கண்ட கேள்விகள் மூலம் தெளிவாகின்றது. அதாவது இவர்கள் குர்ஆன் ஹதீஸ் கூறுவதை நம்ப மாட்டார்கள் மாறாக இவர்களின் குறைமதிக்கு ஏற்ப அமைந்தால் தான் ஏற்றுக் கொள்வார்கள் என்பது தான் அந்த விஷயம்.

ஒருவனுக்கு காற்றுப் பிரிந்து விட்டால் உளூ செய்ய வேண்டும் என மார்க்கம் சொல்கிறது. பின் துவாரத்தில் காற்றுப் பிரிவதற்கும் கைகால்களைக் கழுவுவதற்கும் என்ன சம்மந்தம்? என்று இவர்கள் கேட்டாலும் கேட்பார்கள். பகுத்தறிவு ஏற்கும் செயலா? பகுத்தறிவற்றவர்களின் பிதற்றலா என்று கேட்டாலும் கேட்பார்கள்.

தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும் செய்ய வேண்டும் என்று மார்க்கம் சொல்கிறது. மண்ணைத் தடவிக் கொண்டால் தூய்மையாகுமா? அழுக்காகுமா எனக் கூறி இதையும் மறுத்தாலும் மறுப்பார்கள் போலும். பகுத்தறிவு ஏற்கும் செயலா? பகுத்தறிவற்றவர்களின் பிதற்றலா என்று கேட்டாலும் கேட்பார்கள்.

வரட்டுக் கேள்வி 11,12,13

11-பிறையைப் பார்த்து மாதத்தை முடிவு செய்யுங்கள் என்று அன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது துல்லிய கணிணி கணக்கீடு அன்று இல்லாத காரணத்தால். அன்று முஸ்லிம்களிடையே எழுந்த இம்மாதம் 29 ல் முடிகிறது என்று ஒரு சாராரும், இல்லை 30 ல் முடிகிறது என்று பிரிதொரு சாராரும் சச்சரவிட்டுப் பிளவுபட்டதை முடிவுக்குக் கொண்டு வந்து சமுதாய ஒற்றுமை (29:92, 23:52) காக்கவா அல்லது பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதை மார்க்கமாக்கி அப்படிக் கூறினார்களா?

12- அன்று நபிகள் நாயகம் (ஸல்) பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதை மார்க்கமாக்கி அப்படிக் கூறினார்கள் என்றால் மனிதனின் கண்கள் சந்திரனில் பட்டால் தான் அது தனது சுற்றுப்பாதையில் செல்லும். மனிதக் கண் அதில் படாதவரை சந்திரன் அப்படியே நிற்கும்; சந்திரனின் ரிமோட் கண்ட்ரோல் மனிதக் கண்கள் என்று கூறியதாகப் பொருள்படுகிறதே? நபி (ஸல்) பிறையைப் புறக்கண்ணால் பார்த்தலை மார்க்கமாக்கி இருக்க முடியுமா?

13- அப்படி  என்றால் சூரியன் சந்திரன் மற்றும் இதர கோள்கள் அனைத்தும் அதனதன் சுற்றுப் பாதைகளில் ஒரு நொடி கூட முன்பின் ஆகாமல் பல கோடி வருடங்கள் சீராக சுழன்று வருகின்றன என அல்குர்ஆனின்  2:189, 6:96,  7:54,  9:36,37,  10:5,  13:2,  14:33,  16:12,  17:12, 21:33, 25:61, 29:61, 31:29, 35:13, 36:40,  39:5, 55:5  போன்ற எண்ணற்ற கட்டளைகளை  நபி (ஸல்) நிராகரித்து விட்டு (நவூது பில்லாஹ்) சந்திரன் மனிதனின் கண்களில் பட்டால் தான் சுழலும். பார்வையில் படும் வரை பிரை ஒன்றிலேயே சுழலாமல் நிற்கும் என்ற மூடத்தனமான் ஒரு கட்டளையைப் பிறப்பித்திருக்க முடியுமா?

நமது பதில் 11, 12, 13

பிறையைப் பார்த்து மாதத்தை முடிவு செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவே இல்லை என்று உளறி வந்த இவர்கள் இப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறையைப் பார்க்கச் சொன்னார்கள் என்று கூறி அந்தர் பல்டி அடித்து விட்டனர். அந்தக் காலத்தை கவனத்தில் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களாம்!

மார்க்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தோடு முழுமை பெற்று விட்டது. அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட மார்க்கத்தின் எந்தச் சட்டமும் பிற்காலத்தில் மாற்றப்படாது என்ற அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இல்லை.

பயணிகள் ஜம்மு கஸர் செய்ய சலுகை மார்க்கத்தில் உள்ளது. அந்தக் காலத்தில் பயணம் என்பது மிகவும் சிரமமானதாகவும், அதிக நேரத்தை விழுங்கக் கூடியதாகவும் இருந்ததால் இந்தச் சலுகை அளிக்கப்பட்டது. இன்று விமானப் பயணம் மிக எளிதாகவும் எவ்விதக் களைப்பும் சிரமமும் அற்றதாகவும் ஆகி விட்டதால் இப்போது ஜம்மு கஸர் கூடாது என்று இந்த மேதாவிகள் கூறுவார்களா?

பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்று நபிகள் நாயகம் கூறியது எதற்காக தெரியுமா என்ற அற்புதமான விளக்கத்தையும் இவர்கள் கொடுக்கின்றனர். அதாவது 29ஆ 30ஆ என்று கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது அதை நீக்குவதற்காகத் தான் பிறை பார்க்கச் சொல்லி அனைவரையும் ஒரு கருத்துக்குக் கொண்டு வந்தார்களாம்!

இவர்கள் சொல்வதில் கடுகளவாவது லாஜிக் இருக்கிறதா? மதீனாவில் மட்டும் இஸ்லாம் இருந்தால் இவர்கள் கூறுவது போன்ற நிலை ஏற்படலாம். உலகின் பல பகுதி மக்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்தனர். அப்போது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறை பார்த்து நோன்பு நோற்கச் சொன்னார்கள். இதனால் ஏற்படும் விளைவு என்ன? மதீனாவில் பிறை பார்க்கும் நாளில் மற்ற பகுதிகளில் வாழ்பவர்கள் பிறை பார்க்க முடியாது. வெவ்வேறு நாட்களில் தான் பிறை பார்க்க முடியும். இதனால் வெவ்வேறு நாட்களில் தான் பெருநாள் ஏற்படும் என்ற சாதாரண அறிவு கூட இவர்களுக்கு இல்லை.

சம்மந்தமில்லாத வசனங்களைப் பொருத்தமில்லாமல் இணைத்து வாதம் செய்வதில் இவர்களை மிஞச ஆள் இல்லை. 21:92 வசனத்தில் அல்லாஹ் நம்மை நோக்கி "நீங்கள் ஒரே சமுதாயம்", என்கிறான். ஆகவே நாம் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டுமாம்!

ஒரே சமுதாயம் என்று பெருநாள் கொண்டாடுவதற்கா அல்லாஹ் சொல்கிறான்? இறைவனை வணங்குவதைக் குறித்து விளக்குவதற்காகச் சொல்லும் வசனம் அது. அதை பெருநாளோடு தொடர்பு படுத்தி தங்களைச் சிந்தனையற்றவர்கள் என்று தாங்களே நிரூபித்துக் கொண்டுள்ளார்கள்..

ஒரு வாதத்திற்கு, நாம் ஒரே சமுதாயம் என்று அல்லாஹ் சொல்லி விட்டதால் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்றால், நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் அவர்கள் எத்தனை சமுதாயம்? 22 சமுதாயமா? அவர்களுக்கு மேற்கூறப்பட்ட வசனம் பொருந்தாதா? அவர்கள் காலத்தில் ஏன் ஒரே நாளில் அனைவரும் பெருநாள் கொண்டாடவில்லை?

அடிப்படையற்று வாதம் வைத்தால் இவ்வாறு தான் உளறலான வாதமாக சென்று சேரும்!

அடுத்து இவர்கள் வைக்கும் இன்னொரு வாதம், சந்திரனின் இயக்கம் மிக துல்லியமாக இருக்கும் பட்சத்தில், நம் கண்களில் பட்டால் தான் மாதம் துவங்கும், இல்லையெனில் துவங்காது என்று சொல்வது சந்திரனின் துல்லியத்தில் சந்தேகம் கொள்வது போல் உள்ளதே? என்று கேட்கின்றனர்.

பிறை தெரிந்தால் மாதம் பிறக்கிறது, என்று முடிவு செய்வதற்கும், பிறை தெரிந்தால் தான் பிறை துல்லியமாக இயங்குகிறது என்று கூறுவதற்கும் வேறுபாடு உள்ளது.

பிறை தென்பட்டாலும் தென்படாவிட்டாலும், பிறையின் ஓட்டத்தில் யாரும் சந்தேகம் கொள்வதில்லை. பிறை தென்படாவிட்டால், துல்லியமாக ஓடிக் கொண்டிருக்கும் பிறையை நம் கண்களுக்கு அல்லாஹ் காட்டித் தரவில்லை, அவ்வளவு தான்!

நம் கண்களுக்கு அல்லாஹ் காட்டித் தரவில்லை என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் அல்லாஹ்வின் தூதர் வழி சொல்லித் தருகிறார்கள்.

முதல் பிறையை நீங்கள் பார்ப்பது வரை முந்தைய மாதத்தை அல்லாஹ் நீட்டித் தருகிறான் என்ற நபிமொழி இதற்கு பொருத்தமான வழியாக இருக்கிறது.

கேள்வியையும் முன்வைத்து, அதற்குரிய வழியையும் அல்லாஹ்வே சொல்லி தந்து விட்ட பிறகு, இவர்கள் அதிலிருந்து கேள்வி எழுப்புவது நம்மிடமா அல்லது அல்லாஹ்விடமா?

வரட்டுக் கேள்வி 14

அல்குர்ஆன் 3:13ல்  காணப்படுவது  போல்  எதிரிகள்  தம்  புறக்கண்ணால்  பார்த்தார்கள் (ரஃயல் ஐன்)  என்றிருப்பது  போல்  பிறையைப்  புறக்கண்ணால்  பார்க்க  வேண்டும்  என்று ஒரேயொரு  ஹதீஸும் நேரடியாகக்  கூறாத  நிலையில் பிறையைப்  புறக்கண்ணால் பார்த்தே  மாதத்தை  ஆரம்பிக்க  வேண்டும்  என்று  பிடிவாதம்  பிடிக்கும்  நீங்கள் அல்குர்ஆன்  22:27ல்  ஹஜ்ஜுக்கு  நடந்தும்  தொலைவிலிருந்து மெலிந்த  ஒட்டகங்களிலும் வருவார்கள்  என  அல்லாஹ் நேரடியாகச்  சொல்லி  இருந்தும் அல்லாஹ்வின் இக்கட்டளையைப்  புறக்கணித்து  விட்டு  இன்று  ஹஜ்ஜுக்கு  விமானத்தில்  செல்வதை எந்த  அடிப்படையில்  சரி  காண்கிறீர்கள்?

நமது பதில் 14

புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று ஒரு ஹதீஸ் கூட கூறவில்லை என்பது எந்த அளவுக்கு அபத்தமானது என்பதை முதலாவது கேள்விக்கான பதிலில் நாம் தெளிவுபடுத்தி விட்டோம். அதுவே இந்த உளறலுக்கும் உள்ள பதிலாகும். மேலும் அந்தக் காலத்தில் சொன்னது இந்தக் காலத்துக்குப் பொருந்தாது என்ற ஷைத்தானின் சிந்தனை இவர்களின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து போய் விட்டதால் ஹஜ்ஜுக்கு ஒட்டகத்தில் வருவார்கள் என்று அல்லாஹ் சொல்லி இருப்பதை உதாரணமாகக் காட்டி தங்கள் மடமைக்கு சாட்சி சொல்கிறார்கள்.

மேற்கண்ட வாதத்தை அறிவார்ந்த கேள்வி என்று நினைத்து  முன் வைக்கிறார்கள். அதாவது,  அல்குர்ஆன்  22:27ல் அல்லாஹ் ஹஜ்ஜுக்கு  ஒட்டகத்தில் வருவார்கள் என்று சொல்வதால் நீங்களும்  இன்று ஒட்டகத்தில்  செல்ல வேண்டியது  தானே? ஏன் விமானத்தில்  செல்கிறீர்கள்?  என்று கேட்கிறார்கள்.

குர்ஆன்  குறித்த  ஞானம் இல்லாத  காரணத்தாலும்,  நுனிப்புல்  மேய்வதாலும்  ஏற்படும் பாதிப்பு தான் இது போன்ற கேள்விகள்..

அந்த  வசனத்தையும்,  அது  அல்லாத  இன்ன பிற  இறை வசனங்களையும், தெரிந்து கொண்டு  வாதம்  செய்தால்  இது  போன்ற  கிறுக்குத்தனங்கள்  கேள்வியாக  எழுந்திருக்காது.

கியாம நாள்  வரை  ஒட்டகத்தில்  ஹஜ்ஜுக்கு  வருவார்கள் என்று  கூறப்பட்டிருந்தால் தான் இவர்களின்  கேள்வியில்  நியாயமிருக்கும். ஆனால்  இந்த  வசனம் இவர்கள்  கற்பனை  செய்து  கூறும்  அர்த்தத்தைத் தரவில்லை. இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்ட உன்னிடம் என்ற  சொல்லை  இவர்கள்  இருட்டடிப்புச் செய்து விட்டு குழப்பப்  பார்க்கின்றனர்.

இந்த வசனத்தில், "உம்மிடம்"  வருவார்கள் என்று  அல்லாஹ்,  இப்ராஹீம்  நபியை நோக்கிச் சொல்கிறான்.

இப்ராஹீம்  நபியை  நோக்கி  உம்மிடம்  ஒட்டகத்தில்  வருவார்கள்  என்று  சொன்னால் உலகம்  அழியும்  வரை  அனைவரும்  ஒட்டகத்தில்  செல்ல வேண்டும் என்ற கருத்து எப்படி வரும்?

இவ்வாறு  கிறுக்குத்தனங்கள் எழும் என்பதால் தான், "அது  அந்தக்  காலத்திற்கு  மட்டும் உரியது, மற்ற  காலங்களில் அவரவர் வசதிக்கேற்ப பயணம் செய்யலாம்  என்பதை வலியுறுத்தும்  பொருட்டு,  "உம்மிடம்",  வருவார்கள்  என்று  சேர்த்துச் சொல்கிறான் அல்லாஹ்.

இன்று  நாம்  ஒட்டகத்தில்  செல்ல வேண்டும்  என்றால்  இன்றும்  இப்ராஹீம்  நபி  மக்காவில் இருக்க  வேண்டும்.  அப்போது  தான்  இவர்களது  வாதம்  செல்லுபடியாகும்.

இன்னும்  சொல்வதாக  இருந்தால்,  வருவார்கள்,  என்பதற்கும்  வர வேண்டும் என்பதற்கும்  உள்ள வேறுபாட்டைப்  புரிந்தாலும்  இவ்வாறான  கேள்விகள் எழுந்திருக்காது.

ஒரு  பெண்  தனியாக  ஒட்டகத்தில்  ஹஜ்ஜுக்காக  பயணம்  செய்வாள்  என்ற ஹதீஸை  வைத்து,  எந்தப் பெண்ணும்  ஹஜ்  செல்வதாக  இருந்தால்  ஒட்டகத்தில்  தான் பயணம்  செய்ய  வேண்டும்  என்று  யாரும் வாதம்  செய்ய  மாட்டோம் . அல்லது, தனியாகத் தான் பயணம்  செய்ய வேண்டும் என்றும் கூற மாட்டோம். தனியாக பயணம் செய்வதோ, ஒட்டகத்தில் பயணம் செய்வதோ அனுமதி தானேதவிர, கட்டாயமல்ல என்றே புரிந்து கொள்வோம்.  இதே   போன்று எளிதாகப் புரிகிற ஒன்றை  தங்கள்  அபார(?) அறிவின்  மூலம்  எவ்வாறு குழப்புகிறார்கள் என்பதற்கு  இந்த கேள்வியே  சான்றாகும்!

எனவே  இப்ராஹீம்  நபியிடம்  அல்லாஹ்  சொன்னது  ஒரு  முன்னறிவிப்பாகும். . யாருமே குடியிருக்காத வனாந்தரத்தில்  கஅபாவைக்  கட்டியதாக  நினைத்து  நீ கவலைப்படாதே! காபாவைக்  கட்டிய பின்  உலகின்  பல  பாகங்களில் இருந்தும்  மக்கள்  ஒட்டகங்களில் உம்மிடம்  வருவார்கள்.  இதை  நீயே  காணப்போகிறாய் என்று  அல்லாஹ் சொன்னான். உம்மிடம் என்ற  சொல்லுக்குள் இந்த  அர்த்தம் அடங்கியுள்ளதை உணரும் அளவுக்கு இவர்களின்  அறிவு  வேலை  செய்யவில்லை.

வரட்டுக் கேள்வி 15

நபி (ஸல்)  அவர்கள்  ஒரு மாதம்  தங்கள்  மனைவிமார்களிடம்  செல்வதில்லை  எனக் கூறிவிட்டு  அந்த மாதம்  29லேயே  பிறயைப்  பார்க்காமலேயே  மாதம்  முடிந்து  விட்டது என்பதை  ஜிப்ரீல்  (அலை)  அவர்கள்  வந்து  சொன்னதன்  பேரில்  முடித்துக் கொண்டார்களே பிறை பார்த்து மாதத்தை முடிவு செய்ய வேண்டும்  என்று சொன்ன நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள்  தமது  சொல்லுக்கே   முரணாக  நடந்தார்கள் என்று சொல்கிறீர்களா?  ஜிப்ரீல் சொன்னதன்  பேரில்  அறிந்து  கொண்டார்கள்.  இங்கு  பிறை பார்க்க வேண்டிய  அவசியம் இல்லை என்பது  உங்கள்  பதில்  என்றால்  அதே  போல் கோள்கள்  சம்மந்தப்பட்ட நிரூபிக்கப்பட்ட  விஞ்ஞான  உண்மைகள்  அல்லாஹ்வின் செயல்கள்  என்ற  அடிப்படையில்  கணிணி கணக்கீட்டின் படி  (கணிப்புப்படி அல்ல)  மாதம் பிறப்பதை  துல்லியமாக  அறிந்த  பின்பும்  பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிப்பது சரியா?

நமது பதில் 15

ஒரே  கேள்வி என்றாலும் வேறு வேறு வார்த்தைகளில் கேட்பதன் மூலம் பல கேள்விகளைக்  கேட்ட தோற்றத்தை  ஏற்படுத்தலாம்   என்று  எண்ணுவது  இவர்களின் தகுதியைக் காட்டுகிறது.

நிரூபிக்கப்பட்ட  விஞ்ஞானம், மாதம்  பிறந்து விட்டது  என்பதைத்  தெளிவாகச்  சொன்ன பிறகும்  கூட, புறக்கண்ணால் பார்த்துத் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்வது ஏன் என்றால்,  புறக்கண்ணால்  பார்க்க வேண்டும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்  என்பதால் தான்.

என்றைக்கும்  இருக்கும்  விஞ்ஞானத்தை,  அது  நிரூபிக்கப்பட்டு  விட்டது என்பதற்காக மட்டும்  பின்பற்ற  வேண்டும்  என்று  சொல்வதாக  இருந்தால்,  நிரூபிக்கப்படாத காலத்திலும்  விஞ்ஞானம்  என்பதும்,  பிறை என்பதும்,  அதன் துல்லியமான ஓட்டம் என்பதும் இருந்து தான் வந்துள்ளது!

அந்தக் கால கட்டத்தில்  எந்த வழியைச்  செய்வது சரி?  நிரூபிக்கப்பட்டு  விட்டதால்  இன்று நீங்கள்  செய்வது  தான் சரி  என்றால்,  நிரூபிக்கப்படாத  காலத்தில் செய்தவைகள் குறித்த உங்கள் நிலை என்ன?

சரி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்  காலத்தில், அந்தக்  காலத்துக்கு  ஏற்ப நிரூபிக்கப்பட்ட  விஞ்ஞானம்  இருந்து  வந்ததே!  பயணம்  செய்து  வந்து  பிறை தகவலைச் சொல்வது  அன்றைய  காலத்தில்  உள்ள  நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் தானே!

ஒரு  நபரை  மற்றொரு  இடத்திற்கு  அனுப்பி  பிறை  தகவல்  சேகரிப்பதும்  அன்று  இருந்த நிரூபிக்கப்பட்ட  விஞ்ஞானம் தானே!

உலகில்  ஒரு  பகுதியில் பிறை பார்த்த  தகவலை இன்னொரு பகுதிக்கு  எடுத்துச்  செல்லும் விஞ்ஞானத்தைப்  பெற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதை முழுமையாக ஏன் பயன்படுத்தவில்லை என்ற  நமது  கேள்விக்கு இவர்கள் பதில்  சொல்லாத வரை, இன்றைய  நிரூபிக்கப்பட்ட  விஞ்ஞானத்தைப்  பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை.

இந்த  இடத்தில்  குர்ஆன்  கூறும்  விஞ்ஞானத்தை  நாம்  மறுக்கிறோமா  என்ற கேள்வி எழலாம்.

குர்ஆன்  ஒன்றைக்  கூறினால்  அதை  எந்த  முஸ்லிமும்  மறுக்கக்  கூடாது. ஆனால்,  பிறை குறித்தும் விஞ்ஞானம்  குறித்தும்  குர்ஆன்  கூறுவது  என்ன  என்பதைச்  சிந்தித்தால் உண்மை  விளங்கி  விடும். இறைவனின்  வல்லமையையும்,  ஆற்றலையும்  பறை சாற்றுவதற்காக,  சூரியன் குறித்தும்  சந்திரன் குறித்தும், அதன் துல்லியமான  அமைப்பைக்  குறித்தும்  அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான். அதன் மூலம்  சூரியனும்,  சந்திரனும் காலம் காட்டுகின்றன என்றும் சொல்கிறான்.

இதை நாம் எந்த நிலையிலும்  மறுக்கவில்லை.  சூரியனும்,  சந்திரனும்  காலம்  காட்டுகின்றன  என்பதை  மறுக்கவே இயலாது.

ஆனால், விஷயம் என்னவென்றால், விஞ்ஞானத்தின் படி  முன்கூட்டியே  கணித்து  முடிவு  செய்வதால் மட்டும் தான் காலம் காட்டுமா? புறக்கண்ணால் ஒவ்வொரு மாதமும் பார்த்து  முடிவு  செய்வதால்  காலம் காட்டாதா? காலம் காட்டுவதற்காக அல்லாஹ் படைத்த சந்திரன் 14 நூற்றாண்டுகளாக வழ்ந்த மக்களுக்கு காலம் காட்டவில்லையா? விஞ்ஞானம் வளர்ந்த பின்னர் தான் காலம் காட்டுகிறதா?

நாம்  செய்து  வரும்  வழியை  தொடர்ந்து  செய்து  வந்தாலும்  பிறை  நமக்கு  காலம் காட்டத் தான் செய்யும்.

பிறையைப் பார்த்து  அது  இரண்டாம்  பிறையாக  இருக்குமோ,  மூன்றாம்  பிறையாக இருக்குமோ  என்றெல்லாம்  சந்தேகம்  கொண்ட  சஹாபாக்களிடம்  இப்னு அப்பாஸ் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்)  அவர்களின்  ஹதீஸை  எடுத்துச் சொல்கிறார்கள்.

"நீங்கள்  எப்போது  பார்க்கிறீர்களோ,  அப்போது தான்  உங்களுக்கு  முதல் பிறை.  ஏதேனும் காரணங்களால்  முதல் பிறை (நிரூபிக்கப்பட்ட  விஞ்ஞானத்தின்  படி உள்ள  முதல் பிறை) உங்களுக்குத்  தென்படாமல்  போனாலும்,  உங்கள்  கண்களுக்குத்  தென்படும்  நாள் வரை, முந்தைய  மாதத்தை  அல்லாஹ்வே  நீட்டித்  தந்து விட்டான்!""

அதாவது,  நிரூபிக்கப்பட்ட  விஞ்ஞானத்தின்  படி  பிறை  வானில்  இருந்தால்  கூட,  அது நம் கண்களுக்குத் தெரிய வேண்டும், அதனடிப்படையில் மாதத்தை நாம் முடிவு செய்ய வேண்டும்  என்றே அல்லாஹ் விரும்புகிறான்.

அதற்குரிய  முயற்சியில்  நாம் இறங்க  வேண்டும்..  ஒரு வேளை பிறை  (மேகமூட்டம் காரணமாக) தெரியாமல்   இருந்தால்,  மாதம்  பிறக்கவில்லை, முந்தைய  மாதமே நீடிக்கிறது  என்று முடிவு  செய்து கொள்ளலாம்.

ஆக,  எந்த  நிலையிலும்  நம்  புறக்கண்ணால்  பார்க்காமல்  மாதத்தை  முடிவு  செய்து கொள்வதை  அல்லாஹ்  விரும்பவில்லை  என்பதை  இந்த ஹதீஸ்  தெளிவாகஉணர்த்துகிறது.

-P.JAINUL ABIDEEN 

short url https://rb.gy/404w9

பிறை பற்றிய தவறான வாதங்களுக்கான பதில்கள்

இஸ்லாத்தில் எந்த ஒரு விடயத்தை செய்வதானாலும் அது குரான், ஹதீஸ் அடிப்படையில் அமைத்திருக்க வேண்டும். இல்லாவிடில் அச்செயல் மார்க்க அங்கீகாரம் பெறாது. அதற்கு எவ்வித நன்மையையும் அல்லாஹ்விடத்தில் இல்லை, மாறாக தண்டனையும் உண்டு. 

ஒரு பிரதேசத்தில் காணப்பட்ட பிறை அப்பிரதேசத்தை மட்டும் தான் கட்டுப்படுத்தும் என்று ஒரு சாராரும், இல்லை ஒரு பிரதேசத்தில் காணப்பட்ட பிறை அது முழு உலகையும் கட்டுப்படுத்தும் என்று சாராரும் வாதிடுகின்றனர்.

இதில் எதை  குரான், ஹதீஸ் சொல்கிறது என்று ஆதாரங்களின் அடிப்படையில் பார்ப்போம். 

"உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்"

(அல்குரான்-2:185)

பிறை சம்பந்தமான முக்கியமான சான்றாக இந்த வசனம் அமைந்து உள்ளது. 

திருக்குர்ஆன் ஏகஇறைவனின் வார்த்தை என்பதை நாம் அறிவோம். மனித வார்த்தைகளில் காணப்படும் தவறுகள் இறைவனின் வார்த்தைகளில் இருக்காது, இருக்கவும் முடியாது. தேவையில்லாத ஒரு சொல் கூட அதில் இடம் பெறாது. இதை மனதில் பதியவைத்துகொண்டு இவ்வசனத்துக்கான விளக்கத்தை பார்ப்போம்.

உங்களில் யார் ரமளான் மாதத்தை அடைகிறாரோ அவர் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை என்ற சொற்றொடரில் உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகம் இல்லாமலே ரமளானில் நோன்பு நோற்பது கடமை என்ற கருத்து கிடைத்து விடும் 

எனவே இதன் மூலன் அல்லாஹ் சொல்கிறான், ஒரே நேரத்தில் எல்லோரும் ரமலானை அடைய மாட்டார்கள், 

குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்பவர்களும் குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கும் போது தான் யார் குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளவில்லையோ (திருக்குர்ஆன் 2.196) என்று கூற முடியும். 

உலகிலுள்ள அனைவரும் இரே நேரத்தில் ரமலானை அடையமாட்டார்கள் என்பதற்கு இந்த ஒரு வசனமே போதுமான சான்றாக அமைகின்றது.

இதற்கு  மாற்று கருத்திலுள்ளவர்களின் வாதம்:-

ஒரு  பகுதியினர் ரமலானை அடைவார்கள் அதன் பின் அவர்களின் தகவளைக்கேட்டு மற்ற பிரதேசங்களில் உள்ளவர்கள் அடைந்து கொள்வார்கள். 

இது ஏற்புடைய வாதம் கிடையாது.  தனது கருத்தை நிலை நாட்டச்சொள்ளும் சாட்டு போக்கே ஆகும்.

பின்வரும் ஹதீஸும் ஒரு பகுதியில் காணப்படும் பிறை அப்பகுதியை மாத்திரம் தான் கட்டுப்படுத்தும் என்பதை தெளிவாகச்சொல்கிறது.

"உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் என்னை அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமளானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?'' என்று (என்னிடம்) கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்'' என்று கூறினேன். நீயே பிறையைப் பார்த்தாயா?'' என்று கேட்டார்கள். ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்'' என்று கூறினேன். அதற்கவர்கள் ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்'' என்றார்கள். முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?'' என்று கேட்டேன். அதற்கவர்கள், போதாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்'' என்று விடையளித்தார்கள்.(முஸ்லிம்-1819)

இந்த ஹதீஸுக்கு எதிர்கருத்தில் உள்ளவர்களின் விளக்கம்:-

/// இப்னு அப்பாஸ் அவர்கள் அபூ குறைபின் சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை ஏனெனின் இப்னு அப்பாஸுக்கு பிறை பார்த்ததாக இருவர் சாட்சி சொன்னால் ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீஸ் தெரிந்திருக்க வில்லை என்றும் ரசூல் (ஸல்) அவர்கள் சொன்ன மேலும் சில விடயங்கள் தெரியாமல் இருந்திருக்கிறாரே! என்றும் சொல்லி பின்வரும் ஹதீஸ்கலை எடுத்துக்காட்டுகிறார்கள்.

உதாரணமாக வாடகை திருமணம் ரசூல் (ஸல்) அவர்கள் முதலில் அனுமதித்து விட்டு பின்பு தடை செய்தார்கள். அந்த தடை செய்த விடயம் இப்னு அப்பாஸுக்கு தெரிந்திருக்கவில்லை. அதேபோல் இஃராம் கட்டிய நிலையில் பெண்களை திருமணம் முடிக்க கூடாது என்று நபியவர்கள் சொல்லியிருந்தார்கள். இந்த ஹதீஸும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

எனவே மாற்றுக்கருத்தில் உள்ளவர்களின் வாதம் இதே போல் இப்னு அப்பாஸுக்கு ரசூல் (ஸல்) சொல்லிய இருவரின் சாட்சியத்தை ஏற்க வேண்டும் என்ற ஹதீஸும் தெரிந்திருக்கவில்லை /// என்ற கருத்தை முன்வைத்து இந்த ஹதீஸின் விளக்கத்தை மறுக்கிறார்கள்.

இந்த வாதம் ஏற்புடையதல்ல ஏனெனில் இப்னு அப்பாஸுக்கு நபியவர்கள் சொல்லி தெரியாமல் இருந்த ஹதீஸ்களை அதே காலத்தில் வாழ்ந்த சஹாபாக்கள், ரசூல் (ஸல்) அவர்களால்  சொல்லிவிட்டு பின் மாற்றப்பட்ட ஹதீஸ்களை சுட்டிக்காட்டி  அதில் இப்னு அப்பாஸுக்கு 2-3 விடயங்களில்   மாற்றப்பட்ட மார்க்கச்சட்டம்

தெரிந்திருக்கவில்லை என்று சொல்லிவிட்டு போனார்கள்.

மாற்றுக்கருத்தில் உள்ளவர்களிடம் உங்களது வாதத்தை நிலை நாட்ட இவ்வாறான ஒரு ஆதாரத்தை தாருங்கள் என்று கேட்டதற்கு அதற்கு ஆதாரம் ஏதும் இல்லாமல் ஏதாவது ஒரு பதிலை சொல்ல வேண்டுமே என்ற நிர்ப்பந்தத்தில் அறுநூறுகளுக்கு  முன் வாழ்ந்த இப்னு தைமியா சொல்லியுள்ளதாக சொல்கிறார்கள். இது அர்த்தமற்ற ஆதாரமாகும், அவர்களால்  சமகாலத்தில் வாழ்ந்த சஹாபாக்கள் சொன்னதாக எந்த ஒரு ஆதாரத்தையும்  தரமுடியவில்லை.

 வேறு பகுதியில் காணப்பட்ட பிறையை நபியவர்கள் ஏற்கவில்லை என்பதை பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது.

“மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்”.(அஹ்மத்- 19670)

இந்த வாகனக்கூட்டம் பக்கத்துக்கு ஊரிலிருந்துதான்  வந்திருக்க முடியும்.

மிகத் தொலைவிலிருந்து வந்திருக்க முடியாது ஏனெனில் நேற்று பிறை பார்த்துவிட்டு  இன்று காலை பயணத்தை ஒட்டகத்தில் தொடங்கியிருந்தாலும் அதே நாள் மாலை வந்து சேர்ந்துள்ளனர்.  

பகலின் இருதிப்பகுதியான மஃரிபுக்கு சிறிது நேரத்துக்கு முன் வந்துள்ளனர் என்பதும் வந்தவர்களை மாத்திரம் சிறிது நேரம்தான்  நோன்பு திறப்பதற்கு இருந்தும் வந்தவர்களுக்கு நோன்பை விடச்சொன்னதுடன் அவர்களை காலை பெருநாள் தொழவும் நபியவர்கள் சொன்னார்கள்.

மேலுள்ள ஹதீஸின் அடிப்படையில் புரியக்கூடிய தெளிவான விடயங்களில் ஒன்று தூர இருந்து வந்த பிறைத்தகவலை ஏற்கக்கூடாது. நபியவர்கள் ஏற்கவில்லை. இந்த ஹதீஸில் வரக்கூடிய தூரத்தை அண்ணளவாக  எங்களுக்கு விளங்கிக்கொள்ளலாம். முந்தின தினம் பிறை பார்த்து விட்டு ரசூல் (ஸல்) இருக்கும் இடத்துக்கு மாலை நேரம் வந்தார்கள் என்றால் ஒரு நாளைக்கு குறைவான நேரத்தில் 60-70 கிலோமீட்டர் தூரம் தான் ஒட்டகத்தில் அதிகபட்சம் பிரயாணித்து வந்திருக்கலாம். அந்த பிறை தகவலையே நபியவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்வாறிருக்க சிலர் பல்லாயிரம் மையில்கள் தூரத்திலுள்ள சவூதி கண்ட பிறையை அடிப்படையாக வைத்து தமது நோன்பு, பெருநாட்களை தீர்மானிக்கின்றனர். இதட்கு மார்க்கத்தில் கடுகளவும் ஆதாரம் இல்லாத விடயமாகும். இதன் மூலம் குரானும், ஹதீஸும் சொல்லக்கூடிய பல சட்டங்களை, கட்டளைகளை இவர்கள் மீறுகின்றனர்.

நோன்பு மற்றும் பெருநாட்கள் இஸ்லாத்தில் மிக முக்கியமான தருணங்களாகும். இதை இஸ்லாம் சொல்லியபடி செயட்படுத்தாவிட்டால் அதட்கான கூலியை நாம் இழந்து விடுவோம்.

 

மேலும் தாம் வசிக்கும் நாட்டை விட்டு வெளிநாட்டு பிறைக்கு செல்லும் போது உள்ள மிகப்பெரிய மார்க்க முரண் என்னவென்றால் பிறைத்தகவல் கிடைத்ததும் நோன்பை விட வேண்டும் என்பதை உள்நாட்டு, வெளிநாட்டு பிறைகளை பின்பற்றக்கூடிய அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயம் அதில் அவர்கள் உண்மையாளராக இருந்தால் தாம் வாழும் நாட்டுக்கு சவூதி பிறை தகவல் வந்ததும் நோன்பை திறக்க வேண்டும். எவ்வாறு அவர்கள் செய்வதும் இல்லை. இதற்காண பதிலும் இல்லை.

பொதுவாகவே ஒரு நாட்டுக்குள் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் மஹ்ரிபுடைய நேர வித்தியாசம் இருந்தால் பிரச்சினையாக இருக்காது. ஏனெனில் பிறை தென்படக்கூடிய நேரம் மக்ரிப் அதானுக்கு பின் வரக்கூடிய 15 நிமிடத்துக்கும் 30 நிமிடத்துக்கும் இடைப்பட்ட தாக்கும். எனவே 30 -35 நிமிடம் வரை உள்ள நேர வேறுபாடுள்ளவர்களுக்கு பிரதகவல் கிடைத்ததும் நோன்பை திறக்க வேண்டும் என்ற சட்டம் பொருந்திப்போகிறது.

மேலும் சில வெளிநாடுகளில் குடிபெயர்ந்தவர்களின் வாதம் நாம் உயிரில் இருக்கும் போது உள்ளூர் பிறை தான் என்பதாகும். நீங்கள் உங்கள் சொந்த ஊரில் இருந்தால் தான் உள்ளூர் பிறையை பின்பற்றவேண்டும் என்று இஸ்லாம் சொல்லவில்லை. மாறாக நாம் எந்தெந்த நாட்டில் இருந்தாலும் அந்தந்த நாட்டு பிறையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறது.

மாற்றுக்கருத்தில் உள்ளவர்களின் வாதம்:-

இந்த ஹதீஸில் ரசூல் (ஸல்) அவர்கள் வெளியில் இருந்து வந்த  தகவலை ஏற்றிருக்கிறார்கள். எனவே உலகில் யாராவது பிறை கண்டதாக சொன்னால் அதை ஏற்க வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.

அதற்கு அவர்கள் மேலுள்ள ஹதீஸில் இருந்து பின்வரும் ஆதாரங்களை காட்டுகின்றனர்.

ஆதாரம்-1 

ஷுஃபாவிடம் இருந்து சுஃபியான் அறிவிக்கிறார் ரசூல் (ஸல்) அவர்கள் மக்களுக்கு கட்டளை இட்டார்கள் நோன்பை விடுமாறு.

ஆதாரம்-2 

முஹம்மத் பின் இஸ்மாயில் அஸ்ஸானியிடம் இருந்து அபூபக்கர் நைஸாபூரி அறிவிக்கிறார் ரசூல் (ஸல்) அவர்கள் மக்களுக்கு கட்டளை இட்டார்கள் நோன்பை விடுமாறு.

ஆதாரம்-3

ஹுஷைமிடம் இருந்து அப்துர் ரஸ்ஸாக் அறிவிக்கிறார் ரசூல் (ஸல்) அவர்கள் மக்களுக்கு கட்டளை இட்டார்கள் நோன்பை விடுமாறு.

இந்த மூன்று ஆதாரங்களையும் எடுத்துக்காட்டி பார்த்தீர்களா ரசூல் (ஸல்) அவர்கள் வெளியில் இருந்து வந்த தகவலை ஏற்றுள்ளனர். ஆகவே பிறை பார்த்ததாக எங்கிருந்து தகவல் வந்தாலும் ஏற்கலாம் என்கின்றனர். 

நமது பதில்:-

ஆதாரம்-1 

அவர்களின் முதலாவது ஆதாராமாக எடுத்துக்காட்டும் ஹதீஸானது, ஷுஃபாவிடம் இருந்து ஒன்பது மாணவர்கள் இதை அறிவிக்கிறார்கள். அதில் எட்டுப்பேர் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள் என்றும் சுஃபியான் என்ற ஒருவர் மாத்திரம் மக்களுக்கு கட்டளையிட்டார்கள் என்று சொல்கிறார். ஹதீஸ்கலை அறிஞர்களின் ஏகோபித்த கருத்து  குறிப்பிட்ட ஒரு மார்க்கச்சட்ட   ஹதீஸ்கள்   இரு மாறுபட்ட கருத்துக்களை தரும் போது  அதில் அதிகமாணவர்கள் அறிவிக்கும் கருத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்  என்பதாகும். ஏனெனில் ஒருவரைவிட எட்டுப்பேர் தவறிழைக்க வாய்ப்புக்கள் மிகக்குறைவு என்பதனால் ஆகும். இவ்வாறான ஹதீஸ்களை 'ஷாத்' நிலை (அரிது) என்று சொல்லி ஹதீஸ்கலை அறிஞர்கள் ஏற்பதில்லை.

ஆதாரம்-2

அவர்களின் இரண்டாவது ஆதாராமாக எடுத்துக்காட்டும் ஹதீஸானது, அபூபக்கர் நைஸாபூரி என்பவர் தாரகுத்னி என்ற ஹதீஸ் கிரந்தத்தில் மட்டும் நான்கு வெவ்வேறுபட்டவர்களிடம் இருந்து அறிவிக்கும் ஹதீஸ்கள் பதிவாகியுள்ளது. 

இதில் முஹம்மத் பின் இஸ்மாயில்

வழியாக அறிவிக்கப்படும் போது மட்டுமே மக்களுக்கு என்று அறிவிக்கிறார். மற்றைய மூன்று அறிவிப்பாளர்களிடம் இருந்து அறிவிக்கும் போது அவர்களுக்கு என்று அறிவிக்கிறார். எனவே ஒரு செய்தியை பலரிடமிருந்து அறிவிக்கப்படும் போது ஒருவரிடமிருந்து மாத்திரம் மாற்றமாக வந்தால் அச்செய்தியும் பலகீனமானதாகும். இன்னுமொரு பலகீனமும் இருக்கிறது மக்களுக்கு என்று அறிவிக்கும் ஆசிரியரான முஹம்மத் பின் இஸ்மாயில் என்பவர் யாரென்றே அறியப்படாதவர். எனவே இந்த ஹதீஸையும் ஏற்கமுடியாது. 

ஆதாரம்-3

மூன்றாவதாக முன்வைக்கிறார்கள் ஹுஷைமிடம் இருந்து அப்துர் ரஸ்ஸாக் அறிவிக்கிறார் மக்களுக்கு கட்டளையிட்டார்கள் என்று. இந்த ஹதீஸும் 'ஷாத்' நிலையாகும். ஏனெனில் ஹுஷைம் என்பவரிடம் இருந்து ஐந்து  பேர் அறிவிக்கிறார்கள் அதில் ஒருவராகிய அப்துர் ரஸ்ஸாக் மாத்திரமே மக்களுக்கு என்று அறிவிக்கிறார். ஆகவே இன்டெர் நஷனல் பிறையை ஆதரிப்பவர்களுக்கு இந்த ஹதீஸிலும் எவ்வித ஆதாரமும் இல்லை.

எனவே பலகீனமான அறிவிப்புக்களை வைத்துக்கொண்டு மக்களுக்கு கட்டளை இட்டார்கள் என்று வாதிடுவது அர்த்தமற்றதாகும்.

சர்வதேச பிறையை பின்பற்றுபவர்களின் மற்றும் ஒரு கேள்வி வாகனக்கூட்டத்தினர் பிறையை பார்த்துவிட்டு ஏன் நோன்பை நோற்ற நிலையில் நபியவர்களிடம் வந்தார்கள்?

நமது பதில்- சஹாபாக்கள்  மாதம் என்பது முட்பது நாளாகும் என்றே அறிந்து வைத்திருந்தனர். எனவே அவர்கள் பிறையை பார்த்த பின்பும் நோன்பு நோற்ற நிலையிலேயே வந்தாந்தார்கள். 

மாதம் என்றாலே முட்பது நாள் தான் என்று நாம் சும்மா சொல்லவில்லை இதற்கு ஆதாரமாக நிறைய ஹதீஸ்கள் இருக்கின்றன. 

பின்வரும் ஹதீஸும் இதை விளக்குகின்றது.

"உம்மு ஸலமா (ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் 'ஒரு மாதம் தம் மனைவியருடன் சேர்வதில்லை' என்று சத்தியம் செய்திருந்தார்கள். இருபத்தி ஒன்பது நாள்கள் முடிந்தும் (இல்லம்) திரும்பினார்கள். அவர்களிடம் 'நீங்கள் ஒருமாதம் (வீட்டிற்கு) வரமாட்டீர்கள் என்று சத்தியம் செய்திருந்தீர்களே! என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் அமையும்!" என்றார்கள்"  (புகாரி-1910)

எனவே இதை நாங்கள் அவர்களுக்கான பதிலாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். 

அப்படியானால் எங்கிருந்து வந்த பிறையை ரசூல் (ஸல்) அவர்கள் ஏற்றார்கள்.பின்வரும் ஹதீஸ் இதை உறுதி செய்கிறது. 

“ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும், பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் மக்களுக்குக் கட்டளையிட்டனர்”. (அபூதாவூத்-)

மேற்கண்ட பிறை தகவலை ரசூலுல்லாஹ்  ஏற்றுக்கொண்டார்கள். ஏனெனில் கிராமம் என்பது ஒவ்வொரு ஊரை சூழ்ந்துள்ள மற்றும் ஒரு ஊரைச் சார்ந்துள்ள பகுதியாகும்.

உலகப்பிரையை ஆதரிப்பவர்களின் வாதம். கிராமம் என்று சொல்வது மதீனாவை சுற்றியுள்ள சிறிய பகுதிகளை அல்ல. மக்காவிலும் இந்திந்த பெயரில்  கிராமங்கள் இருக்கின்றனவே! அவைகளில் ஒன்றைத்தான் இந்த ஹதீஸ் குறிக்கின்றது என்று சொல்கிறார்கள்.

நமது கருத்து என்னவென்றால் மதீனாவில் அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களில் மதீனாவை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராமங்களைத்தவிர மற்றைய கிராமங்களை பெயர் குரிப்பிட்டே வந்துள்ளது. 

உதாரணத்துக்கு கண்டியை நமது ஊர் என்றால் அதை சுற்றியுள்ள பகுதிகளை மொட்டையாக கிராமம் என்போம்.

அதே நேரம் யாழ்பானத்துக்கு, அல்லது திருகோணமலைக்கு அருகே உள்ள கிராமங்களை யாழ்பாணத்தின் பேரைச்சொல்லி அல்லது அந்தந்த பிரதேசத்தின் பேரைச்சொல்லி தான் கிராமமென்போம். 

நமக்கு ஏதாவது வீட்டு வேலைக்கு ஆள் தேவையானால் நாம் கேட்போம் நமது  தோட்டத்தை துப்புரவு செய்ய ஊருக்குள் இருந்து இருவரை தேடித்தாருங்கள் என்றால் நீங்கள் சொல்வீர்கலா ஊர் என்று சொல்லிவிட்டார்கள் இது கண்டி கிடையாது. கொழும்பு அல்லது புத்தளம் என்கின்ற ஊராகத்தான் இருக்க வேண்டும் என்பீர்களா?  

மேலும் ரசூல் (ஸல்) மதீனாவில் ஆட்சி செய்யும் போது இறங்கிய குரான் வசங்களும்  இதற்கு ஏற்ப தான் கூறுகின்றது. 

"கிராமவாசிகளில் போருக்குச் செல்லாது இருக்க தங்களுக்கு அனுமதி வேண்டி காரணம் கூறுவோர் உம்மிடம் வந்தனர். அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் பொய் கூறியோர் போருக்குச் செல்லாது தங்கிக் கொண்டனர்" (அல்குரான்-9:90)

ரசூல் (ஸல்) காலத்தில் யுத்தங்கள் திடீர் திடீர் என்று தான் நடந்துள்ளது. அவ்வாறு நடக்கும் போது மதீனாவையும்

அதைச்சுரியுள்ளவர்களுக்கும் தான் பங்குகொள்ள அதிகதிகம் சந்தர்ப்பம் இருந்துள்ளமையாலே அல்லாஹ் இப்படி குறிப்பிடுகிறான்.

மேலும் வேறு ஒரு இடத்தில் அல்லாஹ் சொல்கிரான்.

"உங்களைச் சுற்றியுள்ள கிராமவாசிகளிலும், மதீனாவாசிகளிலும் நயவஞ்சகர்கள் உள்ளனர்". (அல்குரான்-9:101)

எனவே 'இரண்டு கிராமவாசிகள்' என்று சொல்லும் ஹதீஸில் ரசூல் (ஸல்) வாழ்ந்த மதீனாவை சுற்றியுள்ள பகுதியைத்தான் குறிகின்றது என்பது மேலும் உறுதியாகிறது. 

பிறை தென்பட்டட்டதும் நோன்பை   விட வேண்டுமா?

நாம் ஏற்கனே சொன்னது போல் சூரியன் நேரத்தையும், சந்திரன் காலத்தையும் காட்டக்கூடியது. இவை நாம் இருக்கும் பிரதேசத்துக்கு மேல், நமக்கு வரும் போது தான் அது நமக்கு நேரத்தையும், காலத்தையும் காட்டும்.  இதற்கு மாற்றமான கருத்தில் உள்ளவர்கள் சொல்கிறார்கள் இல்லை ஒரு நாட்டில் பிறை தென்பட்டால் அது முழு உலகிற்கும் தான் என்கிறார்கள்.

இது மார்க்கம் சொல்லாத நடைமுறைக்கு சாத்தியம் அற்ற விடயம். ஏனெனில் இவர்கள் எவ்வித ஆராய்ச்சியும் முறையாக செய்யாமலே  சர்வதேச  பிறையை பின்பற்றுகின்றனர். 

மேலும் வேடிக்கை என்னவென்றால் சர்வதேச பிறையை நாங்கள் பின்பருகிறோம் 

என்று சொல்பவர்கள் அதிலாவது உண்மையாளர்களாக இருக்கிறார்களா! அதுவும் இல்லை. இவர்கள் வெறும் பேச்சுக்கு தான் சர்வதேச பிறை என்கிறார்கள் ஆனால் உண்மையில் இவர்கள் பின்பற்றுவது சவூதி பிறையை மாத்திரமே. சவூதிக்கு முன் எத்தனையோ தடவைகள் மொரோக்கோ,  சேர்பியா போன்ற நாடுகள் பிரைகண்டும் அதை எப்போதாவது ஏற்றதுண்டா?

மேலும் சவூதிக்கும் இலங்கைக்கும் மூன்று மணி நேரம் மட்டுமே வித்தியாசம் இருப்பதால் இவர்கள் உண்மையான பிரச்சினையை உணர்வதில்லை.

உலகப்பிறை ஆதரவாதிகளிடம் நாம் கேட்கிறோம். போன மாதம் சவூதியை பாத்து தான் நீங்கள் இஸ்லாமிய மாதத்தை துவங்கினீர்கலா? மற்ற மாதங்களில் உள்ள மார்க்க கிரியைகளை சவூதி பிரையின் அடிப்படையில் தான் செய்கிறீர்களா? 

அதை தவறாமல் நீங்கள் செய்தாலும் சவூதி வருடத்துக்கு நான்கு மாதங்கள் தானே பிறையை முறையாக பார்க்கிறார்கள். மீதியுள்ள மாதங்களை 20-25 வருடங்களுக்கு கணக்கிடும் விதமாக முன்னரே தயாரித்து வைத்துள்ள 'உம்முல் குரா' கலேண்டரை தானே பின்பற்றுகிறார்கள். எனவே தவறிலே தவறு செய்யும் நிலைமை இதில் உள்ளது.

 உலக நாடுகளுக்கிடையிலான நேர வேறுபாடுகள்.

பிறை கண்ட தகவலை கேள்வியுற்றதும் நோன்பை விடவேண்டும். சர்வதேச பிறையைநியாயப்படுத்துவோர் அவர்கள் சொல்லும் வாகனக்கூட்ட ஹதீஸின் படி உண்மையாளர்களாக இருந்தால் பிறைத்தகவலை கேள்வியுற்றதும் நோன்பை விட வேண்டும். 

Kiritimati என்று ஒரு நாடு உள்ளது. அதே போல் Alofi  என்று ஒரு நாடும் உள்ளது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நேர வித்தியாசம் 25 மணி நேரமாகும். 

https://24timezones.com/difference/alofi/kiritimati

 உதாரணத்துக்கு Kiritimati  என்ற நாட்டு மக்கள் 29 நோன்பை முடித்துக்கொண்டு  மாலை 6.30க்கு பிறை காண்கிறார்கள் என்று

வைத்துக்கொள்வோம். அப்பொழுது Alofiயில்  உள்ளவர்கள் 28 நோன்பை  பிடித்த நிலையில்  மாலை 5.30 மணியில் இருப்பார்கள். முதல் நிலை பிறைத்தகவலை கேட்டதும்  Alofi மக்கள் நோன்பை விட வேண்டும். அப்படி விட்டால், Alofi மக்கள் பிடித்த நோன்பின் எண்ணிக்கை 27 ஆகும்.

"ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் மாதம் என்பது 29 அல்லது 30 ஆகும்"

(புஹாரி-1913)

பிறை தகவல் கேட்டதும் 5.30க்கு நோன்பை விடாமல் எப்படியோ பூரணப்படுத்தினார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படி இருந்தும் Alofi மக்கள் 28 நோன்பை பூரணப்படுத்திய நிலையில் அடுத்தநாள் காலை பெருநாள் திடலுக்கு செல்ல வேண்டும். அதையும் செய்ய முடியாது. எனவே இதுக்கும் மார்க்கத்தில் அனுமதி இல்லை.   இப்படி ஏதும் இல்லாவிட்டால்  உதாரணாக இன்றைக்கு திங்கட்கிழமை கேள்வியுற்ற பிறைத்தகவலுக்கு நாளை மறுநாள் புதன் கிழமை பெருநாள்  கொண்டாடச்சொல்கிரார்களா? 

ரசூல் (ஸல்) அவர்கள் குழப்பமான நிலையில் விட்டுசென்றார்களா? நிச்சயமாக இல்லை. எப்படி நபியவர்கள் சொன்னார்கள்.

 "அல்லாஹ்வின் மீது ஆணை! வெள்ளை வெளேர் என்ற பாதையில் நான் உங்களை விட்டுச் செல்கிறேன். அதில் இரவும் பகலும் சமமானதாக இருக்கும்'' (இப்னுமாஜா-5)

ஆகவே நாம் மேல் கேட்டவைகளுக்கும் இவர்களிடத்தில் ஆரோக்கியமான பதில் இல்லை. 

சர்வதேச பிறை ஆதரவாளர்களின் பகலில் இருந்து நோன்பை துவங்கும் சட்டம்.

நாம் கேட்கிறோம் ரமலான் பிறை கண்டதும் நோன்பை துவங்க வேண்டும் என்று மார்க்கம் சொல்கிறதே! உதாரணதுக்கு 

Baker Island என்னும் நாட்டில் பிறை பார்த்து விட்டார்கள் மாலை 7.30 மணிக்கு அந்த  நேரம் இலங்கையில் காலை 11.30ஆக இருக்கும் இப்பொழுது இலங்கையில் உள்ளவர்கள் எப்படி நோன்பை துவங்குவார்கள். என்று நாம் கேட்கிறோம்.  இதற்கு இவர்கள் சொல்வது நடை முறைக்கும் உலக அமைப்புக்கும் சாத்திய மற்ற வாதமாகும்.

சர்வதேச பிறையை பின்பற்றுபவர்களின் பதில்- ரமலான் கடமையாவதற்கு முன் ஆஷுரா நோன்பு தான் கடமையான நோன்பாக இருந்ததையும், அந்த நோன்பின் முதல் நாள் ரசூல் (ஸல்) அவர்கள் காலை நேரத்தில் தமது தோழர்களை அனுப்பி மக்களை எழுப்பி அதிலிருத்து நோன்பை துவங்க சொன்னதையும் சான்றாக காட்டுகின்றனர். 

நமது பதில் என்னவென்றால்...

ஆஷுரா நோன்பு ரமழான் கடமையாவதற்கு முன் இருந்திருந்தாலும், அதற்கு ரமலானை போன்ற சட்ட திட்டங்கள் இருந்திருக்கவில்லை. மேலும் ஆஷுரா நோன்பு அறிவிக்கப்பட்டதும் முதல் நாள் விதிவிளக்காக காலை வேளையில் 

நோன்பு பிடிக்க நபியவர்கள் அனுமதித்தார்கள். சுன்னத்தான நோன்புகளைக்கூட ரசூல் (ஸல்) அவர்கள் பஜ்ர் தொழுதுவிட்டு வருவார்கள், வீட்டினுல் நுழைந்ததும் சாப்பிட ஏதாவது உள்ளதா என்று கேட்கப்படும், இல்லை என்று பதில் வந்ததும் நான் நோன்பாளியாக இருந்து கொள்கிறேன் என்று சொல்வதாக ஹதீஸ் வந்துள்ளது.

 ஆனால் ரமழான் நோன்பு இவற்றுக்கு மாற்றனான முறையான சட்ட திட்டங்களைக்கொண்டது.

 மேலும் இவர்கள் சொல்கிறார்கள்.

பிரைச்செய்தி பிற்பகல் 3 மணிக்கு கேள்வியுற்றால் அதிலிருந்தும் நோன்பை துவங்கலாம் என்றும் கூறுகின்றனர். எவ்வளவு அர்த்தமற்ற வாதங்கள். 

கடமையான நோன்பை எப்பொழுது துவங்க வேண்டும், எப்பொழுது முடிக்க வேண்டும் என்று ரசூல் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வும் அழகிய முறையில் வழிகாட்டியுள்ளார்கள்.

"நோன்பு பிடிக்கும் முடிவை யார் இரவிலேயே எடுக்கவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" (நசாயீ)

நோன்பின் நேரத்தைப்பற்றி அல்லாஹ் சொல்லும் போது,

"வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்"(அல்குரான்-2:187)

எனவே சர்வதேச பிறையை ஆதரிப்பவர்களின், ஒரு நாளில் எந்த நேரத்திலும் நோன்பை துவங்கலாம் என்ற வாதமும் அர்த்தமற்றதாகி விடுகின்றது. 

சர்வதேச பிறையை இவர்கள் ஏன் நியாயப்படுத்துகிறார்கள்?

இவ்வளவு தெளிவான அல்குரான் வசனங்களும், ஹதீஸ்களும், விஞ்ஞான காரணிகளும் ஒவ்வொரு பகுதி மக்களும்  தத்தமது பிறை பார்க்க வேண்டும் என்று தெளிவாக சொல்லியும் சர்வதேச பிறைதான் சரி என்று வாதிடுவதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.

பின்வரும் ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீஸை தப்பாக விளங்கியதே இதற்கு காரணமாகும்

 "பிறை பார்த்து நோன்பு பிடியுங்கள். பிறை பார்த்து நோன்பை விடுங்கள். 

உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முட்பதாக பூர்த்தி செய்யுங்கள். பிறை பற்றி இருவர் சாட்சி சொன்னால் ஏற்றுக்கொள்ளுங்கள்!(சுனனுல் குப்ரா-2437)

இந்த ஹதீஸில் வரும் வாசகமாகிய இருவர் சாட்சி சொன்னால் ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதை உலகில் எங்கிருந்து சொன்னாலும் ஏற்க வேண்டும் என்று புரிந்த ஒரே காரணம் தான் இவர்களின் சர்வதேச பிறையின் பின்னணி. 

மார்க்கத்தில் ஒரு சட்டத்தை புரிவதாயின் அது சம்பந்தப்பட்ட எல்லா அல்குரான், சஹீஹ் ஹதீஸ்கலை எடுத்து ஆராய்ந்து தான் முடிவெடுக்கவேண்டும். மேலும் இந்த ஹதீஸ் அல்குரானின் கருத்துக்கும், மற்ற ஹதீஸ்களுக்கும் முரணாக அமைந்திருக்கிறதா அதுவும் இல்லை. இந்த ஹதீஸின் இறுதிப்பகுதியில்  இருந்து அதிக பட்சம் என்ன விளங்கலாம் என்றால், பிறையை பார்த்ததாக குறைந்த பட்சம் இருவராவது சாட்சி சொல்ல வேண்டும். அனைவரும் பார்த்து உறுதிப்படுத்த வேண்டியதில்லை. என்பவற்றைத்தான் புரிய முடியும்.

உலகில் எங்கு பிறை பார்த்தாலும் அந்த சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வது இந்த ஹதீஸ் சொல்லாத, மற்ற ஆதாரங்களுக்கு முரணான கருத்தாகும்.

ஒரு  வாதத்திற்கு நாம்  மேற்கண்ட  ஆதாரங்களில் ஒவ்வொரு பிரதேசத்தினரும் அப்பகுதியின் பிறையை அவரவர்கள் தான்  பார்க்க வேண்டும் என்று சொல்லாமல் இருந்திருந்தாலும். சர்வதேச பிறைக்காக  அவர்கள் காட்டும் இந்த ஹதீஸ் அர்த்தம் தராது. ஏனெனில் இந்த ஹதீஸில் என்ன சொல்லப்படுகிறது என்றால் 'இருவர் சாட்சி சொன்னால்' ஏற்றுக்கொள்ளுங்கள்"  

உதாரணத்துக்கு சவூதியில் உள்ளவர்கள் பிறை பார்த்தல் சவூதியில் உள்ள பிரைக்குழு (Authority)  விடம் தான் தாம் பிறை பார்த்ததாக சாட்சி சொல்வார்கள். 

அந்த சாட்சியத்தை ஏற்று சவூதி அரசாங்கம் மக்களுக்கு அறிவிக்கும். சவூதியில் பிறை பார்ப்பவர்கள் இவர்களிடம் தான் சாட்சி சொல்கிறார்களா?

எனவே சர்வதேச பிறையை பின்பற்றுபவர்கள் சவூதி அரசு தமது மக்கலுக்குச்சொல்லும் தகவலை தாமும்  எடுத்து  ஹதீஸ் படி  தான் செயல் படுத்துகிறோம் என்று வாதிடுகின்றனர். 

ஹதீஸின் தெளிவான வாசகமும், இவர்களின் வாதப்படியும் 'சாட்சி சொன்னால்' என்று தான் அமைந்திருக்கிறது. தகவல் சொன்னால் என்று கிடையாது.

ஆகவே இவர்கள் பலமானது எனக்கருதும் இந்த ஹதீஸும் இவர்கள் சொல்லும் கருத்தைச்சொல்லவில்லை.

மேலும் இந்த ஹதீஸின் அடிப்படையில் இவர்கள் முன் வைக்கும் அடுத்தவாதம்,

///சவூதியில் ஒருவர் மரணித்தால் அதைக்கேட்டு அவருடைய மனைவி இத்தா இருக்கிறார். இதை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் ஏன் பிறையை மாத்திரம் ஏற்கக்கூடாது என்கிறீர்கள் இது நியாயமா//// என்று நம்மைப்பார்த்து கேட்கின்றனர்.

நாம் ஏற்கனவே சொன்னது தான் இதற்கும் பதில். சவூதியில் ஒருவர் மரணித்துவிட்டால் இலங்கையிலுள்ள அவரது வீட்டிற்கு மரணித்ததாக தகவல் தான் சொல்வார்கள், சாட்சி அல்ல. என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். 

சர்வதேச பிறையை சார்ந்தவர்களின் என்னொரு வாதம். பிறையை ஒவ்வொரு நாட்டுக்குமாக பிரிக்கிண்றீர்களே ரசூல் (ஸல்) அவர்கள் தான் இந்திந்த அளவில், நாடுகளின்  எல்லைகள் இவ்வளவாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு போனார்களா? என்று கேட்கின்றனர். இதே மாதிரியான கேள்வியை நமக்கும் கேட்கலாம்.

ரசூல் (ஸல்) அவர்கள் சுருக்கித்தொலும் சட்டம் நிறைவேற இரண்டு  நிபந்தனைகளை முன்வைத்தார்கள். ஒன்று 25Km க்கு மேல் பிரயாணம் செய்ய வேண்டும். இரண்டு ஊரை விட்டு வெளியே செல்ல வேண்டும். இந்த ஹதீஸுக்கும் இவர்கள் இப்படி தான் கேட்பார்களா?

முஆவியா (ரலி) யின் ஆட்சிக்காலத்தில் சிரியா, ஈராக், மதீனா எல்லாம் ஒரு நாடாகத்தான் இருந்தது. ஒரே நாட்டுக்குள் இருந்து வெவ்வேறு மாநிலத்தில் இருந்து வந்த தகவலை இப்னு அப்பாஸ் அவர்கள் இது ரசூல் ( ஸல்) அவர்களின் வழிமுறை இல்லை என்று பிறைச்செய்தியை ஏற்றுக்கொள்லாததை நாம் மேலே விளக்கினோம். 

 மேலும் ரசூல் (ஸல்) அவர்களின் வாகனக்கூட்ட ஹதீஸில் இருந்து

பெறக்கூடிய  விடயம் என்னவென்றால் இந்தியா போன்ற பெரிய நாடுகளில் உள்ள மாநிலங்களுக்கு ஏற்ப பிறையை பார்த்தாலும் தவறில்லை என்பதாகும். ஏனெனில் வாகனக்கூட்டம் ஒட்டகத்தில்  ஒரு நாள்  பிராயணித்து வெகு தூரம் சென்றிருக்க முடியாதென்பது புலப்படுகின்றது. 

மேலும் ஒரு நாட்டிற்குள் உள்ள மாநிலங்களுக்கிடையே கூட தொழுகை நேர வேறுபாடுகள் 20 முதல் 40  நிமிட  நேர வேறுபாடுகள் காணப்படுகின்றன. 

எனவே பிறையானது   அதிகபட்சமாக ஒரு நாட்டை தான் கட்டுப்படுத்தும். 

இதை ஒட்டி சர்வதேச பிறையை  பின்பற்றுபவர்கள்  கேட்கின்றனர். ///இந்தியாவில் பிறை காணப்பட்டு நோன்பை, பெருநாளை நாளை துவங்க இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த பிறையை இந்தியா எல்லையிலுள்ள பாகிஸ்தான் குடிமகனும் காணுகிறார் ஆனால் பாகிஸ்தானில் பிறை காணாததனால்  பாகிஸ்தான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்கிறது. இப்பொழுது எல்லையில் இருந்தவருக்கு என்ன சொல்லப்போகிறீர்கள்? அதே போல் பாகிஸ்தானில் வசிப்பவர் கடலில் மீன் பிடிக்க அடுத்த எல்லைக்கு  சென்ற போது தலைப்பிறையை காண்கிறார். இவர்களுக்கு என்ன சொல்லபோகிறீர்கள்/// என்றும் கேட்கின்றனர்.

ரசூல் (ஸல்) அவர்களின் வழி முறையில் பிறை சம்பந்தப்பட்ட அனைத்தையும் கடைபிடித்த பின் இறுதியாக உள்ள வழிமுறை நமது பிறை எல்லையை தீர்மாணிப்பதாகும். இதை நமது கையில் தந்துவிட்டார்கள். பின்வரும் ஹதீஸ் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் உள்ளவர்கள் கூட அரசியல், பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, மாணியங்கள் பெற்றுக்கொள்ளுதல் போன்ற காரணங்களினால் எந்த பிரதேசத்தை, எந்த பிரதேசத்தின் பிறையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது.

 “நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்''என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.(திர்மிதீ-631)

மேலும் சிலர் தான் ஏற்று இருக்கிற சவூதி பிறைக்கு எவ்வித மார்க்க ஆதாரமும் இல்லை என்னும் பட்சத்தில் மேற் கண்ட ஹதீஸை தமக்கு ஆதாரமாக கூறிவருகின்றனர். 

இந்த ஹதீஸைப்பற்றி மேலே நாம் விளக்கி இருக்கிறோம். இருந்தும் இன்னோம் ஓரிரு விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

முதலில் பிறை சம்பந்தமாக குரான், ஹதீஸ் கட்டளையிட்டுள்ள 12 -13 ஹதீஸ்களுக்கு முரணில்லாமல் இதை விளங்க வேண்டும்.

தமக்கு வசதியான தினத்தில் மக்களுக்கு முடிவு செய்ய முடியுமா? இவர்களின் புரிதலின் அடிப்படையில் மக்கள் எல்லோரும் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை பெருநாளை எடுக்கலாமா? அன்றைக்கு 99 சதவீதமானவர்கள் மற்றும் பாடசாலைகள் கூட விடுமுறையாக இருக்கிறது. எனவே இதுவும் அர்த்தமற்ற வாதமாகும்.

எனவே ஆதாரங்களின் அடிப்படையில் சர்வதேச பிறை தவறு என்பதை நிரூபித்தோம்.

அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பகுதி  மக்கள், அல்லது தத்தமது நாட்டைச்சேர்ந்தவர்கள் தான் தங்களது பிறையை பார்த்து மாதத்தை முடிக்க, துவங்க வேண்டும் என்பதையும் நாம் தெளிவாகவே விளக்கியுள்ளோம்!

"தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள்! அவர்களுக்கே கடும் வேதனை உண்டு"(அல்குரான்-3:105)

நன்றி :இல்ஹாம் தாஸிம்  SLMFC  (UK)

---------------------------------------------------

பிறையை வைத்து எல்லை நிர்ணயம் செய்ய ஆதாரம் என்ன ? video
https://youtu.be/GOV9sjsNJ5Y


உலகம் எப்போது அழியும்?

/// உலகம் ஒரு நாளில் அழிக்கப்படும் என்று 83:5, 69:15 வசனங்களில் கூறப்படுகிறது பிறை 1ல் உலகம் அழிக்கப்படும் என்று வைத்துக் கொண்டால் சவூதி பிறை ஒன்றிலா? அல்லது இந்தியா பிறை ஒன்றிலா? ////


/// உலகம் வெள்ளிக்கிழமை தான் அழிக்கப்படும் என்று ஹதீஸ்களில் உள்ளது. இது ஒரே கிழமையில் தான் நிகழும் எனும் போது உலகம் முழுவதும் ஒரே கிழமை தான் என்பதில் என்ன சந்தேகம்? //// என்றும் கேட்கின்றனர்.

உலகம் முடிவு நாள் வெள்ளிக்கிழமை நடக்கும் என்று ஹதீஸ் உள்ளது. ஆனால் பிறைக் கணக்கில் 1ல் தான் அழிக்கப்படும் என்றோ 2ல்தான் அழிக்கப்படும் என்றோ ஹதீஸ் இல்லை.

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விஞ்ஞானத்தை உரிய முறையில் விளங்கினால் நிச்சயமாக இந்தக் கேள்விகளுக்குப் பதில் கூற முடியும்.

ஒவ்வொரு நாளும் தேதிக் கோட்டை பூமி கடக்கும் அந்த மைக்ரோ வினாடியில் உலகம் முழுவதும் ஒரே கிழமை. தேதியில் இருக்கும் என்பதை முன்னர் கூறியுள்ளோம். அதாவது இந்த நிலையை அடையும் போது தேதிக் கோட்டின் கிழக்குப் புறம் உள்ள பகுதி கிழமையின் துவக்கத்திலும் தேதிக் கோட்டின் மேற்குப்புறம் உள்ள பகுதி அதே கிழமையின் இறுதியிலும் இருக்கும்.

இந்த விநாடியில் மட்டுமே உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமையாக இருக்கும். இது மனிதன் வரைந்த கற்பனையான கோட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை.

அல்லாஹ் பூமியைப் படைத்து நாள் கணக்கைத் துவக்கிய அந்த நேரத்தை அவன் தான் அறிவான். அல்லாஹ் அமைத்த உண்மையான அந்தத் தேதிக் கோட்டின் அடிப்படையில் ஒரு வினாடியில் உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமையாக இருக்கும் போது உலகத்தை அழிப்பது அவனுக்குச் சிரமமான காரியமில்லை.

ஆதம் (அலை) அவர்கள் குறித்த ஹதீஸுக்கும் இதே விளக்கத்தைக் கொடுக்க முடியும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா?

வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த அமாவாசை தினத்தில் சூரிய ஒளி சந்திரன் மீது படாது என்று இவர்கள் நினைக்கிறார்கள். அவ்வாறில்லை. பௌர்ணமி தினத்தில் சூரிய ஒளி சந்திரனில் படுவது போல் தான் அமாவாசையிலும் படுகிறது. சந்திரனில் பிரதிபலிக்கவும் செய்கிறது. ஆனால் அது பூமியின் எதிர்த் திசையில் பிரதிபலிக்கிறது.

பூமியின் பக்கம் உள்ள சந்திரன் இருட்டாக உள்ளது. ஆனால் சந்திரனின் அடுத்த பக்கம் பௌர்ணமியாக உள்ளது. ராக்கெட்டில் மேலே போய் பார்க்கலாம் என்றால் குறிப்பிட்ட இடத்துக்கு ராக்கெட்டில் போனால் அமாவாசை தினத்திலே பௌர்ணமியைக் காணலாம். குறிப்பிட்ட கோணத்தை அடைந்தால் ஏழு அல்லது எட்டாம் பிறை அளவைக் காணலாம்.

அதை வைத்து ஏழாம் நாள் என்று அமாவாசை தினத்தில் முடிவு செய்ய மாட்டோம். பூமிக்கு சந்திரனிலிருந்து ஒளி வருகிறதா என்பதும் அது நம் கண்களுக்குத் தெரிகிறதா என்பதும் நமக்கு தேவை.

ஆகாயத்தில் ஏறிச் சென்றால் சந்திர கிரகணம் ஏற்பட்டிருக்கும் நாளைத் தவிர வேறு எந்த நாளிலும் நாம் விரும்புகிற எந்த அளவிலும் பிறையைக் காண முடியும். எனவே இதை அளவுகோலாக வைத்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளாகக் கூறுவார்கள். மக்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.

ஓர் ஊரில் பிறை பார்க்கப்பட்டால் அந்த நேரத்தில் எந்த நாடுகளெல்லாம் சுப்ஹு நேரத்தைக் கடக்கவில்லையோ அந்த நாடுகளில் அது தலைப்பிறையாகவும் சுபுஹு நேரத்தைக் கடந்துவிட்ட நாடுகளில் மறுநாள் தலைப்பிறையாகவும் முடிவு செய்ய வேண்டும் என்ற கருத்தும் இருந்து வருகின்றது. இந்தக் கருத்தும் மார்க்க அடிப்படையில் எந்த வித ஆதாரமும் இல்லாத ஒரு கருத்தாகும்.

இந்தக் கருத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் ஷாஃபான் மாத இறுதியில் இரவு முழுவதும் கண்விழித்து பிறையை எதிர்பார்க்க வேண்டும். ஏனென்றால் சுபுஹ் வரை எங்கிருந்தாவது பிறை பார்த்த தகவல் வந்து விடலாம். அப்படி தகவல் வந்து விட்டால் அவசர அவசரமாக எதையாவது சாப்பிட்டுவிட்டு அல்லது எதையும் சாப்பிடாமல் நோன்பு வைக்க வேண்டும் என்ற நிலை உருவாகின்றது.

இது ஒரு புறமிருக்க அந்த நேரத்தில் தகவல் கிடைத்தது தெரியாமல் யாரெல்லாம் உறங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களெல்லாம் இறைவனிடம் குற்றவாளிகளா?

சரி! அப்படியாவது உலகம் முழுவதும் ஒரே நாளில் அவர்களால் கொண்டு வர முடியுமா என்றால் அதுவும் சரியில்லை. உலகில் ஏதோ ஒரு பகுதியில் பிறை பார்க்கப்படும் போது திருச்சியில் சுபுஹ் நேரத்தை அடைந்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். திருச்சியில் சுபுஹ் நேர இறுதியில் இருக்கும் போது மணப்பாறையிலோ அல்லது அருகிலுள்ள பகுதியிலோ சுபுஹ் நேரம் அதாவது ஸஹர் இறுதி நேரம் கடந்திருக்கும். இப்போது பக்கத்து பக்கத்து ஊரிலேயே இரண்டு நாட்களில் நோன்பையும் பெருநாளையும் அடைகிறார்களே?

இந்தக் கேள்விகளையும் இதற்கு முன்னர் நாம் எழுப்பியுள்ள கேள்விகளையும் மனதில் வைத்துக் கொண்டு உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்க வேண்டும் என்ற அல்லாஹ்வின் வார்த்தைகளையும் அவரவர் பகுதிகளில் பிறையைப் பார்த்து நோன்பு வைக்க வேண்டும் எனக்கூறும் ஹதீஸ்களையும் சிந்தித்துப் பாருங்கள். சுப்ஹானல்லாஹ் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும்.

முப்பதாம் நாள் இரவில் நாம் பிறை பார்க்க முயற்சிக்க வேண்டும். ஏனெனில் அது முப்பதாம் நாளாக இருப்பதற்குச் சாத்தியம் உள்ளது போல் அடுத்த மாதத்தின் முதல் நாளாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

நமக்குப் பிறை தென்பட்டால் இந்த மாதம் 29 உடன் முடிந்து விட்டது என்றும், மறு மாதம் துவங்கி வட்டது என்றும் கருதிக் கொள்ள வேண்டும்.

நமக்குப் பிறை தெரியாமல் வேறு ஊர்களில் பிறை காணப்பட்ட தகவல் நமக்குக் கிடைக்கிறது. எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறது என்று பார்க்க வேண்டும். அலட்சியப்படுத்தி ஒதுக்கி விடும் அளவுக்குக் குறைந்த நேரம் இரண்டு ஊர்களுக்கும் வித்தியாசம் இருந்தால் அத்தகவலை ஏற்றுக் கொண்டு, அதுவும் நமது பகுதியைச் சேர்ந்தது தான் என்று முடிவு செய்ய வேண்டும்.

ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும், பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் மக்களுக்குக் கட்டளையிட்டனர்.

அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ்  நூல்: அபூதாவூத்

அலட்சியப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமான நிமிடங்கள் அல்லது மணிகள் இரண்டு ஊர்களுக்கும் இடையே வித்தியாசம் இருந்தால் அந்தத் தகவலை அலட்சியம் செய்து விட்டு, அதை முப்பதாம் நாளாக முடிவு செய்ய வேண்டும். மறு நாள் அடுத்த மாதம் பிறந்து விட்டதாக முடிவு செய்ய வேண்டும்.

மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூ உமைர்

நூல்கள்: இப்னுமாஜா, அபூதாவூத்,, நஸயீ, பைஹகீ, தாரகுத்னீ, அல்முன்தகா, இப்னு ஹிப்பான், அஹ்மத்

எத்தனை நிமிடம் அல்லது எத்தனை மைல் வித்தியாசத்தை அலட்சியப்படுத்தலாம்?என்பதற்கு அல்லாஹ்வோ, அவனது தூதரோ எந்த வரையறையும் செய்யவில்லை. அந்த அதிகாரம் நம்மிடம் தான் உள்ளது.

இந்த தாலுகா, இந்த மாவட்டம், இத்தனை மைல், அல்லது இத்தனை நிமிடம் என்று அந்தந்த பகுதியினர் முடிவு செய்து, அந்த தூரத்தைப் பொருட்படுத்தாமல் விட்டு விடலாம்.

நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ

இதற்கான அதிகாரம் அந்தந்த பகுதி மக்களுக்கு அல்லது அந்தந்த ஊர் மக்களுக்கு உள்ளது தானே தவிர எங்கோ இருந்து கொண்டு யாரும் கட்டளை பிறப்பிக்க முடியாது.

இது தான் பிறை பற்றிய தெளிவான முடிவு! மேலே நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்களைச் சிந்தித்தால் இந்த முடிவுக்குத் தான் யாரும் வர முடியும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.


*****************************

அரபா நோன்பு பற்றி சவூதி ஃபத்வா..!

அரபா நோன்பு நாட்டுக்கு நாடு வித்தியசப்படுமா என்று சவூதி அறிஞர் ஸாலிஹ் அல் உதைமீன் அவர்களிடம் கேட்கப்பட்டபோது அவர் அளித்த ஃபத்வா இங்கு பதியபப்டுகிறது.

உதைமீன் அவர்களின் பதில்:

"நாட்டுக்கு நாடு பிறை வித்தியாசப்படுகிறதா இல்லையா?

வித்தியசபப்டுகிறது என்பதுவே சரியானதாகும்.மக்காவில் பிறை கண்ட அடிப்படையில் ஒன்பதாவது தினம் அங்கு அரபா தினம் ஆகும்.மக்காவுக்கு முன்தினம் வேறு நாட்டில் பிறை கண்டிருந்தால் மக்காவில் ஒன்பதாவது நாள் முதல் நாள் பிறை கண்ட நாட்டில் பத்தாவது நாள் ஆகும்.பத்தாவது நாள் நோன்பு பிடிக்க கூடாத நாள் ஆகும்.ஏனென்றால் அது பெருநாள் தினமாகும்.

அதே போன்று மக்காவை விட ஒரு நாள் பிறை தாமதித்து வேறு நாட்டில் காணப்பட்டால் மக்காவில் ஒன்பதாம் நாள் அவர்களுக்கு எட்டாவது நாளாக இருக்கும் அவர்கள் ஒன்பதாவது நாள் நோன்பு நோற்கும்போது மக்காவில் பிறை பத்தாக இருக்கும்.

எனவே எமது கருத்தே சரியான கருத்தாகும்.என்னென்றால் நபி ஸல் அவர்கள் கூறினார்கள் "பிறையை பார்த்து நோன்பு பிடியுங்கள் பிறையை பார்த்து நோன்பை விடுங்கள்"

யார் தமது இடங்களில் பிறை காணவில்லையோ அவர்கள் பிறை கண்டவர்களாக கணிக்கப்படமாட்டார்கள்.

அதே போல் மக்கள் சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் அவரவர்கள் நாட்டுக்கு ஏற்ப கணிப்பதில் ஏகோபித்த கருத்தில் உள்ளனர்.மாதத்தை கணிப்பதும் நேரத்தை கணிப்பது போன்ற ஒன்றுதான்"

அல்லாஹ் மிக அறிந்தவன்.

http://www.almoslim.net/node/136997

தமிழ் மொழிபெயர்ப்பு

Ahamedsha Ahamedsha

https://bit.ly/3Idgws1

***********************
 பிரை தொடர்புடைய மேலும் சில கட்டுரைகளை காண இங்கே கிளிக் செய்யவும் 

Search This Blog