தவ்ஹீத் ஜமாஅத் video's: நூல்கள்
Showing posts with label நூல்கள். Show all posts
Showing posts with label நூல்கள். Show all posts

கப்ரின் மேல் செடி கொடிகளை நடுதல்

கப்ரின் மேல் செடி கொடி
 கப்ரின் மேல் செடி கொடிகளை நடுதல்

அடக்கம் செய்தவுடன் அந்த இடத்தில் ஏதாவது செடி கொடிகளை நட்டு வைக்கும் வழக்கம் தமிழகத்தில் காணப்படுகிறது. பின்வரும் ஹதீஸ்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு தோட்டத்தின் அருகில் கடந்து சென்றனர். அப்போது தமது கப்ருகளில் வேதனை செய்யப்படும் இருவரின் சப்தத்தைக் கேட்டார்கள். ‘இவ்விருவரும் பெரும் பாவங்களுக்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைத்துக் கொள்ளாதவராக இருந்தார்; மற்றொருவர் கோள் சொல்லிக் கொண்டிருந்தார்’ என்று கூறினார்கள். பின்னர் பேரீச்சை மட்டை ஒன்றைக் கொண்டு வரச் செய்து அதை இரண்டாக முறித்து ஒவ்வொரு கப்ரிலும் ஒரு துண்டை வைத்தார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் ‘இது காய்வது வரை இவ்விருவரின் வேதனை இலேசாக்கப்படக் கூடும்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(புகாரி: 216, 218, 1361) ➚

புகாரியின் மற்றொரு அறிவிப்பில் (211, 1273) ‘அந்த மட்டையை இரண்டாகப் பிளந்து பாதியை ஒரு கப்ரிலும், மறுபாதியை மற்றொரு கப்ரிலும் வைத்தார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

பெண்களுக்கு கத்னா செய்யலாமா?

ஆண்களின் பாலுறுப்பில் இருக்கும் தேவையற்ற தோல்பகுதியை அகற்றுவதற்குப் பெயர் தான் கத்னா என்பது. இவ்வாறு செய்வதால் பாலுறுப்பினுள் விந்தோ சிறுநீரோ தங்கும் நிலை ஏற்படாது. இதன் மூலம் பாலுறுப்பு சுத்தமாக வைத்துக்கொள்ளப்படுவதால் ஏராளமான நோய்கள் அண்டுவதில்லை.

இல்லறவாழ்வின் போது கணவன் தன் மனைவியை திருப்தியடையச் செய்வதற்கு கத்னா காரணமாக உள்ளது. அறிவுப்பூர்வமான இந்த வழிமுறை கடைபிடிக்குமாறு இஸ்லாம் ஆண்களுக்குக் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக்கொள்வது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்

அறி : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி (5889)

தொடர் 02 நூல்: நபித் தோழர்களும் நமது நிலையும்

 தொடர் 02    நூல்: நபித் தோழர்களும் நமது நிலையும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு

நபித் தோழர்களும் மனிதர்களே! அவர்களிடமும் தடுமாற்றங்களும், தவறான முடிவுகளும் ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னறிவிப்புச் செய்து சென்றுள்ளனர்.

நியாயத் தீர்ப்பு நாளில் மக்களெல்லாம் பதை பதைப்புடன் நிற்கும் போது நடக்கும் ஒரு நிகழ்ச்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

என் தோழர்களில் சிலர் இடது புறமாகப் பிடிக்கப்படுவார்கள். (அதாவது நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவார்கள்) அப்போது நான் ``அவர்கள் என் தோழர்கள்! அவர்கள் என் தோழர்கள்! என்று கூறுவேன். அதற்கு இறைவன் ``நீ அவர்களைப் பிரிந்தது முதல் வந்த வழியே அவர்கள் திரும்பிச் சென்று கொண்டே இருந்தனர் என்று கூறுவான். அப்போது நான் ``அவர்களுடன் நான் இருந்த வரை அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். எப்போது என்னை நீ கைப்பற்றிக் கொண்டாயோ (அப்போது முதல்) நீயே அவர்களைக் கண்காணிப்பவனாவாய் என்று என் சகோதரர் ஈஸா கூறியது போல் நானும் கூறிவிடுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)  நூல் : புகாரி 3349, 3447

01 :நபித்தோழர்களைப் பின்பற்றுதல் குறித்த அனைத்து வாதங்களுக்கும் மறுப்பு

 நூல்: நபித் தோழர்களும் நமது நிலையும்

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

நபித்தோழர்கள் என்போர் யார்?
நபித்தோழர்களின் சிறப்புகள்
வஹீயில்லாமல் நேர்வழியை அறிய முடியாது
வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும்
குர்ஆனுடன் நபிவழியும் அவசியம் .
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரண்டு நிலைகள்
வஹீ அல்லாதவற்றில் நபியைப் பின்பற்றுதல் இல்லை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு
வஹீக்கு முரணான நபித்தோழர்களின் நடவடிக்கைகள்
மாற்றாரின் வாதங்கள்
சஹாபாக்களை விட மற்றவர்கள் நன்கு விளங்க முடியுமா?

முன்னுரை

திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் தவிர வேறு எதுவும் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களில்லை என்பதை நாம் வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறோம்.

அல்லாஹ்வின் கூற்றையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் தவிர எவரது நடவடிக்கைகளையும் மார்க்க ஆதாரமாகக் கொள்ளக் கூடாது எனவும், எவ்வளவு பெரிய மேதையானாலும் நபித் தோழர்களேயானாலும் அவர்களின் கூற்றுகளும்,செயல்களும் கூட மார்க்க ஆதாரமாக முடியாது எனவும் தெளிவுபடக் கூறி வருகிறோம்.

ஆதாரங்களையும், காரணங்களையும் எடுத்துக் காட்டியே நாம் இவ்வாறு கூறி வருகிறோம். ஆயினும் சிலர் நாம் எடுத்துக் காட்டும் ஆதாரங்களைச் சிந்திக்காமல் நபித் தோழர்களை நாம் அவமதித்து விட்டதாக தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர்.


நபித் தோழர்களின் சிறப்புகளைப் பேசும் குர்ஆன் வசனங்களையும், நபிமொழிகளையும்  எடுத்துக்காட்டி இத்தகைய சிறப்பு வாய்ந்த நபித் தோழர்களை நாம் அவமதிப்பதாக அவதூறு கூறுகின்றனர்.

நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தைக் கூறாத சில வசனங்களுக்கு தவறான விளக்கம் கூறியும், இட்டுக்கட்டப்பட்ட அல்லது பலவீனமான ஹதீஸ்களை எடுத்துக் காட்டியும் நபித்தோழர்களைப் பின்பற்றுவது கட்டாயக் கடமை என்பது போல் பிரச்சாரம் செய்து மக்களை வழிகெடுத்து வருகின்றனர்.

நபித்தோழர்கள் உள்ளிட்ட எவரது கருத்தையும் ஏற்பது அவசியம் இல்லை என்று இது வரை உலகில் யாரும் சொல்லவில்லை. தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் இக்கருத்தை முதன் முதலாகக் கூற ஆரம்பித்துள்ளனர் எனவும் இவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.

எனவே இவர்களுக்கும், இவர்களின் பிரச்சாரத்தை உண்மையென நம்பும் மக்களுக்கும் இது பற்றி தெளிவான விளக்கம் அளிக்கும் அவசியம் நமக்கு ஏற்பட்டது.

* நபித்தோழர்கள் உள்ளிட்ட எவரது கருத்தையும் வணக்க வழிபாடுகளுக்கு ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்பதற்கான ஆதாரங்கள். மற்றவர்களைப் போலவே நபித்தோழர்களும் பல சந்தர்ப்பங்களில் தவறான முடிவுகள் எடுத்துள்ளனர் என்பதற்கான சான்றுகள்.

* நபித்தோழர்களைப் பின்பற்றக் கூடாது என்று கூறுவது அவர்களை அவமதிப்பதாக ஆகாது என்பதற்கான காரணங்கள்.

* நபித்தோழர்கள் தவறான முடிவுகள் எடுத்தார்கள் என்று கூறுவதால் அவர்களைப் பற்றி அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறிய சிறப்புகளைப் பாதிக்காது என்பதற்குரிய விளக்கம்.

* நமக்கு முன்னரே மதிப்புமிக்க அறிஞர்கள் இக்கொள்கையை மிகவும் உறுதியாக முழங்கியுள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள்.

ஆகியவற்றைத் திரட்டி இந்நூலைத் தயாரித்துள்ளோம்.

அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு

 அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு

ஆக்கம் பீ.ஜைனுல் ஆபிதீன்

பக்கங்கள் 88

விலை ரூபாய் 20.00

    அமீருக்குக் கட்டுப்படுவதன் அவசியம்
    அமீர் என்றால் யார்
    ஒரு நாட்டில் பல அமீர்கள் இருக்க முடியுமா
    அதிகாரமில்லாதவர் அமீர் என்று அழைக்கப்படலாமா
    இந்திய முஸ்லிம்களுக்கு அல்லது தமிழக மூஸ்லிம்களுக்கு அமீர் யார்
    தலமைப் பதவியின் வகைகள்
    இயக்கங்களின் தலைவர்கள் அமீர்கள் அல்லர்
    இந்தியாவில் யாரும் அமீர்கள் அல்லர்


என்பன போன்ற விஷயங்கள் தக்க ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.


அறிமுகம்

இஸ்லாத்தின் பெயரால் உலகில் ஏராளமான இயக்கங்கள் உள்ளன. இந்த


இயக்கங்களில் பெரும்பாலானவை இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரானவையாக இருந்த போதும் அந்த இயக்கங்களில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள் அந்த இயக்கங்களில் இருந்து விடுபடுவதற்கும், விலகுவதற்கும் தயங்குகின்றனர்.

நேர்ச்சையும் சத்தியமும்

நூலின் பெயர் : நேர்ச்சையும் சத்தியமும்

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

முன்னுரை

முஸ்லிம்கள் தமது அனைத்து வணக்க வழிபாடுகளையும் திருமறைக் குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்ளக் கட்டளையிடப்பட்டுள்ளனர்.

எந்த வணக்கத்தையாவது அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத முறையில் ஒருவர் செய்தால் அந்த வணக்கம் இறைவனால் நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர். திருக்குர்ஆனையும் நபிவழியையும் ஆதாரமாகக் கொண்டு செயல்படும் முஸ்லிம்கள் தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களை தக்க முறையில் நிறைவேற்றினாலும் நேர்ச்சை, சத்தியம் செய்தல் போன்ற வணக்கங்களைப் பற்றி அறியாமையில் உள்ளனர்.

மற்றும் சில முஸ்லிம்கள் நேர்ச்சை, சத்தியம் செய்தல் ஆகியவற்றை ஒரு வணக்கம் என்று அறியாததால் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நேர்ச்சை செய்கின்றனர். அல்லாஹ் அல்லாதவர்களின் பெயரில் சத்தியமும் செய்கின்றனர்.

தாடி ஓர் ஆய்வு

 தாடி ஓர் ஆய்வு

ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளதால் தாடி வைப்பது நபிவழி என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்.

حدثنا محمد بن منهال حدثنا يزيد بن زريع حدثنا عمر بن محمد بن زيد عن نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال خالفوا المشركين وفروا اللحى وأحفوا الشوارب وكان ابن عمر إذا حج أو اعتمر قبض على لحيته فما فضل أخذه

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.  அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)       நூல் : புகாரி5892

حدثني أبو بكر بن إسحق أخبرنا ابن أبي مريم أخبرنا محمد بن جعفر أخبرني العلاء بن عبد الرحمن بن يعقوب مولى الحرقة عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم جزوا الشوارب وأرخوا اللحى خالفوا المجوس

அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)  நூல் : முஸ்லிம் 435

மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் தாடிகளை வளர விடுங்கள் என்ற ஒரு உத்தரவை மட்டும் இடவில்லை. தாடியை வளர விடுவதன் மூலம் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் மாறு செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் இட்டிருக்கின்றார்கள்.

ஜின்களை ஏவி விட்டு சூனியம் செய்யப்படுகிறதா?

 ஜின்களை ஏவி விட்டு சூனியம் செய்யப்படுகிறதா?

சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புவது இணை வைப்பாக இருக்கிறது என்று நாம் கூறும் போது அதை மறுப்பதற்காக இன்னொரு வாதத்தை எடுத்து வைத்துச் சமாளிக்கிறார்கள்.

சூனியக்காரன் தானாக இதைச் செய்வதில்லை. அவன் ஜின்களை வசப்படுத்தி வைத்துக் கொண்டு செய்கிறான். எந்த சாதனத்தையும் அவன் பயன்படுத்தாவிட்டாலும் ஜின்களை ஏவிவிட்டு சூனியம் செய்கிறான். ஜின்கள் போய் பாதிப்பை ஏற்படுத்துவது நம் கண்களுக்குத் தெரியாததால் அல்லாஹ்வைப் போல் சூனியக்காரன் செயல்படுவதாக மக்களுக்குத் தெரிகிறது என்று புது விளக்கம் கொடுக்கிறார்கள்.

ஜகாத் ஓர் ஆய்வு

 நூலின் பெயர் : ஜகாத் ஓர் ஆய்வு

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

முன்னுரை

இஸ்லாம் மிகவும் வலியுறுத்திக் கூறும் ஐந்து கடமைகளில் ஒன்றாக ஜகாத் எனும் கடமை அமைந்துள்ளது.

ஜகாத்தை வலியுறுத்தும் ஏராளமான திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் உள்ளன.

ஜகாத் கட்டாயக் கடமை என்பதில் முஸ்லிம் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு ஏதும் இல்லாவிட்டாலும் ஜகாத் உட்பிரிவுச் சட்டங்கள் பலவற்றில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.

* எந்தெந்த பொருட்களில் ஜகாத் கடமையாகும்?

* தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு ஜகாத் கடமையில் விதிவிலக்கு உள்ளதா?

* குடியிருக்கும் வீடு, பயன்படுத்தும் வாகனங்கள் ஆகியவை ஜகாத்திலிருந்து விதிவிலக்கு பெறுமா?

* அழுகும் பொருட்கள் மற்றும் இதர விளை பொருட்களில் எவற்றுக்கு ஜகாத் உண்டு?

என்பன போன்ற பல்வேறு சட்டங்களில் அறிஞர்களிடையே முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இவை திறந்த மனதுடன் தான் விவாதிக்கப்பட்டு வருகின்றன. மாற்றுக் கருத்துடையவர்களை இஸ்லாத்தின் விரோதிகளாகப் பார்க்கும் மனப் போக்கு இருந்ததில்லை.

8 -மதுஹப் பெயரால் கற்பனை கதைகள் 02

 குழாயை ஆறாக மாற்றும் அதிசய சட்டம்

( நூல் : இஸ்லாத்தின் பார்வையில் மதுஹபுகள் - பி ஜெய்னுல் ஆப்தீன் )

ஹனஃபி மத்ஹப் சட்டப்படி ஒரு தடவை உளூச் செய்த தண்ணீரில் மீண்டும் உளூச் செய்யக் கூடாது. குளம் குட்டை போன்ற ஓடாத தண்ணீராக இருந்தால் அது பத்து முழம் ஆளமும், பத்து முழம் அகலமும் கொண்டதாக இருந்தால் அதில் கைகளை விட்டு உளூச் செய்யலாம். மேற்கண்ட அளவை விடக் குறைவாக இருந்தால் அதில் கைகளை விட்ட உடன் அது பயன்படுத்திய தண்ணீராகி விடும். அதில் கைகளை விட்டவரும் உளூச் செய்ய முடியாது. மற்றவரும் உளூச் செய்ய முடியாது.

ஆனால் ஒடும் தண்ணீராக இருந்தால் அதில் கைகளை விட்டு உளூச் செய்யலாம். அதில் அசுத்தமான பொருள் மிதந்தாலும் அது சுத்தமான தண்ணீராகும்.

இமாம்களின் பெயரால் கற்பனைக் கதைகள்

 இமாம்களின் பெயரால் கற்பனைக் கதைகள்

நூல் : இஸ்லாத்தின் பார்வையில் மதுஹபுகள்

பி ஜெய்னுல் ஆப்தீன்

மத்ஹபுகள் என்பன திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் எதிரானதாக இருந்தும் எப்படி இச்சமுதாயத்தில் நிலைபெற்றன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

மார்க்கக் கல்வி கற்கச் செல்லும் சிறு வயதினரை மூளைச்சலவை செய்து மத்ஹபு வெறியை ஊட்டி ஆலிம்களை உருவாக்குவார்கள். மத்ஹபு இமாம்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள் என்றும், நபிகள் நாயகத்துக்குச் சமமானவர்கள் என்றும், நபிகள் நாயகத்தை விட மேலானவர்கள் என்றும் கட்டுக்கதைகளைப் போதிப்பார்கள். ஆலிம் படிப்பு படிக்கச் சென்றவருக்கு சிறு வயதில் இப்படி பக்தி ஊட்டப்பட்டு பின்னர் அது வெறியாக மாற்றப்பட்டு விடுகிறது. இதன் காரணமாகத்தான் மத்ஹபில் உள்ள அபத்தங்கள் மக்களுக்குப் புரியும் அளவுக்கு ஆலிம்களுக்குப் புரிவதில்லை.

இமாம்களின் கருத்தில் தவறே வராது என்று மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.

திருக்குர்ஆனுக்கும், ஹதீஸ்களுக்கும் முரணான மத்ஹப் சட்டங்கள் குறித்து யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என்பதற்காக மத்ஹப் இமாம்களை அல்லாஹ்வின் தூதருக்குச் சமமாகவும், அல்லாஹ்வின் தூதருக்கு மேலானவாரகவும் ஆக்கியுள்ள கொடுமைகளைப் பாருங்கள்

இயேசு சிலுவையில் அறையப்படவில்லை

 இயேசு சிலுவையில் அறையப்படவில்லை

அல்லாஹ் எனும் ஒரே ஒரு கடவுள் தான் இருக்கிறான். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவனைத் தவிர யாரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பதை நம்புவதும், மனிதர்களை நல்வழிப்படுத்த மனிதர்களில் இருந்தே தூதர்களை இறைவன் நியமித்து வந்தான். அந்தத் தூதர்கள் வரிசையில் இறுதியாக வந்தவர் முஹம்மது நபி என்பதை நம்புவதும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

இக்கொள்கையை ஒருவன் நம்பினால் தான் அவன் முஸ்லிமாக முடியும்.

உலகின் மிகப் பெரிய மதங்களில் ஒன்றாகத் திகழும் கிறித்தவ மதத்தின் கொள்கை என்ன? ஒருவன் கிறித்தவனாவதற்கு அவன் கொள்ள வேண்டிய கொள்கை என்ன?

கர்த்தர் (இறைவன்) முதன் முதலாக ஆதாம் என்பவரைப் படைத்தார். அவருக்குத் துணையாக ஏவாள் எனும் பெண்ணைப் படைத்து அவ்விருவரையும் ஏடன் எனும் தோட்டத்தில் தங்க வைத்து எல்லாவிதமான கனி வகைகளையும் அங்கே கிடைக்கச் செய்தார். இந்தத் தோட்டத்தில் விரும்பியவாறு உண்ணுங்கள்; ஆனால் குறிப்பிட்ட மரத்தின் கனியைப் புசித்து விட வேண்டாம் என்று கட்டளை பிறப்பித்திருந்தார்.

ஆதாமும் ஏவாளும் அந்தக் கட்டளையை மீறி தடுக்கப்பட்ட மரத்தின் கனியைப் புசித்தனர். இதனால் அவர்கள் பாவிகளானார்கள். அவர்கள் பாவிகளானதால் அவர்களின் சந்ததிகளும் பாவிகளாகப் பிறக்கின்றனர்.

எந்த ஒரு பாவம் செய்தாலும் அதற்குப் பாவ நிவாரணப் பலி கொடுக்க வேண்டும். ஆதாம் செய்த பாவத்தின் காரணமாக மனிதர்கள் பாவிகளாகப் பிறப்பதால் மிகப் பெரும் பலியைக் கொடுத்தால் தான் அந்தப் பாவம் மனிதனை விட்டு விலகும். அதற்காக இயேசு தன்னையே பலியிட்டு அனைவரின் பாவங்களுக்கும் பரிகாரம் தேடி விட்டார்.

இயேசு நமக்காக தன் உயிரையே கொடுத்தார் என்று ஒருவன் நம்பினால் தான் பிறவிப் பாவம் விலகும். இயேசு நமக்காகப் பலியானார் என்பதை யார் ஒப்புக் கொள்ளவில்லையோ அவரை விட்டு பிறவிப் பாவம் (ஜென்மப் பாவம்) நீங்காது.

இந்தக் கொள்கையின் மீது தான் கிறித்தவம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

இக்கொள்கையை கர்த்தரோ இயேசுவோ வழங்கவில்லை. இயேசுவுக்குப் பின் கிறித்தவ மதத்தில் இணைந்து கொண்ட பவுல் என்பவர் தான் இக்கொள்கையை உருவாக்கினார். இது குறித்து இந்நூலில் தனித் தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது.

இக்கொள்கையை வகுத்த பவுல் கூறியது பைபிளில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.

நூலின் பெயர் : இயேசு இறை மகனா?

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

இயேசு இறை மகனா?

அறிமுகம்

பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றியடைய எது சரியான வழி என்பதைக் கிறித்தவ சமுதாயத்தினர் அறிந்து கொள்வதற்காக எழுதப்பட்டதே  இயேசு இறை மகனா?  என்ற இந்த நூல்.

ஏற்கனவே வெளியிடப்பட்ட பதினேழு பதிப்புகளும் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றதால் பதினெட்டாம் பதிப்பை உங்கள் கைகளில் தவழ விடுகிறோம்.

ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பாகும்.

 இயேசு (ஈஸா நபியவர்கள்) கடவுளின் தூதர் தானே தவிர அவர் கடவுளின் குமாரர் அல்லர்  என்பதை பைபிளின் சான்றுகளிலிருந்தே ஆசிரியர் நிலை நாட்டுகிறார்.

கிறித்தவர்களுக்காக ஆசிரியர் எழுதிய இது தான் பைபிள், பைபிளில் நபிகள் நாயகம்  ஆகிய நூல்களையும் நாம் வெளியிட்டோம்.

அதன் பின்னர் இயேசுவின் சிலுவைப்பலி என்ற நூலையும் வெளியிட்டோம்.

இந்த நான்கு நூல்களுமே கிறித்தவ அன்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்க ஏற்ற நூலகளாகும். நடுநிலைக் கண்ணோடு இதை வாசிக்கும் கிறித்தவர்கள் நிச்சயம் உண்மையை விளங்குவார்கள். அந்த அளவுக்கு வலிமையான வாதங்கள் இந்த நூல்களில் எடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நூல்கள் நல்ல பயனை அளித்திட வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

இவன்

நபீலா பதிப்பகம்.

ஹதீஸ் கலையில் இல்லாத புது விதியை தவ்ஹீத் ஜமாஅத் அறிமுகம் செய்கிறதா?

வஹியில் முரண்பாடா
 நூல் - வஹியில் முரண்பாடா? 03

அல்குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்கள் தொடர்பான நமது நிலைபாட்டை நாம் மக்கள் மத்தியில் எடுத்து வைக்கின்ற போது, அதற்கு மாற்றுக் கருத்துக் கொண்டுள்ள உலமாக்கள் நமது வாதங்களுக்குரிய ஆதாரபூர்வமான பதில்களைத் தருவதை விடுத்து, அர்த்தமற்ற விமர்சனங்களையே முன்வைத்து வருகின்றார்கள். 

இவர்களின் விமர்சனங்களில் மிக முக்கியமானதொரு விமர்சனம் தான் முரண்படும் செய்திகள் பற்றிய ஹதீஸ் கலை விதி தொடர்பான விமர்சனமாகும். 

தவ்ஹீத் ஜமாஅத்தினர் கூறுவது போல் ஹதீஸ் கலையில் இப்படி ஒரு விதி இல்லை. இவர்கள் தான் புதிதாக இதைக் கூறுகிறார்கள் என்பது தான் இவர்களிடம் இருக்கும் ஒரே பதில்.

எனவே இது பற்றியும் நாம் விளக்க வேண்டியுள்ளது. நாம் கூறுவது போல் விதி உள்ளது. அதை எடுத்துக் காட்டுவதற்கு முன்னால் அதை விட முக்கியமான ஒரு விஷயத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

மூஸா நபி மலக்குள் மவ்துக்கு அடித்தார்களா?

நூல் - வஹியில் முரண்பாடா? பாகம் 31

புனித அல்குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளின் வரிசையில் நபி  மூஸா (அலை) அவர்கள் வானவருக்கு அடித்ததாக இடம் பெற்றுள்ள செய்தியும் ஒன்றாகும். அதைப் பற்றிய முழு விபரத்தை இங்கு விரிவாக பார்ப்போம்.

3407 عنِ أبيهِ عنٍ طاوسِ ابنِ عنٌعمرَنا مَاق أخبرّ الرزُنا عبدَ ثّ َ موسى حدُ ـ حدثنا يحيى بن ،ُ هّ َ كَ صُ إل موسى عليهما السلام، فلما جاءهِ الموتُ ملكَ لِرسُ الله عنه قال:أَ رضيَ أبي هريرة ِ تنَ على مُ هَ يدُ عَ ضَ فقل له يِ إليهْ عِ. قال: ارجَ الموتُ لا يريدٍتني إل عبدَ فقال: أرسلِ إل ربهَ عَ فرج الموت. قال: فالن. قال:ّ َ ماذا ؟ قال: ثمّ َ ، ثمّ سنة. قال: أي ربٍ بكل شعرةُ هُ با غطى يدُ، فلهٍ ثور صلى اللهِ اللهُ: فقال رسولَ. قال أبو هريرةٍ بحجرً رميةِسةّ َ الأرض المقدَ منُ هَ يِ دنُ أن يَ اللهَ لَ فسأ ناَ الأحمر. قال: وأخبرِ الكثيبَ تحتِ إل جانب الطريقُ هَ كم قبرُ لأريتّ َ ثمُم: لو كنتّ عليه وسل هَ م نحوّ صلى الله عليه وسلّ ِ النبيِ عنَثنا أبو هريرةّ َ حدٍمامَ عن هٌمرْ عَ .م

அபூஹ_ரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மலக்குல் மவ்த் (உயிரை எடுத்துச் செல்ல வரும் வானவர்)  மூஸா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் அவர் வந்த போது மூஸா (அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்து விட்டார்கள். உடனே அவர் தம் இறைவனிடம் திரும்பிச் சென்று, மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பி விட்டாய் என்று கூறினார். இறைவன், நீ அவரிடம் திரும்பிச் சென்று அவரது கையை ஒரு காளை மாட்டின் முதுகின் மீது வைக்கச் சொல். (அதன் முதுகிலுள்ள முடிகளில் எந்த அளவிற்கு) அவரது கரம் மூடுகின்றதோ (அதில்) ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு (இந்த உலகில் வாழ) அவருக்கு அனுமதி உண்டு (என்று சொல்.) எனக் கூறினான். (அவ்வாறே அந்த வானவர் திரும்பிச் சென்று மூஸா (அலை) அவர்களிடம் கூறிய போது) அவர், இறைவா! (அத்தனை காலம் வாழ்ந்து முடிந்த) பிறகு என்ன நடக்கும்? என்று கேட்டார்கள். இறைவன், மரணம் தான் என்று பதிலளித்தான். மூஸா (அலை) அவர்கள், அப்படியென்றால் இப்போதே என் உயிரை எடுத்துக் கொள் என்று கூறிவிட்டு, (பைத்துல் முகத்திஸ் என்னும்) புனித பூமிக்கு நெருக்கமாக அதிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தம் அடக்கத் தலம் அமைந்திடச் செய்யுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.

(இதை எடுத்துரைத்த போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் அங்கு (பைத்துல் மக்திஸில்) இருந்திருந்தால் சாலையோரமாக செம்மணற் குன்றின் கீழே அவரது மண்ணறை இருப்பதை உங்களுக்கு காட்டியிருப்பேன் என்று கூறினார்கள். 

ஹம்மாம் (ரஹ்) அவர்கள், அபூஹ_ரைரா (ரலி) அவர்கள் இதே போன்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு அறிவித்து உள்ளார்கள் என்று கூறுகிறார்கள்.  புகாரி : 3407 1339َ

சூனியத்தை நம்பியவன் சுவர்க்கம் புகமாட்டான் - என்ற செய்தி பலவீனமானதா?

  நூல் - வஹியில் முரண்பாடா? பாகம் 30

சூனியம் தொடர்பாக இடம் பெரும் செய்திகளில் எதிர் தரப்பினரின்
போலி வாதங்களுக்கு பதிலாக அமைந்த தெளிவான ஒரு செய்தி தான் சூனியத்தை உண்மைப் படுத்தியவன் சுவனம் நுழைய மாட்டான் என்ற கருத்துப்பட பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியாகும். 

குறித்த செய்தி தமது சூனியக் கருத்துக்கு பலத்த அடியாக அமைந்திருக்கின்றது என்பதை புரிந்து கொண்ட சூனியக் கூட்டத்தினர் தற்போது குறித்த செய்தியையும் பலவீனம் என்று தட்டிக் கழித்து தப்பித்து விட முயற்சி செய்கின்றனர். 

சூனியத்தை உண்மைப் படுத்துபவன் தொடர்பான செய்தியின் அறிவிப்பாளர் தொடர் தொடர்பில் தற்போது அலசுவோம்.

விவசாயக் கருவிகளினால் இழிவு வருமா?

விவசாயக் கருவி

  நூல் - வஹியில் முரண்பாடா? 26

விவசாயம் என்பது மனித வாழ்வின் உயிர் நாடியாகும். விவசாயம் இல்லாவிட்டால் ஒரு நாடோ, நாட்டின் குடிமக்களோ உயிர்வாழவும் முடியாது. ஆகவே தான் அல்குர்ஆனும், நபி (ஸல்) அவர்களும் விவசாயத்தை மிகவும் புகழ்ந்து சொல்கின்றார்கள்.

நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா? நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா? நாம் நினைத்திருந்தால் அதைக் கூளமாக்கியிருப்போம். நாம் கடன் பட்டு விட்டோம்! இல்லை! நாம் தடுக்கப்பட்டு விட்டோம் என்று (கூறி) அப்போது கவலையில் ஆழ்ந்து விடுவீர்கள். அல்குர்ஆன் (56 : 63)

இஸ்லாமிய மார்க்கம் புகழ்ந்து சொல்லும் இவ்விவசாயம் தொடர்பில், விவசாயக் கருவிகள் இழிவானவை என்ற கருத்தில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. குறித்த செய்தி இஸ்லாத்தின் மூல வேதமான திருமறைக் குர்ஆனின் கருத்துக்கும் நேர் முரணாக இருக்கின்றது. அது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

1- இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு பாகம் 01

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு
 இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

பொருளடக்கம்

குழந்தை பாக்கியத்தைக் கேட்க வேண்டும்.

​பெண்குழந்தைகளை வெறுக்கக் கூடாது.

குழந்தைகளைக் கொல்வது மாபெரும் குற்றம்.

குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?

குழந்தையின் காதில் பாங்கு சொல்ல வேண்டுமா?

தஹ்னீக்

பெயர் சூட்டுதல்

அகீகா

முடியின் எடைக்கு நிகரான வெள்ளியைக் கொடுக்க வேண்டுமா?

பால் புகட்டுதல்

கத்னா செய்தல்

பிள்ளைகளைக் கொஞ்ச வேண்டும்

குழந்தைப் பாசம் பெற்றோர்களை வழிகெடுத்து விடக் கூடாது

நீதமாக நடக்க வேண்டும்

குழந்தைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்

வீரர்களாக வளர்க்க வேண்டும்

சிறியவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்

குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்

செலவு செய்வது கடமை

வீண்விரயம் செய்வது கூடாது

தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்ல வேண்டும்

சிறுவர்களுக்கு சலாம் கூறுதல்

விளையாட அனுமதிக்க வேண்டும்

விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தர வேண்டும்

அனுமதி கேட்டு உள்ளே வர வேண்டும்

தவறு செய்யும் போது கண்டிக்க வேண்டும்

பிள்ளைகளைச் சபிக்கக்கூடாது

கல்வி கற்றுத்தர வேண்டும்

உபதேசம் செய்ய வேண்டும்

ஒழுங்கு முறைகளைக் கற்றுத்தர வேண்டும்

மார்க்க அறிஞர்களாக ஆக்க பயிற்சி அளிக்க வேண்டும்

காது மூக்கு குத்தலாமா?

தாயத்து தொங்க விடக்கூடாது

ஓதிப் பார்க்கலாம்

பிள்ளைகள் திருந்தாவிட்டால்...

முன்னுரை

பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் தீயவர்களாக ஆவது பெற்றோர்கள் வளர்க்கும் முறையில் தான் உள்ளது.

பெற்றோர்கள் உண்மையான முஸ்லிம்களாக இருந்தால் பிள்ளைகளும் அவர்களைப் போன்றே தூய இஸ்லாமியச் சிந்தனையில் வளர்கிறார்கள். பெயரளவில் முஸ்லிம்களாக இருந்தால் குழந்தைகளும்  பெயரளவில் முஸ்லிம்களாக வளர்கிறார்கள். பெற்றோரின் கொள்கை கோட்பாடு குணநலன்கள் குழந்தைகளிடத்தில் பிரதிபலிப்பதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

இதற்கு மாற்றமாக நல்லவர்களுக்குக் கெட்ட குழந்தைகளும் கெட்டவர்களுக்கு நல்ல குழந்தைகளும் பிறப்பதுண்டு. ஆனால் இது குறைவாகும்.

2-இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு பாகம் 02

குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு
குழந்தைகளுக்காகப் பிரார்த்தனை செய்வது பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியமாகும். நாம் எவ்வளவு தான் திருத்துவதற்கு முயற்சி செய்தாலும் அல்லாஹ் நாடாவிட்டால் நம் குழந்தைகள் நல்லவர்களாக உருவெடுக்க முடியாது. எனவே இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் உதவியை அவசியம் கேட்க வேண்டும்.

இறைத்தூதரின் மகனாக இருந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் தான் அவன் நல்லவனாக முடியும். எனவே தான் நபிமார்கள் தங்கள் பிள்ளைகள் நல்லவர்களாகத் திகழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன் ; நிகரற்ற அன்புடையோன் (என்று இப்ராஹீமும் இஸ்மாயீலும் பிரார்த்தனை செய்தார்கள்).  அல்குர்ஆன் (2 : 128)

என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக! (என்று இப்ராஹீம் கூறினார்.)  அல்குர்ஆன் (14 : 40)

எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!   என்று அவர்கள் கூறுகின்றனர்.  அல்குர்ஆன் (25 : 74)

நபிகளாருக்கு சூனியம் - ஆறு மாத கால ஹதீஸ் பலவீனமா?

சூனியம்
 நூல் - வஹியில் முரண்பாடா? பாகம் 29

நபிகள் நாயத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதாகவும்இ அதனால் நபியவர்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டதாகவும் புகாரி உள்ளிட்ட சில  நூல்களில் பதிவாகியிருக்கும் செய்திகளை குர்ஆனுக்கு முரண்படுகிறது என்ற வாதத்தின் அடிப்படையில் நாம் மறுக்கிறோம்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு யூதன் சூனியம் செய்தான். அதன் காரணமாக அவர்கள் செய்யாததைச் செய்ததாக அவர்களுக்குப் பிரமை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. 

தம் மனைவியரிடம் உடலுறவு கொள்ளாமலே உடலுறவு கொண்டதாக அவர்கள் நினைக்கும் அளவுக்கு இந்தப் பாதிப்பு முற்றிப் போய் இருந்தது என்றெல்லாம்  அந்தச் செய்திகளில் சொல்லப்பட்டுள்ளது.

ஒரு மனிதன் தான் செய்யாததைச் செய்ததாகச் கருதிக் கொண்டு இருப்பது மனநோயின் ஒரு வகையாகும். மேலும் மனைவியுடன் சேராமல்இ சேர்ந்ததாக நினைப்பது கடுமையான மனநோயாகும். இத்தகைய மனநோய் தான் நபியவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.

Search This Blog