தவ்ஹீத் ஜமாஅத் video's: உளூ
Showing posts with label உளூ. Show all posts
Showing posts with label உளூ. Show all posts

பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா?

 363. பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா?

இவ்வசனத்தில் (5:6) "பெண்களைத் தீண்டி, தண்ணீர் கிடைக்காவிட்டால்
தயம்மும் செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

பெண்களைத் தீண்டுதல் என்ற சொல் தொடுதல் எனவும், தாம்பத்தியம் எனவும் இரு பொருள் தரும் சொல்லாகும். எனவே இந்த இடத்தில் எவ்வாறு பொருள் கொள்வது என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

தொடுதல் என்று பொருள் கொள்ளும் அறிஞர்கள் "பெண்களை ஆண்கள் தொட்டாலும், ஆண்களைப் பெண்கள் தொட்டாலும் உளூ நீங்கி விடும். மீண்டும் உளூச் செய்ய வேண்டும்'' என்று சட்டம் வகுத்து ள்ளனர். இது தவறாகும்.

இவ்வசனத்தில் தீண்டுதல் என்பது தாம்பத்தியம் என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்த நிலையில் தம் மனைவியைத் தொட்டுள்ளனர். அதற்காக மீண்டும் உளூச் செய்யவில்லை.

தயம்மும் சட்டங்கள்

 

    தயம்மும் சட்டங்கள்

    தொழுகை நேரம் வந்து உளூச் செய்வதற்கான தண்ணீர் கிடைக்காவிட்டால் அல்லது தண்ணீர் கிடைத்து அதைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தால் அதைக் காரணம் காட்டி தொழாமல் இருக்க முடியாது. மாறாக தூய்மையான மண்ணைப் பயன்படுத்தி உளூவுக்கு மாற்றுப் பரிகாரமான தயம்மும் செய்து அதன் பின்பே தொழ வேண்டும்.

    صحيح البخاري
    334 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ القَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ أَوْ بِذَاتِ الجَيْشِ انْقَطَعَ عِقْدٌ لِي، فَأَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى التِمَاسِهِ، وَأَقَامَ النَّاسُ مَعَهُ وَلَيْسُوا عَلَى مَاءٍ، فَأَتَى النَّاسُ إِلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، فَقَالُوا: أَلاَ تَرَى مَا صَنَعَتْ عَائِشَةُ؟ أَقَامَتْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسِ وَلَيْسُوا عَلَى مَاءٍ، وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَجَاءَ أَبُو بَكْرٍ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِي قَدْ نَامَ، فَقَالَ: حَبَسْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسَ، وَلَيْسُوا عَلَى مَاءٍ، وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَقَالَتْ عَائِشَةُ: فَعَاتَبَنِي أَبُو بَكْرٍ، وَقَالَ: مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ وَجَعَلَ يَطْعُنُنِي بِيَدِهِ فِي خَاصِرَتِي، فَلاَ يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلَّا مَكَانُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى فَخِذِي، «فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أَصْبَحَ عَلَى غَيْرِ مَاءٍ، فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ فَتَيَمَّمُوا»، فَقَالَ أُسَيْدُ بْنُ الحُضَيْرِ: مَا هِيَ بِأَوَّلِ بَرَكَتِكُمْ يَا آلَ أَبِي بَكْرٍ، قَالَتْ: فَبَعَثْنَا البَعِيرَ الَّذِي كُنْتُ عَلَيْهِ، فَأَصَبْنَا العِقْدَ تَحْتَهُ

    நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பயணமாகப் புறப்பட்டோம்.  பைதா  என்ற இடத்தை நாங்கள் அடைந்த போது எனது கழுத்து மாலை அறுந்து விட்டது. அதைத் தேடுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கே தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் தங்கினார்கள். அவர்களின் அருகில் தண்ணீர் இருக்கவில்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை. மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து,  (உங்கள் மகள்) ஆயிஷா செய்ததைப் பார்த்தீர்களா? நபிகள் நாயகத்தையும் மக்களையும் தங்க வைத்து விட்டார். அவர்கள் அருகில் தண்ணீர் இல்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை  என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தலையை எனது தொடையில் வைத்து உறங்கிக் கொண்டிருந்த போது அபூபக்ர் (ரலி) வந்தார்கள்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மக்களுக்கும் தடங்கலை ஏற்படுத்தி விட்டாய். அவர்களருகிலும் தண்ணீர் இல்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை  என்று கூறி என்னைக் கண்டித்தார்கள். அவர்கள் எதைக் கூற வேண்டும் என்று அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் கூறினார்கள். எனது இடுப்பிலும் தமது கையால் குத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் தொடை மீது படுத்திருந்ததால் நான் அசையாமல் இருந்தேன். தண்ணீர் கிடைக்காத நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தார்கள். அப்போது தான் தயம்மும் பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான். மக்கள் தயம்மும் செய்தனர். நான் அமர்ந்திருந்த ஒட்டகத்தை எழுப்பிய போது அதன் அடியில் என் கழுத்து மாலை கிடைத்தது.


    அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்கள்: புகாரீ 334, முஸ்லிம் 550

செருப்புடன் உளூச் செய்யலாமா ? செருப்பு அணிந்து தொழலாமா?

 செருப்புடன் உளூச் செய்யலாமா?

ஃபயாஸ்

பதில்

செருப்பு அணிந்து உளூஉ செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. இது மார்க்கச் சட்டமாக இருந்தால் இதைத் தடை செய்யும் விதமாக குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ கூறப்பட்டிருக்கும். ஆனால் குர்ஆனிலோ நபிமொழிகளிலோ செருப்பணிந்து உளூ செய்யக்கூடாது என்று கூறப்படவில்லை.

உளூவை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொழுகைக்கே இப்படி தடை ஏதும் இல்லை.

நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாமா?

நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாமா?

சம்சுல் ஆரிஃப்

பதில் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகமான நேரங்களில் அமர்ந்தே சிறுநீர் கழித்துள்ளார்கள். எனவே நாமும் அமர்ந்தே சிறுநீர் கழிக்க வேண்டும்.

مسند أحمد25787 - حَدَّثَنَا وَكِيعٌ، وَعَبْدُ الرَّحْمَنِ الْمَعْنَى، عَنْ سُفْيَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: " مَنْ حَدَّثَكَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَالَ قَائِمًا بَعْدَمَا أُنْزِلَ عَلَيْهِ الْفُرْقَانُ فَلَا تُصَدِّقْهُ "، " مَا بَالَ قَائِمًا مُنْذُ أُنْزِلَ عَلَيْهِ الْفُرْقَانُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு திருக்குர் ஆன் அருளப்பட்ட பின்பு அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று யாரேனும் உமக்கு அறிவித்தால் அவரை நம்பி விடாதே! திருக்குர் ஆன் அவர்களுக்கு அருளப்பட்டதிலிருந்து அவர்கள் நின்று சிறுநீர் கழித்ததே இல்லை.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல்: அஹ்மத்


ஆனால் சில நேரங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்துள்ளார்கள்.

291. தூய்மையில்லாமல் திருக்குர்ஆனைத் தொடலாமா?

 291. தூய்மையில்லாமல் திருக்குர்ஆனைத் தொடலாமா?


தூய்மையானவர்களைத் தவிர யாரும் இதைத் தொட மாட்டார்கள் என


இவ்வசனத்தில் (56:79) கூறப்படுகிறது.

இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு தூய்மையில்லாத யாரும் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர்.

உளூ எனும் தூய்மை இல்லாதவர் களும், குளிப்பு கடமையானவர்களும், மாதவிடாயுள்ள பெண்களும், இஸ்லாத்தை ஏற்காதவர்களும் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று இந்த வசனத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் கூறிவருகின்றனர்.

காலுறை மீது எத்தனை நாட்கள் வரை மஸஹ் செய்யலாம்?

 காலுறை மீது எத்தனை நாட்கள் வரை மஸஹ் செய்யலாம்?


உளூச் செய்துவிட்டு காலுறை அணிந்தால் மற்ற தொழுகைகளுக்கு உளூச் செய்யும் போது காலைக் கழுவ வேண்டியதில்லை. இந்தச் சலுகை ஒரு நாளுக்கு உரியது என்று கூறுகிறார்கள். இது சரியா?

பதில்

பொதுவாக உளூச் செய்யும் போது கடைசியாக இரு கால்களையும் கரண்டை வரை கழுவ வேண்டும். ஆனால் காலுறை அணிந்திருப்பவர்களுக்கு இதில் விதிவிலக்கு உள்ளது. கால்களைக் கழுவாமல் காலுறையின் மேற்பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்ளலாம் என்பது தான் அந்த விதிவிலக்காகும்.

صحيح البخاري  182 – حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، قَالَ: أَخْبَرَنِي سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ عُرْوَةَ بْنَ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، يُحَدِّثُ عَنِ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، وَأَنَّهُ ذَهَبَ لِحَاجَةٍ لَهُ، وَأَنَّ مُغِيرَةَ «جَعَلَ يَصُبُّ المَاءَ عَلَيْهِ وَهُوَ يَتَوَضَّأُ، فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، وَمَسَحَ بِرَأْسِهِ، وَمَسَحَ عَلَى الخُفَّيْنِ»

நான் ஒரு பிரயாணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு இருந்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது முகத்தையும், இரு கைகளையும் கழுவினார்கள். தலைக்கு மஸஹ் செய்தார்கள். இரு காலுறைகள் மீதும் மஸஹ் செய்தார்கள்.

அறிவிப்பவர் : முகீரா (ரலி)   நூல்கள் : புகாரீ 182, முஸ்லிம் 404


காலுறைகள் மீது மஸஹ் செய்வதற்குரிய நிபந்தனைகள்

ஆண்களும், பெண்களும் கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம் என்ற இச்சலுகைக்கு சில நிபந்தனைகள் உள்ளன.

காலுறைகளை அணிவதற்கு முன் கால்களைக் கழுவியிருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனையாகும்.

அடிக்கடி காற்றும், சிறுநீரும் வெளியேறினால் உளூ நீங்குமா

உளூ
 அடிக்கடி காற்றும், சிறுநீரும் வெளியேறினால் உளூ நீங்குமா

ஒருவர் உளூ செய்த பின் காற்று வெளியேறினால் உளூ நீங்கி விடும். அது போல் மலஜலம் கழித்தாலும் உளூ நீங்கி விடும். மீண்டும் உளூ செய்து விட்டுத்தான் தொழ வேண்டும்.

ஆனால் நோயின் காரணமாக ஒருவரது கட்டுப்பாட்டை மீறி காற்று வெளியேறிக் கொண்டே இருந்தால் அல்லது சிறு நீர் கசிந்து கொண்டே இருந்தால் இவர் என்ன செய்வது?

இது பற்றி நேரடியாக எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் கிடைக்கவில்லை. ஆயினும் இது குறித்து நாம் எந்த முடிவை எடுப்பது என்பதை மறைமுகமாகச் சொல்லும் ஆதாரம் உள்ளது.

குளிப்பின் சட்டங்கள்

குளிப்பு

கடமையான குளிப்பு

உளூச் செய்யும் அவசியம் ஏற்படும் போது உளூச் செய்து விட்டுத் தான் தொழ வேண்டும் என்பது போல, குளிக்கும் அவசியம் ஏற்பட்டால் குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும். குளிப்பு கடமையானவர்கள் குளிக்காமல் தொழக் கூடாது.

ஒரு மனிதன் குளிப்பது எப்போது கடமையாகும்? குளிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் யாவை?என்பதைக் காண்போம்.

உடலுறவு குளிப்பைக் கடமையாக்கும்

ஆணும், பெண்ணும் உடலுறவு கொண்டால் இருவர் மீதும் குளிப்பது கடமையாகி விடும். குளித்து விட்டுத் தான் அவர்கள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.

صحيح البخاري 291 - حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، ح وحَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، عَنْ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الحَسَنِ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الأَرْبَعِ، ثُمَّ جَهَدَهَا فَقَدْ وَجَبَ الغَسْلُ»

ஒரு ஆண் தனது மனைவியின் கால்களுக்கிடையே அமர்ந்து பின்னர் முயற்சி செய்தால் குளிப்பு கடமையாகி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)   நூல்கள்: புகாரீ 291, முஸ்லிம் 525

முஸ்லிமின் 525 அறிவிப்பில் விந்து வெளிப்படாவிட்டாலும் குளிப்பது கடமை என்ற வாக்கியம் மேலதிகமாக இடம் பெற்றுள்ளது.

இரு பாலரும் சேர்ந்து ஒளு செய்வதால் ஹிஜாப் எப்படி?

 ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் ஒளு செய்வதால் ஹிஜாப் முறையை பேணுவது சாத்தியம் இல்லையே?

ஆண்களும் பெண்களும் ஒன்றாக ஒரே இடத்தில் ஒரே பாத்திரத்தில் உளூச் செய்ய அனுமதி இருப்பதாக விளக்கம் தந்துள்ளீர்கள். அப்படியானால் உளூச் செய்யும் போது ஹிஜாப் முறையைப் பேணுவது சாத்தியமில்லையே?

ஷம்சுதீன், துபை

ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் உளூச் செய்யலாம் என்று கூறுவது 24:31வசனத்திற்கு மாற்றமாக உள்ளதே!

முஹம்மது இர்ஷாத், லால்பேட்டை.

மார்க்கத்தில் பொதுவாக ஒரு விஷயம் தடை செய்யப்பட்டு ஓரிரு சந்தர்ப்பங்களில் அந்தத் தடை மீறப்பட்டது போன்ற சான்றுகளைக் கண்டால் அதை முரண் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக அது மட்டும் விதிவிலக்கு என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு நூற்றுக்கணக்கான சான்றுகள் ஹதீஸ்களில் உள்ளன.

உதாரணமாக உளூச் செய்யும் போது இரு கால்களையும் கழுவியாக வேண்டும். இது பொதுவான சட்டம். ஆனால் சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கால்களைக் கழுவாமல் காலுறை மீது மஸஹ் செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கால்களைக் கழுவ வேண்டும் என்பதற்கு இது முரணானது என்று கருதக் கூடாது. கால்களைக் கழுவுவதில் இது விதிவிலக்கு பெறுகின்றது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதுபோல் தான் உளூச் செய்யும் போது மட்டும் உளூச் செய்வதற்கான உறுப்புக்கள் தெரிவது விதிவிலக்கு பெறுகின்றது என்று புரிந்து கொண்டால் முரண்பாடாகத் தோன்றாது.

--onlinepj.in

Search This Blog