தவ்ஹீத் ஜமாஅத் video's

இறந்தவர்களிடம் நபிகள் பேசியது இறந்தவர்களுக்கு ஆற்றல் உண்டு என்பதற்கு ஆதாரமாகுமா?

 இறந்தவர்களிடம் நபிகள் பேசியது இறந்தவர்களுக்கு ஆற்றல் உண்டு
என்பதற்கு ஆதாரமாகுமா?

📌பத்ருப் போரில் கொல்லப்பட்ட இணைவைப்பாளர்களில் 24 தலைவர்கள் கிணற்றில் போடப்பட்டார்கள். கிணற்றில் போடப்பட்ட அவர்களை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசினார்கள் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்பது தெரிகின்றதே என்றும் சமாதி வழிபாடு செய்வோர் வாதிடுகின்றனர். அவர்களின் வாதம் சரியா என்பதை விபரமாகப் பார்ப்போம்.

தல்கீன் ஓதுதல்

 தல்கீன் ஓதுதல்

ஒருவரை அடக்கம் செய்து முடித்தவுடன் அவரது தலைமாட்டில் இருந்து
கொண்டு மோதினார் தல்கீன் என்ற பெயரில் எதையோ கூறுவர்.

 உன்னிடம் வானவர்கள் வருவார்கள். உன் இறைவன் யார் எனக் கேட்பார்கள். அல்லாஹ் என்று பதில் கூறு! உன் மார்க்கம் எது எனக் கேட்பார்கள். இஸ்லாம் என்று கூறு  என்று அரபு மொழியில் நீண்ட அறிவுரை கூறுவது தான் தல்கீன்.

ஒருவர் உயிருடன் இருக்கும் போது சொல்லிக் கொடுக்க வேண்டியதை இறந்த பின் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

இப்படிச் சொல்லிக் கொடுத்து, அது இறந்தவருக்குக் கேட்டு, அவரும் இந்த விடையைச் சொல்ல முடியும் என்றால் இதை விட உச்ச கட்ட மடமை வேறு என்ன இருக்க முடியும்?

இது போன்ற மூடத்தனத்தைத் தவிர்க்க வேண்டும்.

المستدرك على الصحيحين للحاكم

1372 - حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ، ثنا يَحْيَى بْنُ مَعِينٍ، ثنا هِشَامُ بْنُ يُوسُفَ الصَّنْعَانِيُّ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ بَحِيرٍ، عَنْ هَانِئٍ مَوْلَى عُثْمَانَ، قَالَ: سَمِعْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ، يَقُولُ: مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجِنَازَةٍ عِنْدَ قَبْرٍ وَصَاحِبُهُ يُدْفَنُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ، وَسَلُوا اللَّهَ لَهُ التَّثْبِيتَ، فَإِنَّهُ الْآنَ يُسْأَلُ» هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الْإِسْنَادِ، وَلَمْ يُخَرِّجَاهُ "

அடக்கம் செய்து முடித்தவுடன் அதன் அருகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு (மக்களை நோக்கி)  உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவருக்காக உறுதிப்பாட்டைக் கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசாரிக்கப்படுகிறார்  என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி).

நூல்: அபூ தாவூத், ஹாகிம், பைஹகீ

எனவே மய்யித்திற்குச் சொல்லிக் கொடுக்கும் தல்கீனை ஒழித்துக்கட்டி அல்லாஹ்விடம் அவர் நல்ல முறையில் பதில் சொல்ல அனைவரும் துஆச் செய்ய வேண்டும்

share this.. https://bit.ly/4u4b2Gp

"ஸலஃப் கொள்கை" என்னும் வார்த்தை விளையாட்டு!

  "ஸலஃப் கொள்கை" என்னும் வார்த்தை விளையாட்டு!

'ஸலஃபு கொள்கையில் உள்ளவர்கள் நாங்கள்' என்று கூறிக் கொள்வோருடன் ஒரு வாட்ஸ்அப் குழுமத்தில் கலந்துரையாடல் ஒன்று சமீபத்தில் நடந்தது. அதில் ஸலஃப் கொள்கை என்றால் என்ன என்று பேச ஆரம்பித்து, முடிவின்றி பாதியில் நின்று போனது. அதில் பேசப்பட்ட விடயங்களையும், சொல்லப்படாமல் விடுபட்ட விஷயங்களையும் இதில் தெளிவுபடுத்தலாம் என்ற நல்லெண்ணத்தில் முழுக்க முழுக்க அல்லாஹ்வை மட்டுமே அஞ்சி இந்த பதிவை எழுதுகிறோம். அவசியம் இதை முழுமையாக படியுங்கள்!


மார்க்கத்தின் மூன்றாவது ஆதாரமாக நபித்தோழர்களை பின்பற்றும் கொள்கையில் உள்ளவர்களான "ஸலஃபிகள்" என்று தங்களை சொல்லிக் கொள்வோரிடம், ஸலஃப் கொள்கை என்பது ஸஹாபாக்களை பின்பற்றுவதுதானே என்று நாம் கேட்டால், இல்லவே இல்லை என்றும் நாங்கள் அப்படி சொன்னோமா என்று தற்சமயம் ஸலஃப் கொள்கைப் பற்றி பேசுவோர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியா..?!! சரி, சலஃப் கொள்கை என்றால் என்ன என்று நீங்களே சொல்லிவிடுங்கள் என்று கேட்டால், சஹாபாக்கள் எவ்வாறு விளங்கினார்களோ அவ்வாறே விளங்க வேண்டும்; அதுதான் சலஃப் கொள்கை என்கிறார்கள்.


இதுதானேப்பா ஸஹாபிய மத்ஹப்..?

Search This Blog