தவ்ஹீத் ஜமாஅத் video's: ஜும்மா உரையில் கலீஃபாக்களின் பெயர்களைக் கூற வேண்டுமா?

ஜும்மா உரையில் கலீஃபாக்களின் பெயர்களைக் கூற வேண்டுமா?

கலீஃபாக்களின் பெயர்
 பித்அத்தை புதிய ரூபத்தில் செயற்படுத்தும்!

மதனிகளும், வக்காலத்து வாங்கும்

ஸலபிகளும்….

தொடர் - 05 - (07/11/2022)

ஜும்மா உரையில் கலீஃபாக்களின் பெயர்களைக் கூற வேண்டுமா?

ஜும்மா உரையில் அபூபக்ர், உமர், உஸ்மான், அலி (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகிய நபித்தோழர்களின் பெயர்களைக் கூறி துஆச் செய்வது நபிவழியா?

அபூபக்ர் (ரலி) உள்ளிட்ட நான்கு கலீஃபாக்களின் பெயர்களையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முஸ்லிம் உறவினர்களின் பெயர்களையும் வாசித்து வாரம் தோறும் குத்பாவில் துஆச் செய்யும் வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இருக்கவில்லை. இருந்திருக்கவும் முடியாது.

மேற்கண்ட தோழர்கள் கலீஃபாக்களாக நியமிக்கப்பட்ட காலத்திலும் இப்படி ஒரு நடைமுறை அவர்களால் அமுல்படுத்தப்படவில்லை. மிகவும் பிற்காலத்தில் வந்தவர்கள் தான் இப்படி ஒரு வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

ஜும்மா உரையில் நபித்தோழர்களின் வரலாறைக் கூற நேர்ந்தால் அவர்கள் பெயரைக் குறிப்பிடும் போது அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக என்று துஆச் செய்யலாம். ஆனால் ஒவ்வொரு வாரமும் அந்த நபித்தோழர்களின் பெயர்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும் என்பதும், அவர்களுக்காக துஆச் செய்வது ஜும்மாவின் விதிமுறைகளில் ஒன்று என்ற நிலையை ஏற்படுத்துவதும் பித்அத்தாகும். இது பாவமான செயலாகும். இதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இன்றைக்கு சுன்னத் வல்ஜமாஅத் என்று சொல்லிக் கொள்ளும் உலமாக்கள் மக்களுக்குப் புரியாத அரபு பாஷையில் ஒவ்வொரு ஜும்ஆவிலும் இதை மந்திரமாக ஓதிவருகின்றனர்.

இதை ஒவ்வொரு ஜும்ஆவிலும் ஓத வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆற்றிய உரையில் இது போன்று ஒரு தடவை சொன்னதாகக் கூட சான்றுகள் இல்லை. எனவே இது மார்க்கத்தில் இல்லாத பித்அத்தாகும்.

அரபியில் தான் ஜும்ஆ உரை அமைய வேண்டுமா?

பொதுவாக பெரும்பாலான பள்ளிகளில் ஜும்மாவின் ஆரம்ப உரையை தமிழ்மொழியிலும் இரண்டாவது உரையை அரபியிலும் செய்யும் வழமை இருந்துவருகிறது.

நபியவர்கள் ஜும்ஆவின் இரண்டு உரைகளையும் அரபியில் தான்செய்திருக்கிறார்கள். ஏன் என்றால் அவர்களின் தாய் பாஷை அரபி. அதனால்தான் அரபியில் உரையாற்றினார்கள். ஜும்ஆ உரை என்பது வந்திருக்கக்கூடியவர்களுக்குரிய ஒரு உபதேசமாகும். அந்த உபதேசம் அவர்களின் தாய்மொழியில் தான் அமைய வேண்டும்.

அப்போதுதான் மிம்பரில் இருப்பவர்என்ன சொல்கிறார் என்பது மக்களுக்குப் புரியும்.மக்களுக்கு போதனைசெய்வதும், அதன் மூலம் மக்கள் திருந்த வேண்டும் என்பதும்  தான்குத்பாவின் அடிப்படை நோக்கம் என்பதை நபிகளாரின் குத்பா பற்றிய செய்திஎமக்கு உணா்த்துவதனை காணலாம்.

‘நபி (ஸல்)  அவா்கள் இரண்டு குத்பாக்கள் நிகழ்த்துவார்கள்.இரண்டிற்கும் இடையே (சொற்பொழிவின் போது) அமா்வார்கள்.குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள்.மக்களுக்கு போதனை செய்வார்கள்.’(ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி), 

நூல்: முஸ்லிம்)

இமாம் சொல்லும் நான்கு விடயங்களை அறிந்து வாழ்வை வழமாக்கவேண்டிய குத்பாக்கள் இந்நோக்கத்தை இன்று நிறைவேற்றுகின்றனவா?இன்று நடைமுறையில் உள்ள இரண்டாம் குத்பாவை அரபியில் ஓதுவதால்இமாம் என்ன சொல்கிறார் என்பதையே அறிய முடியாத துர்ப்பாக்கிய நிலைஉருவாகி விடுகிறது. 

எனவே, இரண்டு குத்பாக்கள் செய்வது தான் நபிவழியேதவிர அரபு மொழியில் தான் உரை நிகழ்த்த வேண்டும் என்பதல்ல. 

ஆனால்நம்மவர்கள் இரண்டாவது உரையை அரபியில் செய்வார்கள் முதல் உரையைதமிழில் செய்வார்கள். இரண்டாவது உரை அரபியில் தான் அமையவேண்டும் என்பது இவர்களின் வாதமாகும். இரண்டாம் உரையை அரபியில்தான் செய்ய வேண்டும் என்று சொல்பவர்கள் முதல் உரையையும் அரபியில்செய்ய வேண்டியதுதானே அதை மாத்திரம் ஏன் தமிழில் செய்ய வேண்டும்?

ஜும்மா உரையில் கலீபாக்களின் பெயர் கூற வேண்டுமா?

அபூபக்ர் (ரலி) உள்ளிட்ட நான்கு கலீபாக்களின் பெயர்களையும், நபிகள்நாயகம் (ஸல்) அவர்களினகுடும்பத்தினா்களின் பெயர்களையும் வாசித்துகுத்பாவில் துஆ செய்யும் வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில்இருக்கவில்லை. 

இருந்திருக்கவும் முடியாது. தனக்குப் பின் யார் கலீபாவாகவரவேண்டும் என்பதையே மக்களுக்கு அறிவிக்காத போது, எப்படி தனக்குப்பின் வந்த நான்கு கலீபாக்களின் பெயரைச் சொல்லி நபிகளார் துஆசெய்திருக்க முடியும்? 

மேற்கண்ட தோழர்கள் கலீபாக்களாக நியமிக்கப்பட்டகாலத்திலும் இப்படி ஒரு நடை முறை அவர்களால்அமுல்படுத்தப்படவில்லை. மிகவும் பிற்காலத்தில் வந்தவர்கள் தான் இப்படிஒரு வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். ஒவ்வொரு வாரமும் அந்தநபித்தோழர்களின் பெயர்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும் என்பதும்அவர்களுக்காக துஆ செய்வது ஜும்மாவின் விதிமுறைகளில் ஒன்றாகும் என்ற நிலையை ஏற்படுத்துவதும் பித் அத்தாகும். இது பாவமானசெயலாகும். இதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இமாம் இரு குத்பாக்களுக்கிடையில் அமரும் போது முஅத்தின்ஸலவாத்துச் சொல்லுதல்

இமாம் முதலாவது உரையை செய்துவிட்டு சற்று அமா்வார்.மீண்டும்இரண்டாவது குத்பாவுக்காக எழும்புவார்.இவ்வாறு இருகுத்பாக்களுக்கிடையில் இமாம் அமரும் போது, அவரை எழுந்து நிற்கச்செய்வதற்காக முஅத்தின் ‘அல்லாஹூம்ம ஸல்லிவசல்லிம் வபாரிக்வசல்லிம் அலை’ என்று ஸலவாத்துச் சொல்லும் நடைமுறை பெரும்பாலானபள்ளிகளில் இருக்கிறது.இதுவும் நபிவழியில் இல்லாத புது வழியாகும்.நபிகளார் இவ்வாறு அமரும் போது பிலால் (ரலி) அவா்கள் ஸலவாத்துச்சொன்னதாக எந்தவொரு செய்தியும் வரவில்லை.எனவே, இதை செய்வதும் பித்அத்தாகும்.

பித்அத்துவாதிகளே எச்சரிக்கை!

நாம் புரியும் எந்தவொரு வணக்கமாக இருந்தாலும் அது நபி (ஸல்) அவா்கள்காட்டித்தந்த அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். நபிவழிக்குமாற்றமாக எந்தப் பெரிய அறிஞா் சொல்லியிருந்தாலும் அதுபுறக்கணிக்கப்பட வேண்டிய குப்பை என்பதில் எள்முனையளவு கூடசந்தேகமில்லை. நாளை மறுமையில் நம் வணக்க வழிபாடுகள்இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நாம் வெற்றிபெற வேண்டுமாயின்எமது வாழ்விலும் வணக்கத்திலும் பித்அத்துகள் இடம் பெறக் கூடாது.

யாருடைய வாழ்வில் பித்அத் எனும் நபிவழியல்லாத புது வழிகள்இடம்பெற்று விடுகிறதோ அவரின் அமல்கள் யாவும் அல்லாஹ்வினால்நிராகரிக்கப்பட்டு விடும். எனது கட்டளையில்லாமல் யாரேனும் ஒருஅமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்.

(நூல் : முஸ்லிம், 3442).

இந்தமார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்.

(நூல் : புகாரி, 2697)

எனவே, நாமும் நபிவழியில் நடப்பதோடு, பிறரையும் அதன் பால் அழைக்கும்நன்மக்களாக மாறவேண்டும். தூய நபிவழியை பின்பற்றுவதற்காகபித்அத்துகளை விட்டும் விலகி நடப்பவா்களை யார் எதிர்க்கின்றனரோஅவா்கள்  நாளை மறுமையின் இறைவனின் விசாரணை மன்றத்தினைஅஞ்சிக் கொள்ளட்டும்!!!

எனவே ஸலபுக் கொள்கையுடையவர்களே!

இனியாவது பித்அத்தை விட்டு தவிர்ந்து நடக்க முழு முயற்சிகளை எடுப்போம்!!!

எமது இந்த தொடர் கட்டுரை பயணத்தில் பிழைகள், விமர்சனங்கள் இருப்பின் அவசியம் சுட்டிக்காட்டலாம்!!!! 

அல்குர்ஆனையும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் மாத்திரம் பின்பற்றி சுவனம் செல்ல முயற்சிப்போமாக!!!

இன்ஷா அல்லாஹ்!!!

தொடரும்…. 

நன்றி:- இணையம்….

🇱🇰 Jawahir Abu Hayan 🇶🇦

தொடர் - 01

தொடர் - 02

தொடர் - 03

தொடர் - 04

Search This Blog