தவ்ஹீத் ஜமாஅத் video's: பிறை
Showing posts with label பிறை. Show all posts
Showing posts with label பிறை. Show all posts

லைலதுல் கத்ர் 27வது இரவா?


   *லைலதுல் கத்ர்*

*ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்*

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)


லைலத்துல் கத்ரு எந்த நாள்?

லைலதுல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந்தாலும் அது

லைலதுல் கத்ர் 27வது இரவா

எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். “லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்” என்றார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)

அறபா நோன்பு எப்போது?

 அறபா நோன்பு எப்போது?



“அரபாவில் ஹாஜிகள் ஒன்று கூடும் தினத்தன்றுதான் அரபா நோன்பு என்று
எந்தவொரு ஹதீஸும் கிடையாது.”


வெளிநாட்டு பிறைத் தகவலை ஏற்க வேண்டும் என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் ஏற்கத்தேவையில்லை என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் அரபாவில் ஹாஜிகள் ஒன்று கூடுவதை வைத்தே அரபா தின நோன்பை நோற்க வேண்டும் என்ற ஓர் இஸ்லாமிய அடிப்படையற்ற கருத்து நிலவி வருகிறது. இச்சிந்தனை காரணமாக தொலைக்காட்சியிலும் வானொலியிலும் அரபா மைதானத்தின் நடக்கின்ற வணக்கவழிபாடுகள் ஒலி, ஒளி பரப்பப்படுகின்ற போது தாங்கள் ஏதோ மார்க்கத்திற்கு முரணான காரியத்தை செய்தது போன்று நோன்பு நோற்காதவர்களும் சவூதிற்கு முன்னர் வேறு நாடுகளில் துல்ஹிஜ்ஜா பிறை தென்பட்டும் அதை ஏற்காமல் அரபா ஒன்று கூடலை மட்டுமே வைத்து துல்ஹிஜ்ஜாவை தீர்மானிக்கும் வெளிநாட்டுப் பிறைத்தகவலை ஏற்கக் கூடிய சகோதரர்களும் சங்கடப்படுகின்றனர். உண்மையில் இது ஒரு நூதனமான சிந்தனையாகும். சில சகோதரர்கள் அவ்வாறு ஒரு ஹதீஸ் இருப்பதாகவும் கூறிவருகின்றனர். பின்வரும் விடயங்களைப் படிப்பவர்கள் உண்மை நிலையை அறிந்து கொள்வார்கள்.

பிறையைக் கணிக்குமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

 பிறையைக் கணிக்குமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள்.

நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை பார்த்து நோன்பு விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டமாக இருந்தால் கணித்துக் கொள்ளுங்கள் என்பதே அந்த நபிமொழி.

இந்த நபிமொழியில் மேகமூட்டமாக இருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கணித்துக் கொள்ளச் சொல்லி விட்டதால் வானியல் கணிப்பை ஏற்கலாம் என்று வாதிடுகிறார்கள்.

இவ்வாறு கூறுவது அவர்களுடைய வாதத்திற்கே முரண்பாடானது என்பதைப் பற்றி இவர்கள் சிந்திப்பதில்லை.

நீங்கள் பின்பற்றுவது சர்வதேச பிறையை அல்ல மாராக சவூதி பிறையையே!

 சர்வதேசப் பிறையால் சமூகத்தையும் குழப்பி  தாங்களும் குழம்ப வேண்டாம்!!!

 *** 01/05/2022 ** 

நீங்கள் பின்பற்றுவது சர்வதேச பிறையை அல்ல மாராக சவூதி பிறையையே!

நேற்றைய தினம் 30/04/2022 மாலை ஆப்கானிஸ்த்தான் நாட்டில் பிறை பார்க்கப்பட்டு ஆதாரங்களுன் அந்நாட்டு தாலிபான் அரசு பகிரங்கமா மீடியாக்களில் அந்த செய்தி வெளியிடப்பட்டது ஆனால் இலங்கை மற்றும் இந்தியா நாட்டு சர்வதேச பிறை வாசிகள் அதனை ஏற்கவில்லை காரணங்கள் பலதை தற்போது கண்துடைப்புக்காக வெளியிட்டு வருகின்றனர். 

அதனை கீழே தொடராக பார்க்கலாம்!!!!

பிறை தெரிய வாய்ப்பே இல்லாத நாளில் ச+வுதியில் எப்படி பிறை தெரிகிறது

பிறை தெரிய வாய்ப்பே இல்லாத நாளில் ச+வுதியில் எப்படி பிறை தெரிகிறது

CCD Imaging என்றால் என்ன?

இதை தெரிந்துகொள்வதற்கு முன்னால். X-Ray என்றால் என்னவென்று தெரிந்துகொள்வோம். நம் கண்ணால் காண முடிந்த கதிர்வீச்சை ஒளி என்கிறோம். இந்த ஒளியானது சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை, ஊதா போன்ற நிறங்களை உள்ளடக்கிய ஒளியாகும். இந்த ஒளியை தாண்டிய கதிர்வீச்சுக்களை மனித கண்களால் பார்க்க இயலாது. எடுத்துக்காட்டுக்கு அகசிவப்பு (infrared), புற ஊதா(ultra violet), X-Ray, Gamma Ray. 

X-ray என்பது ஆற்றல் மிகுந்த கதிர் வீச்சு ஆகும். இது மனித தசைகளை கூட ஊடுருவக் கூடியது. இதனால் தான் x-ray மூலம் மனித தசைகளுக்கு உள்ளே இருக்கும் எலும்புகளைப் படமெடுக்க முடிகிறது.

நாளின் ஆரம்பம் எது?

நாளின் ஆரம்பம் எது?

உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா??????

கேள்வி பிறையை பல வருடத்திற்கு முன்கூட்டியே கணித்து விடலாம் என்றும், சுபுஹுடைய நேரம் தான் நாளுடைய ஆரம்பம் என்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒற்றுமை கோஷம் கூறும் கூட்டத்தை அவர்கள் குறிவைத்து செயல்படுகிறார்கள். பிறை முன்கூட்டியே தெரிந்து விட்டால் எல்லோரும் ஒரே நாளில் பெருநாளை ஒன்றாகவும் அமைதியாகவும் கொண்டாடலாம் என்கிறார்கள். அதே போல் நபிகள் நாயகத்திற்கு இப்போதுள்ள அறிவியல் ஞானம் இல்லாததால் தான் பிறையைப் பார்த்து நாட்களை முடிவு செய்தார்கள். அவர்கள் எடுக்கும் உதாரணம், நார்வே போன்ற நாட்டைத் தான். அங்கு வருடத்தில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாக இருப்பதால் எப்படி பிறையைக் கணக்கிடுவார்கள்? தயவு செய்து நல்ல ஒரு பதிலை எதிர்பார்க்கிறேன்.

ரஃபீக் நாகர்கோவில்

பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள்

 பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள்

பிறையைக் கணித்துத் தான் நாளை முடிவு செய்ய வேண்டும்; பிறையைப் பார்க்கத் தேவை இல்லை என்று வரட்டு வாதம் புரிவோர் தங்கள் வாதத்தை நிறுவிட பிரசுரங்கள் வெளியிட்டு தங்கள் மதியீனத்தைப் பறைசாற்றி வருகின்றனர். இவர்களின் முழு வாதமும் கிறுக்குத்தனமாகவும், ஆதாரமற்ற உளறலாகவும் உள்ளன என்பதை சிறிதளவு சிந்தனை உள்ளவர்கள் கூட அறிய முடியும்.

ஹிஜ்ரா கமிட்டி என்ற பெயரில் பித்தலாட்டம் செய்யும் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இது குறித்து வரிசை எண் போட்டு முப்பது கேள்விகளைக் கேட்டுள்ளனர். இத்துடன் நாளின் ஆரம்பம் எது என்பது குறித்தும் வரிசை எண் போட்டு கேள்விகள் கேட்டுள்ளனர்.

லைலத்துல் கத்ரு - இஃதிகாஃப்

 லைலத்துல் கத்ரு இரவு

ரமளான் மாதத்தில் ஓர் இரவு உள்ளது. அந்த ஓர் இரவானது ஆயிரம் மாதங்களை விடச் சிறப்பானதாக அமைந்துள்ளது.


மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.

திருக்குர்ஆன் 97:1-3

இந்த மகத்துவமிக்க இரவு இது தான் என்று வரையறுத்து, குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ கூறப்படவில்லை. ஆனாலும் ரமளான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் அந்த இரவு அமைந்திருக்கலாம் என்பது தான் ஹதீஸ்களிலிருந்து பெறப்படும் உண்மையாகும்.

ஈடேற்றம் தரும் லைலத்துல் கத்ர்

 ஈடேற்றம் தரும் லைலத்துல் கத்ர்

பராஅத் இரவு, மிஃராஜ் இரவு என்று இல்லாத, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்லாத இரவுகளை உயிர்ப்பிப்பதிலும் ஊக்குவிப்பதிலும் உற்சாகம் காட்டி உணர்வூட்டும் உலமாக்கள், நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திய, வற்புறுத்திய ரமளான் மாதத்தின் பிந்திய பத்து இரவுகளை, அதில் அடங்கியுள்ள லைலத்துல் கத்ரை அடைவதற்கு ஆர்வம் ஊட்டுவதில்லை; ஆசை காட்டுவதில்லை.

ரமளான் 27ஆம் இரவு மட்டும் அமர்க்களமான, ஆர்ப்பாட்டமான அமல்களைச் செய்து விட்டு, அதுவும் நபி (ஸல்) அவர்கள் கற்றும் காட்டியும் தராத வகையில் அமல்களைச் செய்து விட்டு ரமளானின் பிந்திய 10 இரவுகளை இருட்டாக்கி விடுகின்றனர்; இல்லாமல் ஆக்கி விடுகின்றனர்.

இதற்குக் காரணம் 27ல் லைலத்துல் கத்ர் இருப்பதாக அவர்கள் குருட்டுத்தனமாக நம்புவது தான். அதனால் இதைத் தான் லைலத்துல் கத்ர் என்று துணிந்து பிரச்சாரமும் செய்கின்றனர். உப்புச் சப்பில்லாத, உருப்படாத ஆதாரங்களையும் எடுத்து வைக்கின்றனர்.

44. பிறையைத் தீர்மானிப்பதில் கருத்து வேறுபாடு சரியா?

 44. பிறையைத் தீர்மானிப்பதில் கருத்து வேறுபாடு சரியா?

இவ்வசனத்தில் (2:185) "ரமளான் மாதம் பிறந்து விட்டால் நோன்பு நோற்க வேண்டும்'' என்று கூறாமல் "யார் ரமளானை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

பொதுவாக மாதம் துவங்குவதைப் பற்றிப் பேசும் போது இவ்வாறு யாரும் கூறுவதில்லை. திருக்குர்ஆன் தக்க காரணத்துடன் தான் வழக்கத்தில் இல்லாத ஒரு வார்த்தைப் பிரயோகத்தை இந்த இடத்தில் பயன்படுத்தியிருக்கிறது.

பிறை சம்பந்தமான முக்கியமான சான்றாக இந்த வசனம் அமைந்து உள்ளது.

திருக்குர்ஆன் ஏகஇறைவனின் வார்த்தை என்பதை நாம் அறிவோம். மனித வார்த்தைகளில் காணப்படும் தவறுகள் இறைவனின் வார்த்தைகளில் இருக்காது; இருக்கவும் முடியாது.

தேவையில்லாத ஒரு சொல் கூட அதில் இடம் பெறாது என்பதில் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அழுத்தமான நம்பிக்கை உண்டு. இந்த நம்பிக்கையை மனதில் இருத்தி இந்த வசனத்தை ஆராய்வோம்.

உங்களில் யார் ரமளான் மாதத்தை அடைகிறாரோ அவர் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை”

Search This Blog