*** 01/05/2022 **
நீங்கள் பின்பற்றுவது சர்வதேச பிறையை அல்ல மாராக சவூதி பிறையையே!
நேற்றைய தினம் 30/04/2022 மாலை ஆப்கானிஸ்த்தான் நாட்டில் பிறை பார்க்கப்பட்டு ஆதாரங்களுன் அந்நாட்டு தாலிபான் அரசு பகிரங்கமா மீடியாக்களில் அந்த செய்தி வெளியிடப்பட்டது ஆனால் இலங்கை மற்றும் இந்தியா நாட்டு சர்வதேச பிறை வாசிகள் அதனை ஏற்கவில்லை காரணங்கள் பலதை தற்போது கண்துடைப்புக்காக வெளியிட்டு வருகின்றனர்.
அதனை கீழே தொடராக பார்க்கலாம்!!!!
ரமழான் மற்றும் ஹஜ் காலம் வந்தால் இந்த சர்வதேச பிறைவாசிகள் வரிந்து கட்டிக்கொண்டு அனைவரையும் பிழையாக்கி தாங்கள் மாத்திரம் சுவனவாசிகள் போல உலா வருவதனைக் காணலாம்!
இவர்கள் இந்த 2022 இல் மாத்திரமல்லாமல் பல பெருநாட்களை இவ்வாறுதான் குழப்பமா க்கினார்கள்!
இவர்கள் ஆப்கானிஸ்த்தான் நாட்டின் பிறையை ஏற்காததன் வேடிக்கையான காரணங்கள்!!!
1, இலங்கையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகின்றமை!
2, ஆப்கானிஸ்த்தானில் இவர்களுக்கான தொடர்புகள் இல்லாமை!
3, அவர்கள் பிறை சாட்சியை அறிவிக்கின்றபோது ரமழான் களைப்பில் தூங்கியமை!
4, ஆப்கானிஸ்த்தான் ஓர் அரபு நாடு இல்லை என்றமை!
5, ஆப்கானிஸ்த்தான் நாட்டுடனான தொலைத்தொடர்பு முற்றிலும் இல்லாமை!
6, அவர்களை முஸ்லிமாக நினைக்காமை!
7, ஆப்கானிஸ்த்தான் பிறை அறிவிப்பு விடயத்தில் இவர்கள் மத்தியில் பல சர்ச்சைகள் ஏற்பட்டமை!
8, நபி ஸல் அவர்களுக்கு தெறியாததை நாங்கள் தெறிந்து வைத்துள்ளோம் என்ற மமதையா?
:------இன்னும் பல காரணங்கள்------:
சர்வதேச பிறையாளர்கள் என சொல்லிக் கொள்ளும் இந்திய JAQ ஜாக், இலங்கை சர்வதேச பிறை வாசிகள் கிட்டத்தட்ட 02 அல்லது 03 மணி நேரம் காத்திருந்து சவுதி பிறையை எடுத்துக் கொள்ளும் நீங்கள் இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே ஒரு மணி நேரம் தான் வித்தியாசம்.
அந்நாட்டில் பிறைத் தெரிந்து மே 01 பெருநாளை கொண்டாடி விட்டார்கள்.
தற்போது உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.
இன்று (May 01) உலகில் சில நாடுகளில் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது.
சிலர் உள்நாட்டு பிறையை அடிப்படையாக வைத்தும் சிலர் கணிப்பீட்டின் (பிறை கலண்டர்) அடிப்படையிலும் பெருநாளை தீர்மானித்துள்ளனர்.
Afghanistan: https://mmnews.tv/moon-sighted-in-afghanistan-eid-on.../amp/
India: Hijri committee of India (கணிப்பீடு)
Mali: local sighting
Niger: local sighting.
இந்திய நாட்டின் JAQ ஜாக்கின் இரட்டை வேடமும் இலங்கை சர்வதேச பிறைவாசிகளின் இரட்டை வேடமும் அம்பலம்!
சர்வதேச பிறை விஷயத்தில் இந்த சர்வதேச பிறைவாசிகளின் சவுதி அடிமைத்தனம் வெளிப்பட்டுள்ளது.
உலகில் எங்கு பிறை தெரிந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று சொன்னவர்கள் தற்போது ஆப்கானிஸ்தானில் பிறை பார்க்கப்பட்டு அவர்கள் இன்று 01.05.22 (ஞாயிறு) பெருநாள் அறிவித்திருக்கும் நிலையில்!
அதை அப்படியே புறந்தள்ளிவிட்டு பிறை விஷயத்தில் சவுதியின் அறிவிப்பை பின்தொடர்கின்றனர். இதன் மூலம் இவர்களது இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.
இப்படித்தான் ஒவ்வொரு பிறை விஷயத்திலும் இரண்டு நிலைபாடுகளை வைத்துக்கொண்டு உள்ளொன்றும் புறமொன்று மாக நடித்து நாடகம் ஆடி வருகின்றனர் இந்த கூட்டத்தினர்.
நபித்தோழர்களை நாங்கள் பின்பற்ற மாட்டோம் என்று வெளியில் பேசுவார்கள்.
ஆனால் சலபி கொள்கையை பின்பற்றி சவுதியை குளிர்விக்க நபித்தோழர்களை பின்பற்றுவதை கொள்கையாக வைத்துள்ளார்கள். இதிலும் இரட்டை வேடம்தான்.
திருந்துங்கள் இலங்கை வாழ் மக்களே!
திருந்துங்கள் இந்தியா JAQ ஜாக் மக்களே!
இல்லாவிட்டால் JOKE மக்களாக மாறிவிடுவீர்கள்!
அல்லாஹ்விடம் நஷ்டவாளிகளாக ஆகிவிடுவீர்கள்.
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
சர்வதேச பிறைவாசிகளுக்கு எதிராக FBஇல் வெளியிடப்பட்ட ஓர் ஆக்கம்!
சர்வதேச பிறை அல்ல, பிழை !!
- உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி
சர்வதேச பிறை என்பது அறிவுக்கு அடிமையானதினால் ஏற்பட்ட குறையே தவிர, வேறெதுவும் இல்லை !!
அறிவை படைத்த ரப்புவின் கட்டளைகளுக்கு, இறைத்தூதர் வழியில் நின்று விளங்கினால் பகுத்தறிவு பெற முடியும் !!!
இப்னு உமர் رضي الله عنه அவர்களின் அறிவிப்பில் வருகின்ற "பிறையை கண்டால் நோன்பு வையுங்கள், இன்னும் நோன்பை விட்டு விடுங்கள். மேகமூட்டமாக இருந்தால் கணக்கிட்டு கொள்ளுங்கள் (முப்பதாக)"
صحيح البخاري ( 1906, 1907 ) صحيح مسلم ( 1080 ) سنن أبي داود ( 2320 ) سنن النسائي ( 2120, 2121, 2122 ) سنن ابن ماجه ( 1654 ) موطأ مالك ( 781, 782 ) سنن الدارمي ( 1726, 1732 ) مسند أحمد ( 4488, 4611, 5294, 6323 )
இந்த அளவு தெளிவான ஆதாரமுள்ள ஹதீஸ்கள் இருந்தும்,
நட்சத்திர கணக்கை கையாண்டும், கிரிகோரியன் காலண்டர் கணக்கை கையாண்டும்,
"உலக முஸ்லீம்களை ஒன்றிணைத்து பரஸ்பரத்தை வலுப்படுத்துவோம்" போன்ற பாசாங்குகள் அனைத்தும் விசுவாசிகளுக்கு அழகல்ல....!!!
சமூக ஒற்றுமை என்பது ஃபர்ளு ஆகும். ஒவ்வொரு வருடமும் இந்த பிறை சர்ச்சையினால் சமூகம் ஒன்றல்ல, பல குழுக்களாக, பல நாட்களில், ஈது தொழுகையை தொழுகிறார்கள்,
وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا
நீங்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள். (அல்குர்ஆன் : 3:103)
"சவுதி அரேபியாவை பின்பற்றுகிறோம்" என்று கூறும் மக்கள் விளங்கிக் கொள்ளுங்கள். சவுதி அரசாங்கத்தின் அதிகாரமிக்க உலமா சபை, "எங்களைப் பின்பற்ற வேண்டாம். உங்கள் ஊர்களில், நீங்கள் பிறை கண்டு நோன்பு வையுங்கள்" என்று கூறியும் இவர்கள் தடுமாறுகிறார்கள்....!!!
ஏக இறைவனின் இறுதியான, உறுதியான, பிறை விடயத்தில், தனது கட்டளையை இறைத்தூதர் ﷺ அவர்களின் மூலமாக நமக்கு அறிவுறுத்தப்பட்டும்,
நமது ஸலபுகளாகிய (முன்னோர்களாகிய) சத்திய சஹாபாக்களின் வழி முறையும், கண்ணியமான 4 மத்ஹபுகளுடைய இமாம்களின் ஏகோபித்த கருத்தும் اختلاف المطالع - "பிறையின் மாறுபட்ட உதிப்பு சரியே! எந்த நாடுகளில் பிறை தென்படுகிறதோ, அங்கு முடிவெடுக்கப்படவேண்டும். நோன்பு உண்டா ? இல்லையா" என்று. எவ்வாறு, தொழும் நேரம் ஒவ்வொரு நாடுகளிலும் மாறுபடுகின்றனவோ, அதை நாம் ஏற்று கொள்கின்
றோமோ, அது போன்றுதான் ஏற்க வேண்டும். தேசிய பிறையை கூட ஏற்க முடியும். ஆனால், சர்வதேச பிறை என்பது ஒரு பிழை. ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா رحمه الله அவர்கள் கூறும்பொழுது " நட்சத்திர கணக்கீடு இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை. இதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை." இதுதான் ஆதாரபூர்வமான நபிமொழிகளின் மூலம் இன்னும் ,ஸஹாபாக்களின் வழி முறையும் ஆகும்.
மஜ்மஉல் பதவா - 207/25.
முஸ்லிம் கிரந்தத்தில் உள்ள குரைப் பின் அபூமுஸ்லிம் رضي الله عنه அவர்களின் சம்பவத்தில், மதீனாவிலிருந்து ஷாம் தேசத்திற்கு, அவர்கள் ஒரு பணி நிமித்தமாக, முஆவியா رضي الله عنه அவர்களை சந்திக்க செல்கின்றார்கள்.
அங்கு ஜும்மா இரவில் பிறை பார்க்கப்பட்டு, நோன்பு நோற்று விட்டு, அந்த ரமலானின் இறுதியில், மதீனா வருகின்றார்கள்.
அங்கு, இப்னு அப்பாஸ் رضي الله عنه அவர்களை சந்தித்து, ஷாம் தேசத்தில் அவர்கள் நோன்பு நோற்ற தினமாக, ஜும்மா இரவை அவர்கள்رضي الله عنه குறிப்பிட, அதற்கு இப்னு அப்பாஸ் அவர்கள், "நீங்கள் பிறையை ஜும்மா இரவு கண்டீர்களா ?" என கேட்க, "ஆம். அங்கு மக்கள் அனைவரும் கண்டனர்.
எனவே முஆவியாرضي الله عنه அவர்களும் நோன்பு பிடித்தனர்" என்று கூறினார்கள். இப்னு அப்பாஸ் அவர்கள் "நாங்கள் சனி இரவு தான் கண்டோம். ஆதலால், நாங்கள் ஒரு நாளில் நோன்பை தொடர்ந்து, முப்பதை பூர்த்தி செய்வோம் அல்லது பிறையை பார்த்து விடுவோம்." என்றார்கள்.
குரைப் رضي الله عنه அவர்கள், இப்னு அப்பாஸ் அவர்களை கேட்கிறார்கள், "ஏன் முஆவியா அவர்கள் கண்டு நோன்பு பிடித்தது போதாதா ?" என்று. அதற்கு இப்னு அப்பாஸ் அவர்கள் (தெளிவு படுத்துகின்றார்கள் ) "இல்லை. இவ்வாறு நமக்கு (கண்ணால் காண ) இறைத்தூதர் ﷺ அவர்கள் கட்டளை இட்டுள்ளார்கள்" .
صحيح مسلم ( 1087, 1088 )
سنن أبي داود ( 2327, 2332 )سنن الترمذي ( 688 )
سنن النسائي ( 2111, 2124, 2125, 2129, 2130, )
موطأ مالك ( 783 )
سنن الدارمي ( 1725, 1728 ) مسند أحمد
( 1931, 1985, 2335, 2789, 3021,
3208,3515 )
இந்த ஹதீஸிருந்து விளங்கும் சில வழிகாட்டல்கள் :-
🔹இந்த ஹதீஸை அறிவித்த இமாம் திர்மிதி رحمه الله அவர்கள், "இந்த ஸஹீஹான அறிவிப்பு, ஒவ்வொரு நாட்டிற்கும் பிறை பார்க்க வேண்டும்
என்பதற்கு வலு ஊட்டுகின்றது" என்றும், "எந்த ஊரில், அதிகப்படியான மக்கள், ஜமாத்தாக ஒரு முடிவினை பிறை விடயத்தில் எடுகின்றார்களோ, அதையே மற்றவர்களும் பின்பற்ற வேண்டும்" என்றும், தங்கள் கிரந்தத்தில் குறிப்பிடுகிறார்கள் ,
🔸எனவே, தூரமாக இருந்த ஷாம் தேச பிறையை (சர்வதேசமயமாக்கல் பிறையை ) ஹிஜாஸ் பகுதியில் உள்ள இறைத்தூதர் அவர்களின் தோழர்கள் ஏன் எடுத்து கொள்ள வில்லை? முஆவியா அவர்களின் கிலாபத்தில், ஷாம் அப்பொழுது ஒரே சாம்ராஜியத்தில் இருந்தது என்பதையும், ஏன் இந்த சர்வதேச பிறைவாதிகள் சிந்தனை கொள்ளவில்லை ?!!
🔹அவர்களை விட, நாம் இன்று அறிவு ஜீவிகளாக ஆகிவிட்டோமா !!
🔸அது போன்று, சர்வதேச பிறையை போதிப்பவர்கள், மக்களை இந்த விடயத்தில் குழப்பத்தில் இட்டு விடுகின்றனர். அதாவது, "நீங்கள் கண்டது பிறை அல்ல, பிழை. பிறை மிகப்பெரியது. பாருங்கள், அறிவிற்கும் பொருந்தவில்லை நீங்கள் கண்ட பிறை" என்று கூறுகிறார்கள்.
🔹சரியான பிறையின் அளவுகோல் - "பிறையின் அளவு சிறியதா ? அல்லது பெரியதா ?" என்பதை வைத்தும் அல்ல என்பதை, கீழ் உள்ள அறிவிப்பை தலைப்பாகவே வைத்து, இமாம் நவவி رحمه الله அவர்கள் முஸ்லிம் கிரந்தத்தில் சுட்டி காட்டியுள்ளனர்.
மற்றும் ஒரு ஆதாரபூர்வமான அறிவிப்பு, முஸ்லிம் கிரந்தத்தில் அபுல் பக்தரி என்ற சயீது பின் அல் புரோஸ் அவர்கள் மூலம், அறிவிக்கபட்டுள்ள ஒரு சம்பவம் உள்ளது ,
"நாங்கள் உம்ரா செய்வதற்காக சென்றோம் "நக்லா" என்ற இடத்தை அடைந்த பொழுது பிறை காண சிரமப்பட்ட பொழுது, "சிலர் மூன்றாம் நாள் என்றனர். சிலர் இல்லை இரண்டாம் நாள்" என்றனர். அதை, இப்னு அப்பாஸ் அவர்களை வைத்து கேட்டோம். அதற்கு இப்னு அப்பாஸ் அவர்கள் வினவினார்கள், "எந்த இரவில் கண்டீர்கள்?" என்று. நாங்கள் கூறினோம்.
'இந்த இந்த இரவென்று', அதற்கு அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள், அதாவது உங்கள் பார்வைக்காக அல்லாஹ் அதை நீட்டி கொடுத்தான். எந்த இரவில் நீங்கள் கண்டீர்களோ, அது தான் பிறை" என்று ,
صحيح مسلم 8 ( 29 ) (المجلد : 3 الصفحة : 127)
அன்று, இன்றுபோல் ஒரே வீட்டில் இரண்டு பெருநாட்களை (சர்வதேசமயமாக்கல் பிறையின் தாக்கதால் )
அவர்கள் நம்மை போல் கொண்டாட வில்லை. ஆதலால், அடித்துக் கொண்டு, நமது ஒற்றுமையை குலைக்க வில்லை !!
எனவே, பிரச்சினை நாடுகளின் எல்கைகள் அல்ல!!! பிறை தென்பட்டு அதை பார்ப்பது தான்.
ஒரே இறைவன், ஒரே தூதுவர் ஒரே மார்க்கம், ஒரே சர்வதேச பிறை என்பது கேட்பதற்கு அழகாக உள்ளது. இந்த சிந்தனையின் வெளிப்பாடுவ்தான், இன்று பல ஈத் தொழுகையை அடுத்தடுத்த நாட்களில் தொழ வைத்து, நம் ஒற்றுமையை கூறு போட்டு விட்டது. முஸ்லிம்களின் ஒற்றுமையை பேணுவது, பர்ள் அல்லவா !!
எனவே, இறைவனின் கட்டளைகளை விட்டும், நம்மை திசை திருப்பும் எந்த சர்வதேச பிறையும், நம்மை நமது சத்திய பாதையிலிருந்து வழி தவற வைத்து விட கூடாது. சர்வதேச பிறை - ஒரு பிழை என்பதின் பால், நாம் மக்களை அழைப்போம் வாருங்கள்.
"இன்னும், அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்டதன் பின், எதுவும் உம்மை அவற்றை விட்டும் நிச்சமயாகத் திருப்பி விடாதிருக்கட்டும்; மேலும் நீர் உம்முடைய இறைவன் பால் (அவர்களை) அழைத்தே வருவீராக நிச்சயமாக நீர் இணைவைப்போரில் ஒருவராகி விடவேண்டாம்." (அல்குர்ஆன் -28:87)
இன்ஷா அல்லாஹ்:-
தொடரும்.....
அபூ ஹயான் கட்டார்
jawahirjamali@gmail.com
Wtsapp :- +974 30079439
short link https://rb.gy/m3v0a
பிரை தொடர்புடைய மேலும் சில கட்டுரைகளை காண இங்கே கிளிக் செய்யவும்
