தவ்ஹீத் ஜமாஅத் video's: அல்ஃபலக் விரிவுரை
Showing posts with label அல்ஃபலக் விரிவுரை. Show all posts
Showing posts with label அல்ஃபலக் விரிவுரை. Show all posts

5- ஹாரூத் மாரூத் மலக்கா? தொடர் : 05 ஃபலக் விரிவுரை

 ஹாரூத் மாரூத் மலக்கா?


ஃபலக் அத்தியாயத்தின் விரிவுரை தொடர் : 05

நாம் திருக்குர்ஆனில் உள்ள சின்னஞ்சிறிய அத்தியாயங்களுக்கு விரிவுரையைப் பார்த்து வருகிறோம். அந்தத் தொடரில் நபியவர்களுக்கு யூதர்களால் சூனியம் வைக்கப்படுவதாகச் சொல்லப்படும் செய்தி, குர்ஆனிலுள்ள பல்வேறு வசனங்களுக்கு நேரடியாக முரண்படுவதாலும், அது சம்பந்தமாக அறிவிக்கப்படுகிற செய்திகளில் பல்வேறு முரண்பட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாலும் நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்ற செய்தி சரியானதாக இல்லை. ஒரு மனிதரை சூனியம் செய்து அழிக்கவோ ஒழிக்கவோ முடியாது என்பது தான் இதுவரை நாம் பார்த்ததின் சாராம்சம்.

இதன் தொடர்ச்சியாக, சூனியம் சம்பந்தமாக திருக்குர்ஆனின் 2 வது அத்தியாயமான சூரத்துல் பகராவின் 102 வது வசனம் தெளிவாகப் பேசுகிறது.

இன்று நம் காலத்தில் வாழ்கிற பெயர் தாங்கி ஆலலிம்கள் நாங்கள் ஜின்களை அடக்கிவைத்திருக்கிறோம் என்றும் எங்களுக்கு மாயமந்திரம் தெரியும், பில்லிலிசூனியம் தெரியும் என்றும் கூறி மக்களைப் பயங்காட்டி பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அது போல் நபிகள் நாயகத்தின் காலத்தில் வாழ்ந்த யூதர்களும் அன்றைய மக்களிடத்தில், எங்களை ஏதாவது செய்தீர்களென்றால் நாங்கள் சூனியம் செய்து உங்களை வீழ்த்திவிடுவோம் என்று சொல்லிலி மாயமந்திரங்களாலும் பில்லிலிசூனியத்தினாலும் அச்சுறுத்தி வந்தனர்.

4-நபிகள் நாயகத்துக்குச் சூனியம் செய்யப்பட்டதா? தொடர் : 4

நபிகள் நாயகத்துக்குச் சூனியம் செய்யப்பட்டதா?

ஃபலக் அத்தியாயத்தின் விரிவுரை
தொடர் : 4

  சூனியத்தை உண்மை எனக் கூறுவோரின் ஆதாரங்கள் : "சூனியம் என்பது கற்பனை அல்ல; மெய்யான அதிசயமே. அதன் மூலம் ஒரு மனிதனின் கை கால்களை முடக்கலாம். படுத்த படுக்கையில் தள்ளலாம். பைத்தியமாக ஆக்கலாம்'' என்றெல்லாம் பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். அவர்கள் தமது கூற்றை நிரூபிக்க சில ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர்.

புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு நபிமொழித் தொகுப்புக்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதன் ஒருவன் சூனியம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ்களைத் தங்களின் கருத்தை நிரூபிக்கும் முதல் ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். அந்த ஹதீஸ்கள் வருமாறு:

3- ஸிஹ்ர் என்றால் என்ன? தொடர் :3 (ஃபலக் விரிவுரை )

 ஸிஹ்ர் என்றால் என்ன?


ஃபலக் அத்தியாயத்தின் விரிவுரை


மூஸா நபி அவர்கள் அற்புதங்கள் செய்து காட்டிய போது அதை மறுப்பதற்காக எதிரிகள் பயன்படுத்திய வாசகம் ஸிஹ்ர் என்பது தான். அதாவது இவர் செய்வது உண்மை அல்ல ஸிஹ்ர் அதாவது பித்தலாட்டம் என்று அவர்கள் கூறினார்கள். நபி மூஸா அலை அவர்களுக்கு எதிராக அவர்களது சமூகம் சொன்ன பதிலையே நபி ஈஸாவின் சமூகமும் அவருக்குச் சொன்னது.

 "மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண் குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தோரை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலி ன் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டுவந்தீர்! அப்போது "இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை'' என்று அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர் கூறியபோது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக! என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 5:110)

2- சூனியமா? தந்திரமா? ஃபலக் விரிவுரை தொடர் : 2

 சூனியமா? தந்திரமா? 


ஃபலக் அத்தியாயத்தின் விரிவுரை  
தொடர் : 2


 وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ  

முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக! 


 இந்த வசனத்தின் விளக்கத்திற்குச் செல்வதற்கு முன்னால் ஸிஹ்ர்-சூனியம் சம்பந்தமாக அக்குவேறாக ஆணிவேராக பார்ப்பது மிகவும் நல்லது. இனிவரும் காலங்களில் இந்த வசனத்தைத் தவறாக விளங்கிவிடாத அளவுக்கு நாம் சூனியத்தை விரிவாக அலசவேண்டும். இந்த வசனத்தை யார் யார் எப்படி எப்படியெல்லாம் தவறாக விளங்கியும் விளக்கியும் உள்ளனர் என்பதையெல்லாம் தெளிவாக தெரிந்து கொள்வதின் மூலம் நமது ஈமானுக்கு பாதுகாப்பாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்டிக் கொள்கிறேன். எனவே தற்போது இந்த வசனத்தை நிறுத்திவைத்துவிட்டு சூனியத்திற்குள் நுழைந்துவிட்டு அதில் தெளிவு பெற்றபிறகு இந்தவசனத்தை விளக்கினால் மிகஎளிதாக விளங்கிட முடியும்.


ஷைத்தானின் தூண்டுதலில் இருந்தும் இலகுவாக தப்பித்துக் கொள்வதற்கு சரியான வழியாக இருக்கும் என்பதை கூறிக் கொண்டு சூனியத்திற்குள் நுழைவோம். முதலில் ஸிஹ்ர் என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்று அலச வேண்டும். தற்போது, ஸிஹ்ர் என்ற வார்த்தைக்கு பில்லி, சூனியம், மாயமந்திரம் போன்ற அர்த்தங்களில் இன்று உலமாக்களும் பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு வார்த்தைக்கு அர்த்தத்தை நாமாக தீர்மானிக்கக்கூடாது. ஒரு வார்த்தையின் நேரடியான பொருளை, அர்த்தத்தைத் தெரிந்து கொள்வதற்கு அந்த மொழியின் அகராதியைப் பார்க்க வேண்டும். அந்த அடிப்படையில் ஸிஹ்ர் என்பதற்கு நேரடிப் பொருள் (கவனத்தை) ஈர்த்தல், (கவர்தல்) என்று பொருள். உதாரணமாக ஒருவர் தனது பேச்சினால் மக்களைக் கவர்ந்து ஈர்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதற்குப் பெயர் ஈர்க்குதல் (ஸிஹ்ர்) என்று பெயர்.

6-முடிச்சுகளில் ஊதும் பெண்கள் ஏன்றால் யார்? ( ஃபலக் விரிவுரை 6 )

 முடிச்சுகளில் ஊதும் பெண்கள் ஏன்றால் யார்?


ஃபலக் அத்தியாயத்தின் விரிவுரை
 தொடர் : 06

அடுத்ததாக, ஸிஹ்ர் - சூனியம் செய்யும் மார்க்க அறிஞர்களுக்கு ஒரு விசயத்தைச் சொல்லிக் கொள்கிறோம். சூனியம் என்பது பெரும்பாவம் ஆகும். அதுவும் இறைமறுப்பு எனும் குஃப்ர் என்ற பாவத்தில் சேர்த்து விடுகிற குற்றமாகும்.
"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகüன் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறை நம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்கüன் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)'' என்று (பதில்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி 2766,6857முஸ்லிம் 451

முதலாவது விலகிக் கொள்ளவேண்டிய பாவம், அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, இரண்டாவதாக விலகிக் கொள்ள வேண்டிய பாவம் ஸிஹ்ர்-சூனியம். விலகிக் கொள்வது என்றால், அதைச் செய்யவும் கூடாது, நம்பவும் கூடாது என்பதாகும். ஒன்றிலிருந்து விலகுதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்றைச் செய்வது கூடாது என்றால் அதைச் செய்வதற்குக் கொடுக்கவும் கூடாது என்றுதானே பொருள். வட்டி வாங்குவது கூடாது என்றால் வட்டிக்குக் கொடுப்பதுவும் கூடாதுதான். பச்சை குத்தக்கூடாது என்றால் பச்சை குத்துவதற்குக் கொடுக்கவும் கூடாதுதான். ஜோதிடம் பார்ப்பது கூடாது என்றால் அவனிடம் போய் கையை நீட்டவும் கூடாது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.

1-மனிதனுக்கு தீங்கு தருபவை (அல்ஃபலக் விரிவுரை -தொடர் : 1)

 மனிதனுக்கு தீங்கு தருபவை -தொடர் : 1


அல்ஃபலக் ஆத்தியாயத்தின் விரிவுரை
 

113 வது அத்தியாயத்தின் பெயர் ஃபலக் (அதிகாலை) என்பதாகும். இந்த அத்தியாயத்தின் மூலம் மனிதன் இறைவனிடம் எவ்வாறு பாதுகாப்புத் தேடவேண்டும் என்று அல்லாஹ் கற்றுத் தருகிறான். முதலில் இந்த அத்தியாயத்தின் நேரடியான பொருளைப் பார்ப்போம்.

 قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ(1)مِنْ شَرِّ مَا خَلَقَ(2)وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ(3)وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ(4)وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ(5)

அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன்: 133:1,2,3,4,5)

 قُلْ - குல் - என்று இந்த அத்தியாயம் துவங்குகிறது. இதன் பொருள் சொல்வீராக என்பதாகும். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி இடப்படும் கட்டளையாக இருந்தாலும் இது அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியதாகும். எந்த விஷயம் நபிகள் நாயகத்துக்கு மட்டும் உரியதாக இருக்கிறதோ அவை தவிர மற்ற கட்டளைகள் நபியை நோக்கி சொல்லப்படுவது போல் இருந்தாலும் அது அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குர்ஆன் நபிகளுக்காக மட்டும் அருளப்படவில்லை. أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ - அவூது பிரப்பில் ஃபலக் என்பதன் பொருள் அதிகாலையின் (வைகறைப் பொழுது) இரட்சகனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்பதாகும். இந்த வசனத்தில் இடம் பெறும் ஃபலக் என்ற வார்த்தைக்கு 1. அதிகாலை (வைகறைப் பொழுது) சுப்ஹ் 2. சந்திரன் ஆகிய இரண்டு அர்த்தங்கள் உள்ளன. இதில் எந்த அர்த்தம் வைத்துக் கொண்டாலும் தவறில்லை.

Search This Blog