தவ்ஹீத் ஜமாஅத் video's: பெண்கள்
Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

494 மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிக்கு வரலாமா?

 
494. மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிக்கு வரலாமா?

பள்ளிவாசல்கள் மிகவும் புனிதம் வாய்ந்த இடங்களாகும். பள்ளிவாசல்களில் எத்தகைய ஒழுங்குகளைப் பேணி நடக்க வேண்டும் என்று திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. பள்ளிவாசல் அல்லாத இடங்களில் நாம் நடந்து கொள்வதைப் போன்று பள்ளிவாசல்களில் நடந்து கொள்வது கூடாது.

குளிப்புக் கடமையான ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களாக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய குளிப்புக் கடமை நீங்கி சுத்தமாகின்ற வரை பள்ளிவாசல்களுக்குள் நுழைவது கூடாது என்பதும் அந்த ஒழுங்குகளில் ஒன்றாகும்.

பெண்கள் கால்களை கட்டாயம் மறைக்க வேண்டுமா?

 பெண்கள் கால்களை கட்டாயம் மறைக்க வேண்டுமா?




பெண்கள் தங்கள் கால்களை மறைக்க வேண்டுமா? அபாயா கால்களை மறைத்தால் அது தரையில் இழுபடுமே.! தொழும் பொழுதும் கால்களை மறைக்க வேண்டுமா? மார்க்க அடிப்படையில் விளக்கம் தரவும்!

ஹமீத் ஷேக்

பதில் :

பெண்கள் தங்களுடைய பாதங்கள் உட்பட கால்கள் முழுவதையும் மறைப்பது கட்டாயம் என்று சிலர் கூறுகின்றனர்.  இக்கூற்று தவறாகும்.

இக்கருத்துடையவர்கள் சில ஆதாரங்களை முன்வைக்கின்றனர். தங்கள் முடிவை நிரூபிக்கும் ஆதாரங்களாக அவை இல்லை. சில ஆதாரங்கள் பலவீனமானவையாக உள்ளன. அவற்றை விரிவாகப் பார்ப்போம்.

திருமண விருந்தின் அளவு என்ன?

 திருமண விருந்து

திருமண விருந்திற்குரிய அளவு என்ன? இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்று நபியவர்கள் நிர்ணயித்துள்ளார்களா? நமக்கு வசதி இருந்தால் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் நாம் திருமண விருந்து அளிக்கலாமா?

நபியவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது யாரையும் விட்டு வைக்காத அளவிற்கு நூற்றுக்கணக்கானவர்களுக்குத் திருமண விருந்து அளித்ததாக ஹதீஸ்களில் வந்துள்ளதே! இதற்கான விளக்கம் என்ன? திருமண விருந்து தொடர்பாக இப்படிப் பல்வேறு கேள்விகளை சகோதரர்கள் எழுப்பி வருவதைப் பார்க்கிறோம். அதற்கான விளக்கங்களை பார்ப்போம்.  

13 - விவாகரத்தானவர்கள் குழந்தையை எவ்வாறு பராமரிக்க வேண்டும்

 விவாகரத்தானவர்கள் குழந்தையை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். 

விவாகரத்தானவர்கள் குழந்தையை எவ்வாறு பராமரிக்க வேண்டும். ஆண் பெண் குழந்தைகள் யாரிடம் இருக்க வேண்டும். பெற்றோர்கள் எவ்வாறு குழந்தைகளை பார்வையிடு வது போன்ற மார்க்க சட்டங்கள் திருமன சட்டத்தில் காண முடியவில்லை. அவற்றை இணைக்க வேண்டும். தற்போது இலங்கையில் பிள்ளைகளின் பாதுகாப்புரிமை காதி நீதிமன்றங்களில் அல்லாமல் மாவட்ட நீதிமன்றங்களினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தை குடும்ப நீதுிமன்றங்களாக மாற்றப்பட்ட காதி நீதிமன்றங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் தோழன், 

ஆர். அப்துர் ராஸிக் B.Com (Special), HND in Law (EDHat), LLB UK (Hons) Reading

வட்ஸ் அப் எண்:

0778-747377

முத்தலாக் முறை அவசியம் நீக்கப்பட வேண்டும். கைகூலி முறை சட்ட விரோதமாக்கப்பட வேண்டும்

 முத்தலாக் முறை அவசியம் நீக்கப்பட வேண்டும்.

தலாக் மற்றும் பஸஹ் நடைமுறையின் கீழ் விவாகரத்து பெற்றுக் கொள்ளும் போது உரிய நிபந்தனைகள் விடுக்கப்பட வேண்டும். மேல்முறையீட்டு செயற்பாடுகளின் போது கணவர் மற்றும் மனைவி ஆகியோருக்கு விவாகரத்து நடைமுறைசமமாக காணப்பட வேண்டும். 

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம், முபாரத் மற்றும் குலா ஆகிய விதத்தில் விவாகரத்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் விவாகரத்து முறையில் தற்போதுள்ள முத்தலாக் முறைமாற்றம் செய்யப்பட வேண்டும்.

7,8 -முஸ்லிம்களின் திருமண வயதெல்லை எப்படி அமைய வேண்டும்?

 முஸ்லிம்களின் திருமண வயதெல்லை எப்படி அமைய வேண்டும்?

சட்டத்தின் பிரிவு 23ல் திருமண வயது குறித்து சில விவரங்கள் பேசப்படுகிறது. இதில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் பிரிவு 23ல் 12 வயதிற்கு குறைந்த பெண்களின் திருமணத்திற்கு காதியினால் அனுமதிக்க முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறது. அதாவது, 12 வயதுக்கு மேலுள்ள முஸ்லிம் பெண்களை  முஸ்லிம் ஆண்கள் திருமனம் செய்து கொள்வதற்கு அனுமதியளிப்பதுடன் அதற்கு கீழ் வயதில் உள்ள பெண்களை திருமனம் செய்வதாக இருந்தால் காதியின் அனுமதியை பெற்றப்பின் திருமனம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் சொல்கிறது.

இந்த சட்டம் சிறுமிகளை வலுகட்டாயமாக திருமனம் செய்து கொள்வதற்கு அனுமதிப்பது போல் தோற்றமளிக்கிறது. 12 வயதுக்கு கீழ் உள்ள முஸ்லிம் பெண்கள் காதியின் அனுமதி பெற்று திருமணம் முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதன் விளக்கத்தையும் நாம் இங்கே பார்க்க வேண்டும்.

4,5,6- காதி நீதிமன்றங்கள் சீர் திருத்தம் செய்யப்பட வேண்டும்!

பெண்கள் காதிகளாகவோ, ஜுரிகளாகவோ, திருமணப் பதிவாளர்களாகவோ, காதிகள் சபை அங்கத்தவராகவோ நியமிக்கப்பட தகுதியுடையவர்களாக்கப்படல் வேண்டும்.

இச்சட்டத்தின் கீழ் சில அதிகாரிகள் நியகமிக்கப் படுகின்றனர். உதாரணமாக முஸ்லிம் திருமன பதிவாளர், நீதிபதி, காதியார், காதிச்சபை உறுப்பினர்கள் போன்றவைகளை குறிப்பிடலாம். இந்த அனைத்து பொறுப்புகளுக்கும் ஆண்கள் தான் நியமிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமண பதிவாளர்களும் காதியார்களும் முஸ்லிம் ஆண்களாக இருக்க வேண்டும் என்பதை திருமண சட்டத்தில் 8 மற்றும் 12 வது உறுப்புறை குறிப்பிடுகிறது.

நீதிபதிகளாக பெண்கள் வருவதை இஸ்லாம் தடை செய்யவில்லை. காழி என்றால் தீர்ப்பு வழங்குபவர்கள் என்று அர்த்தம். தீர்ப்பு வழங்குவதற்கு இஸ்லாமிய சட்டத்தில் பெண்களுக்கும் அனுமதி உண்டு. அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மார்க்க தீர்ப்பு வழங்குபவராக இருந்துள்ளார்கள். மார்க்கத்தின் தீர்ப்பு வழங்கும் கூர்மையான அறிவு கொண்டவர்களாக அவர்கள் கருதப்பட்டார்கள்.

பெண்கள் காதிகளாகவோ, ஜுரிகளாகவோ, திருமணப் பதிவாளர்களாகவோ, காதிகள் சபை அங்கத்தவராகவோ நியமிக்கப்பட தகுதியுடையவர்களாக்கப்படல் வேண்டும்.

நீதிபதிகளாக பெண்கள் வரக்கூடாது என்பதற்கான எதிர் வாதங்களும் பதில்களும்

நீதிபதிகளாக பெண்கள் இருக்க்க்கூடாது என்று வாதிடுபவர்கள் கீழ்காணும் ஹதீஸை ஆதாரமாக காட்டுகின்றனர்.

முதல் வாதம்

‎4073 - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ حَدَّثَنَا عَوْفٌ عَنْ الْحَسَنِ عَنْ أَبِي بَكْرَةَ قَالَ لَقَدْ نَفَعَنِي اللَّهُ بِكَلِمَةٍ سَمِعْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَّامَ الْجَمَلِ بَعْدَ مَا كِدْتُ أَنْ أَلْحَقَ بِأَصْحَابِ الْجَمَلِ فَأُقَاتِلَ مَعَهُمْ قَالَ لَمَّا بَلَغَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ أَهْلَ فَارِسَ قَدْ مَلَّكُوا عَلَيْهِمْ بِنْتَ كِسْرَى قَالَ لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمْ امْرَأَةً رواه البخاري

“பெண்கள் ஆட்சி செய்யும் சமுதாயம் வெற்றி பெறவே மாட்டாது” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: புகாரி4425, 7099

நமது பதில்

மேலுள்ள ஹதீஸ் ஆட்சி அதிகார பொறுப்பை குறிக்கிறதே தவிர நீதிபதியின் பதவியை குறிக்கவில்லை. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆட்சி மற்றும் நிர்வாக பொறுப்பு என்பது சாதாரனமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பெண்கள் ஆட்சி நிர்வாகம் செய்யும்போது அவர்களின் கற்புக்கும் ஒழுக்கத்திற்கும் பல சவால்கள் வந்து விடும்.

இத்தகைய விசயத்தில் மிகப்பெரிய அளவில் மனவலிமை கொண்ட பெண்கள் கூட தாக்கு பிடிக்க மாட்டார்கள். ஆண்களுக்கே நிர்வாக பொறுப்புகளை சரிவர செய்வதற்கு பல இடையூர்களும் சிரம் சாத்தியங்களும் இருக்கும்போது பெண்களுக்கு அறவே சாத்தியம் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது வாதம்

மற்றுமொரு ஆதாரமாக கீழுள்ள வசனத்தை எடுத்து காட்டுவார்கள்.

‎الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ … (34) سورةالنساء

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித் திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.

திருக்குர்ஆன் 4 : 34

நமது பதில்

இந்த வசனம் குடும்ப நிர்வாகத்தை குறிக்கிமே தவிர நீதிபதிகளாக பெண்கள் இருப்பதற்கு இதில் எந்த தடையும் இல்லை. குடும்பத்தில் மணைவிக்கு செலவளிக்கும் விடயத்தை பற்றியே இந்த வசனம் பேசுகிறது. ஒரு ஆண் அந்நியப் பெண்ணுக்கு செலவளிப்பதை பற்றி இந்த வசனம் பேச வில்லை என்றால் ஒரு கணவன் மனைவியின் குடும்ப நிர்வகத்திற்கு பொறுப்பு எனும் கருத்தில் தான் இந்த வசனம் அமைந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மூன்றாவது வாதம்

மேலும் காதி என்பவர் வலீயாக இருக்க வேண்டும் என்பதனால் பெண்கள் காதிகளாக நியமிக்கப்படக்கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர்.

நமது பதில்

பெண்கள் வலீயாக இருக்ககூடாது என்பது மார்க்கத்தின் அடிப்படையில் உள்ளது. அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க்க்கூடாது. ஆனால் காதி என்பவர் விலீயாக இருப்பதே நமது பிரச்சனை. காதி என்பவர் வலீயாக இருக்கக் கூடாது என்பதே நமது நிலைபாடாகும். காதி என்பவர் குடும்ப நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்து விட்டுச் செல்லட்டும். அவர் வலீயாக நிற்பதோ அனுமதி பத்திரம் வழங்குவதோ செய்வதில் தான் பல மோசடிகள் இடம் பெறுகிறது.

அப்படியென்றால் வலீ இல்லாத பட்சத்தில் வலீயாக நிற்பது யார் என்ற கேள்வி எழும். வலீ என்பவர் பொறுப்பாளர் ஆவார். அவர் திருமணத்தின் அனைத்து விடயங்களையும் அறிந்து வைத்திருக்கும் ஒருவராக இருக்க வேண்டும். எனவே அந்தந்த ஊரைச் சேர்ந்த ஊர் ஜமாஅத் தலைவரே வலீயாக இருக்க வேண்டும் என்பது நமது நிலைபாடாகும்.இதற்கு கீழ் காணும் ஹதீஸ் சான்றாக நிற்கிறது.

‎4745 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ امْرَأَةً أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا فَقَالَ مَا لِي الْيَوْمَ فِي النِّسَاءِ مِنْ حَاجَةٍ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ زَوِّجْنِيهَا قَالَ مَا عِنْدَكَ قَالَ مَا عِنْدِي شَيْءٌ قَالَ أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ قَالَ مَا عِنْدِي شَيْءٌ قَالَ فَمَا عِنْدَكَ مِنْ الْقُرْآنِ قَالَ كَذَا وَكَذَا قَالَ فَقَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنْ الْقُرْآنِ رواه البخاري

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தம்மை (அர்ப்பணித்து) அன்பளிப்புச் செய்து விட்டதாகக் கூறினார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், '(இனி) எனக்கு எந்தப் பெண்ணும் தேவையில்லை' என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த ஒருவர் 'இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'ஏதேனும் ஆடையொன்றை அவளுக்கு ('மஹ்ர்' எனும் விவாகக் கொடையாக)க்கொடு!' என்று (அந்த மனிதரிடம்) கூறினார்கள். அவர், 'என்னிடம் இல்லை' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'அவளுக்கு (எதையேனும் மஹ்ராகக்) கொடு! அது இரும்பாலான மோதிரமாக இருந்தாலும் சரியே' என்று கூறினார்கள். இதைக் கேட்டு அந்த மனிதர் கலங்கினார். எனவே, நபி (ஸல்) அவர்கள், 'குர்ஆனிலிருந்து உன்னிடம் என்ன (மனனமாக) இருக்கிறது?' என்று கேட்டார்கள். அவர் இன்ன இன்ன அத்தியாயங்கள் (எனக்கு மனப்பாடமாக) உள்ளன' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'உம்முடன் இருக்கும் (குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்து வைத்தேன்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)

நூல் புகாரி 5029

இவ்வாறான ஒரு நிலைபாட்டுக்கு வரும்போது காதியாக பெண்கள் இருப்பதற்கு எந்த தடையும் வராது. ஆனால் காதி என்பவர் குடும்ப நீதிமன்றத்தின் நீதிபதி மாத்திரமே. அவர் ஊர் ஜமாஅத் தலைவரின் விவாகரத்து செல்லு படியானதா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் ஒருவர் மாத்திரமே. வேறு எதிலும் தலையிடும் அதிகாரம் அவருக்கு இருக்க்க் கூடாது.


பெண்கள் திருமன பதிவாளர்களாக இருக்க என்ன தடை இருக்கிறது?

திருமன பதிவாளர்களை பொறுத்தவரை முஸ்லிம் பெண்கள் திருமன பதிவாளர்களாக கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. மாறாக ஒரு சில நடைமுறை சிக்கள்கள் காரணமாக இதை மறுத்து வருகிறார்கள்.

பொதுவாக பள்ளிவாசல்களில் தான் திருமண பதிவுகள் அதிகமான அளவில் நடைபெறுகிறது. பள்ளிவாசல்களில் திருமண பதிவுகளை நடத்தும் போது ஆண் பதிவாளர்களுக்கு எல்லா சந்தர்ப்பத்திலும் பள்ளிவாசலுக்கும் நுழையும் அனுமதி உண்டு என்பதால் அவரால் காலதாமதமின்றி, திருமண பதிவுகளை மேற்கொள்ளலாம். அவருக்கு குளிப்பு கடமையான நிலையில் இருந்தால் உடனே குளித்து விட்டு பள்ளிவாசலுக்கு வந்து சேர்ந்து விடுவார். இதே பெண்களாக இருந்தால் மாதவிலக்கு நேரங்களில் பெண்கள் பள்ளிக்கு வருவதற்கு தடை இருப்பதனால் இதை கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.

இஸ்லாத்தில் பள்ளிவாசலில் திருமணத்தை பதிவு செய்யும் கட்டாயம் எங்கும் குறிப்பிடப்படவில்லை. திருமணத்தை பொருத்தவரை அதை பதிவு செய்பவர் திருமண ஒப்பந்தத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை. 

திருமண பதிவு என்பது மார்க்க ரீதியான ஒரு பொறுப்பு அல்ல. அது நாம் சட்டத்திற்காக ஏற்பாடு செய்து கொண்ட ஒன்று. எனவே திருமண பதிவாளர் இல்லாமலே திருமண ஒப்பந்த்த்தை நடாத்திக் கொள்ளலாம். திருமணத்தை குடும்ப அங்கத்தவர்கள் முன்னிலையில் நடாத்தப்பட்டாலே போதுமானது. சம்பந்தப்பட்ட குடும்பம் தான் திருமண ஒப்பந்த்த்தில் தலையிட வேண்டுமே தவிர பதிவாளருக்கு அதில் எந்த வேலையும் இல்லை.

‎فَانْكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ…(25) سورة النساء

அவர்களின் குடும்பத்தின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 4 25

எனவே ஒரு திருமணம் சம்பந்தப்பட்ட குடும்பத்தின் அனுமதியுடன் செய்து கொண்ட பிறகு திருமண பதிவாளரை அணுகி அதை பதிவு செய்து கொள்ளலாம். திருமண நிகழ்விற்கு திருமண பதிவாளர் கலந்து கொள்ள வேண்டும் என்று இல்லாத்தனால் திருமண பதிவாளர் எனும் முறையில் பெண்கள் இருப்பதிலும் எந்த நடைமுறை சிக்களும் ஏற்படாது.

 காதி நீதிமன்றங்கள் சீர் திருத்தம் செய்யப்பட வேண்டும்!

குடும்ப பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இறைவன் ஏற்படுத்திய வழிமுறையை சரியாக நாம் புரிநது கொள்ள வேண்டும். இறைவன் நான்கு வழிமுறைகளை குறிப்பிடுகிறான். அதில் இறுதி வழிமுறை தான் கணவன் மற்றும் மனைவியின் குடும்பம் சார்பாக நடுவர்களை ஏற்படுத்தி அவர்கள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது என்பது.

இதை பற்றி இறவைன் திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது, 

1951 இலக்கம் 13 முஸ்லிம் திருமன மற்றும் விவாகரத்து சட்டத்தின் திருத்தங்களுக்காக முன்வைக்கப்படும் பரிந்துரைகள்

1951 இலக்கம் 13 முஸ்லிம் திருமன மற்றும் விவாகரத்து சட்டத்தின் திருத்தங்களுக்காக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் முன்வைக்கப்படும் பரிந்துரைகள்

 1951 இலக்கம் 13 முஸ்லிம் திருமன மற்றும் விவாகரத்து சட்டத்தின் திருத்தங்களுக்காக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் முன்வைக்கப்படும் பரிந்துரைகள்

01. முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட எந்த சட்டமாக இருந்தாலும் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களின் அடிப்படையில் தான் அமைந்திருக்க வேண்டும்.

அல்லாஹ் அருளியதை கொண்டே தீர்பழிக்க வேண்டும்.

…وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ 

(44) سورة المائدة

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பு அளிக்கவில்லையோ அவர்கள் காஃபிர்கள்.

திருக்குர்ஆன் 5:44

இரண்டாம் திருமணம் செய்ய முதல் மனைவி அனுமதி தேவையா?

இரண்டாம் திருமணம் செய்ய முதல் மனைவி அனுமதி தேவையா?


என்னுடைய நண்பர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவருடைய முதல் மனைவியிடத்தில் அனுமதி கேட்கவில்லை. இது சரியா?

ராஸித்

பதில் :

ஒரு ஆண் இரண்டாவது திருமணம் செய்வதற்கு இஸ்லாத்தில் தடையேதும் இல்லை. ஆனால் இவ்வாறு செய்வதற்கு முன் சில ஒழுங்கு முறைகளைப் பேணிக் கொள்ளுமாறு இஸ்லாம் வழிகாட்டுகின்றது.

திருமணத்தை உறுதியான ஒப்பந்தம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ وَأَخَذْنَ مِنْكُمْ مِيثَاقًا غَلِيظًا(21)4

உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் (உங்கள் மனைவிமார்கள்) எடுத்துள்ளார்கள்.

திருக்குர்ஆன் 4 : 21

கணவனைத் தவிர வேறு ஆணை மனைவி நாடக் கூடாது என்பதும், கட்டிய மனைவியைத் தவிர வேறு பெண்ணை கணவன் நாடக் கூடாது என்பதும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். இந்த அடிப்படையில் தான் நம் நாட்டில் திருமண ஒப்பந்தங்கள் நடக்கின்றன.

மேலும் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்வதால் முதல் மனைவியின் உரிமைகளை இரண்டாவது மனைவிக்குப் பங்கு வைத்துக் கொடுக்கும் நிலை ஏற்படுகின்றது.

109. வாரிசுரிமையில் ஆண், பெண் வேறுபாடு

வாரிசுரிமையில் ஆண், பெண் வேறுபாடு

வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்குக் கிடைப்பதில் பாதி, பெண்களுக்குக் கிடைக்கும் என்று இவ்வசனங்கள் (4:11, 4:176) கூறுகின்றன.

சொத்துரிமையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே பாகுபாடு காட்டுவது நியாயமில்லை என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர். தக்க காரணங்களுடன் தான் இஸ்லாம் சொத்துரிமையில் வேற்றுமை காட்டுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

1, இஸ்லாமிய சமூக, குடும்ப அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது தான் அதிகச் சுமை சுமத்தப்பட்டுள்ளது. மற்ற சமூகங்களிலும் கூட பெரும்பாலும் இதே நிலைதான்.

2, பெற்றோர்கள் தள்ளாத வயதில் ஆண் மக்களால் தான் பராமரிக்கப் படுகின்றனர். பெண்கள் தமது கணவனின் பெற்றோர்களைத் தான் பராமரிக்க முடியும். பெற்றோர் பொருள் திரட்ட முடியாத நிலையை அடையும் போது அவர்களைக் கவனிப்பதும் ஆண் பிள்ளைகள் தான். எனவே அவர்களுக்கு இரு மடங்கு அளிப்பது நியாயமே!

விவாகரத்துக்குப் பின் மனைவிக்கு சொத்துரிமைச் சட்டம் சரியா?

 விவாகரத்துக்குப் பின் மனைவிக்கு சொத்துரிமைச் சட்டம் சரியா?

கேள்வி:

கணவனோ அல்லது மனைவியோ எவ்வளவு தான் சொத்துக்கள் அவரவர் பெயரில் பதிவு செய்து வைத்திருந்தாலும் அதில் இருவருக்கும் சம உரிமை உண்டு என்று சட்டம் மிக விரைவில் நடைமுறைக்கு வருவதாக செய்திகள் வருகின்றது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்குமா? இல்லை இதனால் பாதிப்புகள் ஏற்படுமா? - விளக்கவும்.

- கடையநல்லூர், மசூது

கணவன் - மனைவி வாழ்ந்த காலத்தில், கணவன் பெயரில் உள்ள சொத்துக்களும், மனைவிக்கு பிரித்து அளிக்க வேண்டும் என்ற சட்டமும், தவறான ஒன்றாகும். ஏனெனில், இதன் மூலம் வசதி படைத்த கணவன்களை திருமணம் செய்து கொண்டு, பிறகு எளிதில் பிரியலாம் என்ற சட்டம் மூலம் கணவனின் சொத்துக்களை அடைய இது வழிவகுக்கலாம். அந்தச் சொத்தின் மூலம், தான் விரும்பியதை விவாகரத்திற்குப் பிறகு செய்யவும் இது வழிவகுக்கலாம். இந்தச் சட்டம் சரியானதா?

ஃபெய்ஸல், ரியாத்

மேற்கண்ட சட்டம் இயற்றப்படுவதால் ஏற்படும் விளைவுகளை அறிந்து கொள்வதற்கு முன்னர் மேற்கண்ட சட்டம் முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

திருமணம், வாரிசுரிமை ஆகியவற்றில் முஸ்லிம்கள் தமது மதச்சட்டப்படி நடந்து கொள்ளும் உரிமையை அரசியல் சட்டம் வழங்கியுள்ளது. அந்த முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசாங்கம் தலையிட முடியாது.

தற்போது கொண்டு வரப்படவுள்ள சட்டம் ஹிந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக கொண்டு வரப்படுகிறது. அனைத்து குடிமக்களுக்கும் அல்ல.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஹிந்து திருமணச் சட்டத்திருத்த மசோதா 2010 என்ற மசோதா நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட போது அதை உடனே நிறைவேற்றாமல் நாடாளுமன்ற நிரந்தரக் குழுவின் பரிசீலனைக்கு விடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாடாளுமன்ற நிரந்தரக்குழு பரிந்துரைத்துள்ள மாற்றங்களை மத்திய அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் இம்மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதால் இது நிறைவேற்றப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

பெண்களுக்கு பாதி சொத்துரிமை சரியா?

இஸ்லாமிய வாரிசுரிமை
 பெண்களுக்கு பாதி சொத்துரிமை சரியா?


ஆண்களை விட பெண்களுக்கு சொத்துரிமையில் பாதி என்பது சரியா? இதை விமர்சிப்பவர்களுக்கு நாம் எப்படி பதில் அளிப்பது?

இது குறித்து இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா என்ற நூலில் விளக்கியுள்ளோம். அதையே பதிலாகத் தருகிறோம்

பாகப்பிரிவினை

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது என்பதும் முஸ்லிமல்லாதாரின் குற்றச் சாட்டுகளில் ஒன்றாகும்.

பலமுடையவர்களாகவும், பொருளைத் திரட்டுவதற்கான வாய்ப்புகளை அதிகம் பெற்றவர்களாகவும் உள்ள ஆண்களுக்குக் குறைந்த அளவும், பலவீனர்களாகவும், பொருளீட்டும் வாய்ப்புகளைக் குறைவாகப் பெற்றவர்களாகவும் உள்ள பெண்களுக்கு அதிக அளவும் வழங்குவதே நியாயமானதாகும். அதிகச் சொத்துரிமைக்குப் பெண்களுக்கே அதிகத் தகுதி இருக்கும் போது இருவருக்கும் சம அளவில் வழங்குவதே நியாயமாக இராது. இந்நிலையில் - ஆணுக்குக் கிடைப்பதில் பாதியளவு தான் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டுமென்பது மாபெரும் அநீதியாகும். இப்படி அவர்களின் குற்றச்சாட்டு விரிவடைகின்றது.

பெண்களை புற்றுநோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்!

தாய்ப்பால்
 பெண்களை புற்றுநோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்!

இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு :

இங்கிலாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், 12 வருடங்களாக, 9 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 3,80,000 (மூன்று லட்சத்து எண்பதாயிரம்) பெண்களுக்கு மேல் பரிசோதித்ததில், தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

குறைந்தது 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், பெண்கள் புற்று நோயால் இறப்பது 10 சதவிகிதம் குறைகின்றது. அதே போல் இவர்களுக்கு மாரடைப்பினால் ஏற்படும் மரணமும், 17 சதவிகிதம் குறைகின்றது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கூறப்படும் வழிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம், பல நோய்களிலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ள முடியும்.

நபிகள் நாயகம் சிறுவயது ஆயிஷாவை திருமணம் செய்தது ஏன்?

 நபிகள் நாயகம் சிறுவயது ஆயிஷாவை திருமணம் செய்தது ஏன்?

முஹம்மது நபி அவர்கள் ஆறு வயது ஆயிஷாவை ஏன் திருமணம் செய்து கொண்டார்கள்.?

ஹபீபுல்லாஹ்

பதில் :

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆறு வயது இருக்கும் போது அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

5133 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَهَا وَهِيَ بِنْتُ سِتِّ سِنِينَ وَأُدْخِلَتْ عَلَيْهِ وَهِيَ بِنْتُ تِسْعٍ وَمَكَثَتْ عِنْدَهُ تِسْعًا رواه البخاري

நான் ஆறு வயதுடையவளாய் இருந்த போது என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதான போது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது வருடங்கள் (மனைவியாக) வாழ்ந்தேன்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)   நூல் : புகாரி 5133

ஆயிஷா (ரலி) அவர்களை பருவ வயது அடைவதற்கு முன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்ததாக இந்த ஹதீஸ் கூறுகிறது.

அகில உலகுக்கு வழிகாட்டியாக வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுமியைத் திருமணம் செய்தது நியாயமானது தானா? என்று முஸ்லிமல்லாதவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுமையைத் திருமணம் செய்ததை ஆதாரமாகக் கொண்டு நாமும் சிறுமியைத் திருமணம் செய்யலாமா என்பது முஸ்லிம்களில் பலருக்கு இருக்கும் சந்தேகம்.

இது குறித்து தக்க முறையில் அறிந்து கொண்டால் இரு சாராரின் சந்தேகமும் முற்றாக விலகி விடும்.

பால்ய விவாகம் கூடுமா?

 பால்ய விவாகம் கூடுமா?

கேள்வி:

சிறு வயது ஆயிஷா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸl) அவர்கள் திருமணம் செய்ததை ஆதாரமாகக் கொண்டு சிறுமிகளைத் திருமணம் செய்யலாமா?

பதில் :

ஆயிஷா (ரலி) அவர்களை நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்த போது ஆயிஷா (ரலி) அவர்களின் வயது ஆறு என்பதற்கு ஹதீஸ் நூல்களில் ஆதாரங்கள் உள்ளன. அந்த ஹதீஸ்கள் குறித்து சில விமர்சனங்களும் உள்ளன.

அந்த விமர்சனங்களுக்குக் காரணம் இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மதிப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதும், பால்ய விவாகத்தை அனுமதிக்கும் நிலை ஏற்படுமே என்ற தயக்கமும் தான் காரணம்.

இது குறித்த செய்தியை விமர்சனம் செய்யும் அறிஞர்கள் இதை விட மோசமான விமர்சனத்துக்கு உரிய ஹதீஸ்களை எல்லாம் ஆதாரமாக ஏற்றுச் செயல்படுபவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

இந்தச் சம்பவம் உண்மை என்பதால் இவர்கள் அஞ்சக்கூடிய நிலை ஏற்படாது. இதை ஆதாரமாகக் கொண்டு ஆறு வயது சிறுமியை நாம் திருமணம் செய்யலாம் என்று முடிவெடுக்க முடியாது.

இதைப் புரிந்து கொள்ள இஸ்லாமிய மார்க்கத்தின் சில அடிப்படை உண்மைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் அனைத்தும் இறைவனால் நபிகள் நாயகத்திற்கு வழங்கப்பட்டது என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். முஸ்லிமல்லாத மக்களும் முஸ்லிம்களின் இந்த நம்பிக்கை குறித்து அறிந்து வைத்துள்ளனர்.

இறைவனால் கடமையாக்கப்பட்ட இந்தச் சட்டங்கள் யாவும் ஒரே நேரத்தில் முழுமையாக நபிகள் நாயகத்திற்கு வழங்கப்பட்டதா? என்றால் அவ்வாறு வழங்கப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நாற்பதாவது வயதில் இறைவனிடத்தில் செய்திகள் வரத் துவங்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை 23 வருடங்களாக சிறிது, சிறிதாக இச்சட்டங்கள் அருளப்பட்டன.

இச்சட்டங்கள் அருளப்படுவதற்கு முன்னால் அந்தச் சமுதாயத்தில் நிலவிய வழக்கப்படியே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்து கொண்டார்கள்.

அக்காவையும், தங்கையையும் ஒரே நேரத்தில் மணந்து கொள்ளும் வழக்கம் அன்றைய சமுதாயத்தில் இருந்தது. இஸ்லாத்தை ஏற்ற பின்பும் முஸ்லிம்களில் சிலர் இவ்வழக்கத்தின்படியே மணந்து கொண்டனர். இவ்வாறு செய்யக் கூடாது என்று இறைவனிடமிருந்து தடை வரும் வரை இந்த நிலை நீடித்தது.

ஆரம்ப காலத்தில் போதைப் பொருட்கள் தடுக்கப்படாமல் இருந்தது. இஸ்லாத்தை ஏற்ற பின்பும் ஏற்கனவே போதை பழக்கம் உள்ளவர்கள் அப்பழக்கத்தைத் தொடர்ந்தார்கள். போதைப் பொருள் தடை செய்யப்படும் வரை இதே நிலை நிலவியது.

இதுபோல திருமணத்தின் ஒழுங்குகளும், விதிமுறைகளும் இறைவனால் வழங்கப்படுவதற்கு முன் அன்றைய அரபுச் சமுதாயம் சிறுமிகளைத் திருமணம் செய்தது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் திருமணம் செய்தார்கள். இவ்வாறு செய்யக் கூடாது என்று சட்டம் வருவதற்கு முன்னர் பலரும் இவ்வாறு செய்து வந்தனர்.

இதன் பின்னர் சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற சட்டம் வந்தது. இவ்வாறு சட்டம் வந்த பின் பருவ வயதை அடையாத சிறுமிகளைத் திருமணம் செய்வது அறவே தடுக்கப்பட்டு விட்டது.


பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.  திருக்குர்ஆன் 2:228

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை.   திருக்குகுர்ஆன் 4:19

அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள்.  திருக்குர்ஆன் 4:21


صحيح البخاري5136 – حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، حَدَّثَهُمْ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ تُنْكَحُ الأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلاَ تُنْكَحُ البِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ إِذْنُهَا؟ قَالَ: «أَنْ تَسْكُتَ»

விதவையாக இருந்தால் அவளது உத்தரவு பெறாமல் திருமணம் செய்விக்கக் கூடாது. கண்ணிப் பெண்ணாக இருந்தால் அவளது அனுமதியில்லாமல் திருமணம் செய்விக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! கன்னிப்பெண்ணின் அனுமதி எப்படி? என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவள் மவுனமாக இருப்பதே (சம்மதம்) என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரரைரா (ரலி)   நூல் : புகாரி 5136


திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்தம் என்றும், பெண்களின் சம்மதம் அவசியம் என்றும் மேற்கண்ட வசனங்களும் நபிமொழியும் அறிவிக்கின்றன.

ஒரு ஒப்பந்தம் செய்வதாக இருந்தால் அதில் பங்கெடுப்பவர்கள் அது பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும். சாதக பாதகங்களை உணர்ந்து ஒப்புக் கொள்ள வேண்டும். அப்போது தான் அது ஒப்பந்தமாகக் கருதப்படும். ஐந்து வயதுச் சிறுவன் தன் பெயரில் உள்ள சொத்தை விற்பனை செய்தால் எவ்விடத்திலும் அது செல்லாது. உலகில் எந்தச் சட்டத்தின் படியும் அது செல்லாது.

திருமண வாழ்வு என்பது சொத்தை விட முக்கியமானது. திருமணம் என்றால் என்ன? அதன் கடமைகள் என்ன? அதன் விளைவுகள் என்ன? என்பதை அறியாத சிறுமி அது குறித்து எவ்வாறு ஒப்பந்தம் செய்ய முடியும்?

எனவே மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் பருவ வயதை அடையாத சிறுமிகளைத் திருமணம் செய்வதும், சிறுவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதும் தடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். இந்தக் கட்டளைகள் பிறப்பிக்கப்படுவதற்கு முன்னால் நபிகள் நாயகம் செய்ததை ஆதாரமாகக் கொண்டு சிறுமிகளைத் திருமணம் செய்யலாம் எனக் கூறுவது தவறாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மார்க்கத்தைச் சுயமாகக் கற்பனை செய்து கூறவில்லை; இறைவன் புறத்தில் இருந்து சட்டங்கள் வரும் வரையில் ஊரில் உள்ள வழக்கப்படி தான் நடந்து கொண்டார்கள். இறைவன் புறத்தில் இருந்து மேற்கண்ட கட்டளை வந்த பின்னர் அவர்கள் சிறுமியைத் திருமணம் செய்திருந்தால் தான் அது விமர்சனத்துக்கு உரியதாக ஆகும். தனக்கு மட்டும் அனுமதித்துக் கொண்டு மற்றவர்களுக்குத் தடை செய்திருந்தாலும் அது விமர்சனத்துக்கு உரியதாக ஆகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறு வயதுப் பெண்ணை திருமணம் செய்த போது அந்தச் சமுதாயமே இதை அங்கீகரித்து வந்தது என்பதைப் புரிந்து கொண்டால் இதில் குழப்பம் ஏற்படாது.

--P.JAINUL ABIDEEN

shortlink https://rb.gy/natzps

வெளியில் செல்லும் பெண்கள் நறுமணம் போட்டுக் கொள்ளலாமா?


வெளியில் செல்லும் போது பெண்கள் வாசனை திரவியங்கள் போட்டுக் கொள்ளலாமா?


பதில்

நறுமணப் பொருட்கள் இரு வகைகளில் உள்ளன.

தனது உடலில் துர்வாடை இருக்கக் கூடாது என்பதற்காக பயன்படுத்தும் மென்மையான நறுமணமும் உண்டு.

பிறரைத் தன் பக்கம் இழுக்கும் வகையிலான நறுமணமும் உண்டு.

முதல் வகையான நறுமணத்தை அருகில் நெருங்கி வருவோர் மட்டுமே உணர முடியும். இரண்டாம் வகை நறுமணம் தூரத்தில் போகும் நபரையும் சுண்டி இழுத்து திரும்பிப் பார்க்க வைக்கும்.

பெண்கள் வீட்டுக்குள் இருக்கும் போது இரண்டு வகையான நறுமணங்களையும் பூசிக் கொள்ளலாம். ஆனால் வெளியே செல்லும் போது முதல் வகையான நறுமணப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இரண்டு வகையான நறுமணப் பொருட்கள் இருந்துள்ளன.

و حدثنا عمرو بن سواد العامري حدثنا عبد الله بن وهب أخبرنا عمرو بن الحارث أن سعيد بن أبي هلال وبكير بن الأشج حدثاه عن أبي بكر بن المنكدر عن عمرو بن سليم عن عبد الرحمن بن أبي سعيد الخدري عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال غسل يوم الجمعة على كل محتلم وسواك ويمس من الطيب ما قدر عليه إلا أن بكيرا لم يذكر عبد الرحمن وقال في الطيب ولو من طيب المرأة

வெள்ளிக்கிழமை குளிப்பதும், பல் துலக்குவதும் பருவமடைந்த அனைவர் மீதும் கடமையாகும். மேலும் தன்னால் இயன்ற நறுமணத்தையும் பூசிக் கொள்ள வேண்டும். (நறுமணப் பொருள் இல்லாத பட்சத்தில்) பெண்களுக்கான நறுமணப் பொருளையாவது பூசிக் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நூல் முஸ்லிம்

பெண்கள் காது மூக்கு குத்தலாமா ? பெண்கள் தலைக்கு மேல் கூந்தலை உயர்த்திக் கட்டக் கூடாதா?

 பெண்கள் காது மூக்கு குத்தலாமா ?


அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுள்ள சட்டங்களில் காது, மூக்கு குத்துவதும் ஒன்றாகும். சிலர் கூடும் என்றும் சிலர் கூடாது என்றும் கூறுகின்றனர். காது குத்தலாம் என்பதற்கோ, காது குத்தக் கூடாது என்பதற்கோ நேரடியாக எந்த ஆதாரமும் இல்லை என்பதே இந்தக் கருத்து வேறுபாட்டிற்குக் காரணம்.

ஆனால் இது தொடர்பாக முடிவெடுப்பதற்கு வேறு ஆதாரங்கள் இருக்கின்றன. அல்லாஹ் படைத்த படைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. காதுகளைக் கிழிப்பதும், அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்வதும் ஷைத்தானுடைய செயல் என்று குர்ஆன் கூறுகிறது.

“அவர்களை வழிகெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.   திருக்குர்ஆன் 4:119

அல்லாஹ் வடிவமைத்ததில் மாற்றம் செய்யக் கூடாது என்று மேற்கண்ட வசனம் கூறுகிறது.

பெண்கள் முகத்தை மறைக்க வேண்டுமா?

 பெண்கள் முகத்தை மறைக்க வேண்டுமா?


பெண்கள் பொதுவாக எந்த அளவுக்கு ஆடை அணிய வேண்டும்?

தொழுகையின் போது எந்த அளவுக்குத் தமது உடலை மறைக்க வேண்டும்?

பெண்களின் ஆடை குறித்து அறிஞர்கள் மத்தியில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் இது பற்றி விரிவாக அறிந்து கொள்வது தான் நமக்குத் தெளிவு ஏற்படுத்தும்.

     பெண்கள் தமது முகத்தையும், முன் கைகளையும் தவிர மற்ற பகுதிகளை மறைக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

    முகத்தையும், முன் கைகளையும் மறைத்தாக வேண்டும் என்று மற்றும் சிலர் கூறுகின்றனர்.

    தொழுகையின் போது பாதங்கள் அறவே தெரியாத அளவுக்கு மறைக்க வேண்டும் என்று வேறு சிலர் கூறுகின்றனர். காலுறை அணியாமல் தொழக் கூடாது என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.

பெண்கள் உடலை எந்த அளவுக்கு மறைக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாகப் பின்வரும் வசனம் அமைந்துள்ளது.

விஞ்ஞானியின் பார்வையில் பெண்களுடன் சேர்ந்து பணியாற்றுதல்

 விஞ்ஞானியின் பார்வையில் பெண்களுடன் சேர்ந்து பணியாற்றுதல்


2001ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெற்றவர் டிம் ஹன்ட். இவருக்கு வயது 72. தென் கொரியாவில் நடந்த உலக அறிவியல் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் பேசிய விஞ்ஞானி டிம் ஹன்ட் கூறியதாவது

அவர் கருத்தரங்கில் பேசும்போது, விஞ்ஞானிகள் பாலியல் ரீதியாகப் பிரிக்கப்பட்ட வெவ்வேறு தளங்களில் பணியாற்ற வேண்டும்.

பெண்களுடன் ஆய்வுக் கூடங்களில் சேர்ந்து பணியாற்றும் சக ஆண் விஞ்ஞானிகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றது.

உதாரணத்துக்கு, அவர்கள் 3 விதங்களில் தொல்லை அளிப்பார்கள்.

முதலில், நாம் அவர்களோடு காதல் வசப்பட்டு விடுவோம். இரண்டாவது, அவர்களுக்கு நம் மீது காதல் வரும்.

மூன்றாவது, அவர்களை நாம் விமர்சித்தால், உடனடியாக அழுது விடுவார்கள். இதனால் அவர்களோடு இணைந்து பணியாற்றவே முடியாது.

டிம் ஹன்ட்டின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, அவர் பிபிசி ரேடியோவுக்கு அளித்த பேட்டியில்

கணவனை இழந்த பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

 இறந்தவரின் மனைவி செய்ய வேண்டியவை


இறந்தவர் ஆணாக இருந்தால் அவரது மனைவி கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் சில உள்ளன. இந்த ஒழுங்குகளைச் சரியாக அறியாத காரணத்தால் பெண்களுக்குப் பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுவதை நாம் காண்கிறோம்.

கணவனை இழந்த பெண்கள் கணவன் இறந்த உடனேயே மறுமணம் செய்து விடாமல் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக் கெடு முடிந்த பின்னர் தான் மறுமணம் செய்து கொள்ள வேண்டும். மறுமணம் செய்வதைத் தள்ளிப் போடும் இந்தக் கால கட்டம் இத்தா எனப்படுகிறது.

மறுமணத்தைத் தள்ளிப் போடும் இந்தக் காலகட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியான அளவுடையதல்ல.

Search This Blog