தவ்ஹீத் ஜமாஅத் video's: 1951 இலக்கம் 13 முஸ்லிம் திருமன மற்றும் விவாகரத்து சட்டத்தின் திருத்தங்களுக்காக முன்வைக்கப்படும் பரிந்துரைகள்

1951 இலக்கம் 13 முஸ்லிம் திருமன மற்றும் விவாகரத்து சட்டத்தின் திருத்தங்களுக்காக முன்வைக்கப்படும் பரிந்துரைகள்

1951 இலக்கம் 13 முஸ்லிம் திருமன மற்றும் விவாகரத்து சட்டத்தின் திருத்தங்களுக்காக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் முன்வைக்கப்படும் பரிந்துரைகள்

 1951 இலக்கம் 13 முஸ்லிம் திருமன மற்றும் விவாகரத்து சட்டத்தின் திருத்தங்களுக்காக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் முன்வைக்கப்படும் பரிந்துரைகள்

01. முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட எந்த சட்டமாக இருந்தாலும் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களின் அடிப்படையில் தான் அமைந்திருக்க வேண்டும்.

அல்லாஹ் அருளியதை கொண்டே தீர்பழிக்க வேண்டும்.

…وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ 

(44) سورة المائدة

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பு அளிக்கவில்லையோ அவர்கள் காஃபிர்கள்.

திருக்குர்ஆன் 5:44

..وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ (45) سورة المائدة

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

​திருக்குர்ஆன் 5:45

..وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ (47) سورة المائدة

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள்.

​திருக்குர்ஆன் 5:47

எந்த ஒரு ஜமாஅத்திற்கும் இயக்கித்திற்கும் மத்ஹபு பிரிவுக்கும் சார்ந்ததாக இல்லாமல் அனைவரும் ஏற்றிருக்கும் குர்ஆன் ஹதீஸ் எனும் அடிப்படையில் மாத்திரம் அமைந்திருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் திருமன சட்டத்தில் சில இடங்களில் அவரவர் சார்ந்திருக்கும் பிரிவின் சட்டத்தின் அடிப்படையில் (According to the Muslim Law governing the Sect) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களில் பகிரங்கமாக ஷாபி மத்ஹபின் சட்டம் தான் செல்லுபடியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை மாற்றியமைக்க வேண்டும்.

உதா : 01. சட்டத்தின் பிரிவு 25 (1) ல் திருமனம் செல்லுபடியாக வேண்டும் என்றால் ஷாபீ மத்ஹபின் சட்டத்தின் அடிப்படையில் சில நிபந்தனைகள் இடப்பட்டுள்ளன. அதில் வலீ (பொறுப்பாளர்) ஒருவர் இருந்து அவர் திருமன நிகழ்வில் கலந்துக் கொண்டு மனமகளில் விருப்பத்தை அறியப்படுத்தி தனது அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

இவை இஸ்லாத்தின் திருமன சட்டங்கள் ஆகும். எனினும் மத்ஹப் சார்ந்த கருத்தாகவும் ஷாபி மத்ஹ பினருக்கு மாத்திரம் உரிய சட்டமாகவும் இங்கே கூறப்பட்டுள்ளது. அப்படியானால் ஹனபி மத்ஹபினர் இந்த நிபந்தனைகளை மீறியும் திருமனம் செய்து கொள்வதற்கு இதன் மூலம் அனுமதி கிடைக்கிறது. இந்த நிபந்தனைகளை பூர்த்திசெய்யாமல் யாரேனும் திருமனம் செய்தால் அது திருமனமாக ஆகாது.

ஏனெனில் திருமனத்திற்கு,

• வலீ (பொறுப்பாளர்) இருக்க வேண்டும்.

• அவர் மூலம் தான் பெண்கள் திருமனம் செய்து கொள்ள வேண்டும்.

• எனவே அவர் திருமன நிகழ்வில் கலந்துக் கொள்ள வேண்டும்

• திருமன பெண்ணின் சம்மதம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

ஆகியவைகள் திருமனத்திற்கு மார்க்கம் இட்டுள்ள நிபந்தனைகளின் உள்ளவையாகும்.

எனவே குறித்த நிபந்தனைகள் அனைத்து முஸ்லிம்களும் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் என்பதால் இவற்றை குறிப்பிட்ட ஒரு சாராருக்குரிய சட்டமாக குறிப்பிட்டிருப்பது தவறாகும். எனவே இந்த நிபந்தனைகள் ஷாபி மத்ஹபை சார்ந்தவர்களுக்கு மாத்திரம் என்று இல்லாமல் முஸ்லிம்கள் அனைவருக்கும் உரிய இஸ்லாமிய சட்டம் என்று மாற்றியமைக்கப்பட வேண்டும்.

உதா : 02. ஹனபி மத்ஹபில் வலீ (பொறுப்பாளர்) இல்லாமல் திருமனம் செய்து கொள்வதற்கு அனுமதி உண்டு என மத்ஹப்வாதிகள் கூறுகின்றனர். அதற்கமைய திருமன சட்டத்தின் பிரிவு18 ல் வலீ இல்லாமல் திருமனம் செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தில் வலீ (பொறுப்பாளர்) இல்லாமல் திருமனம் செல்லுபடியாகாது. எனவே இஸ்லாத்திற்கு மாற்றமான இந்த சட்டம் அவசியம் நீக்கப்பட வேண்டும்.

மேலும் இச்சட்டத்தின் கீழ்பதிவு செய்யப்படும் திருமனங்கள் சட்டபூர்வமாக அங்கீகாரம் பெற வேண்டும் என்றால் 25(1)ல் கூறப்பட்டுள்ளவாறு அனைத்து நிபந்தனைகளும் பூர்த்திச் செய்யப்பட வேண்டும் என்று 25(2)ல் கூறப்பட்டுள்ளது. எனவே திருமனம் அஙகீகரிக்கப்பட வலீ (பொறுப்பாளர்) இருக்க வேண்டும் எனும் நிபந்தனைக்கு 18(1) முரண்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவது நடைமுறையில் சிக்கல் இருக்கும் என கருதப்படுமானால் ஷாபி, ஹனபி என்கிற மத்ஹப் கருத்துக்களை பின்பற்றக் கூடியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை போல் திருக்குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை பின்பற்றக் கூடியவர்களுக்கு அஹ்லுஸ் ஸுன்னா அல்லது அஹ்லுல் ஹதீஸ் எனும் பெயரில் நபி வழியின் அடிப்படையில் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை குறிப்பிட வேண்டும்.

அஹ்லுஸ் ஸுன்னா அல்லது அஹ்லுல் ஹதீஸ் எனும் பிரிவைச் சேர்ந்தவர்கள் எந்த அடிப்படையில் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை பிரத்தியேகமாக சட்டத்தில் இணைத்து விட வேண்டும். எந்த பிரிவின் படி சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று மத்ஹப்களை பின்பற்றுபவர்களிடம் கேட்பதை பொல் குர்ஆன் ஹதீஸை பின்பற்றுபவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் இலங்கை முஸ்லிம்களில் இரண்டு இலட்சங்களுக்கு நெருக்கமான மக்கள் குர்ஆன் சுன்னா எனும் கொள்கையை பின்பற்றக் கூடியவர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கண்ணிப் பெண்ணுக்கு வலீ அவசியம் விதவைக்கு வலீ அவசியம் இல்லை!

திருமணத்திற்கு வலீ இல்லாமல் அல்லது மனமகள் விரும்பினால் மாத்திரம் வலீயை ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் பரிந்துரைக்கின்றனர். இது தவறாகும். இதை மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் புரிந்து கொள்வோம்.

ஒரு முஸ்லிம் கண்ணிப் பெண் வலீ (பொறுப்பாளர்) இல்லாமல் தானாக முன் வந்து திருமணம் செய்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது! 

‎وَلَا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُؤْمِنَةٌ خَيْرٌ مِنْ مُشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِنْ مُشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُولَئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آَيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ (221) سورةالبقرة

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் உங்களை எவ்வளவு கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப்பெண் சிறந்தவள். இணைகற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கத்திற்கும், மன்னிப்பிற்கும் அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.   திருக்குர்ஆன் 2: 221

இந்த வசனம் ஒரு ஆண் தானாக முன் வந்து திருமணம் செய்யலாம் என்பதையும் அவ்வாறு தானாக முன் வந்து திருமணம் செய்யும் போது இணை கற்பிக்கும் பெண்களை திருமணம் செய்யக் கூடாது என்பதையும் இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! எனும் வாசகம் குறிப்பிடுகிறது. ஆனால் அதே வசனத்தில் பிற்பகுதி ஒரு பெண்ணை பொருத்த வரை அவரை ஒரு பொறுப்பாளர் தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதையும் அவ்வாறு திருமணம் செய்து கொடுக்கும் போது இணை கற்பிக்கும் ஆண்களை திருமணம் செய்து கொடுக்க கூடாது என்பதையும் இணைகற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! எனும் வாசகம் குறிப்பிடுகிறது. 

‎فَانْكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ…سورةالنساء

அவர்களின் குடும்பத்தார் அனுமதியுடன் அவர்களை மணந்து கொள்ளுங்கள்.

திருக்குர்ஆன் 4:25

இந்த வசனம் பெண்களை குடும்பத்தின் அனுமதியுடன் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவாகவே குறிப்பிடுகிறது. எனவே ஒரு பெண் தானாக முன் வந்து திருமணம் செய்து கொள்ள முடியாது. 

இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பின்வருமாறு கூறியுள்ளார்கள். 

‎1020 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ أَخْبَرَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ أَبِي إِسْحَقَ و حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي إِسْحَقَ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ إِسْرَائِيلَ عَنْ أَبِي إِسْحَقَ ح و حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَقَ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى قَالَ

‎قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا نِكَاحَ إِلَّا بِوَلِيٍّ رواه الترمدي

“பொறுப்பாளர் இன்றி திருமணம் கிடையாது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)  நூல்கள்: திர்மிதீ 1020, அபூதாவூத் 1785

மறுமணம் செய்யும் பெண்களுக்கு வலீ பொறுப்பாளர் கட்டாயம் இல்லை!

வலீ இல்லாமல் ஒரு பெண் தானாக முன் வந்து திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிய இஸ்லாம் மார்க்கம் அதில் ஒரு விதி விலக்கை வைத்திருக்கிறது. ஒரு விதவை அல்லது விவாகரத்து செய்யப்பட்ட ஒரு பெண்  தானாக முன் வந்து தனது வாழ்க்கை துணையை தெரிவு செய்து கொள்ளலாம். 

இதற்கான ஆதாரங்கள் இதோ:

‎فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ فَإِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يَتَرَاجَعَا إِنْ ظَنَّا أَنْ يُقِيمَا حُدُودَ اللَّهِ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ (230) سورة البقرة

(இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாகரத்துச்செய்தால் அவள் வேறு கணவனை மணம் செய்யாதவரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாகரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்டமுடியும் எனக்கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.  திருக்குர்ஆன் 2 230

‎وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَنْ يَنْكِحْنَ أَزْوَاجَهُنَّ إِذَا تَرَاضَوْا بَيْنَهُمْ بِالْمَعْرُوفِ ذَلِكَ يُوعَظُ بِهِ مَنْ كَانَ مِنْكُمْ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآَخِرِ ذَلِكُمْ أَزْكَى لَكُمْ وَأَطْهَرُ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ (232) سورة البقرة

பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.  திருக்குர்ஆன் 2 232

‎2546 - و حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ زِيَادِ بْنِ سَعْدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ سَمِعَ نَافِعَ بْنَ جُبَيْرٍ يُخْبِرُ عَنْ ابْنِ عَبَّاسٍأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الثَّيِّبُ أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا وَالْبِكْرُ تُسْتَأْمَرُ وَإِذْنُهَا سُكُوتُهَا رواه مسلم

நான் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், "விதவை, தன் காப்பாளரை விடத் தனது விஷயத்தில் (முடிவுசெய்ய) மிகவும் தகுதிவாய்ந்தவள். கன்னிப் பெண்ணிடமோ, அவள் விஷயத்தில் அனுமதி பெறப்பட வேண்டும். அவளது மௌனமே சம்மதமாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்க, அவரிடமிருந்து அப்துல்லாஹ் பின் அல்ஃபள்ல் (ரஹ்) அவர்கள் உங்களுக்கு அறிவித்தார்களா என்று கேட்டேன் அதற்கு அவர்கள் "ஆம்" என்றார்கள்.

அறிவிப்பவர் யஹ்யா பின் யஹ்யா (ரஹ்)  நூல் முஸ்லிம் (2775)

ஸபிய்யா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தானாக திருமணம் முடித்து கொண்டார்கள். ஸபிய்யா (ரலி) அவர்களுக்கு எந்த வலீயும் இருக்கவில்லை.

(கைபர்போரில் கைது செய்யப்பட்ட) ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை இறைத் தூதர் (ஸல்) அவர்கள் விடுதலை செய்து, தாமே அவர்களை மணமுடித்தும் கொண்டார்கள்; (ஸஃபிய்யா (ரலி) அவர்களின் விடுதலையையே அவர்களுக்குரிய மஹ்ராகவும் (விவாகக் கொடையாகவும்) ஆக் கினார்கள். அ(வர்களை மணந்த)தற்காக (விதை நீக்கப்பட்ட பேரிச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படும்) 'ஹைஸ்' எனும் பண்டத்தை வலீமா (மண விருந்தில் அளித்தார்கள்.

அறிவிப்பவர் அனஸ் (ரலி)  நூல் புகாரி 5169

எனவே இந்த இரண்டு நிலைகளை கவனத்தில் கொண்டு வலீ தொடர்பில் திருமண சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். 

முஸ்லிம் சமூகத்தின் எந்த பிரிவைச் சார்ந்த பெண்ணாக இருந்தாலும் கன்னியாக இருந்தாலும் விதவையாக இருந்தாலும் திருமணத்திற்கு பெண்ணின் சம்மதம் பெறப்பட வேண்டும்!!!

தற்போதுள்ள சட்டத்தில் பெண்ணின் சம்மதம் பெறப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும் அதை இன்னும் உறுதிபடுத்தும் விதத்தில் வலியுறுத்தி சட்டம் உருவாக்க வேண்டும்.

சட்டத்தின் பிரிவு 18(1)a மற்றும் bல் மனமகன் மற்றும் வலீயின் பிரகடனங்கள் எடுக்கப்படுகிறது. இதேபோன்று பெண்ணின் சம்மதத்தை தெரிவிக்கும் விதத்தில் ஒரு படிவம் நிரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். பெண்ணின் சம்மத்த்தை கையொப்பம் மூலம் பெறப்பட வேண்டும். பெண்ணின் சம்மத்த்தை உறுதிபடுத்தும் விதத்தில் அவளது கையொப்பம் திருமன பதிவாளர் முன்னிலையில் எடுக்கப்பட வேண்டும்.

திருமணத்திற்கு பெண்ணின் சம்மதம் அவசியம்

பெண்ணின் சம்மதம் பெறாமல் திருமணம் செய்விக்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை. பெண்களின்சம்மதம் பெறுவது மிகவும் அவசியமாகும்.

‎وَأَخَذْن َمِنْكُمْ مِيثَاقًا غَلِيظًا (21) سورةالنساء

அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள்.

அல்குர்ஆன்4:21

இந்த வசனத்தில் திருணமத்தை ஒரு கடுமையான ஒப்பந்தம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. அந்த ஒப்பந்த்திற்குள் நுழைய பெண்களின் விருப்பம் இருக்க வேண்டும். தனக்கு மனைவியாக வருபவர் யார் என்பதை தீர்மானிக்கும் உரிமை கணவனுக்கு இருப்பதுபோல் தனக்கு கனவராக வருபவர்யார் என்று தீர்மானிக்கும் அதிகாரம் ஒப்பந்தம் செய்யும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

‎يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا لَا يَحِلُّ لَكُمْ أَنْ تَرِثُوا النِّسَاءَ كَرْهًا وَلَا تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُوا بِبَعْضِ مَا آَتَيْتُمُوهُنَّ إِلَّا أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ فَإِنْ كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا (19) سورةالنساء

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.

அல்குர்ஆன்4: 19

பெண்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களுக்குப் பிடிக்காத ஒரு ஆணை, பெண்ணின் பெற்றோர் வற்புறுத்தி, கட்டாயத் திருமணம் செய்து வைக்கின்றனர்.இந்த நாகரீக உலகில் கூட இந்த நிலை இன்னும் நீடிக்கவே செய்கிறது. 21ஆம் நூற்றாண்டில் கூடப் பெண்களுக்குக் கிடைக்காத இந்த உரிமையை ஆறாம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் வழங்கி விட்டது.

தனக்குத் தகுதியான மணமகளைத் தேர்வு செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போலவே, தனது கணவனைத் தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கும் உள்ளது.இஸ்லாமிய வரம்பை மீறாமல் பெண்கள் தமது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தால் அவர்களின் அந்த உரிமையைப் பெற்றோர் பறிக்கக் கூடாது. அவளது விருப்பத்திற்கு மாற்றமாகஅவளைக் கட்டாயப்படுத்தவும் கூடாது என்பதை இவ்வசனங்கள் (2:234, 4:19) தெளிவாகப் பறைசாற்றுகின்றன.

மேலும் கன்னிப்பெண்ணாயினும், விதவையாயினும் அவர்களிடம்சம்மதம் பெற வேண்டும் என்றுநபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் நேரடியாக இதை தெளிவு படுத்தியுள்ளார்கள்.

4741 - حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ أَبِي سَلَمَةَ أَنَّ أَبَا هُرَيْرَةَ حَدَّثَهُمْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تُنْكَحُ الْأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ وَلَا تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ إِذْنُهَا قَالَ أَنْ تَسْكُتَ رواه البخاري

கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது, "கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?'' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அவளது மௌனமே அவளது சம்மதமாகும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),   நூல்: புகாரி 6971, 6964, 5137

அவ்வாறு சம்மதம் பெறப்படாத திருமனங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

4743 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ وَمُجَمِّعٍ ابْنَيْ يَزِيدَ بْنِ جَارِيَةَ عَنْ خَنْسَاءَ بِنْتِ خِذَامٍ الْأَنْصَارِيَّةِ أَنَّ أَبَاهَا زَوَّجَهَا وَهْيَ ثَيِّبٌ فَكَرِهَتْ ذَلِكَ فَأَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَدَّ نِكَاحَهُ رواه البخاري

என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.

அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி),   நூல்: புகாரி 5139, 6945, 6969

அதே நேரத்தில், பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உரிமையினால் பெண்கள் ஏமாற்றப்படவோ, பாதிக்கப்படவோ கூடாது என்பதற்காக தந்தை, சகோதரன், ஜமாஅத் தலைவர் போன்ற பொறுப்பாளர்களிடம் பெண்கள் தமது விருப்பத்தைத் தெரிவித்து, அவர்கள் மூலமாகவே திருமணம் செய்ய வேண்டும் என்ற பாதுகாப்பையும் இஸ்லாம் வழங்கியுள்ளது. 

அதுபோல், இஸ்லாத்தின் நெறிமுறைகளை மீறாத வகையில் பெண்கள் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தால், அந்தப் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமையைப் பறிக்காமல் அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பது பெற்றோர் அல்லது அவளது பொறுப்பாளர்களின் கடமை ஆகும்.

உங்கள் தோழன், 

ஆர். அப்துர் ராஸிக் B.Com (Special), HND in Law (EDHat), LLB UK (Hons) Reading

வட்ஸ் அப் எண்:

0778-747377 

காதி நீதிமன்றங்கள் சீர் திருத்தம் செய்யப்பட வேண்டும்!
https://makarimtec.blogspot.com/2023/01/court.html

முஸ்லிம்களின் திருமண வயதெல்லை எப்படி அமைய வேண்டும்?
https://makarimtec.blogspot.com/2023/01/7-weds.html

முத்தலாக் முறை அவசியம் நீக்கப்பட வேண்டும் 
கைகூலி முறை சட்ட விரோதமாக்கப்பட வேண்டும்.

https://makarimtec.blogspot.com/2023/01/10.html

sortlink  https://rb.gy/nkl7jf


Search This Blog