முஸ்லிம்களின் திருமண வயதெல்லை எப்படி அமைய வேண்டும்?
சட்டத்தின் பிரிவு 23ல் திருமண வயது குறித்து சில விவரங்கள் பேசப்படுகிறது. இதில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் பிரிவு 23ல் 12 வயதிற்கு குறைந்த பெண்களின் திருமணத்திற்கு காதியினால் அனுமதிக்க முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறது. அதாவது, 12 வயதுக்கு மேலுள்ள முஸ்லிம் பெண்களை முஸ்லிம் ஆண்கள் திருமனம் செய்து கொள்வதற்கு அனுமதியளிப்பதுடன் அதற்கு கீழ் வயதில் உள்ள பெண்களை திருமனம் செய்வதாக இருந்தால் காதியின் அனுமதியை பெற்றப்பின் திருமனம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் சொல்கிறது.
இந்த சட்டம் சிறுமிகளை வலுகட்டாயமாக திருமனம் செய்து கொள்வதற்கு அனுமதிப்பது போல் தோற்றமளிக்கிறது. 12 வயதுக்கு கீழ் உள்ள முஸ்லிம் பெண்கள் காதியின் அனுமதி பெற்று திருமணம் முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதன் விளக்கத்தையும் நாம் இங்கே பார்க்க வேண்டும்.
ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்தாலும் சரி, முஸ்லிம் அல்லாத பெண்ணாக இருந்தாலும் சரி, ஒரு பெண் பருவவயதை அடைந்திருந்தால் அவர் திருமணத்திற்கு தயாரான உடல் நிலையை அடைநத்து விடுகிறாள். இது பொதுவான திருமண விதியாகும். இதை தனியாக சட்டத்தில் எழுத வேண்டியதில்லை. பொது சிவில் சட்டத்திலும் ஒரு பெண் பருவவயதை அடைந்தால் தான் திருமணம் செய்யலாம் என்று எங்கும் குறிப்பிடவில்லை. அதேபோல் முஸ்லிம் தனியார் சட்டமும் குறிப்பிடவில்லை. எனவே 12 வயதான பெண் சிறுமி என்று யாரும் என்னி விடக்கூடாது. அவள் பருவவயதை அடைந்த ஒரு பெண் என்பதை இதிலிருந்து அறியலாம்.
அடுத்ததாக, 12 வயது என்று குறிப்பிட்டதற்கு காரணம் என்னவென்று நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம் திருமண சட்டம் 1951ம் ஆண்டு தான் சட்ட மூலமாக்கப்பட்டு 1954ம் ஆண்டில் நடைமுறைக்கு வருகிறது. அப்பேதைய திருமண வயதாக இல்ஙகை மக்களுக்கு ஒரு பொது சட்டம் இருந்தது. 1907ம் ஆண்டில் 17ம் இலக்க திருமண மற்றும் விவாகரத்து கட்டளைச் சட்டம் தான் அந்த சட்டம். அதில் 15ம் பிரிவில் ஒரு ஆணின் திருமண வயது 16 என்றும் பெண்ணின் திருமண வயது 12 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதான் இலங்கை மக்களின் பொது திருமணவயதாகும். பிறகு 1995ம் ஆண்டின் 18ம் இலக்க திருத்தசட்டத்தின் மூலம் தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண வயது 18 என்று மாற்றியமைக்கப்பட்டது.
முஸ்லிம் திருமண சட்டம் சட்ட மூலமாக்கம் செய்யப்படும் போது இலங்கை பெண்களின் மேஜர் வயதாக 12 இருந்துள்ளது. எனவே தான் மேஜர் அல்லாத பெண்கள் அதாவது, 12 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் திருமணம் செய்வதாக இருந்தால் காதியின் அனுமதியுடன் திருமணம் செய்ய வேண்டும் என்று சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் தற்போது பொது சிவில் சட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்களின் மேஜர்வயதாக 18 என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் 18 வயதுக்கு கீழுள்ள பெண்களை திருமனம் செய்து கொள்வது சிறுமிகளை திருமனம் செய்வதாக மக்களால் பார்க்கப்படுகிறது.
திருமண வயது 16 ஆக இருப்பதை ஆட்சேபனைக்கு அடிப்படை காரணமாக சிலர் முன்வைக்கும் சட்ட பிரச்சனை
1995ம் ஆண்டு 22ம் இலக்க இலங்கை குற்றவியல் திருத்தச் சட்டத்தின் 363 (e) பிரிவின் படி ஒரு பெண் திருமணத்திற்கு விருப்பம் தெரிவிக்கும் வயது 18 என்றும் திருமணம் அல்லாத உறவுகளுக்கு விருப்பம் தெரிவிக்கும் வயது 16 என்றும் இந்த இரண்டு வயது எல்லைகளுக்கு கீழே சம்மதத்துடன் நடைபெறுகின்ற திருமணமானாலும் சம்மதத்துடன நடைபெறுகின்ற ஏணைய பாலியல் உறுவுகளாளாலும் அதை சட்டம் கற்பழிப்பு குற்றமாக கருதுகிறது.
எனவே தற்போது முஸ்லிம் திருமன சட்டத்தில் உள்ள 12 வயதுக்கு கீழ் இருக்கும் பெண்களை காதியின் அனுமதியுடன் திருமனம் செய்து கொள்ளலாம் என்றுள்ள விதி இலங்கை குற்றவியல் சட்டத்தின் படி தண்டனைக்குறிய குற்றமாக இருக்கிறது. இந்த விசயத்தில் மார்க்கத்திற்கும் இலங்கையில் தற்போது அமுலிலுள்ள சட்டத்திற்கும் முரண்படாத விதத்தில் திருமன வயதை கையால வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம்.
முஸ்லிம் பெண்களின் திருமன வயது 18 ஆக இருந்தால் சரியாகுமா?
ஒரு ஆண்; அல்லது பெண்ணின் திருமன வயது எது என்பதல் மனித குலம் குழப்பத்திலே இருக்கின்றது. பல நாடுகளில் பலதரப்பட்ட வயதுகளை திருமண வயதாக நிர்ணயித்திருப்பதை நாம் பார்க்கிறோம். உதாரணத்திற்காக சில நாடுகளை இங்கே குறிப்பிடுகிறோம்.
நாடு ஆண்களின். பெண்களின்
திருமண வயது திருமண வயது
சூடான் 15 13
கெமரூன் 18 15
கொன்கோ 18 15
கேபோன் 18 15
நைகர் 18 15
n;டன்ஸானியா 18 15
அமெரிக்கா 18 15
மாலி 18 16
ஸிம்பாப்வே 18 16
ஜப்பான். 18 16
கினி பிசாவு 16 16
இங்கிலாந்து 16 16
செமபியா 16 16
மோல்டா 16 16
ஸ்லோவேகியா 16 16
ப்ரசீல் 16 16
மொல்டோவா 18 16
யுக்ரேன் 18 17
வெனுசியுலா 12 12
ஜோஜியா 18 16
ஆமேனியா. 18 17
இஸ்ராயீல் 17 17
இவை அனைத்தும் பெற்றோர்களின் அனுமதியின்றி சுதந்திரமாக சுய விருப்பத்துடன் திருமணம் செய்து கொள்வதற்கு ஒவ்வொரு நாட்டின் அரசு சட்டரீதியாக அங்கீகரித்துள்ள வயதுகளாகும்.
இவற்றில் அதிமகானவை முஸ்லிம் நாடுகள் கிடையாது. நாகரீகம், கருத்துச் சுதந்திரம், மனித நேயம், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை அதிகம் பேசும் நாடுகளும் இதில் இடம் பெற்றுள்ளன. மேலும் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்வதென்றால் இதற்கு கீழ்நிலையில் உள்ள வயதுகளை தெரிவு செய்யலாம். ஆனால் பருவ வயதை அடைந்திருக்க வேண்டும் என்பதை நிபந்தனையாக்கியுள்ளனர்.
சிறுவர் சிறுமியர் மத்தியில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை கருத்தில் கொண்டு இலங்கை அரசம் திருமண வயதை 15 ஆக குறைப்பதற்கு பல சந்தர்ப்பங்களில் முயன்றுள்ளது. இந்தியாவிலும் ஆண்களின் திருமண வயதைக் குறைப்பதற்கு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த தரவுகள் நமக்குக் கூறும் செய்தி என்ன? இவ்வாறு பல முரண்பட்ட வயது எல்லைகளை நிர்ணயித்திருப்பதற்கு காரணம் என்ன? ஒரு மனிதனின் பாலுணர்வு தூண்டப்படும் பருவம் என்பது ஒவ்வொரு நாட்டுக்குரியவர்களின் கால நிலை, தேச நிலை, உணவு பழக்க வழக்கங்கள், ஆயுட் காலம் மற்றும் உடல் நிலைகளை வைத்து மாறுபடுகிறது என்பது தான்.
இன்னும் சொல்வதாக இருந்தால் ஒரே நாட்டில்; ஒவ்வொரு கால கட்டங்களிலும் மாறுபட்ட திருமண வயதுகளை நிர்ணயித்திருப்பதற்கு ஏராளமான ஆதாரங்களை காட்டாலம். கடந்த 16-12-2012 அன்று டெல்லியில் ஒரு கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் இரவில் சினிமா பார்த்துவிட்டு வரும் போது; ஒரு பேருந்தில் அவளை பலாத்காரம் செய்து இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி இறந்துவிடுகிறாள். இது தேசம் முழுமைக்கும் காட்டு தீ போல பரவிய செய்தி. குறித்த கொலை வழக்கில் இந்திய மத்திய நீதி மன்றங்களில் திருமன வயதை குறைக்க வேண்டும் என்றும் 18 வயது என்பது பொறுத்தமற்றது என்பதும் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டதை ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக குறிப்பிடலாம்.
உலக நடைமுறை இவ்வாறு இருக்க, முஸ்லிம் பெண்களுக்கும் திருமன வயது 18 ஆக இருக்க வேண்டும், அவ்வாறு இல்லாமல் இருப்பது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற ஒரு நிலை என்று வாதிடுவது எந்த வகையில் நியாயம்? என்பதை சிந்திப்பவர்கள் புரிந்துக் கொள்வார்கள்.
இஸ்லாம் திருமண வயதிற்கு ஒர் எல்லையை நிர்ணயிக்கவில்லை. மாறாக திருமணத்திற்கு தகுதியான நடைமுறைக்கு சாத்தியமான ஒரு நிலைபாட்டை வைத்திருக்கிறது. அதாவது, திருமணத்திற்கு தயாரான உடல் நிலையையும் மன நிலையையும் யார் அடைந்திருக்கிறாரோ அவர் திருமன செய்வற்கு அனுமதி பெற்றவர் என்பதே இஸ்லாத்தின் நிலைபாடாகும்.
பெண்ணின் திருமணவயதை ஒரு எல்லையில் வைக்கும் போது அந்த வயதுக்கு குறைந்த பெண் காதல் அல்லது துஷ்பிரயோகம் காரணமாக கர்ப்பமுற்றால் அவள் குறித்த வயது வரை திருமணம் செய்ய முடியாது என்பதுடன் ஒன்றில் குழந்தையை கொல்ல வேண்டும் அல்லது அதனை அவளின் திருமண வயது வரை ஹராமியாக வளர்க்க வேண்டும்.
எனவே திருமண வயதெல்லை போடாமல் திருமணம் செய்வதற்கு தகுதியான ஒரு நிலைபாட்டை குறிப்பிட வேண்டும். குறித்த நிலைபாடுகளுக்கு அமைய திருமணம் நடைபெறுகிறதா என்பதை திருமணபதிவாளர் முடிவு செய்து திருமன பதிவை அங்கீகரிக்க வேண்டும். இதுவே மார்க்கத்தின் வழி காட்டுகளாகும்.
முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கை
ஆண்களுக்கான திருமண வயதெல்லை 18 ஆக இருக்கும். அதே பெண்ணின் வயதெல்லை 16 ஆக இருத்தல் வேண்டும். 18 வயதுக்கு குறைந்த ஆண் அல்லது 16 வயதுக்குக் குறைந்த பெண் திருமணம் செய்ய வேண்டுமாயின் அல்லது திருமணம் செய்ய விரும்பின் காதியின் அனுமதி பெற வேண்டும். அதே நேரம் விண்ணப்பதாரரின் விண்ணப்பத்தில் திருப்தி காணும் பட்சத்தில் மாத்திரமே காதி அனுமதி வழங்குவார் என்பன இரண்டாவது குழுவின் பரிந்துரைகளாகும்.
நமது நிலைபாடு
முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்களின் திருமண வயது 16 ஆகவோ அல்லது 18 ஆகவோ அல்லது வேறொரு வயதெல்லையோ குறிப்பிட முடியாது. மார்க்க அடிப்படையில் இதற்கு தீர்வு காண வேண்டும். குறிப்பிட்ட ஒரு வயதெல்லை நிர்ணயிப்பதை ஏற்க முடியாது. எனினும் நடைமுறை சார்ந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் இந்த விவகாரத்தை அணுக வேண்டியுள்ளது. எனவே வயதெல்லை குறித்து நாம் ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம்.
முஸ்லிம் ஆண்கள் பெண்கள் திருமண வயது 16 என்று வைத்துக் கொள்ளலாம்!
திருமணத்திற்கு நிலைபாடு வைக்க முடியாது வயதெல்லை தான் வைக்க வேண்டும் என்று அரசு ஒரே பிடியில் நிற்கும் என்றால் குறைந்த பட்சம் இலங்கை குற்றவியல் சட்டத்தில் உள்ளபடி திருமணமாகதாவர்கள் உடலுறவுக்கு விருப்பத்தை தெரிவிக்கு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 16 வயதே முஸ்லிம் திருமண வயதாக இடம் பெற்ச் செய்யலாம்.
அதற்கு குற்றவியல் சட்டம் முரணாக நிற்கிறது என்று வாதிட்டால் குற்றவியல் சட்டத்திலிருந்து முஸ்லிம் தனியார் சட்டம் விதிவிலக்கு பெறும் என்று சட்ட ரீதியான அங்கீகாரம் பெற முடியும். தனியார் சட்டம் என்பதே விதிவிலக்கான விசேட சட்டங்கள் உள்ளடக்கியவை தான். எனவே வயது எல்லை நிர்ணயிக்காமல் தகுதிகளை பட்டியலிட்டு தகுதிகளை பூர்த்தி செய்பவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கலாம்.
முஸ்லிம் ஆண்கள் பெண்கள் திருமண வயது 18 ஆகத் தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு சொன்னால்….
நமது நிலைபாடு ஆண்கள் மற்றும் பெண்களின் திருமண வயதும் 16 ஆக இருந்தால் மிகவும் பொருத்தமானது என்பதே. எனினும் ஆணாலும பெண்ணானாலும் திருமண வயது 18 என்று வைத்துக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டால் அவ்வாறு 18 என்று வைப்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. எனினும் அதற்கு கீழ் நிலையில் விதிவிலக்கான சில சந்தர்ப்பங்களில் திருமணம் செய்வதற்கான அனுமதியை வழங்க சில சட்ட ஏற்பாடுகள் இருக்க வேண்டும். 18 வயதுக்கு கீழே திருமணம் செய்வதற்கான சில காரணங்களை முன் கூட்டியே சட்ட புத்தகத்தில் வரையறுத்து அந்த நிலையில் இருக்கும் திருமணங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கும் விதத்தில் சட்ட திருத்தங்கள் அமைத்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக, ஒரு முஸ்லிம் பெண் 18 வயதுக்கு கீழே கர்ப்பமுற்றால், அல்லது காதலனுடன் வீட்டை விட்டு தானாக வெளியேறிச் சென்றதனால் அவளது கற்புக்கு பாதிப்புகள் ஏற்பட்டால் அவளின் பெற்றோரின் சம்மதத்துடன், அவளின் சம்மதத்துடன் 18க்கு கீழாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்வதற்கு விசேட நீதிபதி ஒருவரின் அனுமதியுடன் சிறப்பு மேற்பார்வையில் திருமணம் முடிக்க அனுமதி வழங்க வேண்டும்.
திருமணத்திற்கான கட்டாயப் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும்!
உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்துள்ளார்கள்.
அலீ இப்னு ஹுசைன் (ஸைனுல் ஆபிதீன்)(ரஹ்) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்த படி, 'ஹிஷாம் இப்னு முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூ ஜஹ்லுடைய) மகளை அலீ இப்னு அபீ தாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்கமாட்டேன். அலீ இப்னு தாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்குச் செய்துவிட்டு, அவர்களின் மகளை மணமுடித்துக்கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்கமாட்டேன்). ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்; அவரை என் வேதனைப்படுவது என்னை மன வேதனைப்படுத்துவதாகும்'' என்று கூறினார்கள். 1
share this.. https://shorturl.at/r2ZVK
1951 இலக்கம் 13 முஸ்லிம் திருமன மற்றும் விவாகரத்து சட்டத்தின் திருத்தங்களுக்காக முன்வைக்கப்படும் பரிந்துரைகள்
https://makarimtec.blogspot.com/2023/01/vali.html
காதி நீதிமன்றங்கள் சீர் திருத்தம் செய்யப்பட வேண்டும்!
https://makarimtec.blogspot.com/2023/01/court.html
முத்தலாக் முறை அவசியம் நீக்கப்பட வேண்டும்
கைகூலி முறை சட்ட விரோதமாக்கப்பட வேண்டும்.
