முத்தலாக் முறை அவசியம் நீக்கப்பட வேண்டும்.
தலாக் மற்றும் பஸஹ் நடைமுறையின் கீழ் விவாகரத்து பெற்றுக் கொள்ளும் போது உரிய நிபந்தனைகள் விடுக்கப்பட வேண்டும். மேல்முறையீட்டு செயற்பாடுகளின் போது கணவர் மற்றும் மனைவி ஆகியோருக்கு விவாகரத்து நடைமுறைசமமாக காணப்பட வேண்டும்.
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம், முபாரத் மற்றும் குலா ஆகிய விதத்தில் விவாகரத்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் விவாகரத்து முறையில் தற்போதுள்ள முத்தலாக் முறைமாற்றம் செய்யப்பட வேண்டும்.
2691 - و حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ عَنْ طَاوُسٍ أَنَّ أَبَا الصَّهْبَاءِ قَالَ لِابْنِ عَبَّاسٍ هَاتِ مِنْ هَنَاتِكَ أَلَمْ يَكُنْ الطَّلَاقُ الثَّلَاثُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَاحِدَةً فَقَالَ قَدْ كَانَ ذَلِكَ فَلَمَّا كَانَ فِي عَهْدِ عُمَرَ تَتَايَعَ النَّاسُ فِي الطَّلَاقِ فَأَجَازَهُ عَلَيْهِمْ رواه مسلم
ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 2932, 2933, 2934
ஒரு நேரத்தில் கூறப்பட்ட மூன்று தலாக் மூன்று தலாக்காகவே கருதப்படுவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் ஏற்பட்ட தவறான நடைமுறையாகும். இந்த தவறான நடமுறையை தான் மத்ஹப்வாதிகள் நடைமுறைபடுத்தி வருகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நடைமுறையில் இருந்த தலாக் தான் இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட தலாக்காக இருக்க முடியும்.
ஒரே தடவையில் மூன்று தலாக் கூறி தனக்கு உள்ள மூன்று வாய்ப்புகளை ஆண்கள் இழக்கின்றனர். ஒருவர் கோபத்தில் தலாக் கூறி விட்டால் மீன்டும் இணைந்துக்
கொள்ளவே முடியாது என்று பிரித்து வைப்பது எந்த வகயையில் நியாயம்?
الطَّلَاقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ …(229) سورةالبقرة
இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம்.
திருக்குர்ஆன் 2 : 229
திரும்பி அழைத்துக் கொள்ளத் தக்க இரண்டு சந்தர்ப்பங்களை முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் வழங்கவில்லை. எனவே குர்ஆனுக்கு மாற்றமான நடைமுறையை அகற்றி விட்டு குர்ஆன் கூறும் தலாக் நடைமுறையை சேர்க்கப்பட வேண்டும்.
கைகூலி முறை சட்ட விரோதமாக்கப்பட வேண்டும்.
சட்டத்தின் 37ம் பிரிவில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட கைகூலியை மீள பெறுவதற்கு அங்கீகாரம் கொடுத்திருப்பதன் மூலம் கைகூலி எடுப்பதற்கு ஆங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனை மாற்றம் செய்ய வேண்டும். கைகூலி என்பது மார்க்க அடிப்படையில் ஹராமான ஒரு நடைமுறையாகும். எனவே கைகூலி எடுப்பதை சட்டரீதியாக தண்டனைக்குரிய குற்றமாக மாற்றியமைக்க வேண்டும்.
وَآَتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا (4)سورةالنساء
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை108 கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!
திருக்குர்ஆன் 4 : 4
கைகூலி என்பது பெண்களுக்கு பாதுகாப்பிற்காக வழங்கப்படும் ஒரு சொத்தாக சட்டத்தில் பார்க்கபடுவதாக கருத்துக்கள் உள்ளன. இதில் எந்த சட்ட ரீதியான பாதுகாப்பும் பெண்களுக்கு கிடையாது. கைகூலி எனும் பெயரில் திருமணத்தின் போது மனமகனின் பெயரில் தான் சொத்துக்கள் எழுதப்படுகின்றது. திருமணம் முடித்து தனது பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை எழுதி விட்டு இரண்டு நாட்களில் மனமகன் குறித்த பெண்ணை விவாகரத்து செய்தால் மீன்டும் அதை பெற்றுக் கொடுப்பதற்கு எந்த சட்ட விதிகளும் கிடையாது.
மேலும் விவரம் அறியாத பெண்களுக்கு சொத்துக்கள் வழங்கி வீணாக்காமல் இருப்பதற்கு இவ்வாறு திருமணத்தின் போது மனமகனுக்கு சொத்துக்கள் வழங்கப்டுகிறது என்றும் சிலர் கூறுகின்றனர். முதலில் சொத்துக்கள் குறித்து விவரம் அறியாத அளவில் உள்ள பெண்களை திருமணம் முடித்துக் கொடுக்கக் கூடாது. பெற்றோர்கள் பெண்களுக்கு அன்பளிப்பாக வழங்கும் சொத்துக்கள் பெண்களுக்குரியதே அன்றி மனமகனுக்குரியதல்ல என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மார்க்கம் மஹர் கொடுக்க சொன்ன பிறகும் சிலர் இவ்வாறு பல காரணங்களை கூறி பெண்களிடம் பிச்சைகேட்கும் கைகூலியை நியாயப்படுத்தப் பார்க்கின்றனர். இது முற்றிலும் மார்க்கத்திற்கு முரணான செயலாகும். எனவே இதை கண்டிப்பாக நீக்க வேண்டும்.
ஜீவனாம்சம் முறை நீக்கப்பட்டு திருக்குர்ஆன் வலியுறுத்தும் மதாஹ் (நஷ்டஈடு தொகை) வழங்கப்பட வேண்டும்.
இஸ்லாத்தில் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு; ஜீவனாம்சம் வழங்கப்படுவதில்லை. எனினும் முஸ்லிம் திருமண சட்டம் ஜீவனாம்சத்தை வலியுறுத்துகிறது. ஜீவனாம்சம் அல்லாத ஒரு பாதுகாப்பு பெண்களுக்கு உண்டு. அவற்றை சட்ட மூலமாக்கலாம்.
விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு மதாஹ் (நஷ்டஈடு தொகை) வழங்கப்பட வேண்டும். தற்போது இருக்கும் சட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் விவாகரத்தின் போது பெண்களுக்கு மதாஹ் வழங்கப்பட வேண்டும் என்பதை எங்கும் குறிப்பிடப்படவில்லை. விவாகரத்தின் போது பெண்களுக்கு வழங்கப்படும் இத்தா கொடுப்பணவும், பிள்ளைகளுக்கு வழங்கப்படும் பராமறிப்பு செலவு மாத்திரம் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
'விவாகரத்துச் செய்தவுடன் கணவனின் பொருளாதார வசதியைக் கவனித்து பெருந்தொகையை, சொத்தை அவளுக்கு ஜமாஅத்தினரோ அல்லது இஸ்லாமிய அரசோ வாங்கிக் கொடுக்க வேண்டும்' என்பது விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு இஸ்லாம் ஏற்படுத்திய இரண்டாவது பாதுகாப்பாகும். திருக்குர்ஆன் 2:241 வசனம் இதைத் தான் கூறுகிறது.
وَلِلْمُطَلَّقَاتِ مَتَاعٌ بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى الْمُتَّقِينَ (241) سورةالبقرة
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.
திருக்குர்ஆன் 2:241
இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லும் ஆழமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
ஆயினும் இத்தா காலத்துக்கு, அதாவது மூன்று மாத காலத்துக்கு ஜீவனாம்சம் வழங்குவதையே 2:241 வசனம் குறிக்கிறது என்று முஸ்லிம்களில் பலர் நினைக்கின்றனர்.
முஸ்லிம் திருமண சட்டத்தில் அவ்வாறு தான் புரிந்து எழுதியும் உள்ளார்கள்.
இதைச் சொல்வது என்றால் இத்தா காலத்தில் என்று எளிதாகச் சொல்லியிருக்கலாம். இறைவன் அவ்வாறு கூறாமல் அழகிய முறையில், நியாயமான முறையில் என்று கூறுகிறான்.ஒரு பெண்ணுடன் வாழ்ந்து அவளது இளமையை அனுபவித்து விட்டு மூன்று மாதம் செலவுக்குப் பணம் கொடுப்பது அழகிய முறையாகவோ, நியாயமான முறையாகவோ இருக்காது.
தனது மகளுக்கு இப்படி நேர்ந்தால் எது நியாயமானதாகப் படுகிறதோ அது தான் நியாயமானது.
திருக்குர்ஆன் 2:236 வசனம் கூறுவதை இதற்கு அளவு கோலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
لَا جُنَاحَ عَلَيْكُمْ إِنْ طَلَّقْتُمُ النِّسَاءَ مَا لَمْ تَمَسُّوهُنَّ أَوْ تَفْرِضُوا لَهُنَّ فَرِيضَةً وَمَتِّعُوهُنَّ عَلَى الْمُوسِعِ قَدَرُهُ وَعَلَى الْمُقْتِرِ قَدَرُهُ مَتَاعًا بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى الْمُحْسِنِينَ (236) سورةالبقرة
அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்!
திருக்குர்ஆன் 2:236
மனைவியைத் தீண்டாமல் விவாகரத்துச் செய்தவர் தமது வசதிக்குத் தக்கவாறு பெண்களுக்கு வசதிகள் அளிக்குமாறு இவ்வசனம் கூறுகிறது. மனைவியைத் தீண்டி அனுபவித்தவர் விவாகரத்துச் செய்யும் போது இதையே அடிப்படையாகக் கொள்வது தான் பொருத்தமானது.
உங்கள் தோழன்,
ஆர். அப்துர் ராஸிக் B.Com (Special), HND in Law (EDHat), LLB UK (Hons) Reading
வட்ஸ் அப் எண்:
0778-747377
1951 இலக்கம் 13 முஸ்லிம் திருமன மற்றும் விவாகரத்து சட்டத்தின் திருத்தங்களுக்காக முன்வைக்கப்படும் பரிந்துரைகள்
https://makarimtec.blogspot.com/2023/01/vali.html
காதி நீதிமன்றங்கள் சீர் திருத்தம் செய்யப்பட வேண்டும்!
https://makarimtec.blogspot.com/2023/01/court.html
முஸ்லிம்களின் திருமண வயதெல்லை எப்படி அமைய வேண்டும்?
https://makarimtec.blogspot.com/2023/01/7-weds.html
video's
முத்தலாக் உண்டா
https://www.youtube.com/watch?v=verpe2Mdc3g
முத்தலாக் தடை சட்டத்தை ஏன் எதிர்க்கிறீர்கள்? முத்தலாக் தடை சட்டம் இந்துக்களுக்கும் பொருந்துமா ?
https://www.youtube.com/watch?v=7eQJsF3on9Q
முத்தலாக்கும் முஸ்லிம் பெண்களும் !(althafi)
