தவ்ஹீத் ஜமாஅத் video's: 4,5,6- காதி நீதிமன்றங்கள் சீர் திருத்தம் செய்யப்பட வேண்டும்!

4,5,6- காதி நீதிமன்றங்கள் சீர் திருத்தம் செய்யப்பட வேண்டும்!

பெண்கள் காதிகளாகவோ, ஜுரிகளாகவோ, திருமணப் பதிவாளர்களாகவோ, காதிகள் சபை அங்கத்தவராகவோ நியமிக்கப்பட தகுதியுடையவர்களாக்கப்படல் வேண்டும்.

இச்சட்டத்தின் கீழ் சில அதிகாரிகள் நியகமிக்கப் படுகின்றனர். உதாரணமாக முஸ்லிம் திருமன பதிவாளர், நீதிபதி, காதியார், காதிச்சபை உறுப்பினர்கள் போன்றவைகளை குறிப்பிடலாம். இந்த அனைத்து பொறுப்புகளுக்கும் ஆண்கள் தான் நியமிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமண பதிவாளர்களும் காதியார்களும் முஸ்லிம் ஆண்களாக இருக்க வேண்டும் என்பதை திருமண சட்டத்தில் 8 மற்றும் 12 வது உறுப்புறை குறிப்பிடுகிறது.

நீதிபதிகளாக பெண்கள் வருவதை இஸ்லாம் தடை செய்யவில்லை. காழி என்றால் தீர்ப்பு வழங்குபவர்கள் என்று அர்த்தம். தீர்ப்பு வழங்குவதற்கு இஸ்லாமிய சட்டத்தில் பெண்களுக்கும் அனுமதி உண்டு. அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மார்க்க தீர்ப்பு வழங்குபவராக இருந்துள்ளார்கள். மார்க்கத்தின் தீர்ப்பு வழங்கும் கூர்மையான அறிவு கொண்டவர்களாக அவர்கள் கருதப்பட்டார்கள்.

பெண்கள் காதிகளாகவோ, ஜுரிகளாகவோ, திருமணப் பதிவாளர்களாகவோ, காதிகள் சபை அங்கத்தவராகவோ நியமிக்கப்பட தகுதியுடையவர்களாக்கப்படல் வேண்டும்.

நீதிபதிகளாக பெண்கள் வரக்கூடாது என்பதற்கான எதிர் வாதங்களும் பதில்களும்

நீதிபதிகளாக பெண்கள் இருக்க்க்கூடாது என்று வாதிடுபவர்கள் கீழ்காணும் ஹதீஸை ஆதாரமாக காட்டுகின்றனர்.

முதல் வாதம்

‎4073 - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ حَدَّثَنَا عَوْفٌ عَنْ الْحَسَنِ عَنْ أَبِي بَكْرَةَ قَالَ لَقَدْ نَفَعَنِي اللَّهُ بِكَلِمَةٍ سَمِعْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَّامَ الْجَمَلِ بَعْدَ مَا كِدْتُ أَنْ أَلْحَقَ بِأَصْحَابِ الْجَمَلِ فَأُقَاتِلَ مَعَهُمْ قَالَ لَمَّا بَلَغَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ أَهْلَ فَارِسَ قَدْ مَلَّكُوا عَلَيْهِمْ بِنْتَ كِسْرَى قَالَ لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمْ امْرَأَةً رواه البخاري

“பெண்கள் ஆட்சி செய்யும் சமுதாயம் வெற்றி பெறவே மாட்டாது” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: புகாரி4425, 7099

நமது பதில்

மேலுள்ள ஹதீஸ் ஆட்சி அதிகார பொறுப்பை குறிக்கிறதே தவிர நீதிபதியின் பதவியை குறிக்கவில்லை. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆட்சி மற்றும் நிர்வாக பொறுப்பு என்பது சாதாரனமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பெண்கள் ஆட்சி நிர்வாகம் செய்யும்போது அவர்களின் கற்புக்கும் ஒழுக்கத்திற்கும் பல சவால்கள் வந்து விடும்.

இத்தகைய விசயத்தில் மிகப்பெரிய அளவில் மனவலிமை கொண்ட பெண்கள் கூட தாக்கு பிடிக்க மாட்டார்கள். ஆண்களுக்கே நிர்வாக பொறுப்புகளை சரிவர செய்வதற்கு பல இடையூர்களும் சிரம் சாத்தியங்களும் இருக்கும்போது பெண்களுக்கு அறவே சாத்தியம் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது வாதம்

மற்றுமொரு ஆதாரமாக கீழுள்ள வசனத்தை எடுத்து காட்டுவார்கள்.

‎الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ … (34) سورةالنساء

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித் திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.

திருக்குர்ஆன் 4 : 34

நமது பதில்

இந்த வசனம் குடும்ப நிர்வாகத்தை குறிக்கிமே தவிர நீதிபதிகளாக பெண்கள் இருப்பதற்கு இதில் எந்த தடையும் இல்லை. குடும்பத்தில் மணைவிக்கு செலவளிக்கும் விடயத்தை பற்றியே இந்த வசனம் பேசுகிறது. ஒரு ஆண் அந்நியப் பெண்ணுக்கு செலவளிப்பதை பற்றி இந்த வசனம் பேச வில்லை என்றால் ஒரு கணவன் மனைவியின் குடும்ப நிர்வகத்திற்கு பொறுப்பு எனும் கருத்தில் தான் இந்த வசனம் அமைந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மூன்றாவது வாதம்

மேலும் காதி என்பவர் வலீயாக இருக்க வேண்டும் என்பதனால் பெண்கள் காதிகளாக நியமிக்கப்படக்கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர்.

நமது பதில்

பெண்கள் வலீயாக இருக்ககூடாது என்பது மார்க்கத்தின் அடிப்படையில் உள்ளது. அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க்க்கூடாது. ஆனால் காதி என்பவர் விலீயாக இருப்பதே நமது பிரச்சனை. காதி என்பவர் வலீயாக இருக்கக் கூடாது என்பதே நமது நிலைபாடாகும். காதி என்பவர் குடும்ப நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்து விட்டுச் செல்லட்டும். அவர் வலீயாக நிற்பதோ அனுமதி பத்திரம் வழங்குவதோ செய்வதில் தான் பல மோசடிகள் இடம் பெறுகிறது.

அப்படியென்றால் வலீ இல்லாத பட்சத்தில் வலீயாக நிற்பது யார் என்ற கேள்வி எழும். வலீ என்பவர் பொறுப்பாளர் ஆவார். அவர் திருமணத்தின் அனைத்து விடயங்களையும் அறிந்து வைத்திருக்கும் ஒருவராக இருக்க வேண்டும். எனவே அந்தந்த ஊரைச் சேர்ந்த ஊர் ஜமாஅத் தலைவரே வலீயாக இருக்க வேண்டும் என்பது நமது நிலைபாடாகும்.இதற்கு கீழ் காணும் ஹதீஸ் சான்றாக நிற்கிறது.

‎4745 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ امْرَأَةً أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا فَقَالَ مَا لِي الْيَوْمَ فِي النِّسَاءِ مِنْ حَاجَةٍ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ زَوِّجْنِيهَا قَالَ مَا عِنْدَكَ قَالَ مَا عِنْدِي شَيْءٌ قَالَ أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ قَالَ مَا عِنْدِي شَيْءٌ قَالَ فَمَا عِنْدَكَ مِنْ الْقُرْآنِ قَالَ كَذَا وَكَذَا قَالَ فَقَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنْ الْقُرْآنِ رواه البخاري

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தம்மை (அர்ப்பணித்து) அன்பளிப்புச் செய்து விட்டதாகக் கூறினார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், '(இனி) எனக்கு எந்தப் பெண்ணும் தேவையில்லை' என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த ஒருவர் 'இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'ஏதேனும் ஆடையொன்றை அவளுக்கு ('மஹ்ர்' எனும் விவாகக் கொடையாக)க்கொடு!' என்று (அந்த மனிதரிடம்) கூறினார்கள். அவர், 'என்னிடம் இல்லை' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'அவளுக்கு (எதையேனும் மஹ்ராகக்) கொடு! அது இரும்பாலான மோதிரமாக இருந்தாலும் சரியே' என்று கூறினார்கள். இதைக் கேட்டு அந்த மனிதர் கலங்கினார். எனவே, நபி (ஸல்) அவர்கள், 'குர்ஆனிலிருந்து உன்னிடம் என்ன (மனனமாக) இருக்கிறது?' என்று கேட்டார்கள். அவர் இன்ன இன்ன அத்தியாயங்கள் (எனக்கு மனப்பாடமாக) உள்ளன' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'உம்முடன் இருக்கும் (குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்து வைத்தேன்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)

நூல் புகாரி 5029

இவ்வாறான ஒரு நிலைபாட்டுக்கு வரும்போது காதியாக பெண்கள் இருப்பதற்கு எந்த தடையும் வராது. ஆனால் காதி என்பவர் குடும்ப நீதிமன்றத்தின் நீதிபதி மாத்திரமே. அவர் ஊர் ஜமாஅத் தலைவரின் விவாகரத்து செல்லு படியானதா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் ஒருவர் மாத்திரமே. வேறு எதிலும் தலையிடும் அதிகாரம் அவருக்கு இருக்க்க் கூடாது.


பெண்கள் திருமன பதிவாளர்களாக இருக்க என்ன தடை இருக்கிறது?

திருமன பதிவாளர்களை பொறுத்தவரை முஸ்லிம் பெண்கள் திருமன பதிவாளர்களாக கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. மாறாக ஒரு சில நடைமுறை சிக்கள்கள் காரணமாக இதை மறுத்து வருகிறார்கள்.

பொதுவாக பள்ளிவாசல்களில் தான் திருமண பதிவுகள் அதிகமான அளவில் நடைபெறுகிறது. பள்ளிவாசல்களில் திருமண பதிவுகளை நடத்தும் போது ஆண் பதிவாளர்களுக்கு எல்லா சந்தர்ப்பத்திலும் பள்ளிவாசலுக்கும் நுழையும் அனுமதி உண்டு என்பதால் அவரால் காலதாமதமின்றி, திருமண பதிவுகளை மேற்கொள்ளலாம். அவருக்கு குளிப்பு கடமையான நிலையில் இருந்தால் உடனே குளித்து விட்டு பள்ளிவாசலுக்கு வந்து சேர்ந்து விடுவார். இதே பெண்களாக இருந்தால் மாதவிலக்கு நேரங்களில் பெண்கள் பள்ளிக்கு வருவதற்கு தடை இருப்பதனால் இதை கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.

இஸ்லாத்தில் பள்ளிவாசலில் திருமணத்தை பதிவு செய்யும் கட்டாயம் எங்கும் குறிப்பிடப்படவில்லை. திருமணத்தை பொருத்தவரை அதை பதிவு செய்பவர் திருமண ஒப்பந்தத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை. 

திருமண பதிவு என்பது மார்க்க ரீதியான ஒரு பொறுப்பு அல்ல. அது நாம் சட்டத்திற்காக ஏற்பாடு செய்து கொண்ட ஒன்று. எனவே திருமண பதிவாளர் இல்லாமலே திருமண ஒப்பந்த்த்தை நடாத்திக் கொள்ளலாம். திருமணத்தை குடும்ப அங்கத்தவர்கள் முன்னிலையில் நடாத்தப்பட்டாலே போதுமானது. சம்பந்தப்பட்ட குடும்பம் தான் திருமண ஒப்பந்த்த்தில் தலையிட வேண்டுமே தவிர பதிவாளருக்கு அதில் எந்த வேலையும் இல்லை.

‎فَانْكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ…(25) سورة النساء

அவர்களின் குடும்பத்தின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 4 25

எனவே ஒரு திருமணம் சம்பந்தப்பட்ட குடும்பத்தின் அனுமதியுடன் செய்து கொண்ட பிறகு திருமண பதிவாளரை அணுகி அதை பதிவு செய்து கொள்ளலாம். திருமண நிகழ்விற்கு திருமண பதிவாளர் கலந்து கொள்ள வேண்டும் என்று இல்லாத்தனால் திருமண பதிவாளர் எனும் முறையில் பெண்கள் இருப்பதிலும் எந்த நடைமுறை சிக்களும் ஏற்படாது.

 காதி நீதிமன்றங்கள் சீர் திருத்தம் செய்யப்பட வேண்டும்!

குடும்ப பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இறைவன் ஏற்படுத்திய வழிமுறையை சரியாக நாம் புரிநது கொள்ள வேண்டும். இறைவன் நான்கு வழிமுறைகளை குறிப்பிடுகிறான். அதில் இறுதி வழிமுறை தான் கணவன் மற்றும் மனைவியின் குடும்பம் சார்பாக நடுவர்களை ஏற்படுத்தி அவர்கள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது என்பது.

இதை பற்றி இறவைன் திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது, 

‎وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا (35) سورةالنساء

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும்இருக்கிறான்.

திருக்குர்ஆன்4 : 35

குடும்ப பஞ்சாயத்துகளை தீர்க்க அந்த குடும்பத்தின் பிரதிநிதிகள் இருக்க வேண்டுமே தவிர குடும்பங்களுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் குடும்ப பஞ்சாயத்தில் தலையிடுவதால் உரிய முறையில் அவை தீர்க்கப்படாது என்பது தான் இதன் அர்த்தம்.

நபியவர்களின் காலத்தில் குடும்ப பிரச்சனைகளை அந்தந்த குடும்பங்கள் தான் தீர்த்துக் கொண்டது. அதுதான் திருக்குர்ஆனின் வழிமுறை. ஏதும் அநீதியிழைக்கப்படுவதான யாரும் கருதினால் ஊர் ஜமாஅத் தலைவர் என்ற வகையில் நபிகளாரிடம் குடும்ப பிரச்சனைகளை கொண்டு வந்துள்ளனர். தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று மார்க்க அடிப்படையில் உள்ள சட்டத்தின் படி நபியவர்கள் தீர்ப்பு வழங்கி வத்துள்ளனர். இதற்கு பின்வரும் ஆதாரத்தை முன்வைக்கலாம்.

‎4867 - حَدَّثَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ حَدَّثَنَا خَالِدٌ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍأَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ ثَابِتُ بْنُ قَيْسٍ مَا أَعْتِبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلَا دِينٍ وَلَكِنِّي أَكْرَهُ الْكُفْرَ فِي الْإِسْلَامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ قَالَتْ نَعَمْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْبَلْ الْحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةًرواه البخاري

ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! (என்கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப்பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன் என்று கூறினார். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸாபித் உனக்கு (மணக்கொடையாக) அளித்ததோட்டத்தை நீ அவருக்கே திருப்பித்தந்து விடுகிறாயா? என்று கேட்டார்கள். அவர், ஆம் (தந்து விடுகிறேன்) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), தோட்டத்தை ஏற்றுக்கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி(5273)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை மேற்கண்ட செய்தியிலிருந்து அறியலாம். இதிலிருந்து கீழ்காணும் நடைமுறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

காழி நீதிமன்றங்கள் குடும்ப நீதிமன்றங்களாக மாற்றப்பட வேண்டும்!

• குடும்ப பிரச்சனைகளின் முதல் கட்டமாக கணவன் மனைவி மத்தியில் இறைவன் கூறிய வழிமுறை படி பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்.

• அதில் ஒரு முடிவு காண முடியாவிட்டால் இரு தரப்பின் குடும்பங்கள் சார்பாக நடுவர்கள் ஒவ்வொருவரை நியமித்து முடிவு காண முற்பட வேண்டும்.

• அதிலும் முடிவு காண முடியாவிட்டால் ஊர் ஊரில் ஜமாஅத் தலைவருக்கு அதை கொண்டு செல்வதே சரியான வழிமுறையாகும். ஜமாஅத் தலைவரும் மார்க்க மற்றும் சட்டத்தின் அடிப்படையில் குறித்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும். 

விவாகரத்து செய்வதாக இருந்தாலும் இணைந்து வாழ்வதாக இருந்தாலும் மஅல்லாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு சரியான தீர்ப்பு வழங்க இதுவே மிகவும் ஏற்றது. ஊர் ஜமாஅத்தினரிடம் இந்த அதிகாரத்தை ஒப்படைத்தால் அதுவே பக்கச் சார்பற்ற ஒரு முடிவை எடுப்பதற்கு ஏற்றதாக இருக்கும்.

• இவ்வாறு ஊர் ஜமாஅத் வழங்கும் தீர்ப்பு விவாகரத்தாக இருந்தால் அது விவாகரத்தை உறுதி செய்து விடும். அதன் பிறகு அதை சட்ட ரீதியாக ஆவணப்படுத்தும் ஏற்பாடுகளை செய்து கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்.

• அவ்வாறு ஜமாஅத் தலைவர் தீர்த்துவைத்ததில் தனக்கு அநீதியிழைக்கப்பட்டதாக யாரும் கருதினால் அப்போது குடும்ப நீதிமன்றம் என்று ஒரு சிறப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஊர் ஜமாஅத் வழங்கிய தீர்ப்பு சரியா? இல்லையா? என்பதை மாத்திரம் மேள்முறையீடு செய்யும் விதத்தில் செயல் படுத்தலாம்.

இத்தகைய ஒரு குடும்ப நீதிமன்றத்தில் நீதிபதியாக ஆணோ பெண்ணோ இருப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அது முஸ்லிம் அல்லாதவராக இருந்தாலும் பிரச்சனை இல்லை. நீதிமன்றம் சட்டத்தின் படி தீர்ப்பு வழங்குமே தவிர சுயவிருப்பத்தின் படி தீர்ப்பு சொல்லாது.

காதி எனும் பெயரில் தனி நபர் ஒருவர் முற்றிலும் முழுதாக ஒரு குடும்பத்தின் பிரச்சனையின் போது முடிவெடுக்கும் பட்டசத்தில் தான் அதிகமான பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அல்லது தான் சார்ந்த ஒருவருக்கு பக்கச்சார்பாக தீர்ப்பு வழங்கும் நிலை ஏற்படுகிறது.

உங்கள் தோழன், 

ஆர். அப்துர் ராஸிக் B.Com (Special), HND in Law (EDHat), LLB UK (Hons) Reading

வட்ஸ் அப் எண்:

0778-747377

முஸ்லிம்களின் திருமண வயதெல்லை எப்படி அமைய வேண்டும்?
https://makarimtec.blogspot.com/2023/01/7-weds.html

1951 இலக்கம் 13 முஸ்லிம் திருமன மற்றும் விவாகரத்து சட்டத்தின் திருத்தங்களுக்காக முன்வைக்கப்படும் பரிந்துரைகள்

https://makarimtec.blogspot.com/2023/01/vali.html

முத்தலாக் முறை அவசியம் நீக்கப்பட வேண்டும் 
கைகூலி முறை சட்ட விரோதமாக்கப்பட வேண்டும்.

https://makarimtec.blogspot.com/2023/01/10.html


Search This Blog