தவ்ஹீத் ஜமாஅத் video's: நீங்கள் ஸலபிக் கொள்கையில் உள்ளவரா? அப்படியென்றால் இது உங்களுக்குத் தான்!

நீங்கள் ஸலபிக் கொள்கையில் உள்ளவரா? அப்படியென்றால் இது உங்களுக்குத் தான்!

பீஜே என்பவர் ஹதீஸ் மறுப்பாளரா?


  ஹதீஸ் மறுப்பாளர் என்ற குற்றச்சாட்டு குறித்து அலசுவோம்!
இதுவே நீண்ட காலமாக நிலவும் பிரதான சர்ச்சையாகும்! ஸலபி அறிஞர்கள் ஸஹீஹ் என்று கருதும் பல ஹதீஸ்களை பீஜே என்பவர் மறுப்பதால் ஹதீஸ் மறுப்பாளர் என்று கூறப்படுகிறது!
அப்படியென்றால் நான் சில கேள்விகளை முன்வைக்கிறேன்! ஒரு அறிஞரின் பார்வையில் ஸஹீஹ் என்று கருதப்படும் ஒரு ஹதீஸை இன்னொரு அறிஞர் ழயீஃப் என்று கூறி மறுத்தால் மறுப்பவர் ஹதீஸ் மறுப்பாளரா என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்!


ஹதீஸ் மறுப்பு என்றால் என்ன அர்த்தம்?

நபிகளாரின் சுன்னாக்கள் தேவையில்லை குர்ஆன் மட்டுமே போதும் என்று


வாதிப்பதே ஹதீஸ் மறுப்பாகும்!
அஹ்லுல் குர்ஆன் என்று யாரை அழைக்கிறோமோ அவர்களே ஹதீஸை முற்றாக மறுத்தவர்களாவர்.
அதே நேரம் ஹதீஸும் வஹீதான் என்று நம்பி பிரச்சாரம் செய்யும் ஒருவர் தனது ஆய்வுப் பிரகாரம் தான் ஏற்றுக் கொண்டுள்ள இஸ்லாத்தின் அடிப்படை விதிகளுக்கு மாற்றமாக வரும் ஹதீஸ்களை ழயீஃப் என்று மறுத்தால் அந்த ஹதீஸ்கள் ஸஹீஹா ழயீஃபா என்று வாதிக்கபட வேண்டுமே ஒழிய ஹதீஸ் மறுப்பாளர் என்று வாதிப்பதானது மிகவும் தவறான தீர்ப்பாகும்!

அப்படி ஒருவர் வாதிட்டால் அவரது பார்வையில் எல்லோருமே ஹதீஸ் மறுப்பாளர்கள் தாம்! அவ்வளவு ஏன் அவர் கூட ஹதீஸ் மறுப்பாளர் தான். எப்படி என்று பார்ப்போம்!

ஒரு ஸலபி அறிஞரின் பார்வையில் வித்ரில் குனூத் ஓதும் ஹதீஸ் ஸஹீஹ் எனும் போது அதே ஹதீஸை இன்னொரு ஸலபி அறிஞர் ழயீஃப் என்று கூறி மறுத்தால் மறுத்தவரை ஹதீஸ் மறுப்பாளர் என்று யாரும் சொல்வதில்லை! அவரின் ஆய்வுப் படி அது ஸஹீஸ், இவரின் ஆய்வுப் படி அது ழயீஃப் என்று தான் சொல்வோம்!

மேலும் பிஜேவை ஹதீஸ் மறுப்பாளர் என்று கூறும் எந்த ஒரு ஸலபி அறிஞரும் வித் ரு குனூத் ஹதீஸை மறுத்த தனது ஸலபி அறிஞரை ஹதீஸை மறுத்தவர், வஹீயை மறுத்தவர் என்று சொல்வதே இல்லை!

அது அவரின் ஆய்வு இது இவரின் ஆய்வு என்று எளிதாகவே கடந்து விடுகின்றனர்! ஏன் இந்த முரண்பட்ட நிலைப்பாடு?
இங்கு அவரின் ஆய்வு இவரின் ஆய்வு என்று சொல்லித் தப்பிக்க இது என்ன விழையாட்டு விடயமா?
அல்லது மௌலவி மார்களின் தனிப்பட்ட சொந்தப் பிரச்சினையா?
அல்லது அல்லாஹ்வின் வஹீயா?

ஒரு செய்தி வஹீயா இல்லையா என்று ஆய்வு நடக்கிறது? இங்கு ஆய்வு சரி என்றால் வஹீ என்றும் ஆய்வு பிழை என்றால் வஹீ இல்லை என்று தீர்வாகிறது. இங்கு எதார்த்தத்தில்
ஒருவர் தனது ஆய்வின் படி ஹதீஸை மறுக்கிறார்
மற்றவர் ஹதீஸை ஏற்கிறார்!

இதற்கு ஸலபிகளான நீங்கள் என்ன வியாக்கியானம் செய்தாலும் இது தான் உண்மை! யாராலும் மறுக்க முடியாது! ஒரு ஹதீஸில் ஆய்வு செய்யும் போது ஸஹீஹ் என்று முடிவெடுத்தவர் அதை வஹீ என்று முடிவெடுக்கிறார்! ழயீஃப் என்று முடிவெடுத்தவர் அது வஹீயல்ல என்று நிராகரிக்கிறார். இது தானே அடிப்படை?

மேலும் சொல்வதாக இருந்தால் இந்த நிலையானது இன்று உண்டானது அல்ல! மாறாக ஹதீஸ் துறைக்கா தமது வாழ்வை அர்பணித்த இமாம்கள் செய்ததும் இது தானே?

உதாரணமாக இப்னு ஹஜர் எந்த ஹதீஸ்களையெல்லாம் ழயீப்ஃ என்று எழுதியுள்ளாரோ அந்த ஹதீஸை அவருக்கும் முன்னால் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த பல இமாம்கள் ஸஹீஹ் என்று தானே நம்பி வந்துள்ளனர்?
இன்னும் சொல்வதாக இருந்தால் சமகாலத்தில் வாழ்ந்து மரணித்த இமாம் அல்பாணி அவர்கள் இது வரை யாரும் தீர்ப்பளிக்காத வகையில் பல ஆயிரம் ஹதீஸ்களை ஸஹீஹ் ழயீஃப் என்று வகை பிரித்து தனித்தனியான நூல்களையே எழுதியுள்ளார்.

அல்பாணியின் பார்வையில் ஸஹீஹ் என்று சொல்லப்பட்டவை பல நூற்றாண்டுகளாக ழயீஃப் என்று சொல்லப்ப பட்டவைகளும் அடங்கும்!
அல்பானி தனக்கென தனியான சில ஹதீஸ் கலை விதிகளையும் உருவாக்கிக் கொண்டுள்ளார். அதற்காகவே அவர்கள் வாழும் காலத்தில் ஸலபி உலகத்தால் அவர் தூற்றப்படவும் செய்தார்! ஆனால் இன்று அவரை இமாமாக அவர்களே ஏற்றுக் கொண்டனர்!

அது அவரின் ஆய்வு இது இவரின் ஆய்வு என்ற பார்வை இருந்தமையால் இங்கு யாரும் யாரையும் ஹதீஸ் மறுப்பாளர் அல்லது ஹதீஸ் காப்பாளர் என்று வாதிடவில்லை!
மேலும் சொல்வதாக இருந்தால் இமாம் புஹாரி அவர்கள் ஹதீஸ் துறையில் கடும் போக்காளர் என்று இமாம் முஸ்லிம் அவர்களாலேயே விமர்சிக்கப் படுகிறார்! என்ன காரணம்?
இமாம் முஸ்லிம் அவர்கள் ஒரு செய்தியை ஸஹீஹ் என்று தீர்மானிக்க இலகுவான இயல்பான விதிகளைப் போட்டுக் கொண்டார், ஆனால் புகாரி இமாம் அவர்கள் கடினமான விதிகளுக்கு ஹதீஸை உட்படுத்தியே ஸஹீஹ் என்று தொகுத்தார்!
இங்கு இரண்டு முதற் பெரும் இமாம்களுக்கு மத்தியிலேயே ஸஹீஹ் என்ற நூலைத் தொகுப்பதில் பெரும் சர்ச்சை நிலவியுள்ளது!
முஸ்லிமின் பார்வையில் ஸஹீஹ் என்று தீர்மானிக்கப்பட்ட ஒரு செய்தி புகாரியின் பார்வையில் ஸஹீஹ் என்ற தரத்தில் பார்க்கப் படவேயில்லை!
இதனால் இமாம் புகாரியை ஹதீஸ் மறுப்பாளர் என்று சொல்ல முடியுமா?

அல்லது இருவரது பார்வையும் ஸஹீஹை தீர்மானிப்பதில் வித்தியாசப் படுகிறது என்று சொல்வோமா? இங்கு எது ஹதீஸ் என்று தீர்மானிப்பதற்கான விதிமுறைகள் மாறுபடுவதால் ஹதீஸ் மறுப்பு, வஹீ மறுப்பு என்று யாரும் நினைப்பதில்லை!

மேலும் சொல்வதாக இருந்தால் ஹதீஸ்களை ஐந்து விதிகளுக்கு உட்படுத்தி ஆய்வு செய்யும் அடிப்படை என்பது நபிகளாரின் காலத்தில் இருந்ததா?

நபிகளாரின் ஆழுகைக்குற்பட்ட பகுதிகளில் நபிகளாரை சந்திக்க முடியாத தூரத்தில் வாழ்ந்த எந்த ஸஹாபாளும் ஒரு ஹதீஸ் தம்மிடம் வரும் போதும் ஐந்து விதி ஐந்து விதி என்று பேசிக் கொண்டிருந்தார்களா?

அல்லது தமது ஆய்வுப் பிரகாரம் அதை சரி பிழை என்று தீர்மானித்தார்களா?
யார் போட்டது இந்த ஐந்து விதி?
அல்லாஹ்வா?
ரசூலா?
இந்த ஐந்து விதியைத் தாண்டி எந்த விதியும் இல்லை என்று சொன்னது யார்? அல்லாஹ்வா?
ரசூலா?
அபூ பக்கரின் ஆட்சிக் காலத்தில் இந்த ஐந்து விதி பேசப்பட்டதா?
உமர், உஸ்மான், அலி போன்ற நபி வழி ஹிலாபத்தின் போது இந்த ஐந்து விதி இருந்ததா?
இந்த ஐந்து விதிகளும் என்னவென்றே தெரியாத பல பாமரர்கள் கூட இன்று ஸஹீஹான ஹதீஸை மறுப்பதாக நம்ப வைக்கப்பட்டு உசுப்பி விடப் பட்டுள்ளனர்!
என்னைப் பொருத்தவரை ஹதீஸை தீர்மானிக்கும் ஐந்து விதிகளை ஏற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருவனே!
அதற்காக அந்த ஐந்து விதிகளையும் தாண்டி எந்த விதிகளும் இல்லை என்று சொல்வதை வழிகேடு என்கிறேன். ஹதீஸை தீர்மானிக்கும் மிக அடிப்படையான விதி அல்குர்ஆன் தான்.
அல்குர் ஆனின் போதனைக்கு அமைவாகவே ஹதீஸ்களை ஆய்வு செய்ய வேண்டும்! அல்லாமல் இமாம்கள் போட்ட விதிகளை மட்டுமே எடுப்போம், அதைத் தாண்ட மாட்டோம் என்று சொல்வதானது ஷாபி, ஹனபி என மத்ஹப் இமாம்களை பின்பற்றுவது போன்ற வழிகெட்ட மத்ஹப் போக்காகும்! இதுவே இன்றைய ஸலபிகளின் போக்காகவும் உள்ளது! அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டுவானாக!

இறுதியாக பிஜே அவர்களால் அல்குர்ஆனுக்கு முரண் என்று கூறி மறுக்கப்பட்டுள்ள ஹதீஸ்களில் ஏதேனும் ஒன்று அவரின் பிழையான புரிதலால் தவறாக மறுக்கப்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது அதனை சுட்டிக் காட்டி முரண்பாடு இல்லை என்று விளக்கலாம்!

அப்போது அதை அவர் மறுக்கலாம், அல்லது ஏற்கலாம். ஆனால் அப்போதும் அங்கு ஹதீஸ் மறுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை! மாறாக அவரின் ஆய்வில் ஏற்பட்டுள்ள தவறு என்று அர்த்தம்!
காரணம் ஒட்டுமொத்த ஹதீஸை மறுப்பது தான் ஹதீஸ் மறுப்பே ஒழிய, தனது ஆய்வுப் பிரகாரம் ஒன்றை மறுப்பது ஹதீஸ் மறுப்போ வஹீ மறுப்போ அல்ல!

-- HMA. கபீர் முகநூளிலிருந்து

share this.. https://bit.ly/3WtATJM



அல் உஸைமீன் அவர்களை வழிகேடர் என்றும் ஹதீஸ் மறுப்பாளர் என்றும் இந்திய இலங்கை சலபுகள் அறிவிப்பார்களா?





Search This Blog