அடக்கம் செய்தவுடன் அந்த இடத்தில் ஏதாவது செடி கொடிகளை நட்டு வைக்கும் வழக்கம் தமிழகத்தில் காணப்படுகிறது. பின்வரும் ஹதீஸ்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு தோட்டத்தின் அருகில் கடந்து சென்றனர். அப்போது தமது கப்ருகளில் வேதனை செய்யப்படும் இருவரின் சப்தத்தைக் கேட்டார்கள். ‘இவ்விருவரும் பெரும் பாவங்களுக்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைத்துக் கொள்ளாதவராக இருந்தார்; மற்றொருவர் கோள் சொல்லிக் கொண்டிருந்தார்’ என்று கூறினார்கள். பின்னர் பேரீச்சை மட்டை ஒன்றைக் கொண்டு வரச் செய்து அதை இரண்டாக முறித்து ஒவ்வொரு கப்ரிலும் ஒரு துண்டை வைத்தார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் ‘இது காய்வது வரை இவ்விருவரின் வேதனை இலேசாக்கப்படக் கூடும்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(புகாரி: 216, 218, 1361) ➚
புகாரியின் மற்றொரு அறிவிப்பில் (211, 1273) ‘அந்த மட்டையை இரண்டாகப் பிளந்து பாதியை ஒரு கப்ரிலும், மறுபாதியை மற்றொரு கப்ரிலும் வைத்தார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
கப்ரின் மேல் செடி கொடிகளை நடுதல்
நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?
நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?
நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் அறிவிப்பாளர் தொடர் ரீதியிலும் மிகவும் பலவீனமான செய்தி என்பதை ஏகத்துவ இதழில் தெளிவுபடுத்தி இருந்தோம்.
இதே போன்று நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் கேவலப்படுத்தக்கூடிய இன்னொரு பொய்யான செய்தியும் ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. நபியவர்கள் வெளியேற்றிய இரத்தத்தை நபித்தோழர்கள் குடித்தார்கள் என்பதே அந்தப் பொய்யான செய்தி.
நல்லடியார்கள் அடக்கத்தலங்கள் இஸ்லாமிய அடையாள சின்னங்களா
நல்லடியார்கள் அடக்கத்தலங்கள் இஸ்லாமிய அடையாள சின்னங்கள் என்றும் அவைகள் தான் இஸ்லாமிய வரலாற்றை மக்களுக்கு சொல்கிறது என்றும் தவறான கருத்தை மக்களிடம் விதைத்து மக்களை வழி கெடுத்துக் கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம்...
இறந்து புதைக்கப்பட்ட மனிதரின் சமாதியை இஸ்லாமிய அடையாளச் சின்னமென்று அல்லாஹ்வும் சொல்லவில்லை..
அல்லாஹ்வின் தூதரும் சொல்லவில்லை!
முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வருகைக்கு முன்னர் லட்சத்துக்கும் மேற்பட்ட நபிமார்களும் நல்லடியார்களும் வாழ்ந்து மறைந்துள்ளனர்...
கனவுகள் இறைவனின் கட்டளையாகுமா?
கனவுகள் இறைவனின் கட்டளையாகுமா?
அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி தேட வேண்டும் என்பதை ஏற்காதவர்கள் தங்கள் தரப்பில் மற்றொரு வாதத்தையும் முன் வைக்கின்றனர்.
அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்றால் மகான்கள் எங்கள் கனவில் வந்து தர்காவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்களே! மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒரு காரியத்துக்கு மகான்கள் அழைப்பார்களா? என இவர்கள் கேட்கின்றனர்.
கனவுகள் பற்றி இவர்கள் சரியான முறையில் அறியாததே இந்த வாதத்துக்குக் காரணம்.
ஓதிப்பார்க்கலாம்.
நோய்க்காக ஓதிப்பார்க்கலாம்
நோயிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒதிப்பார்ப்பதற்கு அனுமதியுள்ளது.
ஆயிஷா (ரலி) அவர்களிடம், விஷக்கடிக்கு ஓதிப்பார்ப்பது குறித்துக் கேட்டேன். அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ஓவ்வொரு விஷ உயிரினத்தின் கடியிலிருந்தும் (நிவாரணம் பெற்றிட) ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்” என்று சொன்னார்கள்.
அறி : அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்),
நூல் : புகாரி 5741
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுவிட்டால் பாதுகாப்புக் கோரும் வசனங்களை(க் கொண்ட குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம் மீது ஊதி, தமது கையை (தம் உடல் மீது) தடவிக்கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது, அவர்கள் (ஓதி) ஊதிக் கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்கள் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி (ஸல்) அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்களின் (உடல்) மீது தடவலானேன்.
அறி : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 4439
உலக நபி ஒளியால் உருவானவர்களா?
உலக நபி ஒளியால் உருவானவர்களா?
கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறி புகழ்ந்ததைப் போன்று என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழ்ந்து விடாதீர்கள். நான் அல்லாஹ்வுடைய அடியான் தான். என்னை அல்லாஹ்வுடைய அடியான் என்றும் அவனுடைய தூதர் என்றும் கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் முன்கூட்டியே எச்சரிக்கை செய்துவிட்டார்கள்.
மேலும், என் மீது யார் வேண்டுமென்றே பொய்யை இட்டுக் கட்டுகிறார்களோ அவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் எதனை எச்சரிக்கை செய்தார்களோ அத்தகைய வழிகேட்டில் சமுதாயம் வீழ்ந்து விட்டது.
பூஜிக்கப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதை உண்ணலாமா?
பூஜிக்கப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதை உண்ணலாமா?
பூஜிக்கப்பட்ட பொருள் நமக்கு ஹராம், நாம் வாழும் நாட்டில் விதை விதைக்கும் போதும், அறுக்கும் போதும் பூஜை செய்கிறார்கள். பூஜை செய்த விவசாயத்தின் மூலம் தான் நமக்கு அரிசி கிடைக்கிறது. இதைத் தான் நாம் உண்கிறோம், இது சரியா? இதற்கு வேறு வழி இருக்கிறதா?
தாவூத்
பதில்
முஸ்லிமல்லாதவர்கள் குறிப்பாக இந்து மதத்தவர்கள் விவசாயம் செய்தாலும், கட்டடம் கட்டினாலும், கடை திறந்தாலும் பூஜை செய்யாமல் துவக்க மாட்டார்கள்.
அல்லாஹ் அல்லாதவர்களுக்கு படையல் செய்யப்பட்டதை நாம் சாப்பிடக் கூடாது என்பதால் உங்களுக்கு இந்தச் சந்தேகம் எழுந்துள்ளது.
பூஜை செய்து விட்டு அவர்கள் விவசாயம் செய்வதால் அவர்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் அரிசி, கோதுமை, இன்னபிற விளை பொருட்களை நாம் உண்ணலாமா?
அவர்கள் பூஜை செய்துவிட்டு கட்டிய கட்டடங்களை விலைக்கு வாங்கலாமா?
அல்லது வாடகை கொடுத்து அதில் குடியிருக்கலாமா?
கடையைத் துவக்கும் நாளிலும், அன்றாடம் கடைகளைத் திறக்கும் போதும் பூஜை செய்துவிட்டுத் தான் ஆரம்பிப்பார்கள். எனவே அவர்களின் கடைகளில் பொருட்களை வாங்கலாமா?
என்றெல்லாம் கூட சந்தேகம் வரும்.
கந்தூரி உணவு ஹராமானதா?
கந்தூரி உணவு ஹராமானதா?
உமது இறைவனுக்காக தொழுவீராக! (அவனுக்காகவே) அறுப்பீராக (108:02)-முன்திர்
மரணித்துப்போன மகான்களின் பெயரால் கால்நடைகளை அறுத்து உணவு சமைத்து அதை ஏழைகளுக்கு வழங்கும் நிகழ்வை கந்தூரி என மக்கள் அழைக்கின்றனர்.
முதலில் கந்தூரி என்ற வார்த்தை அறபு மொழி வார்த்தை அல்ல.
இஸ்லாத்தின் பரம விரோதியாக வாழ்ந்து மடிந்த அபூஜஹ்ரலுக்குக் கூட 'கந்தூரி' என்ற வார்த்தை தெரியாது.
அறியாமைக் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கும் இந்தக் கந்தூரியைத் தெரியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கந்தூரி கொடுத்ததாகவோ அருமைத் தோழர்கள் 'நார்ஸா' வினியோகம் செய்ததாகவோ 'இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்' கூட இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிர்வாழ்ந்த காலத்தில், தனக்கு முன் வாழ்ந்து மறைந்த போன இறைத்தூதர்களை நினைவு கூர்ந்து எந்த விருந்தும் படைக்கவில்லை.
அழிந்து போயுள்ள பித்ஆக்களை உயிர்ப்பிக்க துணைபோகாதீர்கள்
மௌலவி மார்களே..!
அழிந்து போயுள்ள பித்ஆக்களை உயிர்ப்பிக்க துணைபோகாதீர்கள்
ஷஃபான் பிறை பதினைந்தை பறாஅத் இரவு என்று சமூகம் வெகு
விமர்சையாக கொண்டாடி வருவதை நாம் பார்கலாம் இது பற்றி தலைப்புக்குள் நேரடியாக போகமுன் நாம் உடன்பட்ட அடிப்படையை ஞாபகப்படுத்துவது பொருத்தம் என நினைக்கிறேன்.
தஃவதுத் தப்லீகில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தை
*"தீன் என்பது அல்லாஹ்வின் கட்டளை நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வாழ்கை வழிமுறை இதை ஏற்று நடப்பதில் தான் ஈருலக வெற்றி இருக்கின்றது"
இதன் விளக்கத்தை சுறுக்கமாக சொல்வதாக இருந்தால் மார்கம் என்பது அல் குர்ஆன் அல் ஹதீஸ் இவை இரண்டிலும் இல்லாதவை மார்கமில்லை என்பதுவே மேலே நான் சுற்றிக்காண்பித்த வார்தையின் பொருள். இந்த அடிப்படையில் இருந்து பராஅத் இரவு பற்றி நாம் பார்போம்.
பராஅத்தும் மதுஹபுகளும்
🍔 பராஅத்தும் மதுஹபுகளும் 📚
🔴 நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.
🍔 இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.
நல்ல பித்அத்தும் இருக்கிறதா
நல்ல பித்அத்தும் இருக்கிறதுதா” என்ற ஒரு வசனத்தில் அவ்வளவு ஆதாரங்களையும் சில உலமாக்கள் மழுங்கடித்துவிட முயல்கின்றனர்.
பித்அத் கூடாது என்று எவ்வளவுதான் கூறினாலும் “
பொதுமக்களும் பித்அதுல் ஹஸனா பற்றி அறியாமல் இவர்கள் உளறுகின்றனர் என எண்ணிவிடுகின்றனர். எனவே பித்அதுல் ஹஸனா (நல்ல பித்அத்) குறித்து விரிவாக விளக்குவது அவசியமாகின்றது.
“எல்லா பித்அத்துக்களும் வழிகேடுகளே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது நல்ல பித்அத்துக்கள் எனப் பேச முற்படுவது ஆச்சரியமாக உள்ளது. எல்லா பித்அத்துக்களும் வழிகேடு என நபி (ஸல்) அவர்கள் கூறும் போது இல்லை இல்லை நல்ல பித்அத்துக்களும் இருக்கின்றன என நபி (ஸல்) அவர்களுக்கே இவர்கள் பாடம் நடத்த முற்படுகின்றனரா?
கார், விமானம், Facebook . வாட்ஸ்அப் .போன்றவற்றைப் பயன்படுத்துகிறீர்களே! பித்அத் இல்லையா?
// பித்அத்தே கூடாது என்னும் நீங்கள் நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தாத கார், விமானம், பேண்ட் சர்ட் Facebook . வாட்ஸ்அப் .போன்றவற்றைப் பயன்படுத்துகிறீர்களே! அவைகள் பித்அத் இல்லையா? ///
என்று கேட்கும் சகோதர சகோதரிகள் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில்
புதிதாக ஒரு அமலைச் சேர்ப்பது என்பது, அல்லாஹ்வுக்கோ, நபி (ஸல்) அவர்களுக்கோ தெரியாத ஒன்றை நாம் கற்றுத்தருவது போன்றதாகும்.
ஏனென்றால் அதிக நன்மையை பெற்றுத்தரும் இத்தகைய நல்ல அமல்களை அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ கூற மறந்து விட்டனர் அல்லது கூறாமல் விட்டுச் சென்று விட்டார்கள். அதை நான் செய்து முழுமைப் படுத்துகிறேன் என்று கருதுவது போலதாகும். (நவூது பில்லாஹ் மின்ஹா) அல்லாஹ் நம்மை அத்தகைய தீய எண்ணங்களிலிருந்து காப்பாற்றுவானாகவும்.
அத்வைத மதம் சூபித்துவ தரீக்கத்து ஷீயாயிசம் !
அத்வைத மதம் சூபித்துவ தரீக்கத்து ஷீயாயிசம் !
👉“மக்களை ஆத்மீகப் பாதையில் பயிற்றுவிக்கும் பள்ளி” எனும் போலி பெயரில் மக்களிடையே அறிமுகமாகியிருக்கும்👉 சூபித்துவ அத்வைத தத்துவம் எந்தளவுக்கு இஸ்லாத்தைத் தகர்க்கும் விஷமத்தனமான, நச்சுக் கருத்துக்களைக் கொண்டிருக்கின்றது என்பதை அறிந்துக்கொள்வது அல்லாஹ்வையும் அவனது தூதர் (ஸல்) அவர்களையும் ஈமான் கொண்டிருக்கும் உண்மை முஃமின்களுக்கு அவசியமாகும்!
👉“முன்னோர்களின் வழிமுறையைப் பின்பற்றுகின்றோம்” என்ற பெயரிலே குருட்டுத் தனமாக ‘அவர்கள் அறியாமையில் உழன்ற அந்த வழிகேடுகளிலே நானும் உழல்வேன்‘ என்று அடிம்பிடிக்காமல் இந்த தரீக்காக்கள் ஒருவனை எப்படியெல்லாம் வழிகெடுத்து நிரந்தர நரகத்தின் கொள்ளிக்கட்டைகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றது என்பதை கொஞ்சம் பொறுமையுடனும் நிதானத்துடனும் படித்துப்பாருங்கள்!
சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது கூடுமா?
இதை'ஷாஃபி மத்ஹபினர் சுன்னத்தாகக் கருதி செய்து வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக வரக்கூடிய செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகும். மேலும் சில ஸஹீஹான ஹதீஸ்களை முழுமையாக ஆராயாமல் அவற்றிலிருந்து தவறான முறையில் சட்டம் எடுத்துள்ளனர். இதற்கு அவர்கள் எடுத்துக் வைக்கக் கூடிய ஆதாரங்களையும் அதன் நிலைகளையும் காண்போம்.
மூமின்களின் வழியைப் பின்பற்றலாமா
515. மூமின்களின் வழியைப் பின்பற்றலாமா?
இவ்வசனத்தில் (4:115) மூமின்களின் (நம்பிக்கை கொண்டோரின்) வழியைப் பின்பற்றுமாறு அல்லாஹ் கூறுகிறான்.
குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவது போல் மூமின்களின் வழியையும்
பின்பற்ற வேண்டும் எனக் கூறி இஸ்லாத்தில் மூன்றாவது ஆதாரத்தை சிலர் உருவாக்கப் பார்க்கின்றனர்.
ஆனால் இந்த வாதத்துக்கு இவ்வசனத்தில் அறவே இடமில்லை.
திக்ர் செய்யும்போது நடனம் ஆடலாமா ?
திக்ர் செய்யும்போது நடனம் ஆடலாமா ?
ஷாதுலிய்யா தரீக்காவைச் சேர்ந்தவர்கள் , திக்ர் செய்யும்போது , நடனம் ஆடுகின்றனர் . அதை நடாத்துபவர் கை தட்டுகின்றார் . இது இஸ்லாம் கற்றுத்தந்த வணக்க வழிபாடுகளில் ஒன்றல்ல . இது ஈராக்கில் தோன்றிய பித்அத் ஆகும் . இதை இமாம் ஷாபிஈ ரஹ் அவர்கள் கடுமையாகக் கண்டித்து, " இதை முனாபிக்கள் உருவாக்கினார்கள் , குர்ஆனை விட்டுவிட்டு , இதில் ஈடுபட்டுள்ளனர் " எனக் கூறினார்கள் . ( மனாகிபுஷ் ஷாபிஈ - லில் பைஹகி 1/283)
வலீமார்களிடம் உதவி தேடலாமா? கப்ரு வணங்கிகளின் முக நூல் ஹதீஸ்கள்?
வலீமார்களிடம் உதவி தேடலாமா?
அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து அவர்களிடம் பிரார்த்தனை புரிவோருக்கு எந்த ஆதாரமும் கிடையாது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.
அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது இறைவனிடமே உள்ளது. (ஏகஇறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள். திருக்குர்ஆன் 23:117
நபியை படைக்காவிட்டால் உலகமே இல்லையா ?
நபியை படைக்காவிட்டால் 🌍 உலகமே இல்லையா ❓
📌முஹம்மதே நீ மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகத்தை நான்
படைத்திருக்கமாட்டேன் என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு செய்தி இப்னு அசாகீர் என்ற நூலில் இடம்பெற்றிருக்கின்றது.
இறந்தவர்கள் செவியேற்பார்களா?
இறந்தவர்கள் செவியேற்பார்களா?
🔹 ஒரு மனிதர் உயிரோடு வாழ்கின்ற நேரத்தில் கூட அவருடைய
விருப்பத்தின் படி அவரால் எந்த ஒரு அற்புதத்தையும் செய்ய முடியாது என்பதையும், நபிமார்கள் உட்பட யாராக இருந்தாலும் மரணத்திற்குப் பிறகு இந்த உலகத்தில் எந்தவிதமான செயல்பாடும் அவர்களுக்கு கிடையாது என்பதையும் நாம் இதுவரை பார்த்து வந்தோம்.
🔹 ஒருவர் மரணித்து விட்டார் என்று சொன்னால் அவருக்கும் இந்த உலகத்திற்கும் மத்தியில் அல்லாஹ் கண்ணுக்குத் தெரியாத பர்ஸக் எனும் ஒரு திரையைப் போட்டு விடுகிறான். அவர்களால் இந்தப் பூமிக்கு வர முடியாது. இங்குள்ள விஷயங்கள் அங்கு செல்லாது என்பதையும் நாம் பார்த்தோம்.
அதற்குச் சான்றாக நபிகளாரின் செய்தி ஆதாரமாக இருப்பதை நாம் காணலாம்.
-
நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் சொல்வது என்ன? . நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும...
-
1951 இலக்கம் 13 முஸ்லிம் திருமன மற்றும் விவாகரத்து சட்டத்தின் திருத்தங்களுக்காக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் 19...
-
பெண்கள் சிறுவயதில் ஓடிப்போக காரணம் என்ன? உண்மையச் சொன்ன உயர்நீதிமன்றம்! நாட்டில் நடக்கக்கூடிய கற்பழிப்புகள், பாலியல் சில்மிஷங்கள், ஆபாசச் ...









