தவ்ஹீத் ஜமாஅத் video's: நல்லடியார்கள் அடக்கத்தலங்கள் இஸ்லாமிய அடையாள சின்னங்களா

நல்லடியார்கள் அடக்கத்தலங்கள் இஸ்லாமிய அடையாள சின்னங்களா


 நல்லடியார்கள் அடக்கத்தலங்கள் இஸ்லாமிய அடையாள சின்னங்கள் என்றும் அவைகள் தான் இஸ்லாமிய வரலாற்றை மக்களுக்கு சொல்கிறது என்றும் தவறான கருத்தை மக்களிடம் விதைத்து மக்களை வழி கெடுத்துக் கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம்...

இறந்து புதைக்கப்பட்ட மனிதரின் சமாதியை இஸ்லாமிய அடையாளச் சின்னமென்று அல்லாஹ்வும் சொல்லவில்லை..
அல்லாஹ்வின் தூதரும் சொல்லவில்லை!
முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வருகைக்கு முன்னர் லட்சத்துக்கும் மேற்பட்ட நபிமார்களும் நல்லடியார்களும் வாழ்ந்து மறைந்துள்ளனர்...


இவர்கள் அனைவரும் பூமியில் எங்காவது ஒரு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு இருப்பார்கள்...
இவர்களின் வரலாற்றை நபியவர்களுக்கு  குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் சொல்லிக் காட்டுகிறான்.!
அப்படி சொல்லிக் காட்டும் போது  எந்தவொரு இடத்திலும் இந்த அடியாரின் சமாதி இந்த இடத்தில் இருக்கிறது அந்த சாமாதிகள் இஸ்லாமிய சின்னம் என்று நபியவர்களைப் பார்த்து அல்லாஹ் சொல்லவில்லை!
இஸ்லாமிய சின்னங்கள் எதுவென்று அல்லாஹ் கூறுகின்றான்..
👇🏻👇🏻
158. ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்.  
திருக்குர்ஆன்  2:158
மேலும்...
அல்லாஹ் கூறுகின்றான்...
123. "(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!'' என்று உமக்கு தூதுச்செய்தி அறிவித்தோம். அவர் இணைகற்பிப்பவராக இருந்ததில்லை.
திருக்குர்ஆன்  16:123
இப்ராஹீம் நபியை பின்பற்ற சொன்ன அல்லாஹ்...
அவரது அடக்கஸ்தலத்தில் சென்று அங்கே இருக்கும் சமாதியில் போர்வை போர்த்தவோ பூ போடவோ விளக்கு ஏற்றவோ பாத்திஹா ஓதி அவருக்கு நன்மையை சேர்க்கவோ சொல்லவில்லை!!
இப்படியிருக்க...
நல்லடியார்கள் சமாதியில் உரூஸ் எடுப்பதும்.. சந்தனம் பூசுவதும்...
அந்த சந்தனத்தை பயபக்தியோடு தலையில் சுமந்து செல்வதும்
இஸ்லாம் என்றே முடிவு செய்து விட்டனர்?
எந்த அடிப்படையில் முடிவு செய்தனர் என்று தெரியவில்லை..
எப்படி தொழவேண்டும் எப்படி நோன்பு வைக்க வேண்டும் எப்படி உண்ண வேண்டும் எப்படி பருக வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த நபியவர்கள்....
நல்லடியார்கள் சமாதியில் உரூஸ் எடுப்பதையும் சந்தனம் பூசுவதையும் சொல்லித் தராமல் போய் விட்டனர் என்று சொல்வார்கள் போல இந்த கூறுகெட்ட கூமுட்டைகள்!
இதில் நல்லடியார்கள் சமாதியில் சந்தனம் பூசுவது பாவமா என்ற கேள்வி வேறு???
இன்னும்....
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை  வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூதர்களை அல்லாஹ் நாசமாக்குவானாக!'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 437.
அல்லாஹ்வும் ரசூலும் சொல்லித் தராத ஒரு செயலை..
யூதர்கள் செய்த ஒரு செயலுக்கு இஸ்லாமிய சாயம் பூசி இதுதான் இஸ்லாம் என்று அப்பாவி மக்களை நம்பவைக்கின்றனர்?  
அவர்களும் முன்னோர்களின் சமாதிகள் இஸ்லாமிய அடையாள சின்னங்கள் என்று நம்புகின்றனர்?
எங்கள் முன்னோர்கள் இவ்வாறு நம்பினார்கள் என்று சொல்லி தங்கள் செயலை நியாயப்படுத்துகின்றனர்??
104. "அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் வாருங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?
திருக்குர்ஆன்  5:104
66. அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் "நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுவார்கள்.
67. "எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்'' எனவும் கூறுவார்கள்.
திருக்குர்ஆன்  33:66_67

share this.. https://shorturl.at/xS766

Search This Blog