தவ்ஹீத் ஜமாஅத் video's: விளக்கங்கள்
Showing posts with label விளக்கங்கள். Show all posts
Showing posts with label விளக்கங்கள். Show all posts

நபிகள் நாயகத்தின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?

கேள்வி: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெற்றோர் எந்த நபியின் உம்மத்தாகவும் இருக்கவில்லை. எனவே அவர்கள் தமது முன்னோர்களைப் பின்பற்றி நடந்து கொண்டது குற்றமாகுமா? அவர்கள் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?

பதில்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெற்றோருக்கும், அவர்களின் பாட்டனாருக்கும் எந்த நபியும் அனுப்பப்படவில்லை. எந்த நபியின் போதனையும் அவர்களைச் சென்றடையவில்லை என்பது உண்மை தான்..

இதை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது

    ஞானமிக்க குர்ஆன் மீது ஆணையாக! . முஹம்மதே!) நீர் தூதர்களில் ஒருவர். (நீர்) நேரான பாதையில் இருக்கிறீர். கவனமற்றும், முன்னோர் எச்சரிக்கப்படாமலும் இருக்கின்ற சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்வதற்காக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது.
    திருக்குர்ஆன் 36:2-6


நபிகள் நாயகத்தின் பெற்றோருக்கு எந்த நபியும் அனுப்பப்படவில்லை என்று இவ்வசனம் கூறுகிறது.

நபி அனுப்பப்படாத சமுதாயத்தினர் அல்லாஹ்வுக்கு இணைவைக்காமல் ஸாபியீன்களாக இருந்திருக்க வேண்டும். நபி அனுப்பப்படாத சமுதாயமாக இருந்தாலும் அவர்கள் இணைகற்பிக்க அனுமதி இல்லை. இது தான் அவர்கள் மீதுள்ள கடமையாகும். ஆனால் நபியின் பெற்றோர் ஸாபியீன்களாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் கொள்கையில் இருந்தனர்.

இதுபற்றி விபரமாகப் பார்ப்போம்.

நபியின் பெற்றோர் குறித்த அறியாமை வாதத்திற்கு பதில்!

 நபியின் பெற்றோர் குறித்த அறியாமை வாதத்திற்கு பதில்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெற்றோர் சொர்க்கம் செல்வார்கள் என்ற கருத்தில் ஒருவர் வாதிடும் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

இதில் பேசுபவர் என்ன வாதிடுகிறார் என்றால் திருக்குர்ஆனின் 17:24 வசனத்தில், கீழ்க்கண்டவாறு அல்லாஹ் நபிக்குக் கூறுகிறான் :

    சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!  என்று கேட்பீராக.

    நபியவர்கள் தமது பெற்றோருக்காக துஆ செய்யுமாறு அல்லாஹ் கூறுவதால் அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்று தெரிகிறது.

    இவ்வசனத்தின் அடிப்படையில் நபியின் பெற்றோர் சொர்க்கம் செல்வார்கள் என்பது தெரிகிறது.

நபியின் பெற்றோருக்கு நரகம் என்று வரும் ஹதீஸ்கள் இவ்வசனத்துக்கு முரணாக உள்ளது. குர்ஆனின் கருத்துப்படி நபியின் பெற்றோர் சொர்க்கவாசிகளே என்பது இவரது வாதம்.

உள்ளங்களிலும் ஏடுகளிலும் பாதுகாக்கப்பட்ட குர்ஆன்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் அருளப்பட்டவுடன் அதை அவர்கள் தமது உள்ளத்தில் பதிவு செய்து கொள்வார்கள்.

இவ்வாறு பதிவு செய்து கொள்வதற்கு அவர்கள் ஆரம்பத்தில் மிகுந்த சிரத்தை எடுக்கலானார்கள். அது தேவையில்லை என்று திருக்குர்ஆன் மூலமாகவே அவர்களுக்குச் சொல்லப்பட்டது.

"திரும்பத் திரும்ப ஓதி மனனம் செய்வதற்காக நீர் முயற்சிக்காதீர். அதை உமது உள்ளத்திலே ஒன்று சேர்ப்பது நமது பொறுப்பு'' என்று திருக்குர்ஆன் கூறியது.

பார்க்க: திருக்குர்ஆன் 75:16-19, 20:114
இன்னொரு வசனத்தில் (87:6) "உமக்கு நாம் ஓதிக் காட்டுவோம்; நீர் மறக்க மாட்டீர்'' எனவும் அல்லாஹ் உத்தரவாதம் அளித்தான்.

எனவே ஜிப்ரீல் என்ற வானவர் அதிகமான வசனங்களைக் கூறினாலும் ஒலிநாடாவில் பதிவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் அப்படியே அவை பதிவாகி விடும்.

பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா?

 363. பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா?

இவ்வசனத்தில் (5:6) "பெண்களைத் தீண்டி, தண்ணீர் கிடைக்காவிட்டால்
தயம்மும் செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

பெண்களைத் தீண்டுதல் என்ற சொல் தொடுதல் எனவும், தாம்பத்தியம் எனவும் இரு பொருள் தரும் சொல்லாகும். எனவே இந்த இடத்தில் எவ்வாறு பொருள் கொள்வது என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

தொடுதல் என்று பொருள் கொள்ளும் அறிஞர்கள் "பெண்களை ஆண்கள் தொட்டாலும், ஆண்களைப் பெண்கள் தொட்டாலும் உளூ நீங்கி விடும். மீண்டும் உளூச் செய்ய வேண்டும்'' என்று சட்டம் வகுத்து ள்ளனர். இது தவறாகும்.

இவ்வசனத்தில் தீண்டுதல் என்பது தாம்பத்தியம் என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்த நிலையில் தம் மனைவியைத் தொட்டுள்ளனர். அதற்காக மீண்டும் உளூச் செய்யவில்லை.

அரபு இலக்கணத்துக்கு மாற்றமாக 2:102 வசனத்துக்கு பீஜே மொழி பெயர்த்துள்ளாரா?

 அரபு இலக்கணத்துக்கு மாற்றமாக 2:102 வசனத்துக்கு பீஜே மொழி பெயர்த்துள்ளாரா?


    2:102 வசனத்தின் தமிழாக்கத்தில்

 "நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவனை) மறுத்து விடாதே!'' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. எனவே எதன் மூலம் கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவார்களோ அதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர்.

 என்று நாம் மொழிபெயர்த்துள்ளோம்.

இது அரபு இலக்கண விதிக்கு எதிரானது என்று சிலர் விமர்சனம் செய்து பதிவுகளைப் போட்டு வருகின்றனர்.
அவர்களது பதிவின் சாராம்சம் என்னவென்றால் சூனியம் கற்றால் காஃபிராகி விடுவீர்கள் என்று எச்சரிக்கப்பட்டனர். இந்த எச்சரிக்கையின் காரணமாக அவர்கள் கணவன் மனைவிக்கு இடையில் பிரிவினை ஏற்படுத்துவதைக் கற்றுக் கொண்டனர்.

337. தாவூத் நபி செய்த தவறு

  337. தாவூத் நபி செய்த தவறு

இவ்வசனங்களுக்கு (38:21-25) திருக்குர்ஆன் விரிவுரை என்ற பெயரில் ஏராளமான கட்டுக்கதைகளை பல அறிஞர்கள் எழுதி வைத்துள்ளனர். இவற்றில் எதுவும் ஏற்கத்தக்கதாக இல்லை.

தாவூது நபிக்கு ஏற்கனவே 99 மனைவிகள் இருந்ததாகவும், பின்னர் இன்னொருவரின் மனைவியை அபகரித்துக் கொண்டதாகவும் அந்தப் பெண்ணின் கணவரைச் சதி செய்து தாவூத் நபி கொலை செய்ததாகவும் புளுகி வைத்துள்ளனர். இதற்கு ஏற்கத்தக்க எந்தச் சான்றும் இல்லை. யூத, கிறித்தவ வேதங்களில் கூறப்பட்டுள்ள கட்டுக்கதை தான் இதற்குச் சான்று.


இறைத்தூதர்கள் இது போன்ற ஈனச் செயலில் ஈடுபட மாட்டார்கள் என்ற சாதாரண அறிவு கூட இவர்களுக்கு இருக்கவில்லை.

தாவூத் நபியவர்கள் செய்த ஒரு தவறை இறைவன் சுட்டிக்காட்டிய போது அவர் திருந்திக் கொண்டார் என்ற செய்தியை மட்டும் தான் இறைவன் இங்கே குறிப்பிடுகிறான். படிப்பினை பெறுவதற்கு இதுவே போதுமானதாகும்.

யாசிக்கக் கூடாது

 யாசிக்கக் கூடாது

1472 – وحَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، وَسَعِيدِ بْنِ المُسَيِّبِ، أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ، فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ، فَأَعْطَانِي ثُمَّ قَالَ: يَا حَكِيمُ، إِنَّ هَذَا المَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ، كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، اليَدُ العُلْيَا خَيْرٌ مِنَ اليَدِ السُّفْلَى قَالَ حَكِيمٌ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ لاَ أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شَيْئًا حَتَّى أُفَارِقَ الدُّنْيَا، فَكَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَدْعُو حَكِيمًا إِلَى العَطَاءِ، فَيَأْبَى أَنْ يَقْبَلَهُ مِنْهُ، ثُمَّ إِنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ دَعَاهُ لِيُعْطِيَهُ فَأَبَى أَنْ يَقْبَلَ مِنْهُ شَيْئًا، فَقَالَ عُمَرُ: إِنِّي أُشْهِدُكُمْ يَا مَعْشَرَ المُسْلِمِينَ عَلَى حَكِيمٍ، أَنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ مِنْ هَذَا الفَيْءِ فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ، فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَدًا مِنَ النَّاسِ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تُوُفِّيَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் கேட்டேன்; வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும், இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் பரகத் எனும் அருள் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கின்றாரோ அவருக்கு அதில் பரகத் ஏற்படுத்தப்படாது. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவர் போலாவார். உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்தது என்று கூறினார்கள். அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன் எனக் கூறினேன்.

492. திருக்குர்ஆன் ஜிப்ரீலின் கூற்றா? அல்லாஹ்வின் கூற்றா

  492. திருக்குர்ஆன் ஜிப்ரீலின் கூற்றா? அல்லாஹ்வின் கூற்றா

திருக்குர்ஆன் ஜிப்ரீலின் சொல் என்ற கருத்து வரும் வகையில் இவ்வசனம் (81:19) அமைந்துள்ளது.

இது போன்ற கருத்தில் 2:97, 16:102, 19:64,26:193, 53:5 ஆகிய வசனங்களும் அமைந்துள்ளன.

இதுபோன்ற வசனங்களை எடுத்துக் காட்டி திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை அல்ல. ஜிப்ரீலின் வார்த்தையே என்று சிலர் எதிர்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

152. திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை.

  152. திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை.

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்பட்டதாக முஸ்லிம்களில் சிலர் கூறுகின்றனர்.

இவ்வசனங்கள் (2:97, 4:153,. 6:7, 7:157, 7:158, 20:114, 25:5, 26:194, 29:48, 75:16, 75:18, 87:6) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுத்து வடிவில் திருக்குர்ஆன் அருளப்பட்டது என்று கூறுவோருக்கு மறுப்பாக அமைந் துள்ளன.

"எழுத்து வடிவில் தந்திருந்தாலும் இவர்கள் ஏற்க மாட்டார்கள்" என்று 6:7 வசனத்தில் கூறப்படுவதில் எழுத்து வடிவில் அருளப்படவில்லை என்ற கருத்து அடங்கியுள்ளதை அறியலாம்.

வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும் என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர் என்று 4:153 வசனம் கூறுகிறது. எழுத்து வடிவமாக ஒரு நூல் வானிலிருந்து இறங்க வேண்டும் என அன்றைய மக்கள் கேட்டதிலிருந்து எழுத்து வடிவில் அருளப்படவில்லை என்பதை ஐயத்திற்கிடமின்றி அறியலாம்.

312. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி

 312. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், படிக்கவும் தெரியாது என்று இவ்வசனங்கள் (6:112, 7:157, 7:158, 25:5, 29:48) கூறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப்படிக்க அறிந்திருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர்.

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியும்'' என்று படித்தவர்கள் சிலர் இட்டுக்கட்டிக் கூறி வருகின்றனர்.

157. பாதுகாக்கப்பட்ட ஏடு என்றால் என்ன?

157. பாதுகாக்கப்பட்ட ஏடு என்றால் என்ன?

உலகைப் படைப்பதற்கு முன் அல்லாஹ் ஒரு ஏட்டைத் தயாரித்து அதில் உலகம் அழியும் காலம் வரை நடக்க இருக்கும் அனைத்தையும் தனது கட்டளையால் பதிவு செய்தான். உலகில் எது நடந்தாலும் அந்தப் பதிவேட்டில் எழுதப்பட்டு இருக்கும். ஒரு இலை உதிர்ந்தாலும் அது எந்த நேரத்தில் விழும் என்ற விபரம் அந்தப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். இந்த ஏடு லவ்ஹூல் மஹ்ஃபூல் என்று சொல்லப்படுகிறது.

மூமின்களின் வழியைப் பின்பற்றலாமா

515. மூமின்களின் வழியைப் பின்பற்றலாமா?

இவ்வசனத்தில் (4:115) மூமின்களின் (நம்பிக்கை கொண்டோரின்) வழியைப் பின்பற்றுமாறு அல்லாஹ் கூறுகிறான்.

குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவது போல் மூமின்களின் வழியையும்


பின்பற்ற வேண்டும் எனக் கூறி இஸ்லாத்தில் மூன்றாவது ஆதாரத்தை சிலர் உருவாக்கப் பார்க்கின்றனர்.

ஆனால் இந்த வாதத்துக்கு இவ்வசனத்தில் அறவே இடமில்லை.

445.வேதத்தை வியாபாரமாக்குதல்

445.வேதத்தை வியாபாரமாக்குதல்

இவ்வசனங்களில் (2:41, 2:174, 2:187, 3:199, 5:44, 9:9) அல்லாஹ்வின் வசனங்களை அற்பவிலைக்கு விற்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனை அல்லது அதன் தமிழாக்கத்தை அச்சிட்டு விற்பனை செய்வதை இது குறிக்காது.
அல்லாஹ்வின் வசனங்களை யூதர்கள் வியாபாரமாக ஆக்கியதைக் கண்டித்துத் தான் மேற்கண்ட வசனங்கள் அருளப்பட்டன. யூதர்கள் தங்களின் வேதப்புத்தகத்தை அச்சிட்டு விற்பனை செய்து கொண்டிருந்ததைக் கண்டித்து இவ்வசனம் பேசவில்லை என்பது எளிதில் விளங்கும் உண்மையாகும்.

அல்ஹம்து ஸூறாவில் ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்லட்பட்டிருக்கிறதா?

 520 அருள் பெற்றவர்களைப் பின்பற்றலாமா?

இவ்வசனத்தில் (1:7) நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழியைக்
காட்டுவாயாக! என்று பிரார்த்தனை செய்யுமாறு அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருகிறான். எனவே அல்லாஹ்வின் அருள் பெற்ற நபித்தோழர்களையும், இமாம்களையும் பின்பற்றலாம் என்று சிலர் வாதிடுகின்றனர்.

இதற்கு துணையாக 4:69 வசனத்தையும் ஆக்கிக் கொள்கின்றனர். அல்லாஹ்வின் அருள் பெற்றவர்கள் நபிமார்கள், சித்தீகீன்கள், ஷுஹதாக்கள் என்று இவ்வசனம் விளக்கிவிட்டதால் இமாம்கள் பெரியார்களைப் பின்பற்றுவதற்கு இது ஆதாரம் என்றும் வாதிடுகின்றனர்.

இவ்வாறு வாதிட இவ்வசனங்கள் இடம் தரவில்லை.

460. ஹிஜ்ரி ஆண்டு உண்டா? ஹிஜ்ரி ஆண்டு கொண்டாட்டம் உண்டா?

  ஹிஜ்ரி ஆண்டு உண்டா?

இவ்வசனங்களில் (2:218, 3:195, 4:89, 4:97, 4:100, 8:72, 8:74, 9:20, 9:100, 9:117, 16:41, 16:110, 22:58, 24:22, 29:26, 33:7, 33:50, 59:8, 59:9, 60:10) ஹிஜ்ரத் செய்தல் பற்றி கூறப்படுகின்றது.

ஹிஜ்ரத் என்ற சொல்லுக்கு வெறுத்தல், ஒதுக்குதல், விலகிக் கொள்ளுதல்


எனப் பொருள் உண்டு. இஸ்லாமிய வழக்கில் ஹிஜ்ரத் என்பது குறிப்பிட்ட தியாகத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

இஸ்லாம் மார்க்கத்தின்படி வாழமுடியாத நிலை ஏற்பட்டால், கொண்ட கொள்கையைக் காத்துக் கொள்வதற்காக பிறந்த மண், சொத்து சுகம், சுற்றம், நட்பு அனைத்தையும் துறந்து இஸ்லாத்தைக் கடைப்பிடித்து ஒழுகுவதற்கு ஏற்ற இடத்துக்குச் செல்வதுதான் ஹிஜ்ரத் எனப்படும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்றதில் இருந்து ஹிஜ்ரி ஆண்டு ஆரம்பமாகிறது.

ஹிஜ்ரி ஆண்டு என்பது இஸ்லாமிய ஆண்டு என்று கூறப்பட்டாலும் திருக்குர்ஆனிலோ, ஹதீஸிலோ இதற்குச் சான்று இல்லை.

நான் ஹிஜ்ரத் செய்ததில் இருந்து ஆண்டுகளை எண்ணிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் நபித்தோழர்கள் யானை ஆண்டு என்பதைத் தான் பயன்படுத்தி வந்தனர்.

ஆப்ரஹா என்ற மன்னன் கஅபாவை அழிக்க யானைப் படையுடன் வந்தபோது அவனும், அவனது யானைப்படையும் அழித்து ஒழிக்கப்பட்ட ஆண்டைத் தான் யானை ஆண்டு என்று அரபுகள் பயன்படுத்தி வந்தனர். யானை ஆண்டுக்கு முன் - யானை ஆண்டுக்குப் பின் - என்று தான் நிகழ்ச்சிகளை அரபுகள் குறிப்பிட்டு வந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யானை ஆண்டில் பிறந்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள். (ஹாகிம், பஸ்ஸார்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்த இந்த ஆண்டையே பின்னரும் தொடர்ந்திருந்தால் அது தான் சரியானதாக இருந்திருக்கும்.

அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாகி வஹீ வர ஆரம்பித்த நாள் ஆயிரம் மாதத்தை விட சிறந்தது என்று திருக்குர்ஆன் கூறுவதால் – அன்று தான் இஸ்லாம் உலகுக்கு கிடைத்த நாள் என்பதால் - அதையே இஸ்லாமிய ஆண்டின் துவக்கமாகக் கொண்டிருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும்.

இஸ்லாமிய ஆண்டாக எதை வைத்துக் கொள்ளலாம் என்று உமர் (ரலி) காலத்தில் ஆய்வு செய்து, ஆலோசித்து ஹிஜ்ரத்தை முதல் ஆண்டாக வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.

நிர்வாக வசதிக்காகச் செய்த ஏற்பாடு என்ற அடிப்படையில் ஒருவர் இதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இஸ்லாம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் செய்யப்பட்ட எந்த ஏற்பாட்டையும் மார்க்கச் சடங்கு போல் ஆக்குவது முற்றிலும் தவறாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் வஹீ கிடையாது. வஹீயின் அடிப்படையில் இல்லாத எந்த ஒன்றும் மார்க்கமாக ஆகாது. எனவே ஹிஜ்ரி ஆண்டு என்பதைத் தான் முஸ்லிம்கள் பயன்படுத்த வேண்டும் என வாதிடுவது அறியாமையாகும்.

ஹிஜ்ரி ஆண்டு கொண்டாட்டம் உண்டா?


(அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது அளித்த பதில்)

கேள்வி:

முஸ்லிம் வருடப் பிறப்பை வெகு விமரிசையாகக் கொண்டாடுவது நடைமுறையிலுள்ளது. ரசூல் ஸல் அவர்கள் காலத்தில் இஸ்லாமிய வருடப் பிறப்பு கொண்டாடப்பட்டதா?


எம்.ஹாஜி முஹம்மது. நிரவி.

பதில்:

இஸ்லாமியர்களின் வருடப் பிறப்பு நாள் என்பதும், ஹிஜ்ரி ஆண்டு என்பதும் இஸ்லாத்தில் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் இரண்டாவது கலீஃபாவாக உமர் (ரலி) அவர்கள் பொறுப்பேற்றனர்.

அவர்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய ஆட்சி பரந்து விரிந்து விட்டதனால் நிர்வாக வசதிகளுக்காகப் பல அம்சங்கள் நிர்ணயிக்கப்பட்டன. அப்போது தான் முக்கியமான நிகழ்ச்சியான ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு ஹிஜ்ரி ஆண்டு உருவாக்கப்பட்;டது.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் ஏற்படுத்தப்பட்ட ஹிஜ்ரி ஆண்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சம்பந்தம் இல்லை.

ஹிஜ்ரி வருடத்தை உருவாக்கிய உமர் (ரலி)
 அவர்கள் ஆண்டு தோறும் ஹிஜ்ரி ஆண்டைக் கொண்டாடவில்லை

உமர்(ரலி) அவர்களுக்கும்  வருடப்பிறப்பைக் கொண்டாடுவதற்கும் சம்மந்தமில்லை.

அவர்கள் ஹிஜ்ரி ஆண்டைத் தான் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தினார்கள். அதை விழாவாக ஆக்கியது மிகவும் பிற்காலத்தில் தான். எனவே எந்த வருடப் பிறப்பையும் கொண்டாடுவது கூடாது. மேலும் முஸ்லிம்கள் கொண்டாடும் விழாக்கள் இரு பெருநாட்கள் மட்டுமே! வேறு கொண்டாட்டமில்லை.

P.JAINUL ABIDEEN

9:100 முன்னோரைப் பின்பற்றலாமா?

 முன்னோரைப் பின்பற்றலாமா?

ஹிஜ்ரத் செய்வதில் முந்திக் கொண்டவர்களையும், அவர்களுக்கு உதவிசெய்வதில் முந்திக் கொண்டவர்களையும் பின்பற்றுமாறு இவ்வசனம் (9:100) கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் எதைச் சொன்னாலும் அதை நாம் பின்பற்ற வேண்டும் என்ற தவறான கொள்கை உள்ளவர்கள் இவ்வசனத்தை (9:100) தமக்குரிய ஆதாரமாகக் காட்டி மக்களை வழிகெடுக்க முயல்கின்றனர்.

இவ்வசனம் இவர்கள் கூறுகின்ற அர்த்தத்தைத் தரவில்லை. இதை விளங்குவதற்கு முன்னால் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் என்ற பெயரில் எதைச் செய்வதாக இருந்தாலும் அது அல்லாஹ் சொன்னதாக இருக்க வேண்டும். அல்லது அவனது வஹீ மூலம் அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் சொன்னதற்கு மாற்றமாக யார் சொன்னாலும் அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்மந்தமில்லை. அது போல் அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லாத ஒன்றை இஸ்லாத்தின் பெயரால் யார் சொன்னாலும் அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்மந்தமில்லை.

இதுதான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.

422. சந்திரன் பிளந்தது

 422. சந்திரன் பிளந்தது

இவ்வசனத்தில் (54:1) சந்திரன் பிளந்து விட்டது என்று கூறப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைவனின் தூதர் என்று கூறியபோது அதற்குரிய அத்தாட்சியை அன்றைய மக்கள் கேட்டார்கள்.

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வானத்தில் சந்திரனை இரண்டாகப் பிளந்து காட்டினார்கள். அனைவரும் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் மக்களிடம் கூறினார்கள். (பார்க்க: புகாரீ 3636, 4864, 4865)

இந்நிகழ்ச்சியைத் தான் இவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது. பூமியின் துணைக் கோளாக அமைந்துள்ள சந்திரனைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்கள், சந்திரன் இரண்டாகப் பிளப்பதும், பிறகு ஒன்று சேர்வதும் சாத்தியமற்றது என்று கருதலாம்.

අල්ලාහ්ගේ නම් 99 ක් - අර්ථය සහ පැහැදිලි කිරීම

 99 names of Allah - Meaning and Explanation


අල්ලාහ්ගේ නම් 99 ක් - අර්ථය සහ පැහැදිලි කිරීම 

අස්මා උල් හුස්නා

ඉස්ලාමයේ ඊමාන් (ඇදහිල්ලේ) පළමු ස්ථම්භය අල්ලාහ් කෙරෙහි විශ්වාසයයි. මුස්ලිම්වරුන් වශයෙන් අපි අල්ලාහ්ගේ අලංකාර නම් සහ ගතිලක්ෂණ අනුව විශ්වාස කරමු. අල්ලාහ් ඔහුගේ නම් ශුද්ධ වූ අල් කුර්ආනයෙහි නැවත නැවතත් හෙළි කර ඇත. අල්ලාහ්ගේ නම් ඉගෙන ගැනීම හා කටපාඩම් කිරීම උන් වහන්සේව විශ්වාස කිරීමට නිවැරදි මාර්ගය හඳුනා ගැනීමට අපට උපකාරී වේ. අල්ලාහ්ගේ නම් තේරුම් ගෙන ඒවා අනුව ජීවත් වීමට වඩා පරිශුද්ධ හා ආශීර්වාදයක් තවත් නැත. 

අපගේ ස්වාමීන් වන සර්වබලධාරී අල්ලාහ්ට නමස්කාර කිරීම, ආදරය කිරීම, බියවීම සහ විශ්වාස කිරීම අපගේ යුතුකමකි. 

අල් කුර්ආනයෙහි අල්ලාහ් මෙසේ පවසයි. 

අල්ලාහ්ට හොඳම නම් අයත් වේ, එබැවින් ඒවායින් ඔහුට ආයාචනා කරන්න .. (7: 180) 

අල්ලාහ් - ඔහු හැර වෙනත් දෙවියෙකු නැත. හොඳම නම් උන් වහන්සේට ය. (20: 8) 

ඔහු අල්ලාහ්, මැවුම්කරු, නව නිපැයුම්කරු, විලාසිතාකරුවා ය; හොඳම නම් උන් වහන්සේට ය. (59:24)

අබු හුරෙයිරා රලිතුමා අල්ලාහ්ගේ දූතයාණෝ (ﷺ) මෙසේ පැවසූ බව පැවසීය: අල්ලාහ්ගේ නම් අනූ නවයක් ඇත; ඒවා මතකයට නඟන තැනැත්තා පාරාදීසයට පිවිසෙනු ඇත. නියත වශයෙන්ම අල්ලාහ් එක්කෙනෙකි. ඔහු ඔත්තේ අංකයන් ප්‍රිය කරයි." (සහීහ් මුස්ලිම් පොත -48 හදීස් -5)

8. சொர்க்கத்தில் பெண்களுக்குத் துணைகள் உண்டா?

 8. சொர்க்கத்தில் பெண்களுக்குத் துணைகள் உண்டா?

"சொர்க்கத்தில் தூய்மையான துணைகள் உள்ளனர்'' என்றும், பெண் துணைகள் உள்ளனர் என்றும் இவ்வசனங்களில் (2:25,  3:15,  4:57,  36:56,  37:48,  38:52,  44:54,  52:20,  55:56,  55:70,  56:22,  56:35,  78:33)  கூறப்படுகின்றது.

நல்லறம் செய்த பெண்களுக்கு ஆண் துணைகள் இல்லையா? என்ற கேள்வி இதில் எழும்.

இதற்குரிய விடையை அறிவதற்கு அரபு மொழியின் சொல்லிலக்கண விதியை அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்மொழி உள்ளிட்ட பல மொழிகளில் படர்க்கை ஒருமையில் மட்டுமே ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனிச் சொல்லமைப்புகள் உள்ளன. உதாரணமாக அவன் என்பது ஆணையும், அவள் என்பது பெண்ணையும் குறிக்கும்.

451. யஃஜூஜ், மஃஜூஜ் என்றால் யார்?

 451. யஃஜூஜ், மஃஜூஜ் என்றால் யார்?


18:94, 21:96 ஆகிய வசனங்களில் யஃஜூஜ் மஃஜூஜ் என்ற கூட்டத்தினர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.


உலகம் அழியும் காலம் நெருங்கும் போது வெளிப்படும் கூட்டத்தினர் தான் யஃஜூஜ் மஃஜூஜ் ஆவர். உலகம் அழிவதற்கு முன்னர் நடக்கவுள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த பத்து அடையாளங்களில் யஃஜூஜ், மஃஜூஜ் எனும் கூட்டத்தினரின் வருகையும் ஒன்றாகும். இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர்.

இந்தக் கூட்டத்தினர் நீண்ட காலமாகவே அவர்கள் இருந்து வருகின்றனர். மலைகளால் சூழப்பட்ட பகுதியில் வசிக்கின்றனர். அம்மலைகளுக்கிடையே இரும்புப் பாளங்களை அடுக்கி செம்பு உருக்கி ஊற்றப்பட்டுள்ளது. அதைத் தாண்டி அவர்களால் வரவும் முடியாது. அதைக் குடைந்து வெளியே வரவும் முடியாது. யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அந்தத் தடை உடைக்கப்பட்டு அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள். ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக்கொள்ளும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என்று 18:94-96 வரையிலான வசனங்கள் கூறுகின்றன.

Search This Blog