அத்வைத மதம் சூபித்துவ தரீக்கத்து ஷீயாயிசம் !
👉“மக்களை ஆத்மீகப் பாதையில் பயிற்றுவிக்கும் பள்ளி” எனும் போலி பெயரில் மக்களிடையே அறிமுகமாகியிருக்கும்👉 சூபித்துவ அத்வைத தத்துவம் எந்தளவுக்கு இஸ்லாத்தைத் தகர்க்கும் விஷமத்தனமான, நச்சுக் கருத்துக்களைக் கொண்டிருக்கின்றது என்பதை அறிந்துக்கொள்வது அல்லாஹ்வையும் அவனது தூதர் (ஸல்) அவர்களையும் ஈமான் கொண்டிருக்கும் உண்மை முஃமின்களுக்கு அவசியமாகும்!
👉“முன்னோர்களின் வழிமுறையைப் பின்பற்றுகின்றோம்” என்ற பெயரிலே குருட்டுத் தனமாக ‘அவர்கள் அறியாமையில் உழன்ற அந்த வழிகேடுகளிலே நானும் உழல்வேன்‘ என்று அடிம்பிடிக்காமல் இந்த தரீக்காக்கள் ஒருவனை எப்படியெல்லாம் வழிகெடுத்து நிரந்தர நரகத்தின் கொள்ளிக்கட்டைகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றது என்பதை கொஞ்சம் பொறுமையுடனும் நிதானத்துடனும் படித்துப்பாருங்கள்!
👉சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாதபடி எந்தளவுக்கு மிக்க தந்திரமாக இந்த நச்சுக் கருத்துக்களை மக்கள் இதயங்களில் புகுத்தியிருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாகவும் அதே நேரத்தில் எந்த அளவுக்கு மார்க்கத்தில் புகுந்து விளையாடியிருக்கின்றார்கள் என்ற ஆதங்கமாகவும் இருக்கின்றது. எனவே இது பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
👉“எல்லாம் அவனே!” எனும் தத்துவமே சூபித்துவத்தின் அடிநாதமாகும். சூபித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளும் இந்த விசயத்தில் உடன்பட்டுக் காணப்படுகின்றன. ஆனால் இதை ஆரம்பப் படித்தர மக்களுக்குச் சொல்வது கிடையாது.
👉தமிழகத்திலும், இலங்கையிலும் உள்ள ஷாதுலிய்யா, சிஷ்திய்யா, காதிரிய்யா, றிபாயி போன்ற அனைத்துத் தரீக்காக்களுமே இவ்வத்வைதத்தை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அத்தரீக்காக்களின் "மௌலீது நூல்களில்" கூட இவை மலிந்து காணப்படுகின்றன. இந்த அனைத்துத் தரீக்காக்களும் முன்னைய சூபித்துவவாதிகளால் எழுதப்பட்ட ஒரே வித நூல்களிலிருந்தே தமது சரக்குகளை எடுத்திருக்கின்றன. இப்போதும் எடுக்கின்றன. இந்த தரீக்காக்களின் பெயர்கள் சமீபத்திய சூபித்துவ வாதிகளினாலேயே தோற்றுவிக்கப்பட்டன.
“எல்லாம் அவனே!” எனும் கருத்தில் சில முற்கால சூபிகள் சொல்லி வைத்த👉 ஷைத்தானிய சடவாத தத்துவங்களான வழிகேடுகள் சிலதைப் பார்ப்போம்.
பிரபல சூபியான👉 கஸ்ஸாலி இமாம்(?👹) அவர்கள் கூறுகிறார்கள்:
👉தவ்ஹீத் என்பதை நான்கு படித்தரங்களாக வகைப்படுத்தலாம்!
📍முதலாவது: நாவினால் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவது,
📍இரண்டாவது: அதன் அர்த்தத்தை கல்பால் இதயத்தால் உண்மைப் படுத்துவது, இது பாமரமக்களின் படிநிலையாகும்,
,📍மூன்றாவது: இறை ஒளியினால்👉 கஷ்புடைய ஞானத்தைக் காண்பதாகும். இது இறைநெருக்கம் பெற்றவர்களின் நிலையாகம்,
📍நான்காவது: பிரபஞ்சத்தில் அல்லாஹ்வைத்தவிர எதையுமே காணாத நிலையாகும். தன்னையும் அவர் கடவுளாகவே காண்பார். இந்நிலைக்கு சூபியாக்களிடத்தில்👉 பனாஃ — இறைவனுடன் சங்கமித்து விடுதல் என்று கூறப்படும். இந்த நிலையை அடைந்தவர் தான் உண்மையான தவ்ஹீத்😝 வாதியாவார்.
(இஹ்யா உலூமுத்தீன் . 245-4 ம் பாகம்)
இவ்வாறு கஸ்ஸாலி கூறி விட்டு பின்வருமாறு வினாவெழுப்புகின்றார்.
ஒருவன் வானம் பூமி கடல், கரை, பறவை, மிருகம் இப்படிப் பல்வேறு படைப்புக்களைக் காணும் நிலையில் எங்ஙனம் அனைத்தையும் ஒன்றாக ஒரே 👉கடவுளாகக் காண்பது சாத்தியமாகுமென? நீ வினவலாம்! எனினும் இது 👉கஸ்புடைய ஞானத்தின்😝 உச்ச கட்ட நிலையால் ஏற்படுவதாகும்! இந்த ஞானத்தின் ரகசியத்தை எழுத்துக்களால் வடிக்க முடியாது! ரப்பின் இந்த ரகசியத்தை பகிரங்கப்படுத்துவது குப்ராகுமென ஆரிபீன்கள்👹 கூறுவார்கள்.
(அதே நூல் அதே பக்கம்)
👉மன்ஸூர் அல் ஹல்லாஜி என்பவன் வழி கெட்ட சூபிகளில் ஒருவன். இவனது காலத்தில் தீனூர் எனும் ஊரில் ஒருவர் மடமொன்றில் தனிமையில் இருந்து வந்தார். இவரது மடத்தைச் சிலர் சந்தேகத்தின் பேரில் சோதனை போட்ட போது அங்கிருந்து கடிதமொன்றைக் கண்டெடுத்தனர். அக்கடிதத்தில்,
‘அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமான👉 மன்ஸூர் அல்கல்லாஜியிடமிருந்து இன்னாருக்கு’
என்று எழுதப்பட்டிருந்தது. இக்கடிதம் அரசரிடம் சமர்ப்பிக்கப்பட அவர் ஹல்லாஜியை வரவழைத்து, ‘இதுவரை நீ நபியென்றுதான் வாதாடி வந்தாய்! இப்போது நீதான்👉 கடவுள் என்று கூறத் துணிந்து விட்டாயா?’
எனக் கேட்க, “நான் அப்படிக் கூறவில்லை! எனினும் 👹‘அனைவரும் கடவுள்’ என்பதே எங்கள் தத்துவம்! இக்கடிதம் எனக்குரியதே! அதே வேளை ‘இதை எழுதியவனும் அல்லாஹ்வே” என்றான்.
(இக்கொள்கை காரணமாகவே அவனுக்கு இஸ்லாமிய அரசால் 👉மரணதண்டனை விதிக்கப்பட்டது)
(தல்பீஸூ இப்லீஸ் பக்கம் 171)
👉மற்றுமொரு சூபித்துவ வழிகேடனாகிய👹 இப்னு அரபி என்பவன் ஒரு கவிதையில் கூறுகின்றான்:
மனிதனே கடவுள்! கடவுளே மனிதன்! இப்படியிருக்க யார் யாருக்குக் கட்டளையிடுவது?👹
நீ மனிதனென அழைத்தாலும் கடவுளென அழைத்தாலும் இரண்டுமே ஒன்றுதான்! இப்படியிருக்க யார் யாரை வணங்குவது?
(அல்புதூஹாத்துல் மக்கிய்யா 213)
இப்னு அரபியின் மற்றுமொரு உளறலைப் பாருங்கள்:
👉ஒரு மனிதன் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போதும் அல்லாஹ்வுடனேயே உறவு கொள்கின்றான்!👹 நான் அவனை அல்லாஹ்வை வணங்குகின்றேன்! அவன் என்னை வணங்குகின்றான்!
(ஸூபிய்யா 17)
அபூ யஸித் அல் புஸ்தாமி👹 எனும் மூடச் சூபி பின்வருமாறு பிரார்த்திக்கின்றான்:
👉‘உனது வஹ்தானியத்தை எனக்கும் தருவாயாக! உனது ரப்பு எனும் கிரீடத்தை எனக்கும் அணிவிப்பாயாக! என்னையும் உனது ஒருமைத்துவத்துடன் சேர்த்துக் கொள்வாயாக! என்னை மக்கள் கண்டால் உன்னைக் கண்டதாகவே சொல்ல வேண்டும்’ என்று பிரார்த்திக்கின்றான்!
நவூதுபில்லாஹி மின்ஹா!
இந்த 👉சூஃபித்துவ வழிகேடர்களின் பைத்தியக்காரத்தனமான, ஷைத்தானிய உளறல்களை விட்டும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் மிகப்பரிசுத்தமானவன்! இந்த முஷ்ரிக்குகளின் இணைவைப்பை விட்டும் அவன் மிகத் தூயவன்!
இது போன்ற நச்சுக் கருத்துள்ள சிந்தனைகள் விசயத்தில் அனைத்து சூபிகளுமே ஒருமித்த கருத்தில் இருக்கின்றனர். சூபித்துவ நூல்களில் இவை நிறைந்து காணப்படுகின்றன.
♦️அல்-குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவும் கூறுவது என்னவென்றால் அல்லாஹ்வே அகிலங்கள் மற்றும் அதிலுள்ளவைகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவன்!
📍எனவே ‘படைப்பாளன் வேறு! படைப்பினங்கள் என்பது வேறு!’ என்பது தான் இஸ்லாமிய அகீதா!
👹‘படைத்தவனும் படைப்பினமும் ஒன்று தான்’ என்று கூறுவது வழிகெட்ட சூஃபிகளின் அகீதா!
அல்லாஹ் கூறுகின்றான்!
“எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்; இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்; அப்படியிருந்தும் நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்குகின்றனர்.”
(அல்-குர்ஆன் 6:1)
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம். (அல்-குர்ஆன் 2:21)
எனவே அன்பு சகோதரர்களே! இதுநாள் வரையில் நாம் அறியாமையில் காலம் காலமாக நம் முன்னோர்களின் வழிமுறை எனப் பின்பற்றி வந்த வழிகேடுகளான👉 ஷாதுலிய்யா, காதிரிய்யா மற்றும் ஷிஸ்திய்யா போன்ற தரீக்காக்களின் நாசத்தை விட்டும் உடனடியாக தவிர்ந்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் காட்டித் தந்த வழிமுறையில் பின்பற்றி நடக்க வல்ல அல்லாஹ் அருள்புரிவானாகவும்!
வரலாற்று ரீதியாக, இஸ்லாமிய கொள்கையில் , பித்தலாட்டம் செய்தவர்கள் மூவர் ஆவர் :
(1) ஜஹ்ம்_பின்_ஸப்வான். (ஹிஜ்ரி : 78) இவர், ஒஸ்பகிஸ்த்தானைச் சேர்ந்தவர் . பின்வரும் கொள்கைகளை அறிமுகப்படுத்தினார் :
- இறைவன் எங்கும் நிறைந்தவன். இதன் மூலம் , இஸ்லாத்தில் அத்வைதக் கொள்கைக்கு வித்திட்டார்.
- இறைவனைத் தூய்மைப் படுத்தல் என்ற பெயரில் , குர்ஆன் , ஸுன்னா கற்றுத்தந்த " இறை பண்புகளை நிராகரித்தார் .
- மனிதனுக்கு தேர்வு சுதந்திரம் இருப்பதை நிராகரித்து , ஜப்ரியா கொள்கைக்கு அடித்தளமிட்டார் .
முஃதசிலாக்கள் , இவரின் வாரிசுகளாகும் .
(2) அபூ_ஹாமித்_கஸ்ஸாலி. (ஹிஜ்ரி : 505 ) ஈரானில் உள்ள "தூஸ்" என்ற நகரத்தைச் சேர்ந்தவர் . ஷாபி மத்ஹபைச் சேர்ந்த அறிஞ்சர்களில் ஒருவர் . இவர் , இறை பண்புகள் விவகாரத்தில் , முஃதசிலாக்களால் தாக்கம் பெற்ற " அஷ்அரிய்யா" சிந்தனைப் பிரச்சாரகர் . பின்பு , சூபித்துவத்தைத் தழுவி, அத்வைதக் கொள்கையை நம்பினார் . அதுவே இறை இரகசியம் என "இஹ்யா உலூமித்தீன்" என்ற நூலில் வாதிட்டார் .
ஷாபி மத்ஹப் , அஷ்அரி மத்ஹப் சார்ந்த அறிஞ்சர்கள் இவரது சூபிஸ சிந்தனையை விமர்சித்தாலும் , சூபியாக்கள் இவரை அளவு கடந்து புகழ்ந்தனர் . ஷாபி மத்ஹபைச் சேர்ந்தவர் என்ற போர்வையினால் , இவரின் தவறான சிந்தனை, காலம் காலமாக சந்தைப்படுத்தப்பட்டது .
(3) இப்னு_அரபி (ஹிஜ்ரி : 638) ஸ்பைன் நாட்டில் உள்ள "அந்தலுஸ்" என்ற பகுதியைச் சேர்ந்தவர் . பிக்ஹ் கலையில் இமாம் பின் ஹஸ்Zம் அவர்களின் " லாஹிரி" மத்ஹபைப் பின்பற்றினார் . இவர் அத்வைதக் கொள்கையை முழுமைப்படுத்தியராகக் கருதலாம் . சிரியா தலைநகரம் "டமஸ்கஸ்" நகரம் வந்து , தனது சிந்தனயைப் பரப்பினார் . ஆனால் அவர் உயிருடன் இருக்கும்போது , தனது நூற்களை ( புதூஹாத்துல் மக்கிய்யா, புஸூஸுல் ஹிகம்) வெளியிடவில்லை . மரணத்தின் பின்பு ,அவைகளை அவரது மாணவர்கள் பரப்பினர் . இவரை நான்கு மத்ஹபைச் சேர்ந்த ஏராளமான அறிஞ்சர்கள் , காபிர் என பத்வா வழங்கியுள்ளனர் .
Dr. Ahmed Ashraff
share this.. https://bit.ly/3P2O93s