தவ்ஹீத் ஜமாஅத் video's: வெளியில் செல்லும் பெண்கள் நறுமணம் போட்டுக் கொள்ளலாமா?

வெளியில் செல்லும் பெண்கள் நறுமணம் போட்டுக் கொள்ளலாமா?


வெளியில் செல்லும் போது பெண்கள் வாசனை திரவியங்கள் போட்டுக் கொள்ளலாமா?


பதில்

நறுமணப் பொருட்கள் இரு வகைகளில் உள்ளன.

தனது உடலில் துர்வாடை இருக்கக் கூடாது என்பதற்காக பயன்படுத்தும் மென்மையான நறுமணமும் உண்டு.

பிறரைத் தன் பக்கம் இழுக்கும் வகையிலான நறுமணமும் உண்டு.

முதல் வகையான நறுமணத்தை அருகில் நெருங்கி வருவோர் மட்டுமே உணர முடியும். இரண்டாம் வகை நறுமணம் தூரத்தில் போகும் நபரையும் சுண்டி இழுத்து திரும்பிப் பார்க்க வைக்கும்.

பெண்கள் வீட்டுக்குள் இருக்கும் போது இரண்டு வகையான நறுமணங்களையும் பூசிக் கொள்ளலாம். ஆனால் வெளியே செல்லும் போது முதல் வகையான நறுமணப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இரண்டு வகையான நறுமணப் பொருட்கள் இருந்துள்ளன.

و حدثنا عمرو بن سواد العامري حدثنا عبد الله بن وهب أخبرنا عمرو بن الحارث أن سعيد بن أبي هلال وبكير بن الأشج حدثاه عن أبي بكر بن المنكدر عن عمرو بن سليم عن عبد الرحمن بن أبي سعيد الخدري عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال غسل يوم الجمعة على كل محتلم وسواك ويمس من الطيب ما قدر عليه إلا أن بكيرا لم يذكر عبد الرحمن وقال في الطيب ولو من طيب المرأة

வெள்ளிக்கிழமை குளிப்பதும், பல் துலக்குவதும் பருவமடைந்த அனைவர் மீதும் கடமையாகும். மேலும் தன்னால் இயன்ற நறுமணத்தையும் பூசிக் கொள்ள வேண்டும். (நறுமணப் பொருள் இல்லாத பட்சத்தில்) பெண்களுக்கான நறுமணப் பொருளையாவது பூசிக் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நூல் முஸ்லிம்

ஆண்களின் நறுமணமும், பெண்களின் நறுமணமும் அன்று தனித்தனியாக இருந்துள்ளன என்பதையும், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதையும் இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

حدثنا محمد بن بشار حدثنا يحيى بن سعيد القطان عن ثابت بن عمارة الحنفي عن غنيم بن قيس عن أبي موسى عن النبي صلى الله عليه وسلم قال كل عين زانية والمرأة إذا استعطرت فمرت بالمجلس فهي كذا وكذا يعني زانية وفي الباب عن أبي هريرة قال أبو عيسى هذا حديث حسن صحيح

ஒவ்வொரு கண்ணும்  செய்கிறது. ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு (ஆண்களின்) சபைக்குச் சென்றால் அவள் விபச்சாரம் செய்பவள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நூல் : திர்மிதி

ஆண்கள் சபைக்குச் சென்று அவர்கள் அப்பெண்ணை ஏறெடுத்துப் பார்க்கும் நிலையை ஏற்படுத்துவதால் அவளும் விபச்சாரி எனக் கூறியுள்ளனர்.

மற்றொரு ஹதீஸில்

أخبرنا إسمعيل بن مسعود قال حدثنا خالد قال حدثنا ثابت وهو ابن عمارة عن غنيم بن قيس عن الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة استعطرت فمرت على قوم ليجدوا من ريحها فهي زانية

தனது நறுமணத்தை மற்றவர்கள் நுகர வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு சென்றால் அவள் விபச்சாரி என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர்.  நூல் : நஸாயீ

அன்னிய ஆண்களைக் கவரும் நோக்கத்தில் நறுமணம் பூசி செல்வதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள் என்பதையும் அவ்வாறு இல்லாமல் நறுமணம் பூசிக் கொண்டு செல்ல தடை இல்லை என்பதையும் இதில் இருந்து ஊகம் செய்யலாம்.

இன்னும் சொல்லப் போனால் தெளிவாக அனுமதிக்கும் ஹதீஸ்களும் உள்ளன.

 حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا يحيى بن سعيد القطان عن محمد بن عجلان حدثني بكير بن عبد الله بن الأشج عن بسر بن سعيد عن زينب امرأة عبد الله قالت قال لنا رسول الله صلى الله عليه وسلم إذا شهدت إحداكن المسجد فلا تمس طيبا

உங்களில் ஒருத்தி பள்ளிவாசலுக்கு வருவதாக இருந்தால் அவர் நறுமணம் பூச வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : முஸ்லிம்

பள்ளிவாசலுக்கு வரும் போது நறுமணம் பூசக்கூடாது என்று இந்த ஹதீஸ் சொன்னாலும் இது பொதுவானதல்ல என்பதைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

حدثنا هارون بن سعيد الأيلي حدثنا ابن وهب أخبرني مخرمة عن أبيه عن بسر بن سعيد أن زينب الثقفية كانت تحدث عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إذا شهدت إحداكن العشاء فلا تطيب تلك الليلة

உங்களில் ஒருத்தி இஷாவுக்கு வருவதாக இருந்தால் அவர் நறுமணம் பூச வேண்டாம் என்று நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.  நூல்: முஸ்லிம்

இந்த ஹதீஸையும், முந்திய ஹதீஸையும் ஸைனப் என்ற சஹாபி தான் அறிவிக்கிறார். எனவே அவர் பொதுவாக அறிவிப்பதை விட குறிப்பாக அறிவிப்பதைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இந்த அறிவிப்பை அபூஹுரைரா அவர்களின் அறிவிப்பும் உறுதி செய்கின்றது. அது வருமாறு:

حدثنا يحيى بن يحيى وإسحق بن إبراهيم قال يحيى أخبرنا عبد الله بن محمد بن عبد الله بن أبي فروة عن يزيد بن خصيفة عن بسر بن سعيد عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة أصابت بخورا فلا تشهد معنا العشاء الآخرة

எந்தப் பெண்ணாவது நறு மணப் புகை பூசிக் கொண்டால் அவள் நம்மோடு இஷா தொழுகைக்கு வர வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)  நூல் : முஸ்லிம்

எனவே இஷா தொழுகைக்குப் போகும் போது நறுமணம் பூசிக் கொண்டு செல்லக் கூடாது.

இது இஷாத் தொழுகைக்குச் செல்வதைக் குறித்து சொல்லப்பட்டாலும் இரவு நேரத்தில் வெளியே செல்வதையும் குறிக்கும்.

நறுமணம் பூசிக் கொண்டு பகலில் வெளியே செல்ல அனுமதி அளித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகைக்குத் தடை செய்கிறார்கள் என்றால் இரவு என்பதற்காகத் தான் இருக்க முடியும்.

பள்ளிவாசலுக்கு நறுமணம் பூசிக் கொண்டு செல்வதால் ஏற்படும் விபரீத்த்தை விட வேறு இடங்களுக்குச் செல்லும் போது அதிக விபரீதம் ஏற்படும்.

மற்ற நேரங்களில் பெண்கள் ஆண்களைச் சுண்டி இழுக்கும் வகையிலான நறுமணமாக இல்லாமல் சாதாரண நறுமணம் பூசி வெளியே செல்ல அனுமதி உண்டு என்பதை இந்த ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.

பெண்கள் தனியாக ஆட்டோவில் பயணம் செய்யலாமா

ஷஃபானா அஸ்மி

பதில்

பெண்களின் கற்புக்குப் பாதுகாப்பு நிலவும் நேரத்தில் மட்டும் திருமணம் முடிக்கத் தடைசெய்யப்பட்ட இரத்த பந்த உறவினர் இன்றி அவர்கள் பயணம் செய்யலாம்.

இன்றைய காலத்தில் மக்களுடன் சேர்ந்து பயணம் செய்வதில் பாதுகாப்பு இருப்பதால் பெண்கள் மஹ்ரமான துணையில்லாமல் பயணம் செய்யலாம். இது பற்றி விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பார்க்க

https://onlinepj.in/index.php/articles/womens-area/women-laws/pengal_veliyur-payanam

ஒரு பெண் மட்டும் தனியாக ஆட்டோவில் செல்வது பாதுகாப்பற்ற நிலையாகும். ஆட்டோ ஓட்டுபவன் அந்தப் பெண்ணை கடத்திக் கொண்டு போக நினைத்தால் சுலபமாகச் செய்துவிட முடியும்.

மேலும் பெண் எந்த ஒரு சூழ்நிலையிலும் அந்நிய ஆணுடன் தனித்திருப்பது கூடாது. பயணம் செய்தாலும் பயணம் செய்யாமல் ஊரில் இருந்தாலும் அந்நிய ஆணுடன் தனித்திருப்பது கூடாது.

ஒரு பெண் தனியாக ஆட்டோவில் பயணம் செய்தால் ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் நிலை ஏற்படுகின்றது. இதை இஸ்லாம் தடைசெய்துள்ளது.

صحيح البخاري3006 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ: سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لاَ يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ، وَلاَ تُسَافِرَنَّ امْرَأَةٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ»

ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம். (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போதே தவிர என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 3006


مسند أحمد طلَا يَخْلُوَنَّ أَحَدُكُمْ بِامْرَأَةٍ، فَإِنَّ الشَّيْطَانَ ثَالِثُهُمَا

உங்களில் எவரும் (அந்நியப்) பெண்ணுடன் தனித்து இருக்க வேண்டாம்! ஏனெனில் ஷைத்தான் உங்களில் இருவரில் மூன்றாம் நபராக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நூல்: அஹ்மத்

இந்த நிலை ஏற்படாதவாறு பல பெண்களாக சேர்ந்து ஆட்டோவில் செல்லலாம். அல்லது மஹ்ரமான ஆண் துனையுடன் செல்லலாம். தனியாக ஒரு பெண் மட்டும் ஆண் ஓட்டுனர் இயக்கும் ஆட்டோவில் செல்லக் கூடாது.

போராட்டங்களில் பெண்கள் கலந்து கொள்ளலாமா?


பேரணி, ஆர்ப்பாட்டங்களில் முஸ்லிம் பெண்கள் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா? அந்நியர்களின் பார்வையில் மழையிலும் கூட மார்க்கச் சகோதரிகளைக் காட்சிக்கு வைப்பது மார்க்கத்தில் ஆகுமான காரியமா?

பதில் :

முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்த கேள்வி அனைத்து இயக்கங்களுக்கான கேள்வியாகும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் (ஒரு இயக்கம் தவிர) தாங்கள் நடத்தும் போராட்டங்களில் பெண்களைப் பங்கேற்கச் செய்து வருகின்றனர். எல்லா இயக்கங்களும் போராட்டத்தில் பெண்களைப் பங்கெடுக்கச் செய்கின்றன.

இது போல் பெண்கள் கலந்து கொண்ட சில இயக்கங்களின் போராட்டங்களை ஜமாஅதுல் உலமா சபையும் ஆதரித்து பங்கு கொண்டுள்ளது.

கப்ரு வணங்கிக் கூட்டமான ஜமாலி குரூப் மட்டுமே பெண்களைப் போராட்டத்தில் பயன்படுத்துவது கூடாது என்று கூறுகிறது. ஆனால் தர்காக்களில் ஆண்களும், பெண்களும் ஒட்டி உரசிக் கொள்வதை இவர்கள் கண்டிப்பதில்லை.

பெண்கள் அன்னிய ஆண்கள் முன்னால் முகம், கை தவிர மற்ற அங்கங்களை மறைத்துக் கொண்டு வரலாம் என்பது பொதுவான அனுமதி. இதற்கு நபி வழியில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அந்த அனுமதியே போராட்டங்களுக்கும் பொருந்தும்.

பெருநாள் தொழுகையில் ஆண்கள் கலந்து கொள்வது போல் பெண்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மார்க்கம் கட்டளை இடுகிறது.

صحيح البخاري351 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: أُمِرْنَا أَنْ نُخْرِجَ الحُيَّضَ يَوْمَ العِيدَيْنِ، وَذَوَاتِ الخُدُورِ فَيَشْهَدْنَ جَمَاعَةَ المُسْلِمِينَ، وَدَعْوَتَهُمْ وَيَعْتَزِلُ الحُيَّضُ عَنْ مُصَلَّاهُنَّ، قَالَتِ امْرَأَةٌ: يَا رَسُولَ اللَّهِ إِحْدَانَا لَيْسَ لَهَا جِلْبَابٌ؟ قَالَ: «لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரு பெருநாட்களில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களையும் (தொழுகைத் திடலுக்கு) அனுப்பி வைக்குமாறு நாங்கள் (இறைத்தூதரால்) பணிக்கப்பட்டோம். பெண்கள் அனைவரும் முஸ்லிம்களின் கூட்டுத் தொழுகையில் பங்குகொள்ள வேண்டும்; முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ள வேண்டும். மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்திலிருந்து விலகியிருக்க வேண்டும் (என்று நபி (ஸல்) அவர்கள் கூற, இதைக் கேட்டுக் கொண்டிருந்த) ஒரு பெண், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் சிலரிடம் அணிந்து கொள்ள மேலங்கி இல்லையே (அவள் என்ன செய்வாள்?)! என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு (இரவலாக) அணியக் கொடுக்கட்டும்! என்றார்கள்.  நூல் : புகாரி 351


ஐந்து வேளைத் தொழுகைகளிலும் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் எந்தத் தடுப்பும் போடப்படவில்லை.

பார்க்க பெண்கள் பள்ளிக்கு வரலாமா?

மேலும் பார்க்க பெண்கள் பள்ளிக்கு வரலாமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக உளூச் செய்துள்ளனர். இதனால் கைகளை மனிக்கட்டு வரை வெளிப்படுத்தும் நிலையும், தலையைத் திறக்கும் நிலையும் ஏற்பட்டு இருக்கும்.

صحيح البخاري193 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: «كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ يَتَوَضَّئُونَ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمِيعًا»

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஆண்களும், பெண்களும் சேர்ந்தே (ஓரிடத்தில்) உளூச் செய்வார்கள்.  நூல் : புகாரி 193


போர்க்களத்திலும் பெண்கள் கலந்து கொண்டு காயமடைந்த ஆண்களுக்கு மருத்துவம் செய்யவும், தண்ணீர் விநியோகிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். ஆண்களைத் தொட்டு தூக்கும் நிலையும் இதனால் ஏற்பட்டு இருக்கும்.

صحيح البخاري324 - حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ ابْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الوَهَّابِ، عَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ، قَالَتْ: كُنَّا نَمْنَعُ عَوَاتِقَنَا أَنْ يَخْرُجْنَ فِي العِيدَيْنِ، فَقَدِمَتِ امْرَأَةٌ، فَنَزَلَتْ قَصْرَ بَنِي خَلَفٍ، فَحَدَّثَتْ عَنْ أُخْتِهَا، وَكَانَ زَوْجُ أُخْتِهَا غَزَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثِنْتَيْ عَشْرَةَ غَزْوَةً، وَكَانَتْ أُخْتِي مَعَهُ فِي سِتٍّ، قَالَتْ: كُنَّا نُدَاوِي الكَلْمَى، وَنَقُومُ عَلَى المَرْضَى، فَسَأَلَتْ أُخْتِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَعَلَى إِحْدَانَا بَأْسٌ إِذَا لَمْ يَكُنْ لَهَا جِلْبَابٌ أَنْ لاَ تَخْرُجَ؟ قَالَ: «لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا وَلْتَشْهَدِ الخَيْرَ وَدَعْوَةَ المُسْلِمِينَ»، فَلَمَّا قَدِمَتْ أُمُّ عَطِيَّةَ، سَأَلْتُهَا أَسَمِعْتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: بِأَبِي، نَعَمْ، وَكَانَتْ لاَ تَذْكُرُهُ إِلَّا قَالَتْ: بِأَبِي، سَمِعْتُهُ يَقُولُ: «يَخْرُجُ العَوَاتِقُ وَذَوَاتُ الخُدُورِ، أَوِ العَوَاتِقُ ذَوَاتُ الخُدُورِ، وَالحُيَّضُ، وَلْيَشْهَدْنَ الخَيْرَ، وَدَعْوَةَ المُؤْمِنِينَ، وَيَعْتَزِلُ الحُيَّضُ المُصَلَّى»، قَالَتْ حَفْصَةُ: فَقُلْتُ الحُيَّضُ، فَقَالَتْ: أَلَيْسَ تَشْهَدُ عَرَفَةَ، وَكَذَا وَكَذَا

324 ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இரு பெருநாள்களிலும் (தொழுமிடத்திற்கு) புறப்பட்டு வருவதை விட்டும் எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம். இந்நிலையில் ஒரு பெண்மணி வந்து பனூ கலஃப் குலத்தாரின் மாளிகையில் தங்கியிருந்தார். அவர் தம் சகோதரி (உம்மு அத்தியா- ரலி) வழியாக வந்த செய்தியை அறிவித்தார்.

-என்னுடைய சகோதரி (உம்மு அத்திய்யா -ரலி) அவர்களின் கணவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு பன்னிரண்டு போர்களில் கலந்து கொண்டார். இதில் என் சகோதரி ஆறு போர்களில் தம் கணவரோடு இருந்தார்.-

என் சகோதரி (உம்மு அத்திய்யா) கூறினார்:

(பெண்களாகிய) நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த போர்களில் காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்; நோயாளிகளைக் கவனிப்போம். எங்களில் ஒரு பெண்ணுக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் (வீட்டிலேயே இருப்பது) குற்றமா? என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! அவள் நன்மையான காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரச்சாரங்களிலும் கலந்து கொள்ளட்டும்! என்று சொன்னார்கள்.

ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் செவியுற்றீர்களா? என்று நான் கேட்டேன் அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் என் தந்தை நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! ஆம். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன் என்று சொன்னார்கள் -உம்மு அத்திய்யா, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதேல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு என் தந்தை அர்ப்பணமாகட்டும் என்பதையும் சேர்த்தே கூறுவார்.

வயது வந்த பெண்களும், திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களும், மாதவிடாயுள்ள பெண்களும் (பெருநாள் தினத்தன்று) வெளியே சென்று நன்மையான செயல்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் காரியங்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்! மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்தை விட்டு ஒதுங்கி இருப்பார்கள் என்று கூறினார்கள் என்றார் உம்மு அத்திய்யா.

(இதை அறிவித்த உம்மு அத்திய்யா அவர்களிடம்) நான், மாதவிடாயுள்ள பெண்களுமா? என்று கேட்டேன். அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள், மாதவிடாயுள்ள பெண் அரஃபாவுக்கும் (மினா, முஸ்தலிஃபா, போன்ற) இன்ன இன்ன இடங்களுக்கும் செல்வதில்லையா? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

நூல் : புகாரி 324

சபைகளில் கேள்வி கேட்பதற்காக பெண்கள் வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேள்வியும் கேட்டுள்ளனர். அதைப் பல ஆண்களும் பார்த்துள்ளனர்.

பார்க்க புகாரி 351, 979, 1250, 1953


ஹஜ் பயணத்தின் போது ஆண்களும், பெண்களும் ஒன்றாகவே பயணித்துள்ளனர். அப்போது பெண்கள் ஆண்களின் பார்வையில் பட்டுள்ளனர்.

صحيح البخاري6228 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ يَسَارٍ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَرْدَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الفَضْلَ بْنَ عَبَّاسٍ يَوْمَ النَّحْرِ خَلْفَهُ عَلَى عَجُزِ رَاحِلَتِهِ، وَكَانَ الفَضْلُ رَجُلًا وَضِيئًا، فَوَقَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلنَّاسِ يُفْتِيهِمْ، وَأَقْبَلَتِ امْرَأَةٌ مِنْ خَثْعَمَ وَضِيئَةٌ تَسْتَفْتِي رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَطَفِقَ الفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا، وَأَعْجَبَهُ حُسْنُهَا، فَالْتَفَتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا، فَأَخْلَفَ بِيَدِهِ فَأَخَذَ بِذَقَنِ الفَضْلِ، فَعَدَلَ وَجْهَهُ عَنِ النَّظَرِ إِلَيْهَا، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ فَرِيضَةَ اللَّهِ فِي الحَجِّ عَلَى عِبَادِهِ، أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا، لاَ يَسْتَطِيعُ أَنْ يَسْتَوِيَ عَلَى الرَّاحِلَةِ، فَهَلْ يَقْضِي عَنْهُ أَنْ أَحُجَّ عَنْهُ؟ قَالَ: «نَعَمْ»

6228 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(விடைபெறும் ஹஜ்ஜின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) கஸ்அம் குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவரைக் கவர்ந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்த போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.

அப்போது அப்பெண், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்கள் மீது விதித்துள்ள ஹஜ், என் தந்தையின் மீது கடமையாயிற்று. அவரோ வயது முதிந்தவர்; வாகனத்தில் அவரால் சரியாக அமர இயலாது. ஆகவே, நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம் (நிறைவேறும்) என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 6228


இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அறிவுடையோருக்கு இது போதுமானதாகும்.

இப்படி கேள்வி கேட்கும் பலர் தமது மனைவியரை அழைத்துக் கொண்டு கடைத் தெருவுக்கோ சுற்றுலாத் தலங்களுக்கோ செல்கிறார்கள்.

தனது மனைவியர் மற்றும் குடும்பப் பெண்கள் கடைத்தெருவுக்குச் சென்று பொருட்களை வாங்க அனுமதிக்கின்றனர்.

முறையாக ஆடை அணிந்து இவர்களின் குடும்பத்துப் பெண்கள் பள்ளிக் கூடம் அல்லது கல்லூரிக்குச் செல்கிறார்கள்.

சமுதாய நன்மைக்காகக் குரல் எழுப்பும் போது மட்டுமே இந்த வாதங்களை எழுப்புகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

பெண்கள் மட்டமானவர்களா?


பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர்களா? கணவன் சொல்வதைத் தான் மனைவி கேட்க வேண்டுமா? கணவனுக்குப் பிடிக்காதவங்க வீட்டுக்கு வரக் கூடாதா?. குடும்பத்தில் ஆண்களுக்கு தான் முடிவு எடுக்க வேண்டுமா? ஆண்களை கேட்டுத் தான் செயல்பட வேண்டுமா பெண்கள்? மார்க்கம் என்ன சொல்லுது? என் தந்தையும் சொல்லுகிறார் இறைவன் படைக்கும் போதே ஆண்களை பெண்களை விட உயர்வாகவும் மேன்மையாகவும் படைத்திருக்க்கிறான். இது உண்மையா?

பதில்

பெண்களை விட ஆண்களுக்கு ஒரு உயர்வு உண்டு என இறைவன் கூறுகிறான்.

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.   திருக்குர்ஆன் 2 : 228

எல்லா வகையிலும் ஆண்கள் உயர்ந்தவர்கள்: பெண்கள் தாழ்ந்தவர்கள் என்பது இதன் கருத்தல்ல. காரண காரியங்களின் அடிப்படையில் ஒருவரை விட மற்றவர் சிறப்புக்குரியவர்களாக இருக்கிறார்கள் என்பது தான் இஸ்லாத்தின் கருத்தாகும்.

சில வகையில் பெண்களை விட ஆண்கள் சிறப்பிற்குரியவர்களாகவும், மற்ற சில வகையில் ஆண்களை விட பெண்கள் சிறப்புக்குரியவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.

எந்த ஒரு நிர்வாகமாக இருந்தாலும் அதற்கு ஒரு தலைவன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அது நிர்வாகமாக இருக்கும். சிறிய நிறுவனம் என்றாலும் பெரிய நிறுவனம் என்றாலும் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு ஒருவரிடம் இருந்தாக வேண்டும். யார் வேண்டுமானாலும் முடிவு எடுக்கலாம் என்று இருந்தால் அவர்கள் தனித்தனியாக இருக்கிறார்கள் என்று ஆகுமே தவிர நிர்வாகமாக ஆகாது.

எவ்வளவு தான் நெருக்கமானவர்களாக இருந்தாலும் அவர்களிடையே எல்லா விஷயத்திலும் ஒத்த கருத்து வராது. எந்த முடிவு எடுப்பது என்பதில் கருத்து வேறுபாடு வரும் போது யாராவது ஒருவருக்கு மற்றவர் கட்டுப்பட்டால் மட்டுமே குடும்ப நிர்வாகம் குலைந்து போகாமல் இருக்கும். முரண்பாடு வருகிறது என்பதற்காக குடும்பம் சிதைந்து விடக் கூடாது என்பதற்காகத் கணவனுக்கு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.

இதற்கான காரணங்களும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆண்கள் தான் குடும்பத்துக்காக பொருள் திரட்டக் கடமைப்பட்டுள்ளார். உழைத்து சம்பாதித்து மனைவிக்காகவும், குழந்தைகளுக்காகவும் செலவிடுகிறார்கள் என்பது முதல் காரணமாகும்.

பொருளாதாரத்தை திரட்டுபவன் என்ற அடிப்படையில் தான் ஆணுக்கு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடமையைச் செய்யாத ஒரு கணவன் தனக்கு மனைவி கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று இஸ்லாத்தின் பெயரால் உரிமை கொண்டாட முடியாது.

அடுத்ததாக உடலமைப்பில் ஆண்கள் தான் பெண்களை விட வலிமையுள்ளவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் முடிவு எடுக்கும் போது மற்றவர் அதற்குக் கட்டுப்பட மறுத்தால் அப்போதும் குடும்ப அமைப்பு சீர்குலைந்து விடும். யாருக்கு வலிமை அதிகம் உள்ளதோ அவரிடம் அந்த அதிகாரம் இருந்தால் மற்றவர் கட்டுப்பட எளிதாக இருக்கும் என்பது மற்றொரு காரணமாக இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இவ்விரு காரணங்களையும் குறை சொல்ல முடியாது. இருவருக்கும் ஆசைகள் இருந்தாலும் ஆண் முடிவு செய்தால் இல்லறமே நடக்கும். ஆணுக்கு ஆசை இல்லாமல் பெண்ணுக்கு மட்டும் ஆசை இருந்தால் பெண்ணால் ஒன்றும் செய்ய முடியாது.

இவ்விரு காரணங்களால் தான் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்யும் உரிமையைப் பெறுகிறார்கள் என்று பின்வரும் வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.   திருக்குர்ஆன் 4 : 34

இப்படி குடும்பத் தலைவனாக கணவன் நியமிக்கப்பட்டதால் பெண்ணுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்றோ, அவளுக்கு எந்த உரிமையும் இல்லை என்றோ, பெண்களை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் அடக்கியாளலாம் என்றோ இதற்கு பொருள் கொள்ளக் கூடாது.

இதையும் இஸ்லாம் தெளிவுபடுத்த தவறவில்லை.

உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர்களே என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : அஹ்மத் 7095


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.

அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல் :முஸ்லிம் 2911


நல்ல மனைவியை ஒருவன் அடைந்திருப்பது அல்லாஹ் செய்த அருள் என்று நினைக்கும் ஒருவன் பெண்ணை அடிமையாக நடத்த மாட்டான்.

மனைவிக்கு நல்லவனாக இருப்பவன் தான் மனிதரில் நல்லவன் என்ற அறிவுறையை நம்புபவன் மனைவியின் மார்க்கத்துக்கு உட்பட்ட ஆசைகளுக்கு தடை போட மாட்டான்.

மனைவியின் உறவினரோடு இவனுக்கு ஏதும் மனவருத்தம் இருப்பதால் மனைவியையும் அவளது இரத்த பந்தங்களையும் பிரிக்க மாட்டான். ஒரு கணவன் இப்படியெல்லாமா நடப்பது என்று ஒரு பெண் கேள்வி கேட்டால் அந்தப் பெண்ணுக்கு அவன் நல்லவனாக நடக்கவில்லை என்று ஆகிவிடும்.

அடித்து சித்திரவதை செய்ய மாட்டான். அப்படி செய்தால் அவன் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியவனாக ஆவான்.

கணவனுக்கு கட்டுப்படுவதற்கும் எல்லை உண்டு.

இவ்வுலகிலும், மறு உலகிலும் நன்மை பயக்கும் காரியங்களில் ஒரு பெண் தனது கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும்.

கணவன் தீமையான செயலைச் செய்யும் படி கட்டளையிட்டால் அதில் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை, அவ்வாறான காரியங்களில் கணவனுக்குக் கட்டுப்படுதல் அறவே கூடாது.

அன்சாரிகளில் ஒரு பெண் தம்முடைய மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரது மகளின் தலைமுடி உதிர்ந்துவிட்டது. அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்து தெரிவித்துவிட்டு, என் மகளின் கணவர், எனது மகளின் தலையில் ஒட்டுமுடி வைக்கச் சொல்கிறார் என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், வேண்டாம்! (ஒட்டுமுடி வைக்காதே!) ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)  நூல் : புகாரி 5205


பொதுவாக எந்த மனிதனுக்கு கட்டுப்படுவதாக இருந்தாலும் தீமைகளில் கட்டுப்படக்கூடாது என்பது பொதுவான விதியாகும். இது கணவன் மனவி விஷயத்துக்கும் பொருந்தும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவை அனுப்பி அவர்களுக்கு ஒருவரைத் தளபதியாக்கினார்கள். அவர் (ஒரு கட்டத்தில் படைவீரர்கள் மீது கோபம் கொண்டு) நெருப்பை மூட்டி, இதில் நுழையுங்கள் என்று சொன்னார். அவர்கள் அதில் நுழைய முனைந்தார்கள். (படையிலிருந்த) மற்றவர்கள், நாம் நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே (இஸ்லாத்திற்கு) வந்தோம் என்று கூறினர். ஆகவே, இதை அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அவர்கள் அதில் புகுந்திருந்தால் மறுமைநாள் வரை அதிலேயே இருந்திருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் கீழ்ப்படிதல் கிடையாது; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான் என்றும் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி)  நூல் :புகாரி 7257


கணவன் வெறுப்பவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாதா என்று கேட்டுள்ளீர்கள்.

உங்களுக்கு மஹ்ரமான உறவு இல்லாத அந்நியர்கள் சம்மந்தமாக கணவர் அவ்வாறு கட்டளையிட்டால் அதற்குக் கட்டுப்படத் தான் வேண்டும்.

உங்களுக்கு மஹ்ரமான உறவினர்கள் விஷயமாக அவர் இது போல் கட்டளையிடக் கூடாது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

என்னுடன் ஒரு ஆண் இருந்த போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் என்னிடம் வந்தார்கள். ஆயிஷாவே இவர் யார் என்று கேட்டார்கள். இவர் எனது பால் குடிச் சகோதரர் என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவே உங்கள் சகோதர்ர்கள் யார் என்பதில் கவனமுடன் இருங்கள். பசியால் பால் குடித்தாலே பால்குடிச் சகோதர்ர் என்ற உறவு ஏற்படும் எனக் கூறினார்கள்.   நூல் : புகாரி 2647


பால்குடிச் சகோதரர் என்பது நெருக்கமான உறவாகும். அது போன்ற உறவுடையவர்கள் தமது மனைவியின் வீட்டுக்கு வருவதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறுப்பு இல்லை. ஆனால் உண்மையில் பால்குடிச் சகோதாரர் தானா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கூறுகிறார்கள். ஒருவரது மனைவியின் உறவினர்கள் மனைவியை பார்க்க வருவதற்கும் உறவைப் பேணுவதற்கும் கணவன் குறுக்கே நிற்கக் கூடாது. அவ்வாறு இல்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் கணவனுக்குப் பிடிக்காதவர்கள் என்றால் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருப்பது மனைவியின் பொறுப்பாகும். பிரச்சனை இல்லாத இல்லறத்துக்கு இது அவசியமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மக்களே) பெண்கள் விஷயத்தில் நல்லவிதமாக நடந்து கொள்வது பற்றி (என்னுடைய ) அறிவுறைகளைக் கவனத்தில் கொள்ளுங்கள். நிச்சயமாக (பெண்களாகிய) அவர்கள் உங்களுடைய பொறுப்பில் இருக்கின்றார்கள். இதைத்தவிர அவர்களிடமிருந்து நீங்கள் எதையும் சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. அவர்கள் தெளிவான மானக்கேடான காரியங்களைச் செய்தாலே தவிர. அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டால் அவர்களைப் படுக்கையறைகளில் காயம் ஏற்படாதவாறு அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழிகளைத் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் மனைவிமார்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உள்ளன. அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உங்கள் மனைவிமார்கள் உங்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளாவன: மற்றவர்களுக்கு உங்கள் படுக்கைகளில் கொடுக்காமல் இருப்பதும் நீங்கள் வெறுப்பவர்களை உங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும். நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாவன அவர்களுக்கு அழகிய முறையில் ஆடையளிப்பதும் உணவளிப்பதும் ஆகும்.

நூல் திர்மிதி (1083)


முடிவு எடுக்கும் அதிகாரம் கணவனுக்கு உண்டு என்றாலும் குடும்ப நலனுக்காக கணவன் தன் மனைவியிடத்தில் கலந்தாலோசித்து கொள்ள வேண்டும்.

சரியான ஆலோசனைகளைச் சொல்லும் போது கணவன் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நபியவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் தமது மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் ஆலோசனை கேட்டு அவர்கள் முடிவு அடிப்படையில் செயல்பட்டுள்ளார்கள்.  பார்க்க : புகாரி 2734

share this.. https://bit.ly/3uCe5fw

Search This Blog