தவ்ஹீத் ஜமாஅத் video's: பிறை தெரிய வாய்ப்பே இல்லாத நாளில் ச+வுதியில் எப்படி பிறை தெரிகிறது

பிறை தெரிய வாய்ப்பே இல்லாத நாளில் ச+வுதியில் எப்படி பிறை தெரிகிறது

பிறை தெரிய வாய்ப்பே இல்லாத நாளில் ச+வுதியில் எப்படி பிறை தெரிகிறது

CCD Imaging என்றால் என்ன?

இதை தெரிந்துகொள்வதற்கு முன்னால். X-Ray என்றால் என்னவென்று தெரிந்துகொள்வோம். நம் கண்ணால் காண முடிந்த கதிர்வீச்சை ஒளி என்கிறோம். இந்த ஒளியானது சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை, ஊதா போன்ற நிறங்களை உள்ளடக்கிய ஒளியாகும். இந்த ஒளியை தாண்டிய கதிர்வீச்சுக்களை மனித கண்களால் பார்க்க இயலாது. எடுத்துக்காட்டுக்கு அகசிவப்பு (infrared), புற ஊதா(ultra violet), X-Ray, Gamma Ray. 

X-ray என்பது ஆற்றல் மிகுந்த கதிர் வீச்சு ஆகும். இது மனித தசைகளை கூட ஊடுருவக் கூடியது. இதனால் தான் x-ray மூலம் மனித தசைகளுக்கு உள்ளே இருக்கும் எலும்புகளைப் படமெடுக்க முடிகிறது.

infrared என்பது நாம் தினமும் பயன்படுத்தும் பொருள்களில் காணப்படுகிறது. டிவி அல்லது ஏசி ரிமோட்டின் முனையில் ஒரு LED காணப்படும். அந்த LED எரிந்து அதிலிருந்து ஒளி வருவதை நாம் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. அதிலிருந்து வருவது infrared கதிர்வீச்சு ஆகும். அதன்  மூலம் சமிஞ்ஞைகளை அனுப்பி டிவி மற்றும் ஏசியை நாம் இயக்குகிறோம்.

infrared என்பது எல்லா பொருட்களில் இருந்தும் வெளியேறும் ஒரு கதிர்வீச்சு ஆகும். ஒரு பொருளின் வெப்பநிலையை பொறுத்து அதிலிருந்து வெளியேறும் infrared கதிர்வீச்சின் வீரியம் மாறுபடும்.

நிலவில் சூரிய ஒளி படாத பகுதியின் வெப்பநிலையை விட சூரிய ஒளி விழும் பகுதியின் வெப்பநிலை அதிகமாக இருக்கும். தலைபிறையின்போது நிலவின் வட்டத்தில் கருப்பாக இருக்கும் சூரிய ஒளி படாத பகுதியை விட மெலிதாக நூல் போன்று பிறையைக் காட்டும் பகுதி சூரிய ஒளிபட்டு வெப்பநிலை அதிகமானதாக இருக்கும்.

மிக மெல்லிய பிறை இருந்து அது நமது கண்களுக்கு தெரியாத அளவில் இருந்தால் கூட அதிலிருந்து வெளியேறும் infrared கதிர்வீச்சு கண்ணுக்குத் தெரியும் ஒளியை விட 400 மடங்கு அதிக ஆற்றலுடன் பூமிக்கு வரும். ஆனால் மனித கண்களால் infrared கதிர்வீச்சை பார்க்க இயலாது.

CCD imaging என்பது இந்த கதிர்வீச்சை படம் பிடிக்கும் கருவியாகும். ஒரு தானியங்கி தொலைநோக்கியில் இந்த CCD கருவியை மாட்டிவிட்டு விடுவார்கள். அந்த தானியங்கி தொலைநோக்கி தானாக நகர்ந்து நிலவை நோக்கி நிற்கும். அப்போது அதிலிருந்து வெளியேறும் infrared கதிர்வீச்சை CCD கருவி படம் பிடித்து கம்பியூட்டர் திரையில் காட்டும். 

நீங்க படத்தில் (படம்-1) காண்பது அது போன்று எடுக்கப்பட்ட ஒரு படமாகும். இதில் வேடிக்கை என்னவென்றால் CCD கருவியில் படமெடுக்க சூரியன் மறைந்திருக்க வேண்டியதில்லை. சூரியன் நண்பகலில் உச்சியில் பிரகாசிக்கும்போதும் நிலவைப் படமெடுக்க இயலும்.

2018 may 15 அமாவாசை நடக்கும் அந்த வினாடியில் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் நிலவை பட்டப் பகலில் Thierry என்கிற பிரெஞ்சுக்காரர் CCD கருவியில் எடுத்த படத்தை மேலே (படம்-2) பார்க்கிறீர்கள்.

உலகில் எங்குமே பிறை தெரியாத நாளில் பிறை தெரிய வாய்ப்பே இல்லாத நாளில் ச.வுதியில் பிறை பார்க்கப்பட்டதாக தகவல் வருகிறது. ச.வுதியில் நிலவை CCD கருவிகள் மூலமாகவே படம்பிடிக்கிறார்கள்.

சென்ற வருடம் நாங்க CCD படத்தை தான் பார்த்தோம் என்று Head of Taif Observatory. அல் தொக்தூர் ஷரfப் அல் சுfப்யான் அவர்கள் ச.வுதி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி https://twitter.com/saudiatv/status/1509909132756856834

இவ்வருடம் ஷவ்வால் பிறையை கண்ணாலோ தொலைநோக்கியாலோ பார்க்க இயலாது CCD யால் மட்டுமே படமெடுக்க இயலும் என்று சொல்லி இருக்கிறார்.    www.saudigazette.com.sa/article/631689/SAUDI-ARABIA/Astronomical-calculations-indicate-that-Friday-is-first-day-of-Eid-Al-Fitr-expert-says 

ச.வுதியில் கண்களாலும் தொலைநோக்கியாலும் பார்க்க முடியாத நாட்களில் CCD படத்தை தான் பார்க்கிறீர்கள். CCD என்றால் என்னெவென்று விளங்கி இருப்போம். தொலைநோக்கி என்பது நிலவில் இருந்து வரும் ஒளியை அதிகப்படுத்திக் காட்டும். ஆனால் இறுதியில் அந்த ஒளியை நமது  கண்கள்தான் பார்க்கின்றன. ஆனால் CCD என்பது ஒரு கதிர்வீச்சை பதிவு செய்யும் கருவியாகும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தையை படம் எடுக்கிறார்கள். அந்த படத்தைப் பார்த்து குழந்தை பிறந்துவிட்டது என்று யாரும் சொல்வதில். அது போன்ற ஒரு கதிவீச்சு படத்தைப் பார்த்து பிறையை பார்த்துவிட்டோம் என்கிறது ச.வுதி

ச.வுதியில் பின்பற்றப்படுவது உம்முல் குரா எனும் காலன்டர். 99% பிறை தெரியாத நாளில்தான் அங்கே மாதம் ஆரம்பிக்கும். அப்போது CCD யால் படம் எடுத்துவிட்டு நாங்கள் பிறை பார்த்தோம் என்பார்கள். சில நாட்களில் சூரியன் மறைந்த பிறகு படம் எடுக்க இயலாத நிலை இருக்கும் . அப்போது சூரியன் மறையும் முன்னரே படம் எடுத்துவிட்டு பார்த்தோம் என்று சொல்வார்கள். இதுதான் ஜாக் பெரியக்கத்தின் நம்பத் தகுந்த தகவல்.


கணக்கீட்டு பீறை சம்பந்தமான கட்டுரைக்கு மறுப்பு

/////   சூரியன் விடயத்தில் 1400 வருடங்களுக்கு முன்பு நபியவரக்ள் மற்றும் அவர்களை பின்பற்றிய அந்த ஸஹாபாக்கள் சூரியனை பார்த்தும், வானத்தில் ஏற்படும் மாற்றத்தை அடிப்படையாக கொண்டும், நிழலின் அளவுகளை கன்காணித்துமே அன்றாட வேலைகளை முறையாக செய்து வந்தார்கள். ஆனால், இன்று எந்தவொரு பள்ளிவாயலிலும் இந்த நடைமுறை காணக் கூடியதாக இல்லை. மாறாக தொழுகை நேர அட்டவனையையே பின்பற்றுகின்றார்கள். அது முன்கூட்டியே சூரியனின் ஒட்டத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டு எடுக்கப்பட்ட நேர அட்டவனையாகும். அதனை அனைவரும் சரியாகவே காண்கின்றார்கள். அவ்வாறு இருக்க ஏன் அதே மக்கள் சந்திர ஓட்டத்தை வைத்து கணக்கிட்டு எடுக்கப்படும் சரியான நாட்காட்டியை ஏற்றுக்கொள்ள மறுகின்றார்கள்? /////

மறுப்பு :

*தொழுகை நேரங்களை பொறுத்தவரையில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில இலகுவான வழிமுறைகளை காட்டித் தந்துள்ளார்கள் அதாவது ஒரு பொருளின் நிழலின் அளவுகளை வைத்து ஒவ்வொரு தொழுகையும் நேரங்களை அறிந்து கொள்வது. தொழுகை நேரத்தை பொறுத்தவரையில் சூரியனின் ஓட்டத்தை ஒரு வருடம் சரியாக அவதானித்து தொழுகை நேரத்தை குறித்து வந்தால் அடுத்த வருடமும் அதே மாதம் அதே மாதிரியான நேரத்தில் தான் தொழுகை நேரம் அமையும் அதை சாதாரண ஒருவரால் செய்து பார்த்து அறிந்து கொள்ளலாம்.*

*மேலும் தொழுகை நேரத்தை நபிகளார் ஸல் அவர்கள் ஒவ்வொரு நேரமும் நிழலை பார்த்து தொழுதார்கள் என்ற ஆதாரம் எங்கும் இல்லை. அல்லது நபிகளார் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கு உள்ள நேரத்தையும் நிழலை வைத்து நான் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஏவப்படவில்லை மாறாக அதனுடைய நேரத்தை அடையாளப் படுத்துவதற்காகவே நிழலின் அளவை குறிப்பிட்டார்கள்.  ஆகவே இந்த வாதம் பிறை பார்க்காமல் கணக்கிடுவதற்கு ஆதாரம் இல்லை.* 

//// சூரிய கணக்கை ஏற்கும் மக்கள் சந்திர கணக்கை ஏற்கக்கூடாதா?/////

மறுப்பு : 

*சூரிய கணக்கை எடுப்பதற்கு மார்க்கத்தில் சில ஆதாரங்கள் உள்ளது. அதாவது தஜ்ஜாலின் வருகையின் முதலாவது நாள் ஒரு வருடம் நீளமாக இருக்கும் என்று நபி ஸல் கூறிய போது சஹாபாக்கள் அந்த சந்தர்ப்பத்தில் எவ்வாறு தொழுகையை நேரத்தை அறிந்து கொள்வது என்ற கருத்தில் கேட்டதற்கு நபிகளார் ஸல் அவர்களின் பதில் நேரத்தை கணித்து தொழுது கொள்ளுங்கள் (ஹதீஸின் சுருக்கம்)*

*சந்திர ஓட்டத்தை கணக்கிட்டு அமல்களை செய்வதற்கு நபிகளாரின் வாழ்க்கையில் போதுமான ஆதாரங்கள் இல்லை. நபிகளாரின் ஒரு ஹதீஸில் இவ்வாறு இடம் பெற்றுள்ளது "லா நக்துபு வலா நஹ்சுப்" என்று அந்த வார்த்தையின் நேரடி அர்த்தம் நாங்கள் கணக்கிட மாட்டோம் மேலும் எழுத மாட்டோம். இதிலிருந்து விளங்குகிறது நபிகளார் அவர்களுக்கு கணக்கிட தெரியும் ஆனால் கணக்கிட மாட்டோம் என்ற கருத்து விளங்குகிறது. 

மேலும் நபிகளார் அவர்களுக்கு சந்திர ஓட்டம் பற்றி தெரியாது என்று கூறுவது அடிப்படை அற்றது ஏனென்றால் நபிகளார் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள் ஒரு மாதத்திற்கு 29 நாட்கள் அல்லது 30 நாட்கள். வானவியல் அறிவு உள்ளவர் ஒருவருக்கு மாத்திரமே இவ்வாறு தெளிவாக சொல்ல முடியும். இல்லையென்றால் 28, 29, 30, 31 என்று சொல்லி இருப்பார்கள். 

///////"அதைப்பார்த்து நோன்பு வையுங்கள் அதைப் பார்த்து நோன்பை விடுங்கள்.”

என்ற ஹதீஸாகும். இதனை ஒட்டிய பல ஹதீஸ்களும் உள்ளன. இந்த ஹதீஸை பொருத்தமட்டில் பிறையைப் கண்களால் பார்ப்பது நோக்கமில்லை மாறாக அதைக் கொண்டு ஒரு மாதத்தில் ஆரம்ப திகதியை சரியாக அறிந்து கொள்வதே நோக்கமாகும். அதுவே நிதர்சனமான உண்மையாகும். இதை புரிந்து கொள்வதிலே மக்கள் தவறிழைக்கிறார்கள்.  //////

மறுப்பு :

*1400 வருடங்களாக சஹாபாக்கள் தாபியீன்கள் இன்று வரை வந்த அஃலுஸ்ஸுன்னா இமாம்கள் அனைவரும் பிறையைக் கண்டு நோம்பு வையுங்கள் பிறையை கண்டு நோன்பு விடுங்கள் என்ற நபிகளாரின் ஏவலை நீங்கள் விளங்கியதற்கு மாற்றமாக விளங்கியுள்ளனர். நபிகளாரின் ஏவலை செய்வது மார்க்கமாகும் (இபாதத்தாகும்) என்பது அடிப்படை விதி ஆகும். பிறையைப் பார்ப்பது இபாதத் இல்லை என்பது ஆதாரமில்லாத உங்களது பிழையான புரிதலாகும்.* 

//////இந்த ஹதீஸின் தொடரிலே வரும்: "உங்களுக்கு மேக மூட்டம் மறைக்கப்பட்டால் முப்பதாக அதை பூர்த்தி செய்யுங்கள்” என்ற வாசகத்தையும் இந்நாட்காட்டியை மறுப்போர் ஆதாரமாக கொள்கின்றார்கள். 

இதிலே குறிப்பிடப்பட்டுள்ள "கும்ம அலைக்கும்" என்பதன் மூலம் 'மேக மூட்டம்' என தவறாக புறிந்துள்ளார்கள். எனவேதான் அதனை அடைப்புக்குறியினுள் கூட எழுதுவார்கள். மாறாக அதுதான் "உர்ஜுனுல் கதீமிற்கு' அடுத்து வரும் நாளாகும். இது மாதத்தின் இறுதி நாளும் ஆகும். அத்தினமன்று சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே கோட்டில் இருப்பதால் அது அமாவாசை. இது 24 மணித்தியாலத்தினுள் முழு உலகத்தையும் உள்ளடக்கும். ஆனால் மேக மூட்டத்திலான மறைவானது முழு உலகத்தையும் உள்ளடக்காது. இதனையே கணக்கீட்டு முறை தெளிவாக முன்வைக்கின்றது.///////

மறுப்பு :

அரபு இலக்கணம் தெரிந்த அனைவருக்கும் புரியும் "கும்ம அலைக்கும்" என்பது 'மேக மூட்டத்தையே குறிக்கும். ஒரு வாதத்திற்கு நீங்கள் கூறும் அர்த்தத்தையே வைத்துக் கொண்டால் அதாவது "உர்ஜுனுல் கதீமிற்கு' அடுத்து வரும் நாள் என்ற அர்த்தம் சரியானது என்றால் 12 மாதமும் 30 நாளில் தான் முடிக்க வேண்டி வரும் ஏனென்றால் நபிகளாரின் ஏவல் மேகமூட்டம் ஏற்பட்டால் 30 ஆக பூர்த்தி செய்யுங்கள். "உர்ஜுனுல் கதீமிற்கு' அடுத்து வரும் நாள் ஒவ்வொரு மாதமும் வரும் ஆகவே ஒவ்வொரு மாதமும் ஹதீஸின் அடிப்படையில் 30 நாளாக பூர்த்தி செய்ய வேண்டி வரும். 

/////அக்கால சமுதாயமானது உம்மி சமுதாயமாகவே இருந்தது. எழுதவோ, கணக்கிடவோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. இன்னும் அறிவியல் துறை முன்னேற்றம் அக்காலத்தில் காணப்படவில்லை. அவ்வாறான சூழ்நிலையில் அவர்களிடம் இருந்த ஒரே ஒரு கருவி "கண்களால் பார்ப்பது" மாத்திரமே! இதனைத் தவிர வேறு எந்த முறையும் அப்போது இருக்கவில்லை. //////

மறுப்பு :

*எழுதவோ, கணக்கிடவோ அவர்கள் அறிந்திருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நபிகளாரின் சமுதாயத்தின் மீது வைக்கப்படும் பகிரங்கமான அவதூறாகும். காரணம் நபிகளார் ஸல் அவர்களின் சமூகம் வாரிசு சொத்து பங்கீடு கணக்கை மிகத் துல்லியமாக நடைமுறைப்படுத்திய சமூகம், இன்று விஞ்ஞானம் வளர்ந்த காலத்தில் கூட சொத்துப்பங்கிட்டு கணக்கை சரியாக செய்ய தெரியாத பலர் உண்டு. அந்த சமூகத்திற்கு கணக்கீட்டு அறிவு இருந்ததற்கு இது மிகப்பெரும் ஆதாரம்.*

*மேலும் நபிகளாரின் சமூகம் குர்ஆனை எழுதியது மேலும் பல நாட்டு மன்னன்களுக்கு பல கடிதங்களை எழுதியுள்ளார்கள், இன்னும் பல ஒப்பந்தங்கள் எழுதப்பட்டுள்ளது இது அந்த சமூகத்திற்கு எழுத்து அறிவு இருந்தது என்பதற்கு போதுமான ஆதாரமாகும்.*

 <<<<நாட்காட்டி என்பது முன்கூட்டியே அறிந்து, தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்றாகும். அதற்குதான் அல்லாஹுத்தஆலா மனிதனுடைய ஏற்பாடு, குறைபாடு இல்லாத துள்ளியமான கணக்கீட்டை வைத்துள்ளான். அதனால் தான் 100 வருடங்களுக்கு அப்பால் வரும் சூரிய, சந்திர கிரகனத்தை சொல்லக் கூடியதாக உள்ளது. ஆனால் மக்களுக்குத்தான் நாளைய தினம் நோன்பா? அல்லது ஷவ்வால் முதலாம் திகதியா (பெருநாளா) என்று கூட தெரியாமல் உள்ளது !>>>

மறுப்பு :

*நாளைய தினம் நோன்பா அல்லது பெருநாளா என்ற கேள்வி நபிகளாரின் சமுதாயத்திலும் இருந்தது அதை பிறை பார்த்து பிறையைக் கண்டால் நாளை பெருநாள் அல்லது மேகமூட்டமாக இருந்தால் நோன்பை முப்பதாக பூர்த்தி செய்துவிட்டு அடுத்த நாள் பெருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த வழிமுறையே 1400 வருடமாக முஸ்லிம் சமூகம் பின்பற்றி வருகிறது. நபிகளார் ஸல் அவர்களின் வழிமுறையை பற்றிப் பிடித்துக் கொள்வதே ஒரு முஃமினின் கடமையாகும்.*

<///////கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் பிறையை பார்ப்பதனாலும் ஒரு பெருநாள் தினம் மூன்று நாளாக கொண்டாடப்பட்டு வரும் ஒரு அவல நிலை உருவாகியுள்ளது. இதனை புரிந்து கொள்ளாததன் காரணமாகவே நமக்கு மத்தியில் மூன்று பிளவுகள் ஏறப்ட்டுள்ளது. இருந்த போதிலும் மக்கள் எல்லோரும் ஒன்றுபடக்கூடிய ஒரே வழிமுறை இந்த சரியான நாட்காட்டியே ஆகும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் மறுமைநாள் வரை நாம் ஒற்றுமைப்படவே முடியாது.//////>

மறுப்பு :

*நான் அறிந்தவரை உங்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க நாட்டில் சில இடங்களில் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இன்றுவரை ஒரு பிறையின் கீழ் முழு சமுதாயத்தையும் ஒன்றுபடுத்த முடியவில்லை. கணக்கிட்டு பிறைக்கு போதுமான ஆதாரம் இல்லாததே இதற்கு காரணம்.*

*நபிகளார் ஸல் அவர்களின் காலத்தில் வெற்றிக் கண்ணால் பிறையைப் பார்த்து மாதத்தை ஆரம்பித்து உள்ளார்கள். பிறை பிறந்து 15 மணித்தியாலத்தில் பின்னே வெற்றுக் கண்ணுக்கு விளங்கும் என்பது அறிவியல் உண்மை. ஆகவே நபிகளார் ஸல் அவர்கள் பிறை பிறந்த உடனே அதை முதல் பிறையாக கணிக்கவில்லை மாறாக வெற்றி கண்னுக்கு தெரிந்த பின்னே முதல் பிறையாக எடுத்துள்ளார்கள். இந்த சுன்னாவிற்கு நேர் முரணாக உங்களுடைய பிறை அமைந்துள்ளது. அதாவது பிறை பிறந்த உடனே நீங்கள் முதல் பிறையாக கணிக்கிறீர்கள்.*

*மேலும் சில மாதங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னே நீங்கள் மாதத்தை ஆரம்பித்து விடுகிறீர்கள். உ+ம் ரமலான் மாதம் ஆரம்பிக்க உள்ளோம் என்று வைத்துக் கொண்டால். UTC 2am விற்கு வேறொரு நாட்டில் பிறை பிறக்கிறது என்று வைத்துக் கொண்டால் எமது நாட்டில் காலை ஏழு 7:30 மணி. உங்களுடைய கருத்துப்படி நாங்கள் நோன்பு நோற்க வேண்டும். எமது ஸஹருடைய நேரம் காலை 5 மணி ஆகவே ரமலான் மாதம் ஆரம்பிப்பதற்கு முன்னே நாங்கள் நோன்பு வைத்திருக்கிறோம். ஆகவே ரமலான் மாதம் ஆரம்பிப்பதற்கு இரண்டரை மணித்தியாலத்திற்கு முன்னே நோன்பைநோக்க வழி காட்டுகிறீர்கள்!! அல்லாஹ் கூறுகிறான் ...எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்க வேண்டும் (2:185) இந்த குர்ஆன் வசனத்திற்கு முரணாக உங்களுடைய வழிமுறை உள்ளது.*

மேலும் உங்களைப் போன்று கணக்கிட்டுப் பிழையை பின்பற்றும் சிலர் கூறியிருக்கிறார்கள் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிடித்த நோன்பு அல்லது பெருநாள் கணக்கீட்டு பிறை முறைப்படி இரண்டாவது அல்லது மூன்றாவது பிறை என்று இது எவ்வளவு பாரதூரமான விடயம் நபிகளார் ஸல் அவர்களை ஒருவர் பிழை கண்டால் அவர் எவ்வாறு இந்த மார்க்கத்தில் நேர்வழியில் இருக்க முடியும்.

நபிகளார் ஸல் காலத்து இறுதி 10 வருட உங்களது கணக்கீட்டு கலண்டரை தருவீர்கள் என்றால் நபிகளார் பிடித்த நோன்பிற்கும் அல்லது கொண்டாடிய பெருநாளுக்கும் உங்களுடைய கலண்டருக்கும் பாரிய முரண்பாட்டை நிரூபிக்க முடியும். 

மேலும் பிறைக் கணக்கீடு என்பது சமீபத்தில் விஞ்ஞான வளர்ச்சியின் பின் உண்டானது என்பது மிகத் தவறான கருத்தாகும். காரணம் புதிதாக ஸ்கொட்லேண்ட் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிறை கணக்கிட்டு முறையானது ஏறத்தாழ 10000 வருடத்திற்கு முன் பயன்படுத்தியது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் (https://www.downtoearth.org.in/news/oldest-calendar-41802). இது நபிகளாரின் காலத்திற்கு ஏறத்தாழ 8500 வருடங்கள் முந்தியது. மேலும் இன்னும் பல பிறை கணக்கிட்டு முறைகள் நபிகளாரின் காலத்திற்கு முன் பயன்படுத்தியதற்கு அறிவியலில் பல ஆதாரங்கள் உள்ளது. நாம் பிறை கணக்கீடு புதிதாக பயன்படுத்துகின்றோம் என்ற வாதம் பிழையானது. இந்த முறைகள் நபிகளார் ஸல் காலத்திலும் இருந்திருக்கலாம் அதனால் தான் நபிகளார் பிறை விடயத்தில் கூறினார்கள் நாம் கணக்கிட மாட்டோம் நாம் எழுத மாட்டோம் என்று.

துல்லியமாக கணக்கிடுகிறோம் என்ற பெயரில் இந்தியாவில் தமிழ் பேசும் மக்கள் இடையே இரண்டு கணக்கிட்டு காலண்டர்கள் உள்ளது இரு காலண்டர்களும் சில இடங்களில் முரண்படுகிறது. இதுவே ஒரு ஆதாரம் துல்லியம் இல்லை என்பதற்கு. 

எப்படி அஃலுஸ்ஸுன்னாக்களாகிய சஹாபாக்களும் நேர்வழி பெற்ற இமாம்களும் அல் குர்ஆனையும் ஹதீஸையும் அணுகினார்களோ அந்த விதத்தில் நாமும் குர்ஆன் ஹதீஸை அணுகினால் முரண்பாடுகள் குறைவாக இருக்கும். உங்களுக்கும் எங்களுக்கும் நேர்வழியை அல்லாஹ் காட்டுவானாக. 

<<<<ஒவ்வொருவரின் ஆய்வு என்று வருகின்றபோது 

உதாரணத்துக்கு:-    *“லா நக்துபு வலாநஹ்ஸுபு”*        என்ற ஹதீஸை நான் சொல்லுவது அந்த காலத்தில் எந்த ஒரு அறிவியல் சாதனங்களும் இல்லாத பட்சத்தில் (சந்திரன்)பிறையை சம்மந்தப்படுத்தி பேசும் போது வானவியல் கணக்கை நாங்கள் அறிய மாட்டோம் என்று.நீங்கள் சொல்லுவது கணக்கிடமாட்டோம் என்று.>>>>

மறுப்பு :

*ஏறத்தாழ நபிகளாரின் காலத்திற்கு 8,500 வருடங்களுக்கு முன்னே பிறை கணக்கிட்டு முறைகளை பாவித்ததற்கு சில ஆதாரங்களை பதிந்து இருந்தேன். மேலும் நபிகளாரின் காலத்திலும் வேறு சமூகங்கள் பிறை கணக்கீட்டை பயன்படுத்தியதற்கு வரலாற்று குறிப்புகள் இருக்கின்றது. இந்த காரணத்திற்காகத்தான் நபிகளார் ஸல் அவர்கள் *“லா நக்துபு வலாநஹ்ஸுபு”* *என்று கூறி இருக்கலாம் என்பது எங்களுடைய வாதம். அறிவியல் சாதனங்கள் இல்லாமலே அன்றைய சமூகம் பிறை கணக்கீட்டை செய்து இருக்கிறார்கள் என்பது வரலாற்று உண்மை.*

*பிறை கணக்கீடு செய்ய முடியுமா இல்லையா என்பது அல்ல எமது வாதம் மாறாக பிறை கணக்கிட்டு அடிப்படையில்  அமல்களை செய்வது நபிகளாரின் சுன்னாவிற்கு மாற்றமானது என்பது எமது நிலைப்பாடு.*

*என்னுடைய பிரதான குற்றச்சாட்டு *“லா நக்துபு வலாநஹ்ஸுபு”* *என்று பிறை சம்பந்தமாக வரும் ஹதீஸின் வாக்கிய பிரயோகத்திற்கு அகராதி ரீதியாகவும் இலக்கண ரீதியாகவும் சரியான மொழிபெயர்ப்பு "நாங்கள் கணக்கிட மாட்டோம் நாங்கள் எழுத மாட்டோம்" என்பதுதான். ஹதீஸில் வரும் இந்த வசனத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கும் பொருள் தவறானதாகும். கணக்கிட்டுப் பிறையை நியாயப்படுத்துவதற்காக நீங்கள் இந்த ஹதீஸை அர்த்தத்தை திரிவுபடுத்துள்ளீர்கள். நீங்கள் மட்டுமல்ல கணக்கிட்டுப் பிறையை நியாயப்படுத்தும் பலர் ஹதீஸ்களுக்கு தவறான அர்த்தங்களை கொடுத்து தங்களுடைய வாதங்களை நிறுவ முயற்சிக்கின்றனர்.*

*குர்ஆன் ஹதீஸ் இடம்பெற்றுள்ள வசனங்களை தங்களுடைய கருத்தை நியாயப்படுத்துவதற்காக இவ்வாறான பிழையான அர்த்தங்களை கொடுப்பவர்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும்.*

 *“லா நக்துபு வலாநஹ்ஸுபு”* *என்ற வசனத்திற்கு நாம் குறிப்பிட்டு இருக்கும் அர்த்தம் பிழை என்றால் அகராதி ரீதியாக அல்லது இலக்கண ரீதியாக நிறுவுவது உங்களுடைய கடமை.*

-----------------

<<<< அடுத்தது UTC சம்மந்தமாக செய்தியை சொன்னீர்கள். என்னுடைய பார்வையில் நீங்கள் பிழையாக கணித்துள்ளீர்கள் போல் தோனுது. ஏனன்றால் நான் மூன்று வருடங்களை எடுத்து பார்த்தேன். உலகத்தில் எங்கையாவது சந்திர மாதம் பிறந்ததுக்கு பிறகுதான் அப்படியே சுபஹை அடைகிறபோது நாள் ஆரம்பிக்கின்றது.  இதை மட்டும் உங்களால்   முடிந்தால்  Hijri calenderல் utc பிழையாகின்ற எதாவது ஒரு மாதத்தை மென்சன் பன்னி எப்படி பிழையாகின்றது என்று காட்டுங்களேன் பார்ப்போம்.(எனது தேடலுக்காக) இத்துடன் முடிக்கிறேன்.>>>>>>

மறுப்பு : 

*UTC நேர அடிப்படையில் பிறை உதிக்கும் நேரத்தை வைத்து இந்த ரமலான் மாதத்தை எடுத்துக் கொண்டால் சில முரண்பாடுகளை காண முடிகின்றது. அதாவது நீங்கள் ஆதரிக்கும் Universal Hijiri calendar குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஷவ்வால் மாதத்தின் பிறை 20-4-2023 வியாழக்கிழமை UTC 4:12 மணிக்கு உதிக்கிறது. இலங்கை நேரப்படி காலை 9:42 மணிக்கு உதிக்கிறது.*

*பிரச்சனை என்னவென்றால் மொரோக்கோ கஷ்பலன்ஸா நேரப்படி 4:12 மணிக்கு பிறை உதிக்கிறது (UTC நேரமும் மொரோக்கொ கஷ்பலன்ஸா நேர்மும் ஒரே நேரம் (Casablanca UTC 0:00)). அங்கே பஜ்ர் 4:39, சூரிய உதயம் 6:09 ஆகவே உங்களுடைய கருத்துப்படி பார்த்தால் நாம் மொரோக்கோ கஷ்பலன்ஸாவில் இருந்தால் வியாழக்கிழமை நோன்புப் பெருநாளை கொண்டாட வேண்டும். இலங்கையில் 21-04-2023 வெள்ளிக்கிழமை கணக்கிட்டு அடிப்படையில் நோன்புப் பெருநாளை கொண்டாட வேண்டும். இந்த பிரச்சினை மொரோக்கோ நாட்டிற்கு மாத்திரமில்லை ஏறத்தாழ இன்னும் 10 நாடுகளிலும் (UTC -) பல நாடுகளுக்கும் வியாழக்கிழமை நோன்புப் பெருநாளை கொண்டாட வேண்டும்.*

*சர்வதேச ஹிஜ்ரி கலண்டர் என்று உங்களுடைய காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேசம் என்றால் உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் உங்களுடைய கலண்டர் தீர்வு இருக்க வேண்டும். உங்களுடைய கலண்டரில் வெள்ளிக்கிழமையே பெருநாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. எமது நாட்டை விட 4:30 மணித்தியாலம் பிந்தக்கூடிய சில நாடுகளில் உங்களுடைய கணக்கிட்டு அடிப்படையில் வியாழக்கிழமை பெருநாளை கொண்டாட வேண்டும். ஆகவே சர்வதேசத்திற்கு பிறை தீர்வு உங்களுடைய காலண்டரில் இல்லை.*

*சமீபத்தில் நடந்த பிறை கலந்துரையாடலில் வைத்து உங்களுடைய தரப்பு வைத்த ஒரு வாதம் எப்படி வெள்ளிக்கிழமை எல்லா நாடுகளிலும் ஒரே நாளாக குறிப்பிட்ட நேர வித்தியாசத்தில் வருகிறதோ அதேபோன்றுதான் பெருநாளும் அல்லது நோன்பு ஆரம்பிப்பதும் வர வேண்டும், இதற்கு மாற்றமாக இந்த வருடம் நோன்புப் பெருநாள் கணக்கிட்டு அடிப்படையில் எமக்கு சமீபத்தில் உள்ள நாட்டில் வியாழக்கிழமையும் எங்களுக்கு வெள்ளிக்கிழமையும் வர இருப்பது உங்களுடைய கருத்துக்கு முரணாக உள்ளது.*

*நீங்கள் மூன்று வருட காலண்டரை பார்த்த வகையில் நான் கூறும் பிரச்சினை இல்லை என்கிறீர்கள். ஆனால் இந்த மாதத்திலே இந்த பிரச்சினை வருகிறது இவ்வாறு மூன்று வருட காலண்டர்களையும் ஆராய்ந்தால் இன்னும் பல பிரச்சினைகள் தென்படலாம்.  நடுநிலையாக சிந்தித்தால் இந்த உதாரணங்களை போதுமென்று நினைக்கிறேன்.*

---------------

<<<<<*குறிப்பு :  எனது முன்னைய article ஐ பகிர்வதானால் முழுமையாக பகிர்ந்துவிட்டு உங்கள் மறுப்புக்களை தெரிவிக்கவும்.*>>>>>

மறுப்பு :

உங்களுடைய கட்டுரையை முழுமையாக பதிவிட்டு அதற்கு மறுப்பை பதிவிடுவது சாத்தியமற்றது. காரணம் பொதுவாக வீடியோ அல்லது எழுத்து வடிவில் மறுப்பு வெளியிடும் பொழுது எதிர்த்தரப்பின் முக்கியமான கருத்தை பதிந்து அதற்கு மறுப்பு பதிவதே வளமை. அந்த அடிப்படையில் தான் உங்களுடைய முக்கியமான கருத்தை பதிந்து அதற்கு கீழால் மறுப்பு அளித்து இருக்கிறேன். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

short link https://rb.gy/ccnd7

 பிரை தொடர்புடைய மேலும் சில கட்டுரைகளை காண இங்கே கிளிக் செய்யவும் 



Search This Blog