தவ்ஹீத் ஜமாஅத் video's: பெண்களுக்கு கத்னா செய்யலாமா?

பெண்களுக்கு கத்னா செய்யலாமா?

ஆண்களின் பாலுறுப்பில் இருக்கும் தேவையற்ற தோல்பகுதியை அகற்றுவதற்குப் பெயர் தான் கத்னா என்பது. இவ்வாறு செய்வதால் பாலுறுப்பினுள் விந்தோ சிறுநீரோ தங்கும் நிலை ஏற்படாது. இதன் மூலம் பாலுறுப்பு சுத்தமாக வைத்துக்கொள்ளப்படுவதால் ஏராளமான நோய்கள் அண்டுவதில்லை.

இல்லறவாழ்வின் போது கணவன் தன் மனைவியை திருப்தியடையச் செய்வதற்கு கத்னா காரணமாக உள்ளது. அறிவுப்பூர்வமான இந்த வழிமுறை கடைபிடிக்குமாறு இஸ்லாம் ஆண்களுக்குக் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக்கொள்வது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்

அறி : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி (5889)


பெண்களுக்கு கத்னா செய்யலாமா?

சிலர் அறிவின்மையினால் பெண்களுக்கும் கத்னாவை செய்துவிடுகிறார்கள். அதாவது பெண்களின் இல்லற இன்பத்தை குறைப்பதற்காக அவர்களின் பாலுறுப்பில் இன்பத்தை உணரும் பகுதியின் முனையை வெட்டிவிடுவார்கள்.

இறைவன் அளித்த பாக்கியமான இல்லற இன்பத்தை முழுமையாக பெண்கள் அடையமுடியாத துர்பாக்கியமான நிலை ஏற்படுகிறது. இவ்வாறு செய்யுமாறு இஸ்லாம் கூறவில்லை.

பெண்களுக்கும் கத்னா செய்ய வேண்டும் என்றக் கருத்தில் சில ஹதீஸ்கள் வருகிறது. அவற்றை அறிவிப்பவர்கள் பலவீனமானவர்களாக இருப்பதால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

கத்னா செய்தல் ஆண்களுக்கு சுன்னத்தாகும். பெண்களுக்கு சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : சத்தாத் பின் அவ்ஸ் (ரலி),

நூல் : அஹ்மத் (19794)

இந்த ஹதீஸில் வரும் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் பலவீனமானவர். இவர் அதிகமாக தவறிழைப்பவர் என்று இமாம் இப்னு ஹஜர் அவர்களும் இவர் வலிமையானவர் இல்லை என்று யஹ்யா பின் முயீன் அவர்களும் கூறியுள்ளார்கள்.

பைஹகீ இமாம் அவர்கள் தொகுத்த அஸ்ஸ‚னனுல் குப்ரா என்ற நூலில் இதே ஹதீஸ் இப்னு சவ்பான் என்பவர் வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு சவ்பான் பலவீனமானவர். மேலும் இச்செய்தயில் அல்வலீத் பின் வலீத் என்வரும் இடம்பெருகிறார். இவரும் பலவீனமானவர். இந்த ஹதீஸை இமாம் பைஹகீ அவர்கள் பதிவு செய்துவிட்டு இது பலவீனம் என்பதை அவர்களே தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ஏழாவது நாள் அன்று கத்னா செய்வது நபிவழியா?

நபி (ஸல்) அவர்கள் ஹஸன் ஹுஸைன் ஆகிய இருவருக்கும் ஏழாவது நாள் அன்று கத்னா செய்தார்கள் என்று ஒரு ஹதீஸை இமாம் பைஹகீ அவர்கள் அஸ்ஸ‚னனுல் குப்ரா என்ற தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

இச்செய்தியில் முஹம்மத் பின் அல்முதவக்கில் என்பவர் இடம்பெறுகிறார்கள். இவர் அதிகமாகத் தவறிழைப்பவர் என்று பல அறிஞர்கள் குறைகூறியுள்ளார்கள். இச்செய்தியை வலீத் பின் முஸ்லிம் என்ற அறிவிப்பாளரிடமிருந்து இவரைத் தவிர வேறுயாரும் அறிவிக்கவில்லை. எனவே இது பலவீனமான செய்தியாகும்.

எப்போது கத்னா செய்ய வேண்டும்?

குறிப்பிட்ட வயதிற்குள் கத்னா செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. கத்னா செய்வதினால் ஏற்படும் பல நன்மைகளை கவனித்துப் பார்க்கும் போது சீக்கிரமாக கத்னா செய்வது நல்லது என்று தெரிகிறது.

குழந்தைக்கு அளவிற்கு அதிகமாக நகம் வளரும் போது உடனே அதை அகற்றிவிடுகிறோம். ஆணுறுப்பின் முன்பகுதி தோலும் தேவையில்லாத ஒன்று தான். எனவே நகத்தை உடனடியாக அகற்றிவிடுவது போல் ஆணுறுப்பின் முன்தோலை அகற்றி சீக்கிரமாக கத்னா செய்வது உடலுக்கு ஆரோக்கியமானது.

கத்னா செய்தால் விழா எடுக்க வேண்டுமா?

கத்னா செய்வதற்காக பெரும் பொருட் செலவில் விருந்துகளை ஏற்பாடு செய்து கத்னா செய்யப்பட்டவர்களை பூமாலைகளால் அலங்கரித்து தெருக்களில் அழைத்து வரும் வழக்கம் தமிழகத்தில் இருக்கிறது. இதற்கு இஸ்லாத்தில் எள்ளவு கூட அனுமதியில்லை.

ஒரு நபிவழியை செய்வதற்கு இவ்வளவு ஆடம்பரங்களை செய்து பகிரங்கப்படுத்துவது குற்றமாகும். நகத்தை வெட்டுவதும் அக்குள் முடிகளை களைவதும் கத்னாவைப் போன்று ஒரு சாதாரண சுன்னத்தாகும். ஆனால் யாரும் நகத்தை வெட்டுவதற்கு விழாக் கொண்டாடுவதில்லை. முடிகளை களையும் போது அதை ஊருக்கெல்லாம் பகிரங்கப்படுத்துவதும் இல்லை. மறைக்க வேண்டிய விஷயத்தை பரப்புகின்ற அசிங்கத்தை செய்துகொண்டிருக்கிறார்கள்.

பெண் பருவ வயதை அடைந்து விட்டால் அதையும் ஊர் முழுவதும் பரப்புகிறார்கள். சடங்கு மஞ்சள் தண்ணீர் ஊத்துதல் என்று பலவிதமான மாற்றார்களின் வழிமுறைகளையும் கடைபிடிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். இதை செய்பவர்கள் நரகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே இதை விட்டும் நாம் அனைவரும் விலக வேண்டும்.
நூல்கள்: இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

-----------------
(கத்னா எனும்) விருத்தசேதனம் பற்றி  ளயீஃப் - பலவீனமான செய்தி

உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனா நகரத்தில் இருந்த ஒரு பெண்மனி, பெண்களுக்கு (கத்னா எனும்) விருத்தசேதனம் செய்பவராக இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “ஒட்ட நறுக்கி விடாதே! (மேலோட்டமாக நறுக்குவாயாக!); இதுவே பெண்ணுக்கும் நல்லது; அவளின் (வருங்கால) கணவனுக்கும் பிடித்தமானது” என்று கூறினார்கள்.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி உபைதுல்லாஹ் பின் அம்ர் —> அப்துல்மலிக் என்ற அறிவிப்பாளர்தொடரிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பலமான செய்தியல்ல. இது முர்ஸலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(மேற்கண்ட செய்தியில் இடம்பெறும்) முஹம்மது பின் ஹஸ்ஸான் என்பவர் யாரென்று அறியப்படாதவர் ஆவார். எனவே இந்தச் செய்தி பலவீனமானதாகும்.

(அபூதாவூத்: 5271)

بَابُ مَا جَاءَ فِي الْخِتَانِ

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيُّ، وَعَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الرَّحِيمِ الْأَشْجَعِيُّ، قَالَا: حَدَّثَنَا مَرْوَانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ، قَالَ عَبْدُ الْوَهَّابِ الْكُوفِيُّ: عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ الْأَنْصَارِيَّةِ،

أَنَّ امْرَأَةً كَانَتْ تَخْتِنُ بِالْمَدِينَةِ فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَنْهِكِي فَإِنَّ ذَلِكَ أَحْظَى لِلْمَرْأَةِ، وَأَحَبُّ إِلَى الْبَعْلِ»

قَالَ أَبُو دَاوُدَ: رُوِيَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ عَبْدِ الْمَلِكِ، بِمَعْنَاهُ وَإِسْنَادِهِ قَالَ أَبُو دَاوُدَ: «لَيْسَ هُوَ بِالْقَوِيِّ وَقَدْ رُوِيَ مُرْسَلًا» قَالَ أَبُو دَاوُدَ: وَمُحَمَّدُ بْنُ حَسَّانَ مَجْهُولٌ وَهَذَا الْحَدِيثُ ضَعِيفٌ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4587.
Abu-Dawood-Shamila-5271.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4589.


إسناد ضعيف فيه محمد بن حسان وهو مجهول (جوامع الكلم)

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-38579-முஹம்மது பின் ஹஸ்ஸான் என்பவர் பற்றி, இவர் யாரென்று அறியப்படாதவர் என அபூதாவூத்,

 இப்னு அதீ,

 தஹபீ,

 இப்னு ஹஜர்

போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/539)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

இந்த செய்தியின் அனைத்து அறிவிப்பாளர்தொடர்களும் பலவீனமாக இருந்தாலும் இது பலதரப்பட்ட அதிகமான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது என்பதின் அடிப்படையில் அல்பானீ அவர்கள் இதை ஸஹீஹ் (லிஃகைரிஹீ) என்று கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-722)

(இந்தக் கருத்தில் வரும் செய்திகளை சிலர் சரியானது என்று கருதுவதால் பெண்களுக்கும் கத்னா செய்வது அவசியம் என்று சிலரும், சுன்னத் என்று சிலரும், கட்டாயம் இல்லை; விரும்பினால் செய்துக் கொள்ளலாம் என்று சிலரும் கூறியுள்ளனர்)

பெண்களின் பிறப்புறுப்பில் உணர்வுகளின் முடிச்சு என்று கூறப்படும் பகுதியை வெட்டி எடுப்பதை பெண்களின் கத்னா என்கின்றனர்.
ஷாபி இமாம் உள்ளிட்ட பலர் ஆண்களுக்கும், பெண்களுக்கும் கத்னா கடமை என்கின்றனர்.
அபூஹனீஃபா

இமாம், மாலிக் இமாம் ஆகியோர் உள்ளிட்ட பலர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அது சுன்னத் என்று கூறுவதாக நவவீ  அவர்கள் குறிப்பிடுகிறார்.
பெண்களுக்கும் கத்னா செய்ய வேண்டும் என்று வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமாக உள்ளன. அதனால் பெண்கள் கத்னா செய்வது இஸ்லாமிய வழி அல்ல. மேலும் மருத்துவ ஆய்வு ரீதியிலும் இது சரியானதல்ல என்று கூறப்பட்டுள்ளது.

காரணம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலுணர்வை அல்லாஹ் வழங்கியுள்ளான். அந்த உணர்வைக் கொண்டே உலகம் நிலை பெற்றுள்ளது. அவர்கள் உடலுறவின் மூலம் அந்த இச்சையைத் தணித்துக் கொள்கின்றனா். பெண்களுக்கு கத்னா செய்வதால் அவர்கள் அந்த பாக்கியத்தை இழந்து விடுகின்றனர். இல்லறத்தில் அவர்கள் பூரண திருப்தியை அடைவதில்லை. அடைய முடியாது. ஆண்களுக்கு கத்னா செய்வது அவா்களின் அந்த உணர்வுக்குத் தடையாக இராது. அதற்கு உறுதுணையாக இருக்கும். இதற்கு மேல் விளக்கமாக இதை எழுதஇயலாது. இறைவன் எந்த நோக்கத்திற்காக பிறப்புறுப்புக்களை அமைத்துள்ளானோ அந்த நோக்கத்தில் பெரும்பகுதி பெண்களுக்கு கத்னா செய்வதால் அடிபட்டுப் போகின்றது. அல்லாஹ் வழங்கிய பாக்கியத்தை அழித்துக் கொள்வது என்ற அடிப்படையில் பார்க்கும் போது பெண்களுக்கு கத்னா செய்வது கொடூரமானது என்று அறியலாம்.

1 . இந்தக் கருத்தில் உம்மு அதிய்யா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-5271 , ஸுனன் குப்ரா பைஹகீ-17559 , 17560, ஷுஅபுல் ஈமான்-8278 , முவள்ளிஹு அவ்ஹாம்-,

2 . ளஹ்ஹாக் பின் கைஸ் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹாகிம்-6236 .

3 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-2253 .

4 . இப்னு உமர்  (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-6178 .
--------------------
 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கத்னா எனும்) விருத்தசேதனம் செய்வது ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) (முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 26468)

حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، عَنْ حَجَّاجٍ، عَنْ رَجُلٍ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«الْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ مَكْرُمَةٌ لِلنِّسَاءِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-26468.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-25883.


இதன் அறிவிப்பாளர்தொடரில் அபுல்மலீஹ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மனிதர் யாரென அறியப்படாதவர்.

மேலும் ராவீ-11282-ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் நம்பகமானவர் என்றாலும் அதிகம் தவறிழைப்பவர்; தத்லீஸ் செய்பவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/356)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

வேறு சில நூல்களிலும் இந்தச் செய்தி ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) வழியாக வந்துள்ளது. அனைத்திலும் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் இடம்பெறுகிறார்; மேலும் இவர் வழியாக பலதரப்பட்ட அறிவிப்பாளர்தொடர்கள் வந்திருப்பதால் அவை அனைத்தும் பலவீனமான அறிவிப்பாளர்தொடர்களாகும் என்று ஷிஹாபுத்தீன் பூஸீரீ  இமாம் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: இத்ஹாஃபுல் கியரா-1/293)

1 . இந்தக் கருத்தில் ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-26468 , அல்அதப் லிஇப்னி அபீஷைபா-, அல்இயால்-, அத்தரஜ்ஜுல்-, அல்முஃஜமுல் கபீர்-7112 , 7113 , தாரீகு திமிஷ்க்-,

2 . உஸாமா பின் உமைர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-20719 .

3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11590 .

4 . அபூஅய்யூப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா பைஹகீ-17568 .



share this  https://bit.ly/4gSKVv4

Search This Blog