நூல் - வஹியில் முரண்பாடா? 03
அல்குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்கள் தொடர்பான நமது நிலைபாட்டை நாம் மக்கள் மத்தியில் எடுத்து வைக்கின்ற போது, அதற்கு மாற்றுக் கருத்துக் கொண்டுள்ள உலமாக்கள் நமது வாதங்களுக்குரிய ஆதாரபூர்வமான பதில்களைத் தருவதை விடுத்து, அர்த்தமற்ற விமர்சனங்களையே முன்வைத்து வருகின்றார்கள்.
இவர்களின் விமர்சனங்களில் மிக முக்கியமானதொரு விமர்சனம் தான் முரண்படும் செய்திகள் பற்றிய ஹதீஸ் கலை விதி தொடர்பான விமர்சனமாகும்.
தவ்ஹீத் ஜமாஅத்தினர் கூறுவது போல் ஹதீஸ் கலையில் இப்படி ஒரு விதி இல்லை. இவர்கள் தான் புதிதாக இதைக் கூறுகிறார்கள் என்பது தான் இவர்களிடம் இருக்கும் ஒரே பதில்.
எனவே இது பற்றியும் நாம் விளக்க வேண்டியுள்ளது. நாம் கூறுவது போல் விதி உள்ளது. அதை எடுத்துக் காட்டுவதற்கு முன்னால் அதை விட முக்கியமான ஒரு விஷயத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
ஹதீஸ் கலை விதிகள் என்பது அல்லாஹ்வும், அவனது தூதரும் வகுத்துத் தந்தது அல்ல. மாறாக ஒரு செய்தியை ஏற்பதற்கு எத்தகைய வழிகளைக் கடைப் பிடிக்கலாம் என்று திருக்குர்ஆன் அடிப்படையிலும், ஹதீஸ்கள் அடிப்படையிலும், அறிவுப்பூர்வமான வாதங்களின் அடிப்படையிலும் அறிஞர்கள் ஆய்வு செய்து விதிகளை வகுத்தார்கள். அந்த விதிகள் அனைத்தும் ஒரே நாளில் வகுக்கப்பட்டவை அல்ல. ஒரே நபராலும் வகுக்கப்பட்டவை அல்ல.
அவ்வப்போது அறிஞர் ஒருவர் ஒரு விதியைக் கூறுவார். அது குறித்து வாதப்பிரதிவாதங்கள் நடக்கும். அந்த விதியை குர்ஆன் அடிப்படையிலோ, ஹதீஸ் அடிப்படையிலோ உடைக்க முடியாமல் இருந்தால் அது விதியாக ஆகிவிடும். யாராலும் உடைக்க முடியாத நிலையில் அது இருந்ததால் தான் அது விதியாக ஆனது. எத்தனையோ அறிஞர்கள் வகுத்த விதிகள் நிராகரிக்கப்பட்டு விட்டன. காரணம் அவை உடைக்கக் கூடிய வகையில் அமைந்திருந்தது தான்.
எனவே ஒரு வாதத்திற்கு ஹதீஸ் கலையில் இப்படி ஒரு விதி இல்லை என்று வைத்துக் கொண்டாலும் நாம் எழுப்பிய கேள்விகளுக்கு ஆண்டுகள் பலவாகியும் ஒருவருக்கும் பதில் சொல்ல முடியவில்லை என்றால் இதை ஹதீஸ் கலை விதியில் புதிதாகச் சேர்த்துக் கொள்ள வேண்டியது தானே?
யாராலும் பதில் சொல்ல முடியாவிட்டால் அது சரியானதாக உள்ளது என்பது பொருள். அது சரியானது என்றால் அது புது விதியாக ஆவதற்கு என்ன தடை இருக்க முடியும்?
ஹதீஸ் கலையில் இப்போது உள்ள விதிகளில் நாம் ஏற்றுக் கொள்ளும் எந்த விதியாக இருந்தாலும் அதை உடைக்கும் வகையில் யார் கேள்வி கேட்டாலும் அதற்கு முன்னரே பதில் சொல்லப்பட்டிருக்கும். அல்லது நம்மால் அதற்குப் பதில் சொல்லும் வகையில் அறிவுப்பூர்வமாக அமைந்திருக்கும்.
அறிஞர்கள் கூறிய விதிகளில் எந்த விதிகளுக்கு எதிராகக் கேள்வி கேட்கப்படும் போது முன்பே பதில் சொல்லப்படாமல் உள்ளதோ, அல்லது அந்தக் கேள்விகளுக்கு இப்போது ஒருவராலும் பதில் சொல்ல முடியாமல் உள்ளதோ அது தவறான விதி என்று நிராகரித்து விட வேண்டும்.
ஆய்வு செய்து எடுக்கப்படும் சட்ட திட்டங்களை எவ்வாறு சிந்தித்து ஏற்றுக் கொள்ள வேண்டுமோ அது போல் ஹதீஸ் கலை விதியும் சிந்தித்து ஏற்றுக் கொள்ளப்படுபவை என்பதை உசூல் (?) பேசுவோர் உணரவில்லை. அது அப்படியே கண்ணை மூடிக் கொண்டு ஏற்க வேண்டிய ஒன்று என நினைக்கின்றனர். (உசூல்) விதி உள்ளதா என்று இதனடிப்படையில் தான் கேட்கின்றனர். ஒரு வாதத்துக்கு இப்படி ஒரு விதி இது வரை கூறப்படாவிட்டால் கூட நாம் கூறுவது சரியானது என்றால் அது விதியாகக் கருதப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஏற்கத் தக்க பதிலைக் கூறி மறுக்க வேண்டும்.
அடுத்து இன்னொரு அடிப்படையையும் நாம் விளக்கியாக வேண்டும்.
ஹதீஸ்களாக இருந்தாலும் ஆய்வு செய்யத் தக்க வேறு எந்த நூலாக இருந்தாலும் அதில் பல துறையினருக்கு வேலை இருக்கும். ஒவ்வொரு துறையினரும் தத்தமது வட்டத்துக்குள் நின்று ஆய்வு மேற்கொள்வார்கள்.
உதாரணமாக ஒரு மனிதனின் உடல் நலம் குறித்து பல துறையினர் சோதனை மேற்கொள்வார்கள்.
பல் மருத்துவர் ஒரு மனிதனைத் தமது துறை தொடர்பான ஆய்வு செய்து இவருக்கு நோய் இல்லை என்று கூறினால் அவருக்கு எந்த நோயும் இல்லை என்று புரிந்து கொள்ள மாட்டோம். பல்லுடன் தொடர்புபட்ட நோய்கள் இல்லை என்றே முடிவு செய்வோம்.
இதய நோய் மருத்துவர் ஒரு மனிதனைப் பற்றி இவருக்கு நோய் இல்லை என்று கூறி விட்ட பிறகு அவருக்குப் புற்று நோய் இருக்கலாம். இதனால் அந்த மருத்துவர் சரியாகச் சோதிக்கவில்லை என்று யாரும் கருத மாட்டோம்.
இது போல் தான் ஹதீஸ்களிலும் பல துறையினருக்கு வேலை உண்டு.
ஒரு இலக்கிய ஆர்வம் உள்ளவர் ஹதீஸில் ஆய்வு செய்தால் அவர் பார்வை இலக்கியம் குறித்ததாகத் தான் இருக்கும். ஆஹா அற்புதம் என்று இலக்கிய மேதை நற்சான்று அளிக்கும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டதாக இருக்கலாம். ஏனெனில் அவர் அறிவிப்பாளர் குறித்து ஆய்வு செய்ய மாட்டார்.
அது போல் தான் அறிவிப்பாளர் தொடர்பாக மட்டும் ஆய்வு செய்வதே ஹதீஸ் துறையினரின் ஒரே பணி. அவர்கள் ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர்கள் குறித்து ஆய்வு செய்து பார்த்து விட்டு இது சரியான செய்தி என்று கூறினால் அதன் பொருள் என்ன? இதை அறிவிக்கும் ஆட்கள் குறித்து எங்களிடம் உள்ள தகவல்களை வைத்து ஆய்வு செய்ததில் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று தெரிகிறது என்பது தான் இதன் பொருள். இதன் கருத்து சரியானது என்பது அதன் பொருள் அல்ல. ஏனெனில் அவர்கள் கருத்தைக் குறித்து ஆய்வு செய்யவில்லை. அது அந்தத் துறையின் வரம்புக்குள் வரக் கூடியதுமல்ல. சரியான ஹதீஸின் இலக்கணம் கூறும் போது அது குர்ஆனுக்கு முரணாக இருக்கக் கூடாது என்று இவர்கள் கூற மாட்டார்கள். அவர்களின் துறையுடன் இது தொடர்பற்றது.
சட்ட வல்லுனர்கள் தான் கருத்துக்களில் கவனம் செலுத்தி மற்ற ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து கருத்து சரியானதா என்று தீர்மானிப்பவர்கள். குர்ஆனுக்கு முரணாக இருப்பவையும், நடைமுறை உண்மைக்கு முரணாக இருப்பவையும் அறிவிப்பாளர் சரியாக இருந்தாலும் அவை சரியான செய்தி அல்ல என்று இவர்கள் முடிவு செய்வார்கள்.
எனவே எந்த ஹதீஸாக இருந்தாலும் அது ஸஹீஹானது என்று ஹதீஸ் துறையினர் கூறினால் அறிவிப்பாளர்கள் சரியாக உள்ளனர் என்பதைத் தான் கூறுகிறார்கள். கருத்து சரியானது என்பதைக் கூறவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நம்மை எதிர்ப்பவர்கள் ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்கலாமா? என்று கேட்பதற்கு இது குறித்த அறியாமை தான் காரணமாக உள்ளது. இது தெளிவாக ஹதீஸ் துறை நூல்களில் தெளிவுபடுத்தப்பட்ட உண்மையாகும்.
சில அறிஞர்கள் ஒரு துறையில் சிறந்து விளங்கினால் மற்றும் சிலர் இன்னொரு துறையில் சிறந்து விளங்குவார்கள்.
ஆனால் சில அறிஞர்கள் இரு துறையிலும் வல்லவர்களாக இருப்பார்கள். அவர்கள் சரியான ஹதீஸ_க்கு இலக்கணம் கூறும்போது இரண்டையும் இணைத்துக் கூறுவார்கள். அதாவது அறிவிப்பாளரும் சரியானவர்களாக இருக்க வேண்டும். கருத்தும் சரியாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் அது சரியான ஹதீஸ் என்று கூறுவார்கள்.
குர்ஆனுக்கு முரணாக ஹதீஸை அறிவிப்பவர் பொய்யரா?
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்ட வகையுடன் சேர்ந்தவை என்று நாம் கூறுகின்றோம். நம்மைப் போல் பல அறிஞர்களும் இவ்வாறு கூறுகின்றனர்.
குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை வைத்துப் பார்த்தாலும் ஹதீஸ் கலையில் கூறப்பட்ட இவ்விதி சரியானது என்பதைச் சந்தேகமற அறியலாம்.
பொதுவாக ஹதீஸ் கலையில் பலவீனமான செய்திகள் பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இந்த வகைகளில் மிக மோசமான தரத்தில் அமைந்தவை இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகும்.
குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் இந்த வகையுடனே சேர்க்கப்படுகின்றது. ஏனென்றால் மோசமான நினைவாற்றல் அறிவிப்பாளர் தொடர்பு முறிவு போன்ற காரணங்களால் பலவீனமடையும் ஹதீஸ்கள் அவற்றில் தவறு ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது என்ற அனுமானத்தில் அடிப்படையில் மறுக்கப்படுகின்றன.
ஆனால் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களைப் பொறுத்தவரை அவை வலுவான ஆதாரமாக இருக்கின்ற குர்ஆனுடன் முரண்படுவதால் அவை நூற்றுக்கு நூறு சதவீதம் சரியான செய்திகள் அல்ல என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது.
இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் எவ்வளவு மோசமான தரத்தைப் பெற்றதோ அது போன்று குர்ஆனுக்கு முரண்படும் செய்தியும் மிக மோசமான தரத்தைப் பெற்ற பலவீனமான செய்திகளாக உள்ளன என்பதை உணர்த்துவதற்காகவே இந்த ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்ட வகையுடன் சேர்க்கப்பட்டுள்ளன.
குர்ஆனுக்கு முரண்பட்டு அறிவிப்பவர், பொய் சொல்லி இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மெய்யைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அறிவித்தாலும் தவறுதலாக ஒரு வார்த்தையை விட்டு விட்டு அறிவித்தாலும் கூட கருத்து மாறிவிடும். அதனால் குர்ஆனுக்கு முரண்படும் நிலை ஏற்படும். அறிவிப்பாளர் பொய் சொல்லியிருந்தால் தான் ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படும் என்று நாம் உறுதியாகக் கூற முடியாது.
ஒரு நம்பகமான அறிவிப்பாளர் ஹதீஸின் ஒரு வாசகத்தை நேர் எதிரான கருத்தில் தவறுதலாகப் புரிந்ததின் விளைவாலும் இத்தகைய நிலை ஏற்படலாம்.
குர்ஆனுக்கு முரண்படும் ஒரு செய்தியில் நம்பகமானவர்கள் என உறுதிசெய்யப்பட்ட அறிவிப்பாளர் வந்தால் இவர்களில் யாரோ பொய் கூறியிருக்கின்றார் என்று முடிவு செய்வதை விட இவர்களில் யாரோ தவறிழைத்துள்ளார் என்று முடிவு செய்வதே நியாயமானது. ஏனென்றால் நம்பகமானவர்கள் விஷயத்தில் நல்லெண்ணம் வைக்க வேண்டும்.
ஒரு மிக நம்பகமானவரின் அறிவிப்புக்கு இன்னொரு நம்பகமானவரின் அறிவிப்பு முரண்பட்டால் அந்த அறிவிப்பில் அவர் பொய் சொல்லி விட்டார் என்று ஹதீஸ் கலையில் கருதப்படாது. மாறாக இவர் இதில் அறியாமல் தவறு செய்துள்ளார் என்றே கருதப்படும்.
இதே அடிப்படையில் தான் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களில் வரும் நம்பகமானவர்களின் விஷயத்திலும் நாம் முடிவெடுக்க வேண்டும்.
மேலும் இந்த ஹதீஸ்களில் பல அறிவிப்பாளர்கள் வருகிறார்கள். இவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருந்தால் இவர்களில் இன்னார் தான் தவறு செய்தார் என்று குறிப்பிட முடியாது.
ஒரு பேச்சுக்கு அவ்வாறு கண்டுபிடுத்து விட்டால் கூட குர்ஆனுக்கு முரண்பாடாக அவர் அறிவிக்கும் குறிப்பிட்ட அந்த அறிவிப்பு மட்டுமே நிராகரிக்கப்படும். அவர் அறிவித்த மற்ற அறிவிப்புகள் நிராகரிக்கப்படாது.
ஏனென்றால் இவருடைய அறிவிப்பு குர்ஆனுக்கு மாற்றமாக இருப்பதே இதில் இவர் தவறு செய்துள்ளார் என்பதை தெளிவுபடுத்தி விடுகின்றது. இவர் நம்பகமானவராக இருக்கும் பட்சத்தில் எந்த முரண்பாடும் வராத இவரது மற்ற அறிவிப்புகளை ஒட்டுமொத்தமாக எவ்வாறு நிராகரிக்க முடியும்?
இவற்றிலும் இவர் தவறு செய்திருப்பார் என்று யூகிப்பது அடிப்படையற்ற யூகமாகும். ஏனென்றால் ஒரு நம்பகமானவர் சரியாக அறிவிப்பார் என்றே கருத வேண்டும்.
எனவே ஒரு நம்பகமானவர் குர்ஆனுக்கு முரணாக செய்தியை அறிவிப்பதால் அதை வைத்துக் கொண்டு அவரைப் பொய்யர் என்று கூறக் கூடாது. நாமும் அவ்வாறு கூறவில்லை.
இந்த ஹதீஸ்களை இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களுடன் நாம் சேர்த்ததற்குககாரணம் இவற்றில் உள்ள நம்பகமானவர்கள் பொய் சொல்லி விட்டார்கள் என்பதற்காக அல்ல. இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் புறக்கணிக்கப்படுவதைப் போன்று இந்தச் செய்திகளும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதே காரணம்.
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுப்பதால் ஹதீஸ்கள் சிக்கலுடன் இருக்கின்றது என்ற தோற்றம் ஏற்படுகிறது என்ற வாதம் பல காரணங்களால் தவறானது. ஹதீஸ்களை ஆதராமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு இது ஒரு பிரச்சனையே கிடையாது.
ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமானது என்றும் பலவீனமானது என்றும் ஆய்வு செய்து தரம் பிரிக்கின்றனர். இவ்வாறு ஆய்வு செய்வதால் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்பவர்கள் ஹதீஸ்களில் சிக்கல் இருக்கின்றது எனக் கூறுவதில்லை.
பல நம்பகமானவர்களின் அறிவிப்புக்கு முரணாக ஒரு நம்பகனமானவர் அறிவிப்பதுண்டு. மிக வலுவான ஒருவரின் அறிவிப்புக்கு மாற்றமாக அவரை விட மனன சக்தியில் சற்று தரம் குறைந்த நம்பகமானவர் அறிவிப்பதும் உண்டு. ஒருவரை விட மற்றவர் மனன சக்தியில் உயர்ந்து விடாத வகையில் அனைவரும் சம நிலையில் உள்ள நம்பகமான அறிவிப்பாளர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டு அறிவிப்பதும் உண்டு.
இது போன்ற நிலைகளில் ஹதீஸ்களை ஆதாரமாக ஏற்றுக் கொண்டவர்கள் ஹதீஸ்களில் சிக்கல் உள்ளது என்று கூறி ஒட்டுமொத்தமாக ஹதீஸ்களை மறுப்பதில்லை. அனைத்து செய்திகளிலும் சந்தேகம் கொள்வதில்லை.
நம்பகமானவர்களுக்கிடையே முரண்பாடு தோன்றினாலும் யார் மிக வலிமையானவர்? அதிகமானோர் எவ்வாறு அறிவிக்கிறார்கள்? என்று பார்த்து அந்த அறிவிப்பாளர்களின் அறிவிப்பே சரியானது என்றும் அதற்கு முரணாக உள்ள அறிவிப்புகள் அவற்றை அறிவித்தவர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் தவறானது என்றும் முடிவு செய்கின்றனர்.
ஒருவரை விட ஒருவரை முற்படுத்துவதற்கு எந்தக் காரணமும் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் அனைவரின் அறிவிப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் நிறுத்தி வைத்து விடுகின்றனர். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
குர்ஆன் என்பது ஹதீஸ்களை விட பன்மடங்கு வலுவான ஆதாரம். இதை யாரும் மறுக்க மாட்டார்கள். அப்படி இருக்க வலுவான ஆதாரமாகத் திகழும் குர்ஆனுடன் அதற்குக் கீழ் நிலையில் உள்ள ஹதீஸ் முரண்பட்டால்
குர்ஆனை எடுத்துக் கொண்டு முரண்படும் அந்த ஹதீஸை விட்டு விடுவது தானே சரி. இந்த முடிவில் ஒரு சிக்கலும் இல்லை.
நடைமுறை வாழ்க்கையிலும் கூட நாம் இவ்வாறு தான் முடிவு எடுக்கின்றோம். எனவே குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுப்பதால் எந்தச் சிக்கலும் ஏற்படுவதில்லை. மாறாக அவற்றை ஏற்றுக் கொண்டால் தான் குர்ஆன் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படும்.
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களைப் பற்றி பேசும் போது எடுத்து வைக்கப்படும் இந்தக் கேள்விகள் அறிவிப்பாளர் பலவீனமாக இருக்கும் போதும் எழத்தான் செய்யும். ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டதாக இல்லையே என்ற கேள்வியை யாரும் கேட்பதாகத் தெரியவில்லை.
ஒருவரது அறிவிப்புக்கு மாற்றமாக பலர் அறிவிக்கும் போதும் இந்தக் கேள்வி வரும். ஆனாலும் யாரும் கேட்பதில்லை.
அது போல் மிக நம்பிக்கைக்குரியவரின் அறிவிப்புக்கு எதிராக நடுத்தரமானவர் அறிவிக்கும் போதும் இந்தக் கேள்விகள் எழ வேண்டும், ஆனாலும் யாரும் கேட்பதாகத் தெரியவில்லை.
ஆனால் குர்ஆனுடன் முரண்படுகிறது என்பதற்காக ஒரு ஹதீஸை நிராகரிக்கும் போது மட்டும் இது போன்ற கேள்விகள் எழுவது ஏன்?
இதுவரை நாம் நம்பியதற்கு மாற்றமாக உள்ளதால் இதை ஜீரணிக்க உள்ளம் தயக்கம் காட்டுகிறது. இது தான் காரணம். பழகிப்போன விஷயத்தில் சரியாகப் புரிந்து கொள்கிறது. எனவே மனோ இச்சைக்கு இடம் கொடுக்காமல் குர்ஆனுக்கு முரண்படுவது பெரிய விஷயமா? சாதாரண விஷயமா? அறிவிப்பாளரிடம் காணப்படும் குறையை விட குர் ஆனுக்கு முரண்படுவது மிகப் பெரிய விஷயம் என்பதைப் புரிந்து கொண்டால் இந்தக் கேள்விகள் எழாது.
----------
நூல் - வஹியில் முரண்பாடா?
ஆசிரியர் : F.M. ரஸ்மின் MISC
https://bit.ly/3vjpD7J
இதன் தொடர்ச்சியை காண
4- “ஷாத்” வகை ஹதீஸ்கள் பற்றிய தெளிவு.
https://makarimtec.blogspot.com/2022/07/3-vahiyil-muranpaada-3.html
5 - புகாரி முஸ்லிம் போன்ற பெரும் அறிஞர்களுக்குத் தெரியாததா இவர்களுக்கு தெரிந்து விட்டது?
https://makarimtec.blogspot.com/2022/07/5-vahiyil-muranpaada-5.html
6 - புகாரியில் பதிவான பலவீனமான ஹதீஸ்கள்
https://makarimtec.blogspot.com/2022/07/6-vahiyil-muranpaada-6.html
7 - வழிகேட்டை காப்பாற்ற ஹதீஸை பலவீனப் படுத்தும் வழிகேடர்கள்.
https://makarimtec.blogspot.com/2022/07/7-vahiyil-muranpaada-7.html
8 - வழிகேடர்களின் வழிமுறையா? முஃதஸிலாக்களின் கொள்கைகள்.
https://makarimtec.blogspot.com/2022/07/8-vahiyilmuranpaada-8.html
9 - அஹ்லுல் குர்ஆன்”களின் வழியா?
https://makarimtec.blogspot.com/2022/07/9-9.html
10 - நபி வழியா? புது வழியா?
https://makarimtec.blogspot.com/2022/07/10-vahiyilmuranpaada.html
11 - மனோ இச்சைப்படி மறுக்கிறோமா
https://makarimtec.blogspot.com/2022/07/11-vahiyil-muranpaada.html
12 - சிந்தனைக்கு முக்கியத்துவமா?
https://makarimtec.blogspot.com/2022/07/12-vahiyil-muranpaada.html
13 - நபியின் சளியை நபித் தோழர்கள் முகத்திலும் மேனியிலும் பூசிக் கொண்டார்களா?
https://makarimtec.blogspot.com/2022/07/13-vahiyilmuranpaada.html
14 -குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள்
https://makarimtec.blogspot.com/2022/07/14-vahiyil-muranpaada.html
15 - நபியவர்கள் தற்கொலைக்கு முயன்றார்களா?
https://makarimtec.blogspot.com/2022/07/15-vahiyil-muranpaada.html
16 - அபூலஹபின் விரலை நரகம் தீண்டாதா?
https://makarimtec.blogspot.com/2022/07/16-vahiyil-muranpaada.html
17 - குரங்கு விபச்சாரம் செய்ததா?
https://makarimtec.blogspot.com/2022/07/17-vahiyilmuranpaada.html
18 - பல்லி பற்றிய ஹதீஸின் நிலை?
https://makarimtec.blogspot.com/2022/07/18-vahiyil-muranpaada.html
19 - வேண்டுமென்று கொலை செய்தவருக்கு மன்னிப்புண்டா?
https://makarimtec.blogspot.com/2022/07/19-vahiyil-muranpaada.html
20 - உலகம் படைக்கப்பட்ட நாட்கள் 06 அல்லது 07 ?
https://makarimtec.blogspot.com/2022/07/20-vahiyilmuranpaada.html
21 - காணாமல் போன இரண்டு வசனங்கள்.
https://makarimtec.blogspot.com/2022/07/21-vahiyilmuranpaada.html
22 - சுலைமான் நபிக்கு மறைவான அறிவு உண்டா?
https://makarimtec.blogspot.com/2022/07/22-vahiyilmuranpaada.html
23 - நபியவர்கள் அன்னியப் பெண்ணுடன் தனித்திருந்தார்களா?
https://makarimtec.blogspot.com/2022/07/23-vahiyilmuranpaada.html
24 - மாடு உழவு செய்வதற்காக மட்டும் தான் படைக்கப்பட்டதா?
https://makarimtec.blogspot.com/2022/07/24-vahiyilmuranpaada.html
25 - மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்பு நடந்ததா?
https://makarimtec.blogspot.com/2022/07/24-vahiyilmuranpaada_28.html
26 - விவசாயக் கருவிகளினால் இழிவு வருமா?
https://makarimtec.blogspot.com/2022/08/26-vahiyilmuranpaada.html
27 - இளைஞருக்குப் பாலூட்டுதல் - ஸாலிம் (ரலி) பற்றிய செய்தி
https://makarimtec.blogspot.com/2022/07/21-vahiyilmuranpaada_30.html
28 - நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதா?
https://makarimtec.blogspot.com/2022/07/22-vahiyilmuranpaada_30.html
29 - நபிகளாருக்கு சூனியம் - ஆறு மாத கால ஹதீஸ் பலவீனமா?
https://makarimtec.blogspot.com/2022/07/23-vahiyilmuranpaada_30.html
30 - சூனியத்தை நம்பியவன் சுவர்க்கம் புகமாட்டான் - என்ற செய்தி பலவீனமானதா?
https://makarimtec.blogspot.com/2022/08/30-30.html
31 - மூஸா நபி மலக்குள் மவ்துக்கு அடித்தார்களா?
https://makarimtec.blogspot.com/2022/08/31-vahiyil-muranpaada.html
