தவ்ஹீத் ஜமாஅத் video's: தவ்ஹீதின் மூன்று அடிப்படைகள்

தவ்ஹீதின் மூன்று அடிப்படைகள்

  இஸ்லாத்தில் தவ்ஹீதின் மூன்று அடிப்படைகள் பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞

• இஸ்லாத்தின் அடிப்படைகளில் மிக முக்கியமான ஒன்று தான் தவ்ஹீத் ஆகும்! தவ்ஹீத் பற்றி அறிய வேண்டும் என்றாலும் நாம் முதலில் அகீதாவை கற்று கொள்ள வேண்டும்!

• ஒருவனுக்கு அகீதா பற்றி விளக்கம் இல்லை என்றால் எளிதாக வழிகேட்டில் சென்று விடுவான் ! இன்னும் சில நேரங்களில் இஸ்லாத்தை விட்டு கூட வெளியேறி விடுவான்!

• ஒரு மீனுக்கு தண்ணீர் எந்த அளவுக்கு அவசியமோ அதே அளவுக்கு ஒரு முஹ்மினுக்கு அகீதா அவசியமாகும்!

• இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்று தான் இந்த தவ்ஹீத் ஆகும் நம்மில் பலருக்கு இதை பற்றி விளக்கம் இல்லாத காரணத்தினால் தான் நம்மில் பலர் அறியாத நிலையில் அல்லாஹ்விற்கு ஷிர்க் வைத்து விடுகிறோம்!

• தவ்ஹீத் பற்றி நாம் முழுமையாக அறிந்து கொண்டால் நம்முடைய ஈமான் உறுதியாக இருக்கும்! நேரான வழியையும் நாம் அறிந்து கொள்ளலாம் ! இஸ்லாம் என்ற பெயரில் தோன்றிய வழிகேடு கொள்கை கொண்டவர்கள் அனைவரும் இவற்றிக்கு மாற்றமாக தான் இருப்பார்கள்!

• நம்மில் பலர் ஈமானில் உறுதியாக இருப்போம் இப்படி பட்டவர்களை ஷைத்தான் வழி கேடுக்க எடுத்த உடன் அல்லாஹ்விற்கு இணை வைத்து விடு என்று கூற மாட்டான் நேர்வழியில் இருக்கும் நிலையிலேயே நம்மை வழி கேட்டில் செல்ல வைத்து விடுவான்! அதற்கு அவன் கையாளும் வழி தான் ஈமான் அடிப்படைகளில் சந்தேகம் அல்லது பலகீனத்தை ஏற்படுத்தி நம்முடைய ஈமானை குறைத்து விடுவான் அல்லது இல்லாமல் ஆக்கி விடுவான்!

• இஸ்லாத்தில் அடிப்படைகளை அறிந்து அதில் உறுதியாக இருந்தால் மட்டுமே நாம் நேரான வழியில் முஹ்மினாக இருக்க முடியும்!

💙 தவ்ஹீத் என்றால் என்ன?

• அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான் என்று நம்பிக்கை கொண்டு! தவ்ஹீத்துர் ரூபூவியா - தவ்ஹீதுல் உளூஹியா ஆகியவற்றில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி அவனுடைய பெயர்கள் மற்றும் பண்புகளை எந்த சந்தேகமும் இல்லாமல் நம்பிக்கை கொண்டு இதில் அல்லாஹ்விற்கு யாரையும் இணையாக்காமல் இருக்க வேண்டும்!

• தவ்ஹீதுர் ருபூவியா, உளூஹிய்யா, அஸ்மா வஸ்ஸிஃபாத் ஆகிய மூன்று வகைகளையும் ஏற்று கொண்டு மேலும் மூன்றிலும் அல்லாஹ்வை ஒருமை படுத்தினால் மட்டுமே ஒருவன் முழுமையான ஒரு நல்ல முஃமினாக ஆக இருக்க முடியும்!

❤️ தவ்ஹீத் மூன்று வகைப்படும் :

1) தவ்ஹீத்துர் ரூபூவியா

• அல்லாஹ்வுடைய செயல்களில் அவனை ஒருமைப் படுத்துவது!

2) தவ்ஹீதுல் உளூஹிய்யா :

• அல்லாஹ்வுக்கு நாம் செலுத்தக்கூடிய வணக்கங்களில் அவனை ஒருமைப் படுத்துவது!

3) தவ்ஹீதுல் அஸ்மா வஸ் ஸிஃபாத்

• அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய தனித்தன்மையான பெயர்கள் பண்புகளை எவ்வாறு அல்குர்ஆனிலும் ஸஹீஹான ஹதீஸிலும் கூறப்பட்டு உள்ளதோ அதை அவ்வாறே ஏற்று நம்பிக்கை கொண்டு அவன் தனக்கு இல்லை என்று சொன்ன பண்புகளை மறுப்பதை கொண்டு உறுதிப்படுத்துவது!

💙 தவ்ஹீத்துர் ரூபூவியா :

• தவ்ஹீத்துர் ரூபூவியா என்றால் அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான் என்று உறுதியாக நம்பிக்கை கொண்டு அவனுடைய செயல்களில் அவன் தனித்தவன் அவனை தவிர வேறு யாரும் இல்லை என்று நம்பிக்கை கொள்ளுவது ஆகும்!

1) அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்பதை நாம் அவனுடைய படைப்புகளை வைத்து அறிந்து கொள்ளலாம் இதனால் அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் சிந்திக்க வேண்டும் என்று அத்தாச்சிகளை பற்றி கூறி உள்ளான்!

உதாரணம் : மலைகளை எவ்வாறு அல்லாஹ் படைத்து உள்ளான் வானங்களை எவ்வாறு படைத்து உள்ளான்! ஒட்டகத்தை எவ்வாறு படைத்து உள்ளான்! என்பதை பற்றி நாம் சிந்திப்பதின் மூலம் அல்லாஹ்வை பற்றி அறிந்து கொள்ளலாம்!

• அனைத்து படைப்புகளுக்கும் அல்லாஹ் மட்டுமே அரசன்! உணவு வழங்க கூடியவன் அல்லாஹ் மட்டுமே! அல்லாஹ் தான் உயிர் கொடுக்க கூடியவன்! நன்மை மற்றும் தீமை செய்ய கூடியவன்! துஆவிற்கு பதில் அளிக்க கூடியவன்! அல்லாஹ்விடம் தான் அனைத்தும் உள்ளது! அவன் நாடியதை செய்கிறான் இவ்வாறு அனைத்தையும் எந்த வித சந்தேகமும் இல்லாமல் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்!

• ஒரு போதும் இவற்றில் அல்லாஹ்விற்கு நாம் யாரையும் நாம் இணையாக்க கூடாது! மேலே உள்ள அனைத்தும் அல்லாஹ்விற்கு மட்டும் உரியது ஆகும்! (அல் குர்ஆன் : 10 : 31)

• நம்மில் பலர் அல்லாஹ்வை மட்டும் நம்பிக்கை கொண்டு உள்ளார்கள் ஆனால் அவனின் ஆற்றலை சரியாக நம்பிக்கை கொள்ளுவது கிடையாது!

உதாரணமாக : நாம் பாவம் செய்ய கூடியவர்கள் நம்முடைய துஆவை அல்லாஹ் ஏற்க மாட்டான் அதனால் நாம் இந்த அவ்லியா பொருட்டால் அல்லது இந்த நல்லோர் பொருட்டால் துஆ செய்ய வேண்டும்! இந்த மருந்துவரிடம் சென்றால் உடல் குணம் ஆகி விடும் என்று நம்பிக்கை கொள்ளுவது இவை அனைத்துமே அல்லாஹ்வின் ஆற்றல் வேறு ஒருவருக்கு உள்ளது என்று நம்பிக்கை கொள்ளுவது போன்று ஆகும் இதுவும் மறைமுகமான ஷிர்க் தான்!

• ஆரம்ப கால மக்கா காஃபிர்கள் அல்லாஹ் ஒருவன் உள்ளான் என்று நம்பிக்கை கொண்டு இருந்தார்கள் ஆனால் " லாத் - உஸ்ஸா ” போன்ற சிலைகள் அல்லாஹ்விடம் தங்களுக்கு சிபாரிசு செய்யும் என்று நம்பிக்கை கொண்டு அவற்றிக்கு குர்பானி கொடுப்பது அவையிடம் துஆ செய்வது போன்ற செயல்களில் செய்து காஃபிர் ஆகி விட்டார்கள்!  (அல்குர்ஆன் : 43 : 87 - 23 : 84 & 89 - 29 : 61)

• அல்லாஹ் ஒருவன் உள்ளான் என்று நம்பிக்கை கொண்டால் மட்டும் நாம் முஹ்மினாக ஆகி விட முடியாது அவனுடைய ஆற்றலையும் நம்பிக்கை கொள்ள வேண்டும் இந்த ஆற்றல் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் இல்லை என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்! 

2) தவ்ஹீதுல் உளூஹிய்யா :

• தவ்ஹீதுல் உளூஹிய்யா என்றால் உள்ளத்திலும் செயலிலும் வணக்க வழிபாடுகள் மூலம் அல்லாஹ்வை ஒர்மை படுத்த வேண்டும்! இவற்றை அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் நாம் செய்ய கூடாது!  (அல்குர்ஆன் : 4 : 36 - 17 : 23)

• உதாரணமாக : நம்முடைய துஆ - குர்பானி - தொழுகை - நோன்பு - நம்பிக்கை வைப்பது - பொறுப்பு சாட்டுவது - நேர்ச்சை செய்வது என அனைத்தும் அல்லாஹ்விற்கு மட்டுமே செய்ய வேண்டும் இதில் நாம் யாரையும் இணையாக்க கூடாது! 

• இந்த வணக்கங்களை செய்ய தகுதியானவன் அல்லாஹ் மட்டுமே என்று நம்பி அவனை மட்டுமே ஒருமைப்படுத்துவது தான் ‘தவ்ஹீதுல் உளூஹிய்யா’ ஆகும்!

❤️ தாகூத் : தாகூத் என்றால் அல்லாஹ்வை விட்டு விட்டு மற்ற படைப்புகளை வணங்குவது அல்லது அல்லாஹ்விற்கு மட்டும் செய்ய வேண்டிய வணக்கங்களை பிறருக்கு செய்வது ஆகும் இது ஷிர்க் ஆகும்!

உதாரணமாக : துஆ என்பது ஒரு வணக்கம் அதை அல்லாஹ்விற்காக மட்டுமே செய்யவேண்டும்! அல்லாஹ்வை தவிர்த்து மற்றவர்களிடம் துஆ செய்வது அல்லது பிறர் பொருட்டால் துஆ செய்வது அவர்களை வணக்குவது போன்று ஆகி விடும்!  வணக்க வழிபாடுகள் அனைத்தும் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது! இதில் நாம் யாரையும் இணையாக்க கூடாது!

• அல்லாஹ் மனிதர்களையும் ஜின்களையும் வணக்கவே படைத்து உள்ளான்! நபிமார்களையும் வேதங்களையும் அல்லாஹ் அருள காரணம் அவனை மட்டும் எல்லோரும் வணக்க வேண்டும் என்றே! (அல்குர்ஆன் : 21 : 25)

• ரஸூல்மார்கள் ஆரம்ப கால முதல் கடைசி காலம் வரை மக்களை அல்லாஹ்வை மட்டும் வணக்கவே அழைத்தார்கள்! இந்த வணக்க வழிபாடு அல்லாஹ்விற்கு மட்டும் செய்யவேண்டும் என்பதால் தான் நபி மார்களுக்கும் அவர்களுடைய சமுதாயத்திற்கும் பிரச்சனை உருவானது!  (அல்குர்ஆன் : 16 : 36)

• தவ்ஹீதுல் உளூஹியாவில் -  தவ்ஹீத்துர் ரூபூவியா மற்றும் தவ்ஹீதுல் அஸ்மா வஸ் ஸிஃபாத் இரண்டும் அடக்கி விடும்!

3) அஸ்மா வல் ஸிஃபாத்  :

• அஸ்மா வஸ்ஸிஃபாத் என்றால் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை பற்றி அறிந்து அதை எந்த சந்தேகமும் இல்லாமல் நம்மிக்கை கொள்ளுவது ஆகும்!

• அல்லாஹ் தன்னை பற்றியும் தன்னுடைய பண்புகளை பற்றியும் அல்குர்ஆனிலும் இன்னும் தன்னுடைய தூதர் நபி (ஸல்) அவர்களின் ஸஹீஹான ஹதீஸ்கள் மூலம் எவ்வாறு கூறி உள்ளானோ அதை அப்படியே நம்பிக்கை கொள்ள வேண்டும்!

• ஏனென்றால் அல்லாஹ் அல்குர்ஆனை அருளிய பொழுதும் நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு சொல்லி கொடுக்கும் பொழுதும் சரி அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளுக்கு எந்த விளக்கமும் சொல்லி கொடுக்க வில்லை இருப்பதை அப்படியே நம்பிக்கை கொண்டார்கள்!

• அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை நம்பிக்கை கொள்ளும் விசயத்தில் சில நிபந்தனைகள் :

1) அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளுக்கு எந்த மாற்று பொருளும் அளிக்க கூடாது! எவ்வாறு அல்லாஹ் தன்னை பற்றி கூறி உள்ளனோ நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வை பற்றி கூறி உள்ளார்களோ அதை அப்படியே நம்பிக்கை கொள்ள வேண்டும் !

2) அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை மனிதர்கள் உடன் ஒப்பிட கூடாது!

3) அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளுக்கு எந்த வித உதாரணமும் கூற கூடாது!

நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள்!

(அல்குர்ஆன் : 16 : 74)

4) அல்லாஹ்வின் எந்த பெயர்களையும் எந்த பண்புகளையும் நாம் மறுக்க கூடாது!

5) அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளில் ஒரு போதும் சந்தேகம் கொள்ள கூடாது!

• அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகளை அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் எவ்வாறு கூறினார்களோ, அவ்வாறே நம்ப வேண்டும் இதற்கு பெயர் தான் அஸ்மா வல் ஸிஃபாத் ஆகும்!

உதாரணமாக : அல்லாஹ்விற்கு கைகள் உள்ளது என்று அல்குர்ஆனில் உள்ளது கைகள் எப்படி இருக்கும் நம்மை போன்று இருக்குமா அல்லது கைகள் என்று அவனுடைய சக்தி அல்லது ஆற்றலை குறிக்குமா என்று எந்த வித உதாரணமும் சந்தேகமும் மாற்று விளக்கமும் நாம் கூற கூடாது! கைகள் உள்ளது என்றால் உள்ளது என்று அதை அப்படியே நம்பிக்கை கொள்ள வேண்டும்!

❤️ அஸ்மா வல் ஸிஃபாத்தை மறுக்கும் வழிகேடு கூட்டங்கள் :

1) ஜஹ்மிய்யாக்கள் :

• முதன் முதலில் அல்லாஹ்வின் பண்புகளை சுய சிந்தனை மூலம் மறுத்தவர்கள் அலி (ரழி) அவர்கள் ஆட்சி காலத்தில் தோன்றிய ஜஹ்மிய்யாக்கள் ஆவார்கள்!

• இவர்கள் சிந்தனை எப்படி என்றால் அல்லாஹ் சிரிக்கின்றான் கோவப்படுகின்றான் என்று அல்குர்ஆனிலும் ஸஹீஹான ஹதீஸ்களில் வந்து உள்ளது! இது எல்லாம் மனிதர்களின் பண்புகள் இது எப்படி அல்லாஹ்விற்கு பொருந்தும் என்று அந்த பண்புகளை மறுத்து அதற்கு வேறு விளக்கம் கொடுத்தார்கள்! இதனால் இவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டனர்!

2) முஹ்தஸிலாக்கள் :

• இந்த வழிகேடு கூட்டம் அலி (ரழி) அவர்களின் இறுதி ஆட்சி காலத்தில் உருவானது இவர்களின் கொள்கை அல்லாஹ்வின் பெயர்களை ஏற்று கொண்டனர் ஆனால் அவனின் பண்புகளை மறுத்து விட்டனர்!

• அல்லாஹ் பார்க்கிறான் கேட்கிறான் என்று அல்குர்ஆனில் உள்ளது இது மனிதர்களுடைய பண்பு அல்லாஹ்விற்கு எப்படி இருக்க முடியும் என்று மறுத்து விட்டனர் இவர்களும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய கூட்டம் ஆவார்கள் !

3) அஷ்ஷரிய்யா :

• அஷ்ஷரிய்யா என்ற வழிகேடு கூட்டம் அல்லாஹ்வின் பண்புகளில் 10 யை மட்டும் ஏற்று கொண்டனர் மற்ற அனைத்து பண்புகளையும் மறுத்து விட்டனர்! அல்லது மற்ற பண்புகளுக்கு வேறு விளக்கம் கொடுப்பார்கள் அல்குர்ஆனில் ஸஹீஹான ஹதீஸ்களிலும் வந்து உள்ளதை இவர்கள் ஏற்க மாட்டார்கள்!

4) சூபியாக்கள் :

• சூபி மற்றும் தரிக்கா கொள்கையில் வெவ்வேறு நிலைப்பாடுகள் உடன் சுமார் 150 க்கும் மேல் வழிகேடு கூட்டம் உள்ளது!

• இதில் சூபியாக்களில் ஒரு கூட்டம் அல்லாஹ்வின் பண்புகளை மறுப்பார்கள் அல்லாஹ்விற்கு முகம், கை, கால் உள்ளது என்று அல்குர்ஆனில் வந்து உள்ளது ஆனால் இவர்கள் அதை ஏற்க மறுத்து விடுவார்கள்!

• அல்லாஹ் ஒளியாக தான் உள்ளான் என்று நம்பிக்கை கொள்ளுவார்கள்! உருவம் உள்ளது என்றால் அது மனிதர்களுக்கு ஒப்பாக ஆகி விடும் என்று அல்குர்ஆனில் வந்து உள்ள பண்புகளுக்கு மாற்று விளக்கம் கொடுப்பார்கள் ஆனால் இந்த கொள்கை நம்மை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி விடும்!

5) முஅக்கிலாக்கள் :

• முஅக்கிலாக்கள் இவர்கள் ஜஹ்மிய்யா கூட்டத்தின் ஒரு பிரிவு ஆவார்கள்! இவர்கள் அல்லாஹ்வின் பெயர் மற்றும் பண்பு இவை இரண்டையுமே மறுத்து விடுவார்கள்! அல்லாஹ்வின் பண்புகள் பெயர்களும் சாதாரணமான அரபி வார்த்தைகள் என்று இதற்கு விளக்கம் கொடுத்தார்கள்! இவர்களும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி கூட்டம் ஆவார்கள்!

6) முமஸ்ஸிலாக்கள்

• முமஸ்ஸிலாக்கள் அல்லாஹ்வின் பண்புகளை மனிதர்கள் உடன் ஒப்பீடுவார்கள் நம்முடைய கை போன்று தான் அல்லாஹ்வின் கை இருக்கும் என்று இவர்களும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி கூட்டம் ஆவார்கள்!

7) வஹ்தத்துல் உஜுஜ் மற்றும் அத்வைத  கொள்கை :

• வஹ்தத்துல் உஜுஜ் மற்றும் அத்வைதம் கொள்கை கொண்டவர்கள் பொறுத்த வரை எல்லாமே அல்லாஹ் என்பார்கள்! எல்லா இடத்திலும் அல்லாஹ் உள்ளான் என்பார்கள்! கை விரலை சேர்த்து இதில் அல்லாஹ் என்று எழுத்து உள்ளது என்பார்கள்! நீயும் அல்லாஹ் நானும் அல்லாஹ் என்பார்கள் இவர்களும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய கூட்டம் ஆவார்கள்!

• நமக்கு மிகவும் தெரிந்து இஸ்லாமிய பாடகர் EM நாகூர் ஹனிபா அவர்களின் ஒரு இஸ்லாமிய பாடலில் கூட எங்கும் நிறைந்தவன் அல்லாஹ் என்று கூறி இருப்பார்கள் இதை எல்லாம் நம்பிக்கை கொண்டால் நம்முடைய ஈமான் போய் விடும்!

அல்லாஹ் அர்ஷின் மீது அவனின் மகிமைக்கு தக்கவாறு உயர்ந்து உள்ளான் என்று நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்! (அல்குர்ஆன் : 20 : 5)

• இவ்வாறு நாம் சொல்லி கொண்டே போகலாம் அந்த அளவுக்கு இஸ்லாத்தில் வழிகேடு கூட்டங்கள் உள்ளார்கள் இவர்கள் அனைவருமே ஆரம்பத்தில் அல்குர்ஆன் ஹதீஸ்கள் பக்கம் தான் மக்களை அழைப்பார்கள் !

• மக்களும் இவர்களிடம் செல்லுவார்கள் இவர்கள் அல்லாஹ்வை மட்டும் வணக்குவார்கள் ஷிர்க் வைக்க மாட்டார்கள் ஆனால் அல்லாஹ்வின் ஆற்றல் பண்புகளில் சந்தேகம் கொண்டு மறுப்பார்கள் அல்லது வேறு விளக்கம் கொடுப்பார்கள்! இதனால் இதை பற்றி விளக்கம் இல்லாத மக்கள் அதை நம்பிக்கை கொண்டு ஈமானையும் பறிகொடுத்து விடுகிறார்கள்!

• அல்லாஹ்வை பற்றி முழுமையாக அறிந்து கொண்டால் தான் அவனை நம்மால் சரியான முறையில் வணங்க முடியும்! அல்லாஹ் உடைய நெருக்கத்தையும் நாம் பெற்று கொள்ள முடியும்!

@அல்லாஹ் போதுமானவன் 💞

Search This Blog