இஸ்லாத்தில் செருப்பு அணிந்து கொண்டு தொழலாமா ?
• இஸ்லாம் இலகுவான மார்க்கம் ஆகும்! நமது சூழ்நிலை ஏற்றால் போல் நமக்கு சிரமம் ஏற்படாத வகையில் நமக்கு நிறைய சலுகைகள் இஸ்லாம் நமக்கு கூறி உள்ளது!
• இதில் ஒன்று தான் காலணி அணிந்து தொழும் முறையாகும்! காலணி அணிந்து கொண்டு தொழ இஸ்லாத்தில் எந்த வித தடையும் கிடையாது! நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தொழுது உள்ளார்கள்! ஆனால் காலணியின் அசுத்தம் இருந்தால் மட்டும் அதை நாம் கழற்றி விட வேண்டும்!
ஸயீது இப்னு யஸீத் அல் அஸ்தி அறிவித்தார்கள் :
நான் நபி (ஸல்) அவர்கள் செருப்பணிந்து தொழுதிருக்கிறார்களா? என்று அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'ஆம்' என்றார்கள்! (நூல் : புகாரி : 386)
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் தொழுது கொண்டிருக்கும் போது காலணிகளைக் கழற்றி தமக்கு இடப்பக்கத்தில் வைத்தார்கள்! இதை (பின்னால் தொழுது கொண்டிருந்த) மக்கள் கண்ட போது அவர்களும் தங்களது காலணிகளைக் கழற்றிப் போட்டனர்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தவுடன் ஏன் உங்களுடைய காலணிகளைக் கழற்றிப் போட்டீர்கள்? என்று வினவினார்கள்!
அதற்கு மக்கள் நீங்கள் காலணிகளைக் கழற்றுவதைக் கண்டதால் நாங்களும் எங்கள் காலணிகளைக் கழற்றினோம் என்று பதிலளித்தனர்!
அதற்கு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து என் காலணிகளில் அசுத்தம் அல்லது (பிறருக்கு) நோவினை தரும் பொருள் இருப்பதாகத் தெரிவித்தார்கள்!
(அதனால் தான் நான் கழற்றினேன்.) உங்களில் ஒருவர் பள்ளிக்கு வந்தால் (தமது காலணிகளை) அவர் பார்க்கட்டும். தனது காலணிகளில் அசுத்தத்தையோ அல்லது நோவினை தரும் பொருளையோ கண்டால் அதைத் துடைத்து விட்டு அதனுடனே தொழுது கொள்ளலாம்! (நூல் : அபூதாவூத் : 650)
💟 காலணி அணிந்து தொழுவதின் சில நிபந்தனைகள் :
1) தேவை ஏற்பட்டால் காலணி அணிந்து கொண்டு தொழுகலாம்! ஆனால் தொழுகை நிபந்தனைகளில் ஒன்று சுத்தமாக இருப்பது அதனால் நமது காலணியில் அசுத்தம் இருந்தால் அதை அணிந்து தொழ கூடாது! அல்லது அதை சுத்தம் செய்து விட்டு பின்பு அணிந்து தொழ வேண்டும்! (நூல் : அபூதாவூத் : 650)
2) நபி (ஸல்) அவர்கள் காலணி அணிந்து கொண்டு தொழ காரணம் யூதர்கள் காலணி அணிந்து வணக்க வழிபாடுகள் செய்ய மாட்டார்கள்! அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இவர்களுக்கு மாற்றம் செய்ய காலணி அணிந்து தொழுது உள்ளார்கள்! பிறரையும் தொழ சொல்லி உள்ளார்கள்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்! ஏனெனில் அவர்கள் செருப்பு மற்றும் ஷுக்கள் அணிந்து தொழ மாட்டார்கள்! (நூல் : அபூதாவூத் : 652)
3) பள்ளிவாசலில் தொழுவதாக இருந்தால் இவ்வாறு காலணி அணிந்து கொண்டு தொழ கூடாது! தற்பொழுது உள்ள காலத்தில் அனைத்து பள்ளிகளிலும் தொழ கீழே தரைவிரிப்பு விரித்து இருப்பார்கள்! நாம் காலணி அணிந்து அவற்றை அசுத்தம் செய்து விட கூடாது!
4) காலணி அணிந்து தொழ விருப்பம் உள்ளவர்கள் வெளியே எங்கேனும் பயணம் செய்யும் பொழுது அல்லது காலணி அணிந்து கொண்டு தொழ சூழ்நிலை ஏற்பட்டால் தாராளமாக நாம் அணிந்து கொண்டு தொழுகலாம்!
• பலருக்கு இதில் உடன்பாடு இருக்காது எப்படி காலணி அணிந்து கொண்டு தொழுவது என்று ஆனால் இது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் ஒன்றாகும் இதற்கு ஸஹீஹான பல ஹதீஸ்கள் உள்ளது இதை மறுக்க கூடியவர்களுக்கு நாம் ஆதாரம் முன் வைத்து கண்ணியமாக எடுத்து கூற வேண்டும் !
5) காலணி அணிந்து கொண்டு ஒளு செய்யலாம்! இதற்கு மார்க்கத்தில் எந்த வித தடையும் கிடையாது! ஒளு செய்யும் பொழுது இறுதியில் காலைக் கழுவும் போது செருப்பைக் கழற்றி காலை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்! பின்பு நாம் காலணி அணிந்து கொள்ளலாம்!
لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது! (அல்குர்ஆன் : 33 : 21)