சலஃபுகளின் குறுக்கு கேள்வி
அறிவிப்பாளர் தொடர் வகையில் சஹீஹான ஹதீஸ் என்று ஹதீஸ்களை ஏற்கிறீர்களே.. அந்த அறிவிப்பாளர்களெல்லாம் நம்பகமானவர்கள் என்று அல்லாஹ்வே உங்களுக்கு சொன்னானா? அல்லது நீங்களாகவே ஆய்வு செய்தீர்களா?
இல்லையே..
ஹதீஸ்கலை இமாம்களும் நூலாசிரியர்களும் சொல்வதை தானே நம்பி ஏற்கிறீர்கள்?
அப்படி இருக்கையில், குர் ஆனுக்கு முரண் என நீங்கள் சொல்லும் ஹதீஸ் விஷயத்தில் மட்டும் அந்த அறிவிப்பாளர் நம்பகமானவர் என நூலாசிரியர் சொல்வதை ஏன் ஏற்க மாட்டேன் என்கிறீர்கள்?
நம் பதில் :
கருத்தை தான் (அது சரியா, தவறா என) ஆய்வு செய்ய முடியும். ஒரு அறிவிப்பாள்ர் பற்றிய வரலாற்றுக் குறிப்பை இன்றைக்கு ஆய்வு செய்ய முடியாது.
என்ன பதியப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே ஏற்க தான் நம்மால் முடியும்.
இந்த ரிவாயத்தில் வரும் இன்னார் நினைவாற்றல் குன்றியவர் என வரலாற்று ஆசிரியர் ஒன்றை சொன்னால்..
உண்மையில் அந்த நபர் நினைவாற்றல் குன்றியவர் தானா இல்லையா என்பதை 1000 வருடம் பின்னோக்கி சென்று நம்மால் தேட முடியாது. இருக்கின்ற அந்த தகவலை அப்படியே ஏற்கும் நிலையில் தான் நாம் இருக்கிறோம்.
அதே சமயம், அந்த செய்தியில் சொல்லப்படும் கருத்து சரியா தவறா என்பதைப் பொறுத்தவரை, எந்த இமாமும் நமக்கு தேவையில்லை.. அதை ஆய்வு செய்ய தான் அல்லாஹ் நமக்கு குர் ஆனை தந்திருக்கிறான், சிந்திக்கிற மூளையையும் தந்திருக்கிறான்.
சிந்தித்து முடிவு செய்ய இடமிருக்கின்ற விஷயத்தில் சிந்தித்து தான் முடிவு செய்ய வேண்டும் என சொல்கிற போது.. சிந்திக்க இடமில்லாத விஷயத்தை தூக்கி கொண்டு வந்து வாதிடுவது அறிவுடைமை ஆகாது. இது முதல் விஷயம்.
இரண்டாவதாக..
அப்படியே ஒரு அறிவிப்பாளரின் நம்பகத்தன்மை சரியில்லை என ஒரு இமாம் ஒன்றை சொல்லியிருக்க.. அதை நாம் ஏற்கிறோம் என்றாலும்..
அந்த இமாம் 100% அப்பழுக்கற்றவர் என்றோ அந்த அறிவிப்பாளர் பற்றி இந்த இமாமின் கணிப்பு 100% குறையே காண முடியாத கணிப்பு தான் என்றோ நாம் சொல்வதாக ஆகாது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.!
ஒரு அறிவிப்பாளர் சரியானவர் என இமாம் புகாரியே பதிவு செய்தாலும்.. சரியில்லாத ஒருவரை சரியானவர் என தவறுதலாகவும் புகாரி இமாம் சொல்லியிருக்க கூடும்.. என்கிற புரிதலையும் சேர்த்தே தான் நாம் கொள்கிறோம்.
அல்லது சரியான ஒருவரை சரியில்லாதவர் என இமாம் புகாரி சொல்லியிருக்கவும் வாய்ப்புண்டு. அதையும் சேர்த்தே தான் புரிந்து வைத்திருக்கிறோம்.
அதை மேற்கொண்டு ஆய்வு செய்ய நாம் சக்தியற்றவர்கள் என்பதால்.. சந்தேகத்திற்கிடமானதை விட்டும் தவிர்ந்து கொள்வோம் என்கிற அடிப்படையில் அந்த இமாமின் கருத்தை அப்படியே ஏற்கிறோம்.
அறிவிப்பாளர் தொடர் வகையில் சஹீஹ் என ஆளானப்பட்ட இமாம் புகாரி, முஸ்லிம், அஹமத் போன்றோர் ஒன்றை சொன்னாலும்
அதி ளயீஃபாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது..
அதே போல.. ளயீஃப் என அவர்கள் சொன்னது சஹீஹாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது..!!
சம்மந்தப்பட்ட மனிதர்களின் நம்பகத்தன்மை குறித்து, அக்கால தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, அவர்ககளுக்கு இருக்கும் வசதி வாய்ப்பை கொண்டு திரட்டப்பட்ட தகவலை நமக்கு சொல்கின்றனர்.
நாமும் அதை ஏற்கிறோம்.
அதை தாண்டி ஆய்வு செய்ய அந்த இமாமும் சக்தியற்றவர்கள், நாமும் சக்தியற்றவர்கள்.
அதே சமயம், அவர்கள் பதிவு செய்கின்ற கருத்து நடைமுறைக்கு மாற்றமாகவோ, பகுத்தறிவுக்கு முரணாகவோ, குர் ஆனின் அடிப்படைக்கு மாற்றமாகவோ இருப்பதை நம் அறிவை கொண்டு ஆய்வு செய்யலாம், ஆய்வு செய்ய வேண்டும்.
ஏனெனில், தவறுக்கு அப்பாற்பட்டவன் அல்லாஹ் மட்டுமே !
இதுவே சரியான தவ்ஹீத் !!!
சஹீஹான ஹதீஸை தவ்ஹீத் ஜமாஅத் மறுக்கிறது"
என்கிற சொல்லாக்கமே அவ்வாறு சொல்வோரின் அப்பட்டமான வழிகேட்டை அம்பலப்படுத்துகிறது !
"சஹீஹ்" என்று ஒரு செய்தியை சொல்வதாக இருந்தால் அல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதரோ தான் அதனை நமக்கு சொல்ல வேண்டும்.
நாம் மறுக்கும் செய்தி ஒன்றை எடுத்துக் கொள்வோம். உதாரணத்திற்கு நபிக்கு சிஹ்ர் வைக்கப்பட்டதாக வரும் செய்தி.
இந்த செய்தி சஹீஹான செய்தி என்று அல்லாஹ் சொல்லியிருக்கிறானா?
குர் ஆனில் இந்த சம்பவம் பற்றி சொல்லப்பட்டுக்கிறதா?
ஏதோ அல்லாஹ்வே இவர்களிடம் வந்து இது சஹீஹ் என்று சொல்லி விட்டதைப் போல...
சஹீஹானதை மறுக்கிறார்கள், சஹீஹானதை மறுக்கிறார்கள் என ஒப்பாரி வைக்கின்றனர் இந்த சலஃபுகள்.
அந்த செய்தியை அறிவிப்பவர் குறித்து எந்த குறையையும் நூலாசிரியர்கள் காணாததால்
அல்லது அதில் உருவான பிழைக்கான காரணம் எதுவும் நூலாசிரியரின் அறிவுக்கு புலப்படாததால் அதை சஹீஹ் தரத்தில் வைத்து விட்டார்.
அவ்வளவு தான்.
இப்ப, அந்த நூலாசிரியர் சொல்வது தான் நாம் சஹீஹ் சஹீஹ் என ஒப்பாரி வைப்பதற்கு காரணம் என்றால்
அந்த நூலாசிரியரை அல்லாஹ்வின் இடத்தில் வைக்கிறோம் என்று பொருளாகும்.
எப்படி அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனோ..
எப்படி எந்த குறைகளும் அல்லாஹ்வின் கவனத்தை விட்டும் தப்பாதோ..
எப்படி அல்லாஹ் சொன்னால் நூற்றுக்கு நூறு அது துல்லியமான தகவலாக இருக்குமோ..
அதே போல இந்த நூலாசிரியர் சொன்னாலும் இருக்கும் என நான் நம்பினால்.............
மலஜலம் சுமக்கும் ஒரு மனிதரை அல்லாஹ்வுக்கு நிகராக ஆக்கி விட்டேன் என்று தானே பொருள் !
சிஹ்ரை உண்மையென நம்புவதன் மூலம் ஷிர்க் செய்கின்ற சலஃபுகள்,
மலஜலம் சுமக்கும் ஒரு நூலாசிரியர் சொல்லி விட்டதாலேயே குருட்டுத்தனமாக அதன் மீது வீழ்ந்ததன் மூலம் இரண்டாவது தடவையாக ஷிர்க் செய்கின்றனர் ! டபுள் ஷிர்க் !
******
சுலைமான் நபிக்கு 90 மனைவிமார்கள் இருந்ததாக புகாரி பாகம் 8 ஹதீஸ் 634ல் பதிவாகியுள்ளது. இதை அபு ஹுரைரா அறிவிக்கிறார்.
பாகம் 9 ஹதீஸ் 561ல் 60 மனைவிமார்கள் இருந்ததாக அதே அபு ஹுரைரா தான் கூறுகிறார்.
இங்கே இந்த முரண்பாடு ஏன் வந்தது?
• 90 தான் சரி என்றால் 60 என்று சொன்ன அபு ஹுரைரா பொய் சொல்கிறார் என்று இந்த சலஃபுகள் அறிவிப்பு செய்வார்களா?
• அல்லது முன்னுக்கு பின் முரணாக பேசக்கூடியவர் என்றாவது சொல்வார்களா?
• அபு ஹுரைரா அறிவிக்கும் ஏனைய ஹதீஸ்களின் நிலை என்ன?
• இரண்டில் ஒரு தகவல் பொய்யானது எனும் போது பொய் தகவலை
பதிவு செய்த புஹாரி இமாமின் ஏனைய ஹதீஸ்களை ஏற்கலாமா?
அது போல்..
புஹாரி பாகம் 7, ஹதீஸ் 787 இல், நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்திற்கு பிறகு 10 ஆண்டுகள் மக்காவில் வாழ்ந்ததாக செய்தி உள்ளது. இதை அனஸ் இப்னு மாலிக் அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புஹாரி பாகம் 5, ஹதீஸ் 190 இல், நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்திற்கு பிறகு 13 ஆண்டுகள் மக்காவில் வாழ்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
இதை இப்னு அப்பாஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பொய்யான ஒரு தகவலை புஹாரி இமாம் ஏன் பதிவு செய்தார்?
சூனியத்தை புகாரி இமாம் பதிவு செய்த விஷயத்தை கேட்கும் போது மட்டும் புகாரி இமாமின் மற்ற ஹதீஸ்களை எப்படி ஏற்கிறீர்கள்? என வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பவர்கள்,
இதற்கு என்ன பதில் சொல்வர்கள்?
கருத்துக் குருடர்களிடம் பதில் உண்டா ?
ஹதீஸை மறுப்பது குஃப்ர், அது பித்அத்,..தவ்ஹீத் ஜமாஅத்தினர் காஃபிர்களாகி விட்டனர் என ஒரு கூட்டம் கூச்சலிட்டு வருவதால்..
சாம்பிளுக்கு ஒரேயொரு கேள்வியை மட்டும் கேட்க விரும்புகிறோம்.
புகாரி 7407 - தஜ்ஜாலுக்கு வலது கண் ஊனம்.
முஸ்லிம் 2934 - தஜ்ஜாலுக்கு இடது கண் ஊனம்.
இரண்டும் அறிவிப்பாளர் தரத்தில் நம்பகமான, சஹீஹான ஹதீஸ்கள் தான்.
ஏதோ ஒரு கண் தான் ஊனம். அது இடதா வலதா?
இடது சரி என்றால் வலது தவறான தகவல்.
வலது சரி என்றால் இடது தவறான தகவல்.
தவறான தகவல் என்றால் அதை நாம் மறுக்கிறோம் என்று பொருள் !
ஹதீஸை மறுப்பது குஃப்ர் !!
தாங்கள் காஃபிர்கள் தான் என்று சலஃபிகள் ஒப்புக் கொள்கிறார்களா?
•• அல்லது வலதும் தான் ஊனம் , இடதும் தான் ஊனம்.. என சப்பை கட்டு கட்டுவார்களா?
என்னிடமிருந்து வரும் செய்தியை கேட்கையில் உங்கள் முடியும் தோல்களும் அதற்கு பணியுமானால் (அந்த செய்தியை உங்கள் அறிவு ஏற்றுக் கொள்ளுமானால்) அதை சொன்னது நான் தான்.
அதுவே, அந்த செய்தியை நீங்கள் கேட்கையில் உங்கள் முடியும் தோலும் அதை ஏற்க மறுக்கும் பட்சத்தில் அந்த செய்தியை விட்டும் நான் தூரமானவன் என்று நபியவர்கள் சொன்ன செய்தி, அஹமதில் பதிவாகியிருக்கிறது !
இந்த ஹதீஸை வைத்துக் கொண்டு இந்த ஜீபூம்பா கும்பல் (அதாங்க பில்லி,சூனியம் குரூப்) செய்கிற கேலி, கிண்டலை பாருங்க..
////முடியும் தோலும் ஏற்கணும்னா..
யாரோட முடி? பிஜெவோட முடியா ததஜவோட முடியா..
அவரோட முடியும் தோலும் ஏத்துகிட்ட ஒரு செய்திய இவரோட முடியும் தோலும் மறுத்தா அப்ப என்ன பண்றது?
இவரோட முடியும் தோலும் ஏற்றுக் கொள்ளாத ஒன்றை அவரோட முடியும் தோலும் ஏத்துகிட்டா அப்ப என்ன பண்றது...?////
திறமையை காட்டுகிறார்களாம்.
நாம் கேட்பது என்னென்னா.. இவர்கள் கேட்கும் இந்த கேள்வி நம்மை நோக்கியா அல்லது நபியை நோக்கியா????
இதை நாம் சொல்லவில்லை. சொன்னது நபி !!
அப்படியிருக்கையில்..இந்த கேள்விகள் அனைத்தும் நபியை நோக்கி செய்கின்ற கேலி, கிண்டலாகி விடும் என்கிற சாதாரண புரிதல் கூட இந்த கும்பலுக்கு இல்லையென்றால் இவர்களெல்லாம் மார்க்கம் பேச தகுதியானவர்களா?
உங்கள் அறிவு ஏற்கும் பட்சத்தில் அந்த செய்தி நான் சொன்னது தான் என்று நபி சொன்னது மனி குலம் அனைவரையும் நோக்கி தானே தவிர..
சஹாபாக்களின் அறிவு ஏற்றுக் கொண்டால்..
உங்கள் முன்னோர்களின் அறிவு ஏற்றுக் கொண்டால்..
உங்களில் தலைப்பாகை அணிந்து தஸ்பீஹ் உருட்டிக் கொண்டிருப்பவரின் அறிவு ஏற்றுக் கொண்டால்..
பெரிய ஜுப்பா அணிந்து பயான் செய்பவரின் அறிவு ஏற்றுக் கொண்டால்..
அப்படி நபி சொல்லவில்லை !
---------
/// "இமாம்கள் ஹதீஸ்களை மறுக்கவில்லை, ளயீஃப் எது சஹீஹ் எது என தரம் பிரிக்க தான் செய்தார்கள்" ////
இப்படியொரு நகைச்சுவையான சலஃபு குரூப்பின் சார்பாக வைக்கப்படுகிறது.
சஹீஹ் எது ளயீஃப் எது என தரம் பிரித்தாலேயே அதன் பொருள் என்ன?? ஒன்றை ஏற்கலாம், ஒன்னொன்றை ஏற்க முடியாது என்பது தானே?
நபி சொன்னார்கள் என தமக்கு கிடைத்த செய்தி ஒன்றை, இல்லை, இன்னின்ன காரணத்தால் நபி சொன்னதாக எனக்கு தோன்றவில்லை என்று இமாம் சொன்னால்.. அது மட்டும் எப்படி ஹதீஸ் மறுப்பாக கருதப்படாமல் போனது?
இன்னும் சொல்லப்போனால்,
ளயீஃப் என ஒரு ஹதீஸை அவர்கள் பிரிப்பதிலேயே பல வகைகளை உட்படுத்துகின்றனரே..
வேண்டுமென்றே இட்டுக்கட்டப்பட்டது
(மவ்ளூவ்) - அதாவது கட்டாயம் பொய்யர் தான் இதை அறிவித்தார் என நிரூபணமாவது.
அல்லாமல், பொய்யரா என சந்தேகம் மட்டும் எழும் செய்தியை கூட ளயீஃப் என தரம் பிரிப்பர். இதற்கு மத்ரூக் வகை எனப்பெயர்.
இவை அல்லாமல்
• சங்கிலித் தொடர் அறுந்தது,
• அனைத்தையும் அழகாக சொல்லி விட்டு, இப்படி தான் நபி சொன்னார்கள் என்று சொல்லாமல் விட்டு விடுவது,
• பெரும்பான்மை அறிவிப்புக்கு மாற்றமாக சொல்வது ,
• அறிவிப்பவர் பெயர் மட்டும் தெரியும், கூடுதல் விபரம் தெரியாதது,
• தாபியீ யார் என தெரியாதது,
• தமக்கு அறிவித்தது யார் என சொல்லாமல் 'இப்படி எனக்கு சொல்லப்பட்டது' என்று மட்டும் சொல்வது...
• அறிவிப்பாளர் தமது சொந்த கருத்தாக சில வார்த்தைகளையும் சேர்த்து விடுவது...
• எல்லாம் சரியாக இருக்கும், ஆனால் பெயரை மட்டும் மாற்றி சொல்லி விடுவது..
இப்படியாக, இது நபி சொன்னதில்லை என்றோ நபி சொன்னதா இல்லையா என சந்தேகம் எழுந்து விட்டது என்ற வகையிலோ பிரிக்கப்பட்ட ஹதீஸ்கள் ஏராளம் ஏராளம்.
இதுவெல்லாம் ஹதீஸ் மறுப்பில் வராதா????
இப்படி தான் நபி சொன்னார்கள் என்கிற வார்த்தை சேர்க்காமல் அறிவிக்கப்படும் ஹதீஸ் உண்மையில் நபி சொன்னதாக இருந்தால்?
அதன் மீது சந்தேகம் கொண்டு அதை நிறுத்தி வைத்த குற்றத்திற்கு என்ன பதில்?
யாரென அறியப்படாத ஒரு அறிவிப்பாளர், பொய்யராக தான் இருந்தாக வேண்டுமா?
அவர் கூறியது உண்மையில் நபி சொன்னதாகவே இருந்திருந்தால் அதை நிறுத்தி வைத்த குற்றத்தில் இமாம்கள் சேர மாட்டார்களா?
அல்லது, ஹதீஸ்களை இப்படியான அளவுகோல்கள் கொண்டு பிரியுங்கள் என்று புகாரி, முஸ்லிம், அஹமத் போன்ற இமாம்களுக்கு அல்லாஹ்வே வஹீ அருளினானா?
என்ன அடிப்படையில் அவர்கள் ஹதீஸ் பாதுகாப்பாளர்களாகவும் நாங்கள் ஹதீஸ் மறுப்பாளர்களாகவும் ஆவோம்?
நாம் மறுப்பாளர்கள் என்றால் நம்மை விட அந்த இமாம்கள் ஆயிரம் மடங்கு மிகப்பெரிய மறுப்பாளர்கள் தான்.
அந்த இமாம்கள் மிகப்பெரும் ஹதீஸ் பாதுகாவலர்கள் என்றால் நாமும் சிறிய அளவிலான பாதுகாவலர்கள் தான் !
நாம் மறுக்கும் ஒரு ஹதீஸ் உண்மையில் மறுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லாததாக இருக்கலாம்.
அல்லது நாம் ஏற்கும் ஹதீஸ் ஒன்று உண்மையில் மறுக்கப்பட வேண்டியதாக இருக்கலாம்.
இந்த பிழை, அவரவர் இறையச்சத்தைப் பொறுத்து அல்லாஹ்வின் புறத்தில் உள்ளது.
அல்லாமல், ஹதீஸ் ஆய்வு என்றாலேயே அது இமாம் காலத்தோடு முற்றுப் பெற்று விட்டதைப் போலவும், இன்று நாம் எந்த ஒன்றையும் குர் ஆனுக்கு முரணா என அலசிப் பார்ப்பதே கூடாது எனவும் பேசுவது சுத்த அபத்தம் மட்டுமல்ல..
இஸ்லாமிய வட்டத்தை விட்டே வெளியேற்றி விடும் வழிகேடு அது !.
அஹமதில் வரக்கூடிய மிக அழகான ஹதீஸ்
ஒரு செய்தி நபியின் பெயராலேயே சொல்லப்பட்டாலும்,
அச்செய்தியை நம் உள்ளம் வெறுக்குமானால்,
நம் தோல்களும் முடிகளும் அதற்கு கட்டுப்படாமல் விரண்டோடுமானால்,
அது நம் வாழ்க்கைக்கு தூரமாக இருப்பதாக நாம் கருதினால்,
அந்த செய்தி நபி சொன்னதில்லை என கருதிக் கொள் !
இது நபியின் அறிவிப்பு..!!
உங்களில் அறிஞர்கள் எவரோ அவர்களுக்கான நிபந்தனை இது என்றோ
உங்களில் ஆட்சியாளருக்கான நிபந்தனை இது என்றோ,
அல்லது ஹதீஸ்கலை இமாம்களின் பணி இது என்றோ நபியவர்கள் சொல்லவில்லை.!
பொதுவாக மனிதகுலத்தை நோக்கி சொல்கிறார்கள்.
அப்படியானால் இது ஒரு Open declaration!!
இறையச்சத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தனி நபரும் இந்த அளவுகோலின் முடிவு செய்து கொள்ளலாம் என்று பொருள் !
வேடிக்கை என்னவென்றால் இதையும் கேலி செய்கிறது ஒரு கூட்டம்.
அந்த ஹதீஸ இவருடைய தோல் ஏற்கல..அவருடைய தோல் ஏற்குது..
இந்த ஹதீசுக்கு என்னுடைய முடி எழும்பல, இவருடைய முடி எழும்புது..
என்றெல்லாம் வித்தை காட்டுகிறார்கள்.
இந்த கேலி கிண்டல் எல்லாம் நம்மைப் பார்த்தா அல்லது நபியை பார்த்தா?
உன் முடி ஏற்கவில்லை என்றால் அந்த ஹதீஸை மறுற்று விடு என்று சொன்னது தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர் குழுவா அல்லது நபியா?
தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதாக நினைத்து
யாரை கேலி செய்கிறீர்கள்?
தவ்ஹீத் ஜமாஅத் ஹதீஸை மறுக்கிறதாம்.
நபி (சல்) அவர்களது கூற்று ஒன்றை அப்பட்டமாக கேலி செய்யும் இந்த கூட்டம் இதை பேசலாமா?ம
எனது முடி ஏற்காவிட்டால் நான் அந்த ஹதீஸை மறுக்கலாம்.
உனது முடி ஏற்காவிட்டால் நீ அதை மறுக்கலாம்.
இதில் நடுவர் என எவரும் இருந்து தீர்ப்பளிக்க வேண்டியதில்லை !
புரிய வேண்டிய விதத்தில் மார்க்கத்தை புரிவோம் !
---------------
சஹாபாக்களின் விளக்கம் அவசியம் என்பதை நிறுவும் ஏதேனும் ஒரு சான்றை தர முடியுமா என நாம் தொடர்ச்சியாக கேட்டு வரும் கேள்விக்கு சவுதியிலிருந்து ஒரு சலஃபி சகோதரர் ஒருவர் சில பதில்களை வாட்சப் மூலம் அனுப்பியுள்ளார்.
அதில்.அவர் வைத்த வாதம் ஒன்று - சூரா மாயிதா 6வது வசனத்தில் மனைவியுடன் இல்லற உறவில் ஈடுபட்டால் குளிப்பு கடமை என சொல்லப்படுகிறது. இதில் பயன்படுத்தப்பட்ட அரபு பதம்
"மஸ்" என்பதாகும்.
இதற்கு தொடுவது என்பது தான் நேரடி அர்த்தம். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தான் இதற்கு உடலுறவு என பொருள் வைத்து தஃசீர் செய்து தந்திருக்கிறார்கள்.. அதை தான் நாம் அனைவருமே பின்பற்றுகிறோம் என்பதாக ஒரு வாதத்தை முன் வைத்திருக்கிறார்.
"மஸ்" என்பதற்கு நேரடி அர்த்தம் தொடுவது என்பது அல்ல.
மஸ் என்பதற்கு பொதுவான பொருள் என்பது அடைதல் என்பதாகும். குர் ஆனில் வரல்கூடிய அனைத்து இடங்களிலும் இந்த வார்த்தைக்கு அடைதல் என்று தான் பொருள் வைக்கப்பட்டுள்ளது.
உதா - 17:67 - துன்பம் உங்களை அடைந்தால்.
41:51 - வேதனை உங்களை தீண்டினால்..
இந்த வசனங்களிலெல்லாம் தொடுதல் என பொருள் கொள்ள இயலாது. காரணம், வேதனை என்பது நம்மை வந்து தொடாது,
physical touch என்பது இங்கில்லை.
வேதனை சம்மந்தப்படுத்தி பேசும் போது அது நம்மை வந்து அடைவதைத் தான் அது குறிக்கும்
அது போல, பெண்களை அடைவது என்கிற context ல் "மஸ்" என்று வந்தால் அது இல்லற உறவைத் தான் குறிக்கும்.
பெண்களை தொடுதல் என்றும் பொருள் கொள்ளலாமே.. என்று ஒரு பேச்சுக்கு ஒருவர் வாதம் வைத்தாலும்.. அது இங்கு பொருந்தாது.
காரணம், பெண்களை தொட்டால் ஒளு நீங்காது என்பதற்கு குர் ஆனிலும் ஹதீஸிலும்.இன்னபிற இடங்களில் சான்று உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) தொழும் போது நான் குறுக்கே படுத்து உறங்குவேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது என் காலைத் தமது விரலால் தொடுவார்கள். உடனே என் காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்ததும் கால்களை நீட்டிக் கொள்வேன். அன்று வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லை'' என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
நூல் : புகாரீ 513
இங்கு தொழுகையின் போதே தன் மனைவியை நபியவர்கள் தொட்டிருக்கிறார்கள், ஒளு நீங்கவில்லை.
ஆக, மஸ் என்றால் தொடுதல் என்பது பொருளில்லை.
அப்படியானால் அதற்கு என்ன பொருள்?
மனைவியை அடைதல் என் வருகிற போது எது நிகழ்ந்தால் ஒளு முறியும் என இன்னபிற வசனம் அல்லது ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளதோ.. அதை செய்வதை தான் இது குறிக்கும்.
உடலுறவின் மூலம் அல்லது விந்து வெளியேறுவதன் மூலம் தான் குளிப்பு கடமையாகும் என்று நேரடியாகவே பல ஹதீஸ்கள் சொல்கின்றன.
ஒருவர் தனது மனைவியின் (இரு கால், இரு கை ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, பின்பு (உறவுகொள்ள) முயற்சித்தால் குளிப்பு கடமையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம்-348
இச்சை நீர்வெளிப்பட்டால் வுழூச் செய்ய வேண்டும். விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் அலி (ரழி), ஆதாரம்: திர்மிதி-114
ஆக.. மனைவியை அடைந்தால் குளிப்பு கடமை என்பதாக வருகின்ற சட்டத்தில் அடைதல் என்பதற்கு ஆணுறுப்பு பெண்ணுறுப்பை கடந்து விடுவதை தான் குறிக்கிறது என்பதற்கு இன்னபிற ஹதீஸ்கள் தான் நமக்கு விளக்கமாக அமைகிறதேயன்றி, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் விளக்கம் தான் தேவை என சொல்ல வேண்டியதில்லை..!
ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். என்று 9:100 வசனம் சொல்வதன் அடிப்படையில் சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று சவுதி சலஃபு சகோதரர் பதில் அனுப்பியுள்ளார்.
முதல் விஷயம் 'பின் தொடருங்கள்" என எதிர்கால வினையாக அல்லாஹ் இங்கு சொல்லவில்லை.
'பின் தொடர்ந்தவர்கள்' என கடந்த கால வினையாகவே இதை சொல்கிறான்.
அப்படியானால் எப்போதும், எல்லா காலமும் பின்பற்றுவதைப் பற்றி இது பேசவில்லை. மாறாக, முன்பு நிகழ்ந்த ஒன்றைப் பற்றிய செய்தி இது.
அது என்ன?
ஒருவரை, பொதுவாக அவரின் பெயரை குறிப்பிட்டு, அந்த அப்துல்லாஹ்வை பின்பற்று என்று சொன்னால்..
அப்துல்லாஹ்வை அனைத்து அம்சங்களிலும் பின்பற்று.. என்று பொருள் வரும்.
அந்த கொடை வள்ளல் அப்துல்லாஹ்வை பின்பற்று என்றால்.. அவரின் வள்ளல்தன்மை போல் நாமும் பிறருக்கு கொடுத்து உதவும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒரு அம்சம் மட்டும் தான் வரும்.
9:100 வசனத்தில் அல்லாஹ் சொல்வது குறிப்பிட்ட சஹாபாக்களின் பெயரை சொல்லி.. அவர்களை பின்பற்று.. என்று அல்ல.
அல்லது..பொத்தாம்பொதுவாக அனைத்து சஹாபாக்களை பின்பற்று என்று கூட சொல்லவில்லை.
அல்லாஹ் இங்கு சஹாபாக்களின் பண்பை குறிப்பிட்டு சொல்கிறான்..!
அதாவது ஹிஜ்ரத் செய்தவர்களை பின்பற்றி யாரெல்லாம் ஹிஜ்ரத் செய்தார்களோ..
ஹிஜ்ரத் செய்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அன்ஸாரிகளைப் போல யாரெல்லாம் அடைக்கலம் கொடுத்தார்களோ..
அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். என்பது தான் அல்லாஹ் இங்கு சொல்வது.
நிகழ்ந்து முடிந்து விட்ட இற்ந்த கால சம்பவம் பற்றி பேசும் வசனம் இது !
இதற்கும்
சஹாபாக்கள் மார்க்கம் என்கிற பெயரில் தரும் விளக்கங்களையெல்லாம் நாம் பின்பற்ற வேண்டும் என்று சொல்வதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை !
சஹாபாக்களின் விளக்கம் தேவை என்பதைப் பற்றி பேசிய சவுதி சலஃபி, மற்றொரு வாதத்தை முன்வைத்தார்.
அதாவது, ஒரே ஒரு சஹாபி அல்லது ஓரிரு சஹாபாக்கள் சொல்வதை மார்க்க ஆதாரமாக நாம் கருத தேவையில்லை தான்.
அதே சமயம், "இஜ்மா'உஸ் ஸஹாபா" - ஒட்டு மொத்த சஹாபாக்களும் ஏகமனதாக தரும் விளக்கத்தை மார்க்க ஆதாரமாக கருத வேண்டும்.. என்று..
அடிப்படையற்ற வாதம் இது.
காரணம், முதலில் இஜ்மா என்பது சாத்தியமற்ற தத்துவம்.
ஒட்டு மொத்த சஹாபாக்களின் கூற்று என்றால்.. முதலில் சஹாபாக்களின் மொத்த எண்ணிக்கை நம் கைகளில் இருக்க வேண்டும்.
அவர்களின் பெயர்கள் அனைத்தும் தெரிய வேண்டும்.
அனைத்தையும் விட, அவர்கள் ஒவ்வொருவரும் சம்மந்தப்பட்ட அந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்லியிருக்க வேண்டும். அவை நம் கவனத்திற்கு வர வேண்டும்.
இது சாத்தியமா? அறிவுக்கு பொருந்துகிறதா?
ஒரு பேச்சுக்கு இஜ்மாவுஸ் ஸஹாபாவை எடுத்துக் கொள்ளலாம் என்றே வைத்துக் கொள்வோமே..
மொத்த சஹாபாக்களின் எண்ணிக்கை என்ன?
முஹாஜிரீன்கள் எத்தனை பேர், அன்சாரிகள் எத்தனை பேர்?
அவர்களின் பெயர் பட்டியல் கொண்ட மொத்த database யாரிடம் உள்ளது??
இந்த கேள்விக்கு பதில் இல்லாதவரை இஜ்மாவுஸ்ஸஹாபா என்கிற வாதம் வெறும் ஏட்டுச் சுரக்காயாகவே இருக்கும் !
அபுபக்கர் (ரலி), உமர் (ரலி) காலத்தில் சஹாபாக்கள் ஏகமனதாக குர் ஆனை தொகுத்தார்கள்.. அந்த வரிசையும் தொகுப்பும் தான் இன்றளவும் பின்பற்றப்படுகிறது என்ற வாதம் வைக்கப்படுகிறது.
நாம் என்ன கேட்கிறோம் என்றால் அது ஏகமனதான முடிவு என உங்களுக்கு சொன்னது யார்? ஒட்டு மொத்த சஹாபாக்களும் அந்த குர் ஆன் தொகுப்பை ஒரு மனதாய் அங்கீகரித்தார்கள் என்று எங்கே சான்று உள்ளது??
கலீஃபாக்களின் ஆட்சியில் அவர்கள் எடுத்த நிர்வாக முடிவு என்கிற வகையில், ஏகமனதான முடிவாக இருந்தாலும் பலர் மாற்றுக் கருத்து கொண்டிருந்தாலும் ஆட்சியாளரின் முடிவே இறுதியானது.
அது தான் வரலாறாக நம் கைகளிலும் வந்து சேரும்.
இது ஒரு விஷயம்.
அடுத்து,
ஒரு வாதத்திற்கு இது ஏகமானதான முடிவு என வைத்துக் கொண்டாலும் கூட.. இதற்கும் மார்க்கத்திற்கும் சம்மந்தம் இல்லையே..
குர் ஆன் தொகுக்கப்பட்ட அந்த வரிசை என்பது அல்லாஹ் நமக்கு சொன்னதல்ல.
இந்த வரிசையில் தான் தொகுக்க வேண்டும் என்று நபியவர்கள் நமக்கு வாய்வழி கட்டளை எதையும் வகுக்கவில்லை.
ஒரு வேளை அப்படி சொல்லியிருந்தால் தான் நபியின் பேச்சு வஹீ என்கிற அடிப்படையில் இந்த வரிசையை பேணுவதும் அதை கவனத்தில் கொள்வதும் சுன்னாஹ் எனும் நிலையை அடையும்.
இந்த வரிசை பற்றி நபி(சல்) எதையும் சொல்லாத போது.. பிற்கால கலீஃபாக்கள் உருவாக்கியது நிர்வாக வசதிக்காக தானே தவிர, இந்த வரிசையை மாற்றி இன்று நாம் ஒரு பிரதியை தயாரித்தால் மார்க்க அடிப்படையில் அது குற்றம் என சொல்ல இயலாது.
சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்வோர் ஒரு ஆதாரத்தை முன் வைக்கும் போது .அதில் சஹாபாக்கள் சொன்னதற்கு மாற்றமாக செயல்பட்டால் மார்க்க அடிப்படையில் அது குற்றமாகி விடும் என்று சொல்லி தான் அதை நிறுவ வேண்டும்.
சஹாபாக்கள் ஏகமனதாக சொன்னதைப் போலவும் செய்யலாம்.. அதற்கு மாற்றமாகவும் செய்யலாம்.. நம் மார்க்க பிடிப்பில் எந்த பாதகமும் வரப்போவதில்லை.. என்று நிரூபணமாகி விட்டாலேயே அது விஷயமாக சஹாபாக்களை பின்பற்ற தேவையில்லை என்பது உறுதியாகிறது !
குர் அனை சஹாபாக்கள் வரிசைப்படுத்தியது போல தான் நாமும் இன்று வரிசைப்படுத்த வேண்டும், அல்லது மறுமையில் நாம் குற்றவாளிகள் ஆவோம் என்று சலஃபிகள் சொல்வார்களா???
-- abu shaheen
https://bit.ly/3T13lAC