இந்த புழுக்கள் நாம் குடிக்கும் தண்ணீர் மற்றும் உணவின் மூலமாக நமது குடலுக்குள் செல்கிறது.
குடல் புழுக்கள் அதிகம் இருப்பதற்கான பல அறிகுறிகள் உள்ளது அதில்
சோர்வு,
குமட்டல்,
மலக்குடல் எரிச்சல்,
திடீர் உடல் எடை குறைவு
கெட்ட சுவாசம்,
வயிற்று போக்கு,
கருவளையம்,
இரவில் தூக்கம் வராமல் கெட்ட கனவுகள் காண்பது,
அடிக்கடி பசி எடுத்தல்,
தலைவலி,
அனிமியா போன்ற அறிகுறிகள் இருப்பதை தெரியப்படுத்துகின்றன.
மேலும் இந்த குடல் வாழ் புழுக்களை அழிக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். அதுமட்டுமின்றி இதனை அழிக்க சில எளிய வீட்டு வைத்தியங்களும் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.
இரண்டு பூண்டு பற்களை உங்கள் ஷூக்களில் வைத்து கொண்டு நடங்கள். நீங்கள் நடக்கும் போது பூண்டு பற்கள் நசுங்கி அதன் சாறு உங்கள் சருமத்தின் வழியாக இரத்தத்தில் கலந்து குடலுக்குள் சென்று விடும். இந்த சாறே போதும் குடல் புழுக்களை அழிப்பதற்கு.
1 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை காலை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் 21/2 மணி நேரம் கழித்து விளக்கெண்ணெய்யை குடியுங்கள். இந்த முறை குடல் புழுக்கள் எல்லா வகையையும் அழித்து விடும். இது உங்களுக்கு குணமாகும் வரை எடுத்து கொள்ளுங்கள்.
சிறிய கப் அளவு கரட்டை ஒவ்வொரு நாள் காலையிலும் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு அப்புறம் எதுவும் சாப்பிடாதீர்கள். இது புழுக்களை சீக்கிரமாக வெளியேற்றி விடும்.
1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் பப்பாளி ஜூஸ் மற்றும் 4 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான நீர் கலந்து குடித்து வாருங்கள். இதனுடன் 2 மணி நேரத்திற்கு பிறகு 40 மில்லி லிட்டர் விளக்கெண்ணெய் மற்றும் 300 மி. லி வெதுவெதுப்பான நீர் சேர்த்து குடிக்க வேண்டும். இதை இரண்டு நாட்களுக்கு பின்பற்ற வேண்டும். 7-10 வயது குழந்தைக்கு இதில் பாதியளவு மட்டுமே கொடுங்கள்.
நாடாப் புழுக்களை அகற்ற உலர்ந்த விதைகளை பொடி செய்து கொதிக்க வைத்து அதன் சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். மறுபடியும் அடுத்த நாள் 3 டம்ளர் எடுத்து வாருங்கள். இப்படி செய்து வந்தால் குடல் புழுக்களின் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
தினமும், காலையில், சிறிதளவு பாதாமை உட்கொண்டு வந்தால், வயிற்றில் புழுக்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை கட்டுப்படுத்தும்.
தினமும், 2 டீஸ்பூன், கற்றாழை சாறை, தொடர்ந்து, ஒரு வாரம் குடித்து வந்தால், வயிற்றில் வளரும் குடல் புழுக்களை தடுக்கலாம்.
அன்னாசிப்பழத்தில் உள்ள புரோமிலைன் எனும் நொதி, வயிற்றில் வளரும் புழுக்களின் வளர்ச்சியை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, உங்கள் வயிற்றில் புழுக்கள் இருப்பது போன்ற அறிகுறி தென்பட்டால், ஒரு வாரத்துக்கு, தினமும் சிறிது அன்னாசியை உட்கொண்டு வர வேண்டும்.
பூசணிக்காய் விதைகள், உடலில் உள்ள ஒட்டுண்ணிகளை அழித்து வெளியேற்ற உதவும். எனவே, மாலை வேளைகளில், சிறிது பூசணிக்காய் விதைகளை உட்கொண்டு வர மாற்றம் தெரியும்.
வெங்காயத்திலும் இருக்கிறது இதற்கான மருத்துவம்.
வெங்காயத்தை அரைத்து சாறெடுத்து, ஒரு நாளைக்கு, இரண்டு டீஸ்பூன் என, தொடர்ந்து பத்து நாட்கள் குடித்து வர, வயிற்றில் இருக்கும் நாடாப்புழுக்கள், வேறு சில குடல் ஒட்டுண்ணிகளின் வளர்ச்சி வெளியேற்றப்படும்.
பப்பாளி விதையின் சுவை, பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அந்த பப்பாளி விதையை, மாதம் 1முறை உட்கொண்டு வந்தால், வயிற்றில் வளரும் நாடாப்புழு, உருளைப்புழு, ஆகியவை அழிந்து வெளியேறும்.
