தண்ணீரில் வெந்தயத்தைச் சேர்த்துக் குடிப்பதால் என்ன பலன்கள் கிடைக்கும்?
இனி வெந்தய நீரால் உண்டாகும் பயன்களைப் பார்ப்போம்.
இரத்தத்தில் கலந்துள்ள நச்சு பொருட்களை வெளியேற்றும் செயல்களை செய்வது சிறுநீரகங்கள். வெந்தயம் ஊற வைத்த நீரையோ அல்லது வெந்தயத்தை வேகவைத்த நீரையோ அருந்துபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதை தடுக்கும். மூத்திரக்கடுப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும்.
ஜுரம் மற்றும் நெடுநாட்கள் மருத்துவமனைகளில் இருந்தவர்கள் பல மருந்துகளை உட்கொண்டு அவர்களின் உணவுக்குழாய் மற்றும் ஜீரண உறுப்புகளில் புண்கள் ஏற்பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் அரிசி கஞ்சியில் சிறிது வேகவைத்த வெந்தயத்தைக் கலந்து உட்கொண்டு வர உடல் பலம் பெரும். வெந்தய நீரை குடித்துவர வயிற்று புண்களும் குணமாகும்.
தினம் இரவு சிறிது வெந்தய விதையை ஊற வைத்து, மறுநாள் காலையில் மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகி வர, ஆரம்ப நிலை நீரழிவு நோய் குணமாகும். மத்திய, முற்றிய றிலை நீரழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
வெந்தயம் மற்றும் வெந்தய நீரானது நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுகளை போக்குகிறது.
கோடை காலத்தில் கடுமையான வெம்மை தாக்காதிருக்க காலையில் சிறிது வெந்தயத்தை மென்ற தின்று ஒரு டம்ளர் நீராகாரம் பருகி வர உடல் நன்கு குளிர்ச்சி அடையும்.
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம். எனவே நீரிழிவு, மலச்சிக்கல் ஆகியவற்றை குணமாக்க உதவும்.
வெந்தயம் வறுத்து , சின்ன வெங்காயம் சேர்த்து, வாரம் ஒருமுறை வெந்தயக் குழம்பு வைத்து சாப்பிடலாம்.இதற்குக் கானத் துவையல் நல்ல இணைப்பு.
மாதம் ஒரு முறை வெந்தயக் களி , சுக்குக் களி,ஓமக் களி இவற்றை ஒன்று மாற்றி ஒன்று செய்து சாப்பிடலாம்.
இட்லி தோசை மாவு ஊறப் போட்டு அரைக்கையில் ஒரு ஸ்பூன் வெந்தயமும் சேர்த்து அரைத்தால்,இட்லி தோசை மெதுவாக இருக்கும்.அதோடு வெந்தயச் சத்து உடலில் சேரும்.
உடலில் எந்த நோயும் இல்லாதவர்கள் , இந்த அளவில் , வெந்தயத்தைச் சேர்த்துக் கொண்டால் போதுமானது.
இரத்தச் சர்க்கரை அதிகம் உள்ளவர்கள் தினசரி ஒரு ஸ்பூன் பகலில் ஊறப் போட்டு, மறுநாள் முளை கட்டியதை , அரைத்து, மோரில் கலந்து குடித்து வரலாம்.இருபத்தோரு நாள் குடித்து விட்டு, ஒரு வாரம் இடைவெளி விட்டு திரும்ப செய்யுங்கள்.மாதம் ஒரு முறை இரத்த சர்க்கரை அளவை சோதனை செய்வதை நிறுத்தாதீர்கள்.இரத்த சர்க்கரை அளவு அதிகமாகக் குறைந்து விட்டால்,வெந்தயத்தை நிறுத்தி விடுங்கள். இடைவெளி விட்டு பிறகு ஆரம்பிக்கலாம்.
உடல் உஷ்ணம் இருப்பதாக உணர்வோரும் இதைச் செய்து வரலாம்.
வெந்தயக் கீரை வாங்கி வாரம் ஒருமுறை செய்து சாப்பிடலாம்.
வெந்தயத்தை ஊற வைத்து , அரைத்து , பெண்கள் தலையில் தேய்த்து ,ஊற வைத்துக் குளித்தால், சூடு தணியும், பொடுகு போகும்.முடி பளபளக்கும்.முடி வளர்ச்சிக்கு உதவும்.
வீட்டிலே தயாரிக்கும் கூந்தல் தைலங்களிலும், குளியல் பொடிகளிலும் ஐம்பது கிராம் வரை வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளலாம்.
வெந்தயம் இரத்த விருத்திக்கு உதவும்.இரும்புச்சத்து , கால்சியம் சத்து குறைபாடு அகற்றும்.எலும்புகளைப் பலப்படுத்தும்.
வெந்தயம் நார்ச்சத்து மிக்கது.மலச்சிக்கல் அகற்றும்.மூலநோய்க்கு மருந்து.மூல நோய் வராமல் தடுக்கும்.மூலநோய்க்கான துணை மருந்து.
வெந்தயம் குடல் புண் குணமாக்கும்.நெஞ்செரிச்சல்,புளிச்சேப்பம் போக்கும்.உள் உறுப்புகளில் உஷ்ணத்தை தணிக்கும்.உள் உறுப்புகள் செயல்பாட்டை சீராக்கும்.
தினமும் ஒரு ஏலக்காய் வாயில் போட்டு மெல்லுவது ஆரோக்கியமான பழக்கமா?
ஏலக்காய் மெல்லுவது உடலுக்கு நல்லதுதான். ஆனால் அதை அளவுடன் உபயோகிக்கவும். ஏலக்காய் இரத்தமிளக்கி. இரத்தம் இளகி விடும். எனவே கோடையில் கவனம் தேவை. ஆனால் குளிர் காலத்தில் நல்லது.
ஏலக்காயின் சில பயன்கள்.
இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும்.
ஆஸ்துமா நோயாளிகளுக்கும் ஏற்றது. சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது.
வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது.
ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப் படுத்தலாம்.
சூயிங்கம், சிக்லெட், சாக்லேட் என எதையாவது வாயில் போட்டு அசை போடுவதால் எந்தப் பலனும் இல்லை. அதற்குப் பதிலாக ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடுவது நல்லது.
ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காய் கஷாயம் பருக வேண்டும்.
ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெயில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம்.
அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம்.
ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.
வறுத்த பூண்டு அற்புதபலன்கள்
வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?
பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.
பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.
மேலும் பூண்டுகள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும்.
இத்தகைய பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது.
வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.
2-4 மணிநேரத்தில் பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.
4-6 மணிநேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.
6-7 மணிநேரம்
பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்..
7-10 மணிநேரம்
இக்காலத்தில், பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.
10-24 மணிநேரம்
முதல் 1 மணிநேரத்தில் ழுண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.
அவையாவன:
* கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும்.
* தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
* இரத்த அழுத்தத்தை சீராக்கும்.
* உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
* உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும்.
* எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
* அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும்.
* உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கும்.
மருத்துவர் முதலில் நமது #நாக்கை பார்ப்பது ஏன் தெரியுமா? அதன்பின்னால் உள்ள விளக்கம் இதோ... 👅 😛 👅
உடம்பு சரி இல்லாத நேரத்தில் மருத்துவரை அணுகும்போது அவர் முதலில் பார்ப்பது நமது நாக்கைதான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பின்வரும் சிலவும் அதற்கு முக்கிய காரணம். அதாவது உங்கள் நாக்கு இருக்கும் நிறத்தை வைத்தே உங்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனை என்பதை கணிக்க முடியுமாம்.
சிவப்பு நிற நாக்கு...👅
உங்கள் நாக்கு அதிக சிவப்பு நிறத்தில் இருந்தால் அது தொற்று நோய் மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.
மஞ்சள் நிற நாக்கு...👅
நாக்கு மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது வயிறு அல்லது கல்லீரல் தொடர்பான நோய் உள்ளதற்கான அறிகுறியாம்.
#பிங்க் நிற நாக்கு...👅
உங்கள் நாக்கு பிங்க் நிறத்தில் இருந்தால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்கள் உடல் ஆரோக்கியமாக உள்ளதாக அர்த்தம்.
#இளம் சிவப்பு நிறமுள்ள நாக்கு...👅
இளம் சிவப்பு நிறத்தில் நாக்கு இருந்தால், அது இதயம் மற்றும் ரத்தம் தொடர்பான நோய் உள்ளதை குறிக்கிறது.
வெள்ளை நிற நாக்கு...👅
ஒருவேளை உங்கள் நாக்கு வெளிர் வெள்ளை நிறத்தில் இருந்தால் உங்கள் உடலுக்கு நீர் சத்து குறைவாக உள்ளது என்றும் நுண்ணிய கிருமிகளின் தொற்று மற்றும் காய்ச்சல் இருப்பதையும் குறிக்கிறது.
#காபி நிறமுள்ள நாக்கு.... 👅
நாக்கின் நிறம் காபி நிறத்தில் இருந்தால், ஒருவேளை அது நுரையீரல் பாதிப்பு உள்ளது என்பதை குறிக்கிறது.
#சிமெண்ட நிறமுள்ள நாக்கு...😛
உங்க நாக்கு சிமெண்ட் நிறத்தில் இருந்தால், அது செரிமானம் மற்றும் மூலநோய் உங்களுக்கு உள்ளது என்பதை குறிக்கிறது.
#நீலம் நிறமுள்ள நாக்கு... 👅
நாக்கின் நிறம் நீலமாக இருந்தால், அவர்களுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளது என்பதை குறிக்கிறது.
சிறிய சிறிய குமிழ்கள் உள்ள நாக்கு நீரிழிவு பிரச்சினைகள் இருக்கிறது என்று அர்த்தம்