இரைப்பை அல்சர் மற்றும் … குடல்புண்ணைகுணமாக
✳ நாம் உண்ணும் உணவானது குடலை அடைந்ததும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் என்ற திரவம் சுரக்கப்படுகிறது. இந்த திரவங்களின் மூலமாக செரிக்க ஆரம்பிகிறது. தினமும் காலையில் இந்த திரவமானது அதிகமாக சுரக்கிறது.
காரணங்கள்❓
காலை உணவை தவிர்த்தால் சுரக்கப்பட்ட அமிலமானது செரிமானத்திற்கு தேவையான உணவு இல்லாததால் குடலை அரிக்க ஆரம்பிக்கும்.
அதனால் குடல் மற்றும் வயிற்றில் புண்கள் ஏற்பட ஆரம்பிக்கும்.
மன அழுத்தம் ஏற்பட்டாலும் இந்த அமிலங்கள் அதிக அளவில் சுரக்கும்.
புளிப்பு அதிகமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
மதுப் பழக்கம் மற்றும் புகைபிடித்தல் வயிற்றிப்புண் வருவதற்கு ஒரு முக்கியமான காரணமாக உள்ளன.
வயிற்றில் வலி ஏற்படும். குறிப்பாக சாப்பிட்டு முடித்ததும் வலி அதிகமாகும். வயிற்றுப் புண்ணை அல்சர் என்றும் குறிபிடுகிறார்கள்.
அல்சர் வருவதற்கு முக்கிய காரணம்
கார உணவு,
நேரந்தவறிய உணவு,
அதீத உணவு,
மசாலா நிறைந்த உணவு,
அசைவ உணவு.
இதைத் தவிர அடிக்கடி சாப்பிடும் வலி நிவாரண மாத்திரைகளும் அல்சரை உருவாக்கலாம்.
நேரம் தவறி உண்பதாலும், தொடர்ந்து அதிக காரமான உணவுகளை உண்பதாலும் வயிற்றுப்புண் வரக்கூடும்.
மேலும் வயிற்றில் உள்ள இரைப்பை, முன் சிறுகுடல், சிறுகுடல், கணையம் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் ஏதேனும் புண் அல்லது அழற்சி இருந்தால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.
இதுதவிர இரைப்பை அழற்சி, இரைப்பை புண், முன் சிறுகுடல் புண், இரைப்பையும் உணவுக் குழலும் இணையுமிடத்தில் ஏற்படும் புண்களும் வயிற்றில் ஏற்படும் எரிச்சலுக்கான காரணங்களாகும்.
புகை பிடித்தல், புகையிலை பயன்பாடு, மது அருந்துதல், வாயுக்கோளாறு, அதிகமான பதற்றம், கோபம் போன்றவற்றாலும் அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது.
அல்சரின்_ஆரம்பத்தில்……
பெப்டிக் அல்சர் (Peptic ulcer)❓
நெஞ்சுப்பகுதியில் எரிச்சலும் வலியும் ஏற்படும்.
அடிக்கடி புளித்த ஏப்பம் வரும்.
பசி இருக்காது.
கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய மாதிரி இருக்கும்.
சிலநேரம் நெஞ்சில் பந்து வந்து அடைப்பது போலிருக்கும்.
இது ஏப்பம் விட்டதும்
சரியாகும். நோயின் அடுத்தகட்டத்தில், வயிற்று வலியும் வாந்தியும் வரும்.
இரைப்பையில் புண் (Gastric ulcer)கேஸ்ட்ரிக் அல்சராக இருந்தால்❓
பசிக்கிற நேரத்தில் வலி வயிற்றைக்
கவ்வி பிடிக்கும். சாப்பிட்டதும் வலிஅதிகமாகும்.
முன்சிறுகுடலில் புண் (Duodenal ulcer)டியோடினல் அல்சராக இருந்தால்❓
சாப்பிட்டதும் வயிற்று வலி
குறையும். அல்சர் கடுமையாகி விட்டதுஎன்றால் ரத்த வாந்தி வரும். மலம் கறுப்பாகப் போகும்.
தடுப்பது_எப்படி❓
நேரத்துக்கு உணவைச் சாப்பிடுங்கள். தேவையான அளவுக்குச் சாப்பிடுங்கள். அதிகச் சூடாக எதையும் சாப்பிடாதீர்கள். காரம் மிகுந்த, மசாலா கலந்த, எண்ணெயில் பொரித்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பு ஏறிய உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதைவிட அடிக்கடி சிறிது சிறிதாகச் சாப்பிடலாம். தக்காளி சாஸ், ஆரஞ்சு, எலுமிச்சை, காபி, டீ, சாக்லேட், மென்பானம், நூடுல்ஸ், புரோட்டா, வாயு நிரப்பப்பட்ட பானம் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். வேகவைத்த, ஆவியில் அவித்த உணவு மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.
அவசரம் அவசரமாகச் சாப்பிடுவது தவறு. அப்படிச் சாப்பிடும்போது, உணவோடு சேர்ந்து காற்றும் இரைப்பைக்குள் நுழைந்துவிடும். பிறகு, ஏப்பம் வரும். சமயங்களில், ஏப்பத்துடன் 'அமிலக் கவளம்' உணவுக் குழாய்க்குள் உந்தப்படும். இதனால், நெஞ்செரிச்சல் அதிகமாகும்.
வழக்கமாக, உணவைச் சாப்பிட்டதும் இரைப்பை விரியும். அப்போது இரைப்பையின்மேல் அழுத்தம் ஏற்பட்டால், உணவுக் குழாய்க்குள் அமிலம் செல்லும். இதைத் தடுக்க, இறுக்கமாக அணியப்பட்ட ஆடைகள், பெல்ட் ஆகியவற்றைச் சிறிது தளர்த்திக்கொள்ள வேண்டும். உணவைச் சாப்பிட்டபின் குனிந்து வேலை செய்யக்கூடாது; கனமான பொருளைத் தூக்கக்கூடாது; உடற்பயிற்சி செய்யக்கூடாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது.
.முக்கிய_யோசனைகள்❓
சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள். குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்லுங்கள். அப்போதுகூட படுக்கையின் தலைப் பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடி வரை உயர்த்திக்கொள்வது நல்லது, இதற்காக நான்கு தலையணைகளை அடுக்கிவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. தலைப் பக்கக் கட்டில் கால்களுக்குக் கீழே சில மரக்கட்டைகளை வைத்தால் போதும். வலது புறமாகப் படுப்பதைவிட, இடது புறமாகத் திரும்பிப் படுப்பது நெஞ்செரிச்சலைக் குறைக்கும்.
மது அருந்துவது, புகைபிடிப்பது, புகையிலை/பான்மசாலா போடுவது இந்த மூன்றும் நெஞ்செரிச்சலுக்கு முக்கிய எதிரிகள். புகையில் உள்ள நிக்கோடின், இரைப்பையில் அமிலச் சுரப்பை அதிகரிப்பதோடு, உணவுக் குழாயின் தசைக் கதவுகளையும் தளரச் செய்வதால், நெஞ்செரிச்சல் அதிகமாகிவிடும். இந்த எதிரிகளை உடனே ஓரங்கட்டுங்கள். உடல் எடையைப் பராமரியுங்கள். அப்புறம் பாருங்கள், நெஞ்செரிச்சல் உங்களிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்றுக்கொள்ளும்.
எளிய_தீர்வுகள்
💊தேவையான பொருட்கள்❓
1. புதிதாக எடுக்கப்பட்ட ஒரு ஸ்பூன் தயிர்
குறிப்பு……
கண்டிப்பான முறையில் புளித்த தயிர் எடுத்து கொண்டால் அல்சர் அதிகமாகும் .. ..
2. சீரக தூள் - கால் ஸ்பூன்
3. இந்து உப்பு - அரை ஸ்பூன்
( கண்டிப்பாக இந்து உப்பு தான் பயன் படுத்த வேண்டும் .. நாம் உபயோகிக்கும் அயோடின் கலந்த உப்பு தான் அல்சருக்கு முக்கிய காரணம் என்பதையும் விளங்கி கொள்ளுங்கள் ..
⏩ செய்முறை❓
முதலில் ஒரு ஸ்பூன் தயிர் எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு நன்றாக கடைய வேண்டும் .. ..
பின்னர் கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவேண்டும்
சீரகத்தை பொண் வருவளாக வறுத்து , நன்றாக பொடியாக்கி வைத்து கொள்ளவும் ..
பின்னர் அரை ஸ்பூன் அளவுக்கு இந்து உப்பு கலக்க வேண்டும் ..
இந்துப்பு தூளாக வாங்கி கொள்ள வேண்டும் .. இந்துப்பு பொடியை தான் அரை ஸ்பூன் போட வேண்டும் ..
⭐உட்கொள்ளும் முறை❓
✅ அல்சர் நோய் ஆரம்பமாக உள்ளவர்கள் இந்த மருந்தை தினமும் காலை , மற்றும் இரவு என இரண்டு நேரம் எடுத்து கொள்ள வேண்டும் . ..
காலை இரவு உணவிற்கு பின் 10 நிமிடம் கழிந்த பின் இதை அருந்த வேண்டும் ..
✅ நீண்ட நாட்களாக அல்சர் உள்ளவர்கள் .. இதை ஒரு நாளைக்கு 4 முறை குடிக்க வேண்டும்.. ..
காலை , மதியம் , மாலை , இரவு
காலை , மதியம் , இரவு மூன்று வேளையும் சாப்பாட்டிற்கு பின்னும் .. மாலை தேநீர் அருந்த கூடிய நேரத்திலும் உட்கொள்ள வேண்டும் .. ..
இந்த எளிமையான வீட்டு மருந்தினை ஏழு நாட்கள் தொடர்ந்து எடுக்கலாம் .. .. அதன் பின்னர் வாரம் இரு முறை கண்டிப்பாக எடுக்கலாம் .. .. ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு முழுமையாக குணமடைய இது ஒன்றே போதுமானது .. ..
கசகசா_பானம்
அல்சர் குணமாக்கும் கசகசா பானம்…
👉 தேவையான பொருட்கள்❓
கசகசா - 2 டீஸ்பூன்
முந்திரி - 4 பருப்புகள்
பாதாம் - 2 பருப்புகள்
தேங்காய் - 2 பெரிய வில்லைகள்
தேன் - 1 டீஸ்பூன்
நாட்டு சர்க்கரை - 2 டீஸ்பூன்
பால் - 1 டம்ப்ளர்
▶செய்முறை❓
முந்திரி, பாதாம், கசகசா ஆகியவற்றை 6 மணி நேரம் முன்னதாகவே இளஞ்சூடான நீரில் ஊறவைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு பாதாமின் தோலை உரித்து விடவும். கசகசா, முந்திரி, பாதாம், தேங்காய் இவையனைத்தையும் மையாக அரைத்துக் கொள்ளவும். 1 டம்ப்ளர் பாலில் அரைத்த விழுதையும் நாட்டுச் சர்க்கரையையும் தேனையும் கலந்து பருகவும். இது குடிப்பதற்கு மிக சுவையான பானமாக இருப்பதுடன் ஏராளமான ஊட்டச்சத்துக்களை அள்ளித் தருகிறது. (குறிப்பு: சர்க்கரை நோயாளிகள் தவிர்த்து விடவும்).
பாதாம் பிசினை பயன்படுத்தி 💊 அல்சரை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
👉தேவையான பொருட்கள்
பாதாம், நெய், பால், சர்க்கரை.
👉செய்முறை❓
ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு உருகியதும் காய்ச்சிய பால், சர்க்கரை, பாதாம் பருப்பு பொடி சேர்க்கவும். இதனுடன் ஊற வைத்திருக்கும் பாதாம் பிசினை சேர்க்கவும். இதை காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர அல்சர் குணமாகும். குடல் புண்களை ஆற்றும். நல்ல உணவாக மட்டுமின்றி அமிலத் தன்மையை குறைக்கிறது.
வாயுவை அகற்றும். பாதாம் பிசின் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
ஜவ்வரிசியை பயன்படுத்தி 💊நெஞ்செரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
👉தேவையான பொருட்கள்❓
ஜவ்வரிசி, தயிர், உப்பு.
👉செய்முறை❓
வேகவைத்த ஜவ்வரிசி எடுக்கவும். இதனுடன் சிறிது உப்பு, புளிப்பில்லாத தயிர் சேர்த்து நன்றாக கலந்து தினமும் ஒருவேளை எடுத்துவர அல்சரினால் ஏற்படும் நெஞ்செரிச்சல் சரியாகும். உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். சிறுநீர்தாரை எரிச்சல் குணமாகும். ஜவ்வரிசி ஒருவகை கிழங்கில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
ஜவ்வரிசியை வேகவைத்து சாதம்போல் வடித்து குடித்துவர குடல் புண் ஆறும். குடலின் உட்புற சுவற்றில் ஏற்படும் அரிப்பை தடுக்கும். ஊட்டச்சத்து மிக்கது. அமிலத்தன்மை அதிகரிப்பதை தடுக்கிறது. சீரகத்தை பயன்படுத்தி அல்சரால் ஏற்படும் நெஞ்செரிச்சல், வயிற்று வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சீரகம், நெய். செய்முறை: பாத்திரத்தில் நெய் விடவும். நெய் காய்ந்ததும் சீரகப் பொடி சேர்த்து காய்ச்சி தினமும் அரை ஸ்பூன் அளவுக்கு காலை, மாலை வேளைகளில் எடுத்துவர நெஞ்செரிச்சல், வயிற்றுவலி சரியாகும். உடல் உஷ்ணம் குறையும். வாயுவை வெளியேற்றும்.
💊 குடல் புண் அல்சர் குணமாக💊 அகத்திப் பால் சாறு.
▶அகத்திக் கீரை . ஒரு கைப்பிடி
▶காய்ச்சாத நாட்டுப் பசும்பால் ..........
தேவையான அளவு சேர்த்து அரைத்து வடி கட்டி தினமும் ஒரு வேளை காலை வெறும் வயிற்றில்
தொடர்ந்து (48) நாற்பத்தி எட்டு நாட்கள் சாப்பிட்டு வர……
குடல் புண் ,பெப்டிக் அல்சர் கேஸ்ட்ரிக் அல்சர்,கேஸ்ட்ரிக் வலி கேஸ்ட்ரிக் புண், போன்ற அனைத்துக் குடல் புண்களும் குணமாகும். ஆயுள் முழுவதும் திரும்ப வாராது குடல் பூச்சிகள் தட்டைப் புழு நாடாப் புழு வெளியேறும் ஹீமோ குளோபின் அதிகரிக்கும்.
👉குறிப்பு ❓
உணவாக அகத்திக் கீரையை மாதம் இருமுறை மட்டுமே சேர்க்க வேண்டும் தினமும் சாப்பிடக் கூடாது.
அகத்திக் கீரை பச்சையாகக் கிடைக்கவில்லை என்பவர்கள் அகத்திக் கீரை உருவி நிழலில் காயவைத்து அரைத்து சலித்து எடுத்த தூள் ஒரு தேக்கரண்டியை காய்ச்சாத நாட்டுப் பசும்பாலில் ( ஒரு மாட்டுப் பால் என்றால் மிகவும் நல்லது ) கலந்து தினமும் இருவேளை நாற்பத்திஎட்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் புண் பெப்டிக் அல்சர் கேஸ்ட்ரிக் அல்சர் கேஸ்ட்ரிக் வலி கேஸ்ட்ரிக் புண் குணமாகும் ஆயுள் முழுவதும் திரும்ப வாராது குடல் பூச்சிகள் வெளியேறும் குடல் பூச்சிகள் தட்டைப் புழு நாடாப் புழு வெளியேறும் ஹீமோ குளோபின் அதிகரிக்கும்.
அல்சர் மற்றும் கை, கால் வலி குணமாக சிறந்த உணவு.
சீரகம் – 10 கிராம்
தண்ணீர் – அரை லிட்டர்
கைக்குத்தல் அவல் – 125 கிராம்
சீரகத்தைத் தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்து, ஆறிய பின் அதில் அவலை ஊறவைக்கவும். பின்னர் சிறிது சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து காலை அல்லது மதிய உணவாக சாப்பிடவும். கை, கால் வலி பறந்தே போகும். மேலும், இத்துடன் இதமாய் ஒரு இளநீரும் சாப்பிட அல்சர் குணமாகும்.
குடல் பலவீனம் தீர கருஞ்சீரகம்
கருஞ்சீரகம் – 100 கிராம்
சுக்கு – 100 கிராம்
அதிமதுரம் – 50 கிராம்
ஆடாதோடா – 50 கிராம்
கண்டங்கத்திரி – 50 கிராம்
கடுக்காய் – 50 கிராம்
இவை அனைத்தையும் ஒன்று கலந்து அரைத்து தூள் செய்யவும். இதில் அதிகாலை இரு தேக்கரண்டி அளவு சாப்பிட ஒவ்வாமையால் ஏற்படும் சளி கட்டுப்படும் வயிற்று நோய், குடல் பலவீனம் தீரும்.
மாங்கொட்டைப் பருப்பை வெயிலில் காய வைத்து போடி செய்து கொள்ள வேண்டும். காலையும் மாலையும் ஒரு சிட்டிகை மாங்கொட்டை பொடியை எடுத்துக் கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறும்.
மாதுளை பழத்தோலை வெயிலில் காய வைத்து போடி செய்து கொள்ள வேண்டும். இரவில் உறங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை மாதுளைப் பொடியை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று புண் ஆறும்.
அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.
கற்பூர வாழைக்காயை தோல்சீவாமல் வெட்டி காயவைத்து பொடிசெய்து கொள்ளவும். இது 500 கிராம்,பனங்கற்கண்டு 2 5 கிராம் ஏலக்காய் பொடி 10 கிராம் சேர்த்து அரை ஸ்பூன் வீதம் காலை,மாலை சாப்பிட்டு வந்தால் அல்சர் நோய் குணமாகி விடும்.
சீரகத்தை இலேசாக வறுத்துப் பொடி செய்யவும். பொடித்த பனங்கற்கண்டுடன் கலந்து காலை - மாலை ஆகாரத்திற்கு முன் இளஞ்சூடான வெந்நீரில் சாப்பிட்டுவர, வயிற்றுப்புண், அல்சர் குணமாகும்.
ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.
சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.
கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.
வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.
பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.
பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.
சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.
ஐந்து ஏலக்காயை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, வெறும் வயிற்றில் 30 நாட்களுக்கு பருக வேண்டும்.
வெந்தய இலையை கொதிக்க வைத்த நீரை பருகலாம்.
தேங்காய் எண்ணை 2 டீஸ்பூன் சாப்பிடலாம்.
அரிசி வடித்த தண்ணீர் பருகலாம்...
அல்சர் இருப்பவர்கள் தினமும் சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து உட்கொண்டு வர விரைவில் வயிற்றில் உள்ள புண் குணமாகும் .
தினமும் காலையில் வீட்டில் தயாரித்த ஆப்பிள் ஜீஸ் குடித்து வருவதன் மூலம், அல்சரால் ஏற்படும் கடுமையான வலியைக் குறைக்கலாம்.
கொளுந்து வேப்பிலையை தினமும் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடித்ததுக்கு அப்புறம் சிறிது உட்கொண்டு வர, அல்சர் மட்டுமின்றி வயிற்று பிரச்சனைகளும் நீங்கும்.
அல்சரால் கடுமையான வயிற்று வலியை சந்தித்தால் பச்சை வெங்காயத்தை உப்பில் தொட்டு உட்கொள்ளுங்கள் இதன் மூலம் அல்சரால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
பீட்ரூட் கூட அல்சருக்கு நல்ல நிவாரணம் தரும். அதற்கு பீட்ரூட்டை ஜூஸ் செய்து தேன் சேர்த்து கலந்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும்.
பாகற்காயை அல்சர் இருப்பவர்கள் தினமும் உணவில் சேர்த்து வர விரைவில் அல்சரில் இருந்து விடுபடலாம். அதிலும் பாகற்காயை துண்டுகளாக்கி நன்கு காய வைத்து பொடி செய்து தினமும்
1 டீஸ்பூன் பாகற்காய் பொடியை சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
வயிற்று அல்சருக்கு மற்றொரு சிறப்பான தீர்வு நெல்லிக்காய் , அதிலும் நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து கலந்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மணத்தக்காளி கீரை வயிறு மற்றும் வாய் அல்சருக்கு மிகவும் நல்லது எனவே அந்த கீரையை சூப் செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்திற்கு 3 முறை உ ட்கொண்டு வர விரைவில் அல்சர் குணமாகும்.
குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். வயிற்றெரிச்சலை போக்கும்.
உங்கள் உணவில் நெய் சேர்த்துக் கொள்ளவும். நோயாளிக்கு நெய் ஜீரணமாகவிட்டால் வெந்நீருடன் சேர்த்து கொடுக்கவும்.
இரண்டு மூன்று வாழைப்பழங்கள் பாலுடன் கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அதிக அமிலத்தை சரிப்படுத்தும். மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் சிறந்தது.
வில்வ இலைகள் / பழங்கள் – இவற்றை சேர்த்து கொண்டால் வயிற்றுப்புண்கள் குணமாகும்.
250 கிராம் முட்டைக்கோசை 500 மி.லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியளவு ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கி குளிர வைக்கவும். இதை கேரட் சாறுடன் சேர்த்து பருகினால் அல்சர் குணமடையும்.
பாதாம் பால் (தோலுரிக்கப்பட்ட பாதாம் பருப்புகளால் செய்வது) அல்சருக்கு நல்லது.
உடைத்த அரிசியை, ஒரு பாகத்திற்கு 14 பாகம் தண்ணீர் சேர்த்து கஞ்சி தயாரிக்கவும். இது அல்சருக்கு நல்லது. பருப்பு, அரிசி தண்ணீர் சேர்த்து பொங்கல் போல் தயாரித்து உட்கொள்ளலாம்.
மாதுளம் பழச்சாறு அல்சருக்கும் நல்லது.
திரிபாலா சூரணம் (ஒரு தேக்கரண்டி) நெய் ஒரு தேக்கரண்டி மற்றும் தேன் 1/2 தேக்கரண்டி கலந்து எடுத்துக் கொண்டால் அல்சர் குணமாகும்.
கொத்தமல்லி விதைகளை பொடியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாகத்திற்கு 6 பாகம் தண்ணீர் என்ற அளவில் கலந்து கொதிக்க வைக்கவும். இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் இந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.
தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனை ஊற்றி குடித்தாலும் அல்சரால் ஏற்படும் வயிற்று எரிச்சல் பிரச்சனை சரியாகும்.
பாக்டீரியா எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ள வெள்ளைப்பூண்டை சாரை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்சர் சரியாகும்.
வெந்தயம் கலந்த டீ, கற்றாழை ஜூஸ் இதற்கு ஒரு நல்ல தீர்வாகும், குறிப்பாக அதிகளவு தண்ணீர் பருகுவதே சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.
சேர்க்கவேண்டியவை❓
கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.
தவிர்க்கவேண்டியவை❓
அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.
💚#கடைப்பிடிக்க_வேண்டியவை❓
காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.
பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம்.
தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.
🔴 #குறிப்பு❓❓❓
அல்சர், நெஞ்செரிச்சல், வாயுதொல்லை, உடல் பருமன், தொப்பை போன்றவைகளுக்கு முக்கிய காரணம்.
காலை, மதியம் , இரவு உணவை பிற்படுத்துவதே……
🉐 காலை உணவு : 7 AM - 8 AM
🈯 மதியம் உணவு : 11.30 AM -12.30 PM
🈶 இரவு உணவு : 7 PM – 8 PM
உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங்களை தவிர்க்கவும்.
🌹🌹🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹🌹🌹
share this ... https://bit.ly/4bBJP4o
