தவ்ஹீத் ஜமாஅத் video's: சகோதரி சபரிமாலா பணத்துக்காக தான் இஸ்லாத்துக்கு மாறினாரா?

சகோதரி சபரிமாலா பணத்துக்காக தான் இஸ்லாத்துக்கு மாறினாரா?

சபரிமாலா

 சகோதரி சபரிமாலா பணத்துக்காக தான் இஸ்லாத்துக்கு மாறினார்

என்பது சிலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது

இஸ்லாத்துக்கு எவ்வளவோ பேர் வந்து கொண்டு இருக்கும் போது இவரை மட்டும் பெரிதாக ஏன் முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும் என்பதும் அவர்களின் கேள்வியாக இருக்கிறது

இஸ்லாத்துக்கு வரும் முன்னரே மாதம் 80 ஆயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்தார், மாணவி அனிதா தற்கொலை காரணமாக மனம் வெறுத்து தன் வேலையை விட்டார், பணத்தாசை இருந்தால் முட்டாள் கூட வாழ்நாள் முழுதும் பயன்தரும் அரசு வேலையை விடமாட்டான்

பள்ளியில் வேலை பார்க்கும் போதும், அதற்கு பிறகும் கூட பல மேடைகளில் பேசி இருக்கிறார், அதன் மூலம் நிறைய வருவாய் அவருக்கு கிடைத்தது

1000 பட்டிமன்றங்களுக்கு மேல் பேசி இருக்கிறார், டீவி பட்டி மன்றங்களில் நடுவராக செயல் பட்டு இருக்கிறார்

பல பள்ளி கல்லூரிகளில் மோட்டிவேஷன் பேச்சாளராக அழைக்கப்பட்டு இருக்கிறார்

இவர் இதிலேயே தொடர்ந்து இருந்தால் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி இருக்க முடியும்

அல்லது ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் இணைந்து இருந்தால் கூட கட்சி பேச்சாளராக பல லட்சங்கள் சம்பாதித்து இருக்க முடியும்

ஆனால் குர்ஆனையும் முஹம்மத் நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் படித்து இஸ்லாத்தை ஏற்று மேற்சொன்ன அத்தனை வருமானம் வரும் வழிகளையும் விட்டுவிட்டு தற்போது இஸ்லாமிய கூட்டங்களில் மட்டும் பேசி தனக்கு கிடைக்கும் சொற்ப தொகையில் சிலருக்கு உதவிகள் செய்து தன் வாழ்க்கை செலவுகளையும் பார்த்துக் கொண்டு வாழ்ந்து வரும் இவரை பணத்துக்காக இஸ்லாத்தில் இருக்கிறார் என்று சிலர் சொல்வதை பார்க்கும் போது தெரிந்து தான் பேசுகிறார்களா அல்லது வேறு எதுவும் தனிப்பட்ட குரோதமா என்பது தெரியவில்லை

இரண்டாவது கேள்வி

இஸ்லாத்துக்கு எவ்வளவோ பேர் வந்து கொண்டு இருக்கும் போது இவரை மட்டும் பெரிதாக ஏன் முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும் என்பதும் அவர்களின் கேள்வியாக இருக்கிறது

சபரிமாலா இஸ்லாத்துக்கு வருவதற்கு முன் நிறைய பெரியாரிய கூட்டங்களில் பேசி இருக்கிறார், அவர் இஸ்லாத்தை ஏற்று  பெண்ணுரிமை இங்கே தான் இருக்கிறது என்று பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாத நாத்திகவாதிகள் கடும் விமர்சனம் வைப்பதால் அதற்கு எதிர்வினையாக சபரிமாலாவுக்கு ஆதரவாக முஸ்லிம்கள் குரல் கொடுத்து ஆதரித்து வருகிறார்கள்

முஸ்லிம் சமுதாயத்துக்கு வந்தவர் எதிர்ப்புக்கு உள்ளாகும் போது முஸ்லிம் சமுதாயம் ஆதரிக்காமல் கிறிஸ்துவ சமுதாயமா ஆதரிக்கும் என்ற சாதாரண சிந்தனை கூட நம் மக்கள் சிலரிடம் இல்லாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது

மற்றபடி அவர் தொழுவதை போட்டோ எடுத்து போட்டு பப்ளிசிட்டி தேடுகிறார் என்பது எல்லாம் வெற்று வாதம்

அப்படி பார்த்தால் மக்காவில் தொழுவதை 24 மணி நேரமும் ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதற்காக அதை யாரும் விமர்சிப்பது இல்லை எனும் போது சபரிமாலாவை மட்டும் விமர்சனம் செய்வது காழ்ப்புணர்ச்சி மட்டுமே, 

பெண்கள் பள்ளிவாசலுக்கு போகலாம், ஆண்கள் துணை இல்லாமல் பெண்கள் தனித்து தொழலாம், பெண்கள் இறை வேதத்தை தொடலாம், அதை ஓதலாம் என்று தான் வளர்ந்த சமுதாயத்துக்கு வெளிப்படுத்த இதை அவர் செய்கிறார், இதைக் கூட புரிந்து கொள்ளாமல் விமர்சனம் வைப்பது வெறும் அறியாமை தான்....

அது எப்படி நம் மதத்தில் பிறந்த ஒரு பெண் இஸ்லாத்தை ஏற்கலாம் என்று கோபப்பட்டு அவரை மீம்ஸ் போட்டு திட்ட சங்கிகளுக்கு கூட ஒரு காரணம் இருக்கிறது

ஆனால் முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் நம் மக்களும் விமர்சிப்பது உண்மையில் வேதனைப்பட வேண்டிய விஷயம்....

பிற மதத்தில் உள்ளவர்களுக்கு இஸ்லாத்தை அழகிய முறையில் சொல்லி இஸ்லாத்துக்கு அழைத்து வரவில்லை என்றாலும் பரவாயில்லை,  

இஸ்லாம் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகும் சூழ்நிலையிலும் இஸ்லாத்துக்கு வரும் மக்களை உங்கள் கடும் சொல்லினால் விரட்டாமல் இருப்பதே இஸ்லாத்துக்கு நீங்கள் செய்யும் நல்ல செயலாக இருக்கும்...

மென்மையும், நளினமும், பெருந்தன்மையும் மூடிக்கிடக்கும் இதயங்களைத் திறக்கும் திறவுகோல்களாகும். முரட்டுத்தனத்தாலும், சிரமப்படுத்துவதாலும், மிரட்டுவதாலும் எதனையும் சாதித்துவிட முடியாது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நற்செய்தி கூறுங்கள்! வெறுப்படைய செய்யாதீர்கள், எளிதாக நடந்து கொள்ளுங்கள், சிரமப்படுத்தாதீர்கள்.”

நூல்: புகாரி : 6124

وَلَا تَطْرُدِ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ ۖ مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِم مِّن شَيْءٍ وَمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِم مِّن شَيْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُونَ مِنَ الظَّالِمِينَ

52. தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!

திருக்குர்ஆன்  6:52

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவீராக!

காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். 

(அல்குர்ஆன் 3:159)

**********

இங்கிலாந்தில் முதல் மஸ்ஜிதை நிறுவியவர்!வில்லியம் ஹென்றி குயில்லியம்
வில்லியம் ஹென்றி குயில்லியம்

அல்லாஹ்வின் அருள் பெற்றவர்களுக்கே அவனது நேர்வழி கிடைக்கிறது. இணைவைப்பின் கோட்டையிலிருந்தவர்களுக்கும் நேர்வழி கிடைத்திருக்கிறது. இஸ்லாமின் முழு முதல் எதிரிகளுக்கும் நேர்வழி கிடைத்திருக்கிறது.

அந்த வரிசையில் இங்கிலாந்தில் நேர்வழி பெற்ற ஒருவர்தான் வில்லியம் ஹென்றி குயில்லியம். இங்கிலாந்தில் இஸ்லாமிய முன்னோடியாக இவர் கருதப்படுகிறார்.

இஸ்லாமால் ஈர்க்கப்பட்ட இவர் தன் வாழ்வியல் நெறியாக இஸ்லாமைத் தழுவி ஏற்று, தன் பெயரை அப்துல்லாஹ் குயில்லியம் என்று மாற்றினார்.

1856ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி இங்கிலாந்திலுள்ள லிவர்பூலில் ஒரு வசதிமிக்க குடும்பத்தில் அவர் பிறந்தார்.

தனது குழந்தைப் பருவத்தின் பெரும் பகுதியை ஐல் ஆஃப் மேனில் கழித்தார். ஒரு புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவராக வளர்க்கப்பட்டார். 1878ம் ஆண்டில் வழக்கறிஞரான அவர், குற்றவியல் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றார்.

இஸ்லாம் இவருக்கு அறிமுகமானது மொராக்கோவில்! மொராக்கோவுக்குச் சென்றிருந்த அவர், இஸ்லாமால் ஈர்க்கப்பட்டு, 1887ம் ஆண்டு இஸ்லாமை ஆரத் தழுவினார்.

ஏக இறைவனை ஏற்று, ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களைத் தன் வாழ்வின் வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்த அப்துல்லாஹ் குயில்லியம், வெறுமனே ஒரு முஸ்லிமாக மட்டும் இருந்திடாமல் தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும் என்ற அடிப்படையில் இஸ்லாமைப் பரப்புரை செய்ய முடிவெடுத்தார்.

அத்தோடு மார்க்கச் சேவை செய்ய வேண்டும் என்பதைத் தனது கனவாகக் கொண்டார். தனது கனவை நிறைவேற்ற, ஆப்கன் பட்டத்து இளவரசர் நஸ்ருல்லாஹ் கான் நல்கிய நன்கொடை மூலம் லிவர்பூலில் சொந்தமாகக் கட்டடங்கள் வாங்கி, ‘லிவர்பூல் முஸ்லிம் நிறுவனம்’ (Liverpool Muslim Institute) என்ற ஒன்றை நிறுவினார் அப்துல்லாஹ் குயில்லியம்.

அங்கேயே ஒரு மஸ்ஜிதையும் உருவாக்கினார்.

பிரிட்டனில் செயல்படும் முதல் மஸ்ஜித் இதுதான் என்று கூறப்படுகிறது. அத்தோடு ஆண்களுக்கான ஓர் உறைவிடக் கல்விக்கூடத்தையும் பெண்களுக்கான ஒரு கல்விக்கூடத்தையும் உருவாக்கினார். அங்கே பரந்த அளவிலான பாடத்திட்டங்களை உள்ளடக்கிய கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டன.

மேலும் “மதீனா ஹவுஸ்” என்ற பெயரில் ஓர் அனாதை இல்லத்தையும் தொடங்கினார். தங்கள் குழந்தைகளைப் பராமரித்து வளர்க்க முடியாத முஸ்லிமல்லாத பெற்றோர்கள், அவர்களை முஸ்லிம்களாக வளர்ப்பதற்கு ஒப்புக்கொண்டால்

மேலும் “மதீனா ஹவுஸ்” என்ற பெயரில் ஓர் அனாதை இல்லத்தையும் தொடங்கினார். தங்கள் குழந்தைகளைப் பராமரித்து வளர்க்க முடியாத முஸ்லிமல்லாத பெற்றோர்கள், அவர்களை முஸ்லிம்களாக வளர்ப்பதற்கு ஒப்புக்கொண்டால் அவர்களை அந்த அனாதை இல்லத்தில் சேர்த்து முஸ்லிம்களாக வளர்த்தார்.

அத்தோடு ஓர் அருங்காட்சியகத்தையும் அறிவியல் ஆய்வகத்தையும் அந்த லிவர்பூல் முஸ்லிம் நிறுவனத்தில் நடத்தினார். இந்த நிறுவனம் இங்கிலாந்தில் இஸ்லாமிய நடவடிக்கைகளுக்கான மையமாக மாறியது.

“இஸ்லாமிய நம்பிக்கை’’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். ’தி கிரசண்ட்’

Search This Blog