தவ்ஹீத் ஜமாஅத் video's: ஆணுறுப்பின் மேல‌திக‌ தோலை வைக்காம‌லேயே இறைவ‌ன் ம‌னித‌னை ப‌டைத்திருக்க‌லாமே

ஆணுறுப்பின் மேல‌திக‌ தோலை வைக்காம‌லேயே இறைவ‌ன் ம‌னித‌னை ப‌டைத்திருக்க‌லாமே

 ஆணுறுப்பின் மேல‌திக‌ தோலை வைக்காம‌லேயே இறைவ‌ன் ம‌னித‌னை ப‌டைத்திருக்க‌லாமே என‌ ஒரு மாற்றுமத ச‌கோத‌ர‌ர் கேட்டார்...

அன்ப‌ரே!

அல்லாஹ் உங்க‌ளை ப‌டைத்த‌ போது நிர்வாண‌மாக‌த்தானே ப‌டைத்தான். அப்ப‌டியென்றால் ஏன் உட‌லை ம‌றைத்து ஆடை அணிகிறீர்க‌ள்?  உங்க‌ளுக்கு அந்த‌ அறிவை கொடுத்த‌து யார். அது போன்றே த‌லை, அக்குள் மீசை, ம‌ர்ம‌ முடி என்ப‌து வ‌ள‌ரும் த‌ன்மை கொண்ட‌து. அத‌னை ஏன் வெட்டுகிறீர்க‌ள். அதை வ‌ள‌ராம‌ல் இறைவ‌ன் விட்டு விட‌லாமே என‌ நீங்க‌ள் ஏன் கேட்ப‌தில்லை.

ஆணுறுப்பிலும் பெண்ணுறுப்பிலும் மேல‌திக‌ தோலொன்றை வைத்து அல்லாஹ் ப‌டைத்த‌மைக்குரிய‌ கார‌ண‌ காரிய‌த்தை ம‌னித‌ அறிவால் அறிந்து கொள்ள‌ முடியாது. இறைவ‌ன் ம‌கா ப‌டைப்பாள‌ன். 

ம‌னித‌ன‌து இத‌ய‌த்தில் ஏற்ப‌டும் அடைப்புக்கு பைபாஸ் செய்வ‌த‌ற்குரிய‌ மேல‌திக‌ ந‌ர‌ம்பை ந‌ம‌து காலில் இருந்தே வைத்திய‌ர்க‌ள் பெறுகிறார்க‌ள். ப‌ல‌ கால‌த்தின் முன்பு இவ்வெலும்பு அனாவ‌சிய‌மான‌தாக‌வே ம‌னித‌னுக்கு தெரிந்த‌து.

ஆக‌வே இறைவ‌ன் ப‌டைப்பில் எதுவும் வீண் இல்லை. ஆனாலும் அவ‌ற்றிலும் சில‌ க‌ட்ட‌த்துக்கு ந‌ன்மையை வைத்துள்ளான்.

ஆண் உறுப்பின் மேல‌திக‌ தோலை வைத்து இறைவ‌ன் ப‌டைத்த‌மைக்கு நாம் சில‌ கார‌ண‌ங்க‌ளை கூற‌ முடியும். 

ம‌னித‌ உட‌லில் வெளியே உள்ள‌ மிக‌வும் மெல்லிய‌ ப‌குதி அதுவாகும். குழ‌ந்தையாக‌ இருக்கும் போது அக்குழ‌ந்தை தாயின் க‌ருவ‌றையில் பாதுகாப்பாக‌ இருப்ப‌த‌ற்காக‌ அத‌ன் உறுப்புக்க‌ளை மூடி வைத்துள்ளான். க‌ண்ணுக்கு இமை கொடுத்து க‌ண்க‌ளை மூட‌வைத்தான். குழ‌ந்தை பிற‌ந்த‌ பின்தான் க‌ண் திற‌க்கிற‌து. க‌ண்ணை திற‌ந்து கொண்டே பிற‌ந்தால் என்ன‌ ந‌ட‌க்கும்? அழுக்குக‌ள் க‌ண்க‌ளுக்குள் செல்லும் என்ப‌தால் குழ‌ந்தையின் க‌ண்ணை மூடிய‌ப‌டி பிற‌க்க‌ வைத்த‌ இறைவ‌ன் மிக‌ப்பெரும் அறிவுடைய‌வ‌ன்.

வாய்க்குள் எதுவும் செல்ல‌ முடியாம‌ல் வாயையும் மூடிய‌வாறு ப‌டைத்தான். அடுத்த‌தாக‌ ம‌னித‌ உட‌லுக்குள் ஏதும் செல்லும் வ‌ழி ஆணுறுப்பாகும். அத‌னை தோலைக்கொண்டு மூட‌ வைத்தான். 

அந்த‌ தோல் இன்றி ப‌டைக்க‌ப்ப‌ட்டிருந்தால் இன்றைய‌ அவ‌ச‌ர‌ யுக‌த்தில் வைத்திய‌ர் தாயின் வ‌யிற்றை கீறி குழ‌ந்தையை எடுக்கும் போது வைத்திய‌ரின் அல்ல‌து ந‌ர்சின் ந‌க‌ம் அதில் கீறினால் அக்குழ‌ந்தையின் ஆணுறுப்பின் நிலை என்ன‌? இத‌னால்த்தான் அத‌னை மூடி வைத்து பிற‌க்க‌ வைத்தான்.

அத்துட‌ன் வைத்திய‌ர் ஒருவ‌ரின் க‌ருத்துப்ப‌டி 

கருப்பை உள்ளே குழந்தைக்குப் பாதுகாப்பாக இருக்கும் Amniotic fluid என்ற திரவம் காரமானது. அது சிசுவின் மிகவும் மென்மையான ஆண்குறியின் முற்பாகத்தைக் காயப்படுத்தி விடும். ஆகவே தான் அந்தப் பகுதி தோலினால் மூடப்பட்டு உள்ளது. குழந்தை பிறந்த பின்னர் அந்த முன்தோல் தேவைப்படுவதில்லை. ஆகவே அது அகற்றப்படுகின்றது.

குழ‌ந்தை பிற‌ந்த‌தும் அத‌ற்குரிய‌ ஆப‌த்துக்க‌ள் நீங்கி அக்குழ‌ந்தை இல‌குவாக‌ சிறு நீர் க‌ழித்து சுத்த‌மாக‌ இருக்கும் வ‌கையில் ஆணுறுப்பின் மெல்லிய‌ மூடு தோலை நீக்கும்ப‌டி இறைவ‌ன் வ‌ழி காட்டியுள்ளான். 

அல்லாஹ்வும் அவ‌னது தூத‌ரும் சொன்ன‌த‌ற்காக‌ ஏன் எத‌ற்கு என்ற‌ கேள்வி கேட்காம‌ல் நாம் அத‌னை செய்கின்றோம். கார‌ண‌ம் அல்லாஹ் சொன்ன‌தில் 100 வீத‌ம் உண்மை இருக்கும் என்ப‌தை ந‌ம்புப‌வ‌ன்தான் முஸ்லிம்.

மேற்ப‌டி தோலை நீக்குவ‌த‌ன் மூல‌ம் சிறு நீர் பிர‌ச்சினை வ‌ராம‌ல் இருப்ப‌தாக‌ வைத்திய‌ர்க‌ள் சொல்கின்ற‌ன‌ர்.

ஒருவ‌னின் ஆணுறுப்பின் மேல் தோல் நீக்க‌ப்ப‌ட்டால் அவ‌ன் சிறுநீர் க‌ழிக்கும் போது மிக‌ இல‌குவாக‌ க‌ழித்து விடுவான். அத்துட‌ன் சிறு நீர் அங்கு தேங்கி நிற்காது.

ஆனால் தோல் நீக்காத‌ ஆணுறுப்பினால் சிறு நீர் க‌ழிப்ப‌தாயின் அத‌னை இழுத்து மேலே  சுருட்டி சிறு நீர் க‌ழிக்க‌ வேண்டும். சிறு நீர் க‌ழித்து முடிந்த‌தும் அது தானாக‌ மூடிக்கொள்ளும். உள்ளே மிஞ்சிய‌ அசுத்த‌  சிறு நீர் உள்ளே இருந்து கொண்டிருக்கும். வ‌ய‌து வ‌ந்த‌ ஒருவ‌ரால் அத‌னை மேலே உருவி ஓர‌ள‌வு சுத்த‌ம் செய்ய‌ முடியும். ஆனால் குழ‌ந்தையால் சிறுவ‌ர்க‌ளால் முடியாது. இத‌னால்த்தான் குழ‌ந்தை ப‌ருவ‌த்திலேயே அத‌னை எடுத்து விடுகிறோம். 

இத்த‌கைய‌ ப‌ல‌ சிர‌ம‌ங்க‌ளையும் அசுத்த‌த்தையும் க‌ருத்திற்கொண்டு இறைவ‌ன் சுன்ன‌த்து செய்து கொள்ளும்ப‌டி சொல்லியுள்ளான்.

சுன்ன‌த்து செய்யாத‌ பெரிய‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் சிறுநீர் பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ வைத்திய‌சாலைக்கு சென்றால் முத‌லில் அந்த‌ மேல‌திக‌ தோலை வெட்டும்ப‌டியே வைத்திய‌ர்க‌ள் சொல்கிறார்க‌ள். ப‌ல‌ருக்கு இது ந‌ட‌ந்துள்ள‌து.

இன்னும் சில‌ருக்கு சிறு நீர் வெளியேற‌ பைப் போடுவ‌தாயின் தோலை நீக்காம‌ல் அத‌னை போடுவ‌து க‌ஷ்ட‌ம். வைத்திய‌சாலைக‌ளுக்கு சென்று பார்த்தால் இந்த‌ உண்மை புரியும்.

ஆக‌வே ப‌ல‌ ந‌ன்மைக‌ள் உள்ள‌ சுன்ன‌த்து செய்துகொள்வ‌தை ம‌னித‌னுக்கு வ‌ழி காட்டிய‌ வாழ்வியல் மார்க்கம் இஸ்லாமாகும்.

பகிர்வு.



 சுன்னத் அவசியமா?

https://www.youtube.com/watch?v=yHj5DVLJE8I



சுன்னத் பண்ணாவிட்டால் தொழலாமா
https://www.youtube.com/watch?v=HEZ0cmW59zA


சுன்னத் செய்வது ஏன் ?

https://www.youtube.com/watch?v=yl3uQ5KI3Hs


பிறக்கும் போதே ,  
ஏன் சுன்னத் செய்யப்படவில்லை...?

DrMohamed Kizhar

இந்தப் பதிவுக்குச் செல்லும் முன்பு

 ஆணுறுப்பின் முன் தோல் =   Fore Skin or Prepuce

ஆணுறுப்பின் முன்பகுதி =    Glans Penis

ஒரு நாத்திக மருத்துவ நண்பர் என்னிடம்  " கிஸார், ரொம்ப நாளா ஒரு சந்தேகம்..  சுன்னத்  ( ஆணுறுப்பின் முன்தோலை Prepuce /foreskin நீக்கம்) பண்ணுவதால் பல மருத்துவம் சார்ந்த நன்மைகள் உள்ளது... இஸ்லாமிய மதம் சுன்னத் செய்யும்படி வலியுறுத்துகிறது.. உங்க இறைவன் மனிதனை, 

ஒரு முழுமை பெற்ற, அழகிய படைப்பாக படைத்து இருக்கிறான் என்று உங்கள் குர்ஆன் குறிப்பிடுகிறது.. அப்படியெனில்  உங்க இறைவன் ஆண் சிசுவை படைக்கும் போதே, ஆணுறுப்பின் முன் தோலை  ( Prepuce/ Foreskin) நீக்கிய படியே அதாவது சுன்னத் செய்யப்பட்ட நிலையில் படைத்து இருக்கலாமே..  ஒரு உறுப்பை படைத்து விட்டு, பின்பு அதை நீக்க பணிப்பதில் லாஜிக் இல்லையே"

என்று கேட்டார்.

அதற்கு நான்  " நல்ல பகுப்பாய்வுடன் கேட்கப்பட்ட கேள்வி.. இறைவனின் ஒவ்வொரு படைப்பிலும் காரணம் உண்டு.. பொதுவாக மருத்துவ அறிவியல்படி, ஆணுறுப்பின் முன்தோல்  ( Foreskin or Prepuce), பிறந்தவுடன் தேவையற்ற ஒரு பகுதி ...  ஆனால் கருவியல் பார்வையில், ஆண் சிசு கருவில் வளரும் வரை, பிறக்கும் வரை Foreskin மிக மிக அவசியமான ஒன்று  அது இன்றி ஆணுறுப்பு மற்றும்  சிறுநீர் பாதை வளர்ச்சி  ( urogenital Embyrogenesis) முழுமை பெறாது...

 ஆண் சிசுக்கு கருவில் ஆணுறுப்பு உருவாகும் போது, ஆணுறுப்பின் முன் பகுதி ( Glans Penis) மற்றும் முன் தோல் ( Fore Skin/ Prepuce ) ஒன்றுடன் ஒன்று ஒட்டி பிணைந்து, சேர்ந்து ஒட்டியே உருவாகிறது.. அப்படி இரண்டும் இப்படி , சேர்ந்து உருவானால் தான், சிறுநீர் பாதையின் முன் பகுதி ( urethra) குறைவின்றி சரிவர உருவாகும்.. இல்லையேல் , சிறுநீர் பாதை உருவாவதில் பிறவிக் குறைபாடு ( Congenital Anomaly) வரலாம்..

 இப்படி கருவில் 14 வது வாரத்தில், சிறுநீர் பாதை (Urethra) உருவான பின்பு, அதன் வளர்ச்சிக்கு மேலும் துணை செய்ய , ஒட்டி இருக்கும் இரண்டும் ( Glans Penis & Prepuce) ஒன்றை விட்டு ஒன்று,  பிரிந்து விட வேண்டும்..பிரிந்து விடும் ...

இரண்டும் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்தாலும்,முன்தோல் ( Foreskin / Prepuce ), ஆனது ஆணுறுப்பின் முன் பகுதி ( Glans Penis) மேல் மூடி மறைத்து விடும்.. ஆனால் ஒட்டி இருக்காது.. அப்படி ஒரு வேளை முன்தோல் ( Prepuce/ foreskin) , ஆணுறுப்பின் முன்பகுதியை ( Glans Penis) மூடாமல் இருந்தால், அதிக உணர்திறன் கொண்ட ,ஆணுறுப்பின் முன் பகுதி ( Glans Penis), கருவில் உள்ள பனி நீர் ( Amniotic Fluid) உடன் பல மாதம் நேரடி தொடர்பில் இருக்கும் போது, அதற்கு இரசாயன ரீதியான ( Chemical Damage) பாதிப்பு வரலாம் ..

 இந்த இரசாயன பாதிப்பை தவிர்க்க, தான் கருவில் இருக்கும் போது, Foreskin என்னும் முன்தோல் , Glans penis ஐ மறைத்து, மூடி வைத்துள்ளது.. இது தான் பிறக்கும் போதே சுன்னத் செய்யாமல் பிறக்கக் காரணம்..பிறந்த உடன், பனி நீர் மூலம் ஏற்படும் இரசாயன பாதிப்பு பிரச்சினை இல்லை.. ஆணுறுப்பின் முன் தோல் ( Prepuce/ Foreskin) தேவை இல்லாத ஆணி.. அதனால் அதை சுன்னத் மூலம், நீக்கி விடுகிறோம்.."

நண்பர்  " அப்ப Appendix கூட தேவையற்ற ஒரு ஆணி ,sorry, உறுப்பு ( Vestigial organ)..அதை நீக்கச் சொல்லி உங்க இறைவன்..ஏன் சொல்லவில்லை?

 நான்:   " நீ என்ன கேட்க வருறான்னு தெரியுது..  முதலில் கேட்டது லாஜிக் ஆன கேள்வி.. இப்போது கேட்பது குதர்க்கமானது.. இருந்தாலும்..அதையும் விளக்குறேன்..ஆணுறுப்பின் முன்தோல், உடலுக்கு வெளியில் உள்ள பகுதி..அதை யார் வேண்டுமானாலும், , எங்கேயும் வைத்து கூட, மிக எளிதாக நீக்கி விடலாம்..

 ஆனால் Appendix வயிற்றினுள் உள்ளது..அதை நீக்க,  மயக்க மருந்து சிகிச்சை அறுவை அரங்கம், அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவமனை அனுமதி அதிக பண செலவு  தேவை..

இறைவன் என்றும் தன் படைப்பை, தங்கள் சக்திக்கு மீறி சோதிக்க மாட்டான்..

Appendix நீக்கம் ,சுன்னத் போல கட்டாயம் என்று வலியுறுத்தப்பட்டால், ஒவ்வொரு ஆண் குழந்தை பிரசவத்திற்கு பின்பும், இந்த காலத்தில், குறைந்தது 40000 இந்திய ரூபாய் செலவு ஆகும்...பின்பு மற்ற அலைச்சல், மருத்துவமனை அனுமதி மனஉளைச்சல் வேற..இப்ப புரியுதா மவனே.."

நண்பன்: " தப்பா எடுக்காதே..சும்மா சீண்ட தான் கேட்டேன்..நல்ல அறிவியல் சார்ந்த விளக்கம்.. பலரிடம் இதே சந்தேகம் கேட்டேன். எல்லோருமே  ' எங்க நபி ஒன்றை வலியுறுத்தினா ,அதில் ஒரு நன்மை இருக்காமல் இல்லை " என்று மட்டும் சொல்லி முடித்து விடுவார்கள்.. என்றார்

Dr D Mohamed Kizhar

Search This Blog