தவ்ஹீத் ஜமாஅத் video's: பாலூட்டுவது புற்றுநோயைத் தடுக்கும்

பாலூட்டுவது புற்றுநோயைத் தடுக்கும்

பெண்களைப் புற்று நோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்!


இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டுநடப்புகள்

இந்தக் காலத்தில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது.

புட்டிப்பால் கொடுத்தே வளரும் மோசமான சூழல் உருவாகி வருகின்றது. தாய்ப்பால் கொடுத்தால் தங்களது அழகு குறைந்துவிடும் என்று பெண்கள் அஞ்சுவதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

ஆனால் தாய்ப்பால் கொடுக்காமல் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுப்பார்களேயானால் குழந்தைகளும் சரியான நோய் எதிர்ப்பு சக்தி பெறாமல் சீரழிவதோடு, பெண்களுக்கும் இதனால் புற்றுநோய் ஏற்படுகின்றது என்றும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் புற்றுநோயிலிருந்தும், மாரடைப்பிலிருந்தும் காக்கப்படுகின்றார்கள் என்ற உண்மையும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு :



இங்கிலாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், 12 வருடங்களாக, 9 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 3,80,000 (மூன்று லட்சத்து எண்பதாயிரம்) பெண்களுக்கு மேல் பரிசோதித்ததில், தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

குறைந்தது 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், பெண்கள் புற்று நோயால் இறப்பது 10 சதவிகிதம் குறைகின்றது. அதேபோல் இவர்களுக்கு மாரடைப்பினால் ஏற்படும் மரணமும், 17 சதவிகிதம் குறைகின்றது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கூறப்படும் வழிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம், பல நோய்களிலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ள முடியும்.

உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதி மையமும், அமெரிக்காவின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமும் கூறியுள்ள வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒருவர் 34 சதவிகிதம் தம்மை நோயிலிருந்து காத்துக்கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வழிமுறைகள் வருமாறு:

ஆரோக்கியமான உடல் எடை,

சுறுசுறுப்பாக இருத்தல்,

உடல் எடையைக் கூட்டும் உணவுப்பொருட்கள் பானங்களைத் தவிர்த்தல்,

தாவர உணவு வகைகளையே அதிகம் உட்கொள்ளுதல்,

மது அருந்துவதைத் தவிர்த்தல் மற்றும்

6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் அளித்தல்

மேற்கண்ட விஷயங்களை கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்று இந்த ஆய்வு கூறுகின்றது.

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் டாக்டர் தெரிசா நோரட் இந்த ஆராய்ச்சியை வழி நடத்தியவர். இந்த வழிமுறைகளை பின்பற்றுவோருக்கு புற்றுநோய், ரத்த ஓட்டம் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அவர் கூறியுள்ளார்.

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

அல்குர் ஆன் 31 : 14

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிறவனுக்காக  தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார்.

அல்குர் ஆன் 2 : 233

மேற்கண்ட வசனங்களில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகின்றான்.

தங்களது குழந்தைகளுக்கு பெண்கள் பாலூட்ட வேண்டும் என்பது இஸ்லாமிய மார்க்கத்தில்தான் இறைக்கட்டளையாக போடப்பட்டுள்ளது. வேறெந்த மதமோ, சித்தாந்தமோ பாலூட்டுவதை கட்டளையாகப் போடவில்லை.

இஸ்லாம் கட்டளையிடக்கூடிய ஒவ்வொரு வழிமுறையும் மனித குலத்துக்கு நன்மைப் பயப்பதாகவே அமைந்துள்ளது என்பதை மேற்கண்ட ஆய்வு முடிவுகள் உண்மைப்படுத்துகின்றன.


தாய்ப்பாலூட்டும்  தாய்மார்கள்
 தவிர்க்க  வேண்டிய  உணவுகள்

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உணவு விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தாயும்,குழந்தையும் 
ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதில் உணவு முறைக்கு முக்கிய பங்குண்டு. 

தாய்மார்கள் சாப்பிடும் சில உணவுகள் குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும். அப்படி ஏதேனும் பாதிப்பை குழந்தை எதிர்கொண்டால் அந்த உணவுகளை ஒரு வாரம் வரை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். அந்த சமயத்தில் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் வீரியம் குறைந்திருந்தால் அந்த உணவுகளை அறவே தவிர்த்துவிட வேண்டும்.

தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

மீன்களில் உள்ளடங்கி இருக்கும் பாதரசம் பச்சிளம் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும். அப்படி அதிகளவு பாதரசம் கொண்ட மீன் வகைகளை தாய்மார்கள் தொடர்ந்து உட்கொண்டு வருவது குழந்தையின் நரம்பு மண்டலத்தைபாதிக்கும். குழந்தையின் வளர்ச்சியும் தாமதமாகும். 

குறிப்பாக டூனா, சுறா, வாள் மீன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
அதிலும் இறால், நண்டு, கணவாய் போன்ற 'ஷெல்பிஷ்' மீன் இனங்களை அறவே தவிர்க்க வேண்டும். இருப்பினும் மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டது. 
எனவே பாதரசம் அளவு குறைவாக உள்ள மீன்களை வாரத்திற்கு இரு முறை உட்கொள்வது நல்லது.

*கோப்பி மற்றும் ​சொக்லேட்டில் கொபின் உள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதிலிருக்கும் ​கொபின் தாய்ப்பாலில் கலந்துவிடக்கூடும். 

குறிப்பாக இது குழந்தையின் தூக்க செயல்முறைக்கு தொந்தரவு கொடுக்கும். தவிர்க்கமுடியாத பட்சத்தில் 2 கப் கோப்பிக்கு மேல் பருகக் கூடாது. ஒன்று அல்லது இரண்டு துண்டு சொக்லேட்டுகளுக்கு மேல் உட்கொள்ளக்கூடாது.

*தாய்ப்பால் கொடுக்கும்போது காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும் 
என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனினும் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி இருந்தால் கார உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது.

*பருப்பு வகைகள், பீன்ஸ், முட்டைக்கோஸ், புரொக்கோலி, கோலி பிளவர் போன்றவையும் தாய்ப்பால் கொடுக்கும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள். குழந்தைக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாயு தொல்லை இருந்தால், இந்த உணவுகளை ஓரிரு வாரங்கள் காட்டாயம் தவிர்த்து விடுவது நல்லது.

*தேநீரிலும் ​கொபின் உள்ளது. இது குழந்தையின் செரிமான அமைப்புக்கு 
நல்லதல்ல. மேலும் தாயின் உடலில் இரும்பு உறிஞ்சப்படும் செயல்முறையையும் கடினமாக்கும்.

*பிரசவத்தின்போது இழக்கப்பட்ட இரும்பு சத்தை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். அதனால் இறைச்சி, பச்சை இலை காய்கறிகள், தானியங்கள் 
போன்ற இரும்புச் சத்து நிறைந்த பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த உணவுகளுடன் தேநீர் பருகக்கூடாது.

*புதினா குடும்பத்தை சேர்ந்த பெப்பர்மிண்ட் மற்றும் கொத்தமல்லி 
தழை போன்றவை தாய்ப்பால் உற்பத்தியை கட்டுப்படுத்தக்கூடும். தாய்ப்பால் சுரப்பு குறைவதாக உணர்ந்தால் இவற்றை சமையலில் சேர்ப்பதை தவிர்த்துவிட வேண்டும்.

*தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுப் பட்டியலில்  சர்க்கரை பானங்களும் அடங்கும். சோடாக்கள், பதப்படுத்தப்பட்டு போத்தல்களில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், குளிர் பானங்கள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பதால் தாகம் எடுக்கலாம். சோடா அல்லது குளிர் பானங்களை உட்கொள்வதற்கு பதிலாக தண்ணீர் பருகுவதுதான் சிறந்தது. பாலூட்டும் தாய்மார்களுக்கு பசுவின் பால் பருகுவது பிரச்சினையை ஏற்படுத்தாது. எனினும் குழந்தைக்கு பால் ஒவ்வாமை பிரச்சினை இருப்பதாக உணர்ந்தால், பசும்பால்  உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளின் மார்பு, கன்னத்தில் அரிப்பு, சொறி போன்ற தோல் அழற்சி பிரச்சினைகள் ஏற்பட்டால் வேர்க் கடலை போன்ற நட்ஸ் வகைளை தாய்மார்கள் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும்.

Search This Blog