25 இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹி மட்டுமே
புஹாரியில் இருக்கின்றது என்பதற்காகவெல்லாம் ஒன்றை சரி கண்டு விடக் கூடாது, இதைநபி (சல்) அவர்கள் சொல்லியிருப்பார்களா? குர் ஆனின் மகிமைக்கும் நபியின்கண்ணியத்திற்கும் இது ஏற்புடையது தானா?
என்பதையெல்லாம் சிந்திக்க வேண்டும்.
அஜ்வா, கருஞ்சீரகம் தொடர்பான ஹதிஸ்களை மறுக்கின்றீர்களே, அப்படியானால் குர் ஆன் வசனங்களை ஓதி ஊதினால் நிவாரணம் கிடைக்கும் என்பதாக வரக்கூடிய செய்திகளையும் மறுப்பீர்களா?
தேனில் நிவாரணம் இருக்கிறது என்று அல்லாஹ் சொல்கிறானே, எல்லா நோய்க்கும் அதைசோதித்துப் பார்த்து விட்டு நிவாரணம் கிடைக்கவில்லையென்றால் மறுத்து விடுவீர்களா?
இப்படியொரு கேள்வி பரப்பப்படுகிறது.
அஜ்வாவுக்கு விஷம் முறிக்கும் ஆற்றல் உண்டு என்பதையோ கருஞ்சீரகத்தில் மரணத்தைத்தவிர அனைத்திற்கும் நிவாரணம் உண்டு என்பதையோ நாம் ஏற்பதாக இருந்தால் அதைசோதித்துப் பார்த்து நம்ப வேண்டும். ஏனெனில், ஒரு உணவுப் பொருளைக் குறிப்பிட்டு,இன்றைக்கும் நமக்கு கிடைக்கின்ற ஒரு பொருளைக் குறிப்பிட்டு இதற்கு இந்த ஆற்றல்இருக்கின்றது என்று சொல்லும் போது அந்த ஆற்றல் அதில் இருக்கிறதா இல்லையா என்பதைசோதனையில் அறிய முடிகின்ற ஒன்று.
குர் ஆன் வசனத்தை ஓதுவது இதே போன்றதா? அது நமது ஈமானைப் பொறுத்தது.
குர் ஆன் வசனத்தைக் கூட ஒரு காஃபிர் ஓதினால் நிவாரணம் கிடைக்குமா?
ஆக, இறை வசனத்தை ஓதினால் இந்த நிவாரணம் என்று சொல்லும் போது, அது இறைவணக்கத்தோடு தொடர்புடையது. அது ஒரு தொடுப் பொருள் இல்லை, தொட்டுப் பார்த்தோரசாய கூடத்தில் சோதித்துப் பார்த்தோ அதன் தன்மையை உணர்வதற்கு.
குர் ஆன் வசனத்தை ஒருவன் ஒரு குவளை தண்ணீரில் ஓதி ஊதுகிறான்.
அதே போல், இன்னொரு குவளை தண்ணீரில் கெட்ட வார்த்தைகளைப் பேசி ஊதுகிறான்.
சோதித்துப் பார்த்தால் இரண்டு தண்ணீரும் ஒரே தன்மையை கொண்டதாக தான் இருக்குமேதவிர, குர் ஆன் ஊதப்பட்ட நீருக்கென்று எந்த பிர்த்தியேக சிறப்பும் இருக்காது.
இதுவெல்லாம் நம்பிக்கை சார்ந்தது.
அது போல் தேன் பற்றி கேட்கிறார்கள். அல்லாஹ் குர் ஆனில் தேனைப் பற்றி சொல்லும் போது,தேனில் ஒரு நிவாரணம் இருக்கின்றது என்று தான் சொல்கிறானே அல்லாமல், மரணத்தைத்தவிர அனைத்திற்கும் நிவாரணம் இருக்கிறது என்று கருஞ்சீரகம் பற்றி சொல்லப்படுவதைப்போல் எந்த வாசகத்தையும் அல்லாஹ் பயன்படுத்தவில்லை.
இந்த வேறுபாட்டினையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
எந்த பொருளாக இருந்தாலும், அதற்கென்று சில மருத்துவ குணங்கள் இருக்கத் தான் செய்யும்.
வெங்காயத்தில் இருக்கும் மருத்துவ குணம், அந்த நிவாரணத்தை தரும்.
தக்காளியில் இருக்கும் மருத்துவ குணம், அந்த வேலையை செய்யும்.
இதுவெல்லாம் இயற்கை தான்.
அதுவே வெங்காயத்தில் உலகிலுள்ள அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் இருக்கிறது என்றுசொன்னால் நம்புவோமா?
அதை சோதித்துப் பார்த்து தான் நம்புவோம்.
அஜ்வாவுக்கு விஷத்தை முறிக்கும் தன்மை உண்டு என்று சொன்னால், அதை நபியின்பெயரால் சொன்னால், அதை செய்து காட்டி நிரூபிப்பது தான் நபியை மதிப்பவர்கள் செய்யவேண்டியது.
இவர்கள் உள்ளத்தால் நம்பாமல் வெறுமனே வாயளவில் நம்புகிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
நாமோ உள்ளத்தாலும் நம்பவில்லை, வாயளவிலும் நம்பவில்லை என்று சொல்கிறோம்.
இது தான் வேறுபாடு !
https://bit.ly/3womYd0