மறுமை நாளில் நபியிடம் பரிந்துரை வேண்டுவது இணைவைப்பதாகாதா?
கியாமத் நாளில் மக்கள் தங்களுக்கு நேர்ந்துள்ள சிரமத்தை நபிமார்களிடம் முறையிடும் போது அல்லாஹ்விடம் தானே அவர்கள் முறையிடுமாறு கூறி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் முஹம்மத நபியிடம் பரிந்துரையைக் கேட்குமாறு கூறுவது இணைவைப்பதாக ஆகாதா என்று நண்பர் ஒருவர் கேட்கிறார். இது சரியா...?
மறுமையில் மக்கள் நபிமார்களிடம் வந்து அல்லாஹ் விரைவாகத் தீர்ப்பளிப்பதற்கு அவனிடம் பரிந்துரை செய்யுமாறு கேட்பார்கள். அனைத்து நபிமார்களும் தங்களுக்கு இது இயலாது என்று கூற இறுதியாக முஹம்மது (ஸல்) அவர்களிடம் வருகை தருவார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அனுமதி கொடுத்த பின் அவர்கள் பரிந்துரை செய்வார்கள் என ஹதீஸ் கூறுகின்றது.
பரிந்துரை வேண்டி மக்கள் தங்களிடம் வந்த போது நபிமார்கள் அவர்களை அல்லாஹ்விடம் கேட்கச் சொல்லாமல் மற்ற நபியிடம் ஏன் அனுப்பினார்கள்? நபிமார்களுக்கு தவ்ஹீத் தெரியாதா? என்று உங்கள் நண்பர் கேள்வி கேட்டுள்ளார்.
தவ்ஹீதைப் பற்றிய சரியான தெளிவு இல்லாத காரணத்தாலே இந்தக் கேள்வி கேட்டுள்ளார்.
பரிந்துரை வேண்டுவது அனைத்தும் இணை கற்பிப்பாக ஆகாது. மாறாக சில பரிந்துரைகள் இணை வைப்பில் சேரும். சில பரிந்துரை வேண்டுதல் இணை வைப்பில் அடங்காது.
ஒருவரை இம்மையிலோ மறுமையிலோ நேருக்கு நேராக நாம் சந்திக்கும் போது அவர்களுக்கு எது இயலுமோ அது பற்றி பரிந்துரைக்குமாறு வேண்டுவது இணை கற்பித்தல் ஆகாது. ஏனெனில் இது போல் பரிந்துரை வேண்டும் போது அவருக்கு இறைத் தன்மை இருபதாக யாரும் கருதுவதில்லை. ஆனால் நாம் கண்ணால் பார்க்காத நம் முன்னே இல்லாத அல்லது செத்துப் போய்விட்ட ஒருவரிடம் நாம் பரிந்துரை வேண்டினால் அது தான் இணை வைப்பாகும். ஏனெனில் இறைவனை எப்படி நாம் பார்க்கா விட்டாலும் அவன் நம்மைப் பார்க்கிறானோ அப்படி அவர்களும் நம்மைப் பார்க்கிறார்கள் என்ற நம்பிக்கை இத்ற்குள் அடங்கி உள்ளது. இந்த வகையில் இது இணை வைப்பாக ஆகி விடுகின்றது.
நாம் கேட்பது போல் அதே நேரத்தில் இன்னும் பலர் அவர்களிடம் கேட்பார்கள். அதை எல்லாம் அவர்கள் செவியுறுகிறார்கள் என்ற நம்பிக்கை இதனுள் அடங்கி உள்ளது. எங்கிருந்து அழைத்தாலும் எத்தனை பேர் அழைத்தாலும் அத்தனையையும் ஒரே நேரத்தில் இறைவன் எப்படி கேட்பானோ அது போல் இவர்களும் கேட்பார்கள் என்ற நம்பிக்கை இதனுள் அடங்கியுள்ளதால் இது இணை வைப்பாக ஆகி விடுகிறது.
ஆனால் இம்மையிலோ மறுமையிலோ நாம் நேருக்கு நேர் பார்த்து கேட்கும் போது அதில் இணைவைக்கும் எந்த அம்சமும் இல்லை.
நபிகள் நாயகம் ஸல் அவர்களை இந்த உலகில் நாம் பார்ப்பதில்லை. எனவே நபியே நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டால் அவர்கள் எங்கிருந்து அழைத்தாலும் செவியுறூவார்கள் என்ற கருத்து அதற்குள் உள்ளதால் அது கூடாது. ஆனால் நபித்தோழர்கள் நேரடியாக நபியை சந்திக்கும் போது பரிந்துரை செய்யுங்கள் என வேண்டி இருந்தால் இதில் எந்த இணை வைத்தலும் ஏற்படவில்லை.
அது போல் மறூமையில் நாம் நபியை சந்திக்கும் போது அவர்களை நேரடியாகக் கண்ணால் கண்டு அவர்களின் பரிந்துரை வேண்டினால் அவர்களுக்கு எந்த இறைத் தன்மையும் இருப்பதாகக் கருத இடமில்லை.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூட மிஃராஜில் மூஸா நபியை நேருக்கு நேர் பார்த்த போது அவரிடம் உதவி பெற்றது இந்த அடிப்படையில் தான்.
இணை கற்பிக்கும் தன்மை எதில் அடங்கியுள்ளதோ அது தான் இணை கற்பிப்பாகும்
தொழ கூடாதா 5 நேரங்கள் பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞
• இஸ்லாம் நமக்கு தொழுகை உடைய நேரங்கள் பற்றி கூறியது போன்று தொழ கூடாதா நேரங்கள் பற்றியும் கூறிய உள்ளது!
• இந்த நேரங்களில் நாம் உபரியான (நபில்) எந்த தொழுகையும் தொழ கூடாது!
1) பஜ்ர் பின்பு இருந்து சூரியன் உதயம் ஆகும் வரை தொழ கூடாது :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஃபஜ்ர் உதயம் ஆகி விட்டால் ஃபஜ்ர் உடைய இரண்டு ரக்அத்தை தவிர வேறு தொழுகை இல்லை!
(நூல் : புகாரி : 586 | தப்ரானீ : 816 | ஸஹீஹ் ஜாமிஃ : 678)
• பஜ்ர் தொழுகை பின்பு அல்லது சூரியன் உதயம் ஆகும் நேரத்தில் நாம் எந்த வித உபரியான தொழுகையும் தொழ கூடாது!
• ஆனால் ஒருவருக்கு பஜ்ர் முன் சுன்னத் தவறி விட்டது என்றால் இவர் மட்டும் பஜ்ர் தொழுத பின்பு பஜ்ர் உடைய முன் சுன்னத் தொழுகை தொழுகலாம்! அது சூரியன் உதயம் ஆகும் நேரமாக இருந்தாலும் சரியே!
(நூல் : இப்னு ஹிப்பான் : 2471 | திர்மிதீ : 387 | இப்னு மாஜா : 984)
• ஒருவர் வழமையாக பஜ்ர் தொழுவார் ஒரு நாள் அசதியில் உறங்கி விட்டார்! எழும் நேரத்தில் சூரியன் உதயம் ஆகுகிறது அல்லது சூரியன் உதயம் ஆகி விட்டது என்றாலும் இவர் பஜ்ர் உடைய முன் சுன்னத் மற்றும் பர்ளு தொழுகலாம்!
• ஆனால் இவ்வாறு வழமையாக தொழ கூடாது!
(நூல் : புகாரி : 595)
• இதை தவிர்த்து வேறு எந்த வித உபரியான (நபில்) தொழுகையும் பஜ்ர் பின்பு தொழ கூடாது!
2) சூரியன் உதயம் ஆகி ஒரு ஈட்டி அளவுக்கு உயரும் வரை உள்ள நேரம் :
• சூரியன் உதயம் ஆகும் நேரத்தில் எந்த விதமான உபரியான தொழுகையும் தொழ கூடாது! ! 15 நிமிடம் கழிந்த பின்பு தான் தொழ வேண்டும்!
3) சூரியன் உச்சியில் இருந்து சாயும் வரை உள்ள நேரம் :
• சூரியன் உச்சியில் இருக்கும் நேரத்தில் எந்த வித உபரியான தொழுகையும் தொழ கூடாது! 15 நிமிடம் கழிந்த பின்பு தான் தொழ வேண்டும்!
4) சூரியன் சாய்ந்ததில் இருந்து மறையும் வரை உள்ள நேரம் :
• சூரியன் மறையும் நேரத்தில் எந்த வித உபரியான தொழுகையும் தொழ கூடாது! சூரியன் முழுமையாக மறைந்த பின்பு தான் தொழ வேண்டும்!
(நூல் : முஸ்லீம் : 831)
5) அஸர் தொழுகைக்கு பின்பு இருந்து சூரியன் மறையும் வரை உள்ள நேரம்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அஸருக்கு பின்பு இருந்து சூரியன் மறையும் வரை வேறு எந்த தொழுகையும் இல்லை!
(நூல் : புகாரி : 581 | முஸ்லீம் : 827)
• அஸர் தொழுகைக்கு பின்பு வேறு எந்த உபரியான தொழுகையும் தொழ கூடாது! ஆனால் ஒருவர் பர்ளு தொழுகையை தவறி விட்டால் அவர் மட்டும் இந்த நேரங்களில் விட்ட தொழுகையை தொழுகலாம்!
• ஒருவருக்கு லுஹர் பின் சுன்னத் தவறி விட்டது என்றால் அவர் அஸர் தொழுகைக்கு பின்பும் தொழுகலாம்!
(நூல் : புகாரி : 590 | திர்மிதி : 177 | ஸஹீஹ் ஜாமிஃ : 2410)
💟 தடுக்கப்பட்ட நேரத்தில் சுன்னத் தொழுகலாமா :
• மேலே குறிப்பிட்டு உள்ள நேரங்களில் எந்த வித உபரியான தொழுகையும் தொழ கூடாது! ஆனால்,
• சுன்னத் தொழுகைகள் : லுஹா தொழுகை - இஸ்திகாரா தொழுகை - பயணம் செல்லும் முன் தொழும் தொழுகை!
• இது போன்ற தொழுகைகள் தடுக்கப்பட்ட நேரம் கடக்கும் வரை காத்து இருக்க வேண்டும் ஆனால் நிர்பந்தம் சூழ்நிலை தொழுதே ஆக வேண்டும் நேரம் மிக குறைவாக உள்ளது என்றால் மட்டும் அவர் இந்த நேரங்களில் சுன்னத் தொழுகைகள் தொழுகலாம்!
• நேரம் உள்ளது என்றால் தொழுகை தடை செய்யப்பட்ட நேரம் கடக்கும் வரை காத்திருந்து பின்பு தொழ வேண்டும்!
(நூல் : மஜ்மூ ஃபதாவா : இப்னு உதைமீன் (ரஹ்) : 14 / 275)
• மஸ்ஜித் காணிக்கை தொழுகை - ஒளு செய்த பின்பு தொழும் தொழுகை ஜனாஸா தொழுகை - கிரகண தொழுகை - பாவமன்னிப்பு தொழுகை! இது போன்ற தொழுகைகள் தொழ தடுக்கப்பட்ட நேரங்களிலும் தொழுகலாம்!
💟 பர்ளு தொழுகை உடன் சேர்ந்த சுன்னத் தொழுகைகள் விடுபட்டால் :
• பர்ளு தொழுகை உடன் சேர்த்து சில சுன்னத் தொழுகைகளும் உள்ளது இந்த தொழுகையை நாம் சரியான நேரத்தில் தொழ வேண்டும்!
• ஆனால் தொழ முடியாத சூழ்நிலை அவசர பயணம் அல்லது வேறு ஏதேனும் நிர்பந்தம் காரணம் இருந்து அவர் இந்த தொழுகையை தவற விட்டு அவருக்கு தடுக்கப்பட்ட நேரத்தில் தான் தொழ சூழ்நிலை அமைந்தது என்றால் அவர் விடுபட்ட சுன்னத் தொழுகையை இந்த நேரங்களில் தொழுகலாம்!
• அல்லது ஒருவருக்கு அடுத்த நேர தொழுகை பின்பு தான் விடுபட்ட சுன்னத் தொழுகை தொழ நேரம் கிடைக்கிறது என்றால் அவர் அடுத்த நேர தொழுகை தொழத பின்பு விடுப்பட்ட சுன்னத் தொழுகையை தொழுகலாம்!
• நபி (ஸல்) அவர்கள் லுஹர் பின் சுன்னத்தை அஸர் தொழுகைக்கு பின்பு தொழுது உள்ளார்கள்!
(நூல் : புகாரி : 590)
💟 தொழுகை தொழ மட்டுமே தடை :
• மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து நேரங்களில் தொழ மட்டுமே தடை உள்ளது இதை தவிர்த்து இந்த தடுக்கப்பட்ட நேரத்திலும் நாம் அல்குர்ஆன் ஓதலாம் திக்ர் செய்யலாம்! ஸஜ்தா வசனங்கள் ஓதினால் ஸஜ்தா செய்யலாம் இதற்கு எந்த வித தடையும் இஸ்லாம் நமக்கு கூறவில்லை!
(Source : Fataawa al-Lajnah al-Daa’imah : 7 / 264)
@அல்லாஹ் போதுமானவன் 💞
https://rb.gy/bf12oq