தவ்ஹீத் ஜமாஅத் video's: நாய்கள் நடமாடும் நாய்கள் படுக்கும் நாய்கள் சிறுநீர் கழிக்கும் திடல்களில் பெருநாள் தொழலாமா ?

நாய்கள் நடமாடும் நாய்கள் படுக்கும் நாய்கள் சிறுநீர் கழிக்கும் திடல்களில் பெருநாள் தொழலாமா ?

 நாய்கள் நடமாடும் நாய்கள் படுக்கும் நாய்கள் சிறுநீர் கழிக்கும் திடல்களில்
பெருநாள் தொழலாமா ?

விமர்சனத்திற்கு பதில்
==============

திடலில் தொழுதால் நஜீஸ் என்று கூறி அல்லாஹ்வும் அவனது தூதரும் அனுமதித்த கொள்கையை மறுத்து அல்லாஹ்வுக்கு மார்க்கத்தை கற்றுக் கொடுக்கும் வழி கேடர்களின் சிந்தனையில் இருந்து நம்மைப் பாதுகாப்பானாக

சில சகோதரர்கள் இஸ்லாத்தை சரியாக விளங்காமலோ அல்லது விளங்கியோ உண்மை இது தான் என்று தெரிந்தும் தங்கள் மத்ஹப் கொள்கையை தங்கள் உலமாக்களை காப்பாத்த பெருநாள் தொழுகை திடலில் தொழுவதையிட்டு நாய் நஜீசில் தொழுகிறார்கள் என்று நபியின் சுன்னவான திடல் தொழுகையையும் கேவலமாக சித்தரித்தும் பேசியும் எழுதியும் வருகிறார்கள் திடலில் நாய்கள் படுக்கிறது நடமாடுகிறது நஜீஸில் தொழுகிறார்கள் அப்படியெல்லாம் தொழலாமா? என்று மார்க்கம் தெரியாமல் நபிகளாரின் ஹதீத்களை படிக்கமால் அறிவீனமாக விமர்சிப்பதை கண்டுவருகிறோம்

இது தொடர்பாக அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மத் (ஸல் ) அவர்களும் கூறிய அடிப்படையில் இதற்கான பதிலை முன்வைக்கிறேன்.


முதலில் நாய்கள் நடமாடும் இன்னும் படுக்கும் இடங்கள் நஜீஸ் இல்லை என்பதை நபியவர்கள்கூறி உள்ளார்கள் அவ்விடத்தில் தொழுவதால் எந்த பதிப்பும் இல்லை அதேநேரம் நாய் சிறுநீர் கழித்து அது காய்ந்து விட்டால் அல்லது மலம் கழித்து அது காய்ந்து விட்டால் அடையாளம் தெரியாமல் போய்விட்டால் எந்த பதிப்பும் இல்லை ஏனனில் மண் அல்லாஹ்வின் அற்புத படைப்பு அந்த மண்ணைக் கொண்டு தான் நாய் வாயை வைத்த ஆடையை பத்திரத்தை கழுவ வேண்டும் அப்போது தான் நஜீஸ் நீங்கும் என்ற அளவுக்கு அற்புதமாக நஜீசை நீக்கும் ஒரு அற்புதமாக அல்லாஹ் மண்ணை ஆக்கி உள்ளான்

எனவே நாய் நடமாடுவதால் நாய் அங்கே படுப்பதால் எந்த பதிப்பும் இல்லை அதேநேரம் நாய் மலம் அல்லது சிறுநீர் கழித்து இருந்து காய்ந்து அடையாளம் தெரியாமல் போய் விட்டால் எந்த பதிப்பும் இல்லை
தொழும் நேரம் மலம் இருந்தால் அதை எடுத்து விசி விட்டால் போதுமானது இதை விளங்காமல் மனிதர்களை கடவுளாக தங்கள் மத்ஹபுகளை கடவுளாக எடுத்துக் கொண்டு இஸ்லாத்தின் தூய்மை அதன் சித்தாந்தந்தம் தெரியாமல் உளறி கொண்டிருப்பதையும் அல்லாஹ்வுக்கே மார்க்கம் சொல்லிக் கொடுக்கும் வழிகெட்டவர்களையும் அங்கங்கே காணலாம்

அல்லாஹ் இவர்களின் வழிகெட்ட சிந்தனையில் இருந்து நம்மைப் பாதுகாப்பானக

நபியவர்களின் காலத்தில் மஸ்ஜித் வெறும் மன்னாகவே இருந்தது அப்பளிவாசலில் நாய்கள் சென்று வரும் சிறு நீர் கூட கழிக்கும் அப்படிப்பட்ட இடத்தில் தான் நபியவர்களும் உத்தம நபித்தோழர்களும் தொழுது வந்தார்கள் என்ன கரணம் மண்ணைக் கொண்டு மண் சுத்தமாக்கி விடும் எனவே நபியவர்களுக்கு தெரியாத நஜீஸ் பெருநாள் தொழுகையை திடலில் தொழும் மக்களை விமர்சிக்கும் இவர்களுக்கு தெரிந்தது ஆச்சரியமே நபியின் வஹியில் குறை காணும் வழி கெட்ட கொள்கை தான் இவர்களது கொள்கையும் மத்ஹபும்

நாய்கள் நடமாடும் இடங்களில் நபியர்கள் தொழுதார்கள் என்பதற்கான ஆதாரம் இதோ:-
 
حَمْزَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ قَالَ: «كَانَتِ الكِلاَبُ تَبُولُ، وَتُقْبِلُ وَتُدْبِرُ فِي المَسْجِدِ، فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَكُونُوا يَرُشُّونَ شَيْئًا مِنْ ذَلِكَ»

'நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நாய்கள் பள்ளிவாசலின் உள்ளே வந்தும் அதில் சிறுநீர் கழித்தும் சென்று கொண்டிருந்தன. அதற்காக அதில் எவரும் தண்ணீர் தெளிக்கவில்லை' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (நூல் புஹாரி 174)

நபிகளாரின் சமுதாயத்திட்க்கு கொடுக்கப்பட்ட மிகப் பெரிய அருள் அற்புதம் இந்த பூமியின் அனைத்து இடங்களில் தொழலாம் பூமி அனைத்தும்
தொழுமிடமாகும் ..கப்ருஸ்தானங்களையும் குளியலறையும் தவிர
 
جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ مِنَ الأَنْبِيَاءِ قَبْلِي: نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ، وَجُعِلَتْ لِي الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا، وَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلاَةُ فَلْيُصَلِّ، وَأُحِلَّتْ لِي الغَنَائِمُ، وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً، وَبُعِثْتُ إِلَى النَّاسِ كَافَّةً، وَأُعْطِيتُ الشَّفَاعَةَ "

438. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'எனக்கு முன்னர் (நபிமார்கள்) யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்ய்ம இடைவெளியிலிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத்தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (தான் இருக்கும் இடத்தில்) தொழுது கொள்ளட்டும்! போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பப்பட்டார்கள். ஆனால், நான் மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன். (மறுமையில் என்னுடைய உம்மத்துக்காக) சிபாரிசு செய்யும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளேன்.
என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.


317 - حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، وَأَبُو عَمَّارٍ، قَالاَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الأَرْضُ كُلُّهَا مَسْجِدٌ إِلاَّ الْمَقْبَرَةَ وَالحَمَّامَ.

பூமியின் அணைத்து இடங்களும் தொழுமிடமாகும் கப்ருஸ்தானங்களையும் குளியல் அறையையும் தவிர என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் (நூல் திர்மிதி 492)

இப்படிப்பட்ட அற்புதமான கொள்கையில் இருந்து கொண்டு இஸ்லாத்தை சரியாக விளங்காமல்
திடலில் தொழுதால் நஜீஸ் என்று கூறி அல்லாஹ்வும் அவனது தூதரும் அனுமதித்த கொள்கையை மறுத்து அல்லாஹ்வுக்கு மார்க்கத்தை கற்றுக் கொடுக்கும் வழி கேடர்களின் சிந்தனையில் இருந்து நம்மைப் பாதுகாப்பானாக!!!

share this.. https://shorturl.at/pwFt3

Search This Blog