நடுநிலை அறிஞர்களும்.. விமர்சிக்கும் ஸலபுகளும்.
எழுதியவர் சகோ : Ahmed Jamsath Ahamedsha அஸ்ஹரி
அறிஞர் பி ஜே ஒரு "முதக்கப்F", "தகி", "முப்திஃ"
ஆய்வில்லாத மௌலவிகள் : பி ஜே ஒரு முப்ததிஃ (பித்அத்வாதி)
சவூதி பேராசியர்கள் : அறிஞர் பி ஜே ஒரு முப்திஃ (Thinking out of the box, வித்தியாசமாக சிந்திக்கும் திறமை உள்ளவர், முன்பு எவரும் சொல்லாத வகையில் சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர், )
ابتكار ، إيجاد شيء غير مسبوق,قوَّة الإبداع : قوَّة الابتكار والخَلْق
(அல் வஸீத் அகராதி)
ஆய்வில்லாத மௌலவிகள் : பி ஜே ஒரு ஜாஹில்.வாசிப்பில்லாமல் பேசுகிறார்
சவூதி பேராசிரியர்கள்: அவ்வாறு சொல்லாதீர்கள், அறிஞர் பி ஜே மிகப்பெரும் ஆய்வாளர், அவர் ஒரு தகி (ذكي), குர்ஆனை தப்ஸீர் செய்யும் கலை, இஸ்லாமிய கலைகளில் ஆய்வுள்ளவர். கல்வி தேடும் மாணவர் போன்றவரல்ல அவர், அதையும் தாண்டி மிகப்பெரும் ஆய்வாளர்.அவர் ஒரு முதக்கப். அவருக்கு அநியாயம் செய்யாமல் இருக்க இதையே என்னால் கூற முடியும்.
தகி (ذكي) விளங்குவதில் திறமையுள்ளவர்,
கெட்டித்தனமானவர். ذَكِيَّ الفَهْمِ
அதிகமான பயிற்ச்சிகள், ஆராய்சிகள் செய்பவர்
ذكَّى فلانٌ : حَظِيَ بالذكاء لكثرة رياضته وتجاربه
அறிஞர் பி ஜே ஒரு முதக்கப் مُثَقَّف = அறிவிலும், வாசிப்பிலும் விசாலாமான வாசிப்புள்ளவர், மிக ஆழமாக ஆய்வு செய்பவர்.متوسِّع ، مُتبحِّر في الثقافة والمطالعة
(அல் வஸீத் அகராதி)
ஆய்வில்லாத மௌலவிகள்: பி ஜே தர்ஜுமாவை பதிப்புக்கு பதிப்பு திருத்துகிறார்.அது புதிய ஏற்பாடு பழைய ஏற்பாடு.
சவூதி பேராசியர்கள் : அறிஞர் பி ஜே அவர்கள் பதிப்புக்கு பதிப்பு திருத்தங்கள் கொண்டுவருவது சிறந்த வழிமுறை என்பதில் எவரும் சந்தேகம் கொள்ளமுடியாது. அது நல்லதொரு முயற்சியுமாகும்.
ஆய்வில்லாத மௌலவிகள் : பி ஜே யின் தர்ஜுமாவை வாசிக்காதீர்கள்.
சவூதி பேராசியர்கள் :அறிஞர் பி ஜே யின் தர்ஜுமாவில் ஒரு சில தவறுகளை விட்டுவிட்டு அவரது மற்ற தப்சீர்களை தொகுத்து மக்களுக்கு கொடுக்க நாம் பணம் தருகிறோம்.
ஆய்வில்லாத மௌலவிகள்: எவருமே சொல்லாத கருத்தை பி ஜே சொல்கிறார். இது வழிகேடு.
சவூதி பேராசியர்கள் : அறிஞர் பி ஜே எவரும் சொல்லாத கருத்தை சொன்னதாக நீங்கள் சொல்வதில் சிலது முன்னாள் உள்ள அறிஞர்கள் சொன்னவைதான், அது சரியான தப்சீரும்தான். அதில் இன்னும் சிலது முன்னாள் எவரும் ஆய்வு செய்யாதது என்றாலும் அறிஞர் பி ஜே க்கு முன்பு எவரும் சொல்லாத வகையில் ஏற்கத்தக்க வகையில் உள்ள தப்சீராகும். அவற்றை நான் பிரயோசனம் கருதி குறிப்பெடுத்து வைத்துள்ளேன்.
==========================================
share this... https://bit.ly/3WTFXrj