சவுதிப் பணம் ஹராம் என்று நாம் சொன்னதாக சிலர் அண்மைக்காலமாக அவதூறு பரப்பி வருகின்றனர். இவ்வாறு குற்றம் சாட்டுவோர் நாம் சொன்னதற்கான ஆதாரத்தைப் காட்டவேண்டும். ஆதாரம் காட்டாமல் இவ்வாறு சொல்பவர்கள் பெரும் பொய்யர்கள்.
வேளிநாட்டு நிதியைப் பொறுத்தவரை அதை ஹராம் என்றோ கூடாது என்றோ நாம் ஒரு போதும் பிரசாரம் செய்ததில்லை. அதைப் பெறுவோர் பயன்படுத்திய தவறான முறையை நாம் விமர்சித்துள்ளோம்.
ஆடு மாடுகளுக்குப் பள்ளி கட்டுவது, தான் இருக்கும் கொள்கைக்கு எதிரானவர்களுக்குப் பள்ளி கட்டுவது, காசு வழங்குபவனிடம் கொள்கையை அடகுவைத்தவிட்டு பணம் பணம் என்று நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அலைவது, சுயமாpயாதையை அடகுவைப்பது தன்னைவிட தரங்கெட்டவர்களிடமெல்லாம் கூலைக் கும்பிடு போடுவது போன்றவற்றைத் தான் எதிர்க்கின்றோமே தவிர ஹலாலான முறையில் அறபியோ, அமெரிக்கனோ நிபந்தனை இன்றி நமக்குத் தந்தால் நாம் எடுப்போம். எடுத்தும் இருக்கின்றோம்.
நிபந்தனையிட்டுத் தந்தால் அதை நாம் மறுத்துள்ளோம். நிபந்தனையிட்டவர்களிடம் பணத்தை எடுக்காமல் விட்டுள்ளோம்.
------------
