தவ்ஹீத் ஜமாஅத் video's: மலஜலம் கழிக்கும் போது பாங்குக்கு பதில் சொல்லலாமா பெண்கள் பாங்கு சொல்லலாமா

மலஜலம் கழிக்கும் போது பாங்குக்கு பதில் சொல்லலாமா பெண்கள் பாங்கு சொல்லலாமா

  மலஜலம் கழிக்கும் போது பாங்குக்கு பதில் சொல்லலாமா?

பாங்கு சொல்லும் போது படுத்த நிலையிலேயே பாங்குக்குப் பதில் சொல்லலாமா?சாப்பிடுதல், உளூச் செய்தல், தொழுதல், மலஜலம் கழித்தல் போன்ற செயல்களைச் செய்யலாமா?

பதில் :


385 ( 12 ) حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ ، أَخْبَرَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ الثَّقَفِيُّ ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسَافٍ ، عَنْحَفْصِ بْنِ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ، عَنْأَبِيهِ ، عَنْ جَدِّهِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِذَا قَالَالْمُؤَذِّنُ : اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، فَقَالَ أَحَدُكُمُ : اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ. ثُمَّ قَالَ : أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، قَالَ : أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ. ثُمَّ قَالَ : أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، قَالَ : أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ. ثُمَّ قَالَ : حَيَّ عَلَى الصَّلَاةِ، قَالَ : لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ. ثُمَّ قَالَ : حَيَّ عَلَى الْفَلَاحِ، قَالَ : لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ. ثُمَّ قَالَ : اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، قَالَ : اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ. ثُمَّ قَالَ : لَا إِلَهَ إِلَّا اللَّهُ، قَالَ : لَا إِلَهَ إِلَّا اللَّهُ مِنْ قَلْبِهِ دَخَلَ الْجَنَّةَ ".

முஅத்தின் "அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்' என்று சொன்னதும் உங்களில் (அதைச் செவியுறும்) ஒருவர் "அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்' என்று கூறட்டும்.

"அஷ்ஹது அன்(ல்) லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று கூறும் போது, "அஷ்ஹது அன்(ல்) லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று கூறட்டும்.

"அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்' என்று கூறும் போது, "அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்' என்று கூறட்டும்.

"ஹய்ய அலஸ் ஸலாஹ்' என்று கூறும் போது, "லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்' என்று கூறட்டும்.

"ஹய்ய அலல் ஃபலாஹ்' என்று கூறும் போது, "லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்' என்று கூறட்டும்.

"அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்' என்று கூறும் போது "அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்' என்று கூறட்டும்.

(இறுதியாக) முஅத்தின் "லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று கூறும் போது, (செவுயுறும்) அவர் "லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று மனப்பூர்வமாகச் சொன்னால் அவர் சொர்க்கத்தில் நுழைந்து விடுகின்றார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)   நூல்: முஸ்லிம்


பாங்குக்குப் பதில் சொன்னால் அதற்கு சுவனம் கூலியாகக் கிடைக்கும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. எனவே பாங்கு சொல்லப்படுவதைச் செவியுற்றால் அதற்கு மேற்கண்டவாறு பதில் கூறுவது அவசியமாகும். படுத்துக் கொண்டு பதில் கூறுவதற்கு எந்தத் தடையும் இல்லை. திருக்குர்ஆனில் நல்லோர்களைப் பற்றிக் கூறும் போது படுத்த நிலையில் அல்லாஹ்வை நினைப்பார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள்.  அல்குர்ஆன்3:191

அதே போன்று பாங்கு சொல்லப்படும் போது உளூச் செய்தல், சாப்பிடுதல் போன்றவற்றுக்கும் தடையில்லை. பாங்குக்குப் பதில் கூறியவாறே இந்தச் செயல்களை ஒருவர் செய்ய முடியும். ஆனால் தொழுகை மற்றும் மலஜலம் கழித்தல் போன்றவற்றின் போது பாங்குக்குப் பதில் கூற முடியாது.

தொழுது கொண்டிருக்கும் போது பாங்கு சொல்லப்பட்டால் தொழுகையைத் தான் தொடர வேண்டும். ஆனால் பாங்கு சொல்லத் துவங்கி விட்டால் அதற்குப் பதில் சொல்வதன் நன்மையைக் கருத்தில் கொண்டு, பாங்கு முடிந்த பின் தொழுவது தான் சிறந்தது.

அதே போன்று மலஜலம் கழிக்கும் போது அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்திருக்கின்றார்கள். எனவே ஒருவர் மலஜலம் கழித்துக் கொண்டிருக்கும் போது பாங்கு சொல்லப்பட்டால் அதற்குப் பதில் சொல்லக் கூடாது. ஆனால் அதே சமயம் பாங்கு சொல்லத் துவங்கி விட்டால் அதற்குப் பதில் சொல்வதில் உள்ள நன்மைக்காக, பாங்கு முடியும் வரை இயன்றால் தாமதப்படுத்தி மலஜலம் கழிக்கச் செல்லலாம். ஆனால் அதற்காக பாங்கு முடியும் வரை கண்டிப்பாக அடக்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்று கூற முடியாது.

88 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ ، حَدَّثَنَا زُهَيْرٌ ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْأَرْقَمِ ، أَنَّهُ خَرَجَ حَاجًّا - أَوْ مُعْتَمِرًا - وَمَعَهُ النَّاسُ، وَهُوَ يَؤُمُّهُمْ، فَلَمَّا كَانَ ذَاتَ يَوْمٍ أَقَامَ الصَّلَاةَ صَلَاةَ الصُّبْحِ، ثُمَّ قَالَ : لِيتَقَدَّمْ أَحَدُكُمْ - وَذَهَبَ الْخَلَاءَ - فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " إِذَا أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَذْهَبَ الْخَلَاءَ، وَقَامَتِ الصَّلَاةُ، فَلْيَبْدَأْ بِالْخَلَاءِ ". قَالَ أَبُو دَاوُدَ : رَوَى وُهَيْبُ بْنُ خَالِدٍ وَشُعَيْبُ بْنُ إِسْحَاقَ وَأَبُو ضَمْرَةَ هَذَا الْحَدِيثَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ رَجُلٍ حَدَّثَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَرْقَمَ، وَالْأَكْثَرُ الَّذِينَ رَوَوْهُ عَنْ هِشَامٍ قَالُوا كَمَا قَالَ زُهَيْرٌ.حكم الحديث: صحيح

அப்துல்லாஹ் பின் அர்கம் அவர்கள் ஹஜ் செய்வதற்கோ அல்லது உம்ராவுக்காகவோ புறப்பட்டார்கள்.  அவர்களுடன் சென்றிருந்த மக்களுக்கு அவரே தொழுகை நடத்துவார்.  ஒரு நாள் அவர் சுபுஹ் தொழுகை நடத்தத் தயாரானார்.  அப்போது அவர்களை நோக்கி, "உங்களில் ஒருவர் தொழுகை நடத்த முன் வாருங்கள்!  ஏனெனில் தொழ ஆரம்பிக்கும் போது கழிப்பிடம் செல்ல வேண்டியது  உங்களில் ஒருவருக்கு ஏற்பட்டால் முதலில் அவர் கழிப்பிடத்திற்குச் செல்வாராக!''என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் செவியுற்று இருக்கிறேன் என்று கூறிவிட்டு, கழிப்பிடத்திற்குச் சென்று விட்டார் என உர்வா பின் ஜூபைர் (ரலி) அவர்கள் தமது தந்தை ஜுபைர் (ரலி) வழியாக அறிவிக்கிறார்.

நூல்: அபூதாவூத் 81


தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது அதிக நன்மை பெற்றுத் தரக் கூடியதாக இருந்தாலும், அதற்காக மலஜலம் கழிப்பதைத் தாமதப் படுத்தக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். எனவே பாங்கு சொல்லப்படும் போது ஒருவருக்கு மலஜலம் கழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.


பெண்கள் பாங்கு சொல்லலாமா?

அஜி

பதில்:

பாங்கில் இரண்டு வகைகள் உள்ளன.

ஜமாஅத் தொழுகைக்கு மக்களை அழைப்பதற்காகச் சொல்லப்படும் பாங்கு ஒரு வகை. இந்த பாங்கை ஆண்கள் தான் சொல்ல வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவது அனுமதிக்கப்பட்டு இருந்தது. இந்த அனுமதியைப் பெண்கள் பயன்படுத்தியும் வந்தனர். அவர்களில் யாரும் பள்ளிவாசலில் பாங்கு சொல்ல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவு இடவில்லை. அனுமதிக்கவும் இல்லை.

தொழுகைக்கு வரும் பெண்கள் ஆண்களின் பின்னால் கடைசி வரிசையில் தான் நிற்க வேண்டும் என்ற ஏற்பாட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருந்தார்கள். ஆண்களின் வணக்க வழிபாடுகளுக்குப் பெண்கள் தலைமை தாங்கக் கூடாது என்பதை இதில் இருந்து நாம் அறிகிறோம்.

மற்றவர்களை அழைப்பதற்காக பாங்கு சொல்வது ஆண்களை முந்துவதில் அடங்கும். எனவே இது போன்ற பாங்குகளை சொல்லக் கூடாது.

ஒரு பள்ளியில் சொல்லப்பட்ட பாங்கு கேட்காத போதும், மக்கள் வசிக்காத பகுதியில் தொழும் போதும் பாங்கு சொல்ல வேண்டும். இந்த வகையான பாங்கை அதாவது தனக்காக சொல்லிக் கொள்ளும் பாங்கை பெண்கள் சொல்லலாம். சொல்ல வேண்டும்.


صحيح البخاري2848 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو شِهَابٍ، عَنْ خَالِدٍ الحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ مَالِكِ بْنِ الحُوَيْرِثِ، قَالَ: انْصَرَفْتُ مِنْ عِنْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَنَا أَنَا وَصَاحِبٍ لِي: «أَذِّنَا، وَأَقِيمَا وَلْيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا»

நான் நபிகள நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது தொழுகை நேரம் வந்தால் நீங்கள் இருவரும் பாங்கும், இகாமத்தும் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு இமாமாக இருக்கட்டும்'' என்று எனக்கும், என் நண்பர் ஒருவருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)  நூல் : புகாரி 2848


யாரையும் அழைக்கும் நோக்கம் இல்லாமல் பயணத்தில் இருக்கும் போதும் பாங்கு சொல்ல வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.


سنن أبي داود1203 – حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، أَنَّ أَبَا عُشَّانَةَ الْمَعَافِرِيَّ، حَدَّثَهُ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " يَعْجَبُ رَبُّكُمْ مِنْ رَاعِي غَنَمٍ فِي رَأْسِ شَظِيَّةٍ بِجَبَلٍ، يُؤَذِّنُ بِالصَّلَاةِ، وَيُصَلِّي، فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: انْظُرُوا إِلَى عَبْدِي هَذَا يُؤَذِّنُ، وَيُقِيمُ الصَّلَاةَ، يَخَافُ مِنِّي، قَدْ غَفَرْتُ لِعَبْدِي وَأَدْخَلْتُهُ الْجَنَّةَ "


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மலைப் பாறைகளின் உச்சியில் தொழுகை அழைப்பு (பாங்கு) சொல்லி தொழும் ஆட்டு இடையனைப் பார்த்து உங்கள் இரட்சகன் மகிழ்ச்சியடைகின்றான். ”பாருங்கள் என் அடியானை! பாங்கும், இகாமத்தும் கூறித் தொழுகின்றான். (காரணம்) என்னை அவன் அஞ்சுகிறான். (ஆகவே) என் அடியானை நான் மன்னித்து விட்டேன் என்று இறைவன் கூறுகின்றான்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)   நூல் : அபூதாவூத்


தன்னந்தனியாக இருப்பவன் பாங்கு சொன்னால் அதை இறைவன் விரும்புகிறான் என்பதால் நாம் தனியாகத் தொழுதாலும் பாங்கு சொல்ல வேண்டும். இந்த நன்மையை ஆண்களும் அடைந்து கொள்ளலாம். பெண்களும் அடைந்து கொள்ளலாம்.

பெண்கள் தனித்து தொழும் போதும், அல்லது பெண்களுக்கு பெண்கள் ஜமாஅத் நடத்தும் போதும் தமக்காக பாங்கு சொல்லலாம்.

--P.JAINUL ABIDEEN 



Search This Blog