தவ்ஹீத் ஜமாஅத் video's: அன்றும் இன்றும் கொள்கையில் தடம்புரளாதவர் சகோ பிஜே

அன்றும் இன்றும் கொள்கையில் தடம்புரளாதவர் சகோ பிஜே

பிஜே
 தஞ்சை தமுமுக மாநாட்டில் சகோ பிஜே அவர்கள் கடைசியாக
சத்திய பிரமாணம் செய்து அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு இந்த இயக்கம் ஒருநாளும் வோட்டு அரசியலுக்கு செல்லாது என்று கூறியபோது பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் முதல் அனைவரும் அதை ஏற்றுக்கொண்டு வழிமொழிந்தார்கள் வேறுவழியின்றி. 

ஆனால் அந்த கூட்டம் தங்களுக்காக வந்தது என்று தவறாக புரிந்துகொண்ட பேராசிரியர் இந்த ஆளை (PJ) கழட்டிவிட்டால்தான் இந்த கூட்டத்தை காட்டி அரசியல் நடத்தலாம் என்று எண்ணி தமுமுக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது தவ்ஹீத் காரர்கள் என்ற தவறான கருத்தை வெளியிட்டார் அப்போது அவருக்கு பக்கபலமாக இருந்தவர்கள் தமீமுன் அன்சாரி ஹைதரலி போன்றவர்கள். 

அவர்களின் அரசியல் ஆசைகளை தெரிந்துகொண்ட சகோ பிஜே அவர்கள் அதிலிருந்து விலகினார். 

சகோ பிஜே அவர்கள் தமுமுகாவை உருவாக்கி அதை ஒரு பிரமாண்ட 

சக்தியாக ஆக்கிக்காட்டி கலைஞரையே மிரளவைத்தவர் சகோ பிஜே அவர்கள். 

சகோ பிஜே அவர்கள் வெளியேறிய பிறகு அவர் செல்வாக்கு போய்விடும் தமுமுகாவிற்கு மட்டுமே செல்வாக்கு இருக்கும் அவரின் தவ்ஹீத் கூட்டம் செல்வாக்கை இழக்கும் என்று தப்புக்கணக்கு போட்டு அரசியல் பதவி இந்த கனவில் மூழ்கினார்கள். 

ஆனால் தஞ்சை மாநாட்டிற்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற  என்ற அமைப்பை தொடங்கி போட்ட முதல் இடஒதுக்கீட்டு பேரணி கும்பகோணத்தில் நடத்தினார் சுபஹானல்லாஹ் குடந்தை திணறியது.  

தவ்ஹீத்வாதிகளே தமுமுக வளர்ச்சிக்கு காரணம் என்று உணரவைத்து பதவியாசை பிடித்தவர்கள் முகத்தில் கறியை பூசினார். 

தவ்ஹீத்வாதிகளை அல்லாஹ் பிரித்துக்காட்டினான் அல்ஹம்துலில்லாஹ். 

மிக குறுகிய காலத்தில் புதிய அமைப்பிற்கு இந்த அளவு மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று நாம் கூட நம்பவில்லை.  

ஆனால் சகோ பிஜே தலைமையில் உள்ள ஏகத்துவவாதிகளுக்கே வெற்றி வந்தது மிக சக்திவாய்ந்த பேரியக்கமாக  TNTJ உருவானது. 

ஆனால் ஷைத்தான் விடுவானா ? அங்கிருந்த தன் நேசத்திற்குரிய சிலருக்கு பொருளாதார மோகத்தை உண்டாக்கி 

சகோ பிஜே அவர்களை தரம்கெட்ட சூழ்ச்சிகள் மூலம் வெளியேற வைத்து  உல்லாசவாழ்வை நோக்கி சென்று கொள்கையில் தரம்புரண்டு அமைப்பின் நல்ல பெயரை கெடுத்தார்கள். 

இதோடு பிஜே ஒழிந்தார் அவர் மேடையேற முடியாது தவ்ஹீத் பிரச்சாரம் முடிந்தது மார்க்கத்தின் பெயரில் ஜல்சா பண்ணலாம் என்று கொட்டமடித்த தலைமை நிர்வாகிகள் தலையில் இடிவிழுந்தது. 

அணைத்து கொள்கை தவ்ஹீத் வாதிகளை ஒன்றிணைத்து தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பை (NTF)உருவாக்கி மீண்டும் உண்மை கொள்கைவாதிகளுக்கே வெற்றி என்று நிரூபித்துள்ளார் அல்ஹம்துலில்லாஹ். 

பணமும் பதவியும் சொத்துக்களும் உள்ள ஒரு பேரியக்கம் ஒருபக்கம் (TNTJ) சத்திய கொள்கை மட்டும் உள்ள ஒரு பேரியக்கம் இங்கே (NTF)

சூழ்ச்சிக்காரர்கள் அதில்தான் வீழ்வார்கள். 

எல்லா புகழும் அல்லாஹ்விற்கே ! 

அன்றும் இன்றும் கொள்கையில் தடம்புரளாதவர் சகோ பிஜே அவர்கள். அந்த கொள்கையில் அவர் உறுதியாக உள்ளவரை அல்லாஹ்வின் உதவி அவருக்கே ! 

அவருக்காக துவா செய்வோம்.

-------------------------

மார்க்க அறிவற்ற சில அரைவேற்காடுகளின் விமர்ச்சனம்। 

ஜாக் தமுமுக போன்ற அமைப்பைவிட்டு பிஜே அவர்கள் வெளிவந்தபோது லட்சக்கணக்கில் அவர்பின் (TNTJ) சென்ற மக்கள் அவர் NTF தொடங்கிய பிறகு அந்த அளவு அவர்பின் செல்ல்வில்லையே என்று அவர்மீது கயவர்கள் சுமத்திய வீண்பழியை உண்மைபோல காட்ட முயல்கிறது  
தூய இஸ்லாத்தையும் நேர்வழியையும் எடுத்து விளக்குவதே அவர் வேலை। 
எவரையும் நேர்வழி படுத்துவது அவர் வேலை அல்ல அது அல்லாஹ்வின் கையில் உள்ளது। 
வழிகேட்டில் உள்ளவர்கள் அனைவரையும் வென்றெடுக்க முடியாது। 
வஹியே மார்க்கம் குர்ஆன் மற்றும் அதற்கு முரண்படாத ஹதீஸ்களே
பின்பற்ற தக்கவை என்ற கொள்கை கொண்ட சகோ பிஜே அவர்களை அதை ஏற்றுக்கொண்டு நேர்வழியை உணர்ந்த சிந்திக்கும் திறன்கொண்ட மக்களே அவரை நோக்கி வருவார்கள் 
மாறாக மர்கஸ் கொடி பேரியக்க மயக்கம் பொருளாதாரம் போன்ற சிந்தனை கொண்ட சுயசிந்தனையற்ற மந்தைகள் எப்படி அவர்பின் வருவார்கள் ?

ஷைத்தானின் சூழ்ச்சியில் விழுந்து ஆதாரம் இன்றி அவதூறு பரப்பி இன்றுவரை நிரூபிக்க முடியாத வக்கற்ற கூட்டம் தங்களின் தரங்கெட்ட கல்லவேளை அம்பலம் ஆகிவிட்ட கவலையில் உள்ள கூட்டம் எப்படி நேர்வழியை உணரமுடியும்। 

“ மேலும் அல்லாஹ் 
தான் நாடியவர்களுக்கே நேர்வழியை அருள்வான் “ 
இந்த இறை வசனம்
கூட அறியாத மக்கள் ஏன் லட்ச மக்கள் அவர்பின் வரவில்லை என்று அரைவேற்காடு தனமாக உளறுகிறது। 
கூட்டத்தை வைத்தா  செல்வாக்கை உறுதிப்படுத்துவது ? 
அப்படி பார்த்தால்  
மத்ஹப்வாதி பரலேவிகள் தரீக்காவாதிகளுக்கு தான் அதிக கூட்டம் உண்டு அதை வைத்து  செல்வாக்கை முடிவு செய்யலாமா ? 
மக்கள் கூட்டமா கொள்கை கூட்டமா ? என்பதே மக்கள் கேள்வி  ! 
பேரியக்க மயக்கத்தில் உல்லாசத்தை நாடும் கூட்டம் ஷைத்தான் சூழ்ச்சியைவிட்டு எளிதாக வெளிவருமா ? 

இன்ஷா அல்லாஹ் சத்தியத்தை உணர்ந்து வெளிவரும் காலம் வரும் எப்போதும் மந்தைகளாக இருக்கமாட்டார்கள்। உண்மையை உணர்ந்த நல்ல மனிதர்களும் ததஜ லே உண்டு பாவம் அப்பாவி அவர்கள் சூழ்நிலை கைதிகளாக அங்கே இருக்கவேண்டிய நிலை। 
அல்லாஹ் தூய இஸ்லாத்தை போதிக்கும் சகோ பிஜே அவர்களுக்கு கண்ணியத்தையும் வெற்றியையும் கொடுத்துக்கொண்டுதான் உள்ளான் 
ஆனால் அது குருடர்கள் கண்ணுக்கு தெரியாது. 
கொள்கையில் உறுதி உள்ளவரை அவருக்கே அல்லாஹ் வெற்றியை தருவான் மற்றவற்றின்  வளர்ச்சிகள் ஒரு மாயத்தோற்றமே! 
கொள்கையே நம் நோக்கம் ! 
மந்தைகளை கூட்டுவதல்ல …

share this.. https://bit.ly/4bxt0rB


Search This Blog