தவ்ஹீத் ஜமாஅத் video's: 1- நூல் - வஹியில் முரண்பாடா? 01

1- நூல் - வஹியில் முரண்பாடா? 01

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

வஹியில் முரண்பாடா?   F.M.ரஸ்மின் Misc

வெளியீடு : TNTJ பப்ளிகேஷன்ஸ்


        நூல் பற்றி...

தலைப்பு : வஹியில் முரண்பாடா?

ஆசிரியர் : F.M. ரஸ்மின் MISC

உரிமை   : ஆசிரியருக்கே!

மொழி    : தமிழ்

முதல் பதிப்பு : மே 2015

பக்கங்கள் : 311

வெளியீடு : TNTJ பப்ளிகேஷன்ஸ் 

விலை  : 

மொத்த விற்பனையாளர் :


பொருளடக்கம்

முன்னுரை       05

வஹியில் முரண்பாடா?     07 ஹதீஸ் கலை விதி பற்றிய ஓர் பார்வை • ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்ட முறை.    14

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கிறோமா?   18

ஹதீஸ் கலையில் இல்லாத புது விதியை தவ்ஹீத் ஜமாத் அறிமுகம் செய்கிறதா?       28

குர்ஆனுக்கு முரணான செய்தியை அறிவிப்பவர் பொய்யரா?  32

ஷாத் வகை ஹதீஸ்கள் பற்றிய விளக்கம்.    36

பெரும் அறிஞர்களுக்கு தெரியாததா இவர்களுக்கு தெரிந்து விட்டது? 41

புகாரியில் பதிவான பலவீனமான ஹதீஸ்கள்   46

வழிகேட்டை காப்பாற்ற ஹதீஸை பலவீனப் படுத்தும் வழிகேடர்கள். 54 வழிகேடர்களின் வழிமுறையா? • முஃதஸிலாக்களின் வழியில் பயணிப்பவர்கள் யார்?   73

“அஹ்லுல் குர்ஆன்”களின் வழியா?    81

நபி வழியா? புது வழியா?     89 மறுக்காமல் விளக்கம் சொல்லப்பட்ட செய்திகள் சில... • மனோ இச்சைப்படி மறுக்கிறோமா?    101

சிந்தனைக்கு முக்கியத்துவமா?     105

நபியின் சலியை நபித்தோழர்கள் தமது உடலில் பூசிக் கொண்டார்களா? 108 குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள்    • அஜ்வா பேரிச்சம் பழம் பற்றிய செய்தியின் உண்மை நிலை?  117

நபியவர்கள் தற்கொலைக்கு முயன்றார்களா?   124

அபூலஹபின் விரல்களை நரகம் தீண்டாதா?   129

குரங்கு விபச்சாரம் செய்ததா?     134

பல்லி பற்றிய ஹதீஸின் நிலை     142

வேண்டுமென்றே கொலை செய்தவனுக்கு மன்னிப்புண்டா?  147

உலகைப் படைக்க ஏழு நாட்களா?    158

காணாமல் போன இரண்டு வசனங்கள்    165

சுலைமான் நபிக்கு மறைவான அறிவு உண்டா?   181

நபியவர்கள் அன்னிய பெண்ணுடன் தனித்திருந்தார்களா?  196

மாடு உழவு செய்வதற்கு மாத்திரம் தான் படைக்கப்பட்டுள்ளதா?  216

மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்பு நடந்ததா?    224

விவசாயக் கருவிகளினால் இழிவு வருமா?    227

ஸாலிம் பற்றிய செய்தியின் உண்மை நிலை?   232

சூனியம் பற்றிய ஹதீஸ்களின் விளக்கம்    251

நபிகளாருக்கு சூனியம் - ஆறு மாத கால ஹதீஸ் பலவீனமா?  286

சூனியத்தை நம்பியவன் சுவர்க்கம் புகமாட்டான் - என்ற செய்தி பலவீனமானதா?      299

மூஸா நபி மலக்குள் மவ்துக்கு அடித்தார்களா?   306


முன்னுரை


உலக மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இறைவனால் வழங்கப்பட்ட புனிதமிக்க இஸ்லாம் மார்க்கத்தின் இறுதித் தூதராக இவ்வுலகுக்கு அனுப்பப்பட்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் திருமறைக் குர்ஆனை நமது வாழ்வியல் வழிகாட்டியாகவும், அதற்குரிய விளக்கமாக தமது வாழ்நாளையும் அமைத்துச் சென்றார்கள்.

நபி (ஸல்) அவர்களினால் வழங்கப்பட்ட இஸ்லாம் மார்க்கத்தின் மூல ஆதாரமாகத் திகழ்வது வஹீ - இறைச் செய்திகளாகும்.

இறைச் செய்திகள் திருக்குர்ஆன் என்று ஒரு முறையிலும், அதற்கு விளக்கமாக நபியவர்கள் கூறிய செய்திகள் ஹதீஸ் என்று இன்னொரு முறையிலும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்த இரு செய்திகளில் திருக்குர்ஆன் தான் இஸ்லாத்தின் முதல் அடிப்படை மூல ஆதாரமாகும்.

அதற்கு விளக்கவுரையாக அமையப் பெற்ற ஹதீஸ்கள் இரண்டாவது மூல ஆதாரங்களாக அமைகின்றன. இந்த இரண்டு ஆதாரங்களையும் இரண்டில் ஒன்று மற்றையதுடன் முரண்படாத வகையிலேயே இறைவன் அருளியிருக்கின்றான். 

ஒரே ஏக இறைவனான அல்லாஹ்விடமிருந்து அருளப் பெற்ற திருமறைக் குர்ஆனுக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் பேசமாட்டார்கள் என்பது குர்ஆன் கற்றுத் தரும் பேருண்மையாகும்.

உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை. அல்குர்ஆன் 53:1,2,3

நபி (ஸல்) அவர்கள் மார்க்க விஷயமாக எதனை எடுத்துச் சொன்னாலும் அது வஹீ - இறைச் செய்தியாகத் தான் இருக்கும். அவர்கள் மனோ இச்சைப்படி, தான் நினைத்தவற்றையெல்லாம் பேசவோ, மார்க்கம் என்று கற்றுத் தரவோ மாட்டார்கள் என்பதை மேற்கண்ட அல்குர்ஆன் வசனம் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றது. 

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். அல்குர்ஆன் 4:82

இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது. அல்குர்ஆன் 41:42

திருக்குர்ஆனில் முரண்பாடு இருக்காது என்பதுதான் இறைவேதம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

முரண்பாடு இருப்பது போல் நமக்குத் தோன்றினால் அது நம்முடைய சிந்திக்கும் தன்மையில் ஏற்பட்ட குறைபாடாகத் தான் இருக்க முடியும். இதனால் தான் இவ்வசனத்தில் சிந்திக்க மாட்டீர்களா? என்றும் சிந்தித்தால் முரண்பாடு இல்லை என்பதை அறிந்து கொள்வீர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

புரிந்து கொள்வதில் சிலருக்குத் தெளிவில்லாத காரணத்தால் தான் முரண்பட்ட இரு கருத்துக்களுக்கும் திருக்குர்ஆன் இடம் தருவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

திருக்குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ முரண்பாடு உள்ளது போல் தோன்றினால் அதை எப்படி சீர்படுத்திக் கொள்வது என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்

ஒட்டுமொத்தமாக திருக்குர்ஆன் எந்தக் கொள்கையை முன்வைக்கிறதோ அந்தக் கொள்கைக்கு மாற்றமாகப் பொருள் கொள்ளும் வகையில் ஒரு வசனம் நமக்குத் தெரிந்தால் அவ்வாறு பொருள் கொள்ளாமல் ஒட்டு மொத்த குர்ஆனிலிருந்து விளங்கும் கொள்கைக்கு ஏற்ற விளக்கத்தைத் தான் அந்த வசனத்துக்குக் கொடுக்க வேண்டும். இது குர்ஆனைச் சரியாக புரிந்து கொள்ளவதற்குரிய முக்கிய வழிமுறையாகும்.

அதுபோல் சில ஹதீஸ்கள் ஒட்டு மொத்த குர்ஆன் முன்வைக்கும் கொள்கைக்கு மாற்றமாக அமைந்திருக்கின்றன. எந்த வகையிலும் குர்ஆனுடன் ஒத்துப் போகும் வகையில் விளக்கம் கொடுக்க முடியாமல் அவை இருக்கும். அப்போது என்ன செய்வது?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கவே அனுப்பப்பட்டார்கள்.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். திருக்குர்ஆன் 16 : 44

விளக்கம் கொடுக்க அனுப்பப்பட்ட நபியவர்கள் குர்ஆனுக்கு முரணாகப் பேசவோ, நடக்கவோ மாட்டார்கள். அப்படி அவர்கள் பேசியதாக அல்லது நடந்ததாக ஒரு செய்தி கிடைத்தால் அது எந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது அல்ல: செய்தது அல்ல என்ற முடிவுக்கு நாம் வரவேண்டும்.

இது ஹதீஸ்களை மறுப்பதாக ஆகாது. இதையும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் நம்பகத் தன்மையில் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் சமமானவை அல்ல. திருக்குர்ஆனைப் பொறுத்த வரை அனைத்து நபித்தோழர்களும் அது இறைவேதம் என்பதற்குச் சாட்சிகளாக உள்ளனர்.

திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டி “இது என் இறைவனிடமிருந்து வந்தது’’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒட்டுமொத்த நபித்தோழர்களும் சாட்சிகளாக இருந்தனர். எழுத்து வடிவில் பதிவு செய்தனர். பலர் மனனம் செய்தனர்.

ஹதீஸ்களைப் பொறுத்தவரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிகபட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர் தான் சாட்சி கூறுகிறார்.

ஒட்டு மொத்த சமுதாயமே சாட்சி கூறுவதும், ஓரிருவர் சாட்சி கூறுவதும் சமமானதாக ஆகாது.

எவ்வளவு நம்பகமானவர்கள் என்றாலும் ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளில் தவறுகள் நிகழ வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மட்டுமின்றி அதற்கு அடுத்த காலத்து ஒட்டுமொத்த மக்களும் “இதுதான் குர்ஆன்” என்று நபித்தோழர்கள் சொன்னதாக அறிவிக்கின்றனர். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள அனைவரும் இதுபோல் அறிவிக்கின்றனர்.

ஹதீஸ்களைப் பொருத்தவரை ஓரிரு நபித்தோழர்கள் தான் அறிவித்துள்ளனர். நபித்தோழர் இப்படிச் சொன்னார் என்று அறிவிப்பதும் ஓரிருவர் தான். நூலாகத் தொகுக்கப்படும் காலம் வரை ஒருவரில் இருந்து ஒருவர் என்ற அடிப்படையில் தான் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டன.

எனவே திருக்குர்ஆன் விஷயத்தில் கடுகளவு கூட சந்தேகம் வராது. ஹதீஸ்களைப் பொருத்த வரை இந்த நிலை கிடையாது.

ஆனாலும் நபித்தோழர்களின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் அவற்றை ஏற்றுச் செயல்படுகிறோம். திருக்குர்ஆனுடன் மோதாத வரை இத்தகைய செய்திகளில் சந்தேகம் கொள்ளக் கூடாது. ஒரு ஹதீஸ் திருக்குர்ஆனுடன் மோதும்போது “இந்த அறிவிப்பில் எங்கோ தவறு நடந்துள்ளது” என்று முடிவு செய்து குர்ஆனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

நபித்தோழர்கள் அரைகுறையாகக் கேட்டதன் மூலம், அல்லது தவறாகப் புரிந்து கொண்டதன் மூலம் இந்தத் தவறு ஏற்பட்டு இருக்கலாம். அல்லது நபித்தோழர்களிடம் கேட்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவரிடம் தவறு நிகழ்ந்திருக்கலாம். அல்லது அதற்கடுத்த தலைமுறையைச் சேர்ந்தவரிடம் தவறு ஏற்பட்டிருக்கலாம்.

ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை: திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது: இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹதீஸை ஏற்று குர்ஆனை மறுத்து விடக்கூடாது. மாறாக குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை நபிமொழி அல்ல என்று மறுக்க வேண்டும்.

அறிவிப்பாளர்கள் சரியாக இருந்தும் குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை நாம் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்பதை நாம் சுயமாகச

சொல்லவில்லை. இதனை அல்லாஹ்வுடைய தூதரே சொல்லி விட்டார்கள். )

مسند أحمد بن حنبل (3ஃ 497 16102 -  حدثنا عبد الله حدثني أبي ثنا أبو عامر قال ثنا سليمان بن بلال عن ربيعة بن أبي عبد الرحمن عن عبد الملك بن سعيد بن سويد عن أبي حميد وعن أبي أسيد أن النبي صلى الله عليه و سلم قال : إذا سمعتم الحديث عني تعرفه قلوبكم وتلين له أشعاركم وأبشاركم وترون أنه منكم قريب فأنا أولاكم به وإذا سمعتم الحديث عني تنكره قلوبكم وتنفر أشعاركم وأبشاركم وترون أنه منكم بعيد فأنا أبعدكم منه قال تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط مسلم

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதற்கு) உங்களை விட நான் மிகத் தகுதி வாய்ந்தவனே. என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், உங்களது தோல்களும் முடிகளும் விரண்டு ஓடுமானால், அச்செய்தி உங்களுக்குத் தூ ரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களை விட அதை விட்டும் நான் மிக தூரமானவன். அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி) அவர்கள் நூல்: அஹ்மத் 15478

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பெயரால் சொல்லப்படும் செய்திகளில் பொய்யானவை கலந்து விடும் என்பதையும், அதை எவ்வாறு கண்டறிவது என்பதையும் இங்கே விளக்குகிறார்கள்.

எந்தச் செய்தியைக் கேட்கும் போது இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருப்பார்கள் என்று தக்க காரணங்களுடன் ஒருவரது மனசாட்சிக்குத் தோன்றுமோ அது போன்ற செய்திகளைச் சொல்வதற்கு அவர்கள் தகுதியானவர்கள். எந்தச் செய்தியைச் செவியுறும் போது தக்க காரணங்களுடன் ஒருவரது மனசாட்சி அதை வெறுக்குமோ, அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று அவரது மனசாட்சிக்குத் தோன்றுமோ அந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாதது: அவர்கள் செய்யாதது என்பதுதான் அந்த வழிமுறை என்று  தெளிவாக விளக்கி விட்டார்கள்.

அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்.  திருக்குர்ஆன் 25:73

குருடர்களாகவும் செவிடர்களாகவும் விழுவது என்றால் என்ன? ஒரு வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும் போது அது பல வசனங்களுக்கு முரணாகத் தெரிகிறது. இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமாகவும் உள்ளது. மாற்றமாக இருந்தால் இருந்து விட்டு போகட்டும் என்று நம்புவது தான் குருடர்களாக செவிடர்களாக விழுவது என்பதன் கருத்தாக இருக்க முடியும்.

பல வசனங்களுக்கு முரணாக உள்ளதால் முரணில்லாத வகையில் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்காத வகையில் பொருள் கொள்பவர்கள் தான் குருடர்களாகவும் செவிடர்களாகவும் விழாதவர்கள்.

இறைவனால் வழங்கப்பட்ட வஹீயாக இருக்கின்ற அல்குர்ஆனும், ஹதீஸ்களும் ஒரு போதும் ஒன்றுடன் மற்றொன்று முரண்படாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.


 ஹதீஸ் கலை விதி பற்றிய ஓர் பார்வை

ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்ட முறை.    14

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கிறோமா?   18

ஹதீஸ் கலையில் இல்லாத புது விதியை தவ்ஹீத் ஜமாத் அறிமுகம் செய்கிறதா?       28

குர்ஆனுக்கு முரணான செய்தியை அறிவிப்பவர் பொய்யரா?  32

ஷாத் வகை ஹதீஸ்கள் பற்றிய விளக்கம்.    36

பெரும் அறிஞர்களுக்கு தெரியாததா இவர்களுக்கு தெரிந்து விட்டது? 41

புகாரியில் பதிவான பலவீனமான ஹதீஸ்கள்   46

வழிகேட்டை காப்பாற்ற ஹதீஸை பலவீனப் படுத்தும் வழிகேடர்கள். 54

 ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்ட முறை.


திருக்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று நாம் கூறுவது நமது மனோ இச்சையின் அடிப்படையில் அல்ல. மாறாக திருக்குர்ஆனிலிருந்தும் நம்பகமான ஹதீஸ்கள் என்று உறுதி செய்யப்பட்ட ஹதீஸ்களில் இருந்தும் இந்த விதியை நாம் அறிந்து கொள்ளலாம்.

நபித்தோழர்களும் தமது வாழ்வில் இந்த விதியைக் கடைப்பிடித்துள்ளார்கள். ஹதீஸ் கலை அறிஞர்களும் இந்த விதியை வகுத்துள்ளனர். நல்லறிஞர்களும் இந்த விதியின் அடிப்படையில் சில ஹதீஸ்களை மறுத்துள்ளனர்.
முஸ்லிம்களாகிய நாம் திருக்குர்ஆனை இறை வேதம் என்று நம்புகிறோம்.

மார்க்கம் தொடர்பான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் ஆகியவற்றையும் அல்லாஹ்விடமிருந்து வந்தவை என்று நாம் நம்புகிறோம். இவ்வாறு நாம் நம்பினால் தான் இஸ்லாம் என்ற வட்டத்துக்குள் இருக்க முடியும்.

அல்லாஹ்விடமிருந்து வரும் செய்திகளுக்கும் மனிதர்களிடமிருந்து வரும் செய்திகளுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. மனிதர்களின் செய்திகளில் முரண்பாடுகள் இல்லாமல் இருக்காது. ஆனால் அல்லாஹ்வின் செய்தியில் முரண்பாடு அறவே இருக்காது என்பது அவற்றுள் முக்கியமான வேறுபாடாகும்.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். திருக்குர்ஆன் 4 : 82

இதன் முன்னும்  பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது. திருக்குர்ஆன் 41 : 42

மனிதர்களிடம் ஏன் முரண்பாடுகள் ஏற்படுகின்றன? அல்லாஹ்வின் வார்த்தையில் ஏன் முரண்பாடு ஏற்படுவதில்லை?
முன்னர் பேசியதை மறந்து விடுதல்! முன்னர் தவறாக விளங்கியதைப்பின்னர் சரியாக விளங்குதல்! போதுமான கவனமின்றிப் பேசுதல்! யாரிடம் பேசுகிறோமோ அவர்கள் மனம் கோணக் கூடாது என்பதற்காக அல்லது அவர்களிடமிருந்து ஆதாயம் பெறுவதற்காக வளைந்து கொடுத்துப் பேசுதல்! வயது ஏற ஏற மூளையின் திறனில் ஏற்படும் குறைபாடுகள்! விளைவுகளுக்கும்இ நெருக்கடிகளுக்கும் அஞ்சி இரட்டை நிலை மேற்கொள்ளுதல்!

மற்றும் இது போன்ற ஏராளமான பலவீனங்கள் மனிதனுக்கு இருப்பதால் முரண்பாடுகள் இல்லாமல் பேச முடியாது. இது போன்ற பலவீனங்களுக்கு அப்பாற்பட்டவனாக இறைவன் இருப்பதால் அவனுடைய செய்திகளில் முரண்பாடு இருக்காது.

இறைவனின் வார்த்தைகளில் எவ்வாறு முரண்பாடு வராதோ அது போல் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தைகளிலும் முரண்பாடு வரக் கூடாது. மேலும் திருக்குர்ஆனுக்கு முரணாகவும் இருக்கக் கூடாது.

ஏனெனில் நபிகள் நாயகம் அவர்கள் மார்க்கம் என்ற அடிப்படையில் பேசிய அனைத்தும் அவர்கள் சுயமாகக் கூறியவை அல்ல. மாறாக அவை அனைத்தும் இறைவன் புறத்திலிருந்து வந்தவையாகும்.

அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை. திருக்குர்ஆன் 53 : 4

திருக்குர்ஆனும்இ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளும் இறைவன் புறத்தில் இருந்து வந்ததால் இரண்டு செய்திகளும் ஒன்றுடன் ஒன்று பொருந்திச் செல்லுமே தவிர முரண்பட்டு விலகிச் செல்லாது.

நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஒரு செய்தி கிடைக்கிறது. அந்தச் செய்தி திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாக நமக்குத் தோன்றுகிறது. முரண்பாடு இல்லாத வகையில் இரண்டுக்கும் இணக்கமான விளக்கம் கொடுக்க எவ்வளவு முயன்றாலும் இயலவில்லை என்றால் இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

முரண்பாடான இரண்டு விஷயங்களில் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். முரண்பட்ட இரண்டு விஷயங்களும் ஒருக்காலும் உண்மையாக இருக்க முடியாது.

 • குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸை ஏற்றுக் கொண்டால் குர்ஆனை மறுக்கும் நிலை ஏற்படும்.

• குர்ஆனை ஏற்றுக் கொண்டால் குறிப்பிட்ட அந்த ஹதீஸை மறுக்கும் நிலை ஏற்படும்.

இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன?

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸை விட்டு விட்டு குர்ஆனை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.
இவ்வாறு நாம் முடிவு செய்வதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனுக்கு மாற்றமாகப் பேசி விட்டார்கள் என்பது பொருளல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்லி இருக்க மாட்டார்கள்: சொல்லவில்லை என்பதே இதன் பொருள்.

அப்படியானால் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை என்று ஆகிவிடுமே என்ற சந்தேகம் எழலாம்.
ஹதீஸ்களும் நிச்சயம் பாதுகாக்கப்பட்டுள்ளன. எந்த மனிதரின் போதனைகளும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை அளவுக்குப் பாதுகாக்கப்படவில்லை. அந்த ஒரு மனிதரின் போதனைகளைப் பாதுகாப்பதற்காக ஐந்து லட்சம் அறிவிப்பாளர்களின் வரலாறுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்தப் பாதுகாப்பு ஏற்பட்டை திருக்குர்ஆனின் பாதுகாப்புடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

1- திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே எழுத்தர்கள் மூலம் எழுதச் செய்து பாதுகாக்கப்பட்டது. ஆனால் ஹதீஸ்கள் அனைத்தையும் பாதுகாக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. மிகச் சில நபித் தோழர்கள் மிகச் சில ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொண்டார்கள். அனைத்து ஹதீஸ்களும் எழுதப்படவில்லை.

2- நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போது திருக்குர்ஆனைத் தாமும் மனனம் செய்தார்கள். பல நபித்தோழர்களூம் மனப்பாடம் செய்திருந்தனர். இது போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை. அனைத்து ஹதீஸ்களையும் மனப்பாடம் செய்த ஒரே ஒரு நபித்தோழர் கூட இருந்ததில்லை.

3- நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போது ஒவ்வொரு ஆண்டும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து திருக்குர்ஆனைச் சரி பார்ப்பார்கள். இது போன்ற பாதுகாப்பு ஹதீஸ்களுக்கு இருக்கவில்லை.

4- நாம் இப்போது எதைத் திருக்குர்ஆன் என்று கூறுகிறோமோ அது தான் திருக்குர்ஆன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் அனைவரும் ஒருமித்து அடுத்த தலைமுறைக்குச் சொன்னார்கள். இப்படி ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த முஸ்லிம்கள் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லாமல் இது தான் குர்ஆன் என்று அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்தார்கள்.

ஆனால் ஹதீஸ்களைப் பொருத்தவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு நபித்தோழரோ இரண்டு மூன்று நபித் தோழர்களோ தான் அடுத்த தலைமுறைக்கு - அதாவது அடுத்த தலைமுறையில் சிலருக்குச் - சொன்னார்கள். இப்படி ஒவ்வொரு காலத்திலும் மிகச் சிலர் தான் அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தினார்கள்.

5- எழுத்து வடிவில் அனைத்து ஹதீஸ்களும் பாதுகாக்கப்படாததால் ஹதீஸ்கள் நூல் வடிவம் பெறும் காலம் வரை கட்டுக்கதைகளும் ஹதீஸ்கள் என்ற பெயரில் நுழைந்தன. ஆனால் குர்ஆனில் எந்த வார்த்தையும் எந்தக் காலத்திலும் இட்டுக்கட்டிக் கூறப்படவே இல்லை.

6- குர்ஆனை அல்லாஹ்வே பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். ஆனால் ஹதீஸ்களைப் பொருத்தவரை அறிஞர்கள் தான் இதற்கான விதிகளைக் கண்டறிந்து ஹதீஸ்களைப் பாதுகாக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.

திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை என்பதால் மனிதர்கள் வகுத்த பாதுகாப்பு வளையத்தை மீறி தவறான ஹதீஸ்கள் சரியான ஹதீஸ்கள் என்ற பெயரில் கலந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதையும் களை எடுப்பதற்குத் தான் பலவித நிபந்தனைகளை அறிஞர்கள் வகுத்தனர். அவற்றில் ஒன்று தான் குர்ஆனுக்கு முரண்படாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை.

இதை நாம் புதிதாகக் கண்டு பிடித்துக் கூறுவது போல் ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. காலம் காலமாக இது ஹதீஸ் கலையில் விதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதே உண்மையாகும்.



இதன் தொடர்ச்சியை ( ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கிறோமா? ) காண இங்கே சொடுக்கவும்..

Search This Blog