தவ்ஹீத் ஜமாஅத் video's: அபுபக்கர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் பின்பற்ற வேண்டுமா?

அபுபக்கர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் பின்பற்ற வேண்டுமா?

 அபுபக்கர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் பின்பற்ற வேண்டுமா?

மற்றோரு ஆதாரத்தையும் இவர்கள் சஹாபாக்களை பின்பற்றுவதற்கு சான்றாக முன் வைப்பர்.

எனக்குப் பின்னர் அபூபக்ர், உமர் ஆகிய இருவரையும் பின்பற்றுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியையும் தங்கள் வாதத்துக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

இந்த ஹதீஸ் திர்மிதி 3595, 3596, 3735, 3741, இப்னு மாஜா 94, அஹ்மத் 22161, 22189, 22296, 22328 மற்றும் பல நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனக்குப் பிறகு வரக்கூடிய இருவரை பின்பற்றுங்கள் என்பதாக அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகிய இருவரைக் குறிப்பிட்டு நபி (சல்) அவர்கள் சொல்வதாக இப்னுமாஜா, திர்மிதி உள்ளிட்ட பல்வேறு நூற்களில் பதிவாகியிருக்கும் ஹதீஸ் சஹாபாக்கள் அனைவரையும் பின்பற்றுவதற்கு சான்றா?

இதுவும் நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, இரண்டே இரண்டு சஹாபாக்களை பின்பற்றுவதைப் பற்றி தான் பேசுகிறது, எனவே, இந்த ஹதீஸை ஆதாரமாக காட்டக்கூடியவர்கள், இவ்விரண்டு சஹாபாக்களை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்பதாக தங்கள் நிலையை மாற்றி விட்டு அதன் பிறகு இதை முன்வைக்கட்டும்.

சஹாபாக்கள் அனைவரையும் பின்பற்ற வேண்டும் என்ற கருத்துடையவர்களுக்கு இதில் எந்த ஆதாரமும் இல்லை.

இந்த இருவரைத் தவிர மற்றவர்களைப் பின்பற்றச் சொல்லும் ஆதாரம் இல்லை என்பதால் இவ்விருவரை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் வாதம் செய்தால் மட்டுமே இதை ஆதாரமாக எடுத்துக் காட்ட முடியும்.

மார்க்க சம்மந்தமில்லாத விஷயங்களில் இவ்விருவரையும் சிறந்த தலைவர்களாக ஏற்று நடங்கள் என்று தான் இதற்கும் பொருள் கொள்ள முடியும்.

அடுத்த ஆட்சியாளரைத் தேர்வு செய்யும் விஷயத்தில் உமர் (ரலி) அவர்களின் வழிகாட்டுதலை ஏற்றுத் தான் அபூ பக்ரை மக்கள் கலீபாவாகத் தேர்வு செய்தனர். இது போன்ற விஷயங்களைத் தான் இது குறிக்குமே தவிர மார்க்க விஷயங்களில் பின்பற்றுவதைக் குறிக்காது.

தவிர, இதிலும் நாம் முந்தைய ஹதீஸுக்கு தந்த அதே புரிதலை தான் மேற்கொள்ள வேண்டும்.

வஹீ மட்டுமே மார்க்கம் என்பது இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரம். அல்லாஹ் அருளியதை மட்டுமே மார்க்கமாக கருத வேண்டும் என்று பல்வேறு இடங்களில் அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

இந்த அடிப்படைக்கு எதிராக, சஹாபாக்கள் எதை சொன்னாலும் பின்பற்றுங்கள் என்கிற சித்தாந்ததை நிச்சயம் நபி (சல்) அவர்கள் சொல்ல மாட்டார்கள்.

மார்க்கம் முழுமையாகி விட்டது. வஹீயை மட்டும் பின்பற்றுங்கள் என்பன போன்ற எண்ணற்ற ஆதாரங்களுக்கு முரண்படாத வகையில் தான் இதற்கும் பொருள் கொள்ள வேண்டும்.

எனக்குப் பிறகு மார்க்கம் என்று எதை நீங்கள் உருவாக்கினாலும் அது ரத்து செய்யப்படும் என்கிற நபியின் எச்சரிக்கையையும் இந்த தருணத்தில் சேர்த்தே சிந்திக்கும் போது, கலிஃபாக்கள் என்றாலும், சஹாபாக்கள் என்றாலும், இஸ்லாத்திற்கு மாற்றமான கூற்றுகள் வராத வரை தான் அவர்களை பின்பற்றுதல் ஆகுமாகும் என்பது தெளிவாகப் புரிகிறது.

 உரையாக சகோ. பி. ஜே :   சாராம்சம் எழுத்தாக்கம்    Nashid Ahmed 


சஹாபாக்களை பின்பற்றுவது சாத்தியமா?

சஹாபாக்களை பின்பற்றலாமா கூடாதா என்கிற சர்ச்சை ஒரு பக்கம் இருக்கட்டும். 

நாம் அதன் ஆரம்ப புள்ளியிலேயே நின்று சிந்தித்துப் பார்தோம் என்றால்..

இந்த வாதமே முதலில் எவ்வளவு அபத்தமானது என்பது புரியும். 

அறிவுக்கு பொருத்தமில்லாத, நடைமுறைக்கு கூட சாத்தியமற்ற... பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் கூட உண்மையில் செயல்படுத்தவே செய்யாத ஒரு ஏட்டு சுரக்காய் வாதம் தான் சஹாபாக்களின் விளக்கத்தை தான் பின்பற்ற வேண்டும் என சொல்வது !! 

உதாரணத்தோடு இதை சொல்ல வேண்டும் என்றால்.. 

மதுஹப் நூற்களில் ஃபிக்ஹ் சட்டங்கள் என்கிற பெயரில் கிறுக்குத்தனமாக எதையாவது எழுதி வைத்திருப்பார்களே..

அதாவது மனுஷனும் கழுதையும் உறவு கொண்டால் பிறக்கும் குழந்தைக்கு தொழுகை கடமையா..?    என்று.. 

விவாதிக்க வேண்டியது அப்படி முதலில் குழந்தை பிறக்குமா? அதுவே முதலில் சாத்தியமற்றது எனும் போது.. அந்த குழந்தைக்கு தொழுகை கடமையா இல்லையா என்கிற கிறுக்குத்தனமான விவாதத்திற்குள் ஏன் செல்கிறாய்?

என்று நாம் திருப்பி கேட்போம். 

அதே தான் இங்கும் கேட்க வேண்டும்.! 

சஹாபாக்களை பின்பற்றுவது என்பதே முதலில் சாத்தியமற்றது!

சாத்தியமற்ற ஒன்றை, அது கூடுமா கூடாதா என விவாதிப்பது மடமை !!

குர் ஆன், ஹதீஸில் எல்லா விஷயங்களுக்கு தீர்வு இருக்கிறது என்பதை நாமும் அவர்களும் ஒப்புக் கொள்கிறோம். 

மார்க்கம் முழுமையாகி விட்டது என்பதையும் இரு சாராரும் ஒப்புக் கொள்கிறோம். 

அப்படியிருக்க.. எந்த மசாயில் பிரச்சனைக்கு சஹாபாக்களின் விளக்கம் தேவைப்படுகிறது? 

சஹாபாக்களின் விளக்கமாக இவர்கள் புரிந்து செயல்படுத்திய ஒரேயொரு மசாயில் பிரச்சனை என்ன?

""இதோ... சஹாபியின் விளக்கம்"", என இவர்கள் எதை எடுத்துக் காட்டினாலும்.. 

ஒன்று, அது குர் ஆன்/ஹதீஸுக்கு மாற்றமான விளக்கமாக இருக்கும்.

அல்லது,

குர் ஆனும் ஹதீஸும் ஏற்கெனவே நமக்கு சொல்லி விட்ட விளக்கமாக இருக்கும் !!

அல்லாமல், குர் ஆனில் இல்லாத, ஹதீஸில் இல்லாத..

சஹாபாக்களின் விளக்கத்தின் மூலமாக மட்டுமே நமக்கு கிடைக்கப்பெற்றதான 

ஒரேயொரு சட்டத்தையோ ஒரேயொரு தீர்வையோ 

ஒரேயொரு விளக்கத்தையோ கியாமத் நாளானாலும் இவர்களால் காட்ட இயலாது !

ஆக, இனிமேல் சலஃபு கருத்து குருடர்களோடு விவாதிக்கும் போது 

சஹாபாக்களை பின்பற்றலாமா கூடாதா என்று பொத்தாம்பொதுவாக (generic ஆக) விவாதிக்காதீர்கள். 

எந்த விஷயத்தில்

சஹாபாக்களை பின்பற்ற வேண்டும்..குறிப்பிட்டு சொல்லுங்க.. என்று குறிப்பாக விவாதித்து எதிர் தரப்பிடம் பதில் கேளுங்கள். 

எந்த முல்லாவும் சரி ஜுப்பாவும் சரி 

சவுதி பினாமி ஷேஹுகளும் சரி, தலைதெறிக்க ஓடுவர் ! 

அதுவே அல்லாஹ்வின் சத்திய மார்க்கத்திற்கு கிடைக்கும் வெற்றியாகும் !!

--Aboo Shaheen

https://bit.ly/42vxg6Z

Search This Blog