கூட்டு துஆவுக்கு ஆதாரம் காட்டுகிறார் –
– தொழுகைகளுக்குப் பின்னும் ஏனைய சந்தர்பங்களிலும் ஒருவர் துஆ ஓத மற்றவர் ஆமீன் கூறும் முறைக்கு கூட்டு துஆ எனப்படுகிறது. கூட்டு துஆவுக்கு ஆதாரங்கள் உண்டு எனக் கூறி சில ஹதீஸ்களை முன்வைத்து மரியாதைக்குரிய முஹம்மது சூபி (இம்தாதி) மவ்லவி அவர்கள் ஒரு பிரசுரததை வெளியிட்டார்கள்.
மவ்லவி அவர்கள் முன்வைத்த ஹதீஸ்கள் தகுந்த ஆதாரத்திற்குரியவை அல்ல எனற மறுப்பு சத்தியக்குரல் பத்திரிக்கையில் தொடராக எழுதி வந்தோம் பிறகு கூட்டு துஆ- குழப்பங்களுக்கான தெளிவு எனும் தலைப்பில் அதனை ஒரு நூலகவும் 14.03.2008 அன்று வெளியிட்டோம்.இப்போது அதனை இங்கு பிரசுரிப்பது மக்களுக்கு தெளிவை தரும் எனும் நோக்கில் வெளியிடுகிறோம்.
முன்வைக்கப்படும் ஆதாரம்
நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு அருளியுள்ளார்கள்.
யூதர்கள் ஓர்; பொறாமைக்காரர்களான சமுதாயம். அவர்கள் எமக்கு இஸ்லாமும், ஆமீன் எனும் வார்த்தையும் கிடைத்தற்காகப் பொறாமைப்படுவது போன்று வேறு எதற்கும் பொறாமைப்படுவது கிடையாது. ஆதாரம் : இப்னு குஸைமா, பாகம் 1, பக்கம் 288 (பாபு திக்ரி ஹஸதில் யஹுத்)
மறுப்பு
மவ்லவி கூறுவது போல் இந்த ஹதீஸில் இஸ்லாமும் ஆமீனும்|| என்று வார்த்தை ஹதீஸ் மூலத்தில் கிடையாது. ஸலாமும் ஆமீனும் என்ற வார்த்தைதான் ஹதீஸ் மூலத்தில் உள்ளது. மௌலவி அவர்கள் ஸலாம் என்ற வார்த்தையை இஸ்லாம் என்று தவறுதலாக மொழி பெயர்த்திருக்கலாம்.
முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லிக்கொள்வதைக் கண்டு யூதர்கள் பொறாமைப் படுகிறார்கள். அதுபோல் ஆமீன்|| சொல்வதைக் கேட்டும் பொறாமைப்படுகிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.
மௌலவி முஹம்மது அவர்கள் இந்த ஹதீஸை பார்ரத்ததும் கூட்டு துஆ பற்றி நபியவர்கள் கூறுவதாக தவறுதலாக புரிந்துகொண்டு தன்னுடைய கருத்தை நிலைநாட்ட தப்பான விளக்கம் கொடுக்க முனைந்திருக்கிறார். ஆமீன் என்று வரக்கூடிய செய்தியெல்லலாம் கூட்டு துஆ பற்றி பேசுவதாக முடிவுசெய்கிறார்.?
ஆமீன்|| சொல்லுகின்றபோது யூதர்கள் பொறாமைப்படுகிறார்கள் என்றால் எச்சந்தர்ப்பத்தில் பொறாமைப்படுகிறார்கள்? தொழுகை முடிந்தபின் ஒருவர் துஆ ஓத மற்றவர் ஆமீன் கூறுகின்ற போதா? அல்லது தொழுகையில் இமாம் சப்தமிட்டு சூரதுல் பாதிஹா ஓதி முடியும் போது எல்லோரும் ஆமீன் கூறுகின்ற போதா? எதைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் இந்தஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்?
தொழுகையில் இமாம் சப்தமிட்டு சூரதுல் பாதிஹாவை ஓதி முடியும் போது எல்லோரும் ஆமீன் கூறுவதைக் கண்டுதான் யூதர்கள் பொறாமைப்படுகிறார்கள் அதை குறித்துதான் நபி (ஸல்) அவர்கள் விளக்கப்படுத்துகிறார்கள் என்பதை இந்த ஹதீஸுக்கு முன்னால் பதிவாகியுள்ள ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.
ஷஷஇமாம் இப்னு குகைஸா (ரஹ்) இந்த ஹதீஸையும் இன்னும் சிலஹதீஸ்களையும் கொண்டுவந்து அவைகளுக்கு தலைப்பிடும்போது ”இமாம் சப்தமிட்டு தொழுகையில் சூரதுல் பாதிஹா ஓதி முடியும்போது சப்தமிட்டு ஆமீன் கூறுதல்|| பாடம்(138)என தலைப்பிட்டு பின்வரும் ஹதீஸ்களை பதிவுசெய்துள்ளார்கள்.
அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
இமாம் ஆமீன் கூறும்போது நீங்களும் ஆமீன் கூறுங்கள். நிச்சயமாக மலக்குகளும் ஆமீன் கூறுகின்றனர். எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைகின்றதோ அவரதுமுன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்.
அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
இமாம் ஆமீன் கூறும்போது நீங்களும் ஆமீன் கூறுங்கள். எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைகின்றதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என நபி (ஸல்) கூறினார்கள்.
அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் உம்முல் குர்ஆன் (சூரதுல் பாதிஹா) ஓதி முடிந்தால் ஆமீன் என்று சப்தமிட்டு கூறுவார்கள்.
இப்னு குஸைமாவில் உள்ள இம்மூன்று ஹதீஸ்களும் சூரதுல் பாதிஹா சப்தமிட்டு ஓதும் தொழுகையில் இமாம் ஆமீன் கூறும்போது மஃமூம்களும் இமாமுடன் சேர்ந்து சப்தமிட்டு ஆமீன் கூற வேண்டும் என்பதைத்தான் கூறுகின்றன.
இந்த ஹதீஸ்களுக்கு இன்னும் விளக்கமாக புகாரியில் வரக்கூடிய 782வது ஹதீஸில் (மஃமூம் சப்தமிட்டு ஆமீன் கூறுதல் எனும் பாடத்தில்) இமாம், கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாலீன்|| என்று கூறும்போது நீங்கள் ஆமீன் கூறுங்கள் ஏனெனில் எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகின்றதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தொழுகையில் சூரதுல் பாதிஹா ஓதும் போது மட்டும் ஆமீன் கூறவேண்டும் என்று வரக்கூடிய ஹதீஸ்களை தொழுகை முடிந்தபின் அல்லது ஏனைய சந்தர்ப்பங்களில் கூட்டு துஆ ஓதி ஆமீன் கூறுவதற்கு ஆதாரமாக காட்டுவது மிகப் பெரிய தவறாகும். அபத்தமாகும்.
அதுமட்டுமன்றி மௌலவி முஹம்மது சூபி எந்த ஹதீஸை கூட்டு துஆவுக்கு ஆதாரமாக காட்டுகிறாரோ அந்த ஹதீஸின் பாடத்தின் தலைப்புகூட இவருடைய கருத்துக்கு (அதாரத்திற்கு) எதிராகவே உள்ளதை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார்.
அதனால்தான் அந்தப் பாடத்தின் தலைப்பின் ஒரு பகுதியை மட்டும் அரபியில் (ஹஸதில் யஹுத்) என்று காட்டிவிட்டு அதனுடன் சேர்ந்த மற்றப் பகுதியை எழுதாமல் மறைத்து விட்டார். அவர் எடுத்துக் காட்டிய (ஹஸதில் யஹுத்) வாசகத்தின் பொருள் யஹுதிகள் பொறாமை படுதல்|| என்பதாகும்.
அவர் எடுத்து காட்டாமல் விட்ட மற்ற வாசகம் ஷஷமுஃமின்கள் ஆமீன் சொல்வதை யஹுதிகள் பொறாமைப்படுதல். சில அறிவீனர்கள் இமாம் கிராத் ஓதும்போது, இமாம்களும் மஃமூம்களும் ஆமீன் சொல்வதைவிட்டும் தடுப்பது. யஹுதிகளின் செயல்களில் ஒரு பண்பாகும். மேலும் நபி (ஸல்) அவர்களை பின்பற்றுபவர்களுடன் (யஹுதிகள்) பொறாமைக் கொள்ளுதல்|| என்பதாகும்.
இந்த தலைப்பை முறையாக முழுமையாக படித்திருந்தால் இது தொழுகையில் பாதிஹா சூராவுக்கு ஆமீன் சொல்வதைத் தான் குறிப்பிடுகின்றன-தொழுகை முடிந்த பின் ஒருவர் துஆ ஒதமற்றவர் ஆமீன் கூறுவதை குறிப்பிடவில்லை- என்பதை புரிந்துகொண்டிருப்பார்.ஒரு விஷயத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் மற்றவர்களை திட்டித் தீர்ப்பதில் எந்தப் பயனுமில்லை.
தொழுகையில் சூரதுல் பாதிஹாவை இமாம் சப்தமிட்டு ஓதிமுடியும்போது ஆமீன் கூறவேண்டும் என்பதில் கருத்துவேறுபாடு கிடையாது. முஸ்லிம்கள் அனைவரும் தொழுகையில் ஆமீன் கூறித்தான் வருகிறார்கள்.
ஆனால் இந்த ஹதீஸை கூட்டு துஆவுக்கு ஆதாரமாக எடுப்பதுதான் தவறு என்று கூறுகிறோம்.தொழுகையில் பாதிஹா சூராமுடிந்த பின் அனைவரும் ஆமீன் கூறவேண்டும் என கற்றுத்தந்து செய்துகாட்டிய நபியவர்கள் தொழுகைக்கு பின் ஆமீன் கூறவேண்டும் என்று கற்றுத்தரவுமில்லை செய்துகாட்டவுமில்லை. இந்த ஹதீஸைக்காட்டி தொழுகையல்லா சந்தர்ப்பங்களில் கூட்டுதுஆ ஓதலாம் என்று புரிந்து கொள்ளளமுடியும் என்றால்; இவரைவிட பன்மடங்கு சிறப்பபுக்குரிய நபி(ஸல்) அவர்கள் சிறப்புக்குரிய அமலை புரிந்து செயல்படுத்திகாட்டமுடியாமல் போய்விட்டார்கள் எனகூறப்போகிறார்களா?
ஒரு வாதத்திற்கு இது கூட்டுதுஆவுக்குரிய ஆதாரமென்று வைத்துக்துக் கொண்டால் கூட இமாம் துஆ ஓத மற்றவர்கள் ஆமீன் கூறவேண்டும் என வாதிடமுடியாது.ஏனெனில் சூரதுல் பாதிஹா ஓதி முடியும் போது இமாமுடன் சேர்ந்து மஃமூம்களும் ஆமீன் கூறவேண்டும் என்றே நபியவர்கள் கூறுகிறார்களே தவிர இமாம் துஆ ஓத மற்றவர்கள் ஆமீன் கூறவேண்டும்என்று கூறவில்லை.
பர்லு தொழுகைக்குப் பிறகு கூட்டு துஆ
நபி (ஸல் ) அவர்கள் காலத்தில் பர்லு தொழுகைக்குப் பிறகு கூட்டாக துஆ ஓதியதற்கு எவ்வித ஆதாரமுமில்லை.
அதாவது இமாம் துஆ ஓத மற்றவர் “ஆமீன் ஆமீன்” என்று கூறும் நிலை (இன்று நமது பகுதிகளில் நடைமுறையில் இருப்பது போல்) அவர்கள் காலத்தில் கிடையாது.
நம்மைவிட துஆ கேட்கும் வகையில் பன்மடங்கு ஆர்வம் கொண்டுள்ள நபி (ஸல் ) அவர்களும், அவர்களின் உத்தம ஸஹாபாக்களும் ஒரு நேரத் தொழுகையிலும் கூட இமாம் துஆ ஓத, மற்றவர் ஆமீன் கூறும் அமைப்பில் இருந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் ஹதீஸ்களில் கிடையாது. மாறாக நபி(ஸல் ) அவர்களும், சஹாபாக்களும் ஜமாஅத் முடிந்தவுடன் தனித்தனியே துஆ ஓதியுள்ளார்கள் என்பதையே ஹதீஸ்களின் வாயிலாக அறிய முடிகிறது.
நபி(ஸல் ) அவர்கள் தொழுகையிலிருந்து திரும்பிவிட்டால் “மும்முறை” أأَسْتَغْفِرُ اللهَ அஸ்தஃபிருல்லாஹ்” என்று (கூறி) பாவமன்னிப்புத் தேடுவார்கள். (பின்னர்)اللَّهُمَّ أَنْتَ السَّلأمُ وَ مِنْكَ السَّلأمُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَ الإِكْرَم “அல்லாஹும்ம அந்த்தஸ்ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த்த யாதல் ஜலாலி வல்இக்ராம்” என்று ஓதுவார்கள். என்று ஸவ்பான் (ரழி) அறிவித்துள்ளார்கள். (நூல்:முஸ்லிம், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)
பொருள்:யா அல்லாஹ்! நீயே சாந்தியானவன். மேலும் உன்னிடமிருந்தே சாந்தி பிறக்கிறது கண்ணியமும், மகத்துவமும் மிக்கவனாகிய நீயே மிக மேலானவனாகும். மேற்காணும் துஆவை நபி(ஸல் ) அவர்கள் தாம் தொழ வைத்துவிட்டுத் தனித்த நிலையில் ஓதினார்களே அன்றி அவர்கள் தொழ வைத்தபின் ஓதிய துஆக்களுக்கு எந்த ஸஹாபியும் ஆமீன் கூறினார்கள் என்பதை ஹதீஸ்களில் காணமுடியவில்லை. ஆகவே நபி(ஸல் ) அவர்கள் தனித்து ஓதியது போன்றே மற்ற ஸஹாபாக்களும் ஓதியிருப்பார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது.
நபி(ஸல்) அவர்கள், உங்களில் ஒருவர் தொழுதுவிட்டால் அவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ ஆரம்பித்து, பின்னர் நபி (ஸல் ) அவர்கள் மீது ஸலவாத்தோதி, பிறகு அவர் தாம், நாடியவற்றை (அல்லாஹ்விடம் கேட்டுப்) பிரார்த்திப்பாராக! என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஃபுழாலத்து பின் உபைத்(ரழி) நூல்: திர்மிதீ)
நான் ஒரு முறை நபி(ஸல் ) அவர்களுடன் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆகியோர் இருக்கும் போது தொழுது கொண்டிருந்தேன். நான் தொழுதுமுடித்து உட்கார்ந்தவுடன் அல்லாஹ்வை போற்றிப் புகழ ஆரம்பித்து, பின்னர் நபி(ஸல் ) அவர்கள் மீது ஸலவாத்து கூறிவிட்டுப் பின்னர் எனக்காக துஆ கேட்டுக் கொண்டிருந்தேன், அப்போது நபி(ஸல் ) அவர்கள் நீர் கேளும்! தரப்படும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் மஸ்ஊத்(ரழி) நூல்:திர்மிதீ)
அல்லாஹ்வின் தூதரே! (அல்லாஹ்விடம்) மிகவும் ஏற்று கொள்ளப்படுவதற்கு தகுதிவாய்ந்த துஆ (வின் நேரம்) எது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், கடைசி இரவின் நடுப்பகுதியும், பர்லான தொழுகைகளுக்குப் பிறகும் என்றார்கள். (அபூ உமாமா(ரழி) திர்மிதீ)
மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக பர்லான தொழுகைகளுக்குப் பிறகுள்ள நேரம் துஆ கபூலாகக்கூடிய நேரம் என்பதையும் நமது தேவைகளை நாமே கேட்டுப்பெற முயற்சிக்க வேண்டும் என்றும் நபி(ஸல் ) அவர்கள் தமது ஸஹாபாக்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்கள் என்பதையும் அறிகிறோம்.
இமாம் சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்தவுடன் நீங்கள் அனைவரும் ஆமின் கூறுங்கள்! நீங்கள் கூறும் ஆமீன் மலக்குகளின் ஆமீனுக்கு ஒத்தாக அமைந்து விட்டால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும் என்று தமது ஸஹாபாக்களுக்கு ஆமீன் கூறும்படி ஆர்வ மூட்டிய நபி(ஸல் ) அவர்கள் பர்லான தொழுகைகளுக்குப் பிறகு நான் மட்டும் துஆ ஓதுகிறேன் நீங்கள் அனைவரும் நான் ஓதும் துஆவுக்கு ஆமீன் சொல்லிக்கொண்டிருங்கள் என்று ஒருபோதும் ஒரு வார்த்தைகூட அவர்கள் கூறியதாக சரித்திரமே இல்லை. இவ்வாறு எந்த ஸஹாபியும் தாம் மக்களுக்குத் தொழவைத்த பின் அவர்கள் துஆ ஓத மக்கள் ஆமீன் கூறினார்கள் என்று ஹதீஸ் நூல்களில் காணப்படவில்லையே என்று தான் ஹதீஸ் கலா வல்லுனர்கள் கேட்கிறார்கள்.
இமாம் துஆஓத பின்பற்றி தொழுதவர்கள் ஆமீன் ஆமீன் என்று கூறுவது நல்லது தானே இவ்வாறு செய்தால் என்ன தவறு?
என்று பலர் கருதுகிறார்கள். நல்லது தானே என்று கூறுபவர்கள் அந்த நல்லதை நபி(ஸல் ) அவர்கள் நமக்கு காட்டித் தராமல் சென்று விட்டார்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.
ஒன்றை நல்லதுதான் என்று நாமாகக் கருதிக் கொண்டு எதையும் செய்துவிட்டுப் போவதா? மார்க்கத்தில் நல்லதென்று ஒன்றிருக்குமானால், அது நபி(ஸல் ) அவர்கள் கூறிய, அல்லது செய்து காட்டிய, அல்லது அங்கீகாரம் செய்த ஒன்றாகத்தான் அது இருக்க வேண்டுமே அன்றி, நாமாக நடைமுறை படுத்தினால் நல்லதாகிவிட முடியாது.
உங்களை நரகத்தை விட்டும் தூரப்படுத்தி, சுவர்க்கத்தின் பக்கம் உங்களை அணுகச் செய்யும் (எந்த ஒரு நன்மையும் தீமையும்) உங்களுக்குத் தெளிவுபடுத்தப்படாது ஒரு விஷயமும் விடுபட்டு விடவில்லை என நபி(ஸல் ) அவர்கள் கூறினார்கள். (அபூதர்ரு(ரழி) நூல்: தப்ரானி)
“நபித்தோழர்கள் செய்யாத வணக்க வழிபாடுகள் எதனையும் செய்யாதீகள். முன்சென்றவர்கள் பின் சென்றவர்களுக்கு எதனையும் விட்டு வைக்கவில்லை” என ஹுதைபா(ரழி) அறிவித்துள்ளார்கள்.”
அல்லாஹ்வின் ஏவல்களைக் கொண்டும், நபி(ஸல் ) அவர்களின் நடை முறைகளைக் கொண்டும் மார்க்கத்தை போதுமாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்னால் வந்தவர்கள் ஏற்படுத்திய புதுமை (பித்அத்)களை விட்டு விடுமாறு எச்சரிக்கை செய்கிறேன்.” என தாபியீன்களின் தலை சிறந்தவரும், சீரிய கலீபஃபாவுமான இப்னு அஜீஸ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
share this https://bit.ly/47PCFrZ
மனித செயற்பாடுகளை “இபாதத்”, “ஆதத்” என இரு வகையாகப் பிரிக்கலாம். “இபாதத்” என்பது வணக்க வழிபாட்டைக் குறிக்கும். “ஆதத்” என்றால் சாதாரண பழக்க-வழக்கங்கள், வழக்காறுகளைக் குறிக்கும். இபாதத் விடயத்தில் அதைச் செய்வதற்கு “ஆதாரமிருக்கின்றதா?” எனப் பார்க்க வேண்டும். ஆதாரமில்லாதவை செய்யத் தகாதவையாகும். “ஆதத்”தான விடயங்களைப் பொறுத்த வரையில் “தடை இருக்கின்றதா?” எனப் பார்க்க வேண்டும். தடையில்லாத அனைத்தும் ஆகுமானவை என்பதே அர்த்தமாகும். தடை இல்லாவிட்டால் ஆகுமானது என்பது ஆதத்தின் நிலையாகும். அங்கீகாரத்திற்கான ஆதாரம் இல்லாவிட்டால் கூடாது என்பது இபாதத்தின் நிலைப்பாடாகும்.
ஒருவர் முதுகுக்குப் பின்னால் கைகளைக் கட்டிக்கொண்டு தொழுகிறார். இதை நாம் கூடாது என்கிறோம். உடனே “முதுகுக்குப் பின்னால் கை கட்டித் தொழக் கூடாது என்று ஆதாரம் தாருங்கள்!” என அவர் கேட்க முடியாது. அப்படிக் கேட்டால் எம்மால் காட்டவும் முடியாது.
இந்த இடத்தில் நபி(ஸல்) அவர்கள் எதைச் செய்தார்கள் அல்லது செய்யச் சொன்னார்கள் அல்லது அங்கீகரித்தார்கள் என்பதற்கே ஆதாரம் தேட முடியாது. எதைச் செய்ய ஆதாரம் கிடைக்கிறதோ அதை அப்படியே செய்ய வேண்டும். அதற்கு மாற்றம் செய்ய முடியாது.
ஆனால் “ஆதத்” விஷயம் இதற்கு நேர் மாற்றமானதாகும். கேக் சாப்பிடலாம், குளிர் பானங்கள் குடிக்கலாம், பணிஸ் சாப்பிடலாமென்று ஒவ்வொன்றுக்காக ஆதாரம் தேட முடியாது. தடுக்கப்பட்டவை கூறப்பட்டிருக்கும். தடுக்கப்படாதவை அனைத்தும் ஆகுமானவையென்ற நிலைப்பாட்டில் செயற்பட வேண்டும். சிலர் இந்த விடயத்தையும் குழப்பிக்கொள்கின்றனர்.
“கூட்டு துஆ” கூடாது என்றால், “கூடாது என்பதற்கு என்ன ஆதாரம்?” என்று கேட்கின்றனர். இதைச் செய்பவர்தான் ஆதாரம் காட்ட வேண்டுமென்ற அடிப்படையைப் புரியாமல் இப்படிக் கேட்கின்றனர்.
அல்லது ஒலிபெருக்கியில் அதான் சொல்வதற்கு என்ன ஆதாரம்? மத்ரஸாக் கட்ட என்ன ஆதாரம்? என்றெல்லாம் கேட்டுத் தமது பித்அத்தை நியாயப்படுத்த முற்படுகின்றனர்.
share this.. https://bit.ly/47PCFrZ
ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அவர்களில் சிலர் பிரார்த்தனை செய்ய, மற்றவர்கள் ஆமீன் கூறினால் எனும் செய்தி கூட்டு துஆ விற்கு ஆதாரமா ?
https://makarimtec.blogspot.com/2023/06/koottu-dua.html
