ஹதீத் மறுப்பா? அல் குரானை நேசிக்கும் கொள்கையா?
“ஹதீஃத் மறுப்பாளர்கள்” இந்த பதம் மிகவும் வஞ்சத்துடன் பரப்பப்படும் ஒரு குரூர யுக்தி.
ஒருவர், ஒரு செய்தியை அல் குரானின் வசனத்திற்கு மாற்றமாக இருப்பதால் இந்த செய்தியை நான் ஏற்க மறுக்கிறேன் என்பது அல் குரானை வலுப்படுத்தும் கொள்கையா? இல்லை ஹதீஃதை மறுக்கும் கொள்கையா?! உண்மையிலேயே அல் குரான் மீது நேசமில்லாதவர்கள் தான், ஒரு செய்தி அல் குரானுக்கு வேறுபட்டு நின்றாலும் அதை நேசிப்பார்கள்.
அவர்கள் அல் குரான் வெறுப்புக் கொள்கையில் இருக்கிறார்கள் போலும்! ஹதீஃத்களில் கையாடல்கள் உண்டு என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்ட விடயம். அல் குரானில் எந்தக் கையாடல்களும் இல்லை என்பதை இசுலாமியர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட விடயம். அல் குரானுக்கு முரன்பட்டால் அது ஒரு பொழுதும் ஹதீஃத் ஆகாது. ஏனெனில், ஒரு உண்மையான ஹதீஃத் அல்லாஹ்வின் பேச்சிற்கு முரன்படாது. அப்படி முரன்பட்டால் அது ஹதீஃதே கிடையாது. அதை ஏற்க வேண்டிய அவசியமும் கிடையாது.
மாறாக
சலஃபுத் தக்லீத்வாதிகள் என்போம்.
நாம் அல் குரானின் நேசர்கள்.
♥️ அவர்கள் புஹாரியில் மனிதர்கள் கூறிய ஹதீஸ்களுக்காக போராடி கொண்டிருக்கிறார்கள்.
நாமோ அல்லாஹ்வின் வசனத்தை மெய்பிக்க போராடிக் கொண்டிருக்கிறோம்.
📌அவர்களின் பயம் என்னவென்றால் இப்படியே பல நூறு ஹதீஸ்களை மறுத்து விடுவார்களோ என்பது!
நம்முடைய அச்சம் என்னவெனில் அல் குரானின் வசனங்களையே கேள்விக்குறியதாக ஆக்கி விடுவார்களோ என்பது!
📌வஹிக்கு வஹி முரன்படாது என்பார்கள்.
ஒரு ஹதீசில் ஒரே ஒரு அறிவிப்பாளர் நம்பத்தகாதவர் எனில் அந்த ஹதீஸ் ளைஃப் என்பதை நாமும் ஏற்போம் அவர்களும் ஏற்பார்கள்
ஒரு ஹதீசை ஒருவர் உண்மையான நம்பத் தகுந்த நபராக அறிவித்து, அதற்கு மாற்றமாக பலர் நம்பத் தகுந்தவர் அறிவித்தால் அதை முத்தவாதிர் எனக் கூறி அந்த ஒருவர் கூறியதை மறுத்து பலர் கூறியதை ஏற்றும் கொள்வார்கள். நாமும் அப்படியே,
📌ஆனால், ஒட்டு மொத்த சஹாபாக்களும் உண்மை என உறுதியாக நம்பும் அல் குரானுக்கு மாற்றமாக பத்திற்கும் கீழாக நம்பத் தகுந்த அறிவிப்பாளர்கள் அறிவித்தாலும், இலட்சோப இலட்சம் சஹாபாக்கள் உண்மைப்படுத்தும் அல் குரானின் வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காது, பத்திற்கும் கீழான அறிவிப்பாளருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஹதீஸ் கலைக்கு மாற்றமான செயலைச் செய்வார்கள். 👉நாம் அப்படி அல்ல.
📌அவர்களுக்கு அல்லாஹ்வின் கூற்றை விடவும் அறிவிப்பாளர்களின் கூற்று தான் முக்கியம். நமக்கு உலகத்தில் யாரின் கூற்றை விடவும் அல்லாஹ்வின் கூற்று தான் முக்கியம்.
📌அவர்களுக்கு நாளை மறுமையில் அந்த அறிஞர்கள் சாட்சி சொல்ல வருவார்களா என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். ஆனால், அறிஞர்களின் கூற்றா அல்லாஹ்வின் வாக்கா என்கிற நிலையில் அல்லாஹ்வை உயர்த்தி பிடிக்கும் அந்த உளத் தூய்மைக்கு அல்லாஹ் கட்டாயம் பரிசளிப்பான்.
ஹஸ்புனல்லாஹு நிஃயமல் வக்கீல்.
🎯 இலட்சக் கணக்கான ஹதீஃத்களை ஏற்கிற ஒருவன், ஒரு சில ஹதீஃத்களை அல்லாஹ்வின் வேதத்தின் கருத்துக்களுடன் முறண்படுகிறது என ஏற்க மறுக்கிறான் எனில் அவனது வாதத்தில் நியாயம் இருக்கிறது.
ஆனால், ஒரே ஒரு அல் குரான் வசனத்திற்கு மாற்றமான விடயத்தை எத்துனை காரணம் கூறி நம்பினாலும் அவனது ஈமான் பற்றிய நிலை என்ன? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
#தோன்றிற்று_எழுதினேன்
share this.. https://bit.ly/3WPuIQi