நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸ் ஒரு பகுதி விளக்கம்
இந்த ஹதீசை மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரங்களில் மிகப் பிரதான ஒன்று அதில் நபிகளாருக்கு மன நோய் உள்ளதாக இருப்பதாகும்.

இந்த ஹதீசை மறுக்கத் தேவையில்லை என்று சொல்பவர்கள் இதற்குச் சொல்லும் பதில் இந்ந ஹதீசில் நபிகளாருக்கு மன நோய் என்று வரவில்லை
என்பதாகும்.
இதில் இருந்து இருதரப்பாரும் ஒத்துக் கொள்ளும் ஓர் அம்சம் நபிகளாருக்கு மன நோய் அல்லது பைத்தியம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது இருக்கவும் கூடாது என்பதே.
ஏன் என்றால் நபிக்கு பைத்தியத்தின் ஓர் அம்சம் கூட இருக்காது என்று குர்ஆன் திட்டவட்டமாக சொல்வதால் ஆகும்.
இங்கு பைத்தியம் என்பதைக் குறிக்க அரபியில் வந்துள்ள சொல் “தக்யீல்” என்பதாகும்.
இது குறித்து ஹதீசை மறுக்கக் கூடாது என்று சொல்பவர்கள் வைக்கும் வாதம் தக்யீல் என்பது நடக்காத ஒன்றை நடந்ததாக, இல்லாத ஒன்றை இருப்பதாக பிரம்மையூட்டப்படுவதாகும். மாறாக பைத்தியம் என்பதல்ல.
மூசா நபி குறித்தும் குர்ஆனில் வரும்போது அவருக்கு தக்யீல் வந்தது என்று உள்ளது. எனவே மூசா நபிக்கு பைத்தியம் என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறார்கள். தக்யீல் என்பது ஒரு மனிதப் பலவீனம். அதை பைத்திம் என்று சொல்லக் கூடாது. சாதாரண மனிதர் அனைவருக்கும் வரும் ஒன்று என்பதே இவர்களின் வாதம்.
இந்த ஹதீசை மறுக்க வேண்டும் என்பவர்களின் பதில் 2 கோணங்களில் இருக்கிறது
1. தக்யீல் என்பது சாதாரணமாக எல்லா மனிதருக்கும் இருக்கும் ஒரு பண்பு. அது நோய் அல்ல என்றால் நபிகளாருக்கு சூனியம் பலிக்கவில்லை என்று வரும்.
சூனியத்தால் எந்த மாற்றமும் நபிக்கு வரவில்லை. சதாரண மனிதருக்கு எப்போதும் இயற்கையாக வரும் பலவீனமே வந்துள்ளது என்றால் சூனியத்தால் எதுவும் மேலதிகமாக நடக்கவில்லை என்று ஆகிவிடும்.
எனவே இவர்களின் வாதப்படி சூனியத்துக்குத் தாக்கம் இல்லை என்றே இந்த ஹதீஸ் சொல்வதாக வரும். இது அவர்களின் சூனியம் பற்றிய மொத்த நம்பிக்கையையும் தகர்க்கிறது.
இன்னும் சொல்லப் போனால் இரண்டு மலக்குகள் வந்து இவருக்கு என்ன வேதனை என்று கேட்டார்கள் என்று வருகிறது. தக்யீல் என்பது சாதாரணமாக எல்லோருக்கும் வரும் ஒன்று என்றால் அதை நீக்க மலக்கு வர வேண்டுமா? இவருக்கு என்ன வேதனை என்று கேட்பார்களா? அப்போ ஏதோ அசாதாரண ஒன்று நபிக்கு நடந்துள்ளது. அதைக் குணப்படுத்தவே மலக்குகள் வந்தார்கள் என்று ஆகிவிடும். இவர்கள் தக்யீல் என்பதை விளங்கப்படுத்த ஆதாரம் காட்டும் மூசா நபியின் சம்பவத்திலும், நபிக்கு மறதி வரும் என்ற சம்பவத்திலும் இதே போன்று மலக்குகள் வந்து அந்த வேதனையை நீக்கியதாக உள்ளதா?
எனவே தக்யீல் என்பது சில இடங்களில் பைத்தியம் என்ற அர்த்தத்திலும் சில இடங்களில் மனிதப் பலவீனம் என்ற அர்த்தத்திலும் வந்துள்ளது என்பதே சரி.
2. தக்யீல் என்பது சாதாரணமாக ஒவ்வொரு மனிதனுக்கும் வரும் ஒன்று. அது பைத்தியத்தில் அடங்காது என்று இவர்கள் கூறுவதை இந்த ஹதீசின் வாசகம் மறுக்கிறது. இதை சற்று ஆழமாகப் பார்ப்போம்.
பைத்தியம் என்ற மனநோயின் அறிகுறிகள் அனைத்தும் மனிதனால் செய்ய முடியாத அதிசயத்தை நிகழ்த்தும் செயல் அல்ல. மனிதன் சாதாரணமாகச் செய்யும் செயல்களை திரும்பத்திரும்ப செய்வதோ அல்லது அளவை விட அதிகமாக செய்வதோ தான் மன நோய் ஆகும்.
சிரிப்பது எல்லோரும் செய்யும் சாதாரண அம்சம். ஆனால் அதை அளவு கடந்து தொடர்ந்து எதற்கெடுத்தாலும் சிரித்துக்கொண்டே இருப்பது சாதாரணமா அல்லது மன நோயா?
மனிதன் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒவ்வோர் முறையும் சாதாரணமானதே. அதை அவன் எந்த அளவு எவ்வளவு காலம் செய்கிறான் என்பதைப் பொறுத்தே மன நோய் தீர்மாணிக்கப்படும்.
நபிகளார் செய்யாத ஒன்றை செய்ததாக கிட்டத்தட்ட 6 மாதகாலம் பிரமையூட்டப்பட்டார்கள் என்பது சாதாரண மனிதப் பலவீனமா அல்லது மன நோயா?
மூசா நபிக்கு ஏற்பட்ட தக்யீல் ஒரு கணம் வந்து மறைந்த ஒன்றா அல்லது தொடர்ந்து 6 மாத காலம் நிலைத்த ஒன்றா?
இந்த ஹதீசை மறுக்கக் கூடாது என்பவர்கள் வைக்கும் இன்னோர் கேள்வி “ பைத்தியம்” என்ற சொல் வந்துள்ளதா என்பதாகும்.
பைத்தியம் என்ற சொல் வந்திருந்தால் கூட சில வேளை வேறு விளக்கம் கொடுத்துவிட்டுப் போகலாம். பைத்தியம் என்ற சொல்லுக்கு எது விளக்கமோ அந்த விளக்கமே ஹதீசின் வாசகமாக வந்தால் பைத்தியம் என்பது நிச்சயம் ஆகிறது அல்லவா?
உதாரணமாக எங்கள் நாட்டில் அடிக்கடி பாவிக்கும் ஒரு சொல் “பைத்தியம் விளையாட வேண்டாம்” என்பது. இதை யாரும் உண்மையான பைத்தியம் என்று விளங்குவதில்லை.
குறும்பு செய்கிறான் என்று அர்த்தம் அதற்கு. நேரடியான பைத்தியம் என்ற சொல்லுக்குக் கூட சில வேளை வேறு அர்த்தம் இருக்கலாம். ஆனால் செய்யாத ஒன்றை செய்ததாக 6 மாதங்கள் ஒருவருக்கு பிரம்மை ஏற்பட்டது என்ற விளக்கம் இது பைத்தியம் என்ற சொல்லை விட உறுதியானது அல்லவா?
அந்த அம்மா உன்னை அழைக்கிறாள் என்றால் ஏதோ ஒரு வயதான பெண் என்று கூட விளங்கலாம். ஆனால் உன்னைப் பெற்றெடுத்தப் பெண் அழைக்கிறாள் என்றால் அது 100% அம்மா என்ற அர்த்தம் அல்லவா
நபிகளாருக்கு பைத்தியம் என்ற அம்சத்தின் வாடையே இல்லை என்று குர்ஆன் அடித்துக் கூறுகிறது அல்லவா.
"நீங்கள் இருவர் இருவராகவோ, தனித் தனியாகவோ அல்லாஹ்வுக்காக சற்று நேரம் ஒதுக்கி பின்னர் "உங்கள் தோழருக்கு (எனக்கு) பைத்தியம் எதுவுமில்லை; கடுமையான வேதனைக்கு முன் அவர் உங்களுக்கு எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தையே உங்களுக்குப் போதிக்கிறேன்" எனக் கூறுவீராக!
[அல்குர்ஆன் 34:46]
மேலே உள்ள வசனம் நபியை ஒவ்வொருவரையும் தனித்தனியே வந்து பரிசோதிக்கச் சொல்கிறது அல்லவா. ஒரு கூட்டத்தின் சார்பாக ஒருவன் வந்து நபியை பரிசோதித்துவிட்டு இவருக்குப் பைத்தியம் இல்லை என்று கூறினாலும் நாளை அதே கூட்டத்தில் இருந்த இன்னொருவன் “நான் பரிசோதித்து இருந்தால் நிரூபித்திருப்பேன்” என்ற கதை வரக்கூடாது என்பதற்காகத் தானே அல்லாஹ் தனித்தனியே அழைத்தான்.
இந்த ஹதீசைப் பார்க்கும் சாதாரண ஒருவன் நபிக்கு மனநோய் என்று விளங்க முகாந்திரம் உண்டா இல்லையா? ஒரே ஒருத்தனுக்கு கூட சந்தேகம் வரக் கூடாது என்று சவால் விட்ட அல்லாஹ் அனைவருக்கும் சந்தேகம் வரும் ஒரு அம்சத்தை நபிக்குக் கொடுத்திருப்பானா?
--- Roohul Razmi
share this.. https://bit.ly/3QFLOfY